உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்னா

கடலூர்:

                     தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யூ.) கடலூரில் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம்  நடத்தினர். அரசு போக்குவரத்துக் கழக கடலூர் மண்டலத்தில், 240 நாள்கள் பணிபுரிந்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று விதி இருந்தும், பல ஆண்டுகளாக ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் எம்.முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் செ.தனசேகரன், சி.ஐ.டி.யூ. மாநிலச் செயலர்கள் எம்.சந்திரன், ஜி.சுகுமாறன், சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், சம்மோள துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் வாலண்டீனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் மாதவன், கடலூர் நகரச் செயலர் சுப்புராயன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கண்டன உரை நிகழ்த்தினர்.




Read more »

மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு

சிதம்பரம்:

                  சிதம்பரம் தெற்குவீதி அலமேலு அஞ்சாபுலி வணிக வளாகத்தில் மக்களவை உறுப்பினர் தொகுதி அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் தலைமை வகித்தார்.  இவ்விழாவில் கடலூர் நகர்மன்ற துணைத் தலைவர் பா.தாமரைச்செல்வன், மாநில நிர்வாகிகள் ரமேஷ்நாதன், இரா.காவியச்செல்வன், ரவிச்சந்திரன், தமிழன்பன், ஜவகர் மற்றும் வ.க.செல்லப்பன், பால.அறவாழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Read more »

எதிர்கால கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது

நெய்வேலி:

                  பெற்றோர் தங்கள் முதுமைப் பருவத்தில், தங்களது குழந்தைகளின் தயவில் வாழவேண்டும் என்ற எண்ணத்தில், எதிர்கால கனவுகளை குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது என நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேசிய அறிவியல் தினவிழாவில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி பேசினார். இந்தியாவுக்கு முதல்முறையாக நோபல் பரிசு பெற்றுத்தந்துவரும், இயற்பியல் விஞ்ஞானியுமான சர்.சி.வி.ராமன், தனது கண்டுபிடிப்பான "ராமன் விளைவு' எனும் சூத்திரத்தை கண்டுபிடித்த தினமான பிப்ரவரி 28-ஐ நாடு முழுவதும் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

              இதையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நெய்வேலி மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியரிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு அறிவியல் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் ஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கிப் பேசியது: ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு வகையில் வெவ்வேறு அளவில் திறமைகள் உள்ளன. பெற்றோர் குழந்தைகளின் திறனை உணர்ந்து அதற்கேற்றார்போல் அவர்களது எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டுதல் வேண்டும் என்றார் அன்சாரி.÷முன்னதாக லிக்னைட் ஹாலில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை என்எல்சி கல்வித்துறைச் செயலர் சுகுமார் திறந்து வைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். நெய்வேலி மையத்தின் செயலர் தாமோதரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் சிவக்குமார் நன்றி கூறினார். டாக்டர் பிரேம்குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் நாராயணன், நெய்வேலி மையத் தலைவர் செல்வராஜ், துணைத் தலைவர் ராஜகோபால், ரவீந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.



Read more »

Government Hospitals to give ID numbers to patients

CUDDALORE: 

                Government Hospitals in the State are being equipped with computer systems to provide unique eight-digit identification numbers to patients, said P. Nandagopalasamy, Director, Medical Services and Family Welfare.

        Addressing a press conference at the Cuddalore Government Headquarters  Hospital here on Tuesday, Mr. Nandagopalasamy said that the Health Management Information System (HMIS) would create a database on case history of the patients. Just by quoting the ID numbers, the patients could undergo the laboratory tests required. The trial of the system in Government Hospitals at Padmanabapuram, Kolachal, Tambaram, Sholingar and Sriperumbudur proved to be a success. Hence, it had now been introduced at Pudukottai, Kanyakumari, Theni, Dharmapuri and Krishnagiri districts.
 
Accreditation

              Mr. Nandagopalasamy further said that 12 Government Hospitals across the State, including the one at Cuddalore, were equipping themselves to get accreditation from the National Accreditation Board for Hospitals. Once approved, the hospitals would have medical services and facilities of international standards. A private consultancy firm, “Acme,” had been engaged to prepare the hospitals for getting the accreditation. For improving sanitation in Cuddalore Government Hospital, a Rs.1.5-crore drainage project would be implemented by the Tamil Nadu Water Supply and Drainage Board. A total of 13 sanitary workers would soon be appointed through the employment office. At least 100 more beds would be provided in the hospital.

                  Mr. Nandagopalasamy said that over the State 434 doctors would be appointed and 13 of them would be deployed in Cuddalore so as to take the total strength of doctors to 58. The efforts to get accreditation for the Cuddalore Government Hospital were set in motion about one-and-half years ago and it was likely that by September 2010 it would get the accreditation. In all, the district hospitals, super specialties would be introduced in a phased manner. Mr. Nandagopalasamy categorically said that there was no such thing as a “mysterious disease” but only a mutation of dengue or other viral fever.

             The blood smears of patients were being tested in the government laboratory at Hosur and in the Indian Council of Medical Research Laboratory at Madurai. It was not a death-causing disease and therefore there was no need for panic. He asserted that swine flu had been eradicated in the State and there was adequate stock of medicines to meet any eventuality. Joint Director of Health Services Jayaveerakumar and hospital superintendent Paranjothi were present.



Read more »

Fishes found dead along Cuddalore coastline




Sad sight: Dead fishes, swollen and deformed with rashes all over body, were washed ashore in Cuddalore on Tuesday. 
 

CUDDALORE: 

                  The six-km coastal stretch from Chithiraipettai to Rasapettai, near here, was found littered with dead fishes on Monday evening. Strong odour from the putrefying fishes prompted the Village Administrative Officer to alert the Fisheries Department and the Tamil Nadu Pollution Control Board.

                        The swollen and deformed fishes with rashes all over the body were found strewn along the coastline villages of Chithiraipettai, Sothikuppam, Nochikadu, Thammanampettai and Rasapettai. T. Devanathan (50), a resident of Nochikadu, told this correspondent that such a mass of fishes washed ashore was an unusual sight. The fishes had their fins and skins peeled off and blotch of blood frozen on their body.

                  He identified the fish species as ‘keluthi’ (cat fish), ‘vanjiram,’ ‘paarai,’ ‘keechan’ ‘kanankathai’ and sea cat, with ‘keluthi’ having suffered the most. General Secretary of the Consumer Federation Tamil Nadu M.Nizamudeen said that the dead fishes were seen on the shoreline between the common effluent treatment plant of the SIPCOT industrial estate and the jetty of a private chemical company. It was for the officials to conduct a proper enquiry and laboratory tests to take necessary remedial and punitive measures. District Environmental Engineer (TNPCB) D. Sekar, and Assistant Director of Fisheries R. Ilamparithi, who inspected the spot.



Read more »

“Bright future for core engineering graduates”

CUDDALORE: 

            With electricity generation capacity set to increase manifold in the country, there will be ample job opportunities for candidates who study core subjects such as civil, mechanical, and electrical and electronic engineering, said V. Sethuraman, director (power), NLC.

           He was speaking at a national-level technical symposium, Flame’s 10, held at Dr. Navalar Nedunchezhiyan College of Engineering, Tholudur, near here, recently. Mr. Sethuraman said that by 2020, there would be good many players on the power front and this would result in keen competition. Therefore, in another decade, the country would witness a situation in which power supply would exceed demand. Already, wind power had been tapped to the utmost level in Tamil Nadu. He called upon the students to imbibe self-confidence to achieve their goals. College Trust member K. Rajaprathapan said that sincerity and devotion to work at hand would bring success. Principal M. Kunchithapatham said that more than 100 participants from 20 colleges from across the State participated in the symposium.



Read more »

Free eye camp today

CUDDALORE: 

              A free eye camp will be organised by the Neyveli Lignite Corporation-run General Hospital, the Puducherry Aravind Eye Hospital and the Cuddalore District Blindness Control Society at Neyveli on Wednesday from 7 a.m. to 2 p.m.

                    A statement from the NLC said that the camp would be held at the NLC General Hospital. People will be screened for vision problems, cataract, squint eye and night blindness. Those identified for corrective surgery would be sent to the Puducherry Aravind Eye Hospital in the evening. Food, accommodation, transport, and medicines would be provided free of cost. Participants would also be informed of the impact of diabetes on eye sight, the statement added.

Read more »

அதிகாரிகளின் கண் துடைப்பு நாடகம்: பண்ருட்டி மார்க்கெட் மீண்டும் ஆக்கிரமிப்பு

பண்ருட்டி : 

             பண்ருட்டி காய்கறி மார்க்கெட்டில் நகராட்சியினர் நடத்திய கண் துடைப்பு நாடகத்தினால், மீண்டும் மார்க்கெட் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

                      பண்ருட்டி நகரில் காந்தி ரோடு, கடலூர் சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, காய்கறி மார்க்கெட், இந்திராகாந்தி சாலை ஆகிய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என போலீசார் கொடுத்த கோரிக்கையின் பேரில் கடந்த 25, 26ம் தேதிகளில் நகராட்சி கமிஷ்னர் உமாமகேஸ்வரி தலைமையில் சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மார்க்கெட் பகுதியில் இடிக்கப்பட்ட பொருட்களை அகற்றாமல் அங்கேயே குவித்து வைத்துள்ளனர். அதன் மீது அப்பகுதி வியாபாரிகள் குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.
                       அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுக்காததால், ஆக்கிரமிப்பு அகற்றபட்ட மார்க்கெட் பகுதியில் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை நீடித்து வருகிறது.  அதிகாரிகளுக்கு கணக்கு காண்பிப்பதற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இதனை உணர்ந்து நகராட்சி நிர்வாகம் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மீண்டும் சாலைகள் ஆக்கிரமிக்கப் படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Read more »

வாய்க்காலில் மேலும் இரு மாணவர்களின் உடல்கள் மீட்பு : சிதம்பரம் பல்கலையில் பதட்டம் நீடிப்பு

சிதம்பரம் : 

                  சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் ஏற்பட்ட ரகளையில் போலீசார் விரட்டியதால் ஆற்றில் குதித்து இறந்த மேலும் இரு வட மாநில மாணவர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. பதட்டம் தொடர்வதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை விடப் பட்டுள்ளது.

                       கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்த ஜார்க்கண்ட் மாநில மாணவர் கவுதம்குமார்(20), கடந்த 28ம் தேதி விபத்தில் சிக்கி காயமடைந்தார். அண்ணாமலை பல்கலை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு இறந்தார். ஆத்திரமடைந்த வெளி மாநில மாணவர்கள் 500 பேர், 1ம் தேதி நள்ளிரவில் துணைவேந்தர் மாளிகை முன் திரண்டனர். தேர் வுத்துறை அலுவலகம், மருத்துவமனை கட்டட கண்ணாடிகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கினர். ரகளையில் ஈடுபட்ட மாணவர் களை போலீசார் விரட்டி அடித்தனர்.
                       போலீசுக்கு பயந்து ஓடிய மாணவர்கள், முத்தையா நகர் செல்லும் வழியில் உள்ள பாலமான் வாய்க்காலில் குதித்தனர். ஒருவர் மீது ஒருவர் குதித்ததில் ஜார்க்கண்ட் மாநில மாணவர் சுமித்குமார்(22), தண் ணீரில் மூழ்கி இறந்தார். இதனால் பதட்டம் அதிகரித்தது.வடக்கு மண்டல ஐ.ஜி., துரைராஜ் தலைமையில் டி.ஐ.ஜி.,க்கள் விழுப்புரம் மாசானமுத்து, காஞ்சிபுரம் ராமசுப்ரமணியன், ஐந்து எஸ்.பி.,க்கள், 25 டி.எஸ்.பி.,க்கள் மற்றும் ஆயிரம் போலீசார் அண்ணாமலை பல்கலை மற்றும் சிதம்பரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.போலீசார் விரட்டியபோது, வாய்க்காலில் குதித்த மாணவர்களில் இருவரை காணவில்லை என, சக மாணவர்கள் கூறியதால், நேற்று முன்தினம் காலை முதல் தீயணைப்புப் படையினர் தண்ணீரில் இறங்கி தேடினர். ஆகாயத்தாமரை செடியில் சிக்கி இறந்த இரு மாணவர்களின் உடல்கள் நேற்று காலை கிடைத்தன. அவர்கள், பீகார் மாநிலம் பாட்னா சம்புரா பகுதியைச் சேர்ந்த மேட்லூக் ராப் மகன் முகமது சர்பரேஸ் ராப்(22) நலந்தரா மாவட்டம் லோக்ராட், டனக்கரா பகுதியைச் சேர்ந்த சுவிந்தரகுமார் மகன் ஆஷிஷ் ரஞ்சன்குமார் (20) என்பது தெரிந்தது.

                     இருவருமே இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவர்கள். ஆஷிஷ் ரஞ்சன்குமாரின் தந்தை சுவிந்திரகுமார், பாட்னா ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இறந்த மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு இருவரது உடல்களும் கொண்டு செல்லப்பட்டன. நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட மாணவர் சுமித்குமார் உடல், சிதம்பரம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ள நிலையில், மருத்துவமனை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
                             கடலூர் அரசு மருத்துவமனையில் விழுப்புரம் எஸ்.பி., பகலவன் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரச்னை ஏற்படாமல் இருக்க இன்ஜினியரிங் கல்லூரிக்கு மட்டும் காலவரையற்ற விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், நேற்று மருத்துவம் தவிர்த்து அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை விடப் பட்டது.

விசாரணை அதிகாரி நியமனம்: 

                    சம்பவம் குறித்து விசாரிக்க, கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜனை, விசாரணை அதிகாரியாக நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவர், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பார். அதனடிப்படையில், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.


Read more »

நவரை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா? சிதம்பரம் கடலோர கிராம விவசாயிகள் எதிர்பார்ப்பு!


கிள்ளை : 

                நவரை சாகுபடிக்கு போதிய தண்ணீரை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் கிழக்கு பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

                 சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் காவிரி கடைமடையை ஒட்டி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வவசாயம் செய்யப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட் டங்களான திருச்சி, தஞ்சை, நாகை மாவட் டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.மேட்டூரில் திறந்து விடப்படும் தண்ணீர் கல் லணை, அணைக்கரை, கீழணை வழியாக தெற்கு ராஜன், வடக்குராஜன் வாய்க்கால்கள், குமுக்கியாறு, மண்ணியாறு மற் றும் வடவாறு மூலம் வரும் தண்ணீரை சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.மேட்டூரில் திறக்கப்படும் 10 ஆயிரத்து 160 கன அடி தண்ணீரில்1016 கன அடி தண்ணீரை காவிரி டெல்டாவின் கடைமடைபகுதியான கடலூர் மாவட்டத்திற்கு வழங்க வேண்டும். ஆனால் 441 கன அடி தண்ணீர் மட்டும் வழங்கப்படுகிறது. இதில் 75 கனஅடி தண்ணீர் சென்னை கூட்டு குடிநீர்திட்டத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மீதமுள்ள 341 கன அடி தண்ணீர் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் 37 கன அடி தண்ணீர் வடவாற்றிலும், 25 கன அடி குமுக்கியாறு மற்றும் மண்ணியாற்றிலும், 43 கன அடி வடக்கு ராஜன் வாய்க் காலிலும்,41 கன அடி தெற்கு ராஜன் வாய்க்காலிலும் திறந்து விடப்படுகிறது.
                      இப்பகுதிக்கு வரும் தண்ணீர் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர். சிதம்பரம் அருகே கான்சாகிப் வாய்க்கால் மூலம் 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 8 ஆயிரத்து 344 ஏக்கரில் விவசாயம் செய் கின்றனர். இப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால் போர்வெல் அமைத்தோ, கிணற்று பாசனத்தின் மூலமும் விவசாயம் செய்ய முடியாத நிலையால், காவிரி தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளனர். இப்பகுதியில் விவசாயிகள், மேட்டுப்பகுதியில் "தை' மாதத்தில் அறுவடைக்கும், பள்ளத்தில் இருப்பவர்கள் "சித்திரை' (நவரை) பட்டத்திற்கும் (தண்ணீர் தட்டுப்பாடு ஏற் பட்ட காலம் முதல்) தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து விவசாயம் செய்து வருகின்றனர்.

                     இந்நிலையில் சிதம்பரம் அடுத்த கிள்ளை, நஞ்சைமகத்துவாழ்க்கை, பொன்னந்திட்டு, சிங்காரக்குப்பம், மானம்பாடி, தைக்கால், குச்சிப்பாளையம், வடக்குச்சாவடி உள் ளிட்ட கடற்கரை பகுதி விவசாயிகள் நவரை சாகுபடியை நம்பியுள்ளனர். தற்போது விதைகால் (நிலத்தில் விதை தூவுதல்) விட்டுள்ள நிலையில் தண்ணீர் வரத்து குறைந்து வருவதால், தொடர்ந்து தண்ணீர் வருமா என்ற அச்சத்தில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். இப்பகுதி விவசாயிகள் மழைகாலத்தில் தண்ணீர் தேங்கியும், கோடையில் போதுமான தண்ணீர் கிடைக்காமலும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். எனவே, மாவட்டத் திற்கு ஒதுக்கப்பட்ட பத்து சதவீத தண்ணீர் முழுமையாக கிடைக்கவும், தற் போது நவரை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், முத்தையா நகரில் இருந்து காரைக்காட்டுச்சாவடி வரை கான்சாகிப் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Read more »

மெட்ரிக் பள்ளிகள் கட்டுப்படுவதில்லை: மாவட்ட ஊராட்சி தலைவர் குற்றச்சாட்டு

கடலூர் : 

                 மெட்ரிக் பள்ளிகள் மாவட்ட நிர் வாகத்திற்கு கட்டுபடாமல் தனி ராஜ் ஜியம் நடத்தி வருவதாக மாவட்ட ஊராட்சி தலைவர் குற்றம் சாட்டினார். கடலூர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் திட்டக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் சிலம்புச்செல்வி தலைமை தாங்கினார். திட்டக்குழு அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரன் முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண் டனர்.


கூட்டத்தில் கவுன்சிலர் சண்முகம் பேசுகையில்,

                            10 வது ஐந்தாண்டு திட்டத்தில் கடலூரில் எந்த வளர்ச்சியும் இல்லை என்றார். திட்டக்குழு கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்காததால் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியவில்லை. புவனகிரி அரசு பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை என கவுன்சிலர் மதியழகன் கூறினார். இதற்கு பதிலளித்த மாவட்ட ஊராட்சித் தலைவி சிலம்புச்செல்வி, பெரும்பாலான பள்ளிகளில் குடி நீர் வசதி இல்லை. முதலில் அதை செய்து தர வேண்டும். மாவட்டத் தின் கட்டுபாடின்றி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டும் தனிராஜ்ஜியம் நடத்தி வருகின்றன. எதற்காக சி.இ.ஓ., டி.இ.ஓ., உள்ளனர். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் குடி நீர் வசதி, கட்டட வசதி, போது மான இட வசதி உள்ளதா என மெட்ரிக்குலேஷன் ஆய்வாளர் ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

சேத்தியாதோப்பு பேரூராட்சி கவுன்சிலர் கணேசன்: 

                     நகராட்சி பகுதிகளில் நகராட்சி பள்ளிகள் உள்ளன. பேரூராட்சி பகுதியில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மட்டுமே உள் ளன. இப்பள்ளிகளுக்கான வளர்ச்சி பணிகளை செய்வது ஊராட்சியா, பேரூராட்சியா என தெரியவில்லை. பேரூராட்சிகளில் உள்ள பள்ளிகளை பேரூராட்சி பள்ளிகள் என அறிவித்தால் பேரூராட்சி சார்பில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார்.


கவுன்சிலர் ராஜா: 

                   அகல ரயில் பாதை பணி முடிந்து தற்போது சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் சுரங்கப் பாதை திட்ட பணியை பயணிகள் ரயில் இயக்குவதற்குள் துவக்க வேண்டும். ரயில் இயக்கிய பிறகு துவங்கினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும் என்றார்.




Read more »

விவசாய தொழிலாளர்கள் சிதம்பரத்தில் உண்ணாவிரதம்

சிதம்பரம் : 

                 பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அரசு சிறப்பு நிதி ஒதுக்கி சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சிதம்பரத்தில் உண்ணாவிரத போராட் டம் நடத்தினர்.

                விபத்தில் பலியான வடக்குப்பாளையம் விவசாய தொழிலாளர் குடும் பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அரசு சிறப்பு நிதி ஒதுக்கி சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் சிதம்பரத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். வட்டத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். வட்ட துணைச் செயலாளர் குப்புசாமி, மாவட்டக்குழு அன்பழகன், வட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு செயலாளர் முத்தரசன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாவட்டத் தலைவர் நாகராஜன், பூபாலன், ராஜ், ராமலிங்கம், இளையபெருமாள் பங்கேற்றனர்.



Read more »

ராமசாமி செட்டியார் பள்ளியில் விளையாட்டு போட்டி

சிதம்பரம் : 

                     சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் ஒலிம்பிக் சுடரையும், தமிழாசிரியர் வள்ளுவன் ஒலிம்பிக் கொடியையும், ஆங்கில ஆசிரியர் முருகன் தேசியக் கொடியையும் ஏற்றினர். தொடர்ந்து நடந்த போட்டிகளில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் தமிழ்செல் வன், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் அப்துல் சாதிக், மணிகண்டன், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ராஜசேகர் சாம்பியன்ஷிப் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகசபை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். விழா ஏற்பாட்டினை உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயபால், வாசுதேவன், ரேணுகாஜாய் செய்திருந்தனர்.



Read more »

ஜவகர் பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி

நெய்வேலி : 

                        நெய்வேலியில் இயங்கி வரும் ஜவகர் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் ஜவகர் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டிகளை ஜவகர் பள்ளி முதல்வர் கணேஷ் துவக்கி வைத்தார். கால் பந்து போட்டிகளில் வட் டம்-18 பள்ளி அணி முதலிடத்தையும், வட்டம்-5 பள்ளி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. கோ-கோ போட்டி ஆண்கள் பிரிவில் வட்டம்-18 பள்ளி முதலிடத் தையும், வட்டம்-25 பள்ளி இரண்டாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் வட்டம் -25 பள்ளி முதலிடத்தையும், வட்டம்-9 பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜவகர் பள்ளி முதல்வர் கணேஷ் மற்றும் கிளைப் பள்ளி பொறுப்பாசிரியர்கள் வெங்கடலட்சுமி, சுமதி மற்றும் காந்தாகுளோ ஆகியோர் பரிசு வழங்கினர்.



Read more »

அண்ணாமலை பல்கலை., அணி அரியானா மாநிலம் புறப்பட்டது

விருத்தாசலம் : 

                     அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் நெட்பால் அணியினர் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள அரியானா மாநிலம் புறப்பட்டனர்.

                    அரியானா மாநிலம் குருஷேத்திரா பல்கலைகழகத்தில் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பெண்கள் நெட்பால் போட்டி வரும் 5 ம் தேதி முதல் 9 ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நெட்பால் அணி வீராங்கனைகள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அரியானாவிற்கு புறப்பட்டு சென்றனர். வீராங்கனைகளுடன் அணி மேனேஜர் செல்வம், பயிற்சியாளர் உமாநாத் உடன் சென்றனர். அணி வீரர்களை விளையாட்டு துறை தலைவர் பேராசிரியர் மங்கையர்கரசி வாழ்த்தினார்.



Read more »

வழக்குகளின் பட்டியல் தர வேண்டும்: ஊழல் எதிர்ப்பு இயக்கம் எதிர்பார்ப்பு

விருத்தாசலம் : 

                   போலீஸ் துறை கையாண்ட நிலம் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட புகார்களில் முடிக்கப்பட்ட, நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரப்பட்டியலை எஸ்.பி., தரவேண்டும் என ஊழல் எதிர்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது .ஊழல் எதிர்ப்பு இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் டாக்டர் வள்ளுவன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் பழனிவேல் முன்னிலை வகித் தார். செயலாளர் கலிவரதன் வரவேற்றார்.

                        கூட்டத்தில் போலீஸ் துறை நிலம் மற் றும் பணம் சம்பந்தப்பட்ட புகார்களை கையாளும் போது கடைபிடிக்க வேண் டிய நடைமுறைகளை அரசாணை எண் 1580ல் தெளிவுபடுத்தியுள்ளது. 2 4.11.2008 முதல் 14.02.2010 வரை மாவட் டத்தில் எத்தனை வழக்குகளில் 14 அம்ச கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்ற விபரத்தை பட்டியலிட்டு ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு எஸ்.பி., தரவேண்டும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் ஆவண வரைவு கட்டண விபரப் பட்டியல் வைக்க வேண்டும்.  பத்திர எழுத்தர்களின் பெயர் மற்றும் பதிவு எண்களை பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் அழியாத மையினால் எழுதப்பட்ட விளம்பர பலகை வைப்பதுடன், அவர்கள் பெரும் எழுத்து கூலிக்கு ரசீது கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் அப்பாஜி, நிர்வாகிகள் சேதுமாதவன், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Read more »

தேர்வில் 'பிட்': தனித்தேர்வர் பிடிபட்டார்

கடலூர் : 

                         கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் காப்பியடித்த தனித் தேர் வர் ஒருவர் பிடிபட்டார். பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. தேர்வையொட்டி பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. விருத்தாசலம் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித் தேர்வர் மாணவர் ஒருவர் "பிட்' அடித்த போது மையத்தின் துறை அலுவலரால் கையும் களவுமாக பிடிபட்டார். உடன் அவர் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப் பட்டார்.



Read more »

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம்

விருத்தாசலம் :

                     விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவை யொட்டி தெப்ப உற்சவம் நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 19 ம் தேதி தொடங்கி தொடர்ந்து பத்து நாட்களாக நடந்து வருகிறது. சாமிகள் வீதி உலா, தேரோட்டம், மகத் திருவிழாக்கள் முடிந்து நேற்று முன்தினம் முருகப்பெருமானுக்கு தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. காலை அபிஷேக ஆராதனையுடன் தொடங்கி இரவு அலங்காரம் செய்த புஷ்ப விமானத்தில் முருகப்பெருமான் வீதியுலா வந்து நள்ளிரவு புதுப்பேட்டை அம்மன் குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. நகராட்சி சார்பில் நடந்த தெப்ப திருவிழாவில் சேர்மன் முருகன், கமிஷனர் திருவண்ணாமலை, கவுன்சிலர்கள் ராமு, பாபு, கர்ணன், விஜயலட்சுமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Read more »

நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் கிடக்கும் ஜவான்பவன் புறவழிச்சாலை

கடலூர் : 

                     கம்மியம்பேட்டை புறவழிச்சாலையில் தார் சாலை போட நிதி ஒதுக்கீடு செய்யாததால் மேம் பாலம் கட்டப்பட்டும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடலூர் நகரத்தில் பெருகி வரும் நெரிசலை குறைக்க மாற்று பாதையாக அப்போதைய கலெக்டர் ககன்தீப் சிங் பேடி அண்ணா மேம்பாலம் அருகில் இருந்து கம்மியம் பேட்டை வரை கெடிலம் ஆற்றங்கரையில் புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
                   அதன்படி பொதுப்பணித்துறையினரால் 40 லட்சம் செலவில் புறவழிச்சாலை அமைக்கப்பட் டது.  கெடிலம் ஆற்றுப்படுகையாக இருப்பதால் வெள்ளக்காலங்களில் அரிப்பு ஏற்படும் என்பதால் நெடுஞ்சாலைத் துறையினரால் 5 கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு சுவர் எழுப்பப்பட்டது. பணிகளை முடித்து பொதுப்பணித்துறையில் ஒப்படைத்ததோடு சரி. 

                             கடந்த 3 ஆண்டுகளாக இந்த சாலையில் எந்த பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இந்த சாலைக்கென நிதி ஒதுக்கீடு செய்யாததால் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகள் கைவிட்டுவிட்டன. தற்போது எந்த துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே புரியவில்லை. இரு துறை அதிகாரிகளும் சேர்ந்து நகராட் சியை கைகாட்ட துவங்கியுள்ளனர். ஏற்கனவே பாதாள சாக் கடைத்திட்டத்தில் தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க போதுமான நிதி இல்லாமல் தள்ளாடும் நகராட்சி புறவழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.  இதனால் கடலூர் நகர மக்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மேம்பாலம், புறவழிச்சாலையை கடந்த 3 ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் உள்ளனர். கடலூர் நகர வாசிகள் மீது அக்கறை கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சாலைபோட நிதி பெற்றுத் தர முன்வருவார்களா?


Share
|




Read more »

உயிர்காக்கும் சிகிச்சை பற்றி டாக்டர், நர்சுகளுக்கு பயிற்சி

கடலூர் : 

                  டாக்டர்கள், நர்சுகளுக்கு அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சை குறித்த பயிற்சி கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று துவங்கியது. விபத்தினால் மயக்கமுற்றவர்களுக்கு செயற்கை சுவாசம், அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சை (சி.பி.ஆர்) குறித்து டாக்டர்கள், நர்சுகளுக்கு 2 நாள் பயிற்சி நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் துவங்கியது. இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரக்குமார் துவக்கி வைத்தார். கண்காணிப்பாளர் பரஞ்ஜோதி முன்னிலை வகித்தார். அப்பல்லோ மருத்துவமனை ஐ.சி.யு., பிரிவு தலைமை மருத்துவர் ராம கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பயிற்சியளித்தனர்.



Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கட்டட கலைஞர்களுக்கு சிறப்பு முகாம்

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கட்டட கலைஞர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

                 அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், புதுச்சேரி மற்றும் சிதம்பரம் நகர கட்டட பொறியாளர் கள் சங்கம் இணைந்து கட்டட கலைஞர்களுக்கு ஐந்து நாள் பயிற்சி முகாம் நடத்தியது. சிதம்பரம் நகராட்சி கமிஷனர் ஜான்சன் துவக்கி வைத்தார். பல்வேறு தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் பணிகள் குறித்து பயிற்சியளிக்கப் பட்டது.பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு கையேடு, சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொறியியல் புல முதல்வர் பழனியப்பன், கட்டமைப்பியல் துறை தலைவர் அந் தோணி, ஜெயசேகர், கட்டடவியல்துறை தலைவர் முருகப்பன், பேராசிரியர்கள் ரகுநாத், மோகன் குமார், அல்ராடெக் சிமென்ட்ஸ் நிறுவன திருஞானசம்மந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொறியா ளர் சங்க செயலாளர் சுந்தர் ராஜன் நன்றி கூறினார்.



Read more »

விளையாட்டு போட்டிகள்


கடலூர் : 

                         மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் விருத்தாசலத்தில் இன்று நடக்கிறது. மாவட்ட அளவிலான 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடக்கிறது. 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கையூந்து பந்து, கோ-கோ, கபடி, நீச்சல் போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டிகள் காலை 8 மணிக்கு துவங் குகிறது. தடகள போட்டியில் ஒரு பள்ளியில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.



Read more »

பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு

சிதம்பரம் :

                தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிதம்பரம் வட்ட சங்க தேர்தல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ராஜேந்திரன், குமார், இளஞ் செழி யன், கலைச்செல்வன் தேர்தல் அலுவலர்களாக இருந்து நடத்தினர். சிதம்பரம் வட்ட தலைவர் கதிரவன், துணை தலைவர் அன்புராஜ், செயலாளர் ராஜன், இணை செயலாளர் அருள், பொருளாளர் உதயகுமார், மகளிரணி அமைப்பாளர் ஷீலா, அமைப்பு செயலாளர் சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர்கள் மணவாளன், துரைப் பிள்ளை, தமிழ்ச்செல்வன், நாவலன், ஜெயராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காட்டுமன்னார் கோவில் தாலுகா வட்ட தலைவர் சக்திவேல், துணைத் தலைவர் கலைவாணன், செயலாளர் குமார், இணைச் செயலாளர் பாலன், பொருளாளர் வேணு, மகளிரணி அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வி, அமைப்பு செயலாளர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் நாராயணசாமி, ஜெயக்குமார், செல்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Share
|




Read more »

பண்ருட்டியில் அரசு கல்லூரி துவங்க வேண்டும்: பெற்றோர், மாணவர்கள் எதிர்பார்ப்பு

பண்ருட்டி : 

                பண்ருட்டியில் அரசு கல்லூரி துவங்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                    பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பேட்டை, வீரப்பெருமாநல்லூர், திருத்துறையூர், சேமக்கோட்டை, காடாம்புலியூர், நடுவீரப்பட்டு, பேர்பெரியான்குப்பம், கோழிப்பாக்கம் ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 2,500 மாணவ, மாணவிகள் பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி பெற்றதும், உயர் கல்வி தொடர கடலூர், விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்தில் உள்ள அரசு கல்லூரி அல்லது தனியார் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் அங்கு இட நெருக்கடி காரணமாக பண்ருட்டி பகுதி மாணவர்கள் அக்கல்லூரிகளில் சேரமுடியாத நிலை உள்ளது. இதுகுறித்து கடந்த 1997ல் அப்போதைய எம்.எல்.ஏ., ராமசாமி சட்டசபையில் பண்ருட் டிக்கு அரசு கல்லூரி துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பின் 2001ல் எம்.எல்.ஏ., வேல்முருகன் கோரிக்கை விடுத்தார். அதற்கு தமிழக அரசு தனியார் கல்லூரி ஏற்படுத்த விரும்பினால் அனுமதி அளிப்பதாக பதிலளித்தது.
                           இந்நிலையில் எம். எல்.ஏ., வேல்முருகன் கோரிக்கையின்பேரில் கடலூரில் நடந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி பண்ருட்டியில் பொறியியல் கல்லூரி துவங்க உத்திரவிட்டார். அதன்படி திருச்சி அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் பொறியியல் கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பொறியியல் கல்லூரியில் தமிழக அளவில் தேர்வில் போட்டியிட்டு கவுன்சிலிங் முறையில் தேர்வு செய்யும் மாணவர் கள் மட்டுமே பயன்பெறுகின்றனர்.ஆனால் பண்ருட்டி பகுதியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாமல் பள்ளி படிப்புடன் கல்வி முடிந்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தற்போது பண்ருட்டியில் இயங்கும் பொறியியல் கல் லூரியில் கலை மற்றும் அறிவியியல் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பண்ருட்டி மட்டுமன்றி மாவட்டத்தின் பிற பகுதி மாணவர்களும் பயன்பெற முடியும்.



Read more »

'கேந்தி' மலர் விலை வீழ்ச்சி: விவசாயிகள் ஏமாற்றம்


கடலூர் : 

               விலை வீழ்ச்சி காரணமாக மலர் (கேந்தி) சாகுபடி செய்த விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

                 கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதி தவிர ஏனைய பகுதிகளில் புஞ்சையில் மணிலா, காய்கறி பயிர் பிரதானமாக செய்து வந்தனர். கிராமப்பு புற வேலை வாய்ப்பு திட்டம் துவங்கிய பின்னர் விவசாயக் கூலியாட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்படியே வந்தாலும் அதிக கூலி, குறைந்த வேலை நேரத்தால் விவசாயிகளால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் கூலியாட்கள் தேவைப்படாத சவுக்கு, தென்னை, எண்ணெய் பனை போன்ற பயிர்களை பயிரிட துவங்கினர். தற்போது பண்ருட்டி பகுதியில் முட்டை கோஸ், நூக்கல் போன்ற மலைக்காய்கறிகள் பயிரிடுகின்றனர். அதேப்போல் ஓசூரில் பயிரிடப்படும் "ஹைபிரிட்' வகை (கேந்தி) பூக்கள் கடலூர் மாவட்ட விவசாயிகள் பயிர் செய்ய துவங்கியுள்ளனர்.
                     உரம், தண்ணீர் மற்றும் பராமரிப்பு செலவு குறைவாக இந்த வகை மலர்கள் நல்ல விலை போவதாக கருதி கடலூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் (கேந்தி) மலர்கள் சாகுபடி செய்யப்பட்டன. சாதாரணமாக கிலோ 25 ரூபாய் முதல் 40 வரை விலை போகும் இந்த மலர் தற்போது வெறும் 5 முதல் 10 ரூபாய்க்கு விலை போகிறது. செடிகளில் இருந்து பூக்களை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு வர குறைந்த பட்சம் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் செலவாகும். உற்பத்தி செலவை விட குறைந்த விலைக்கு விற்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

                       மாசி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறாது என்றாலும் மாசி மகத்தையொட்டி 2 வாரங்களில் கோவில் திருவிழாவிற்கு மலர் விற்பனை சூடு பிடிக்கும் என விவசாயிகள் காத்திருந்து திருவிழாவுக்கென பூக்களை அறுவடை செய்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மாசி மகத்திற்கு பூக்கள் விற்பனையாகாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். இதே போல ஓசூரில் இருந்து கேந்தி (மஞ்சள், சிவப்பு) உள்ளிட்ட அனைத்து வகை மலர்களும் மார்க்கெட்டில் குவிவதால் கடலூரில் விளைவிக்கப்படும் பூக்கள் வேறு பகுதிகளுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



Read more »

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க ஊனமுற்றவர்களுக்கு நேரடித் தேர்வு

கடலூர் : 

           குறைந்த வட்டியில் ஊனமுற்றவர்களுக்கு கடன் வழங்குவதற்காக மத்திய கூட்டுறவு வங்கிகளில் நேரடித் தேர்வுகள் நடைபெற உள்ளது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்தி குறிப்பு: 
                            
                     தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகம் திட்டத்தின் கீழ் ஊனமுற்றவர்களுக்கு கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க நேரடித் தேர்வுகள் நடைபெற உள்ளது.  வங்கி கடன் பெறுவதற்கு, மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராகவும், 40 சதவீதம் ஊனமுடையவராகவும் இருக்க வேண்டும். கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமானம் ஒரு லட்சமாகவும், நகரத்தில் உள்ளவர்களுக்கு இரண்டு லட்சமாகவும் இருக்க வேண்டும்.ரூபாய் 25 ஆயிரம் வரை கடன் கேட்பவர்கள் அரசில் பணிபுரியும் நபரிடமும், 25 முதல் 50 ஆயிரம் வரை அரசு பணியில் உள்ள இருவரிடமும் ஜாமீன் பெற வேண்டும். 50 ஆயிரத்திற்கு மேல் கடன் கேட்பவர்கள் இரு மடங்கு மதிப்புள்ள சொத்து (வீடு) பத்திரங்களை கடனுக்கான ஆதாரமாக ஈடு கட்ட வேண்டும். தகுதியுள்ள ஊனமுற்றவர்கள் ஊனமுற்ற அடையாள அட்டை நகல், வருமான சான்று, ரேஷன் கார்டு நகல் மற்றும் விலை புள்ளியுடன் கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் நேரடித் தேர்விற்கு வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு தலைமை வங்கிக்கு வரவேண்டும்.
விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய கூட்டுறவு வங்கி விருத்தாசலம் கிளை அலுவலகத்திற்கு 9ம் தேதி காலை 10 மணிக்கும், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிதம்பரம் கிளை அலுவலகத்திற்கு 12ம் தேதி காலை 10 மணிக்கு நேரடித் தேர்வுக்கு வரவேண்டும்.மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலகம் அல்லது கடலூர் மாவட்ட கூட்டுறவு அலுவுலகத்தை நேரில் அணுகவும்.



Read more »

கடலூர் மாவட்டத்தில் 437 பேருக்கு எய்ட்ஸ் தாக்குதல்: கலெக்டர் தகவல்

கடலூர் : 

                  கடலூர் மாவட்டத் தில் எச்.ஐ.வி., - எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தில்லுதுர பிரசார வாகன கலைக்குழு பயணம் நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து துவங்கியது.

                   நிகழ்ச்சிக்கு நலப்பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் தலைமை தாங்கினார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய மாவட்ட திட்ட மேலாளர் கலைமதி வரவேற்றார். வாகன பிரசார விழிப்புணர்வு கலைக் குழு பயணத்தை கலெக்டர் சீத்தாராமன் துவக்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது: 

                        மாவட்டத்தில் எச்.ஐ. வி., எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் அனைத்து பகுதிகளிலும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். கடந்தாண்டு மாவட் டத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் பரிசோதனை செய்த 48 ஆயிரத்து 967 பேரில் 437 பேருக்கு எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர் கள் ஆலோசனை மையங்களில் இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.



Read more »

இறந்த மாணவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


சிதம்பரம் : 

                     போலீஸ் விரட்டியதில் வாய்க்காலில் விழுந்து இறந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது உறவினர்களிடம் நேற்று மாலை ஒப்படைக்கப் பட்டது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் இன்ஜினியரிங் படித்த கவுதம்குமார் (20) 28ம் தேதி விபத்தில் இறந்தார். ஆத்திரமடைந்த சக மாணவர்கள் செய்த ரகளையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். தப்பியோடிய மாணவர்கள் பாலமான் வாய்க்காலில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி மூன்று மாணவர்கள் இறந்தனர்.

                   ஜார்கண்ட் மாநில மாணவர் சுமித்குமார் உடல் நேற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை கண்டு அவரது அண்ணன் சதிஷ்குமார் கதறி அழுதார். உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதாக கூறியதை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு தாசில்தார் காமராஜ் முன்னிலையில் சதீஷ்குமாரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக மாணவர் உடலுக்கு பல்கலைக் கழகம் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் சுமித்குமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப் பட்டது. டி.ஐ.ஜி., மாசானமுத்து தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
                        நேற்று காலை மீட்கப்பட்ட முகமது சர்பரேஸ் ராப் (22), ஆஷிஷ் ரஞ்சன் குமார் (20) ஆகியோரது உடல்கள் காலை 11 மணிக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மாலை 5.30 மணிக்கு டாக்டர்கள் ஆனந்தகுமார், சாராசெலின்பால் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். மாணவர் ஆஷிஷ் ரஞ்சன் குமாரின் உடலை பார்த்த அவரது தந்தை தன் மகன் உடல் இல்லை என மறுத்தார். சக மாணவர் ஆதித்யகுமார், ஆஷிஷ் ரஞ்சன்குமாரின் கையில் கட்டியிருந்த ராக்கி, பேண்ட் சட்டையை அடையாளம் காட்டிய பிறகு சுவிந்தர்குமார் ஒப்புக் கொண்டார்.

                       மாலை 6.40 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்த பின் இரவு7.50 மணிக்கு ஆஷிஷ் ரஞ்சன் குமாரின் உடலை அவரது தந்தையிடமும், முகமது சர்பரேஸ் ராப் உடலை அவரது உறவினரும், அண்ணாமலை பல்கலை கழக முதலாமாண்டு மாணவருமான முகமது ஒசாமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இரு மாணவர்களின் உடல்களை தனித்தனி ஆம்புலன்சில் ஏற்றி இரவு 8 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை நடந்த கடலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கு பகுதியில் எஸ்.பி., பகலவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடலூர் அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இரு மாணவர்களின் உடலுக்கும் அமைச்சர் பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



Read more »

பல்கலை., மாணவர்கள் மரணம்: நீதி விசாரணை கேட்கிறது மா.கம்யூ.,


சிதம்பரம் : 

                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் நான்கு பேர் இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.

 மா.கம்யூ., மாநில செயலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் கவுதம்குமார் 28ம் தேதி விபத்தில் படுகாயமடைந்தார். அவருக்கு பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளித்திருந்தால் மாணவரை காப்பாற்றி இருக்க முடியும். இச்சம்பவம் குறித்து முறையிட சென்ற மாணவர்களை துணைவேந்தர் சந்தித்து பேசியிருந்தால் மூன்று மாணவர்களின் உயிரிழப்பை தவிர்த்திருக்க முடியும். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் போலீசை ஏவி மாணவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் சில மாணவர்கள் அங்குள்ள ஓடையில் விழுந்துள்ளனர். மூன்று மாணவர்கள் இறந்துள்ள னர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் போலீஸ் துறையின் இச்செயலை மா. கம்யூ., தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே மாணவர்களின் உயிரிழப்பிற்கு காரணமான பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் போலீஸ் துறை மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் குறித்து பணியில் உள்ள ஐகோர்ட் நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.



Read more »

நான்கு வழக்குகள் பதிவு

சிதம்பரம் : 

                           சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது.சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர் கவுதம்குமார் விபத்தில் காயமடைந்து, இறந்தது குறித்து அவரது நண்பர் கவுரவ் குமார் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அண்ணாமலை பல்கலை நிர்வாக கட்டடம், மருத்துவமனை கட்டடம், விளக்குகளை சேதப்படுத்தியதாக அடையாளம் தெரிந்த, தெரியாத இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் மீது பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி கொடுத்த புகாரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஒன்றாம் தேதி பாலமான் ஓடையில் சுமித்குமார் உடல் கிடைத்தது குறித்தும், நேற்று காலை முகமது சர்பரேஸ் ராவ், ஆஷிஸ் ரஞ்சன்குமார் ஆகியோர் உடல் கிடைத்தது குறித்து தனித்தனியாக இரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior