உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 27, 2010

இடைமறித்து தாக்கும் இந்திய ஏவுகணைச் சோதனை வெற்றி




பலாசூர்:
 
            எதிரி ஏவுகணையை இடைமறித்துத் தாக்கும் திறன்வாய்ந்த, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணை  வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒரிசா கடற்கரைக்கு அப்பால் வீலர் தீவுப் பகுதியில் இந்த பரிசோதனை நடந்தது. முதலில் சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்து காலை 10 மணியளவில் பிருத்வி ஏவுகணை நடமாடும் வாகனம் மூலம் ஏவப்பட்டது. இதைத்தொடர்ந்து வீலர் தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வான்வழி பாதுகாப்பு (ஏஏடி) ஏவுகணை, சிலநிமிடங்களில் ராடார்கள் மூலமாக சிக்னல்களைப் பெற்று பிருத்வி ஏவுகணையை நடுவானில் இடைமறித்து தாக்கியதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more »

வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகம்

             தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் கூறினார். தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் மூலம் வரும் கல்வியாண்டில் இருந்து 4 ஆண்டு பி.எட். பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பி.ஏ, பி.எட் அல்லது பி.எஸ்.சி., பி.எட் என வழங்கப்படும்.  3 ஆண்டு படித்தவுடன் பி.ஏ. அல்லது பி.எஸ்.சி. பட்டம் மட்டும் கொடுக்க முடியாது. 4 ஆண்டும் கல்வியியல் பாடங்கள் இடம்பெறும் வகையில் இப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டு பி.எட் வந்தாலும், ஒரு ஆண்டு பி.எட். படிப்பும் தொடரும் என்றார் அவர்.

Read more »

ஆங்கில ஆசிரியர் தேர்வு பட்டியல் இன்று வெளியீடு

            அரசு பள்ளிகளுக்கான ஆங்கில ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. 

           அரசு பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் என அனைத்து பாடங்களிலும் சுமார் 6,300 காலிப் பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. ஆங்கிலத்தைத் தவிர மற்ற பாடங்களுக்கான ஆசிரியர்களின் தேர்வு பட்டியல்கள் படிப்படியாக அண்மையில் வெளியிடப்பட்டன. தொடக்கப் பள்ளி, உயர் நிலைப் பள்ளிகளுக்கான ஆங்கில ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அதன்படி, தொடக்கப் பள்ளிகளில் 1,303 ஆங்கில ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் 322 ஆங்கில ஆசிரியர்கள் என 1,625 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Read more »

காடுகளை அழிக்கக் கோரும் கடலூர் மாவட்டக் கடலோரக் காவல் படை!


கடலூர் கடற்கரைப் பகுதியில் காணப்படும் வனத்துறைக்குச் சொந்தமான காடு.
 
கடலூர்:

              துறைமுகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை, எனவே கடலூர் கடற்கரையில் உள்ள காடுகளை அழிக்க வேண்டும் என்று, கடலோரக் காவல் படை கோரிக்கை வைத்துள்ளது.

            கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வனத்துறைக்கும் தனியாருக்கும் சொந்தமான காடுகள் நிறைய உள்ளன. இவற்றில் தென்னை மரங்கள், சவுக்கு மரங்கள், பனை மரங்கள், முந்திரி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன 2004-ம் ஆண்டு கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தக்கியபோது, மரங்கள் நிறைந்த கடலோரப் பகுதிகள், சுனாமி பாதிப்பில் இருந்து பெரிதும் தப்பின. மேலும் அவ்வப்போது கடல் அலைகளின் சீற்றம் ஏற்படும்போதும் இந்த மரங்கள்தான் கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்து வருகின்றன.

            இந்த நிலையில் கடலோரக் காவல் படையினர் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும்போது, கடலூர் துறைமுகப் பகுதி மறைப்பதாகவும், எனவே கடலோரத்தில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வனத் துறைக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதி உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டடைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், தமிழக அரசு தலைமைச் செயலருக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதி இருக்கிறார். அதில் கடலூர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டம். எங்கெல்லாம் மரங்கள் இருந்ததோ அங்கெல்லாம் சுனாமிப் பேரலைகள் தாக்கவில்லை. எனவே சுனாமிக்குப் பிறகு இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், பல கோடி செலவிட்டு மரங்கள் வளர்க்கப்பட்டு உள்ளன. கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள ரசாயன தொழிற்சாலைகளால் காற்று மாசுபடுவதைத் தடுக்க இந்த காடுகள் பெரிதும் உதவுகின்றன. தீவிரவாதிகளைக் கண்காணிக்கிறோம் என்ற பெயரில், கடலோரப் பகுதிகளில் மரங்களை வெட்டிவிட்டு, அந்த நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க நினைப்பது சரியல்ல. எனவே கடலோரக் காவல்படையினரின் கோரிக்கையை அரசு ஏற்கக்கூடாது என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் துரைசாமி கூறியது:

             கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும்போது துறைமுகம் மறைப்பதாகவும், எனவே மரங்களை வெட்ட வேண்டும் என்றும், கடலோரக் காவல் படையினர் வனத்துறைக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதி உள்ளனர். சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து கடலோர மக்களைக் காப்பாற்ற பெரும் பொருள்செலவில், மரங்கள் நடப்பட்டு வருகின்றன. எனவே மரங்களை வெட்டுவது குறித்து, மாவட்ட வனத்துறை முடிவு எதுவும் எடுக்க முடியாது. மக்களின் பாதுகாப்பு முக்கியத்தும் வாய்ந்த இந்தப் பிரச்னைக்கு அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

Read more »

குவைத்தில் சித்ரவதைக்கு ஆளான கணவரை மீட்டுத்தரக் கோரி கடலூர் கலெக்டரிடம் மனைவி மனு

கடலூர் : 

            குவைத்தில் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ள கணவரை மீட்டுத் தரக்கோரி, கலெக்டரிடம் மனைவி மனு கொடுத்துள்ளார். 

கடலூர் வில்வநகர் ஆனந்தஜோதி, கலெக்டர் சீத்தாராமனிடம் அளித்துள்ள மனு:

              விருத்தாசலம் ஜாகீர்பாய், மணிமாறன் ஆகியோர் உதவியுடன் ஆடுதுறை அடுத்த பண்டாரஓடையைச் சேர்ந்த சபி மற்றும் அவரது தாயாரும் சேர்ந்து எனது கணவர் ராமுவிற்கு குவைத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறினர். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக சபியின் தாயார், 30 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார். பின் விசா வந்ததும் விமான டிக்கெட்டுக்காக 35 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு தோட்ட வேலைக்கு அழைத்துச் சென்றனர். 

               அங்கு காலை 7 முதல் இரவு 7 மணி வரை கார் கழுவும் வேலையையும் இரவு 7 முதல் 10 மணி வரை தோட்ட வேலை செய்யச் சொல்லியும் துன்புறுத்தியுள்ளனர். ஒரே ஒரு வேளை மட்டும் இரண்டு சப்பாத்தி சாப்பிட கொடுத்து கொடுமைப்படுத்தியதாகவும் தமிழகத்திற்கு அனுப்பி விடுங்கள் என, சபியிடம் கேட்டதற்கு வேலையையும் பறித்து நடுரோட்டில் அனாதையாக விட்டு விட்டதாக எனது கணவர் என்னிடம் போனில் கூறி அழுதார். இந்நிலையில், திடீரென சபி எனக்கு போன் செய்து உன் கணவரை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டுமானால் என் தாயிடம்  20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறினார். நான் குழந்தைகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறேன். எனவே எனது கணவரை மீட்டு அவரை ஏமாற்றி அழைத்துச் சென்று கொடுமைப் படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Read more »

சூரிய ஒளியில் ரெடியாகும் கருவாடு

           

                 மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில், கருவாடு தயாரிக்க, சூரிய ஒளியில் மீன் உலர்த்தும் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ஓலைக்குடாவில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பில், சூரிய ஒளியில் மீன் உலர்த்தும் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. நிறுவன நிர்வாக இயக்குனர்  பழனியப்பன், சூரிய சக்தி மூலம் மீன்களை உலர்த்தி, கருவாடாக்கும் முறைகள் குறித்து விளக்கினார். மீன்உலர்த்தும் இயந்திரத்தை துவக்கி வைத்து,

                 மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனர் அருணாபாசு சர்க்கார் பேசியதாவது: கடலில் பிடித்து வரப்படும் மீன்களை கழுவி, உப்பு கலந்த தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவைத்து பின், கால்சியம் புரோப்பனேட் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். அதன்பின், சூரிய ஒளி இயந்திரத்தில் உலர்த்தினால், பதப்படுத்தப்பட்ட கருவாடு தயார்.  இவ்வாறு சர்க்கார் தெரிவித்தார்.

Read more »

ஆகஸ்ட் 11ம் தேதி முதல் டாஸ்மாக் சரக்கு கிடைக்குமா?



                  டாஸ்மாக்' ஊழியர் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில்   வரும் ஆக., 11 முதல் காலவரையற்ற, "ஸ்டிரைக்' நடத்த தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு முடிவு செய்துள்ளது. இக்குழு, முறைப்படி நேற்று உள்துறை, அரசுத்துறை செயலர்களையும் சந்தித்து நோட்டீஸ் அளித்துள்ளது. "ஸ்டிரைக்' துவங்கினால், "டாஸ்மாக்' சரக்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்  நிலை உள்ளது.

               தமிழகம் முழுவதும் 6,400 "டாஸ்மாக்' கடைகள் உள்ளன. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வார விடுமுறை வழங்க வேண்டும், 12 மணி நேரமாக உள்ள பணி நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.

              இதற்காக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களையும் நடத்தினர். தமிழக அரசு, இந்த கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. இதனால், தனித்தனியாக போராட்டங்களில் ஈடுபட்ட தொழிற்சங்கங்கள், ஒன்றிணைந்து போராட முடிவு செய்தன.இதையடுத்து, அண்ணா தொழிற்சங்க பேரவை, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.,), டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,), பாட்டாளி தொழிற்சங்கமும் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கைக் குழுவை துவக்கின.

                 கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 24ம் தேதி திருச்சியில் பிரமாண்ட பேரணி மற்றும் மாநாட்டை நடத்தின. இதில் பல ஆயிரம் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். "கோரிக்கைகளை வலியுறுத்தி  வரும்  11ம் தேதி முதல் காலவரையற்ற, "ஸ்டிரைக்' துவக்குவது என முடிவு செய்யப்பட்டது .இதன் அடுத்த கட்டமாக, தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நேற்று, உள்துறை செயலர் ஞானதேசிகன், தொழிலாளர் நலத்துறை அரசுச் செயலர் பிரபாகர் ராவையும் சந்தித்து, "ஸ்டிரைக்' நடத்துவது குறித்து முறைப்படி நோட்டீஸ் கொடுத்தனர்.கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த சின்னசாமி எம்.எல்.ஏ., (அண்ணா தொழிற்சங்க பேரவை), சவுந்தரபாண்டியன் (தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் - ஏ.ஐ.டி.யூ.சி.,), பாஸ்கர் (டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் - சி.ஐ.டி.யூ.,) சிவா (பாட்டாளி தொழிற்சங்க ÷ பரவை) உள்ளிட்டோர்  கூட்டாகச் சென்று நோட்டீஸ் கொடுத்தனர்.முறைப்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டதால், போராட்டம் உறுதியாகி விட்டது.

                இதுவரை ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என வீதிக்கு வந்து போராடிய தொழிற்சங்கத்தினர், தற்போது அதிரடியாக  கடைகளை இழுத்து மூடி போராட்டத்தில் குதிக்க முடிவு செய்திருப்பது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும்,  வரும் 11ம் தேதி முதல் கடைகளை இழுத்து மூடி தொழிலாளர்கள் உணர்வுப்பூர்வமாக போராடப் போவதால்,  குடிமகன்களுக்கு தேவையான, "டாஸ்மாக்' சரக்குகள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கூறும்போது, "போராட்ட நாளுக்கு முன், அரசு பேச்சுவார்த்தை நடத்தி, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் என நம்புகிறோம்' என்றனர்.

Read more »

மதுரை காமராஜர் பல்கலையில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


             மதுரை காமராஜ் பல்கலையில் சில முதுநிலை படிப்புகளில் காலியிடங்கள் உள்ளன.

               எம்.ஏ., வரலாறு, பொருளியல், மொழியியல், மலையாளம் மொழி மற்றும் இலக்கியம், திராவிட இலக்கியங்களின் ஒப்பிலக்கணம், கன்னடம், சமஸ்கிருதம், பிரெஞ்சு, அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், சமூகவியல், தத்துவம் மற்றும் சமயம், நாட்டுப்புறவியல், ஆங்கிலம் மொழி படிப்பு. எம்.எஸ்சி.,யில் சுற்றுச் சூழல் அறிவியல், தொடர்பியல் மற்றும் இதழியல், கணிதப் பொருளியல், இ.மீடியா கம்யூனிகேஷன் மற்றும் முதுகலை நூலக படிப்பு (எம்.எல்.ஐ.எஸ்சி.,). எம்.பி.ஏ., ஆஸ்பத்திரி நிர்வாகம், எம்.பில்., பிரெஞ்சு, தெலுங்கு, மொழியியல், சமஸ்கிருதம், அரசியல் அறிவியல், சமூகவியல், சைவ சித்தாந்த தத்துவம், அமைதி உருவாக்கம் மற்றும் காந்திய சிந்தனை, கிறிஸ்துவம், சமய ஒப்பிலக்கியம், கலைவரலாறு, நாட்டுப்புறவியல், சுற்றுச் சூழல்  அறிவியல், மெட்டீரியல் சயின்ஸ், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், தொடர்பு படிப்பு. அட்வான்ஸ்ட் போஸ்ட் கிராஜூவேட் இன் ஜியாக்ரபிக்கல் இன்பர்மேஷன் சிஸ்டம் அன்ட் ரிமோட் சென்சிங் அப்ளிகேஷன், பி.ஜி., டிப்ளமோ இன் எஜூகிளினிக் போன்ற படிப்புகளுக்கு உடனே விண்ணப்பிக்கலாம். ஆக. 10ம் தேதிக்குள் கல்விச்சான்றிதழ்களுடன் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் சீட் ஒதுக்கப்படும் என பதிவாளர் (பொறுப்பு) அழகப்பன் தெரிவித்துள்ளார்.

Read more »

"பயோமெட்ரிக்" ரேஷன் கார்டு திட்டம்

                கைரேகைகள் மற்றும் விழித்திரை பதிவுகளுடன் தயாரிக்கவுள்ள, "பயோ மெட்ரிக்' ரேஷன் கார்டுகளை வழங்க ஆகும் செலவில் பாதியை, தமிழக அரசுக்கு வழங்க மத்திய அரசு சம்மதித்துள்ளது. 

             தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகள், கடந்த ஆண்டு டிசம்பருடன் காலாவதியாகின. இந்நிலையில், புதிய கார்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுமென்பதால், அடுத்த ஆண்டு மே மாதம் வரை, இதே கார்டுகளில் பேப்பர் மட்டும் இணைக்கப்பட்டு, காலம் நீட்டிக்கப்பட்டது.              

             இதற்கிடையே போலி கார்டுகளை கண்டறிய, 100 சதவீத தணிக்கை செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய கார்டுகளை வழங்கும் போது, அதில் குடும்ப தலைவரின் புகைப்படம் மட்டுமன்றி, அனைத்து விவரங்களையும் இடம் பெறச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, குடும்ப உறுப்பினர்களின் 10 விரல் ரேகைகள், கண் விழித்திரை போன்ற விவரங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. இவை அனைத்தும்  புதிய ரேஷன் கார்டுகளில் இடம் பெற்றிருக்கும். எனவே, ஒருவரது விவரங்கள் இன்னொரு ரேஷன் கார்டில் இடம் பெற முடியாது. அவ்வாறு வெவ்வேறு இடங்களில் ரேஷன் கார்டுகள் பெறுவோரை எளிதில் அடையாளம் கண்டு நீக்கி விடலாம்.

             புதிய ரேஷன் கார்டில் இடம் பெறும் இந்த பதிவுகளை, மத்திய அரசு தயாரிக்கவுள்ள, அனைத்து குடிமகன்களுக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்துக்கும் பயன்படுத்த முடியும். இது தவிர, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் இந்த விவரங்களை இடம் பெற செய்ய முடியும். இந்த "பயோ மெட்ரிக்' ரேஷன் கார்டுகளை தயாரிப்பதற்கு 300 கோடி ரூபாய் செலவாகுமென தமிழக அரசு மதிப்பிட்டுள்ளது. 

                 இந்த விவரங்களை மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்துக்கும் பயன்படுத்தவுள்ளதால், இதற்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு வழங்க வேண்டுமென, தமிழக அரசு கோரி இருந்தது. "மத்திய சென்சஸ் கமிஷனர்' அலுவலகத்துக்கு விவரங்களை வழங்கவுள்ளதை கருத்தில் கொண்டு, "பயோ மெட்ரிக் ரேஷன் கார்டு' திட்டத்துக்கு ஆகும் செலவில் பாதியை மத்திய அரசு ஏற்குமென, மத்திய அமைச்சர் சிதம்பரம், முதல்வருக்கு கடந்த மாதம் கடிதம் எழுதியுள்ளார்.  இது பற்றிய இறுதி முடிவுக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும், மத்திய அரசுடன் இதற்கான உடன்பாடு செய்யப்படவுள்ளது.

Read more »

புகைப்படத்துடன் சான்றிதழ் தமிழக அரசு ஆலோசனை


      போலி மதிப்பெண் சான்றிதழ் ஊடுருவலை தடுக்கும் வகையில், மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்குவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. 

              பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களில், பலர், போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பித்த விவகாரம், பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. இது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழ் பிரச்னை, கல்வித்துறைக்கும் பெரிய தலைவலியை ஏற்படுத்தியிருப்பதால், வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்னை எழாமல் இருப்பதற்கு என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்து, தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. 

               பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், துறையின் செயலர் குற்றாலிங்கம், தேர்வுத்துறை இயக்குனர் மற்றும் டேட்டா சென்டர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போலி சான்றிதழை தடுப்பது குறித்து, கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. வரும் ஆண்டுகளில் மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்குவது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more »

Casuarina trees near Cuddalore port face the axe


Forest Officials numbering the casuarina trees


CUDDALORE: 

            Thousands of casuarina trees raised as part of the bio-shield along the coast near the Cuddalore Port are facing the axe.

          Forest Department officials are already numbering the trees and evaluating their worth as a prelude to felling them. The felling of the trees has become inevitable as Port authorities see them as a security threat. Forester K. Natarajan told The Hindu that after the tsunami, over 7.50 lakh casuarina trees were raised along the 25-km long coast from Pudupettai to Suba Uppalavadi. In the past six years, these trees had attained their full height. These trees were planted on the sand dunes close to the shore so as to provide a “natural shield” against cyclones, sea erosion and the tsunami.

              The tree cover had in fact instilled confidence among the residents of the coastal area who believed that these would provide them a semblance of security from the natural disasters originating from the sea. But the Port authorities had taken the differing view that the trees were posing a security threat.

Standing tall

             Mr Natarajan said that the Port officials had reported that since the trees were standing tall and blocking the view of the sea. Hence, officials could not mount a close vigil on the movement of either any suspicious vessels or persons. Therefore, they wanted the trees to be cut down to get an unobstructed view. The security aspect outweighed the natural disaster angle, and the move to cut down the tress was initiated. For instance, the casuarinas thickets would have to be removed for a length of 500 metres on the Singarathope side and another 1,000 metres length on the Sothikuppam side. 

              The officials-Mr Natarajan and Forester K. Devadas and Forest Guards R. Banumurthy and K. Balasundaram-are painstakingly measuring the girth and height of each tree and were preparing the estimate of their value. In the past one month they have thus numbered 11,800 trees and it would take another couple of months before completing the assignment. Based on the evaluation, tenders would be floated and contractors would be engaged to uproot the trees, Mr Natarajan added. Residents are averse to cutting down the trees because it would leave weak spots in the bio-shield and deny them the indirect benefits derived from either the naturally fallen trees or illegally felled ones. Meanwhile, the Consumer Federation Tamil Nadu has voiced its strong protest against the proposal and vowed to mobilise the local people to prevent the move.

Read more »

Police unravel murder plot At Cuddalore District


Haul: Superintendent of Police Ashwin Kotnis displaying the weapons seized from anti-social elements, in Cuddalore on Monday. 
 
CUDDALORE: 

           The police today unravelled a murder plot and arrested four persons who had hatched a conspiracy to kill a rival gang leader. A country-made revolver, four crude bombs and three sharp-edged weapons were seized from them, Ashwin Kotnis, Superintendent of Police said.

           Addressing a press conference here, Mr. Kotnis said that two rival groups, one led by Vellai Guna and another by Senthil, were operating from Puducherry. They used to cross over to Tamil Nadu to commit crimes. The SP said that Vellai Guna was about to attend a trial in the Cuddalore court on Tuesday. Members of the rival gang were doing the rounds for the past three to four days in Cuddalore and Puducherry to track him. The special police team was closely monitoring their movements. On Sunday, the police spotted three of them speeding past the Reddichavadi police station in a motorcycle.

            The police intercepted them and found the weapons and crude bombs in their possession. During investigation they confessed that they planned to murder Vellai Guna while he was going to the court. Thus, Mr Kotnis said, a probable murder attempt was averted by the timely intervention of the police. The police arrested V. Vasu alias Palaniraja (32) of Puducherry, G. Devaraj (24) of Kancheepuram, S. Dhamu alias Damodaran (24) of Thiruvannamali and M. Vijayakumar (22) of Kalpakkam. All the arrested had booked for offences such as murder and robbery committed on various occasions.

Read more »

உயிர்காக்கும் சிகிச்சை திட்டத்திற்கு ரூ.405 கோடி வழங்கல்: அமைச்சர் பன்னீர்செல்வம்

கடலூர்:

             உயிர்காக்கும் உயர் சிகிச்சை திட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு 405 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பன்னீர்செல்வம் வியன்னா மாநாட்டில் பேசினார். ஆஸ்திரியா நாட்டில் வியன்னா நகரில் 18வது பன்னாட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மாநாடு நடந்தது. 

இம்மாநாட்டில் இந்திய குழுவிற்கு தலைமை தாங்கி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:

                    தமிழக முதல்வரின் சீரிய தலைமையில் மக்கள் நல்வாழ் வுத்துறை மிகச் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தலை சிறந்த அமைப்பாக திகழ்கின்றன. தேசிய ஊரக நல்வாழ்வுத் திட்டம் மூலமாக அனைவருக்கும் அடிப்படை சுகாதார வசதி அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்கான அரசு நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

                 2006-07ல் 1,951 கோடி ரூபாயாக இருந்தது நடப்பு ஆண்டில் 3,888 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை எளியோரின் உயிர்களை காப்பாற்றக் கூடிய திறமை மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் இம் மாநிலத்தில் உள்ளனர். அவர்களின் சேவை தனியார் மருத்துவமனைகளில் கிடைப்பதால் பொது மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு முதல்வர் உயிர்காக்கும் உயர் சிகிச்சை திட்டத்தில் 1.44 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ உதவிக்கான அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு 1,242 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. 

                    இத்திட்டத்தின் கீழ் 51 வகையான உயிர்காக்கும் உயர் சிகிச்சைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 565 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக் கப்படுகிறது. இதுவரை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 560 பேருக்கு சிகிச்சைக்காக 405 கோடி ரூபாய் வழங்கப்பட் டுள்ளது. மேலும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை என்ற சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 23 ஆயிரத்து 716 அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த 24 ஆயிரத்து 455 நோயாளிகளுக்கு ஆம்புலன்சில் முதலுதவி அளிக்கப்பட்டது. 

                  பிரசவ உதவி தேவைப்பட்ட ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 215 கர்ப்பிணி பெண்கள் பாதுகாப் பாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதால் பிரசவ காலங்களில் ஏற்படும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரத் திட்டம் 534 கோடி ரூபாய் செலவில் ஐந்தாண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 786 எய்ட்ஸ் மையங்கள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு 32 லட் சத்து 71 ஆயிரத்து 194 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் .மாநிலம் முழுவதும் 37 ஏ.ஆர்.டி., மையங்கள் இயங்கி வருகின்றன. 

                    இவ்வாண்டில் மேலும் 3 மையங்கள் தொடங் கப்படவுள்ளன. இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 735 நோயாளிகள் ஏ.ஆர்.டி., மையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 67 ஆயிரத்து 523 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். பரிசோதிக்கப்பட்ட அனைவருமே சிடி4 எண்ணிக்கை கருத்தில் கொள்ளாது ஏ.ஆர்.டி., மையங்களில் பதிவு செய்து கொள்கின்றனர். சிடி4 எண்ணிக்கை 250க்கும் குறைவாக உள்ள அனைவருக்கும் வாழ் நாள் முழுவதும் சிகிச்சை பெறும் வகையில் தனியாக அட்டைகள் வழங்கப்படுகிறது. சிடி4 எண்ணிக்கை 250க்கும் மேல் உள்ள நோயாளிகள் தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதித்துக் கொள்ள ஏ.ஆர்.டி., மையங்களுக்கு வரவேண்டும் .இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

Read more »

சி.என்.பாளையம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி:அதிகாரிகளே திருத்தம் செய்ய மக்கள் கோரிக்கை

நடுவீரப்பட்டு:

              வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடியை அதிகாரிகள் திருத் தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

                 இதில் பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சி பாகம் எண் 1 வாக்காளர் பட்டியலில் நடுத்தெரு, சவலை தெரு, பெருமாள் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, காமாட்சிப் பேட்டை குயவர் தெரு, வினாயகர் கோவில் தெரு, மெயின்ரோடு மற்றும் யாதவர் தெரு, கடைவீதி, தோப்பு தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆகியவைகள் உள்ளன.தற்போது வெளியிடப் பட்டுள்ள பட்டியலில் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந் தவர்களின் பெயர்கள் வரிசை எண் 788 முதல் 819 வரை காமாட்சிப் பேட்டை தெருவைச் சேர்ந்தவர்களின் பட்டியலுடன் சேர்ந்துள்ளது. காமாட்சிப்பேட்டை வார்டு எண் ஒன்றிலும், காமாட்சி அம்மன் கோவில் தெரு வார்டு எண் மூன்றிலும் உள்ளது. 

                  தேர்தலில் 1, 2 ஆகிய வார்டுகளுக்கு வாக்குச் சாவடி, கடை வீதியில் உள்ள நடுநிலைப் பள்ளியிலும், 3, 4, 5 ஆகிய வார்டுகளுக்கு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஓட்டளித்து வருகின்றனர். தற்போது உள்ள குளறுபடியால் வரும் தேர்தலில் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் எந்த ஓட்டுச்சாவடிக்கு செல்வது என்ற குழப்ப நிலை ஏற்படும். இந்நிலையில் வாக் காளர் பட்டியலில் உள்ள தவறை திருத்தம் செய்ய போட்டோ மற்றும் விண் ணப்பம் எழுதி கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். அதிகாரிகள் செய்த தவறுக்கு நாங்கள் எதற்கு போட்டோ எடுத்து மனு எழுதிக் கொடுக்க வேண்டும். அதிகாரிகளே திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read more »

மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில்386 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கடலூர்:

             கடலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 386 பேருக்கு கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

                கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். குடிநீர், சாலை வசதி, பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 355 மனுக்களை பெற்று உடனடியாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக் கூட்டதில் "கான்கிரீட்' வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 386 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், தாட்கோ திட்டத்தின் கீழ் 18 பேருக்கு கடனுதவிகளையும், ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 38 பேருக்கு இலவச பட்டாவும் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், 

                  "நெய்வேலி குறவன்குப்பத்தில் இயங்கி வரும் டிவின் கிராஸ் மிஷன் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று "கான்கிரீட்' வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் 1,354 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு கடந்த வாரம் 536 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது' என்றார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், ஆதி திராவிடர் நல அலுவலர் திருவேங்கடம், ஆர்.டி.ஓ., முருகேசன் பங்கேற்றனர்.

Read more »

ஸ்ரீமுஷ்ணம்போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்:

              ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் ஸ்டேஷனில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி., போலீசாரின் கவாத்து பயிற்சியை பார்வையிட்டார்.

                ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் வருகை மற்றும் வழக்குப் பதிவேடு உள்ளிட்ட கோப்புகளை பார்வையிட்டார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தவர் கிடப்பில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். பின்னர் போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடந்த கவாத்து பயிற்சியை பார்வையிட்டவர் அவர்கள் பெற்ற சான்றிதழ்கள், சாதனைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது டி.எஸ்.பி., ராமச்சந்திரன் உடனிருந்தார்.

Read more »

பண்ருட்டி வரதராஜ பெருமாளுக்கு1,008 தாமரை மலர் சகஸ்ரநாம அர்ச்சனை

பண்ருட்டி:

           பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் 1,008 தாமரை மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.

              பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள பெருந் தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 23ம் தேதி திருபவித்ரம் உற்சவம் துவங்கியது. விழாவை முன்னிட்டு தாயார், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு முதல்கால பூர்ணாகுதியும், 24ம் தேதி காலை 8 மணிக்கு பவித்ரம் சாற்றுதல், 2ம் கால பூஜையும், மாலை 5 மணிக்கு 3ம் கால பூஜையும் நடந்தது.

                நேற்று முன்தினம் 25ம் தேதி காலை 6 மணிக்கு திருவாராதனம், நித்ய ஹோமம், 4ம் கால பூஜை, கும்பம் புறப்பாடு நடந்து. மாலை 6 மணிக்கு உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு 1,008 தாமரை மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம், பரம்பரை அறங்காவலர் பாண்டுரங்கன், தாமரைப்பூ சகஸ்ரநாம குழுவினர் செய்திருந்தனர்.

Read more »

மின்னொளி கூடைப்பந்து போட்டி:ஆரோவில் பெண்கள் அணி வெற்றி


கடலூர்:

             கடலூரில் நடந்த மின்னொளி கூடைப் பந்து விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஆரோவில் அணியும், ஆண்கள் பிரிவில் எச்.டி. எப்.சி., அணியும் வெற்றி பெற்றன.

                 கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த மின்னொளி கூடைப் பந்து போட்டி பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் தலைமை தாங்கினார். கடலூர் கூடைப்பந்து கழகத் தலைவர் ரமேஷ் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கூடைபந்து கழக துணைத் தலைவர் இளங் கோவன் வரவேற்றார்.வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்.எல்.ஏ., அய்யப்பன் கோப்பை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார். துணை சேர்மன் தாமரைச்செல்வன், கவுன்சிலர் இளங்கோ, முன்னாள் கவுன்சிலர் செந்திக்குமார், ஆதிபெருமாள், ராமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கடலூர் மாவட்ட கூடைப் பந்து கழக துணை செயலாளர் சிட்டிபாபு நன்றி கூறினார்.

Read more »

புவனகிரி பகுதி விவசாயிகள் "எள்' பயிர் செய்வதில் ஆர்வம்

புவனகிரி:

            புவனகிரி பகுதி விவசாயிகள் எள் பயிர் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 697 எக்டரில் மானாவாரி பயிரான எள் பயிர் செய் யப்பட்டுள்ளது. எக்டருக்கு 500 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும் எள் மூட்டை (80 கிலோ) தற்போது 3, 200 முதல் 3,800 வரை விலை கிடைக்கிறது. 

                 கடலூர் முதுநகர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 26.4 மெட்ரிக் டன், பண்ருட்டியில் 189.6, விருத்தாசலத்தில் 2,056, திட்டக்குடியில் 91, குறிஞ்சிப்பாடியில் 686.4, ஸ்ரீமுஷ்ணத்தில் 28.5 மெட்ரிக் டன்னும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

               காவிரி டெல்டா பகுதியான குமராட்சியில் மட்டும் இந்த ஆண்டு 140 எக்டர் எள் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது புவனகிரி பகுதியிலும் விவசாயிகள் எள் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.காரணம் நெல் 100 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு 1,100 ரூபாய் மட்டுமே கிடைக்கும் இந்த நிலையில் அதிக விலைக்கு போகும் மானாவாரி பயிரான எள் பயிர் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Read more »

குள்ளஞ்சாவடி அருகே வேன் மோதிமனைவி பலி: கணவர் காயம்

குறிஞ்சிப்பாடி:

              மோட்டார் பைக் மீது மீன் ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் பெண் இறந்தார். நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி ஜெயச் சித்ரா. இருவரும் மோட்டார் பைக்கில் குள்ளஞ்சாவடி சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தம்பிப்பேட்டை அருகே வந்த போது கேரளாவிற்கு மீன் ஏற்றி சென்ற லாரி மோட்டார் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த ஜெயச்சித்ரா (33) சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நெல்லிக்குப்பம் அருகே அனுமதியின்றி சென்ற ஷேர்ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு

நெல்லிக்குப்பம்:

                அனுமதி இல்லாமல் நெல்லிக்குப்பம் வரை வந்த இரண்டு ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கடலூரில் இருந்து நெல்லிக்குப்பத்திற்கு கடந்த சில நாட்களாக அதிகமான ஷேர் ஆட்டோக்கள் வந்து செல்கின்றன. கன்னியக்கோவில், திருவந்திபுரம் சாலைகளில் ஷேர் ஆட்டோக்களை இயக்க அனுமதி பெற்றவர்கள் சட்டத்திற்கு புறம்பாக நெல்லிக்குப்பம் நகரம் வரை இயக்கினர். அனுமதி இல்லாத ஷேர் ஆட்டோக்களை இயக்குவதை தடுக்க வேண்டுமென போலீசில் புகார் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாத, இரண்டு ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

Read more »

விருத்தாசலத்தில் எல்.ஐ.சி.,முகவர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

               விருத்தாசலம் எல்.ஐ. சி., அலுவலகம் முன் முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். முகவர்களின் வாழ் வாதாரத்தை சீரழிக்கும் ஒழுங்குமுறை ஆணையம் முன்மொழிந்துள்ள முகவர்களுக்கான குறைந்த பட்ச வணிகம், ரினிவல் பிரீமியம் பாலிசி குறைந் தால் முகவாண்மையை ரத்து செய்யும் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். செயலாளர் சுந்தரமூர்த்தி, தலைவர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

கிராம பூசாரிகள் பேரவை: கடலூரில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

            கிராம பூசாரிகளுக்கு நலவாரியம் அமைத்து சலுகைகள் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கிராம பூசாரிகள் பேரவை சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம கோவில் பூசாரிகள் நலவாரியம் ஏற்படுத்தவேண்டும், நலவாரிய சலுகைகளை வழங்கவேண்டும். முதியோர் ஓதியம் 750 ரூபாய் வழங்கவேண்டும்.

               ஓய்வூதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும். அரசின் கட்டுப்பாட் டில் உள்ள கோவில்களில் உள்ள பூசாரிகளுக்கு அரசின் நலவாரிய சலுகைகளை வழங்கவேண்டும். ஒரு கால பூஜை திட்ட நிதியை உயர்த்தவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் பழனிவேல் தலைமை தாங்கினார். கடலூர் ஒன்றிய அமைப் பாளர் பன்னீர் வரவேற்றார். மாநில இணை அமைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். பரங்கிப்பேட்டை ஒன்றிய அமைப்பாளர் திருஞானம் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior