உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 11, 2010

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாறுமா?

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை மேற்கூரையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள்.

நெய்வேலி : 

                    ராமலிங்க அடிகள் வாழ்ந்த வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

                   கடலூர் நகரத்திலிருந்து 38 கி.மீ. மேற்கே அமைந்துள்ளது வடலூர். வடலூர் நான்குமுனைசந்திப்பிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம். இங்கு வள்ளலார் ராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட சத்தியஞான சபையும், ஞான சபையை ஒட்டி அணையா அடுப்புடன் கூடிய தருமசாலையும் உள்ளன. இந்த ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று 6 காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. 

                            இதைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வள்ளலார் தெய்வ நிலையத்தில் கூடுவார்கள்.இதோடு மட்டுமில்லாமல் வள்ளலார் கரங்களால் தீ மூட்டப்பட்டு, இன்றுவரை அது அணையாமல் அந்த அடுப்பில் உணவுகள் தயார் செய்யப்படுகிறது. பசி என்று வருவோர் பசியைப் போக்க தருமசாலைக்கு வரும் அன்பர்களுக்கு 3 வேளையும் உணவு பரிமாறப்படுகிறது. இது 105 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது. 

                     இந்த தருமசாலை வள்ளலாரின் அன்பர்கள் தரும் தானியங்கள் மூலமாகவும், நிதியுதவியின் மூலமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகைய சிறப்பு வாய்ந்த வள்ளலார் தெய்வ நிலையத்தில் தற்போது விரிவுபடுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. தைப்பூசத் தரிசனத்தைக் காணவரும் பொதுமக்கள், சிரமமின்றி ஜோதியைக் காண ஞானசபை முன் பிரமாண்டமான மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் வள்ளலார் தெய்வ நிலைய முகப்பிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

                   மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வள்ளலார் தெய்வ நிலையத்தை அழகுப்படுத்தும் திட்டத்தை உருவாக்கி, சுற்றிலும் பூங்கா அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன் முதற்கட்டமாக தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் நன்கொடை வழங்கியதோடு, என்எல்சி நிறுவனத்தின் உதவியையும் கோரியுள்ளார். இதோடு நில்லாமல் தமிழக சுற்றுலாத் துறையின் மூலம் 68 லட்சம் செலவில் ஞானசபையை சுற்றிலும் சிமென்ட் சாலை, 2 உயர் கோபுர மின்விளக்கு, வடலூர்-விருத்தாசலம் சாலை மார்க்கத்திலிருந்து ஞானசபை வரை தார்சாலை, தருமசாலையை சுற்றிலும் தார்சாலை, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

                  இது தவிர்த்து சுற்றுலா வளர்ச்சித் துறையின் மூலம் 2 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளன. இதன்மூலம் தருமசாலை முன்  1 கோடி செலவில் ஆர்சிசி மண்டபம், தலா 25 லட்சம் செலவில் நூலகம் மற்றும் படிப்பகம், 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், வள்ளலார் வரலாற்று கண்காட்சி அரங்கம், ஞானசபை குளம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளப்படவிருப்பதாக வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி நாகராஜன் தெரிவித்தார்.

                       வள்ளலார் அன்பர்களின் விருப்பங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவரும் அரசு, நூறு ஆண்டுகளை கடந்து இன்றும் சன்மார்க்கத்தை உலகமெலாம் பரப்பிவரும் வள்ளலாரின் கொள்கைகளுக்கு மதிப்பளித்து, வள்ளலார் வாழ்ந்த இடத்தை ஆன்மீக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்பது சன்மார்க்க அன்பர்களின் கோரிக்கையாகும்.

Read more »

கீழணையிலிருந்து வீராணத்துக்கு கூடுதலாக நீர் திறப்பு


 
சிதம்பரம்:
 
                   கீழணையிலிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு புதன்கிழமை வடவாறு மூலமாக 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 44.5 அடியாக உயர்ந்துள்ளது. 
 
                ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.5 அடியாகும்.ஏரியிலிருந்து சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனத்துக்கு 242 கனஅடியும், சென்னை குடிநீருக்கு 74 கனஅடியும் வெளியேற்றப்படுகிறது.ஏரிப்பாசனத்துக்கு நீர் வெளியேற்றுவது புதன்கிழமை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கியுள்ளதால் ஏரியில் அதிகளவு நீர் தேக்கினால் வெள்ளச் சேதத்தை சந்திக்க நேரிடும்.
 
                       எனவே ஏரியில் 44 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்கக் கூடாது என சமீபத்தில் நடைபெற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஏரிக்கு கீழணையிலிருந்து கூடுதலாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் புதன்கிழமை ஏரியின் நீர்மட்டம் 44.5 அடியாக உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை ஏரியின் நீர்மட்டம் 45 அடியாக உயரும் என எதிர்பாக்கப்படுகிறது. ஏரியில் அதிகளவு நீர் தேக்கி வைக்கப்படும் முயற்சியால் விவசாயிகள் கவலையுற்றுள்ளனர்.

Read more »

மூலிகைகளின் ராணி "துளசி"

                மூலிகைகளின் ராணி என பெயர் பெற்ற துளசியை பயிரிடும் விவசாயிக்கு ஒரு ஹெக்டேருக்கு 6 ஆயிரம் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படுகிறது. 

                   வைட்டமின் ஏ, சி, கால்சியம் சத்துக்கள் அதிகளவில் இருக்கும் துளசியில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் இருந்து கொசு விரட்டி, கிருமி நாசினி, தலைவலி, தொண்டைப் புண், அஜீண கோளாறு, வயிற்றுப்போக்கு மலேரியா போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் பல்வேறு மருந்துகள் தயாரிப்பதால் மூலிகைகளின் ராணி என்ற பெயர் துளசிச் செடிக்கு உண்டு.

நடவு முறை:

                    பொதுவாக விதைகள் மூலம் துளசி உற்பத்தி செய்யப்படும். மேட்டுப் பாத்தியல் முறையில் விதைகள் தூவி நாற்றங்கால் அமைக்க வேண்டும். 8 முதல் 10 நாளில் விதை முளைத்து வரும். 6 வாரங்கள் தயாரான நாற்றுக்களை 40 செ.மீ. ஷ் 40 செ.மீ. என்ற இடைவெளியில் நடவு செய்து மாதத்துக்கு இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. இதற்கு மக்கிய தொழு உரம், மண்புழு உரம் மட்டுமே போதுமானது.

அறுவடை: 

                 எல்லா வகை மண்ணிலும் வளரும் தன்மைக் கொண்ட துளசிச் செடியின் முதல் அறுவடை 90 முதல் 95 நாளிலும், அடுத்ததாக 60 முதல் 75 நாளிலும் அதை தொடர்ந்து ஆண்டுக்கு 3 முறை என்ற கணக்கில் அறுவடை செய்யலாம். எண்ணெய் எடுக்க அறுவடை செய்யும் போது பூக்கும் தருவாயில் அறுவடை செய்ய வேண்டும். அப்போது ஒரு ஹெக்டேருக்கு 2500 முதல் 3000 கிலோ வரை அறுவடை செய்ய முடியும். 

                   பெரும்பாலும் பூஜைகள், மாலை கட்டும் பலனுக்காக அறுவடை செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோயில்கள், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சபரி மலை சீசனில் இம்மாவட்டத்தில் துளசியின் தேவை அதிகளவில் உள்ளது. பூஜை மற்றும் மாலை கட்ட பயன்படும் வகையில் அறுவடை செய்யப்படும் துளசி ஒரு கிலோ 25 வரை விற்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்காக அறுவடை செய்யப்படும் துளசி கிலோ 40 வரை விற்கப்படுகிறது. 

                  ஆனால் எண்ணெய் எடுக்கும் விதத்தில் துளசி பயிர்கள் வட இந்தியாவில் மட்டுமே அதிகளவில் அறுவடை செய்யப்படுகிறது. தென் இந்தியாவில் எண்ணெய் பயன்பாடு அறுவடை மிகவும் குறைவாக உள்ளது. 

                       துளசி பயிர் குறித்த விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலரை 9444227095 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Read more »

பணம் தரும் பப்பாளி


கடலூரில் செழித்து வளர்ந்த பப்பாளி மரம்
 
கடலூர்: 
 
                கனிகளின் சிகரம் என்றும், ஏழைகளின் ஆப்பிள் என்றும் மருத்துவர்களால் வர்ணிக்கப்படுவது பப்பாளி. பப்பாளி வெப்ப, மிதவெப்ப நாடுகளில் பயிரிடப்படுகிறது. 
 
                  பப்பாளிப் பழத்தில் குளுக்கோஸ், வைட்டமின்கள் ஏ மற்றும் சி அதிக அளவில் உள்ளன. பப்பாளி பழம், இலைகள், வேர்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. பப்பாளிப் பழம் உணவை, குறிப்பாக பருப்புவகை உணவுகள், இறைச்சி போன்றவற்றை எளிதில் செரிக்க வைக்கும் குணம் கொண்டது. 35 கிராம் இறைச்சியை ஒரு கிராம் பப்பாளி செரிக்க வைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 
                       பப்பாளிப் பழம் பித்தத்தைப் போக்கும். கல்லீரல், கணையம், சிறுநீரக நோய்களை குணப்படுத்தும். ரத்த சோகைக்கும், புற்று நோய்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பப்பாளிக் காயில் இருந்து எடுக்கப்படும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பப்பாயின் என்ற நொதிப் பொருள் (என்ûஸம்) நிறைய மருத்துவ குணம் கொண்டது.தமிழ்நாட்டில் திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை, தருமபுரி மாவட்டங்களில் வணிக ரீதியாகப் பயிரிடப்படுகின்றன. மிதவெப்ப மற்றும் வெப்பப் பிரதேசங்களில், சமவெளிகளில் களிமண் பூமியைத் தவிர மற்ற நிலங்களில் பப்பாளி நன்றாக வளரும்.
 
                     மலைப் பகுதிகளில், 1200 மீட்டர் உயரம் உள்ள பகுதிகளிலும் வடிகால் வசதி உள்ள நிலங்களிலும் பப்பாளி வளரும். ஆண்டு முழுவதும் பப்பாளியைப் பயிரிடலாம் என்றாலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலும் பப்பாளி பயிரிடலாம் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள் .பப்பாளியின் வயது 24 முதல் 30 மாதங்கள். நடவுக் காலத்தில் அதிக மழை இருக்கக் கூடாது. வேர் பகுதியில் அதிகம் தண்ணீர் தேங்கக் கூடாது. பப்பாளியில் கோ1, கோ2, கோ3, கோ4, கோ5, கோ6, கோ7 மற்றும் கூர்க்கனி டியூ, சூரியா போன்ற ரகங்கள் உள்ளன. இவற்றில் கோ2, கோ5, கோ6 ஆகிய ரகங்கள் சாப்பிடச் சிறந்தவை. கோ2, கோ5 பால் எடுப்பதற்கு ஏற்ற ரகங்கள். 
 
                        பால் எடுத்த பிறகு பழங்களைச் சாப்பிடலாம். பப்பாளி நாற்று தயாரிக்க ஏக்கருக்கு 500 கிராம் விதை தேவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கேப்டான் சேர்த்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். தொழுஉரம் மற்றும் மணல் நிரப்பி, பாலித்தீன் பைகளில் பை ஒன்றுக்கு 4 விதை வீதம் நட்டு நாற்று தயாரிக்கலாம். 60 நாள்களில் நாற்று தயாராகிவிடும். பப்பாளி பயிரிட நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, 1.8 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ. ல 45 செ.மீ. ல 45 செ.மீ. அளவில் குழிகள் தோண்டி, மண் மற்றும் தொழுஉரமிட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். 
 
                       செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடாது. ஆண், பெண் என இருபால் தன்மை கொண்ட செடிகளை நீக்கியபின், செடி ஒன்றுக்கு 50 கிலோ தழை, மணி, சாம்பல் உரம் மற்றும் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும். 4-வது மற்றும் 8-வது மாதங்களில் 0.5 சதவீதம் துத்தநாக சல்பேட், 0.1 சதவீதம் போரிக் அமிலம் கலந்து செடிகளில் தெளித்தால் மகசூல் அதிகம் கிடைக்கும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள். 
 
                     செடிகள் பூக்கத் தொடங்கியதும் 15 அல்லது 20 செடிகளுக்கு ஒன்று வீதம் ஆண் செடிகளை விட்டுவைத்து, மற்றவைகளை அகற்றிவிட வேண்டும். கோ3, கோ7 ரகங்களில் இருபால் பூக்கள் கொண்டவைகளை மட்டும் விட்டுவிட்டு, பெண் மரங்களை நீக்கிவிட வேண்டும்.பப்பாளிக் காய்களில் இருந்து பால் எடுக்க, முதிர்ந்த காய்களில் 2 முதல் 3 இடங்களில் லேசாகக் கீறல் ஏற்படுத்தி, பாலை வடிக்க வேண்டும். அதிகாலை முதல், காலை 10 மணி வரை, 3 அல்லது 4 நாள்களுக்கு ஒருமுறை பால் எடுக்கலாம். பப்பாளிப் பாலை அலுமினியப் பாத்திரம் அல்லது ரெக்ஸின், பாலிதீன் தாள்களில் சேகரிக்கலாம். பாலை சூரிய ஒளி அல்லது 40 டிகிரி சென்டிகிரேடில் செயற்கை உலர் கருவிகளில் உலர்த்தலாம்.
 
                    உலர்த்தத் தாமதம் ஆனால் தரம் பாதிக்கப்படும்.ஒரு ஹெக்டேருக்கு 3 ஆயிரம் முதல் 3,750 கிலோ வரை பப்பாளி பால் கிடைக்கும். பப்பாளிப் பழங்களைவிட பப்பாளிக் காய்களில் இருந்து எடுக்கப்படும் பாலுக்கு நல்ல விலை கிடைக்கிறது. ஓசூர், பெங்களூர் பகுதிகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்குகின்றன.
 
இதுகுறித்து கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆடூர்குப்பம் கிராமத்தில் பழத்துக்காக பப்பாளி பயிரிட்டுள்ள விவசாயி ஜனார்த்தனம் கூறு
 
                           "5 ஏக்கரில் பப்பாளி பயிரிட்டு இருக்கிறேன். ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை செலவாகிறது. |5 லட்சத்துக்கு மேல் லாபம் கிடைக்கிறது. கடலூர் மாவட்ட அங்காடிகளிலேயே பழங்களை விற்பனை செய்கிறேன்" என்றார்.

Read more »

அதிக லாபம் தரும் சர்க்கரைக் கிழங்கு சாகுபடி


சிதம்பரம்: 
                 தமிழகத்தில் நெற் பயிருக்கு போதிய விலை கிடைக்காததால் அதற்கு மாற்றாக தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்வதில் தற்போது தமிழக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தோட்டக்கலை பயிரான சர்க்கரைக் கிழங்கு சாகுபடி செய்து விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலை. தோட்டக்கலைத் துறை முனைவர் ப.மதனகுமாரி தெரிவித்தது:  
                    சர்க்கரைக் கிழங்கு பயிரானது பார்ப்பதற்கு முள்ளங்கி செடிபோல தோன்றும் ஒரு கிழங்கு வகைப்பயிர். இக்கிழங்கில் 12 முதல் 15 சதவீதம் வரை சர்க்கரை சத்து உள்ளது. உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில் 45 சதவீதம் இப்பயிரிலிருந்து பெறப்படுகிறது. 
                  இப்பயிர் சம தட்பவெப்ப நிலை உள்ள தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம். இதற்கு நீர்தேவை குறைவு. வெப்ப மண்டல பகுதிகளுக்கு ஏற்ற ரகங்களான பசோடா, ஹெச்.ஐ. 0064 மற்றும் டோராடி என்ற ரகங்களை விவசாயிகள் பயிரிடலாம். தற்போது சர்க்கரைக் கிழங்கு விதைகள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து சில விதை நிறுவனங்கள் விதைகள் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளன.
                 ரபுட்டாசி-ஐப்பசி மாதங்கள் (குளிர்காலம்) இப்பயிரைப் பயிரிடும் பருவங்களாகும். 6.5 முதல் 8.5 கார அமிலத்தன்மை உள்ள மண் வகைகள் மிகவும் ஏற்றவை. ளர் மற்றும் உவர் நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். ஏக்கருக்கு 20 ஆயிரம் விதைகள் (600 கிராம்) கொண்ட 2 பைகள் தேவைப்படும்.
விதைப்பு: 
                   விதைக்கு விதை 20 செ.மீ. இடைவெளி விட்டு குழிக்கு ஒரு விதை வீதம் 2 செ.மீ. ஆழத்தில் விதைகளை ஊன்ற வேண்டும். மண் பரிசோதனை செய்து உரமிடல் வேண்டும். மண் பரிசோதனை செய்ய வாய்ப்பு இல்லாத நிலையில் ஏக்கருக்கு தொழுஉரம் 10 ஆயிரம் கிலோ, தழைச்சத்து 30 கிலோ, மணிச்சத்து 24 கிலோ, சாம்பல் சத்து 24 கிலோ ஆகியவை அடியுரமாக இட வேண்டும். மேலும் விதைத்த 30-வது நாளில் முதல் மேலுரமாக தழைச்சத்து 15 கிலோவும், விதைத்த 60-வது நாளில் இரண்டாம் மேலுரமாக 15 கிலோ தழைச்சத்தும் இடவேண்டும்.
களை நிர்வாகம்: 
                   பெண்டிமெத்லின் (15 லிட்டர் ஸ்டேம்ப்) களைக்கொல்லியை 300 லிட்டர் நீரில் கலந்து விதைத்த 3-வது நாளில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். விதைத்த 25-வது நாளிலும், 50-வது நாளிலும் கைகளால் மண் அணைக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்: 
                     களிமண் கலந்த மண் வகைகளுக்கு 8-10 நாள்களுக்கு ஒரு முறையும், வண்டல் மண் சார்ந்த மண் வகைகளுக்கு 5-7 நாள்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். விதைகளை விதைக்கும் முன்பு மண்ணில் போதுமான ஈரம் இருத்தல் அவசியம். நோய் மேலாண்மை: இலைப்புள்ளி நோய், அடிச்சாம்பல் நோய், பூசாரியம் மஞ்சள் இலை நோய் மற்றும் செடி அழுகல் நோய் ஆகியன தாக்கலாம். நோய்களை கட்டுப்படுத்த ஊடுருவும் பூஞ்சான நோய் தடுப்பு மருந்துகளை இரண்டு முறைகள் 3-வது மற்றும் 5-வது வாரத்தில் தெளிக்க வேண்டும். 
அறுவடை: 
                    சர்க்கரைக் கிழங்கு ரகத்தின் சராசரி வயது 5 முதல் 6 மாதம். முதிர்ந்த செடியில் அடியிலுள்ள வெள்ளி அடுக்கு கீழ் இவைகள் வெளிறிய மஞ்சள் நிறம் அடையும் போது அறுவடை செய்யலாம். சர்க்கரை மானி (பிரிக்ஸ் மீட்டர்) மூலம் சர்க்கரை சத்து 15-18 விழுக்காடு வந்தவுடனும் கிழங்குகளை அறுவடை செய்யலாம்.
பயன்கள் மற்றும் முக்கியத்துவம்: 
                    எரிசக்திக்கு பயன்படும் எத்தனால் எடுக்க மூலப்பொருளாக பயன்படுகின்றது. சர்க்கரைக் கிழங்கின் கழிவுப் பொருள்களான இலைகளையும் மற்றும் கிழங்கு கூழையும் மாட்டுத் தீவனமாக உபயோகிக்கலாம். எரிசக்தியின் தேவை அதிகரித்த இன்றைய நிலையில் இக்கிழங்கில் இருந்து கிடைக்கும் எத்தனால் மூலம் சுமார் 12 ஆயிரம் கோடி அளவுக்கு அன்னிய செலாவணி மீதப்படுத்தலாம். எத்தனால் தேவை எப்போதும் இருப்பதால் சர்க்கரை ஆலைக்கு தொடர்ந்து மூலப்பொருள்கள் கிடைத்து ஆலைகள் தொடர்ந்து செயல்பட வாய்ப்பும் உள்ளது.

Read more »

மேற்கு வங்கத்தில் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வி மைய படிப்புகள் அறிமுகம்

சிதம்பரம்:

                     அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் புதிய படிப்புகளான பி.பி.ஒ. மேனேஜ்மெண்ட் என்ற மேலாண்மை படிப்பை அம்மாநில சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுத்துறை கல்வி அமைச்சர் டாக்டர் அப்துஸ்சத்தார் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார்.

                    இந்நிகழ்ச்சியில் அண்ணாமலைப் பல்கலை. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன், மேற்குவங்க மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை பிராந்திய இயக்குநர் எஸ்.ஜே.அமலன், தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் கசாலி, ஒரியன் எஜுடெக் நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சீவ் கோத்தாரி, மனிஷ்அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சி குறித்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 

                       பி.பி.ஒ. மெனேஜ்மெண்ட் துறை இந்தியாவில் பெரும் பங்காற்றி வருகிறது. பொருளாதார வளர்ச்சியுடன் மிகச்சிறந்த வேலைவாப்பையும் உருவாக்கி வருகிறது. பி.பி.ஓ. துறை உலக சந்தையில் இந்தியாவின் பங்கு வர்த்தகம் யு.எஸ். டாலரில் 12.5 பில்லியனாகும். வகுப்பறையில் மாணவர்கள் இத்தகைய படிப்புகளை பயில்வதற்கும், கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவோரின் திறமைகளுக்கும் உள்ள இடைவெளியை போக்க ஆவன செய்ய வேண்டும். 

                    இதனை கருத்தில் கொண்டு கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரியன் எஜுடெக் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பி.பி.ஒ. துறையில் சிறந்த நிபுணர்களை ஏற்படுத்த முடியும் என எம்.ராமநாதன் தெரிவித்தார்.

Read more »

பண்ருட்டி பள்ளியில் 253 பேருக்கு இலவச சைக்கிள்

பண்ருட்டி:

                 புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படிக்கும் 253 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) அ.தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற விழாவில், கிராம கல்விக் குழு தலைவர் எஸ்.சம்பத்குமார், தொரப்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.அருணாசலம், திமுக நகர செயலர் கலியமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர்.

Read more »

பண்ருட்டியில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

பண்ருட்டி:

                விபத்து நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் பண்ருட்டி சார்பு நீதிமன்ற ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். 

              பண்ருட்டி திருவதிகை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் கார் ஓட்டுனர் ராமமூர்த்தி. இவர் 24.11.1998 அன்று பட்டுக்கோட்டை அருகே கார் ஓட்டிச் சென்றபோது அரசு விரைவு பஸ் மோதி இறந்ததாக கூறப்படுகிறது. இது தொர்பாக ராமமூர்த்தியின் மனைவி செல்வராணி, பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் 1999-ம் ஆண்டு வழக்குத் தொடுத்துள்ளார். 2006-ம் ஆண்டில் வழக்கு முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இறந்த ராமமூர்த்தியின் குடும்பத்துக்கு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அப்போதைய நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

                  இத்த இழப்பீட்டுத் தொகையை போக்குவரத்துக் கழகம் செலுத்தாததால் வட்டி, வழக்குச் செலவு உள்பட ரூ.14,72,308-க்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்ûஸ பறிமுதல் செய்ய சார்பு நீதிபதி கலியமூர்த்தி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் பண்ருட்டி வந்த அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்ûஸ பறிமுதல் செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தினர்.

Read more »

Headmasters, PG teachers stage demo


 
Fighting for rights: Headmasters and teachers of higher secondary schools at the demonstration in Cuddalore on Wednesday. 
 
CUDDALORE: 

              Headmasters and headmistresses of government-run and aided higher secondary schools and postgraduate teachers staged a demonstration in front of the Collectorate here on Wednesday, calling for removal of the anomaly in pay structure recommended by the Sixth Pay Commission.

             Headed by S. Perumalraj, the demonstration was launched by S. Kamaraj, State Law Secretary of the Tamil Nadu Post-Graduate Teachers' Association. The protestors alleged that the recommendations of the Sixth Pay Commission in connection with the pay structure of headmasters and postgraduate teachers were not on a par with that of those in Central government services.

          The anomaly was glaring in the pay structure between graduate teachers and postgraduate teachers. Following representations made by the aggrieved teachers, a one-man committee was formed to go into the issue. However, the report of the committee had also not done justice to headmasters and postgraduate teachers, the protestors said. This was because, instead of removing the pay disparity, it had widened it.

            In other words, the report had raised the salary structure of 65 categories of employees, who were earlier put on equal footing with headmasters and postgraduate teachers. The committee had also recommended a special allowance of Rs. 500 to headmasters of middle schools and high schools. Therefore, to voice their protest against such an “indifferent attitude of the authorities to their rightful plea,” the joint action council of the higher secondary school headmasters and postgraduate teachers had decided to lay siege to the Directorate of School Education at Chennai from November 22 to 26.

                The protestors also demanded a separate directorate for higher secondary education, increasing compensation for evaluation of answer sheets of public examinations and deletion of words “merit and ability” for promotion of teachers as headmasters in government aided schools.

Read more »

Official found hanging

CUDDALORE: 

              An official of Sugarcane Research Station, situated at Semmandalam here, was found hanging at his quarters on Wednesday.

              Police sources said that Raghunathan (42), a native of Vadakkal Pakkam in Tiruvannamalai district and serving as Assistant Agriculture Officer in the research station, was depressed for quite sometime. He was said to be addicted to liquor and in the habit of speaking incoherently. When he did not turn up for duty on Wednesday morning, an employee went to his quarters found the door locked from inside. When he looked in through the window, he saw Raghunathan hanging from the ceiling. On receiving information, police went to the spot, broke open the door and sent the body to the Government Hospital for post-mortem.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior