உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 21, 2010

கடலூர் அருகே வேன் மீது ஆம்னி பஸ் மோதல் : பள்ளி மாணவியர் 4 பேர் பலி: டிரைவர் கைது



கடலூர் : கடலூர் அருகே ஆம்னி பஸ், எதிரே வந்த பள்ளி மாணவ, மாணவியர் வேனில் மோதியதில், நான்கு மாணவியர்கள் பலியாகினர்; 30 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணமான ஆம்னி பஸ் டிரைவர், கைது செய்யப்பட்டார்.

                கடலூர் அடுத்த பெரியப்பட்டு மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 19 மாணவ, மாணவியரை ஏற்றிய, தனியார் வேன் (டி என் 31 9788), நேற்று காலை, கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. செம்மங்குப்பத்தை சேர்ந்த மணிவேல் (23) வேனை ஓட்டினார். கடலூர் - சிதம்பரம் சாலையில் செம்மங்குப்பம் ஐயனார் கோவில் அருகே, காலை 7.35 மணிக்கு வேன் வந்தது. கடலூரில் இருந்து நாகார்ஜூனா ஆயில் கம்பெனி ஊழியர்கள் 15 பேரை ஏற்றி (டி என் 21 ஏ வி 0046) ஆம்னி பஸ், பெரியக்குப்பம் சென்று கொண்டிருந்தது. 

               செம்மங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்ற அரசு பஸ்சை முந்தி சென்று, திடீரென இடது பக்கமாக திரும்பிய போது, முன்னால் சைக்கிளில் சென்ற செம்மங்குப்பம் சிவலிங்கம் (60) மீது மோதியது. இதையடுத்து, ஆம்னி பஸ் டிரைவர் அருள்முருகன் (30), பஸ்சை வலதுபுறமாக திருப்ப முயன்றார். கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் வலதுபுறம் தாறுமாறாக ஓடியது. இதை பார்த்த பள்ளி வேன் டிரைவர், வேனை ஓரமாக நிறுத்தினார். இருப்பினும் ஆம்னி பஸ், வேன் மீது பயங்கர சத்தத்துடன் மோதி, சாலையில் உருண்டது. ஆம்னி பஸ் மோதிய வேகத்தில் வேனின் வலதுபுறம் பெயர்ந்து, 20 மீட்டர் தூரத்தில் விழுந்தது. வேன் இருக்கையுடன் மாணவ, மாணவியர் 10 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தூக்கி எறியப்பட்டு, சாலையோர பள்ளத்தில் விழுந்தனர்.

                 இந்த கோர விபத்தில், கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மாணவியரான திருச்சோபுரம் பெருமாள் மகள்கள் அபிராமி (15), அகிலாண்டேஸ்வரி (12), பெரியக்குப்பம் ராமச்சந்திரன் மகள் பவித்ரா (14) சம்பவ இடத்திலேயே இறந்தனர். இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிய பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் நாகார்ஜூனா கம்பெனி ஊழியர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு, அவ்வழியே வந்த தனியார் மற்றும் அரசு பஸ்கள் மூலம், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

              திவ்யா (15), நிஷா (17), தரணி (11), சாந்தநேசன் (7), கனிஷ்கா (9), முகிலன் (4), சங்கவி (14), ஜெயசுதா ஆகியோர், மேல் சிகிச்சைக்காக கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ராவின் சகோதரி திவ்யா (15) இறந்தார். கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.ஆர்.ஓ., நடராஜன் மருத்துவமனைக்கு சென்று, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

                விபத்து குறித்து, கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, விழுப்புரம் மாவட்டம் மைலம் அடுத்த குன்னம் கிராமத்தை சேர்ந்த ஆம்னி பஸ் டிரைவர் அருள்முருகனை கைது செய்தனர். இவர் கிரேன் இயக்குபவர் என்றும், வழக்கமான டிரைவர் வராததால், ஆம்னி பஸ்சை ஓட்டிச் சென்றதாக விசாரணையில் தெரிந்தது.

தொடரும் விபத்து: 

             கடலூர் - சிதம்பரம் சாலையில் செம்மங்குப்பம் பஸ் நிறுத்தத்தில், விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. இங்கு பஸ் நிறுத்தம் எதிரெதிராக உள்ளன. இங்கு பயணிகளை இறக்கிவிட நிற்கும் பஸ்சிற்கு பின்னால் வரும் வாகனங்கள், முந்தி செல்ல முயலும் போது, எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றன. தற்போது நடந்த விபத்தும், இவ்வாறே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் பயணிகளை இறக்கிவிட, பஸ் நிறுத்தத்தை விரிவுபடுத்தினால், விபத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது.

மனித நேயமற்ற பள்ளி நிர்வாகம்: 

             கோர விபத்தில் பள்ளி மாணவியர்கள் நான்கு பேர் இறந்த போதிலும், பள்ளி வழக்கம் போல் இயங்கியது. விபத்து நடந்த தகவல் அறிந்த மாணவியர்களின் பெற்றோர் பலர் அலறி அடித்துக்கொண்டு பள்ளியில் குவிந்ததால் பதட்டம் நிலவியது. பெற்றோர் பலர் தங்களது மகள்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், பள்ளி நிர்வாகம் விடுமுறை விடாமல், போலீஸ் பாதுகாப்புடன் பள்ளியை இயக்கியது. 

இது குறித்து சி.இ.ஓ., அமுதவல்லி கூறியது 

                  "தற்போது அரையாண்டு தேர்வு நடப்பதால் மாணவியர்கள் பலர் காலையிலேயே பள்ளிக்கு வந்து விட்ட நிலையில், திடீரென விடுமுறை அறிவித்தால் மாணவியர்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பல்வேறு சிக்கல் ஏற்படும். ஆகவே தான், பள்ளிக்கு விடுமுறை விடவில்லை' என்றார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேலை உறுதி திட்டத்தால் 2.5 லட்சம் குடும்பங்களுக்கு வங்கியில் கணக்கு

திட்டக்குடி : 

            திட்டக்குடி இந்தியன் வங்கி இடமாற்ற திறப்பு விழாவில் கிராமங்கள் தோறும் வங்கிகளின் கிளைகள் துவக்கப்பட வேண்டுமென கலெக்டர் சீத்தாராமன் வேண்டுகோள் விடுத்தார். 

             திட்டக்குடியில் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையத்துடன் இடமாற்ற திறப்பு விழா நடந்தது. கடலூர் மண்டல மேலாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். கட்டட உரிமையாளர் சேகர், அருந்ததி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சின்னராஜி முன்னிலை வகித்தனர்.  கிளை மேலாளர் அனில்குமார் வரவேற்றார். தாசில்தார் கண்ணன், துயர் துடைப்பு தாசில்தார் சையத்ஜாபர், துணை மேலாளர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். 

ஏ.டி.எம். மையம் மற்றும் புதிய கட்டடத்தை திறந்து வைத்து கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில்,

              "பின்தங்கிய பகுதிகளில் கூடுதல் வசதிகளுடன் வங்கிகள் திறக்கப்பட வேண்டும். கிராமங்கள் தோறும் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் கிளைகளை உருவாக்குவதால், வங்கிகள் மூலம் மட்டுமே வரவு, செலவுகளை பரிமாற்றம் செய்திட ஒவ்வொரு தனி நபருக்கும் எண்ணம் வரும். தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 2.5 லட்சம் குடும்பங்கள் வங்கிகளில் கணக்கு உடையவராக மாற்றப்பட்டுள்ளனர்.

               வங்கிகளில் கடன் பெறுவோர் உரிய நேரத்தில் பணத்தினை செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கியிலும் காலாண்டுக்கு ஒருமுறை வாடிக்கையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும்' என்றார். ராமநத்தம்: ராமநத்தத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். 

            தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் கல்வி நிறுவன தாளாளர் கிருஷ்ணசாமி, முன்னோடி வங்கி அதிகாரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் கணேசன் வரவேற்றார். விழாவில் கலெக்டர் சீத்தாரமன் இந்தியன் வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்றுகளை நட்டார்.

Read more »

அண்ணாமலை நகர் பேரூராட்சி பகுதியில் பிற்பட்ட மானிய நிதி திட்டத்தில் ரூ.8.5 லட்சம் மதிப்பில் பணி ஆணை

சிதம்பரம் : 

                 அண்ணாமலை நகர் பகுதியில் பிற்பட்ட மானிய நிதி திட்டத்தின் கீழ் 8.5 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. 

                 அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.  தலைவர் கீதா கலியமூர்த்தி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் குப்புசாமி முன்னிலை வகித்தார். துணை தலைவர் பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அண்ணாமலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட மானிய நிதி திட்டத்தில் 9 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கப்பட்டது. 

                   பொது நிதி திட்டத்தின் கீழ் 6 லட்சம் பதிப்பில் பணிகள், அண்ணாமலைப் பல்கலைக்            கழக ஆளவை மன்ற குழுவிற்கு செனட்சபைக்கு உறுப்பினராக பேரூராட்சி தலைவரை நியமனம் செய்ய ஆளுனரை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

விவசாயிகளுக்கு ரூ.2000 கோடி கடன் : எம்.எல்.ஏ., அய்யப்பன்

கடலூர் : 

            விவசாயிகளுக்கு 2000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். 

            கடலூர் அடுத்த கீழ்குமாரமங்கலத்தில் நூலக திறப்பு மற்றும் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழா  நடந்தது. கீழ்குமாரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஊராட்சித் தலைவர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் கஜேந்திரன் முன்னிலை வகித்தார். குடிமைப் பொருள் தனி தாசில்தார் காந்தி வரவேற்றார். ஒன்றிய தி.மு.க., செயலாளர் ஜெயபால், பி.டி.ஓ.,க்கள் சந்தர், பத்மநாபன், கீழ்குமாரமங்கலம் ஊராட்சி துணைத் தலைவி இளவரசி, நுகர்வோர் குழு ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 

 எம்.எல்.ஏ., அய்யப்பன்  நூலகத்தை திறந்து வைத்தும், கீழ்குமாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட 644 பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு வழங்கி பேசுகையில்

                     "முதல்வர் கருணாநிதி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அரசு ஊழியர்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகளை அரவணைத்துச் செல்லும் அரசாக தி.மு.க., உள்ளது. தமிழகத்தில் விளைப் பொருட்களை பயிரிட விவசாயிகளுக்கு 2000 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது என்றார்.

Read more »

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் அரசின் பொங்கல் இலவச வேட்டி சேலை தயார்

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து இலவச வேட்டி சேலைகள் அந்தந்தப் பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் ஏழை எளியோர்களுக்கு அரசு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. 

            விருத்தாசலம் தாலுகாவிற்குட்பட்ட விருத்தாசலம், கம்மாபுரம், ஊமங்கலம், நல்லூர், வேப்பூர் உள்ளிட்ட வருவாய் கோட்டங்களுக்கான ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 240 வேட்டிகளும் அதே எண்ணிக்கையில் சேலைக ளும் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளன. இவ்வேட்டி, சேலைகளை தாலுகா அலுவலத்தில் இருந்து கிராமப் பகுதிகளில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. தாசில்தார் சரவணன் தலைமையில் துணை தாசில்தார் ராமமூர்த்தி, ராஜா, ஆர்.ஐ.,க்கள் ராஜ்குமார், செல்வி, கமலம் ஆகியோர் கணக்கீட்டின்படி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Read more »

பரங்கிப்பேட்டை பகுதியில் மழையால் மண்பாண்ட தொழில் பாதிப்பு: தொழிலாளர்கள் கவலை

கிள்ளை : 

                    கடந்த நான்கு நாட்களாக  திடீர் மழை மற்றும் வானம் மேக மூட்டமாக உள்ளதால் பரங்கிப்பேட்டை குமாரமங்கலத்தில் மண்பானை செய்யும் தொழிலாளிகள் கவலையில் உள்ளனர். சிதம்பரம் அருகே குமாரமங்கலம், குயவன்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ளோர் அதிகளவில் மண்பானை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 

                 பருவம் கடந்து மழை பெய்ததால் கார்த்திகை தீபத்தின் போது அகல் விளக்கு செய்த தொழிலாளிகள் மிகுந்த பாதிப்படைந்தனர். தற்போது பொங்கல் பண்டிகைக்கு பானை, சட்டி, அடுப்பு உள்ளிட்டவைகளை செய்யத் துவங்கியதில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாலும், கடந்த மூன்று தினங்களாக விட்டு விட்டு பெய்யும் மழையால் அப்பகுதியில் பண்பாண்டத் தொழில் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்பாண்டத் தொழிலாளிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி சேதம்; மத்திய குழு தகவல்

  கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி சேதம்; மத்திய குழு தகவல்

 
கடலூர்:

            கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டது.

                கல்குணம், மருவாய், மருதூர், பூதங்குடி, எல்லைக்குடி, வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட சாலைகள், வீடுகள், பயிர்கள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

              அதனைத்தொடர்ந்து திருநாரையூர், கீழவன்னியூர், வீரநத்தம், சர்வராஜன்பேட்டை, மெய்யாத்தூர், பூலாமேடு, குமராட்சி, சிவாயம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்கள், சாலைகள், குடிசைகள், பாலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் மத்தியக்குழு தலைவர் விஸ்வநாதன் மற்றும் முரளிதரன் ஆகியோர் கூறியது:-

                   கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டுள்ளோம். கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ரூ.113.25 கோடி மதிப்பிலான சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளது. 54 ஆயிரம் எக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 2711 எக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

                பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்படும். மேலும் பயிர் பாதிப்பு மற்றும் நிலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கும் நிவாரணம் வழங்க பரிந்துரை செய்யப்படும். தமிழ் நாட்டில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு ரூ.650 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

                தற்போது ரூ.117 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்க கூடிய வெள்ளியங்கால் ஓடை, மனவாய்க்கால் ஆகியவற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.93 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் அனுப்பப்பட்டுள்ளது. அது மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடலூர்
மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் கூறியது:-
 

             கடலூர் மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.368 கோடி நிதி பெறப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. வெள்ளியங்கால் ஓடை, மனவாய்க்கால் ஆகியவற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.93 கோடியில் நிரந்தர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பரவனாற்றில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு என்.எல்.சி. உடன் இணைந்து கூட்டு திட்டம் தயாரிக்கப்படும் என்று கூறினார்.

Read more »

Blood group to be incorporated in students' identity cards

CUDDALORE:

           As a fall-out of the road accident that claimed the lives of four girl students and inflicted injuries to 17 other students, District Collector P.Seetharaman has emphasised the need for incorporating the blood groups in the identity cards of the students.

              The Collector told The Hindu that he had directed Chief Educational Officer S.Amudhavalli and Joint Director (Health Services) B.Kamalakannan to make immediate arrangements for finding out the blood groups of students and mentioning the same in their ID cards.

          They could do so by sending the para-medical staff to every school. Mr Seetharaman said that at the time of exigencies as of now, when a large number of students would have to be treated at the same time, this measure would help the medical fraternity to render speedy services. The staff in accident and trauma wards in government hospitals had been instructed to keep the list of blood donors, particularly those with rare blood groups, ready at hand, along with their contact numbers.

Read more »

Aid distributed to Narikoravas

CUDDALORE: 

              An amount of Rs 17.02 lakh has been sanctioned by the Narikoravas' Welfare Board to extend financial assistance to the nomadic tribes in Cuddalore district to set up self-help ventures and to meet other family expenditure, according to Collector P.Seetharaman. Giving away the aid amounting to Rs 1,28,500 to 15 Narikoravas at the weekly grievance day session here on Monday, he said the remaining amount would soon be disbursed to 212 members of the community.

Read more »

Mass contact programme put off in Kattumannarkoil block

CUDDALORE: 

           The mass contact programme scheduled to be conducted by District Revenue Officer S.Natarajan at Pillaiyarthangal in Kattumannarkoil block on December 21 (Tuesday) has been put off owing to administrative reasons. The next date would be announced later, a official statement said.

Read more »

Assessment work inspected

CUDDALORE: 

           Collector P. Seetharaman and District Revenue Officer S. Natarajan on Sunday supervised the assessment of damage to crops and houses caused by the recent floods. The assessment is being carried out by official teams. Mr. Seetharaman went to places such as Thirunaraiyur, Kattumannarkoil and Kurinjipadi, and, Mr Natarajan visited Killai and Bhuvanagiri.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior