புதுடில்லி : வரும் 2010-11ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட் நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதே போல், சரக்கு கட்டணத்திலும் மாற்றம் இல்லை. காலியாக உள்ள ரயில்வே இடங்களில் பள்ளி, மருத்துவமனைகள் கட்டுதல், ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் 10 ஆண்டுகளில்...