உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 07, 2011

கடலூர் மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடக்கம்


பலாப்பழப் பருவம் தொடங்கியதை யொட்டி, கடலூர் அருகே ராமாபுரத்தில் காய்த்துக் குலுங்கும் பலா மரம்.
 
கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் பலாப்பழப் பருவம் தொடங்கி விட்டது. பலாப்பழங்கள் சந்தைகளில் விற்பனைக்கு வரத் தொடங்கி இருக்கின்றன. 

             கடலூர் மாவட்டத்தில் 3,500 ஏக்கரில் பலா மரங்கள் உள்ளன. இதில் பண்ருட்டி தாலுகாவில் மட்டும் 2,400 ஏக்கரில் உள்ளன. மேலும் தனிப் பயிராக இல்லாமல், மற்ற பயிர்கள் உள்ள நிலங்களில், ஓரமாக நடப்பட்ட பலா மரங்கள், கடலூர் மாவட்டத்தில் அதிகமாக உள்ளன.  கடலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 75 ஆயிரம் டன் பலாப்பழங்கள் உற்பத்தி ஆகின்றன. வெளி மாநிலங்களுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இந்த ஆண்டு பலாப்பழங்கள் அதிக அளவில் காய்த்து உள்ளன. தற்போது பலாப் பழங்கள் குறைந்த அளவில் வரத் தொடங்கி உள்ளன.  

                இவ்வாண்டு நோய்த் தாக்குதல் எதுவும் காணப்படவில்லை. எனவே விவசாயிகள் நல்ல மகசூலை எதிர்பார்க்கிறார்கள் என்று, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.  

இது குறித்து வேளாண் தோட்டக் கலைத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 

            "கடலூர் மாவட்டத்தில் 3,500 ஏக்கருக்கு மேல் பலா மரங்கள் உள்ளன. இந்த ஆண்டு நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த, முன்னேற்பாடாக பல விவசாயிகள் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மரங்களில் மருந்து தெளித்து உள்ளனர்.  இதனால் நோய்த் தாக்குதல் இன்றி பலாமரங்கள் பெருமளவில் காய்த்து உள்ளன. ஏப்ரல் மாதத்தில் 25 சதவீதமும், மே மாதத்தில் 50 சதவீதமும், ஜூன் மாதத்தில் 25 சதவீதமும் அறுவடை செய்யப்படும்.  

             ஹெக்டேருக்கு சராசரியாக 40 முதல் 50 டன்கள் வரை பலாப்பழங்கள் கிடைக்கும். நன்றாக பராமரிக்கப்பட்டால் ஹெக்டேருக்கு 100 டன்கள் வரைகூட கிடைக்கும். பண்ருட்டி தாலுகா விவசாயிகள் 100 டன்கள் வரை பலாப்பழங்களை விளைவிக்கிறார்கள். கோடையில் பலத்த மழை இல்லாமல் இருந்தால், இந்த ஆண்டு பலாப்பழ உற்பத்தி அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்றார் அவர்.

Read more »

கடலூர் பகுதியில் கேந்திப் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பு

கடலூர் அருகே சுபஉப்பளவாடி கிராமத்தில் பூத்துக் குலுங்கும் கேந்திப் பூக்களைப் பறிக்கும் பெண்கள்.

கடலூர்:

             கடலூர் பகுதியில் கண்ணுக்கு அழகாக பார்வையாளர்களை கவரும் கேந்திப் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. 



                       ஆனால் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சியோ மலரவில்லை.  பெரும்பாலும் ஜனவரி மாதத்தில் கேந்திப் பூ விதைக்கப்படுகின்றன. மார்ச் மாதத்தில் பெருமளவுக்கு கேந்திப் பூக்கள் அறுவடைக்கு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு கேந்தி பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை லாபம் கிடைத்ததாக கேந்தி பயிரிட்ட விவசாயிகள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  


                இதனால் கடலூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான விவசாயிகள் கேந்தி பயிரிட்டனர். சுமார் 250 ஏக்கரில் இந்தாண்டு கேந்திப் பூ செடிகள் பயிரிடப்பட்டு இருப்பதாக வேளாண் துறை தெரிவிக்கிறது. கடலூரை அடுத்த கிராமங்களில் தோட்டங்களில் கேந்திப் பூக்கள் திரட்சியாகவும், அதிக எண்ணிக்கையிலும் பூத்துக் குலுங்கி இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் கண்கொள்ளாக் காட்சி. ஆனால் அவற்றைப் பயிரிட்ட விவசாயிகளுக்கு அவைகள் மகிழ்ச்சி ஏற்படுத்தவில்லை.


              தற்போது கடலூரில் கேந்திப் பூக்களை, வியாபாரிகள் கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். இதுவே கடந்த ஆண்டு விலை ரூ.40 வரை.  இந்தாண்டு அதிக விவசாயிகள் கேந்திப் பூ செடிகளைப் பயிரிட்டதாலும், வெளி மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் கேந்திப் பூ வரத்து அதிகரித்ததாலும், கடலூர் மாவட்ட கேந்தி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்கிறார்கள். இதனால் தோட்டங்களில் கேந்திப் பூக்கள் பறிக்கப்படாமல் அழுகிக் கொண்டிருப்பதாகவும், விவசாயிகள் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.  


இதுகுறித்து கடலூர் சுபஉப்பளவாடி விவசாயி பாக்கியராஜ் அண்மையில் கூறியது: 


                 கடலூர் சுபஉப்பளவாடி, நாணமேடு, பண்ருட்டி வட்டம் மளிகைமேடு, தட்டாம்பாளையம், கட்டமுத்துப்பாளையம், முட்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆண்டு கேந்தி பயிரிடப்பட்டது. கடந்த ஆண்டு கேந்தியில் நல்ல லாபம் கிடைத்தால் பல விவசாயிகள் கேந்தி பயிரிட்டனர்.  ஏக்கருக்கு கேந்தி விதை விலை ரூ.10 ஆயிரம். வேளாண் செலவு ரூ.10 ஆயிரம். கடந்த ஆண்டு கேந்தி விவசாயத்தில் எனக்கு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் கிடைத்தது. ஆனால் இந்தாண்டு செலவு செய்த பணமாவது கிடைக்குமா என்பது சந்தேகம். தற்போது கிலோ ரூ.5 முதல் ரூ.7 வரை பூ வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். 


           பொதுவாக இந்த மாதங்களில் ஓசூர், திருவண்ணாமலை, சத்தியமங்கலம் போன்ற மாவட்டங்களில் இருந்து, கடலூருக்குக் கேந்திப் பூ வரத்து இருக்காது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இவ்வாண்டு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் இருந்தும், கடலூருக்கு கேந்திப் பூ வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் உள்ளூர் கேந்திப் பூக்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டனர் என்றார் பாக்யராஜ்.  


இதுகுறித்து கடலூர் வேளாண் அலுவலர் ஒருவர் கூறுகையில்,



              இதுதான் நமது விவசாயிகளின் பரிதாப நிலை. கடந்த ஆண்டு குறிப்பிட்ட பயிருக்கு நல்ல விலை கிடைத்தது என்றால், பல விவசாயிகள் அடுத்த ஆண்டில் அப் பயிரை விவசாயம் செய்கிறார்கள். ஆனால் உற்பத்தி அதிகரிப்பு, வெளியூர்களில் இருந்தும் வரத்து போன்ற காரணங்களால், செலவிட்ட தொகைக் கூட கிடைப்பதில்லை. அந்த நிலைதான் கேந்திப் பூவுக்கும் ஏற்பட்டுள்ளது. பூவை பதப்படுத்தி வைக்கவும் வாய்ப்பு இல்லை.  விதைக்கும் காலத்திலேயே, அறுவடை காலத்தின் நிலையை அறிந்து கொள்ள முடிவதில்லை. 



                ஆந்திரம், பெங்களூரில் இருந்து வரும் கேந்திப்பூக்கள், கடலூரில் கிலோ ரூ.7 க்குக் கிடைக்கிறது என்றால், அந்த மாநில விவசாயிகளுக்கு கிலோ ரூ.1 அல்லது ரூ. 2 தான் கிடைத்திருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இதில் வியாபாரிகளுக்கு  கிடைக்கும் லாபம்தான் நிரந்தரமாக இருக்கிறது. அரசு நினைத்தால் இப் பிரச்னைகளில் ஓரளவுக்கு மாற்றம் கொண்டு வரமுடியும் என்றார். 


Read more »

1,788 கோடி யூனிட் மின்னுற்பத்தி: என்.எல்.சி. சாதனை


நெய்வேலி:
 
           நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல் மின் நிலையங்களில் (2010-11) முடிவடைந்த நிதியாண்டில் 1,788 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.  
 
             சுரங்கங்களில் இருந்து 231 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுத்தும் சாதனைப் படைத்திருப்பதாக அந்நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
 இதுதொடர்பாக என்.எல்.சி. மக்கள் தொடர்புத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
 
              நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் 3 சுரங்கம், 3 அனல்மின் நிலையங்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சுரங்கம், அனல்மின் நிலையமும் உள்ளது.  மேற்கண்ட சுரங்கங்களிலிருந்து கடந்த நிதியாண்டில் (2010-11) 577 கோடி கனஅடி மேல் மண் நீக்கப்பட்டு, 231 லட்சத்து 44 ஆயிரத்து 200 டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்டுள்ளது.  இது கடந்த நிதியாண்டை (2009-10) காட்டிலும் 3.61 சதவீதம் அதிகமாகும்.  
 
            அதேபோன்று மின்னுற்பத்தியை பொறுத்தவரை, அனல்மின் நிலையங்களில் இருந்து 1,787 கோடியே 95 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்னுற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை (2009-10) காட்டிலும் 1.27 சதவீதம் அதிகமாகும்.  மின் சக்தி ஏற்றுமதியை பொறுத்தவரை, இந்த மின் நிலையத்தின் அனல்மின் நிலையங்களில் இருந்து 1,496 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்து சாதனைப் படைத்துள்ளது. 
 
             இது 2009-10 நிதியாண்டை காட்டிலும் 0.96 சதவீதம் அதிகமாகும்.  மேலும் என்.எல்.சி. 2-ம் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் விரைவில் இப்புதிய மின் நிலையத்திலும் மின்னுற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

திருப்பாப்புலியூரில் சோழன் எக்ஸ்பிரஸ் நிறுத்தம்: மேலும் 6 மாதம் நீடிப்பு

கடலூர்:

                   சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுசெல்வது, மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

                    மயிலாடுதுறை-விழுப்புரம் அகலப்பாதை மார்க்கத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கியபோது, பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடலூர் நகரப் பகுதியான திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றன.  பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டம் காரணமாக, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் 6 மாத காலத்துக்கு மட்டும், பரிட்சார்த்தமாக திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுபோக தென் ரயில்வே உத்தரவிட்டது.  இந்த உத்தரவு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிகிறது.

                இந்த நிலையில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பாப்புலியூரில் நிரந்தரமாக நின்றுபோக வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.  இதுதொடர்பாக கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ். அழகிரி, ரயில்வே அதிகாரிகளை சந்தித்து, மக்களின் கோரிக்கையை எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து மேலும் 6 மாதத்துக்கு, சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் நின்றுபோக தென் ரயில்வே நிர்வாகம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.  இத் தகவலை கடலூர் மக்களவை உறுப்பினரின் செய்தித் தொடர்பாளர் என்.குமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.  

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நாகேஸ்வரராவ் தேர்வு

சிதம்பரம்:

            சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக தொலைதூரக்கல்வி இயக்குநர் முனைவர்  எஸ்.பி.நாகேஸ்வரராவ்  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

           பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர்களால் ஒரு சிண்டிகேட் உறுப்பினர் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்நிலையில் பல்கலைக்கழக செனட் ஹாலில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் கல்விக்குழு உறுப்பினர்கள் (அகடமிக் கவுன்சில்) பங்கேற்று வாக்களித்து தொலைதூரக் கல்வி இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவை தேர்வு செய்தனர்.  

            தேர்வு செய்யப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர் எஸ்.பி.நாகேஸ்வரராவுக்கு இணை வேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி, துணை வேந்தர் எம்.ராமநாதன், பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், இணை வேந்தரின் செயலர் எஸ்.ராஜேந்திரன், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம், துணை வேந்தரின் செயலர் சி.ராஜசேகர், தனி அலுவலர் எம்.ரவிச்சந்திரன், செனட் உறுப்பினர் தில்லை சீனு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Read more »

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

              நெய்வேலி தொகுதியில் பாமக-அதிமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. 

            பண்ருட்டி தொகுதியில் 2 முறை தொடர்ந்து பாம.க.. எம்.எல்.ஏ.வாக இருந்த தி.வேல்முருகனுக்கும், நெய்வேலி தொகுதி அதிமுக செயலர் எம்.பி.எஸ். சிவசுப்ரமணியத்துக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.கடந்த 10 ஆண்டுகளாக பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து செய்த சாதனைகளையும், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சனைக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து மிகப் பெரிய போராட்டம் நடத்தி, கோரிக்கையை நிறைவேற்றியது. 

              என்.எல்.சி. நிறுவனத்துக்காக வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோருக்காக இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து கொடுத்தது. புதிய தொகுதியாக நெய்வேலி உருவெடுத்தப் பின் தொகுதிக்குள்பட்ட எல்லையிலேயே அரசு பொறியியல் கல்லூரி கொண்டுவந்தது போன்ற சாதனைகளை தனது பிரசாரத்தின் போது வலுவாக முன்வைக்கிறார். அனைத்துத் தரப்பினரையும் பாதித்துள்ள விலைவாசி உயர்வு, திமுகவினரின் அராஜகம், ஸ்பெக்ட்ரம் ஊழல், பாமக-வின் இரட்டை வேடம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நெய்வேலி வாசிகளை புறக்கணித்தது போன்ற முக்கிய பிரச்னைகளை பிரசாரத்தின் மூலம் வலு சேர்க்கிறார் எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன்.

                  தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக நெய்வேலி என்.எல்.சி. ஊழியர்கள் விளங்குவதால், அவர்களது வாக்குகளைப் பெற, தொ.மு.ச. பலத்தையும், என்.எல்.சி. பொறியாளர்களின் ஆதரவையும் வேல்முருகன் மிகவும் நம்பியிருக்கிறார். இதேபோன்று வேல்முருகனின் வரவை விரும்பாத திமுகவினரும், பொறியாளர்களும் எப்படியும் தன்னை விரும்புவார்கள் என்ற கணக்கில் அதிமுக வேட்பாளரும் மறைமுகமாக பொறியாளர்களின் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிக்கத் தொடங்கியிருப்பதால், அனல் மின் நிலையம் அமைந்துள்ள நெய்வேலியில் தேர்தல் பிரசாரம் அனலாக கொதிக்கிறது.

Read more »

புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

               கடலூர் மாவட்டத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட புவனகிரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் மாநில இளைஞரணி செயலாளர் த.அறிவுச்செல்வனுக்கும், அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ.வும், மாவட்ட மகளிரணி தலைவியுமான செல்வி ராமஜெயத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் செல்வி ராமஜெயம் மிகப்பெரிய நல திட்டப் பணிகலை மேற்கொள்ளாவிடிலும் தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளார். 

             ஆனால் தொகுதியில் இவர் மீது கெட்ட பெயர் இல்லாதது அவருக்கு பலமாக திகழ்கிறது. அதிமுக தலைமையின் உத்தரவால் இவரது வெற்றிக்காக அதிமுக மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறார். மிகவும் அன்பாகவும், அனைவருடனும் எளிமையாக பழகக்கூடிய, சிறந்த பேச்சாற்றல் உடைய, கூட்டணி பலம் வாய்ந்த பாமக வேட்பாளர் த.அறிவுச்செல்வன் உள்ளூர் வேட்பாளர் அல்ல. 

              அரியலூர் மாவட்டம் தத்தனூரைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுவது அவருக்கு இது பலவீனமாக திகழ்கிறது.  இருப்பினும் அவர் சேத்தியாதோப்பில் வாடகை வீட்டில் குடியேறி, அனைவரையும் அரவணைத்து தேர்தல் பணியாற்றி வருவது அவரது பலமாக உள்ளது.தற்போது சீரமைக்கப்பட்ட இத்தொகுதியில் பரங்கிப்பேட்டை ஒன்றியம் சிதம்பரம் தொகுதியில் சேர்க்கப்பட்டு கம்மாபுரம் ஒன்றியம் சேர்ந்துள்ளதால் அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான வாக்குகள் எந்த வேட்பாளருக்கு அதிகம் கிடைக்கும் என்பதை பொறுத்துதான் யாருக்கு? வெற்றி வாய்ப்பு என்பதை நிர்ணயம் செய்ய முடியும்.

Read more »

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

        2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தொகுதியாகவும், விஐபி அந்தஸ்தை பெற்ற தொகுதியாகவும் பேசப்பட்டு வந்தது. 

               முதல்முறையாக அரசியல் களம் கண்ட தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. அதேபோல் விருத்தாசலம் பாமகவின் கோட்டை என அக்கட்சியினரால் வர்ணிக்கப்படும். இத்தகைய நிலையில் 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமகவுக்கு விருத்தாசலம் தொகுதி ஒதுக்கப்பட்டு, பாமக மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் கோவிந்தசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் தொகுதியில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. தேமுதிக மற்றும் பாமகவினர் தங்கள் பிரசாரங்களை முழுவேகத்தில் செய்துவந்தனர். 

              இதனால் நாள்தோறும் தொகுதியில் உச்சகட்ட பரபரப்புகள் நிலவியது. பாமக விருத்தாசலத்தைக் கைப்பற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஆனால், 13,777 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிகவின் ஒரே சட்டமன்ற உறுப்பினராக விஜயகாந்த் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றார்.கடந்த தேர்தலில் பரபரப்புடன் பேசப்பட்டு வந்த விருத்தாசலம் தொகுதியில் தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் நீதிராஜனும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் முத்துகுமாரும் போட்டியிடுகின்றனர். 

             இரண்டு வேட்பாளர்களும் உள்ளூரைச் சேர்ந்த, புதுமுகங்கள் என்பதால் தொகுதியில் கூடுதல் பரபரப்பு இல்லாமல் பிரசாரம் நடந்து வருகிறது. இந்த முறை தேமுதிகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று திமுக "இலக்கு' நிச்சயித்துள்ளதால் நீதிராஜனின் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. முத்துக்குமார் சற்று பின்தங்கியே உள்ளார்.

Read more »

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு

           வீராணம் ஏரி பாசனத்தின் மூலம் விவசாயத்தையே நம்பி வாழும் அதிக மக்கள் கொண்ட தொகுதி காட்டுமன்னார்கோவில். 

              இத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளரும், பேச்சாற்றல் மிக்கவரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான துரை.ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அரசு பணியில் இருக்கும் உள்ளூர் வேட்பாளரான அதிமுக வேட்பாளர் நாக.முருகுமாறனுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. தமிழக முதல்வரிடம் துரை.ரவிக்குமார் நெருக்கமாக இருந்த காரணத்தால் 5 ஆண்டுகளில் தொகுதிக்கு பல நூறு கோடி மதிப்பிலான பல்வேறு நல திட்டப் பணிகள் கொண்டு வந்தாலும் மக்களை சந்திக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

               கட்சியினரை சந்திக்கவில்லை என்ற அதிருப்தியுடன் தேர்தல் களத்தில் இறங்கி அதை தற்போது சரிசெய்து தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ரவிக்குமாருக்காக பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பிரசாரம் செய்துள்ளனர். துரை.ரவிக்குமார் மீதான அதிருப்தியை பயன்படுத்தியும், மக்களிடம் ஆட்சி மாற்றம் தேவை என்ற எண்ணத்தை கொண்டும் அதிமுக வேட்பாளர் நாக.முருகுமாறன் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருவதால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

             இத்தொகுதியில் ஆதிதிராவிடர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மறைந்த சமுதாயத் தலைவர் எல். இளையபெருமாளின் மகன் மருத்துவர் எல்.இ.நந்தகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தனக்கு சீட் கொடுக்கப்படாததால் சுயேச்சையாக இத் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்பதை பொறுத்தே மற்ற இருவரில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Read more »

தமிழகம் முழுவதும் தபால் அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி

          சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 192 தபால் நிலையங்களில், வீட்டு உபயோகத்துக்கான மின்சார கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

           தபால் நிலையங்களில் வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் வசூல் செய்யும் சேவையை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள மாநகராட்சிப்பகுதிகளில் உள்ள நுகர்வோர் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

            சென்னை தியாகராய நகர் தலைமை தபால் நிலையம் போன்று கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டுள்ள 192 தபால் நிலையங்களில் மின்கட்டணம் செலுத்தலாம்.

இது குறித்து, மத்திய கோட்ட மூத்த கண்காணிப்பாளர் வெங்கட ராமன், மூத்த போஸ்ட் மாஸ்டர் எஸ்.சாமுவேல் ஆகியோர்,

 

                  தியாகராய நகர் தலைமை தபால் நிலையத்தில் மின்கட்டணம் வசூலிப்பதற்காக 4 கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுண்டரில் தபால் துறை தொடர்பான ஸ்பீடு போஸ்டு உள்ளிட்ட சேவைகளையும் பெறலாம். சென்னையில் இருந்து அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாடுகளுக்கு ஊறுகாய், பரிசுப்பொருட்கள், பட்டுப்புடவை உள்ளிட்ட துணிவகைகள் தபால் பார்சல் மூலம் அனுப்பப்படுகின்றன.

            ஊறுகாய் போன்ற உணவுப்பொருட்களை, வெளிநாடுகளுக்கு பேக் செய்து அனுப்புவதற்கான வசதி தியாகராய நகர் தலைமை தபால் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சீலிங் கருவி வாங்கப்பட்டுள்ளது. இதில் பேக் செய்யும் ஊறுகாய் பாட்டில்கள் பத்திரமாக வெளிநாடுகளுக்கு போய்ச்சேருகிறது. ஊறுகாய் பாட்டிலில் இருந்து ஒரு சொட்டு எண்ணை கூட கசியாது. சிந்தாமல், சிதறாமல் ஊறுகாய் பாட்டில் வெளிநாடுகளுக்குப் போய்ச்சேருகிறது. இந்தியாவில் தியாகராய நகர் தபால் நிலையத்தில் தான் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது.

                 தியாகராயநகர் தபால் நிலையம் எல்லாவகையிலும் முன்னிலையில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் ஏறக்குறைய 80 லட்சத்து, 35 ஆயிரத்து 462 ரூபாய்க்கு தங்க நாணயம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. அந்நிய செலாவணி மாற்றும் சேவையில் ஏறக்குறைய 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் புரிந்துள்ளது. வீடுகளுக்கே தபால் சேவை சென்று சேரவேண்டும் என்ற அடிப்படையில் தபால்காரர்கள் மூலம் ஸ்டாம்பு, கவர், கார்டு விற்பனை, மணியார்டர் பெறுவது, ஸ்பீடு போஸ்ட் தபால்களை புக் செய்வது, பதிவுத்தபால்களை புக் செய்வது போன்ற நல்ல பல சேவைகளை தொடங்கியுள்ளோம். ஆனால், அவற்றுக்கு பொது மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்று கூறினார்.

Read more »

நெய்வேலியில் பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பிரச்சாரம்

நெய்வேலி : 

           "குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஆட்சி போன்று, தமிழகத்தில் மாற்றம் தேவை'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பேசினார். 

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பா.ஜ., வேட்பாளர் கற்பகம் மற்றும் கடலூர் வேட்பாளர் குணசேகரன் ஆகியோரை ஆதரித்து அவர் பேசியது: 

                 ஜம்மு காஷ்மீரில் கூட அமைதியாக தேர்தலை நடத்தி காட்டிய தேர்தல் கமிஷன், தமிழகத்தில் அமைதியாக தேர்தலை நடத்த மிகவும் சிரமப்படுகிறது. இருப்பினும், தி.மு.க., கூட்டணிக்கு எதிராக அமைதியான, நியாயமான, தேர்தலை நடத்தி தேர்தல் கமிஷன் ஜெயித்து வருகிறது.

          மே மாதம் 13ம் தேதிக்கு பிறகு தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., நீடிக்கும் என, இரு கட்சிகளாலும் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? மாறுவது மட்டுமே மாறாத கொள்கை என்பதை பெருமையாக கூறிக் கொள்ளும் பா.ம.க.,வை வெற்றி பெற வைத்தால், நெய்வேலியில் தி.மு.க.,வும் அமைதியும் காணாமல் போய்விடும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பின்னணி உள்ளது. தி.க.,விலிருந்து தி.மு.க., அதிலிருந்து அ.தி.மு.க., தோன்றியதற்கு தனிமனித பிரச்னை காரணமாக இருந்தது. 

           ஆனால், பா.ஜ., இந்துக்களின் உரிமையை வலியுறுத்தி கொள்கை காரணமாக உருவானது. தி.மு.க., குடும்ப அரசியல் நடத்துகின்றனர் என கூறும் அ.தி.மு.க., அவர்கள் ஆட்சியில் இருந்த போது மன்னார்குடி குடும்பத்தில் ஆட்சி அதிகாரம் கிடந்தது. இந்த விஷயத்தில், இரு கட்சிகளும் ஒரே நிலை தான். தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் ஒன்று தான் என, தெளிவாக குற்றம் சாட்ட முடியும். இரு கட்சிகளையும் அப்புறப்படுத்தி விட்டு, மத்தியில் வாஜ்பாய் ஆட்சி போன்றும், குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஆட்சி போன்றும் தமிழகத்தில் மாற்றம் தேவை. இவ்வாறு இல.கணேசன் பேசினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணி குலுக்கல் முறையில் போலீஸ் தேர்வு

கடலூர் : 

           ஓட்டுச்சாவடி பாதுகாப்புப் பணிக்கான போலீசார், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

             வரும் 13ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக, கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டசபை தொகுதிகளில், வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்கு வசதியாக, 1,071 மையங்களில், 1,995 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தேர்தல் அன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள போலீசார், முதல்முறையாக கம்ப்யூட்டரில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது.

              மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், கூடுதல் கலெக்டர் வீரராகவராவ், தேர்தல் பார்வையாளர்கள் டோக் ரஜுர்கர், ஷாலினி மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட போலீசாருக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்பட்டது.

Read more »

Dry run carried out in Cuddalore


Police personnel in Cuddalore district are being briefed on EVM handling during transit to polling station, in Cuddalore on Wenesday.


CUDDALORE:

        A total of 188 sectoral officers and equal number of security personnel carried out a “dry run” to and from 1,995 polling stations situated across the district on Wednesday.

         A total of 188 vehicles were waiting at the Manjakuppm grounds for officials and police personnel to complete the training imparted to them in the presence of Collector P. Seetharaman, Superintendent of Police Ashwin Kotnis, election observer D.S. Dhok Rajurkar, special police observer Hariram Meena, Additional Collector (Development) Veera Raghava Rao and District Revenue Officer K.Rajendran.

        Mr. Seetharaman and Mr. Kotnis said that on the direction of the Election Commission, such a dry run was organised for the first time. Route maps for the journey of 188 sectoral officers and the accompanying security personnel to the polling stations had already been prepared. They would carry the electronic voting machines and polling materials to the assigned booths (each sectoral officer would take care of 10 to 15 booths). Each electoral officer would deliver the materials at the booths under his control one after another, and after the polling was over, they would collect the EVMs and other materials and deposit them at the counting centres.

       It was required of the officials to calculate the time taken for the journey to the polling stations and to test cell phone signals at every booth. If any shortcoming is noticed in getting signals, they would report the matter to the District Election Officer.

Random selection

         Later, police personnel were selected for poll duty through randomised computer selection, as was being done in the case of polling officials. Accordingly, 1,071 personnel had been selected for poll duty. They would be supported by the deployment of 600 personnel of the Central Reserve Police Force and Border Security Force, and, 110 personnel of Tamil Nadu Special Police Force.

         Mr. Kotnis further said that 58 mobile striking forces would be doing the rounds on the polling day and four more striking forces would be kept ready at the headquarters. In sensitive booths, additional security personnel would be posted. The services of ex-servicemen and National Cadet Corps would also be requisitioned, he said.

Read more »

EVMs kept poll-ready in Cuddalore



Cuddalore Collector P.Seetharaman verifying electronic voting machines in Cuddalore.


CUDDALORE: 

         Electronic Voting Machines for the Cuddalore and Chidambaram constituencies were made poll-ready on Tuesday by inserting ballot papers carrying names and symbols of the candidates, in the machines.

        The exercise was carried out under the guidance of a technician from Bharat Electronics Ltd., in the presence of Election Observer D.S. Dhok Rajurkar, District Election Officer P. Seetharaman, and, candidates and their agents. The functionality of the EVMs were verified and the Returning Officer affixed his signature on the rear of the ballot papers. After the task was completed, the EVMs were sealed for safe custody. Later, Mr. Rajurkar and Mr. Seetharaman reviewed the security arrangements at the places where the EVMs would be secured and counting centres.

Read more »

Neyveli hots up with labour issues for Tamilnadu Election 2011

CUDDALORE:

         The newly created Neyveli constituency, having strategic importance on account of the existence of the Neyveli Lignite Corporation, is going to polls for the first time. Neyveli, that has all along been part of either the Panruti or Kurinjipadi or Vriddhachalam constituencies, has now become a separate entity. It has the lowest voter presence of 1,66,077, including 85,486 men and 80,591 women, in Cuddalore district.

          Yet, the Neyveli Township has a considerable chunk of electorate, numbering about 55,000 to 58,000, almost one-third of the total electorate in the segment. Obviously, the preference of the residents of the Neyveli Township, termed as a “mini-Bharat” because of its multi-ethnic and multi-lingual population, would be the deciding factor in the outcome of the elections.

          Neyveli Township has become the hub of activity as it provides employment to 14,000 regular staff and 13,000 contract workers in its open cast mines and thermal power stations. The trade union activism is quite pronounced here and land providers too have become a force to reckon with because of their assertive nature, of late. The socio-economic development of peripheral areas, therefore, is directly linked to the performance of the NLC, which has embarked on an ambitious expansion mode across the country.

          Hence, the residents of the Neyveli Township and its environs value industrial peace more than anything else. However, when it comes to protection of public sector enterprise status of NLC, the trade unions, political parties and local community stand united. However, the contentious issue that has been dogging the NLC management has been the size of compensation and nature of jobs to be given to land providers, particularly when it needs vast tract of land for augmenting lignite production and power generation to meet the insatiable demand.

         The trade unions and political parties whip up this issue time and again to the disenchantment of the NLC management. The PMK and its trade union wing, Pattali Thozhir Sangam (PTS), have come to the fore in upholding the rights of the employees and land providers. PMK candidate T. Velmurugan (sitting Panruti MLA) had spearheaded many agitations, raised the issues in the Assembly and also succeeded to some extent in obtaining compensation. He is now backed by the Dravida Munnetra Kazhagam and its trade union Labour Progressive Front (LPF).

          Incidentally, the LPF and the PTS are the only two recognised unions that can sit across the table with the NLC management representatives to thrash out the labour issues. It is the view of the local community that they would favour a candidate, who would impress upon the government and the management the need to get things done, without harming industrial relations, and also pave the way for overall development of the region.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior