உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

விபத்துகள் அதிகம் நடக்கும் ராமநத்தத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவங்க வேண்டும்

ராமநத்தம் :

              விபத்துகள் அதிகம் நடக்கும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநத்தத்தை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் சாலையோரத்தில் உள்ள கிராம மக்கள் சாலையை கடக்க முயலும் போது விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது. இவைத்தவிர அதிவேகமாக செல்லும் வாகனங்களாலும் விபத்துகள் அதிகரித்து வருகிறது.

                  இவ்வாறு ராமத்தம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துகளில் சிக்குபவர்களை அவசர சிகிச்சைக்காக வேப்பூர் அல்லது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் மூலமே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது. வெகு தொலைவில் இருந்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் விபத்தில் சிக்கியவர்களுக்கு ரத்த போக்கு அதிகரித்து உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை தவிர்த் திட விபத்துகள் அதிகம் நடைபெறும் ராமநத்தம் பகுதியை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை துவங்கினால், விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக காப்பாற்ற முடியும். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மங்களூரில் தீயணைப்பு நிலையம் தே.மு.தி.க., இளைஞரணி கோரிக்கை

சிறுபாக்கம் :

                   மங்களூரில் தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும் என தே.மு. தி.க., வலியுறுத்தியுள்ளது.

                 மங்களூர் ஒன்றிய தே.மு.தி.க., இளைஞரணி செயல்வீரர் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் திருமுருகன், அய்யப்பன் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். கூட்டத்தில் மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் கிராம தெருக்களில் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து தெளிக்க வேண்டும்.ஒன்றியத்தின் தலைமையிடமான மங்களூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். பஸ் நிறுத்தம் அருகிலுள்ள டாஸ்மாக் கடையினை பயணிகளின் நலன் கருதி இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. கிளை பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார். 

Read more »

காஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூல் முறைப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?

கடலூர் :

                   வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர். நகரப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் அத்தியாவசியமானதாகும். அரசே இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்கி வருவதால் கிராமப்பகுதியில் காஸ் இணைப்பு அதிகரித்து வருகிறது.கடந்த காலங்களில் விறகு மூலம் சமையல் செய்து வந்த கிராம மக்கள் காஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமைக்க துவங்கியுள்ளனர். இதனால் பொதுவாக சமையல் காசிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

                        இந்த தட்டுப்பாடை சமாளிக்க காஸ் ஒரு சிலிண்டர் வினியோகம் செய்த தேதியிலிருந்து 21 நாள் கழித்துதான் ஏஜென்சியில் மீண்டும் காஸ் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால் ஏஜென்சியில் பதிவு செய்தவுடன் சிலிண்டர் வழங்குவதில்லை.

                    இதனால் மக்கள் சிலிண்டர் வருகையை எதிர்நோக்கி காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையை லாவகமாக பயன்படுத்தி சிலிண்டர் வினியோகிப்பவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். அரசு நிர்ணய விலையான 321.40 ரூபாய்க்கு பதிலாக 337 ரூபாயும், கிராம பகுதிகளில் 347 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே வீடுகளுக்கு வினியோகிப்படும் காஸ் சிலிண்டருக்கு 5 ரூபாய் "டிப்ஸ்' கேட்பது வழக்கம். இதுவே தற்போது நிர்ணய தொகையை போன்று ஒவ்வொரு சிலிண்டருக்கும் கூடுதல் தொகையாக 15, 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையில் ஏஜென்சிகளுக்கு தொடர்பு உள்ளதா, அல்லது வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கா என்பது புரியவில்லை. இதனை வரைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மணல் ஏற்றி வரும் லாரிகளில் மீண்டும் அடாவடி பணம் வசூல்

பண்ருட்டி :

                       பண்ருட்டி அருகே மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் மீண்டும் அடாவடி நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் பெண்ணையாறு மணல் குவாரியில் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் கொரத்தி, வேலங்காடு, திருத்துறையூர், கயப்பாக்கம், கள்ளிப் பட்டு, கட்டமுத்துப்பாளையம், ஒறையூர், கண்டரக்கோட்டை, பூண்டி, கயப்பாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களில் லாரிகளை வழிமறித்து கோவில் திருப்பணி நன்கொடை என்ற பெயரில் தலா 20 ரூபாய் அடவாடியாக வசூலித்தனர்.  

இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியானது.

                          அதனைத் தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் கடந்த 18ம் தேதி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஒ., செல் வராஜ் தலைமையில் கூட் டம் நடந்தது. அதில் அண் ணாகிராமம் ஒன்றியத்தை சேர்ந்த 8 ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் லாரிகளில் எவரும் பணம் வசூலிக்கக் கூடாது.

               அவ்வாறு வசூலிப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என ஆர்.டி.ஓ., எச்சரித்தார். அதன்பிறகு ஒரு வாரம் லாரிகளில் எவரும் வசூலிக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மணல் லாரிகளில் மீண்டும் 12 கிராமங்களில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது.ஆர்.டி.ஓ., உத்தரவை மீறி நடைபெற்று வரும் இந்த அடாவடி வசூலை தடுத்து நிறுத்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

சூரிய கிரகணத்தால் பூஜையில் மாற்றம்

சிதம்பரம் :

                  மாட்டு பொங்கல் அன்று சூரிய கிரகணத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் கால பூஜைகள் முன்கூட்டியே முடிக் கப்படுகிறது. மாட்டு பொங்கல் தினமான 15ம் தேதி சூரிய கிரகணம் வருகிறது. காலை 11.25 மணி முதல் 3.15 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. தமிழகத்தில் தஞ்சை, நாகை, கும்பகோணம், ரமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும்.

                  சூரிய கிரகணத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் இயல்பான பூஜைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. வழக்கமாக காலை நடை திறக்கப் பட்டு காலை நிவேத்தியம், 8.30மணிக்கு காலசந்தி, 11 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 12 மணிக்கு உச்சிக் காலம், மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8 மணிக்கு இரண்டாம் காலமும், 10 மணிக்கு அர்த்தசாம பூஜை நடக்கிறது. சூரிய கிரகணத்தையொட்டி அன்று காலை 8 மணிக்குள் காலசந்தி, இரண் டாம் காலம், உச்சிக்காலம் ஆகிய பூஜைகள் முடிக்கப் படுகிறது. ஆனால் வழக்கமாக கோவில் நடை திறந்திருக்கும். மாலை வழக்கமான பூஜைகளில் மாற்றம் ஏதும் இருக்காது என தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

Read more »

அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் குழப்பத்தில் தொண்டர்கள்

நெல்லிக்குப்பம் :

                அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலில் "மெகா குழப் பம்' நிலவுவதாக தொண்டர்கள் புலம்புகின்றனர்.

                     தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் நடக்கிறது. தேர்தலில் அக்கட்சிக்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால், பேச்சுவார்த்தை மூலம் நிர்வாகிகளை தேர்வு செய்ய ஜெ., உத்தரவிட்டார்.

                          கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. பேச்சுவார்த்தை மூலம் நிர்வாகிகள் தேர்வு செய்ததாக கூறினர். இவர்கள் தேர்வு செய்ததற்கான அதிகாரபூர்வ சான்று கிடைக்கவில்லை. இவர்கள் ஓட்டு போட்டு தான் நகர, ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். கிளை நிர்வாகிகளுக்கு சான்றிதழ் கிடைக்காத நிலையில் நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கு போட்டியிடுபவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுவரை நகர, ஒன்றிய நிர்வாகிகள் பட்டியலும் வெளியிடவில்லை. சான்றிதழும் வழங்காத நிலையில், இவர்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டிய மாவட்ட நிர்வாகிகள் தேர்தலுக்கு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பேச்சுவார்த்தை மூலம் நடந்தால் கூட நகர, ஒன்றிய நிர்வாகிகள் யாரை ஆதரிக்கின்றனர் என்று கேட்கமுடியாது. கிளை, நகர, ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகே மாவட்ட தேர்தல் நடப்பது முறையாக இருக்கும்.

        இந்நிலையில் வரும் 17ம் தேதி முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு நகர ஒன்றியங்களில் பொதுக்கூட்டங்களை யார் நடத்துவது எனப் புரியாமல் கட்சியினர் குழப்பத் தில் உள்ளனர். ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகு அடுத்த கட்ட தேர்தலை நடத்துவதே ஜனநாயகமாக இருக்கும் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

Read more »

வேட்டி, சேலை பதுக்கல் ஆர்.டி.ஓ., விசாரணை

நெல்லிக்குப்பம் :

               நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் குறித்து ஆர்.டி.ஓ., நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

                 பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை, எளியோருக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள்கடந்த 1ம் தேதி முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்த பிளாஸ்டிக் பொருள் வியாபாரி கண்ணன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயிரக்கணக்கான வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் வைத் திருந்த இலவச வேட்டி, சேலைகளின் வரிசை எண்களை நேற்று மாலை ஆர்.டி.ஒ., செல்வராஜ் சோதனை செய்தனர். மேலும் இவை அனைத் தும் வி.ஏ.ஓ.,விடமிருந்து பெறப்பட்டதா? அல்லது பொதுமக்களிடம் பணத்திற்கு வாங்கப் பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற் கொண்டார்.பறிமுதல் செய்யப்பட்ட வேட்டி, சேலைகளில் பெரும்பாலானவை கடலூர் தாலுகாவைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.

Read more »

சி.கே., பள்ளியில் இன்று கண்காட்சி

கடலூர் :

                 கடலூர் சி.கே., மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் பெற்றோர்கள் பங்கேற்கும் கண்காட்சி இன்று நடக்கிறது.

இதுகுறித்து பள்ளி இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது:

           சி.கே., மெட்ரிக் பள் ளியில் இன்று மாணவ, மாணவிகளுக்கான கண்காட்சி நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் எங்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவுத்திறன் வெளிப்படும் வகையில் புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. வாழ்வியல் கல்வி குறித்து பாட்டு, நடனம் மற்றும் ஓவியம் குறித்த கலைகளில் திறமையை வெளிப்படுத்துதல். தொழில் முனைவோர் பிரிவில் மாணவர்கள் கண்டுபிடிப்பான "கூல் கேப்' எனப்படும் தொப்பியில் சிறிய அளவிலான மின் விசிறி வைத்து பேட்டரியில் இயக்கச் செய்தல். முட்டையில் யோகாசனம் செய்தல், யோகா பயிற்சியாளரின் ஆணி படுக்கையில் 50 வகையான யோகாசம் செய் தல் உள்ளிட்ட பல்வேறு வகையான திறமைகளை வெளிப்படும் விதமாக இருக்கும். மேலும் கண்காட்சியில் பெற் றோர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் கண்டுபிடிப்புகளும் வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

கடலூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் 'ஏசி' வரிசை விரைவில் துவக்கம்

கடலூர் :

                     கடலூரில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு "ஏசி' வரிசை விரைவில் துவங்கப்படவுள்ளது.

                     புதிய வாகனம் வாங்குபவர்கள் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து அதற்குரிய பதிவெண்ணை வாகனங்களில் எழுத வேண்டும். கடலூர் மாவட்டத்தில் "ஏபி'., வரிசையில் பதிவெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வரிசைக்கும் பத்தாயிரம் எண்கள் வழங்கப்படுகிறது.இந்த வரிசையிலேயே பிடித்த கவர்ச்சிகரமான 6666, 9999 போன்ற எண்கள் வாங்க வேண்டும் என்றால் அரசுக்கு 20 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இது போன்ற எண்களை அரசு துறை வாகனங்கள் கட்டணம் செலுத்தி வாங்குவது வழக்கம். சாதாரண எண்களில் விரும்பிய எண்களை பெற 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி பெற வேண்டும்.ஏஏ, ஏபி, ஏசி. ஏடி நான்கு வரிசையில் உள்ள எண்களை பெற 30 ஆயிரம் செலுத்த வேண்டும். "ஏஇ' வரிசையில் ஒரு எண்ணை தேர்வு செய்ய 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தற்போது "ஏபி' வரிசை முடிவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் "ஏசி' வரிசை துவங்கப்படவுள்ளன. அதனால் ஏற்கனவே "ஏபி' வரிசையில் கேட்காத கவர்ச்சிகரமான எண்கள் தற்போது பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

Read more »

மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பாராட்டு

விருத்தாசலம் :

               பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொண்ட கொளஞ்சியப்பர் கல் லூரி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப் பட்டது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கோகோ, கால்பந்து போட்டிகள் சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக் கழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட திருவள்ளுவர் பல்கலைக் கழக அணியில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவிகள் விளையாடினர்.கால்பந்து மற்றும் கோகோ போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் அருணா, இளவரசி, தில்லைக்கரசி, கலைமணி ஆகியோருக்கு கல் லூரி முதல்வர் சாந்தி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். உடற் கல்வி பேராசிரியர் கவாஸ்கர் உடனிருந்தார்.

Read more »

டெம்போ தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யூ., சங்கத்துடன் இணைப்பு

சிதம்பரம் :

                    சிதம்பரம் மினி டெம்போ ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் நலச் சங்க தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத் துடன் இணையும் விழா நடந்தது. டெம்போ சங்க செயலாளர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். சங்க சிறப்பு தலைவர் மூசா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ரவிக்குமார், செயலாளராக சுரேஷ்குமார், பொருளாளராக லட்சுமிகாந்தன் மற்றும் நிர்வாகிகளாக தங்கப்பன், ஆறுமுகம், அருள், முத்து, ராஜா, ரமேஷ், பாலகிருஷ்ணன், சேட்டு சூரியமூர்த்தி, கஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பாபு, ராமச்சந்திரன், தர்மலிங்கம், முத்து, பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

வேகமாக பரவி வரும் சிக்குன் குனியா : அரசு மருத்துவமனைகளில் கூட்டம்

கடலூர்:

                     கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக பருவநிலை திடீர், திடீரென மாறுவதால் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வந் தது. இந்நிலையில் கடந்த மாதம் ஒரு வாரம் பெய்த கன மழைக்கு பின்னர் சிக்குன் குனியா நோய் மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவதால் நடக்கக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது.

                    சிக்குன் குனியா நோய் தாக்குதலால் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் போடப்படும் ஊசி மற்றும் மருந்துகளுக்கே கட்டுப்படுகிறது. இதனால் கடந்த 15 நாட்களாக அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு நோயாளிகளின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.

                              கடலூர் அரசு மருத்துவமனையில் வழக்கமாக மூவாயிரம் புறநோயாளிகள் வருவார்கள். ஆனால் கடந்த 10 நாளாக தினசரி 4,500க்கும் மேற்பட்டோர் வருகின்றனர். இதேபோன்று சிதம்பரத்தில் 2,500 பேரும், விருத்தாசலத்தில் 1,500 பேரும், குறிஞ்சிப்பாடியில் 650 ருலிருந்து 1000 பேர் வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிக்குன் குனியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட மாவட்ட சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளில் அதிகளவு காய்ச்சல் மற்றும் வலிக்கான மருந்து மாத்திரைகள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்துள்ளது.மேலும் மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.இது குறித்து மாவட்ட அரசு பொது மருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார் கூறியதாவது:

                        வழக்கம் போல் வைரஸ், சளி, இருமல், டைபாய்டு காய்ச்சலுடன் சிக்குன் குனியா நோய் தாக்குதல் உள்ளது. மழை விட்டு தேங்கும் சுத்தமான தண்ணீரில் உருவாகும்"ஏஜிடி' வகை கொசுக்கள் மூலம் சிக்குன் குனியா நோய் பரவுகிறது. இதனால் மூட் டுகளில் சவ்வுகள் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படும். பாதங்களில் வீக்கம் காணப்படும். இந்த வகை கொசுக்கள் உருவாகாமல் தடுப்பதற்கு வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகை கொசுக்கள் பகலிலும் கடிக்கும் என்பதால் அலட்சியம் செய்யாமல் உடல் முழுவதும் கவர் செய்யும் விதமான உடைகளை அணிய வேண்டும். வீடுகளில் கொசுவலையை பயன்படுத்த வேண்டும். குளிப்பதற்கு மற்றும் துணி துவைப்பதற்காக உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தும் தண்ணீரீல் 30 எம்.எல்., அளவிற்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் இந்த வகை கொசு உருவாகாது.


( குடிப்பதற்கும் சமையல் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் உள்ள தொட்டிகளில் இதை கண்டிப்பாக கலக்கக்கூடாது. இதற்கென தனியாக மருந்து மாத்திரைகள் கிடையாது. காய்ச்சல் மற்றும் வலிக்கு டாக்டர் பரிந் துரை செய்யும் மாத்திரைகளை தொடர்ந்து உட்கொண்டால் போதுமானது. நோய் குணமாகி 10 அல்லது 15 நாட்களுக்கு உடன் வலி மற்றும் மூட்டுகளில் வலி இருக்கும். இதனால் அச்சம் அடையத் தேவையில்லை.அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வழக்கத்தை விட 10 சதவீதம் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தீவிர சிகிச்சையால் மாவட்டத்தில் பல இடங்களில் நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடலூர் அரசு மருத்துவமனைக்கு மூன்று மாதத்திற்கு தேவையான நாய்க்கடி ஊசி 10 லட்சம் மதிப்பிலும், 25 லட்சம் மதிப்பில் மற்ற நோய்களுக்கான மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது. மற்ற தாலுக்கா மருத்துவமனைகளுக்கு தேவையான அளவிற்கு மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளது என தெரிவித்தார்.

Read more »

காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது

நெல்லிக்குப்பம் :

                        பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காராமணிக்குப்பம் வாரச் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வார சந்தை நடக்கும். இங்கு காய்கறிகள், கருவாடு, ஆடு, மாடுகள் என விற்பனைக்கு வரும். சில ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வாரமும் 500 மாடுகளுக்கு மேல் விற்பனைக்கு வரும். நாளடைவில் மாடுகள் வரத்து குறைந்ததால் மாட்டு வியாபாரிகள் வருகையும் குறைந்தது. தற்போது சந்தைக்கு 50 மாடுகளுக்கு குறைவாகவே வருகிறது. சந்தையில் வழக்கமாக 200 காய்கறி கடைகள் இருக்கும். 5 ஆயிரம் மக்கள் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள்.பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் போகி பண்டிகைக்கு முதல் நாள் போகி சந்தை கூடும்.

                            இந்த ஆண்டு வரும் புதன்கிழமை போகி பண்டிகை வருகிறது. ஆனால் நேற்று வழக்கமான சந்தை கூடியதால் இந்த ஆண்டு போகி சந்தை தனியாக நடக்காது என அறிவித்தனர். இதனால் நேற்று நடந்த வார சந்தையில் 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி கடை வைத்திருந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடி காய்கறிகளை போட்டி போட்டு வாங்கினர்.பொங்கல் பானை மற்றும் மாட்டு பொங்கலுக்கு மாடுகளுக்கு தேவையான கயிறு, மணி போன்றவை விற்பனையும் அமோகமாக இருந்தது. சந்தை முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.

Read more »

மணல் அல்ல தடை: ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம்

பண்ருட்டி :

                       திரிமங்கலம் மணல் குவாரியில் மணல் எடுப்பதை தடைவிதிக்க வேண்டும் என அண்ணாகிராம ஒன்றியக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை�ற்றப்பட்டுள்ளது.அண்ணாகிராமம் ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் கவுரி தலைமையில் நேற்று நடந்தது. பி.டி.ஒ.க்கள் மனோகரன், தமிழரசி முன்னிலை வகித்தனர். துணை சேர்மன் சம்மந்தம், பொறியாளர் பாலகுமரன், வேளாண் அலுவலர் சந்திராசு, துணை வேளாண் அலுவலர் தாமேதரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அ.தி. மு.க., கவுன்சிலர் வீரமணி பேசுகையில், எனதிரிமங்கலம் மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகள் கள்ளிப் பட்டு, திருத்துறையூர், கண்டரக்கோட்டை உள்ளிட்ட 8 கிராமங்கள் வழியாக வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் அரசு டவுன்பஸ் செல்ல முடியாமல் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மணல் லாரிகள் கிராமங்களில் வருவதை தடை செய்ய வேண்டும் என்றார்.துணை சேர்மன் சம்பந்தம்(அ.தி.மு.க.,) பேசுகையில், பெண்ணையாற்றில் விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கும். ஆகவே ஒன் றிய பகுதியில் பெண்ணையாற்றில் மணல் எடுக்கக்கூடாது என ஏகமனதாக தீர் மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

                         இதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் தீர்மானம் நிறைவேறியது.அ.தி.மு.க., கவுன்சிலர் செல்வராசு பேசுகையில், வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. குடிநீர்மேல்நிலை தொட்டிகள் பராமரிக்க வேண்டும். கிராமங்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றார்.அ.தி.மு.க., கவுன்சிலர் சக்கரவர்த்தி பேசுகையில், எம்.எல்.ஏ., நிதியில் அமைக் கப்பட்ட சோளார் விளக்குகள் பராமரிப் பின்றி வீணாகிறது. தொகுப்பு வீடுகள் ஒதுக்கவில்லை என்றார். தி.மு.க., கவுன்சிலர் வாசுகி பேசுகையில் அலுவலக செலவு கணக்கு தீர்மானம் நிறைவேற்ற மட்டுமே நாங்கள் உள்ளோம். மற்றபடி நாங்கள் கூறும் எந்த பணியையும் அதிகாரிகள் செய்வதில்லை என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior