உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 15, 2010

கடலூர் வேலைவாய்ப்பு முகாம்: 1,200 பேருக்கு பணி நியமன ஆணை

கடலூர்:

                கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில், 1,200 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.

                 கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடலூர் கோல்டன் சிட்டி அரிமா சங்கம் ஆகியவை இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்து இருந்தன. முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்களாக லார்சன் அண்ட் டூப்ரோ, நோக்கியா, ஹுண்டாய் இந்தியா மோட்டார்ஸ், டி.வி.எஸ். லாஜிஸ்டிக்ஸ், ஏஇ அண்ட் இ சென்னை ஒர்க்ஸ் லிமிடெட், அவ்லான் டெக்னாலஜிஸ், ஜேகேஎம் ஆட்டோ டைனமேட்டிக் டெக்னாலஜிஸ், அப்டேட்டர் சர்வீசஸ் உள்ளிட்ட 16 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

                  கடலூர் புனித வளனார் கல்லூரியில் நடந்த இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு ஆண், பெண் இளைஞர்கள் 5,300 பேர் வந்து, பெயர்களைப் பதிவு செய்து இருந்தனர். பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், கேட்டரிங் படித்தவர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தவறியவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இவர்களில் 1,200 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் 800 பேருக்கு, பணி நியமனத்துகான பரிசீலனை நடந்து வருகிறது.

                       பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் தலைமை வகித்தார். புனித வளனார் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் வி.ஆக்னல் அடிகள் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கோ.அய்யப்பன் (கடலூர்), சபா.ராஜேந்திரன் (நெல்லிக்குப்பம்), கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, அரிமா சங்க கவர்னர் பி.குப்புசாமி, உதவி கவர்னர்கள் ஆர்.எம்.சுவேதாகுமார், பி.கல்யாண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

                       புனித வளனார் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.அருமைச் செல்வம் வரவேற்றார். அரிமா மாவட்டத் தலைவர் ஆர்.புருசோத்தமன் நன்றி கூறினார்.

Read more »

சிதம்பரத்தில் பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முகாமில் 256 பெண்களுக்கு சிகிச்சை

சிதம்பரம்:

                 பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம் சிதம்பரத்தில் நவம்பர் 9,10,11 தேதிகளில் நடைபெற்றது.

                   சிதம்பரம் ரோட்டரி சங்கம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் டாக்டர் என்.சபாநாயகம் நினைவு அறக்கட்டளை ஆகியவை இணைந்து தெற்குவீதி நகர்புற சுகாதார மையத்தில் இம்முகாமை நடத்தின. இதில் 256 பெண்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். முகாம் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார். விழாவில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை தொழிலதிபர் எஸ்.ஆர்.ராமநாதன் வழங்கினார்.

                      முகாமில் பரிசோதனை செய்த மகளிருக்கு மருத்துவ அறிக்கைகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் எம்.ரத்தினசபாபதி வழங்கிப் பேசினார். செயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார். விழாவில் டாக்டர் என்.சபாநாயகம் நினைவு அறக்கட்டளை தலைவர் எஸ்.நடனசபாபதி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.விஸ்வநாதன், ரோட்டரி முன்னாள் தலைவர் மகபூப்உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஆற்றில் குளிக்கும் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி விதிமுறையை பின்பற்றுமா பொதுப்பணித்துறை

கடலூர் : 

                 கடலூர் மாவட்டத்தில் ஆற்றுப்படுகையில் விதிமுறை மீறி பல அடி ஆழம் வரை மணல் அள்ளுவதால் சிறுவர்கள் பலியாக காரணமாக உள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மணல் குவாரி பள்ளத் தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலியான சம்பவம் மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

                   பள்ளி விடுமுறை காலங்களில் ஜாலியாக விளையாடி பொழுதை கழிக்க வந்த கிராம சிறுவர்களுக்கு அப்படியொரு கொடூரம் நேர்ந்தது. பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம், பெண்ணாடம், கூடலையாத்தூர், நகர், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக திருக் ண்டேஸ்வரம், கம்மாபுரம் பகுதிகளில் ஆற்றுப் படுகையில் மணல் அள்ளப் படுகிறது. இந்த மணல் பொக்லைன் மூலம் தரைமட்டத்தில் இருந்து 3 அடி ஆழம் வரைதான் எடுக்க வேண்டும். அவ்வாறு மணல் அள்ளிய பிறகு ஏற்படக்கூடிய பள்ளத்தை மீண்டும் சமன் செய்ய வேண்டும்.

               ஆனால் குவாரியில் மணல் அள் ளும்போது அரசு விதித்துள்ள இந்த விதிமுறையை துளிக்கூட பின்பற்றுவதில்லை. மணல் இருக்கும் இடத் தைப் பொறுத்து 10 அடி முதல் 15 அடி ஆழம் வரை மணல் அள்ளுகின்றனர். மழைக் காலத்தில் குவாரியை விட்டு வெளியேறும்போது பள் ளத்தை சமன் செய்யாமலேயே அப்படியே விட்டுவிட்டு வெளியேறி விடுகின்றனர். இதை பொதுப்பணித்துறையும் கண்காணிப்பதில்லை. இதனால் மழை காலத்தில்  தண்ணீர் நிரம்பி சாதாரண நீச்சல் குளம் போல் காட்சி தருகிறது. 

                 இதை பார்த்த பள்ளி சிறுவர் சிறுமியர் விடுமுறைக் காலங்களில் இயல் பாக குளிப்பதற்காக ஆற்றங்கரைக்கு வருகின்றனர். மணல் அள்ளிய பள்ளத்தை பற்றி சிறிதும் அறியாத சின்னஞ்சிறுசுகள் தாவிக்குதித்து  அதிக ஆழத்தில் சிக்கி பலியாகி விடுகின்றனர். ஆற்றுப்படுகையில் இவ்வளவு பள்ளம் இருக் கும் என சிறுவர்கள் சற்றும் எதிர்பாராமல்  இறங்குவதால் இந்த விபரீதம் ஏற்படுகிறது. இனியாவது உலகமே அறியாத பிஞ்சு உள்ளங்கள் பலியாவதை தடுக்க மணல் குவாரிகளில் அரசு விதிமுறையை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்.

Read more »

கடலூர் மாவட்ட ஆறுகளில் தடுப்பணை இல்லாததால் மழைநீர் வீணாகிறது : நிலத்தடி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை

கடலூர் : 

                   கடலூர் கெடிலம் ஆற்றில் தடுப்பணை இல்லாததால் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.

                    கடலூர் நகரின் இருபுறமும் கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆறுகள் ஓடுகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நிரம்பி திறந்து விட்டால் பெண் ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுக்கும். இந்நிலையில்  கடந்த வாரம் துவங்கிய வடகிழக்கு பருவமழை காரணமக விழுப்புரம் மாவட்டம்  கல்வராயன் மலை, திருக்கோவிலூர் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திருக்கோவிலூர் அணைக்கட்டு நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து வந்த தண்ணீரால் சொர்ணாவூர் அணைக்கட்டு நிரம்பி அங்கிருந்து வினாடிக்கு 1,600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கடலூர் அடுத்த மருதாடு பெண்ணையாற்றில் தடுப்பணை நிரம்பி வழிகிறது.

                        பெண்ணையாற்றில் இதற்கு பிறகு தடுப்பணை ஏதும் இல்லாததால் மருதாடு தடுப்பணையில் இருந்து வழிந்து வரும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதேப்போன்று கடலூரின் மற்றொரு நதியான கெடிலம் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மையனூர் மலையில் உருவாகி 70 கி.மீ., நீளம் கொண்ட சிறு ஆறாகும். மழைக்காலத்தில் மட்டும் பெருக்கெடுத்து வரும் தண்ணீரை தேக்கி வைக்க கடலூர் அடுத்த திருவந்திபுரம் கோவிலுக்கு பின்னால் அணைக் கட்டு உள்ளது. இங்கு தேக்கி வைக்கப்படும் மழை நீரைக் கொண்டு  கடந்த காலங்களில் 4,000  ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. தற்போது திருவந்திபுரம் முதல் கடலூர் வரை விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறியதால் பாசனம் இல்லாததால், திருவந்திபுரம் அணை பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால் மழைக் காலங்களில் கெடிலம் ஆற்றில் பெருக்கெடுத்து வரும் மழை நீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலக்கிறது.

                    தற்போது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக கெடிலம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் மழை நீர் திருவந்திபுரம் அணைக்கட்டு பழுதாகி உள்ளதால் வினாடிக்கு 4,048 கன அடி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. கடலூர் அண்ணா பாலத்திற்கு மேற்கு பகுதியில் எந்த இடத்திலும் தடுப்பணை இல்லாததால் கடல் நீர் ஆற்றில் புகுந்ததால் கடலூர் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப் பட்டுள்ளது.

புதுச்சேரி அரசிடம் பாடம் கற்குமா தமிழகம் : 

                     கடலூர் பெண்ணையாற்றில் கடலூர் அடுத்த மருதாட்டில் புதுச்சேரி அரசு தடுப்பணை  கட்டியது.  இதன் மூலம் தேக்கப்படும் தண்ணீரை புதுச்சேரி அரசு வாய்க்கால் வழியாக ஏரியில் நிரப்பி ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாசனம் பெறுகின்றனர்.

                      அதேப்போன்று தற்போது கடலூர் அடுத்த கும்தாமேடு பகுதி பெண்ணையாற்றில் புதிதாக தடுப்பணையை புதுச்சேரி அரசு கட்டி வருகிறது. இந்தப் பணி முடிவடைந்தால் கடலூர் செம்மண்டலம், மஞ்சக்குப்பம், சாவடி, கோண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் புதுச்சேரி அரசின் புண்ணியத்தில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். ஆனால் கெடிலம் ஆற்றின் குறுக்கே திருவந்திபுரத்தில் உள்ள அணையை முறையாக பராமரிக்காததால் மழைக் காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலில் கலக்கிறது. பெண்ணையாற்றில் 15 கி.மீ., தூரத்தில் இரண்டு தடுப்பணைகளை கட்டியுள்ள புதுச்சேரி அரசின் செயல்பாட்டை பார்த்தாவது தமிழக அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

Read more »

கடலூரில் இருந்து சென்னை ஆஸ்பத்திரிக்கு பிரேமானந்தா மாற்றம்


கடலூரில் இருந்து  சென்னை ஆஸ்பத்திரிக்கு
 
 பிரேமானந்தா மாற்றம்

கடலூர்:

                 பிரேமானந்தா சாமியார் இரட்டை ஆயுள் தண்டனை கைதியாக கடலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் உடல் நலம் குன்றியது. எனவே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற தனக்கு 3 மாதம் பரோலில் அனுமதி வேண்டும் என்று கோர்ட்டில் அனுமதி கேட்டார்.

                கோர்ட்டு உத்தரவுபடி அவர் 3 மாதம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் பரோல் முடிந்ததும் கடந்த 10-ந் தேதி கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதனிடையே கடந்த 11-ந் தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. நிலைமை மோசமானதால் உடனடியாக பிரேமானந்தா சாமியார் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

                   நேற்று  காலை அவரது நிலைமை மேலும் மோசமானது. இதை அடுத்து பிரேமானந்தா சாமியார் சென்னை ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

Read more »

Intensive tree planting drive on Children's Day


Green wave: Tree planting drive at Akshara Vidhyashram in Cuddalore on Sunday 
 
CUDDALORE: 

                Akshara Vidyaashram at Kondur in Cuddalore has been making concerted efforts to transform the institution into a “green campus.” As part of the Children's Day celebration the school today planted 100 saplings, thereby taking the number of plants on the campus to 1,100.

                If the global warming has to be checked it could be possible only through expansion of greenery and the sensitization on this aspect ought to begin at the school level, according to T.Ramani Sankar, managing trustee of Akshara Vidyaashram. While the school buildings occupy 10 acres of the 25-acre campus, the management has been left with ample space to grow very many species of trees. Mr Sankar told The Hindu that already 1,000 trees had been raised on the school premises.

              He was sure that the trees would not come in the way of future expansion of the school because the landscaping was done in such a way that the civil structures would not disturb the existing trees. He further said that the management was keen that the students should imbibe the knowledge that environment protection was the best bet for ensuring the safety of posterity. It was a common knowledge that setting up of more and more air-conditioning units would further aggravate the problem of global warming. Hence, conscious efforts were being made to set the classrooms in natural environment so as to let the breeze waft through without any hindrance.

                  Sunday's drive was carried out in coordination with G.Mullaivanan of the Tree Bank, Chennai, who has been spreading the greenery campaign to the educational institutions across the country. The students planted the saplings of varies species such as konnai, vembu, vaagai, teak, mandarai, sarakkollai, mango, peepul and so on. The exercise also enabled the students to know about the characteristics of the tree species. The occasion also acquired significance by the visit of Sagar (25), a college student from Maharashtra, who has embarked upon a countrywide cycle expedition to spread the message of environment protection. Till date he had passed through seven States, pedalling a total distance of 5,000 km.

Read more »

Rs.232 cr. to Cuddalore for flood control: Health Minister M.R.K. Panneerselvam.

CUDDALORE: 

                Chief Minister M. Karunanidhi has sanctioned a sum of Rs.232 crore for taking up permanent flood control measures in Cuddalore district, according to Health Minister M.R.K. Panneerselvam.

           The Minister was speaking at a function at Lalpet near here for distribution of over 5,600 free colour television sets on Sunday. Since Cuddalore was located in a highly vulnerable area, it was facing the problem of recurring floods. The funds earmarked for flood management would be utilised for strengthening the river banks and tank bunds, and deepening of the water sources. Of this, an amount of Rs.68.41 crore had been set aside for desilting the irrigation canals and reinforcing the bunds.

             The Minister further said that during rainy season the banks of the Kollidam used to breach at many places, inundating the housing colonies and farm lands, thereby causing huge losses. Therefore, to enable the river to carry the excess flow its banks would be strengthened at a cost of Rs.108 crore. He hoped that after the completion of all these works permanent flood control measures would be in place in the district.

              Mr. Panneerselvam said that in the past four years the district had benefited a great deal from various welfare schemes. For instance, 5,831 persons were given financial assistance to the tune of Rs.39.83 crore for child birth, 5,893 beneficiaries were given life-saving treatment worth Rs.17.65 crore and 26,119 families were brought under the purview of the Kalaignar Housing Scheme. The Minister noted that in the Annamalai Nagar Town Panchayat 115 works were completed at a cost of Rs.2.98 crore and in the Lalpet Town Panchayat seven works were executed at a cost of Rs.2.58 crore. In Lalpet, road works would be taken up soon at a cost of Rs.62.30 lakh.

               Free colour television sets were given away to 5,12,572 families in 682 panchayats and 12 town panchayats in the district, the Minister added. District Collector P. Seetharaman said that the flood control measures would include strengthening of the banks of the Penniyar from Kandrakottai to Melpattamapakkam and that of the Gedilam at Arasur.

Anaikkarai bridge

                Earlier, the Minister inspected the renovation works on the Anaikkarai bridge being carried out at a cost of Rs.6.21 crore. He told the media that the bridge would be thrown open to traffic on March 1, 2011. Since the 176-year-old bridge had become weakened at certain points the repair works had become necessary. Seventy sluices were being concretised and their shutters being repaired, the Minister added.

Read more »

Pawn shop owner missing near Panruti

CUDDALORE: 

           A pawn shop owner in Panruti is said to be missing, raising concern over the fate of gold jewellery pledged with him.

              Police sources said that a large number of people in and around Panruti had pledged their gold ornaments with Sivakumar, who was running the shop for the past six years. However, for quite some time he could not be traced, and, both his shop and house were found locked. More than 100 persons on Sunday laid siege to the office of the Deputy Superintendent of Police at Panruti demanding recovery of their jewellery from Sivakaumar. On the direction of the police, at least 75 persons lodged complaints against Sivakumar.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior