உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 02, 2010

பள்ளி ஆசிரியர்களுக்கான கம்ப்யூட்டர் பயிற்சி துவக்கம்

கடலூர் : 

             தேசிய இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள உயர் நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி 6 நாள் முகாம் கடலூரில் பெரியார்  கல்லூரியில் நேற்று துவங்கியது.மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கணேசமூர்த்தி முன்னிலை வகித் தார். கல்லூரி முதல்வர் ரங்கநாதன் பயிற்சியை துவக்கி வைத்து பேசினார்.
 
                 கூடுதல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் பயிற்சி குறித்து விளக்கினார். கல்லூரி பேராசிரியர்கள் மனோகரன், தமிழாழி கொற்கை வேந்தன், கல்லூரி கம்ப்யூட்டர் துறைத் தலைவர் கீதா வாழ்த்துரை வழங்கினர். பெரியார் கல்லூரி கம்ப்யூட்டர் பயிற்சி விரிவுரையாளர்கள் சரளா, ராஜலட்சுமி, நடனம், சையதுமீரான், பன்னீர்செல்வம், சுரேஷ்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இப்பயற்சியில் 9 மற்றம் 10ம் வகுப்பைச் சேர்ந்த 80 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி ஒருங்கிணைப்பாளர்கள் தணிகைவேல், மணிக்கண்ணன் செய்திருந்தனர். பயிற்சி 6ம் தேதி வரை நடக்கிறது. ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Read more »

புவனகிரி பள்ளிக்கு தற்காலிக ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் நியமிக்க முடிவு

புவனகிரி : 

            புவனகிரி அரசு ஆண்கள் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் இரண்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து புவனகிரி சங்கமம் என்கிற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதன் தலைவராக நடனசபாபதி, துணைத்தலைவராக ராபர்ட் ராஜசேகரன், பொதுச் செயலாளராக உதயசூரியன், இணை பொதுச் செயலாளர்களாக பாலசந்தர், திருமாள்வளவன், இணை செயலாளர்களாக அண்ணாஜோதி, சரவணன், ஞானவள்ளல், கண்ணன்,வெங்கடேசன், பொருளாளராக ஆறுமுகம் நியமனம் செய்யப்பட்டனர்.
 
                 பள்ளியின் வளர்ச்சிக்கும், பள்ளி கல்வி வளர்ச்சிக்கும் முன்னாள் மாணவர்கள் 100 பேரிடமிருந்து பெறப்பட்ட 4 லட்சம் ரூபாய் புவனகிரி சங்கமம் அமைப்பிற்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் தற்பொழுது பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை கூடுதலாக்கவும், பள்ளி தலைமை ஆசிரியரின் ஒப்புதலோடு  தற்காலிகமாக இரண்டு பட்டதாரி ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது எனவும், அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

Read more »

திட்டக்குடி பேரூராட்சியில் செயல் அலுவலர் அறைக்கு பூட்டு

திட்டக்குடி : 

           திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் அறைக்கு பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேரூராட் சிக்கு  செயல் அலுவலர் பணியிடம் கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தது. இதனால் பிறப்பு, இறப்பு, சொத்துவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு மற்றும் மகப் பேறு திட்டத்தில் நிதியுதவி பெற சான்றிதழ் என அன்றாட அலுவலக பணிகள் முடங்கியது.
 
                     கவுன்சிலர்கள் கலெக்டரிடம் முறையிட்டதை தொடர்ந்து ஒரு மாதத் திற்கு முன் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இருப் பினும் அவர் பணிக்கு வராமல், கூடுதல் பொறுப்பான ஸ்ரீமுஷ் ணம் அலுவலகத்திலேயே பணியாற்றி வருகிறார்.  திட்டக்குடியிலிருந்து செக்- புக், சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை ஊழியர்கள் தினந்தோறும் ஸ்ரீமுஷ்ணம் எடுத்து சென்று கையெழுத்து பெற்று வருகின்றனர்.இதனை கண்டித்து  ராஜாஅலெக்சாண்டர் தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக் கள்  திரண்டு நேற்று மதியம் 1.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத் தில் உள்ள செயல் அலுவலர் அறையை பூட்டினர்.  சேர்மன் மன்னன், சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கவுன்சிலர்கள் போராட்டம் குறித்து பேரூராட்சி உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அவர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனையேற்று கவுன்சிலர்கள், செயல் அலுவலர் அறையை திறந்து விட்டனர். இரண்டு  நாளில் செயல் அலுவலர் திட்டக்குடியில் நிரந்தரமாக தங்கி பணியாற்றவில்லை என்றால் சாலை மறியல் செய்யப்படும் என அறிவித்தனர்.

Read more »

நெல்லிக்குப்பம் பெண்ணையாற்றில் விதிமுறை மீறல் : புதுச்சேரிக்கு வருமானம்; தமிழகத்திற்கு பாதிப்பு

நெல்லிக்குப்பம் : 

                நெல்லிக்குப்பம் பெண் ணையாற்றில் விதிமுறைகளை மீறி புதுச்சேரி பாசிக் நிறுவனம் மணல் எடுத்து வருவதால் கரை பாதிக் கும் அபாயம் ஏற்பட் டுள்ளது.
 
               நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கம் - முள்ளிகிராம்பட்டு இடையே தமிழக பகுதியில் பெண்ணையாற்றின் கரை உள்ளது. ஆற்றின் மறுபுறம் புதுச்சேரி மாநிலம் மணல்மேடு கிராமம் உள்ளது. தமிழக கரை வரை ஆறு முழுவதும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தது என கூறுகின்றனர். இதை காரணம் கூறி அம்மாநில கரையோரம் மணல் எடுக்காமல் தமிழக கரையையொட்டி ஆற்றில் மணல் எடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
 
              புதுச்சேரி அரசின் பாசிக் நிறுவனமே மணல் குவாரியை நடத்துகிறது. பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் எடுக்கப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் செல்கிறது. கரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் தான் மணல் எடுக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறி கரையோரம் மணல் எடுப்பதால் ஆற்றங்கரை பாதிக் கப்படும். மணல் குவாரியில் புதுச்சேரி அரசுக்கு வருமானம். ஆனால் தமிழக பகுதி பாதிக்கும் அபாயம் உள்ளது. அரசு நிறுவனமே இதுபோன்று நடப்பதால் யாரும் கேட்க முடியாமல் தவிக்கின்றனர். தமிழக எல்லையில் உள்ள ஆற்றின் கரை பலமிழப்பதால் மழைக் காலத் தில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தால், கரை உடைந்து தண்ணீர் ஊரினுள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு மேல் அகலமுள்ளஆற்றின் கரையோரம் மணல் எடுப்பதை தடுத்து நிறுத்த கடலூர் மாவட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு 8ம் தேதி துவக்கம்! 25,592 பேர் தேர்வு எழுதுகின்றனர்

கடலூர் : 

                கடலூர் மாவட்டத் தில் 25,592 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதுகின் றனர். ஆரல், ஓரல் தேர்வுகள் வரும் 4 மற்றும் 5 தேதிகளில் நடக்கிறது. செய்முறைத் தேர்வு 8ம் தேதி முதல் துவங்குகிறது.பிளஸ் 2 பொது தேர்வு வரும் மார்ச் 1ம் தேதி  துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. செய்முறைத் தேர்வுகள் 4ம் தேதி துவங்குகிறது. 4 மற்றும் 5ம் தேதிகளில் ஆங்கிலம், தமிழ் பாடங்களுக்கான ஆரல், ஓரல் (கேட்டல் திறன், பேசுதல் திறன்) எனப்படும் அக மதிப் பீட்டு தேர்வுகள் நடக் கிறது.
 
              இதனைத் தொடர்ந்து 8ம் தேதி முதல் 20ம் தேதிவரை அறிவியல் பாடங் களான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், தொழில் கல்வி செய்முறைத் தேர்வுகள்  நடக்கிறது. இதற்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி கடந்த வாரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளா கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தொடர்ந்து மாவட்ட கல் வித் துறை சார்பில் வினாத் தாள் அச்சடிப்பது, "பேட்ச்' பிரிப்பது உள்ளிட்ட  பணிகள் முடிந்து மாவட்டத்தில் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 12208 மாணவர்கள், 13,384 மாணவிகள் என மொத்தம் 25,592 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களைவிட 1,176 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். இதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 99 பள்ளிகளைச் சேர்ந்த 8293 மாணவர்களும், 9909 மாணவிகளும், விருத்தாச்சலம் கல்வி மாவட்டத்தில் 54 பள்ளிகளைச் சேர்ந்த 3915 மாணவர்களும், 3475 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். வரும் 8ம் தேதி துவங்கவுள்ள செய்முறைத் தேர் விற்கான ஆயத்தக் கூட்டம் கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள் ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரிகள் கடலூர்  கணேசமூர்த்தி, விருத்தாச்சலம் குருநாதன், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அருள்மொழிதேவி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 153 பள்ளிகளைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் பள்ளிகளில் நடத் தப்படும் செய்முறைத் தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விளக் கினர். அதில் செய்முறை தேர்வுகள் கால அட்டவணையில் உள்ள தேதிகளில் தவறாது நடத்த வேண்டும்.
 
                     மருத்துவ மற்றும் விபத்து காரணங்களால் குறித்த "பேட்ச்'ல்  தேர்வு எழுத இயலாத மாணவர்கள் உரிய கால அட்டவணைக்குள் வேறொரு நாளில், வேறொரு "பேட்ச்'ல் செய்முறைத் தேர்வை நடத்தி குறிப்பிட்ட இறுதி நாட்களுக் குள் முடிக்க வேண்டும்.   தேர்வு நாளன்று ஆய்வகத்தில் அகத்தேர்வர், புறத் தேர்வர் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் கள் மட்டுமே இருத்தல் வேண்டும். செய்முறைத் தேர்வு சார்பாக அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகளை முன்கூட் டியே வழங்க வேண்டும். செய்முறை தேர்வு முடிந்த அடுத்த நாள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல்களை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டனர். பின்னர் தலைமை ஆசிரியர்களிடம் செய்முறை தேர்விற்கான கால அட்டவணை, மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் மற்றும் "பேட்ச்' பட்டியல்  வழங்கப்பட்டன.

Read more »

பெயரளவில் நடந்த வேலை உறுதி திட்டம் : அதிக மழை பெய்தும் பயன் ஏதும் இல்லை

                      கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வேலை உறுதி திட்டம் பெயரளவுக்கே நடந்துள்ளது. அதிக மழை பெய்திருந்த போதிலும், நீர் நிலைகள் வறண்டு காட்சியளிக்கின்றன.கடலூர் மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தில் செய்த பணிகள், பெயரளவிற்கு நடந்துள்ளது. உதாரணத்திற்கு விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் சீரமைக்கப்பட்ட குளத்திற்கு வரத்து வாய்க் கால் சீரமைக்கப்படவில்லை. இதனால் குளம் வறண்டு கிடக்கிறது. அண்ணாகிராமம் ஒன்றியம் கோழிப்பாக்கம் ஊராட்சி குளத்திற்கு நீர் வரத்து வாய்க்கால் பெயரளவில் சீரமைக்கப்பட்டுள்ளது. சில ஊராட்சிகளில் ஒரே நீர் நிலை அடுத்தடுத்த ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட நவம்பரில் 15 சதவீதமும், டிசம்பரில் 69 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட நீர் நிலைகளில் சிலவற்றை தவிர பெரும்பாலானவை வறண்டும், புதர் மண்டியும் உள்ளது.விழுப்புரம் மாவட்டம்: ஊரக வேலை உறுதி திட்டத்தில் உருவாக்கப்பட்ட மற் றும் சீரமைக்கப்பட்ட ஏரி, குளங்களில் ஒப்புக்காக செய்த பணிகளால் மீண்டும் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் தண் ணீர் சேமிக்க முடியாமல் வறண்டே காணப்படுகிறது.திருவெண்ணைநல்லூர் அடுத்த பேரங் கியூர் குச்சிப்பாளையம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றில் வேலை நடந்தது. ஏரியில் தண்ணீர் நின்றதால் ஆற்றில் வேலை கொடுத்து கூலி கொடுத்துள்ளனர். ஆற்றின் கரையை பலப்படுத்தி உபயோகமான வேலை செய்திருக்கலாம்; அதுவும் இல்லை.  வி.அரியலூர் ஊராட் சியில் ஒரே வாய்க்காலில் 10க்கும் மேற் பட்ட முறை வேலை செய்து பணத்தை விரயமாக்கியுள்ளனர்.

Read more »

ஆந்திராவில் இறந்தவர் உடல் 80 நாட்களுக்கு பின் பிரேத பரிசோதனை

பண்ருட்டி : 

                ஆந்திராவில் மர்மமான முறையில் இறந்த கூலி தொழிலாளியின் உடல், 80 நாட்களுக்கு பிறகு நேற்று தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(47).  இவரும் அதே பகுதியை சேர்ந்த சிலர் கடந்த நவம்பர் மாதம் கரும்பு வெட்டும் வேலைக்காக ஆந்திர மாநிலம் புத்தூருக்கு சென் றனர். நவ. 12ம் தேதி கிருஷ் ணமூர்த்தி கரும்பு தோட் டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
 
                   அவரது உடலை உறவினர்கள் மறுநாள் சொந்த கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர். இந்நிலையில் அவரது மகன் பிரபு, தனது தந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தி விசாரணை நடத்தக் கோரி  கடலூர் ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தார். புதுப்பேட்டை போலீசார் கடந்த 19ம் தேதி சந்தேக மரணப் பிரிவில் வழக்கு பதிந்தனர். திருத் துறையூர் சுடுகாட்டில் புதைக் கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் உடல் நேற்று மதியம் பண்ருட்டி தாசில்தார் பாபு, சப் இன்ஸ் பெக்டர் ராஜேந்திரன் முன்னிலையில் தோண்டி எடுக்கப் பட்டது. உடலை அவரது மகன் பிரபு அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து டாக்டர்கள் முருகன், கலையரசி, மருந்தாளுநர் இளங்கோவன் ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியின் உடற் கூறுகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த நவம்பர் மாதம் இறந்தவரின் உடல் 80 நாட் களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more »

வள்ளலார் சித்தி பெற்ற திரு அறையில் தரிசனம்

குறிஞ்சிப்பாடி : 

               கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் 139வது தைப்பூச ஜோதி தரிசன விழா கடந்த 30ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து, வள்ளலார் சித்தி பெற்ற திரு அறை தரிசனம் மேட்டுக்குப்பத்தில் நேற்று நடந்தது. திருஅறை தரிசனத்தை முன்னிட்டு காலை முதல் மகாமந்திரம் ஓதுதல், திருஅருட்பா இன் னிசை, வள்ளலார் வாழ்வியல் இசைச் சொற்பொழிவு நடந்தது.
 
                          முன்னதாக வடலூர் தரும சாலையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய எழுதுகோல், ஆடைகள், புத்தகம் அடங்கிய பேழையை பல்லக்கில் வைத்து வள்ளலார் நடந்து சென்ற பாதையான கருங்குழி, பெருமாள் கோவில் தெரு, தீச்சுவை ஓடை வழியாக மீனவ சமுதாய மக்களால் மேட்டுக்குப்பம் கொண்டு வந்து அங்கு வள்ளலார் சித்தி பெற்ற அறை முன் வைத்து திருஅறை திறக்கப்பட்டு தரிசனம் நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வணங்கினர்.

Read more »

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் 11ம் தேதி தீப்பந்தம் ஏற்றும் போராட்டம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு போடாததை கண்டித்து வரும் 11ம் தேதி மா.கம்யூ., சார்பில் தீப்பந்தம் ஏற்றும் போராட்டம் நடக்கிறது. 

இதுகுறித்து மா.கம்யூ., நகர செயலாளர் ராமச் சந்திரன் விடுத்துள்ள அறிக்கை: 
                          
                               சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு போடப்படாததால் திறக்கப்பட்டதில் இருந்து மக்களின் உயிர் குடிக்கும் பாலமாக உள்ளது. இது குறித்து அனைத்து தரப்பு அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிதம்பரம் ஆர்.டி.ஓ., வை சந்தித்து பாலத்தில் மின் விளக்கு வசதியும், விபத்து தடுக் கும் வசதியையும் செய்து தர வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.எனவே மாவட்ட நிர்வாகம் உடன் சிதம்பரம் ரயில்வே பாலத்தில் இருபுறமும் ரவுண் டானா, மின் விளக்கு வசதி செய்து தரக்கோரி வரும் 11ம் தேதி மேம்பாலத்தில் தீப் பந்தம் ஏற்றும் போராட் டம் நடத்தப்படுகிறது. நகர் குழு உறுப்பினர் ராஜா தலைமையில் மாநில குழு உறுப்பினர் மூசா, மாவட்டக்குழு நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Read more »

குரூப்–2 தேர்வு எழுத மாஜி படைவீரர்களுக்கு பயிற்சி

கடலூர் : 

             தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் குரூப்–2 தேர்வு எழுதும் முன்னாள் படைவீரர்களுக்கு அரசு இலவச பயிற்சி அளிக் கிறது. இது குறித்து முன்னாள் 

படைவீரர் நல உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 
            தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் குரூப்–2  தேர்வு ஏப்ரல் 2010ல் நடைபெற உள்ளது.  இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர் களுக்கு கோவை மற்றும் திருவள்ளூர் மாவட்டங் களில் முன்னாள் படைவீரர் நல இயக்கம் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. குரூப்–2  தேர்வு எழுத விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என  செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

காந்தி நினைவு தினத்தையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகள்

சிதம்பரம் : 

            காந்தி நினைவு தினத்தையொட்டி சிதம்பரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு டி.எஸ்.பி., மூவேந்தன் மரக்கன்றுகள் வழங்கினார். சிதம்பரம் அண்ணாமலைநகர் தெற்கிருப்பில் உள்ள லீலா மெமோரியல் மெட்ரிக் பள்ளியில்  காந்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகி வேதநாயகி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் லீலா குமாரி வரவேற்றார்.டி.எஸ்.பி., மூவேந்தன் பங்கேற்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் பள்ளி குழந்தைகள் 200 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், மரம் வளர்ப்பது வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதால் அனைவரும் மரம் வளர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Read more »

மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவி

கடலூர் : 

                   கடலூரில் நடந்த மக் கள் குறை தீர்வு கூட்டத் தில் பயனாளிகளுக்கு 12 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கடலூரில் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில்  சமூகநலத்துறையின் மூலம் மூவலூர் ராமாமிர்த அம்மையார் திருமண உதவித்திட்டத்தில் தலா 20 ஆயிரம் வீதம் 35 பேர்களுக்கு 7 லட்சம் ரூபாயும், தாட்கோ மூலம் செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்ற 25 மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 5 லட்சம் ரூபாயும், பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மூலம் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட மூவருக்கு இலவச கண் கண்ணாடிகளும், ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறை மூலம் 4 நபர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், கை, கால் உறைகளை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், துணை ஆட்சியர் அழகுமீனா, ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார், தாட்கோ மேலாளர் தரணிதரன் உடனிருந்தனர்.

Read more »

தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு மாவட்ட விளையாட்டு போட்டி

கடலூர் : 

                    தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடலூரில் நடந்தது. மாவட்டத்தில் 22 தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு இடையோன மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. துவக்க விழாவிற்கு ஆர்.கே., ஐ.டி.ஐ., முகுந் தன் தலைமை தாங்கினார். நெய்வேலி கெங்குசாமி ஐ.டி.ஐ., முருகவேல், வளையமாதேவி எம்.கே.ராமன் ஐ.டி.ஐ., சரவணன் முன்னிலை வகித் தனர். போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் துவக்கி வைத்தார். கைப்பந்து, கால்பந்து, பால் பேட்மிட்டன், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு மற்றும் ஈட்டி எறிதல், 100 மீட் டர், 200 மீட்டர், 400 மீட் டர், 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்ட போட்டிகள் நடந்தன. இதில் 22 ஐ.டி.ஐ.,க்களை சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி வெற்றவர்களுக்கு மாலையில் நடந்த விழாவில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திருச்சி மண்டல இணை இயக்குநர் ரவிபாஸ்கர் பரிசு வழங்கினார்.

Read more »

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 4ம் தேதி மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                 கொடிய நோயிலிருந்து மக்களை காப்பாற்ற தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வரும் 4ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனை முன் கண்டன ஆர்ப்பாட் டம் நடத்த மா.கம்யூ., முடிவு செய்துள்ளது.
 
               கடலூர் நகர மா.கம்யூ., குழுக் கூட்டம் நடந்தது. ரமேஷ் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் தனசேகரன், நகர செயலாளர் சுப்புராயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடலூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சுகாதாரமில்லாமல் குப்பை கூளங்கள் குவிந்து கிடக்கிறது. நகர மெங்கும் சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் கொசு, பன்றிகளால் சிக்குன்-குனியா, டெங்கு, மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அலட்சியமாக இருந்து வருவது வேதனையளிக்கிறது. மக்களை நோய் அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது. மாவட்ட சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் கொசு, பன்றிகளை அழித்திட நடவடிக்கை எடுத்திடக் கோரியும், கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான உயிர்காக்கும் மருந்துகளை இருப்பு வைத்திடவும், இதயம், நரம்பியல் போன்ற  முக்கியத் துறைக்கு உடன் சிறப்பு மருத்துவர்களை பணியில் நியமிக்கவும், கொடிய நோயிலிருந்து மக் களை காப்பாற்ற தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் வரும் 4ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

சத்தியவாடி ஊராட்சியில் 'டிவி' வழங்கும் விழா

விருத்தாசலம் : 

                சத்தியவாடி ஊராட்சியில் நடந்த விழாவில் அமைச்சர் பன்னீர்செல் வம் பயனாளிகளுக்கு "டிவி'க்களை வழங்கினார். விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி ஊராட்சியில் நடந்த விழாவிற்கு கலெக் டர் (பொறுப்பு) நடராஜன் தலைமை தாங்கினார். ஒன் றிய சேர்மன் ராஜாமணி முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி வரவேற்றார்.புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் பன் னீர்செல்வம் பேசியதாவது:
 
                   சமூகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக தி.மு.க., அரசு பெரிதும் உறுதுனையாக உள்ளது. பொது மக்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டம், 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் குடிசைகளை ஒழிக்க புதிய திட்டம் செயல்பட உள் ளது. எனவே பொதுமக் கள் தி.மு.க., அரசுக்கு என்றும் ஆதரவு தரவேண்டும் என்றார். விழாவில் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) ராமராஜ், சேர்மன் முருகன், ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர் ராமு, மாவட்ட ஊராட்சி தலைவர் சிலம்புசெல்வி, துணை தலைவர் பிரான் சிஸ்மேரிஞானமுத்து, மாவட்ட கவுன்சிலர் துரைமகாதேவன், ஒன்றிய துணை தலைவர் பழனிவேல், கவுன்சிலர் ஜெயமணி, ஊராட்சி துணை தலைவர் அன்பழகன், பி.டி.ஓ.,க்கள் கலியபெருமாள், மனோகரன், தாசில்தார் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

மகளிர் ஸ்டேஷன் பணிகள் சுவீடன் மாணவியர் ஆய்வு

திண்டிவனம் : 

               சுவீடன் நாட்டை சேர்ந்த மாணவியர், மகளிர் போலீஸ் நிலையத்தின் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினர். சுவீடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம்  பகுதியில் செயல்படும்  ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படிக்கும் மாணவியர் 16 பேர், கடந்த மாதம் 18ம் தேதியிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இக்குழுவை சேர்ந்த மாணவியர் பியத்ரா, தெரியாஸ், மரியா ஆகியோர் திருச்சி உருமு கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர் ஆண்டனிசெல்வராஜ் உதவியுடன், சமுதாயத்தில் பெண்களின் நிலை, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் உட்பட, பல்வேறு தலைப்புகளில் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். இம்மாணவியர் நேற்று காலை திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலையத்தில் நடைபெறும் பணிகள் குறித்து, மகளிர் போலீசாரிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். போலீஸ் நிலையத்தில், பெண் களால் கொடுக்கப்படும் புகார் மற்றும் அதன் மீது போலீசார் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

Read more »

உரிமம் இன்றி 'பார்' நடத்திய 10 பேர் கைது

கடலூர் : 

                  கடலூரில்  டாஸ்மாக் கடைகள் அருகே உரிமம் இன்றி பார் நடத்திய 10 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூரில் டாஸ்மாக் கடைகள் அருகே உரிமம் இன்றி "பார்' நடத்துவதாக வந்த புகாரின் பேரில் டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையில் போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். அதில் கடலூர் பீச் ரோட்டில் பார் நடத்திய மேல்பட்டாம்பாக்கம் பாஸ்கர் (53), திருவண்ணாமலை ராமு (38), விஜய் (41), வளவனூர் சிங்காரவேலு (27), மதுரையைச் சேர்ந்த கேஷியர் பார்த்தசாரதி (37), கூத்தப்பாக்கம் நச்சினார்க்கினியன் (55) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அதேபோன்று திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கூத் தப்பாக்கம் டாஸ்மாக் கடை அருகே பார் நடத் திய  திருப்பாதிரிப்புலியூர் பழனிவேல் (21), சரவணன் (29), சந்தோஷ்குமார் (30), கே.என். பேட்டை பழனி (47) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Read more »

கல்லூரி மாணவர் விபத்தில் பலி

பரங்கிப்பேட்டை : 

                   கடலூர் அருகே, நின் றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சென்னை தனியார்  இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் இறந்தார். சிதம்பரம் அடுத்த புவனகிரியை சேர்ந்த சித்தா டாக்டர் குணசீலன் (50). இவரது மகன் சரவணன் (21) சென்னையில் தனியார் இன்ஜினியரிங் கல் லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக புவனகிரி வந்திருந்த சரவணன், நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்தார்.ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே முன்னால் சென்ற பஸ்சை முந்திச் செல்ல முயன்றபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியது. அதில் சரவணன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். புதுச்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Read more »

பெண்ணையாற்றில் சுமோ கவிழ்ந்தது: டிரைவர் உயிர் தப்பினார்

கடலூர் : 

                 கடலூர் பெண்ணையாற்று பாலத்தில் இருந்து சுமோ உருண்டு விழுந்ததில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவட்டாறு கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(28). ரிலையன்ஸ் கம்பெனிக்கு வாடகைக்கு சுமோ ஓட்டி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு ரிலையன்ஸ் அதிகாரி ஒருவரை சென்னையில் விட்டுவிட்டு சீர்காழிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நேற்று காலை 6 மணிக்கு கடலூர் பெண் ணையாறு பாலத் திற்கு ஏற முயன்றபோது சுமோ கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் இருந்த இரும்பு தடையை உடைத்துக் கொண்டு 30 அடி பள்ளத்தில் உருண் டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சுமோவில்  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டிரைவரை காப்பாற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more »

கட்டட தொழிலாளர் சங்கத்தினர் கடலூரில் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                  பதிவு செய்த நாளில் இருந்து வாரிய பயன்களை வழங்க கோரி தமிழ்நாடு கட்ட தொழிலாளர் சங்கத்தினர் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் கடலூர் ராமு, புவனகிரி வீரப்பன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2003ம்  ஆண்டு முதல் முடக்கி வைத்துள்ள மனுக் களுக்கு உதவி நிதி வழங்க வேண்டும். பிற வாரியங்கள் போல் பதிவு செய்த நாளிலிருந்து வாரியப் பயன்களை வழங்க வேண்டும். நாலரை ஆண்டுகள் வாரிய உறுப்பினராக இருந்தவர்களுக்கு 60 வயதில் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட செயலாளர் சேகர் பேசினார். மாவட்டத் தலைவர் பாஸ்கர், ஏ.ஐ.டி.யூ.சி., ஜெகத்ரட்சகன், இந்திய கம்யூ., நகர செயலாளர் குளோப், பண் ருட்டி செயலாளர் முருகன், ராமநாதன், அய்யனார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior