உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 03, 2010

முதல்வர் கருணாநிதியின் 87-வது பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து


 
                     முதல்வர் கருணாநிதியின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 
கே.வீ. தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்:  
 
                    மக்கள் நலப் பணிகளை உயிரெனக் கருதி, தொண்டாற்றி, பெருவாழ்வு வாழ்ந்து புகழ் சேர்த்துள்ளவர் முதல்வர் கருணாநிதி. அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, தமிழகத்துக்காகப் பணியாற்றிட இந்நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாழ்த்துகிறேன். 
 
பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநிலத் தலைவர்:  
 
                   முதல்வர் கருணாநிதி மேலும் பல ஆண்டுகள் வாழவும், பல சாதனைகள் படைக்கவும், தமிழகம் செழிக்கவும் அன்னை சக்தி அருள் புரிய வேண்டும். அவரது பிறந்த நாளில் தமிழனின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையிலும், தாய்மார்கள் மகிழும் வகையிலும் பூரண மதுவிலக்கு கொண்டு வந்து, ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும்.  
 
கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்: 
 
              ராஜதந்திரத்தில் கருணாநிதியை மிஞ்சுபவர் எவருமில்லை. அவரது வாழ்வின் நீட்டம், தமிழ் இனத்தின் வளர்ச்சிப் பாதையின் ஓட்டம். எனவே, முதல்வர் கருணாநிதி தந்தை பெரியாரின் வயதையும் கடந்து பல்லாண்டு வாழ வேண்டும். 
 
எஸ். ஜெகத்ரட்சகன், மத்திய இணையமைச்சர்: 
 
                      அரசியல் போர்க்களத்தில் அதிசயமானவர் முதல்வர் கருணாநிதி. அவர், எவரையும் அசைக்கும் எழுத்ததிகாரம், எவரையும் மயக்கும் சொல்லதிகாரம் படைத்தவர். தமிழர் வாழ்வுக்குச் செம்மொழி தந்த சிலப்பதிகாரம் அவர். இந்த சிறப்புகள் இமயம் வரை எட்டட்டும்.

Read more »

செம்மொழி மாநாடு: இணைய மாநாடு:இலவச அனுமதி


கோவை:
 
             கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் இணைய மாநாட்டில் அனிமேஷன் துறை சார்பாக 10 அரங்குகள், தமிழ் விக்கிபீடியா தகவல் களஞ்சியம் தொடர்பாக 5 அரங்குகள் என மொத்தம் 123 அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 
 
                   இந்தப் பணிகளை ஜூன் 15-ம் தேதியில் இருந்து 18-ம் தேதிக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளன. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் ஜூன் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.இணையதளத்தில் தமிழ் மொழி பயன்பாடு உள்ளிட்டவை குறித்து பல்வேறு தலைப்புகளில் உள்நாட்டு-வெளிநாட்டைச் சேர்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் என பலர் ஆய்வுக் கட்டுரைகளை அளிக்கின்றனர்.  மாநாட்டின் முக்கிய நிகழ்வாக தமிழ் கணினி கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் 123 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து அரங்குகளும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டு வருகிறது. இண்டர்நெட் வசதியுடன் சுமார் 200 முதல் 300 கணினிகள் வைக்கப்படுகின்றன.தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் இணையதளத்தின் மூலம் மக்களைச் சென்றடைவது தொடர்பான விவரங்கள் செயல்விளக்கமாக, கணினியில் திரையிட்டு காண்பிக்கப்படும்.
 
                       கணினி கண்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணிகளை ஜூன் 15-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் இணைய மாநாட்டுக் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். தமிழ் விக்கிபீடியா சார்பில் 5 அரங்குகளும், அனிமேஷன் துறையில் 10 அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தமிழ் கணினி கண்காட்சியைப் பார்த்து ரசிக்கலாம். அனைவரும் இலவசமாக அனுமதிக்கப்படுவர் என இணைய மாநாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரான பி.டபிள்யூ.சி.டேவிதார் தெரிவித்தார்.

Read more »

அரசு மருத்துவர்கள் 436 பேர் விரைவில் நியமனம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

           
                         தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் விரைவில் 436 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

       திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகாவிலுள்ள முத்தூர், மூலனூர், நத்தக்காடையூர் ஆகிய இடங்களில் தலா ரூ.62 லட்சம் மதிப்பில் 30 படுக்கைகள் பிரிவு, அறுவை அரங்கம், நுண்கதிர் பிரிவுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மருத்துவமனை கட்டடங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
பின்னர் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:
                  தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 436 மருத்துவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அப்போது காங்கயம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களும் நிரப்பப்படும். மேலும், கிராமப்புற மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும்.தற்போது, திமுக அரசின் 108 ஆம்புலன்ஸ் திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம் காரணமாக ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். 
                        மேலும், தமிழக மக்களுக்கு சுகாதார மருத்துவ வசதிகள் கிடைத்திட தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளும் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது என்றார்.தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்குத் தடை இல்லை: 
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுவரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டடப் பணிகளைப் பார்வையிட்ட பிறகு அமைச்சர் கூறியதாவது:
                      சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறக்கப்படும். தமிழக மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் உள்ளனர். புதிதாக டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த எந்தத் தடையும் இல்லை. மாணவர் சேர்க்கை நிச்சயம் நடைபெறும் என்றார்.

Read more »

பி.இ. தகுதி மதிப்பெண் குறைப்புக்கு அரசாணை எப்போது?

                  பி.இ. தகுதி மதிப்பெண் சதவீதத்தைக் குறைத்தது தொடர்பாக இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை.
 
                தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புகளில் 2010-11-ம் ஆண்டு முதல் சேருவதற்கான தகுதி மதிப்பெண் சதவீதத்தைக் குறைத்து அரசு கடந்த மாதம் அறிவிப்புச் செய்தது. அரசாணை வெளியிடப்பட்டால்தான் தகுதி மதிப்பெண் சதவீதத்தை 2010-11-ம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த முடியும் . பி.இ. மாணவர் சேர்க்கை தொடர்பாக சமவாய்ப்பு எண் வெளியிடுதல், தரவரிசைப் பட்டியல் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ள வேளையில், அரசாணை வெளியிடப்படாததால் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பொறுப்பான அண்ணா பல்கலைக்கழகம் தயக்கத்தில் உள்ளது.தகுதி மதிப்பெண் சதவீதம் குறைப்பு, முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து ஆகிய காரணங்களால் பி.இ. படிப்புக்கான விண்ணப்ப விற்பனை இந்த ஆண்டு 2 லட்சத்தை தாண்டியது. இவ்வளவு எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் விற்றுள்ளது, தமிழகத்தில் இதுவே முதல் முறை.
 
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியது:
 
                     பி.இ. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பல்வேறு பகுதிகளில் இருந்து தபால் மூலம்  மே 31-ம் தேதி அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. புதன்கிழமை வரை 1.71 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மீதியுள்ள விண்ணப்பங்கள் வியாழக்கிழமை பெறப்படவுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு பி.இ. படிப்புக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ள 1.08 லட்சம் அரசு ஒதுக்கீட்டு  இடங்களுக்கு சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் போட்டியிடும் நிலை உள்ளது என்றார்.

Read more »

6000 ஒப்பந்த பணியாளர்கள் மின்வாரியத்தில் நிரந்தரம்


 
                 மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களில் 6,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி மின்வாரிய அலுவலகத்தில் புதன்கிழமை வழங்கினார். 
 
பணியாளர்களுக்கு ஆணைகளை வழங்கி அமைச்சர் பேசியது: 
 
                  மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள் படிப்படியாக ஆண்டுதோறும் பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 2007-ம் ஆண்டில் 6,000 ஒப்பந்தப் பணியாளர்களும், 2009-ல் 6,000 பேரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இந்த ஆண்டு 6,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மின் வாரியத்துக்கு ரூ.65 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மீதியுள்ள 3,600 ஒப்பந்தப் பணியாளர்கள் அடுத்த ஆண்டில் பணி நிரந்தரம் செய்யப்படுவர். 
 
ஐ.டி.ஐ. தகுதி பரிசீலிக்கப்படும்: 
 
                    மின் வாரியப் பணி நியமனங்களில் ஒப்பந்தப் பணியாளர்களையும், ஐ.டி.ஐ. கல்வித் தகுதி உள்ளவர்களையும் 1:1 என்ற விகிதத்தில் நியமிக்க வேண்டும் என்ற நீதிபதி மாலித் குழுவின் பரிந்துரை மின்வாரியத்தில் பின்பற்றப்படுகிறது.ஐ.டி.ஐ. தகுதி பெற்ற 4,000 பேர் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தற்போது மாதம் ரூ. 2,500 சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு காலமுறை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார்.

Read more »

என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பின் காலவரையற்ற ஸ்டிரைக் தொடங்கியது

நெய்வேலி:

               புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை இரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. 

                 என்எல்சி தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஊதியமாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியும் என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் ஜூன் 2 முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி வேலைநிறுத்த அறிவிப்புக் கூட்டம் நெய்வேலி மெயின்பஜாரில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எச்எம்எஸ் சங்கத் தலைவர் சுகுமார், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத் தலைவர் உதயக்குமார், சிஐடியு தலைவர் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு வேலைநிறுத்த அறிவிப்பின் நோக்கம் குறித்து விளக்கினர். பின்னர் சிஐடியு சங்கச் செயலர் வேல்முருகன் வேலைநிறுத்தம் குறித்து அறிவித்தார்.இந்தப் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்ட்ட  தொழிற்சங்கங்களான தொமுச மற்றும் பாமக தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. மாறாக வேலைநிறுத்த அறிவிப்புக் கடிதத்தை மட்டும் நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.

Read more »

எள் சேமிப்பு தேவையில்லை: வேளாண்மை துணை இயக்குநர் வேண்டுகோள்


விருத்தாசலம்: 
 
                விவசாயிகள் தங்களிடம் உள்ள எள்ளை உடனடியாக விற்பனை செய்யுமாறு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
எள் விற்பனை குறித்து கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் தனவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  
 
                  விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதியில் தற்போது இறவை எள் சந்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் வரத்து ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இருக்கும். தற்போது சந்தைக்கு வரும் எள்ளின் தரம் மானாவாரி எள்ளைவிட நன்றாக இருக்கும்.மொத்த வரத்தில் 75 சதவீதம் சிவப்பு எள்ளாகும். மீதியுள்ள வெள்ளை எள், ஏற்றுமதி மற்றும் அடுமனை தயாரிப்பு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் ஆலையாளர்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரை கர்நாடக மாநிலத்தில் இருந்தும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆந்திரம், ஒரிசா மாநிலங்களில் இருந்தும் கொள்முதல் செய்கின்றனர்.மற்ற மாநில எள்ளைக் காட்டிலும் தமிழ்நாட்டு எள் தரம் நன்றாக இருப்பதால், மற்ற மாநிலத்திலிருந்து வாங்கப்படும் எள்ளோடு கலந்து எண்ணெய் எடுக்கின்றனர். 
 
புதுமை திட்டம்:
 
                எள் பயிரிடும் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தேசிய வேளாண்மைப் புதுமைத் திட்டத்தின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் சிவகிரி சந்தையில் 15 வருட சந்தைத் தகவல்களை ஆராய்ந்தது. நல்லெண்ணெய்க்கான சீரான தேவை, மற்ற மாநிலங்களில் உள்ள எள் பயிர்களின் நிலைமை, அவற்றின் மூலம் பெறப்படும் தொடர் வரத்து மற்றும் ஆராய்ச்சி முடிவுகளின்படி வரும் மாதங்களில் சிவப்பு எள்ளின் விலை தமிழ்நாட்டில் கிலோ ரூ.41 முதல் ரூ.43 வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விலை ஏற வாய்ப்புள்ளது. இருப்பினும் எள் சேமிப்பு முறையாக செய்யவிட்டால் எள்ளின் தரம் குறைந்து விடும்.எனவே விவசாயிகள் தங்களிடம் உள்ள எள்ளை மேற்கூறிய விலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் எந்தப் பிடித்தமும் இல்லாமல் விற்று பயனடையுமாறு கடலூர் வேளாண்மை துணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more »

நல்ல வருமானம் தரும் கிளேடிஓலஸ் மலர் சாகுபடி


கிளேடிஓலஸ் வண்ண மலர்கள்
சிதம்பரம்: 
 
             பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் வண்ண மலர்களே கிளேடிஓலஸ். வடமாநிலங்களில் பயிர் செய்யப்படும் இம் மலரை, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை தமிழகத்தில் அறிமுகம் செய்து சாகுபடியில் வெற்றி கண்டுள்ளது. நல்ல வருமானம் தரக்கூடிய இம் மலர் சாகுபடியை தமிழக விவசாயிகள் சிறப்பாக செய்யலாம். 
 
சாகுபடி குறிப்புகள்:  
 
               இம் மலர் கரணைகள் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயம் மற்றும் பூண்டு குடும்பத்தைச் சேர்ந்தது கிளேடிஓலஸ். இம் மலர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நல்ல வடிகால் வசதி கொண்ட நிலத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்கும் களிமண் நிலங்களில் இம்மலர் நன்றாக வளராது. மழை மற்றும் பனிக் காலங்களில் 15 முதல் 20 செல்சியஸ் வரை வெப்பம் கொண்ட பகுதிகளில் இளம்பருவத்தில் நன்றாக வளரும் தன்மை கொண்டது.பின்னர் வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகமானாலும் மலர் செடியின் வளர்ச்சி பாதிக்கப்படாது. இம்மலர் சாகுபடி செய்ய தேர்வு செய்யப்படும் நிலத்தில் கார அமிலத்தன்மை 6 முதல் 7 வரை இருத்தல் வேண்டும். இவ்வாறு தேர்வு செய்தபின் வெப்பப் பகுதிகளில் நன்றாக வளரும் தன்மை கொண்ட கிளேடிஓலஸ் மலர் வகைகளான அமெரிக்கன் பியூட்டி, சம்மர் சன்ஷைன், கேண்டிமென் உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் தங்கள் தோட்டங்கள் மற்றும் நிலங்களில் நடவு செய்யலாம்.கிளேடிஓலஸ் கரணைகளை வரிசையாக 10 செ.மீ. இடைவெளியில் நட வேண்டும். பின்னர் 2 அல்லது 3 வாரங்களுக்கு பூவாளிகளை கொண்டு தொடர்ச்சியாக நீர் பாய்ச்ச வேண்டும்.விதைத்து 2, 3 வாரங்களில் மெதுவாக கிளேடிஓலஸ் மலர் செடி முளைக்கத் தொடங்கும். இத்தகைய காலகட்டத்தில் விவசாயிகள் கண்டிப்பாக நீர்பாசனத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். 2 முதல் 4 இலைகள் விடும் தருணத்தில் 12 முதல் 17 நாள்கள் வரை தொடர்ந்து நீர்பாய்ச்ச வேண்டும். பின்னர் களைகளை கட்டுப்படுத்த களையெடுக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வது அவசியம்.இவ்வாறு சாகுபடி பணிகளை மேற்கொண்ட 45-60 நாள்களில் கிளேடிஓலஸ் பூங்கொத்துக்கள் பூக்கத் தொடங்கும். இத்தகைய தருணத்தில் விவசாயிகள் கிளேடிஓலஸ் அறுவடை காலத்தை அடைந்து விட்டதை தெரிந்து கொண்டு அறுவடை செய்து விற்பனை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.கிளேடிஓலஸ் பூக்களை அறுவடை செய்தபின் கரணைகளை மீண்டும் தோண்டி எடுத்து 2 சதவீதம் பெவிஸ்டின் பூஞ்சானக் கொல்லி மருந்தில் நனைத்து பதப்படுத்த வேண்டும்
 
.மருத்துவ குணங்கள்: 
 
             கிளேடிஓலஸ் கரணைகளை நன்றாக பொடி செய்து உணவுடன் கலந்து உண்டால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும். இச்செடியை கசக்கி சூடுபடுத்தி தலையில் தேய்த்தால் தலைவலி போகும். இப் பழக்கம் வடமாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் கிளேடிஓலஸ் மலர் கரணைகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் ஜம்மு மற்றும் வடமாநிலங்களில் உண்டு. 
 
கிளேடிஓலஸ் ஆண்டு அறிவிப்பு:
 
               2010-11-ம் ஆண்டை கிளேடிஓலஸ் மலர் ஆண்டாக இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் இந்த மலரை சாகுபடி செய்து விவசாயிகள் தமிழகத்தில் மலர்புரட்சியை ஏற்படுத்தலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறியுள்ளார்.

Read more »

பண்ருட்டியில் பெண்கள் பள்ளி அமைக்க ரூ.1 லட்சம் நிதி

பண்ருட்டி:

                    பண்ருட்டியில் பெண்கள்  மேல்நிலைப் பள்ளி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 

                  இக் கூட்டத்தில், எஸ்.வி. ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.வைரக்கண்ணு, கடலூர் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் டி.சண்முகம், நகரத் தலைவர் கே.கோதண்டபாணி ஆகியோர் அடங்கிய குழுவினர் அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1 லட்சத்தை புதன்கிழமை செலுத்த உள்ளதாக கூறினர். தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர் தஷ்ணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.  கடலூர் மாவட்ட தொழில் வர்த்தக சங்க பொதுச் செயலர் வி.வீரப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சக்திவேல், தமிழாசிரியர்கள் ஏழுமலை, டி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். எக்ஸ்னோரா பசுபதி நன்றி கூறினார்.

Read more »

கிராமங்களில் அதிர்ச்சிதரும் மின்வெட்டு

 

கடலூர்:

                 கிராமப்புறங்களில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

                   தமிழகத்தில் அதிகப்படியான கோடை வெயிலின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கும் நகரம் கடலூர். காலை 7 மணி முதலே வெயில் தகிக்கத் தொடங்கி விடுகிறது. இரவு நேரங்களில்கூட வெப்பம் தணிவதில்லை. காலை 5 மணி முதல் 7 மணி வரை லேசாக வீசும் குளிர்ந்த காற்றுகூட கடந்த 20 நாள்களாக இல்லை. பகலிலும் இரவிலும் காற்றோட்டமே இல்லாமல் உயர்ந்துவரும் வெப்ப நிலை, மக்களை பெரிதும் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. இத்தகைய தட்பவெப்ப நிலையில் ஈஸ்னோஃபீலியா, நுரையீரலைப் பாதிக்கும் நோய்கள், தோல்நோய் போன்றவை எளிதில் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

                  இத்தகைய சூழ்நிலையில் மின்வெட்டு, மக்களுக்கும் விவசாயத்துக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.கடலூர் மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கரில் கரும்புப் பயிர், 2 முதல் 5 மாதப் பயிராக உள்ளது. சொர்ணவாரி பட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் நடுவதற்குத் தேவையான நெல் நாற்று தயாராகிக் கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஆழ்குழாய்க் கிணறுகளையும் மின்சாரத்தையுமே நம்பி இருக்கின்றன.  இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கிராமப் புறங்களிலும் நகரங்களிலும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் 3 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்தது. விவசாயத்துக்கு பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இது மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு. எனினும், பலமுறை அறிவிக்கப்படாமல் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

                காற்றாலைகளில் இருந்து மின்சாரம் கிடைக்கத் தொடங்கியதால், மின்வெட்டு 3-ல் இருந்து 2 மணி நேரமாகக் குறைக்கப்படுதாக முதல்வர் அறிவித்தது மகிழ்ச்சி அளித்தது. மே 29 முதல் புதிய மின்வெட்டு அட்டவணையை மின்வாரியம் அறிவித்தது. இதனால் கடலூர் மாவட்ட நகர்ப் புறங்களில் மின்வெட்டு, 2 மணி நேரமாக குறைக்கப்பட்டது. எனினும் அறிவிக்கப்படாமல் துண்டிக்கப்படும் மின்வெட்டு தொடர்ந்து நீடித்து வருகிறது.துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி என்ற பெயரில், மாதம் இருமுறை 9 மணி நேரத்துக்கும் மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களில் மின்வெட்டு படுமோசமாக உள்ளது. வீடுகளுக்கும் விவசாயத்துக்கும் மின்விநியோகம் பலமணி நேரம், எவ்வித அறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படுகிறது. 

            கடந்த 3 நாள்களாக கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி இருண்டு கிடப்பதாகவும், மின்வெட்டு மோசம் அடைந்து இருப்பதாகவும், கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.  விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் 9 மணி நேரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தும் 7 மணி நேரம் கூட வழங்கப்படுவதில்லை என்று விவசாயிகள் அங்கலாய்க்கிறார்கள்

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் வெங்கடபதி கூறுகையில், 

              சித்தரசூர் துணைமின் நிலையத்தில் இருந்து கடந்த 3 நாள்களாக மின்விநியோகம் இல்லை. ஏன் இந்த திடீர் மின்வெட்டு என்று கேட்டால், பதில் அளிக்க அதிகாரிகள் தயாராக இல்லை. மின்வாரியத் தலைவரைக் கேளுங்கள் என்று முகத்தில் அடிப்பதைபோல் பதில் அளிக்கிறார்கள். கரும்புப் பயிரும், நெல் நாற்றுகளும் கருகிக் கொண்டு இருக்கிறன என்றார்.

பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், 

                 நகர்ப் புறங்களுக்கு மின்வெட்டைக் குறைக்கிறோம் என்ற பெயரில், சுமையை கிராம மக்களின் தலையில் கூடுதலாக ஏற்றி விட்டனர். முட்லூர் துணை மின் நிலையத்தில் இருந்து காலை 7 முதல் 12 மணிவரை மின்விநியோகம் இல்லை. காய்கறிச் செடிகளும் மலர்ச் செடிகளும் கருகுகின்றன என்றார். 

வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம் கூறுகையில், 

                 மின்வெட்டு குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது முதல், கிராமங்களில் மின்வெட்டு அறிவிப்பின்றி அதிகரித்து விட்டது. காலை 10 முதல் 12 மணி வரை, பகல் 2 முதல் 4 மணி வரை தினமும் மின்சாரம் இல்லை. மும்முனை மின்சாரம் 7 மணி நேரம் கூட இல்லை. இதனால் 10 ஆயிரம் ஏக்கரில் கரும்புப் பயிர் கருகுகிறது என்றார்.

Read more »

விருத்தாசலத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி தமிழ்ப் பேராசிரியருக்கு பாராட்டு விழா

விருத்தாசலம்:

                  விருத்தாசலத்தில் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியருக்கு அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது. 

                         விருத்தாசலத்தில், திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் தங்கத்துரைக்கு குமாரதேவர் திருமடம் மற்றும் பன்னிருதிருமுறை வழிபாட்டு மன்றம் சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கவிஞர் சு.பட்டி செங்குட்டுவன் வரவேற்றார். திருவண்ணாமலை, துறையூர், திருமுதுகுன்றம் வீரசைவ ஆதின 23-வது குருமகா சந்நிதான சீர்வளர்சீர் கல்யாண சுந்தர சிவப்பிரகாச பரமாச்சரிய சுவாமிகள் தலைமை ஏற்றார். அகர்சந்த் சோர்டியா, ஜெயராமன், வழக்கறிஞர் மெய்கண்டநாதன், ரத்தின.சபாநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பன்னிருதிருமுறை வழிபாட்டு மன்ற அங்கத்தினர்கள் மற்றும் சைவ சித்தாந்த பயிற்சி மைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Read more »

நகை மற்றும் வட்டிக்கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை

நெய்வேலி:

                நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடியில் உள்ள நகைக்கடை, கூட்டுறவு வங்கி மற்றும் நகைக்கடை உரிமையாளர்களுக்கு நெய்வேலி போலீசார் பாதுகாப்புக் குறித்த ஆலோசனைகளை செவ்வாக்கிழமை வழங்கினர்.

               அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் நகைக்கடை மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை முன்னெச்சரிக்கையாக எவ்வாறு தடுப்பது, அதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், அதை எவ்வாறு தொடர்வது என்பது குறித்து நெய்வேலி டி.எஸ்.பி. மணி தலைமையில் நகைக்கடை, வட்டிக்கடை மற்றும் கூட்டுறவு வங்கி மேலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. 

                அப்போது அனைத்து கடைக்காரர்களும் இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும். அபாய ஒலி எழுப்பும் சைரன் பொறுத்த வேண்டும். இரவு நேர ரோந்துப்பணிக்கு வரும் போலீசாரிடம் தங்கள் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர் இருந்தால் அவர் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நெய்வேலி டவுன் இன்ஸ்பெக்டர் சேகர், மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் குமார், வடலூர் எஸ்.ஐ. இளங்கோ உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Read more »

கண் மற்றும் உடல் தானம்

சிதம்பரம்:

                   சிதம்பரம் தெற்குவாணியத் தெருவைச் சேர்ந்த ஆர்.ராமமூர்த்தி மனைவி ஆர்.விசாலாட்சி (45) செவ்வாய்க்கிழமை இறந்தார். காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத்தினர் அவரது கண்களை தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும், உடலை தானமாகப் பெற்று மாணவர்கள் ஆராய்ச்சிக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும்  ஒப்படைத்தனர்.

              இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர் ஜெயின், தன்னார்வ ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். அரிமா சங்கம் சிதம்பரத்தை அடுத்த சென்னிநதத்தைச் சேர்ந்த வி.சின்னப்பிள்ளை (58) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Read more »

Back to school with heavy hearts


Children come out of a school in Cuddalore on Wednesday.

CUDDALORE: 

            It was a reluctant bunch of students, particularly those belonging to kindergarten sections, that returned to schools that reopened on Wednesday after a prolonged summer vacation.

           A classroom full of UKG students in a private school in Cuddalore revealed the various facets of the students and parents. The parents tried their best to coax their wards to get into the classrooms. Though the students were enthusiastic about new uniforms, shoes and ties, they were reluctant to carry the school bags, lunch boxes and water bottles. After a great deal of persuasion, some stepped into the classrooms with reassurance from the teachers that they would take proper care of the children.

           While some students started making friends, others kept a morose face thinking of getting back home sooner rather than later. Some of them kept a brave face, keeping the tears under control. Soon after the bell rang after the first session, it was a happy reunion for the students and parents.

Read more »

Fake government seals, rubber stamps seized

CUDDALORE: 

            A racket in fake government seals and rubber stamps has come to light with the arrest of two persons. The two, based in Vriddhachalam have reportedly been operating the racket for some time now and its ramifications are yet to be fully ascertained.

          The fraudsters have been producing false government seals and rubber stamps identical to the ones being used by the Village Administrative Officers, Deputy Registrar's office, Tahsildars and so on. A total of 37 such forged seals have been recovered from them and it is learnt that they have helped many farmers to get loans from nationalised banks and cooperative banks. Even the duplicate stamps and seals of VAOs in Ariyalur district too have formed part of the recovery.

                 After the seizure of the seals, District Collector P.Seetharaman told The Hindu that during the bankers' meet held in November 2009, State Bank of India had brought to his notice that certain duplicate documents were being attached to the farm loan applications and therefore these could not be considered. However, the bank was hesitant to file a police complaint. Hence, the Collector alerted the Superintendent of Police Ashwin Kotnis, who formed a team to investigate. The team swooped on S.Ranganathan (42) of Dharmanallur in Khammapuram block in Cuddalore and D.Senthil (40) of Nagapandal in Perambalur district. Inspector Rathinavel said that the culprits used to forge the documents as required by the beneficiaries, — in the case of big landlords owning 50 acres of land they would prepare documents for five acres to enable them to obtain bank loans and vice-versa. For the services rendered they used to charge a commission ranging from Rs 2,000 to Rs 10,000, depending upon the size of the loan. Mr. Rathinavel said that Section 420 (cheating) of Indian Penal Code had been slapped on them. The Collector said that he had written to the Registrar's office to keep a tab on all the documents. He had also directed the officials to bring seals and stamps for verification. Meanwhile, Mr Seetharaman suggested replacement of rubber seals with the ones made of brass. He said that there was no need to panic because the false seals were not deeply engraved and from the very look its duplicity could be made out.

Read more »

Section of NLC employees strike work

 CUDDALORE: 

            A section of the employees of the Neyveli Lignite Corporation owing allegiance to the Joint Action Council, comprising 13 trade unions, went on a day's token strike from 

             Wednesday night in support of their demand for speedier and proper wage revision. President of the Hind Mazdoor Sabha G. Sukumar said that the employees would abstain from work from 10 p.m. on Wednesday to 10 p.m. on Thursday. He said that it was the hope of the JAC that the NLC management and the trade unions involved in the wage talks (both the Labour Progressive Front (LPF) and the Pattali Thozhir Sangam-PTS) would amicably resolve the issue soon. However, Mr. Sukumar said that if the stalemate on payment of arrears from January 1, 2007 continues, the JAC would launch an indefinite strike originally planned. Meanwhile, the LPF and the PTS too had served a strike notice on the management. NLC sources said that the token strike would not have any impact either on electricity generation or lignite mining.

Read more »

தங்கை முறை பெண்ணை கடத்தியவர் கொலை: சரணடைந்த மூவரிடம் போலீசார் விசாரணை

கடலூர்: 

                   தங்கை முறை பெண்ணை கடத்திய வழக்கில் பிடிபட்டு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து விடுவிக்கப்பட்ட ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரின் மகன், திருச்சி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவ்வழக்கில் சரணடைந்த மூவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

                கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமன், ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் சுகுமாறன் என்ற கோடீஸ்வரபாபு(26). இவர், கடலூரில் தனியார் கல்லூரியில் படிக்கும் தன் தங்கை முறையான அறிவுக்கரசியை (21) காதலித்து வந்தார். கடந்த 28ம் தேதி அறிவுக்கரசியை கடத்திச் சென்றார். கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து கேரளாவிற்கு சென்று கடந்த 30ம் தேதி இருவரையும் அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின் சுகுமாறனை, அவரது சகோதரர் சுரேஷ்குமாருடனும், அறிவுக்கரசியை அவரது பெற்றோருடனும் அனுப்பி வைத்தனர்.

                   இந்நிலையில், சுகுமாறனை காணவில்லை என, அவரது தந்தை ராமன், புதுச்சத்திரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் விசாரித்த நிலையில், பச்சையாங்குப்பம் பிரகாஷ், பிரசன்னபாபு, வில்லியநல்லூர் ரவி ஆகியோர் சரணடைந்தனர். சுகுமாறனை கடத்திச் சென்று கொலை செய்து, திருச்சி அருகே காவிரி ஆற்றங்கரையில் வீசியதாக கூறினர். புதுச்சத்திரம் போலீசார் வழக்கை, கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்தனர். கடலூர் புதுநகர் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து, சரணடைந்த மூவரையும் விசாரித்தனர். அதில் சுகுமாறனின் தந்தை ராமன், சகோதரர் சுரேஷ்குமாருக்கும் தெரிந்துதான் சுகுமாறனை கொலை செய்ததாக கூறியதன் பேரில், இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

                  சரணடைந்த மூவரையும் போலீசார்  அழைத்துச்சென்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த பனையக்குறிச்சி சர்க்கார்பாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த சுகுமாறனின் உடலை மீட்டு நேற்று காலை 11 மணிக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு  கொண்டு வந்தனர். உடலை டாக்டர் கேசவன் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தி மாலை 3 மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். உடலை பெற்றுச் சென்ற உறவினர்கள், புகார் செய்த ராமன் மற்றும் அவரது இளைய மகன் சுரேஷ்குமாரையும் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க முயல்வதைக் கண்டித்தும், அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மாலை 5 மணிக்கு சிலம்பிமங்கலத்தில் சுகுமாறன் உடலை ரோட்டில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால்  சிதம்பரம் - கடலூர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், போலீஸ் காவலில் வைத்துள்ள ராமன் மற்றும் சுரேஷ்குமாரை விடுவித்தால் தான், சுகுமாறன் உடலை அடக்கம் செய்வோம் எனக்கூறினர்.

                      இதைத் தொடர்ந்து போலீஸ் விசாரணையில் இருந்த ராமன் மற்றும் சுரேஷ்குமாரை அதிரடிப்படை போலீசார் அழைத்துச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஒப்படைத்தனர். அதன் பிறகே மாலை 6 மணிக்கு சாலை மறியலை விலக்கிக் கொண்டு உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர். கொலை சம்பவம் தொடர்பாக சரணடைந்த மூவரிடமும், டி.எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு பிறகே வழக்கின் உண்மை நிலை தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Read more »

சொர்ணவாரி பட்டத்திற்கு விதை நெல் தட்டுப்பாடு : அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் அவதி

கடலூர் : 

                   கடலூர் மாவட்டத்தில் விதை நெல் கிடைக் காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதனால் விவசாயிகள் மாற்றுப் பயிரை தேட வேண் டிய நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர்.

                  சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் காவிரி நீரைக் கொண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை உள்ள நவரை பட்டத்தில் நெல் விளைவிக்கப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் குறுவையும், பின்னர் ஒட்டு மொத்தமாக சம்பா பருவத்தில் பெருமளவு நெல்லும் பயிர் செய்யப்படுகின்றன. இதில் நவரை, குறுவை, சம்பா பருவம் முழுவதும் காவிரி, மற்றும் ஏரி பாசனத்தை நம்பியே விவசாயிகள் உள்ளனர். கோடை காலத்தில் ஏரி தண்ணீர் கிடைக்கவில்லையென்றாலும் நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் மின்சார மோட்டரை பயன்படுத்தி சொர்ணவாரி பட்டத்தில் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கு தமிழக அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இதன் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் சிறந்த விதை நேர்த்தி, மண்ணின் தன்மை பாதுகாத்தல், பூச்சியை கட்டுப் படுத்துதல், அதிக மகசூல், வயது குறைந்த பயிர்களை புகுத்துதல் போன்றவற்றில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது.

                   தற்போது கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் தாராளமாக கிடைத்து வருவதால் சொர்ணவாரி பட்டத்தில் அதிகளவு நெல் பயிர் செய்யப்படுகிறது. விவசாயிகள் அதிக மகசூல் பெற மூலகாரணமாக இருப்பது விதை தான். அதனால் அரசு வேளாண்துறை மூலம் விதை நேர்த்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. கடந்த 3 வாரமாக நெல் விதை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்பட்ட சொற்ப அளவு நெல் மூட்டைகள் வந்த உடனேயே விற்று தீர்ந்துவிட்டன. அதனால் தாமதமாக பயிர் செய்யும் விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்கவில்லை. வேளாண் விரிவாக்க மையங்களை அணுகினால் நெல் விதைகள் விற்று தீர்ந்துவிட்டன. தனியார் கடைகளை கைகாட்டி உத்தரவாதத்துடன் வாங்கிச் செல்லுங்கள் என கூறுகின்றனர். ஆனால் தனியார் கடைகளில் ஒரு கிலோ நெல் விதைக்கு 6 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் விளை நிலங்கள் மனைகளாக மாறி வருகின் றன. இருக்கின்ற விளை நிலத்திலும் பயிர் செய்ய 100 நாள் வேலை திட்டத்தினால் யாரும் வேலைக்கு வருவதில்லை.

                       இதனால் மனித உழைப்பு அதிகமாக தேவைப்படும் பயிர்களில் இருந்து மாற்றப்பட்டு கரும்பு, சவுக்கு, எண்ணைப்பனை போன்ற பல்லாண்டு பயிர்களை விவசாயிகள் நாடிச் செல்கின்றனர். எஞ்சியுள்ள இடத்தில் நிலத்தின் உரிமையாளர்களே செய்து வரும் விவசாய நிலங்கள் என பார்க்கப் போனால் மிகவும் குறைவு. அதுபோன்ற குறைவான இடத்தில் இருந்துதான் மக்களுக்கு தேவையான நெல் உற்பத்தியை பெருக்க வேண்டும். ஆனால் வேளாண் அதிகாரிகள் மெத்தனப்போக்கினால் விதை கிடைக்காத விவசாயிகள் மானாவாரி பயிருக்கு மாறுவதைத் தவிர வழியில்லை என் கின்றனர். இதனால் நெல் உற்பத்தி குறைய வாய்ப் புள்ளது. இனிமேலாவது அதிகாரிகள் காலத்தோடு விதை நெல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வங்கிகளில் விவசாய கடன் பெற போலி ஆவணம் தயாரிப்பு : தமிழர் விடுதலை படை ஆசாமி உட்பட இருவர் கைது


கடலூர் : 

                  வங்கிகளில் விவசாய கடன் பெற போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கானூர் கிராமத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் தமிழ்ச்செல்வன், சிலர் போலி ஆவணம் தயாரித்து விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்திருப்பதாக கடந்த நவ. 24ம் தேதி எஸ்.பி.,யிடம் புகார் செய்தார். மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி பாலமுருகன், பிச்சைமணி, தில்லைகோவிந்தன், காசிநாதன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் சம்மந் தப்பட்டவர்களுக்கு போலியாக பட்டா, சிட்டா, அடங்கல் தயாரித்து கொடுத்த முக்கிய குற்றவாளியான கம்மாபுரம் ரங்கநாதன் (49) சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.

                    இச்சம்பவம் குறித்து கலெக் டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினவேலு, சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தனிப்படை பிரிவு சப் இன்ஸ் பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் கொண்ட தனிக்குழு விசாரணை மேற்கொண்டனர். அதில், கடலூர் மாவட்டத் தில் கருவேப்பிலங்குறிச்சி, ஸ்ரீமுஷ்ணம், சோழதரம், காட்டுமன்னார்கோவில், அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், வரதராஜன்பேட்டை, அழகாபுரம் பகுதிகளில் உள்ள இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பலர் போலி ஆவணங்கள் கொடுத்து விவசாய கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. மேலும், சேத்தியாத்தோப்பு அடுத்த வாழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மகன் செந்தில் (34) என்பவர் தனது 6 ஏக்கர் முந்திரி தோப்பிற்கு 10 ஏக்கர் கரும்பு பயிரிட்டிருப்பதாக போலியாக ஆவணங்கள் தயாரித்து சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க் கரை ஆலையிலும், மற்றொரு போலி ஆவணம் மூலம் ஸ்டேட் பாங்கிலும் விவசாய கடன் வாங்கியிருந்தார்.

                                அதன்பேரில் தனிப்படை போலீசார், நேற்று காலை செந்திலை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தமிழர் விடுதலை படையில் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வந்ததும், அதன்பிறகு கம்மாபுரம் ரங்கநாதன் (ஏற்கனவே நடந்த போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றவர்) உதவியுடன் போலி ஆவணம் தயாரித்து வங்கியில் கடன் பெற்று வருவதும், அதேபோன்று வங்கி கடன் பெற முயற்சிப்பவர்களுக்கு சான்றுகள் பெற்றுத் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு அவராகவே சான்றுகள் தயாரித்து கொடுத்ததை ஒப்புக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கம்மாபுரம் ரங்கநாதனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவர் வீட்டிலும் சோதனையிட்டதில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், ஆண்டிமடம் தலைமையிட துணை தாசில்தார்கள், பல்வேறு வி.ஏ.ஓ.,க்கள், கரும்பு ஆய் வாளர், ஸ்ரீமுஷ்ணம் சார்பதிவாளர், ஸ்டேட் பாங்க், இந்தியன் பாங்க் மற்றும் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை சீல்கள், தாலுகா அலுவலகத்தில் பயன் படுத்தப்படும் கோபுர சீல் உள்ளிட்ட 39 போலி சீல்களையும், பல்வேறு அதிகாரிகளின் கையெழுத்தை போட்டு பழகி பார்த்த பேப்பர் களையும் பறிமுதல் செய்தனர். மேலும், அடுத்தவர் நிலத்தை வாங்கி ஸ்ரீமுஷ்ணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததாக தயாரிக்கப் பட்ட இரண்டு போலி ஆவணங்கள், வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிப் பதற்காக தயாரித்து வைத்திருந்த 90 போலி ஆவணங்களையும் கைப்பற்றினர்.

                 இதுபற்றி தகவலறிந்த கலெக்டர் சீத்தாராமன், நேற்று மதியம் மாவட்ட குற்றப் பிரிவிற்கு நேரில் சென்று அங்கு போலீசார் கைப்பற்றிய போலி ரப்பர் ஸ்டாம்புகளை பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். 

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது: 

                                கடலூர் மற்றும் அரியலூர் மாவட்ட வங்கிகளில் கடன் பெற போலி ஆவணங்கள் தயாரித்திருப்பது கண்டுபிடித்திருப்பதால், குறிப்பிட்ட வங்கிகளில் ஏற்கனவே கடன் கொடுத்த ஆவணங்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற முறைகேடுகளை தவிர்த்திட அரசு அலுவலர்கள் தங்களது ரப்பர் ஸ்டாம் புகளை தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டும். சான்றிதழ்களில் முத்திரையை தெளிவாக பதிக்க வேண்டும். கூடுமானவரை "மெட்டல் சீல்' பயன்படுத்த வேண்டும். முதல்கட்டமாக வருவாய்த் துறை அதிகாரிகள் தாங்கள் பயன்படுத்தும் ரப்பர் ஸ்டாம்புகளின் மாதிரியை எனது நேர் முக உதவியாளரிடம் (பொது) ஒப்படைக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பெறப்படும் சான்றுகளில் சந்தேகம் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட அலுவலரின் ரப்பர் ஸ்டாம்ப் மாதிரியுடன் ஒப்பிட்டு பார்க்க இந்த மாதிரி பயன்படுத்தப்படும். மாவட்டத்தில் ரப்பர் ஸ்டாம்ப் செய்வோர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அரசு அலுவலகங்களுக்கு ரப்பர் ஸ்டாம்ப் செய்ய ஆர்டர் வந்தால், சம்மந்தப் பட்ட அலுவலரிடம் கடிதம் பெற்ற பிறகே செய்து தர வேண்டும். அவ்வாறு இன்றி அரசு அலுவலக ரப்பர் ஸ்டாம்ப் செய்து கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Read more »

சிதம்பரத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சிதம்பரம் : 
                    
                   புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி சிதம்பரத்தில் பசுமை தாயகம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிதம்பரம் பஸ் நிலையம் அருகே துவங்கிய ஊர் வலத்தை பா.ம.க., மாநில துணைத்தலைவர் சந்திரபாண்டியன் துவக்கி வைத்தார். நகர தலைவர் அருள், பால்ஸ் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். பா.ம.க., மாவட்ட செயலாளர் சிட்டிபாபு, நகர செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பசுமை தாயக மாவட்ட அமைப்பாளர் அன்புச்செழியன் தலைமையில் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, லால்பேட்டை பகுதிகளில் பிரசாரம் மேற் கொள்ளப்பட்டது. பசுமை தாயக நகர அமைப்பாளர் கலியபெருமாள் நன்றி கூறினார்.

Read more »

மூனா ஆஸ்திரேலியன் பள்ளியில் கல்வியாளர்கள் பயிற்சி

பரங்கிப்பேட்டை : 

                     பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளி மாணவர்களுக்கு ஆஸ்திரேலிய நாட்டு கல்வியாளர்கள் பயிற்சி அளித்தனர். பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சர்வதேச கல்வியாளர்கள் கற்றல், கற்பித்தல் குறித்து புரிந்துணர்வு புத்தாக்க பயிற்சி அளித்து வருகின்றனர். ஆஸ்திரேலியன் நாட்டு கல்வியாளர்கள் ஹெலி, ஜெர்சி ஆகியோர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் முறைகளில் கலைகள் வளர்க்கும் முறை, வண்ணங்கள் மூலம் எண்ணங்களை அறிதல், செயல்வழி கற் றல், புலன்வழி கற்றல், விளையாட்டு முறை கற்றல் உள்ளிட்ட பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி சேர்மன் டாக்டர் அப்துல் ரஹ்மான், பள்ளி முதல்வர் பிரதீப் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Read more »

மருதாடு ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படுமா?

மருதாடு:

                    மருதாடு ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்காததால் ஒரே அறையில் ஐந்து வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

                       மத்திய அரசு கட்டாய கல்வியை சட்டமாக்கியதன் மூலம் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக அரசும் இலவச கல்வி, சைக்கிள், பஸ் பாஸ் என பல்வேறு உதவிகளை வழங்கி கல்வியை ஊக்குவிக்கிறது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான கட்டட வசதி செய்து தருகின்றனர். பள்ளிகளில் கட்டட பற்றாக்குறை என்பது குறைந்து வருகிறது. ஆனால் கடலூர் ஒன்றியம் மருதாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை கண்டு கொள்ள யாருமில்லை. இப்பள்ளியில் 50 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒரு தலைமையாசிரியரும், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு 800 சதுரடியில் ஒரே அறை மட்டுமே உள்ளது. மேலே ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போடப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் உள்ளே அனல் வீசுவதால் மாணவர்கள் படிக்க சிரமப்படுகின்றனர். ஆசிரியர்கள் இருவரும் இரண்டு வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் போது மற்ற மூன்று வகுப்பு மாணவர்களும் கூச்சல் போடுவதால் படிப்பு பாதிக்கப்படுகிறது. 

                         இப்பள்ளிக்கு கட்டடம் கட்ட விதிமுறைப் படி போதுமான இடவசதி இல்லையென காரணம் கூறி அனைவருக்கும் கல்வி திட்டத்தில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்க மறுக்கின்றனர். இருக்கும் கட்டடத்தை இடித்து விட்டு அங்கு புதிய கட்டடம் கட்டலாம். ஆனால் அதிகாரிகள் மனது வைப்பதில்லை. தற்போதுள்ள கட்டடம் முழுவதும் விரிசலாக காணப்படுகிறது. இடிந்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்குள் அதிகாரிகள் விழித்து கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டடம் கட்ட நிதி ஒதுக்க அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அவர்கள் நிதி ஒதுக்க முன்வரவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சிறப்பு எஸ்.ஐ., பதவிக்கு காத்திருக்கும் ஏட்டுகள்

கடலூர் : 

                   விழுப்புரம் சரகத்தில் 25 ஆண்டுகள் பணி முடித்த 146 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற டி.ஐ.ஜி.,யின் கையெழுத்திற்காக காத்திருக்கின்றனர்.

                   தமிழக காவல் துறையில் தேர்வு முறையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வந்தது. அதில் பல்வேறு குறுக்கீடுகள் காரணமாக பதவி உயர்வுகளில் குளறுபடி நடப்பதாக புகார் எழுந்தது. இதனை தவிர்க்கும் பொருட்டு இரண்டாம் நிலை காவலர்கள் 10 ஆண்டு பணி முடித்தால் முதல் நிலை காவலராகவும், அடுத்த ஐந்தாண்டு பணி முடித்தால் தலைமைக் காவலராகவும், அந்த பதவியில் "பனிஷ்மென்ட்' ஏதுமின்றி 10 ஆண்டு நிறைவு செய்தால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி விழுப்புரம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்த கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த 1978ம் ஆண்டு பணியில் சேர்ந்த 180 போலீசார் களுக்கு கடந்த 25-11-99ம் தேதி அன்று தலைமைக் காவலர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இவர்களில் பணிக்காலத்தில் தண்டனை பெற்ற 34 ஏட்டுகளை தவிர்த்து மற்ற 146 ஏட்டுகளுக்கு அரசின் உத்தரவின்படி கடந்த 25-11-2009ம் தேதி செலக்ஷன் கிரேடு வழங்கப்பட்டு, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்க அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்கள் டி.ஐ.ஜி.,க்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர் வுக்கான கோப்பு டி.ஐ.ஜி., யின் கையெழுத்து ஆகாமல் காலம் கடத்தப்பட்டு வருவதால், விழுப்புரம் சரகத்தைச் சேர்ந்த 146 ஏட்டுகளும் தங்களுக்கு பதவி உயர்வு எப்போது கிடைக் கும் என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

Read more »

முன்னாள் படைவீரர்களின் குறை தீர்க்கும் கூட்டம்

கடலூர் : 

               முன்னாள் படை வீரர்களின் குறை தீர்க்கும் கூட்டத்தில் 29 மனுக்கள் பெறப்பட்டு உடன் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார். முன்னாள் படை வீரர்களின் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது. சென்னை முன்னாள் படைவீரர் நல இணை இயக்குநர் கேப்டன் அஸ்லாம், உதவி இயக்குநர் லெப்டினண்ட் கர்னல் ஜெய்த்தூண் மற்றும் படைவீரர் வாரிய தலைவர் டாக்டர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் வாரிசுதாரர்கள் நிலம், வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கை தொடர்பாக 29 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Read more »

தொடக்க கல்வித் துறையின் பரிந்துரைக்கு வரவேற்பு


விருத்தாசலம் : 

                  தொடக்க கல்வித் துறையில் தமிழ் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்தலாம் என்ற தொடக்க கல்வித் துறை இயக்குனரகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதை, தமிழ் நாடு தமிழ், வரலாறு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வாழ்வுரிமை சங்கம் வரவேற்றுள்ளது. 

இதுகுறித்து சங்க மாநில தலைவர் முருகன் விடுத்துள்ள அறிக்கை: 

                           தொடக்க கல்வித் துறையில் கணிதம் மற் றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது போல் தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களையும் பணியில் அமர்த்தலாம் என தொடக்க கல்வித்துறை இயக்குனரகம் அரசுக்கு பரிந்துரை செய்துள் ளதை வரவேற்கிறோம். இந்த பரிந்துரையையேற்று தமிழக முதல்வர் உடனடியாக அரசாணையை வெளியிட்டால் பல ஆயிரக்கணக் கான வேலையில்லா தமிழ் மற்றும் வரலாறு பட்டாதாரி ஆசிரியர்கள் பயனடைவார்கள். எனவே இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என அறிக் கையில் கூறப்பட் டுள்ளது.

Read more »

பரங்கிப்பேட்டை அருகே மின் விளக்குகள் சிம்னி விளக்கு போல் எரிவதால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

பரங்கிப்பேட்டை : 

                  பரங்கிப்பேட்டை அருகே மின் விளக்குகள் சிம்னி விளக்குபோல் எரிந்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகின்றனர். பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு.முட்லூர் துணைமின் நிலையத்திற்குட்பட்டது அலமேல்மங்காபுரம் கிராமம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மின் இணைப்புகள் வைத்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களாக இந்த கிராமத்தில் குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு வீடுகளில் மின்சார விளக்குகள் சிம்னி விளக்குகள் போல் எரிகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாலையோர மின் விளக்குகள் சுத்தமாக எரிவதில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் தொடர் மின் வெட்டு: விவசாயிகள் பாதிப்பு

சிறுபாக்கம் : 

                     வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வேப்பூர், சிறுபாக்கம், கழுதூர், பெரியநெசலூர், மங்களூர், மலையனூர், ஒரங்கூர், அடரி உள்ளிட்ட 100க்கு மேற்பட்ட கிராமங்களில் அரசு அறிவித்த மின் தடையை விட அதிகளவு மின் வெட்டு இருப் பதால் அலுவலகங்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதால் கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம், அரசு அலுவலகங்கள் செயலிழந்து போகின்றன. அரசு நாளொன்றுக்கு 3 மணி நேரமாக இருந்த மின் வெட்டினை 2 மணி நேரமாக குறைத்தும் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Read more »

"டாடா ஏஸ்' வாகனம் பாலத்தில் மோதி விபத்து: இருவர் பலி

கடலூர் : 

                  ராமநத்தம் அருகே பாலத்தில் மோதி "டாடா ஏஸ்' வாகனம் கவிழ்ந்ததில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பேர் இறந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமகுடியை அடுத்த அண்டக்குடியைச் சேர்ந்தவர் மூக்கையா (49). இவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று சென் னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி "டாடா ஏஸ்' வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வண்டியை காவனூரைச் சேர்ந்த டிரைவர் ஆனந்தன் (22) ஓட்டிச் சென்றார். ராமநத்தம் அடுத்த வெங்கனூர் பாலம் அருகே செல்லும் போது "டாடா ஏஸ்' டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து பாலத்தின் கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் மூக்கையா, வெங்கனூரைச் சேர்ந்த மாயழகு (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் நிலையாண்டி செல் லூரைச் சேர்ந்த பழனிமுருகன், மூக்கையா மனைவி வள்ளி (40) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

Read more »

வெள்ளாற்றில் மணல் எடுப்பதை கவுன்சிலர்கள் தடுத்ததால் பரபரப்பு

திட்டக்குடி : 

                  திட்டக்குடி வெள்ளாற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிக்காக அதே பகுதியில் அனுமதியின்றி மணல் எடுப்பதை திட்டக்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

                    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் திட்டக்குடி - அகரம் சீகூர் இடையே மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிக்காக வெள்ளாற்றில் மண் உறுதி தன்மையை கண்டறிய ராட்சத இரும்பு பிளேட் கள் மீது மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர். இந்த பணி மேற்கொள்ளப்படும் இடத்தின் அருகிலேயே ஜே.சி.பி.,யைக் கொண்டு சுமார் 20 சதுர மீட்டர் அளவில் 2 மீட்டர் ஆழத்திற்கு களிமண் தெரியும் வரையில் மணல் தோண்டப்பட்டு மூட்டைகள் அடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி பேரூராட்சி 5 வது வார்டு கவுன்சிலர் செந்தில், 18 வது வார்டு கவுன்சிலர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் மண் தரம் பார்க்கும் இடத்தின் அருகிலேயே மணல் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரியில் இருந்து மட்டுமே வெள்ளாற்றில் பாலம் கட்டுவதற்கு மணல் கொண்டு வரவேண்டும் என கூறி தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து மண் தரம் கண்டறிய மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு வந்த பணி நிறுத்தப்பட்டது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior