உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 01, 2012

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதித்த கரும்பு, தென்னைக்கு பராமரிப்பு முறைகள்

புயலில் சேதம் அடைந்த தென்னையின் குருத்தில் மருந்து தெளித்து, மரத்தைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயி.
கடலூர்: 

         புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னைப் பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் வழிமுறைகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.  ÷கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதிப்பால் 1.5 லட்சம் தென்னை மரங்கள் விழுந்து விட்டன. உயிருடன் நிற்கும் தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கானவை, ஒருசில மட்டைகளுடன், மொட்டை மரங்களாகக் காட்சி அளிக்கின்றன. கரும்புப் பயிர்களும் பெருமளவில் சேதம் அடைந்து விட்டன.  ÷எனவே பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னை மரங்களைப் பராமரிக்கும் முறைகளை, வேளாண் பல்கலைக்கழகத்தின் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியர் நசீர் அகமது தெரிவித்தது: 

 கரும்பு  

            புயலில் பாதிக்கப்பட்டவை இளம் கரும்பாயின், இலைகள் கிழிந்த மற்றும் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி, மண் அணைக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரங்களுடன் பசஅம கரும்பு பூஸ்டர் என்ற ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த கலவையை, ஏக்கருக்கு 2, 3 மற்றும் 4 கிலோ என்ற அளவில், கரும்பு நட்ட 40, 60, மற்றும் 75-ம் நாள்களில் 15 நாள்கள் இடைவெளியில் இலைகளில் தெளிக்க  வேண்டும்.  ÷இதனால் சேதம் அடைந்த கரும்பு தெளிவடையும். நீர் மேலாண்மையைக் கண்காணிக்க வேண்டும்.  ÷4 முதல் 6 மாதக் கரும்பாயின், அவற்றை நிமிர்த்தி, சோலைகளை உரித்து விட்டம் கட்டிப் பராமரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட 6 முதல் 7 மாதக் கரும்பில் வேர்கள் இறங்காது இருந்தால், அவைகளை விதைக் கரும்பாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.  

       அக்கரும்புகளை பரு கரணைகளாக பாலித்தீன் பைகளில் முளைக்க வைத்து 30, 35 நாள்கள் வயது நாற்றுகளாக நடவு செய்யப் பயன்படுத்தலாம்.  ÷7 மாதங்களுக்கு மேற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு, ஒடிந்து, பருக்கள் முளைத்து மோசமாக இருந்தால், அறுவடை செய்து ஆலைகளுக்கு அனுப்பிவிட  வேண்டும்.  

தென்னை  

           புயலால் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தும், குருத்து ஒடிந்தும், மட்டைகள் ஒடிந்தும், குரும்பைகள், காய்கள் உதிர்ந்தும் காணப்படுகின்றன.  ÷குருத்தும், மட்டைகளும் ஒடிந்த தென்னை மரங்களைக் காப்பாற்ற, பழுத்து ஒடிந்த மட்டைகளை கூரிய கத்திக் கொண்டு சாய்வாகச் சீவி அகற்ற வேண்டும். ஒடிந்த நடுக் குருத்தைச் சுற்றியப் பகுதிகளை சுத்தம் செய்து, மட்டைகளை வெட்டிய பகுதிகளில் காப்பர் ஆக்ஸி குளோரைடு எனும் பூஞ்சாணக் கொல்லி (ஒரு பங்கு தண்ணீர் 2 பங்கு பைட்டோலான்) கலவையைப் பூசிவிட  வேண்டும்.  

            குருத்துப் பகுதியில் காயம்பட்ட இடத்தில் இதே பூஞ்சாணக் கொல்லியில் 2 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். இதனால் வெட்டுப் பகுதியிலும் குருத்துப் பகுதியிலும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம்.  பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உரங்களான ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் மற்றும் 3 கிலோ பொட்டாஷை 6 மாதங்களுக்கு ஒரு முறைப் பிரித்து இடவேண்டும்.  ஊட்டச்சத்துகள் மற்றும் பயிர் ஊக்கிகள் கலந்த பசஅம தென்னை டானிக்கை மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 2 பாக்கெட் (200 மில்லி) என்ற அளவில், 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்.  மேற்கண்ட பராமரிப்பு முறைகள் மூலம், புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு மற்றும் தென்னைப் பயிர்களின் மகசூல் திறனை அதிகரிக்கலாம். 














Read more »

Jayalalithaa defends relief work in the Thane cyclone-affected Cuddalore district

        Chief Minister Jayalalithaa on Tuesday strongly defended her government's relief work in the cyclone-affected Cuddalore district.

       Rebutting Deputy Leader of the Opposition Panruti S. Ramachandran's (Desiya Murpokku Dravida Kazhagam) observations that no work was carried out for two or three days after the cyclone struck, the Chief Minister said the district administration did whatever was possible immediately. Food packets and drinking water were distributed. Within 24 hours, trees that had fallen on roads were cleared. Gradually, the pace of work was speeded up. The affected people and those who had lost homes were put up at schools. It is wrong to say that they were not provided with food or financial assistance.

“If facts and figures are available, make your point, using them. Otherwise, it is easy to make sweeping remarks,” she said.

         Given the magnitude of the destruction in Cuddalore, Villupuram and Nagapattinam, any State government would have taken at least six or seven months to ensure the return of normality. “But, we have accomplished it within a month,” she said, amid thumping of desks.

        Talking of the damage suffered by the electricity network, she said that the entire supply system had been destroyed. “So far, we have not seen such destruction anywhere in Tamil Nadu. Even people residing there [in Cuddalore] thought it would take a minimum of four months. But, we have restored the supply in a month,” she said, explaining how the work was executed on a war footing. The government managed to provide Rs.300 crore to the Tamil Nadu Generation and Distribution Corporation. Before the Pongal festival, domestic electric supply was restored. Instructions were issued to cover all farm pumpsets by January 30, and this was also achieved.

       A former Chief Minister of the Puducherry had that said no such work, as done in the State, was happening in Puducherry. Ms. Jayalalithaa posed a challenge to the DMDK leader whether he could cite any State government that had functioned the way her regime had done under similar circumstances. Mr. Ramachandran himself had acknowledged that there was no support from the Centre. Using its finances, sources of finance and manpower, her government had done so much, for which it deserved commendation. There would be some lapses as the destruction was unprecedented. But, the execution of works was in progress. She would furnish all facts and figures in her reply on Saturday, Ms. Jayalalithaa said. Her government planned to provide a huge package of assistance, which would be beyond the expectations of all.

















Read more »

கடலூர் மாவட்ட மருத்துவமனைகளின் தொடர்பு எண்கள்


 கடலூர் மாவட்ட மருத்துவமனை தொடர்பு எண்கள் 


ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ் - 108
தீயணைப்பு நிலைய ஆம்புலன்ஸ் - 04142 293301
சைல்டு லைன் - 1098 

மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள்

கடலூர் அரசு மருத்துவமனை -04142 230052
கிருஷ்ணா மருத்துவமனை - 04142 231711 - 14
வள்ளி விலாஸ் மருத்துவமனை -04142 221879
கண்ணன் மருத்துவமனை - 04142 230370
சுரேந்தரா மருத்துவமனை - 04142 237333
ஏ.ஆர்.ஆர். மருத்துவமனை - 04142 231108
நெல்லிக்குப்பம் அருணாசலம் மருத்துவமனை - 04142 271140 




Read more »

பிச்சாவரத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம்

கிள்ளை : 
 
         பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் தானே புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
 
          "தானே' புயலால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பயிர் பாதிப்பு நிவாரணம் வழங்க பிச்சாவரம் தொடக்க வேளாண்மை கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள பிச்சாவரம், பெரியகாரைமேடு, கணக்கரப்பட்டு, கோவிலாம்பூண்டி, சிதம்பரநாதன்பேட்டை, மீதிக்குடி உள்ளிட்ட சுற்றுப் பகுதியில் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பெரியகாரைமேடு, மீதிகுடி, சிதம்பர நாதன்பேட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிச் செயலர் பாண்டியன் 25 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கினார். மேலும் நிவாரணம் வழங்கும் பணி நடந்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் தீ விபத்து : 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

 http://mmimages.mmnews.in/Articles/2012/Jan/2c660409-6033-42f0-bed1-e829dc85fdf0_S_secvpf.gif

கடலூர் : 

          கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரியில் முதல்வர் அறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் முதல் தளத்தில் "ஏசி' வசதி செய்யப்பட்ட முதல்வர் அறை உள்ளது.

        தினமும் காலை நேரத்தில் அறையைத் திறந்து சுத்தம் செய்த பின்னர் "ஏசி'யை போட்டு விட்டு வெளியே உள்ள கதவை பூட்டிச் செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம் போல் துப்புரவு பணியில் ஈடுபட்டவர் "ஏசி' யை ஆன் செய்து விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் "ஏசி' இயந்திரத்தில் ஏற்பட்ட தீ அறை முழுவதும் பரவியது. உடன் கல்லூரியில் இருந்த மாணவிகள் பின்புறம் உள்ள வழியாக வெளியேற்றப்பட்டனர்.
          தகவல் அறிந்த கடலூர் தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த தீ விபத்தில் அறையில் இருந்த நாற்காலிகள், கம்ப்யூட்டர், மேஜைகள், பிரோ உள்பட 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.



Read more »

தானே புயல் கூடுதல் நிவாரணம் வழங்ககோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு

           தானே புயல் நிவாரணம் தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவைச் சந்தித்துப் பேசினார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.


இச்சந்திப்புக்குப் பின்னர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறியது

            கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு கடுமையானது. மக்களின் வாழ்வாதாரமே வீழ்ச்சி அடைந்து விட்டது. பாதிப்புகளை சீரமைக்க நீண்ட காலத் திட்டம் தேவை என்று, மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டேன். பாதிக்கப்பட்ட முந்திரி போன்ற பயிர்களை மீண்டும் உருவாக்க 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே பாதிப்புகளுக்கு நிவாரணம் என்பதைவிட நஷ்டஈடு வழங்க வேண்டும்.

          தேசிய பேரிடர் நிதியில் இருந்து அதிக நிதி பெற்று, கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும். பயிர்ச் சேதங்களுக்கு நிலத்தின் பட்டாதாரர்கள் மட்டுமன்றி குத்தகை தாரர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று கோரினேன் என்றார்.

Read more »

சென்னை பல்கலைக்கழக நவம்பர் 2011 முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

        சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து கடந்த நவம்பர் மாதம் தேர்வெழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

          சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.எஸ்.டபிள்யூ., எம்.ஏ. (எல்.எம்.,) எம்.பி.ஏ., எம்.ஏ. (எச்.ஆர்.எம்.,) எம்.எஸ்சி., (ஐ.டி.), எம்.எஸ்சி (சி.எஸ்.), ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டன.

        இந்த தேர்வுகளுக்கான முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் நேற்று மாலை வெளியிட்டது. தேர்வெழுதிய மாணவர்கள் முடிவுகளை http://www.ideunom.ac.in/result/resultmain.asp என்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் காணலாம்.

      மறுமதிப்பீட்டிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பாடம் ஒன்றுக்கு ரூ.750 கட்டணம் செலுத்தி பிப்ரவரி 15ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தோல்வி அடைந்த மாணவர்கள் மறுதேர்வு எழுத பிப்ரவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அபராதத் தொகையுடன் 22ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 










Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior