சிதம்பரம்:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புதிய முயற்சியில் மாணவர்களுக்கு செல்போன் மூலமாக பாடங்களை வழங்க பெங்களூரில் உள்ள மொபிசிர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
நிகழ்ச்சியில் துணைவேந் தர் டாக்டர் ராமநாதன் பேசுகையில்
தொலை தொடர்பு சாதனம் இக்காலத்தில் அனைவருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆதலால், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தொழில்நுட்ப கூட்டு முயற்சியில் சர்டிபிகெட் ப்ரொக்ராம் இன்பண்டமண்டல் ஆப் மூட்சுவல் பண்ட்ஸ் என்ற பாடத்தினை வரும் கல்வி யாண்டு 2011-12 முதல் மாணவர்களுக்கு செல்போன் மூலமாக பாடங்களை வழங்க திட்டமிட்டுள்ளது.
பாடத்திட்டம், வழிமுறைகள், பாடங்கள், குறிப்பேடுகள் மற்றும் செயல்முறை பயிற்சி ஏடுகள் ஆகிய எல்லாவற்றையுமே செல்போன் மூலமாகவே வழங்கப்படுவது இதன் முக்கிய அம்சம் என குறிப்பிட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ரத்தினசபாபதி மற்றும் மொபிசிர் டெக்னா லஜிஸ் பிரைவேட் லிமிடெட் மேனேஜிங் டைரக்டர் கே.சி.வேணுகோபால் ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைவேந்தர் முன்னிலை யில் கையெழுத்தானது.
தொலைதூர கல்வி இயக்கக இயக்குனர் டாக்டர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், மொபிசிர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் சீப் ஆபரேட்டர் எம். குரு மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.