உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 24, 2011

கடலூர் அணைக்கரை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்


அணைக்கரை மேற்பகுதியில் தொடங்கப்பட்டுள்ள சீரமைப்பு.
 
சிதம்பரம்:
      
          சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணைக்கரை பாலத்தில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பஸ் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
          
             தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ளது கீழணை. இந்த அணைக்கு கல்லணையிலிருந்து கொள்ளிடம் வழியாக நீர் வருகிறது. கீழணை பாசனம் மூலம் கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 1.50 லட்சம் ஏக்கர் வேளாண் பாசனம் நடைபெறுகிறது.கீழணையில் அரியலூர், கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பிரதான பாலம் உள்ளது. இந்த பாலம் வலுவிழந்ததால் பாலத்தில் சில ஆண்டுகளாக கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு கார், வேன் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. 
 
             இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பாலத்தை சீரமைக்க தமிழக அரசு ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. பாலத்தின் கீழ்பகுதி சீரமைப்புப் பணி முடிவுற்று தற்போது பாலத்தின் மேல்பகுதி சீரமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தில் பிப்ரவரி 21-ம் தேதி முதல் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே செம்மண் சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பாலத்தின் ஷட்டர் சீரமைக்கப்படுவதால் கீழணையிலிருந்து வீராணத்துக்கு தண்ணீர் அனுப்புவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
              கீழணை பாலம் சீரமைப்புப் பணி மார்ச் 31-ல் முடிவுற்று ஏப்ரல் முதல் வாரத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆர்.செல்வராஜ் தெரிவித்துள்ளார். பாலத்தில் அடியோடு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பஸ்கள் அதிகம் வரவில்லை. இதனால், தஞ்சை, கும்பகோணம், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சென்னைக்கு சென்று வர அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில்பாதை தடத்தில் தஞ்சாவூரிலிருந்து மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
                 விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மீட்டர் கேஜ் பாதையில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிர  ஸ் மற்றும் விரைவு பாசஞ்சர் ரயில்கள் ஆகியவை தற்போது அமைக்கப்பட்டுள்ள அகல ரயில்பாதையில் மீண்டும் இயக்க வேண்டும் என தஞ்சை, கடலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read more »

களையிழந்த கடலூர் சில்வர் பீச்

கடலூர்:

              நகராட்சி உள்ளிட்ட துறைகளின் அலட்சியம் காரணமாக, கடலூர் சில்வர் பீச் களையிழந்து காணப்படுகிறது.  

                கடலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் சில்வர் பீச்சும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகத்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கடலூர் சில்வர் பீச் வளர்ச்சிப் பணிகளுக்காக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பணம், பல்வேறு துறைகள் சார்பில் செலவிடப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக் காலமாக ஏற்கெனவே செய்யப்பட்ட பணிகளை முறையாக பராமரிக்காமலும், புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாமலும், சில்வர் பீச் புறக்கணிக்கப்பட்டும் கேட்பாரற்றும் கிடக்கிறது.  

                ஆனால் கடற்கரைப் பக்கம் தலைகாட்டும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் மட்டும் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கடற்கரையை வந்து எட்டிப் பார்த்துத் திரும்பினாலே போதும் கட்டணத்தக் கரந்து விடுகிறார்கள்.  இங்கு கடைபோடும் வணிகர்களுக்கும் கட்டணம் உண்டு. கடலூர் மக்களின் ஒரே பொழுதுபோக்கு அம்சம் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் தான். அதுவும் கோடைக்காலம் நெருங்கி விட்டால், கடலூர் மக்கள் பலரும் நாடும் ஒரே இடம் இக்கடற்கரைதான்.  

                      அண்மைக் காலமாக சில்வர் பீச் பராமரிப்புக்கு அப்பார்ப்பட்ட இடமாகக் காட்சி அளிக்கிறது. 18-ம் தேதி மாசி மகத் திருவிழாவுக்கு வந்த மக்கள் கூட்டம், அவர்களை நம்பி பொருள்களை கடைவிரித்த சிறு வணிகர்கள் அனைவரும் சேர்ந்து, கடற்கரையை அசுத்தத்தின் உயர் எல்லைக்குக் கொண்டு சென்று விட்டனர்.  இதனால் மெரீனாவுக்கு அடுத்த அழகான கடற்கரை என்ற பெயர் பெற்ற சில்வர் பீச் இன்று, அலங்கோலமாகக் காட்சி அளித்துக் கொண்டு இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கான படகு குழாம், இருந்த இடம் தெரியாமல் சிதைந்து கிடக்கிறது.  

              குப்பைகளை அகற்ற தற்போது புதிய கலாசாரம் சில்வர் பீச்சில் உருவாகி இருக்கிறது. கரும்புச்சாறு பிழிந்த சக்கைகள், பாலித்தீன் பைகள் போன்றவற்றை ஆங்காங்கே போட்டு தீயிட்டு எரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.  இதனால் சில்வர் பிச் விரைவில் எரி சாம்பல்கள் நிறைந்த கருப்பு நிறக் கடற்கரையாக மாறும் அபாயம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. கடலூர் நகருக்கு உள்ளேயே நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள், விதிகளுக்கு மாறாகக் குப்பைகளை தெருக்களிலேயே எரிக்கும் வேலைதான் செய்கிறார்கள்.  

               அந்தக் கலாசாரம்தான் சில்வர் பீச்சுக்கும் பரவியிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். அவ்வப்போது சில்வர் பீச் அசுத்தம் அடையும் போதெல்லாம், ஏதேனும் தொண்டு நிறுவனங்கள்தான் முன்வந்து, சுத்தம் செய்து வருகின்றன. தற்போதும் மாசி மகத் திருவிழாவுக்குப் பின் அலங்கோலமாகக் காட்சிதரும் சில்வர் பீச், தன்னை அழகுபடுத்திக் கொள்ள, மீண்டும் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தேடிக் கொண்டு இருக்கிறதோ?

Read more »

சட்டசபை தேர்தல் தொடர்பான பயிற்சி: நாளை கடலூர் மாவட்ட கலெக்டர் கலந்துகொள்கிறார்

                 சட்டசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பயிற்சி அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

       இந்த பயிற்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் கலந்துகொள்கிறார்கள்.

           பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், கோவை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) பயிற்சி அளிக்கப்படுகிறது. கடைசி நாளான சனிக்கிழமை நடத்தப்படும் பயிற்சியில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்துகொள்கிறார்கள்.


Read more »

மாற்றுத் திறனாளிகளுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு

                தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் பணியிடங்களில் (குரூப்-4), மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான சிறப்புத் தேர்வு, வரும் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது. இதற்கு, மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

               அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 145, தட்டச்சர்கள் பணியிடங்கள் 106, சுருக்கெழுத்தர் பணியிடங்கள் 17 ஆகியவை நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதற்கான சிறப்பு போட்டித் தேர்வு, ஆகஸ்ட் 7ம் தேதி 32 மையங்களில் நடக்கின்றன. எஸ்.எஸ்.எல்.சி., கல்வித் தகுதி கொண்ட மாற்றுத்திறனாளிகள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மார்ச் 23ம் தேதி மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்ச் 2ல் நாட்டியாஞ்சலி துவக்கம்

சிதம்பரம்: 

              சிதம்பரம் நடராஜர் கோவிலில் 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 2ம் தேதி துவங்குகிறது. 

             நாட்டிய கலைஞர்கள் தங்களின் நாட்டிய கலையை நடராஜருக்கு அர்ப்பணிக்கும் நாட்டியாஞ்சலி விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதற்காக அறக்கட்டளை துவக்கி 1981ம் ஆண்டு முதல் கடந்த 29 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி அன்று துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. 

              இந்த ஆண்டு 30வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் மார்ச் 2ம் தேதி துவங்கி 6ம் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வெளிப்பிரகாரத்தில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலர்கள் நாகசாமி, வக்கீல் சம்பந்தம், துணைத் தலைவர் சாமிநாதன், இணைச் செயலர் சக்தி நடராஜன் குழுவினர் செய்து வருகின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டம் முழுவதும் கிடப்பில் போடப்பட்ட சி.எப்.எல். பல்பு திட்டம்






               மின் சிக்கனத்தை கடைபிடிக்க தமிழகத்தில் துவங்கப்பட்ட, மானிய விலையில், சி.எப்.எல்., பல்பு வழங்கும் திட்டம், கடந்த ஆறு மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

             நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. வெப்பத்தை குறைக்க பல நாடுகள் மரங்களை வளர்க்கவும், மின் சாதனங்களால் ஏற்படும் வெப்பத்தை குறைக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளன. மின்சாரத்தின் மூலம் எரியும் குண்டு பல்புகளால் வெப்பம் அதிகரிப்பதோடு, மின்சார தேவையும் கூடுதலாகிறது. மின் உற்பத்தி செய்வதற்காக நாம் பயன்படுத்தும் நிலக்கரியை எரிப்பதன் மூலம் உண்டாகும் வெப்பம் மற்றும் கரியமில வாயுவும் ஓசோன் படலத்தை ஓட்டை விழச் செய்கிறது என்பதால், குண்டு பல்புகளை அகற்றி விட்டால் மின் சிக்கனத்துடன், புவி வெப்பமடைவதையும் ஓரளவு குறைக்கலாம்.

                 இத்திட்டத்தை, மத்திய அரசு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்படுத்த முயற்சி மேற்கொண்டது. அதற்காக, முன் மாதிரியாக தமிழகத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம், கடலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீடுகளில் போடப்பட்டுள்ள குண்டு பல்புகளுக்கு பதிலாக, சி.எப்.எல்., பல்புகளை அரசு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த பல்புகளை மின்சார வாரியம் மானிய விலையில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்தது. இதற்காக, ஒவ்வொரு வீடுகளில் எத்தனை குண்டு பல்புகள் உள்ளன என்பது குறித்து மின்சார வரியம் சர்வே எடுத்து அரசுக்கு அனுப்பியது. அதன்படி, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், சிதம்பரம் நகராட்சியில், சி.எப்.எல்., பல்பு மானிய விலையில் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் செயல்படுத்த வேண்டிய இத்திட்டம் சிதம்பரம் நகராட்சியை தவிர வேறு எங்கும் வழங்கப்படவில்லை. ஆறு மாதம் முடிந்தும் இதுவரை இத்திட்டம் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Read more »

கடலூரில் கலங்கலான குடிநீர்

கடலூர் : 

             கடலூரில் வினியோகிக்கப்படும் குடிநீரை தினசரி பரிசோதிக்க நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். 

             கடலூரில் 23 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் சிறப்பு சாலை திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வேணுகோபாலபுரத்தில் நடந்த ஆய்வில் பாதாள சாக்கடைத் திட்ட ஆள் நுழைவு குழிகள் பல உடைந்தும், மண்கொட்டி மூடப்பட்டிருந்தது. அதனை சுத்தம் செய்யவும், ஆள் நுழைவு குழாய்களை சாலை மட்டத்திற்கு உயர்த்தவும் உத்தரவிட்டார். 

             பின்னர் அப்பகுதி மக்களிடம் பாதாள சாக்கடைத் திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க குழாய் புதைக்கப்பட்டுள்ளதா? இத்திட்டத்திற்கு பணம் செலுத்தி விட்டீர்களா? குடிநீர் இணைப்பு உள்ளதா? தண்ணீர் தினசரி வருகிறதா என விசாரணை செய்தார். அதற்கு அப்பகுதி மக்கள் தண்ணீர் கலங்கலாக இருப்பதால் குடிக்க பயன்படுத்த முடியவில்லை என்றனர். உடன் நகராட்சி அதிகாரிகள் திருவந்திபுரம் மலையிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுவதாகவும், இரும்பு தாது சற்று அதிகமாக உள்ளதால் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக கூறினர். உடன் நிர்வாக ஆணையர் தண்ணீரை தினசரி மாதிரி எடுத்து ஆய்வு செய்யவும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Read more »

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் உளவியல் துறை கருத்தரங்கம்

கடலூர் : 

           கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் உளவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. "தேசிய அளவில் மனித உரிமை நிகழ்வுகளும், சவால்களும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ரட்சகர் துவக்கி வைத்தார். 

            சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் சுதாகர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி பேராசிரியர் குமாரசாமி சிறப்புரையாற்றினார். கடலூர் பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர் சேதுராமன் முதல் அமர்விற்கும், திருவண்ணாமலை அரசு கல்லூரி பேராசிரியர் தனிஸ்தாஸ் இரண்டாம் அமர்விற்கும் தலைமை வகித்தனர். நிறைவு விழாவிற்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியர் திருமுருகன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் பரிசு வழங்கிப் பேசினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சின்னப்பன், அந்தோணிராஜ், ஜெயராஜ், ரூபி வயலட்ராணி, திட்ட அலுவலர் ஆரோக்கியமேரி செய்திருந்தனர்.

Read more »

Cuddalore polling booths monitoring to go hi-tech


PREPARATORY: Collector P. Seetharaman addressing the consultative meeting of Principals and faculty members of educational institutions on poll preparedness in Cuddalore on Wednesday.



CUDDALORE: 

            For the first time, the monitoring mechanism in the Assembly elections in Cuddalore district will go hi-tech, as the entire voting proceedings in the sensitive and hypersensitive polling stations will be monitored online.

           This will be done through web-camera-fitted laptops that will act as a “third eye,” according to P.Seetharaman, District Collector. In this endeavour, the expertise of Annamalai University, leading engineering colleges and government arts colleges would be utilised. The Collector told TheHindu that it was also proposed to deploy engineering students and arts college students with B.C.A and B.Sc (Computer Science) qualifications to operate the laptops with the concurrence of the Election Commission.

              After addressing a consultative meeting of the faculty, heads of departments and Principals on the poll preparedness here on Wednesday, the Collector said that the web cameras would be placed at a commanding position inside the polling stations, without affecting the secrecy of polling, to keep a tab on the activities of the voters, officials and the booth agents of political parties on the laptop screen. Moreover, the entire proceedings would be recorded in compact discs for future verification and reference. The laptops would also enable real-time transmission of the happenings in the polling stations through the Internet to the offices of the Chief Electoral Officer in Chennai and the Election Commission in New Delhi.

          Such a measure would help the polling officials swing into action wherever warranted. About 400-450 laptops in the possession of the Education Department would be put to use for the purpose. The Collector said that in the previous elections only limited footage was taken through videography at the polling stations but the laptop would provide a blow-by-blow account of the day-long polling process.

            It was termed as a “third-eye” because the security personnel and the videography would act as the other two monitoring mechanisms. It was hoped that such an arrangement would prevent malpractices, besides enabling the officials to track the wrong-doers and ensure free and fair elections.

Read more »

NLC miners win trophie

CUDDALORE:

           In the inter-unit sports and games conducted under the aegis of the Neyveli Lignite Corporation Sports Control Board the Mine-II team has bagged the overall championship trophy and the Mine-I team the runner-up cup.

         Both the teams were felicitated by NLC Chairman-cum-Managing Director A.R.Ansari at the valedictory function held at the Bharathi Stadium on the NLC campus at Neyveli on Tuesday. A statement from the NLC stated that in the event, spread over three months from November 2010 to January 2011 about 600 employees, both men and women, participated and exhibited their skills in athletics, basketball, chess, cricket, volleyball and so on.

           Speaking on the occasion Mr Ansari observed that since sports would contribute to physical and mental fitness more number of employees should participate in such events. He gave away a cash prize of Rs 5,000 to Jestes Anto who exhibited his football juggling skills and prizes to the winners. The yoga demonstration staged by the school students drew applause from the audience. NLC Directors R.Kandasamy (Planning and Projects), K.Sekar (Finance), S.K.Acharya (Personnel), C.Senthamil Selvan, Chief General Manager (Township administration), and R.K.Narayana, Chief Manager, NLC Sports Control Board participated.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior