கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நடக்கும் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் நாளை (17ம் தேதி) முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் எஸ்.பி., பகலவன் தலைமையில், 2 ஏ.டி. எஸ்.பி.,க்கள் 11 டி.எஸ். பி.,க்கள் 53 இன்ஸ்பெக்டர்கள், 101 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 2,700 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை, ஓய்வு பெற்ற ராணுவத்தினர், போலீசார் உட்பட 1,300 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 106 மொபைல் டீம் கண்காணிப்பில் ஈடுபடுவர். மேலும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு கம்பெனி (120 பேர்) படையினர், தமிழ்நாடு சிறப்புப் படையினர் 120 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர் .வரும் 19ம் தேதி நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 127 மொபைல் டீம் போலீசாரும் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஒவ்வொரு மொபைல் டீமிலும் ஆயுதம் தாங்கிய ஒரு சப் இன்ஸ்பெக்டர், இரண்டு போலீசார் இருப்பர்.மேலும் ஏ.டி.எஸ். பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான 60 அதிரடி படைகள் தயார் நிலையில் இருக்கும். ஒவ்வொரு அதிரடி படைக்கும் ஐந்து போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள் 120, தனியார் வாகனங்கள் 135 பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்படுகின்றன. முதல் கட்ட தேர்தலுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசார் நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இருந்து அந்தந்த பகுதிக்கு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.