உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

Call to address bio-safety concern of genetically modified crops


CUDDALORE:

               Biotechnology cannot be a panacea for the problems confronting the agricultural sector. At the most it can be part of a solution, but, thus far it is being pushed in the wrong direction, said B.Vasantraj David, a leading pesticides scientist.

               Biotechnology is being touted as the successor to chemicals as a miracle technology, a quick fix, rather than an integral part of a shift to sustainable agriculture. Mr. David was delivering a special address at the national workshop on “Paradigm shifts in research on crop resistance to pests” organised by the Department of Entomology of the Faculty of Agriculture, Annamalai University, at Chidambaram on Thursday.

                  He said that the transgenic crops, however, had not found ready acceptance among the people at large. Biosafety concerns were the major reasons for non-adoption of transgenic crops in most countries. Mr. David, former national president of the Pesticides Association of India who has authored several books on pesticides, said that these concerns included transgene movement to other varieties and wild relatives leading to possible development of super weeds, erosion of genetic diversity and ecological disturbances. Similarly, there was widespread apprehension that transgene products could be toxic or allergenic to humans and animals. Also transgenic crops—pest resistant varieties—could have adverse impact on non-target organisms.

                Emergence of more virulent forms of pests and pathogens was also an important concern. He pointed out that already some insect populations, e.g., diamondback moth, had become resistant to the Bt toxin after prolonged exposure. It meant that Bt would no longer be effective in controlling a particular pest population. Therefore, Mr. David who is currently president of the Sun Agro Biosystems Ltd, Chennai, said the traits to be altered and strategies to be adopted should be carefully considered to minimise the biosafety risks. He emphatically said that the transgenic crops should not be viewed in isolation, but, should form part of the overall national agricultural policy. It was imperative to prioritise the crops and traits to be engineered and strategies to be adopted, Mr. David added. P. Narayanasamy, Dean, Faculty of Agriculture, laid stress on increased productivity and reduced pesticide usage. The brinjal variety “Annamalai” released by the faculty was extensively grown in the State. He called upon the farm scientists to address the issues arising out of the proposed commercial usage of Bt. brinjal. J.S.Bentur, Principal Scientist from the Directorate of Rice Research, Hyderabad, D. Sundara Raju of the National Bureau of Agriculturally Important Insects, Bangalore, K.S. Mohan of the Monsanto Research Centre, Bangalore, B. Singaravelu of the Sugarcane Breeding Institute, Coimbatore, and others participated.

Read more »

200 more vehicles for ‘108' ambulance fleet soon

CUDDALORE: 

                As the demand for the “108” ambulance service has gone up significantly, the number of vehicles will be increased from 385 to 445 soon. Chief Minister M. Karunanidhi has made a budgetary provision for adding 200 more ambulances to the fleet, said M.R.K. Panneerselvam, Health Minister.

                He was speaking at a function held at Pudhuchathiram near here for the inauguration of a sub-registrar's office, on Wednesday. Mr. Panneerselvam said that after the advent of the “108” ambulance service, awareness of its utility had increased. So far, it had rendered service to over 3.21 lakh people, besides helping in 81,000 child births. For even minor ailments or accidents, people were calling the number.

                   The Minister further said that there was overwhelming response to the Kalaignar Health Insurance Scheme for Life-Saving Treatments. Till now, 45,038 lives were saved by performing surgery to tune of Rs. 143.75 crore under the scheme. A total of 1.45 crore people had registered under the scheme and of them, 1.23 crore had got smart cards. Mr. Panneerselvam said that under the Young Children Vision Programme, a total of 3,624 children had undergone surgery and over 1.58 lakh children given corrective glasses. He pointed out that to enable easy registration, the sub-registrar's office was established in Nallur, Orathur and Pudhuchathiram within a short period. It would benefit residents of 20 villages. Mr. Panneerselvam distributed benefits worth Rs. 10 lakh to 50 beneficiaries and 1,440 free colour television sets.

Read more »

Prize catch for Cuddalore fishermen



One of the whale sharks caught in Cuddalore on Thursday. 
  CUDDALORE:

              Fishermen of the Cuddalore Old Town area got prize catch in the form of whale sharks on Thursday. Two such sharks were caught in their nets off the port area in the early hours of Thursday, while two others broke loose by snapping the nets. The trawlers had gone for deep-sea fishing, the fishermen said, adding that they caught the whale sharks after a couple of years. 400 to 500 kg Each shark weighed 400 to 500 kg and took 15 fishermen to be loaded on to a truck. The fishermen jettisoned other smaller catches to make room for the prize catch in the trawlers. Whale sharks are locally known as “paal sura.” They are sought for the medicinal properties of their fins, sources said. Officials of the Fisheries Department said that whale sharks were found off the Cuddalore coast, but rarely caught in nets.

Read more »

கைத்தறி கண்காட்சி

நெய்வேலி:

                      நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கைத்தறியை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட இக் கண்காட்சியில் தமிழக அரசின் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தாரின் விதவிதமான சேலை ரகங்கள், ஆயத்த ஆடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், கைக்குட்டைகள், வேஷ்டிகள், துண்டுகள் ஆகியன பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஆர்வமுடன் பார்வையிட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான கைத்தறி துணிகளை வாங்கிச் சென்றனர். முன்னதாக, கண்காட்சியை கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பி.குப்புராஜ் திறந்துவைத்தார். முதல்வர் அரங்கராசன் முன்னிலை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் ஜி. தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர். 

Read more »

13-ல் சிதம்பரம் கோயில் நாட்டியாஞ்சலி தொடக்கம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலில் நடத்தப்படும் நாட்டியாஞ்சலி விழா மகா சிவராத்திரியான இம்மாதம் 13-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது. தொடக்க நாளன்று பிரபல நாட்டியக் கலைஞர்களான பத்மா சுப்பிரமணியன், ஊர்மிளா சத்தியநாராயணன் உள்ளிட்டோர் நாட்டியமாடுவர். மகா சிவராத்திரயன்று மாலை 6 மணிக்கு தொடங்கி விடிய, விடிய அதிகாலை 5 மணி வரை நடைபெறும். மற்ற நான்கு நாள்களும் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வழக்கறிஞர் ஏ.கே. நடராஜன், செயலர் ஏ. சம்பந்தம், துணைச் செயலர் ஆர். நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர். ராமநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Read more »

எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்

கடலூர்:

                   கடலூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரசாரத்தை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். 2007-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 1.84 லட்சம் பேர் எச்.ஐ.வி. நோய் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்பதாகக் கண்டறியப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும் 783 நம்பிக்கை மையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 

                   எய்ட்ஸ், எளிதில் தொற்றக்கூடிய சூழலில் உள்ள மக்களிடையே, ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் பற்றியத் தகவலை வழங்கி, அந்த மையங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது. "தில்லுதுர' என்ற புதிர் பிரசாரத்தின் மூலம் மாவட்டங்கள் தோறும் தற்போதைய எய்ட்ஸ் பிரசாரம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.  கடலூர் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் 40 கிராமங்களில் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. பிரசாரத்தில் பயிற்சி பெற்ற கலைஞர்கள் பலர் பங்கேற்கிறார்கள். உரையாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் அவர்கள் பிரசாரம் மேற்கொள்வர். திருமணத்துக்கு முன் எச்.ஐ.வி. பரிசோதனை உள்ளிட்ட ஆலோசனைகள், தகவல்கள் இந்தப் பிரசாரத்தின் போது மக்களுக்கு வழங்கப்படும். எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்தப் பிரசாரத்தை மேற்கொள்கிறது. கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார். மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரகுமார், கடலூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பு அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

பல்கலை மாணவர்கள் இறந்த சம்பவம்: அரசு நியமித்த அதிகாரி இன்று விசாரணை


சிதம்பரம் : 

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் நான்கு பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த அதிகாரி இன்று (5ம் தேதி) விசாரணையை துவக்குகிறார்.

                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் இன்ஜினியரிங் படித்த ஜார்க்கண்ட் மாநில மாணவர் கவுதம்குமார் 28ம் தேதி விபத்தில் இறந்தார். அவருக்கு பல்கலை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என  வெளி மாநில மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்ததில் வாய்க்காலில் குதித்து சுமித்குமார்,  முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன் குமார் ஆகிய மூன்று மாணவர்கள் இறந்தனர். அ.தி.மு.க., மா.கம்யூ., கட்சிகள் நீதி விசாரணை கேட்டன. இந்நிலையில் சென்னை வடக்கு மண்டல புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., நாராயணசாமி சிதம்பரம் வந்தார். நேற்று முன்தினம் விசாரணையை துவக்கிய அவர், எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ், டி.எஸ்.பி., மூவேந்தன் மற்றும் சம்பவத்தின் போது இருந்ததாக கூறப்பட்ட போலீசாரிடம் விசாரித்தார். பின்னர் மாணவர்களால் சேதப்படுத்தப்பட்ட கட்டடங்கள், மருத்துவமனை இடங்களுக்கு சென்று  பார்வையிட்டார்.
                               மாணவர்கள் தண்ணீரில் குதித்த பாலமான் வாய்க்கால் பகுதியை பார்வையிட்ட அவர், சிதம்பரத்தில் தங்கியிருந்த சில வெளி மாநில மாணவர்களிடம்  நேற்று முன்தினம் இரவு வரை விசாரணை நடத்தினார். தமிழக அரசு நியமித்துள்ள விசாரணை அதிகாரி டி.ஆர்.ஓ., நடராஜன்  இன்று (5ம் தேதி) விசாரணை துவக்குகிறார்.  சிதம்பரம் பல்கலையில் படிக் கும் வெளி மாநில மாணவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு கேட்டதையடுத்து, பல்கலையில் வெளி மாநிலத்தவர் எத்தனை பேர் படிக்கின்றனர். அதில் எத்தனை பேர் விடுதியில் தங்கியுள்ளனர். வெளியில் தங்கியுள்ள மாணவர்கள் விவரம், அவர்கள் தங்கியுள்ள இடங்கள் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சேகரித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். வெளிமாநில மாணவர்கள் உள்ளூர் விலாசத்தில் குடியிருப்பு சான்று பெற்று சேர்ந்திருப்பதால் அவர்களின் முழு விவரங்களை சேகரிக்க முடியாமல் திணறினர்.

Read more »

முட்டம் உயர்மட்ட பாலம் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்

கடலூர் : 

                முட்டம்-மணல்மேடு கிராமங்களை இணைக்கும் உயர்மட்ட பாலத்திற்கு துணை முதல்வர் ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார். கடலூர் மாவட்டத்தில் நாளை (6ம் தேதி) நடக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு துணை முதல்வர் ஸ்டாலின் இன்று  (5ம் தேதி) மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு நெய்வேலி  என்.எல்.சி., விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.நாளை (6ம் தேதி) காலை 9.30 மணிக்கு குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூரில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

                       பின் காலை 11 மணிக்கு காட்டுமன்னார்கோவில் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடக்கும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே முட்டம்-மணல் மேடு கிராமங்களை இணைக்கும் உயர் மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டி, பிச்சாவரம்-கொடியம்பாளையம் சாலையில் உப்பனாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர் மட்ட பாலத்தை திறந்து வைக்கிறார். பின்னர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார். அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் முன்னிலை வகிக்கிறார்.  கலெக்டர் சீத்தாராமன் வரவேற்கிறார்.

Read more »

கடலூரில் கோர்ட் புறக்கணிப்

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் இரண்டு வக்கீல்கள் இறந்ததையொட்டி வக்கீல் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த வக்கீல்  ராஜாமான்சிங்(49), கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் வக்கீல் சத்தியராஜ்(25). இவர்கள் நேற்று இறந்ததையொட்டி, கடலூர் மாவட்ட வக்கீல் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வக்கீல் கோர்ட் நடவடிக்கையை புறக்கணித்தனர்.


Read more »

சாமியார்கள் விபரம் சேகரிப்பு

சிதம்பரம் : 

                 கடலூர் மாவட்டத்தில் சாமியார் பற்றி உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நித்யானந்தர் நடிகையுடன் இருப்பதுபோன்ற படம் வெளியானதையொட்டி தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள சாமியார்கள் பற்றிய விபரங்களை உளவுப் பிரிவு மூலமாக அரசு சேகரித்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்கள், ஆசிரமங்கள், தியான பீடங்கள் குறித்த விவரங்களை உளவுப்பிரிவு போலீசார் சேகரித்தனர்.

Read more »

ஊனமுற்றோர்களுக்கு கடன் வழங்க பயனாளிகள் தேர்வு

கடலூர் : 

                 கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் இணைந்து, ஊனமுற்றோருக்கு கடன் வழங்க பயனாளிகள் தேர்வு நிகழ்ச்சி கடலூரில் நடந்தது.

                 மண்டல இணைப் பதிவாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வங்கி மேலாளர் முத்துக்குமரன் வரவேற்றார். தனி அலுவலர் மிருணாளினி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர் சீனுவாசன் பங்கேற்று பயனாளிகளை தேர்வு செய்தார்.இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் தகுதியுடைவர்களாவர். மேலும் 40 சதவீதம் ஊனமுடையவர்களாக இருக்க வேண்டும். உதவிப் பொதுமேலாளர் மோகன் நன்றி கூறினார்.

Read more »

மாணவர்களை கல்வியில் மேம்படுத்திட வேண்டும்: தொடக்க கல்வி துறை இயக்குனர் தேவராஜன் பேச்சு

ராமநத்தம் : 

                   தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் குடும்பமாக இருந்து மாணவர்களை கல்வியில் மேம்படுத் திட சுயநலவாதிகளாக செயல்பட வேண்டும் என தொடக்க கல்வி துறை இயக்குனர் தேவராஜன் கலந்தாய்வு மேற்கொண்டார். ராமநத்தம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தின் கீழ் செயல் படும் 107 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உள்ள அடிப் படை வசதிகள், மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறைகளை தொடக்கக்கல்வி துறை இயக்குனர் தேவராஜன் தலைமையிலான குழுவினர் தலா 11 பள்ளிகளில் ஆய்வு செய்தனர்.  இதன் அறிக்கைகளை மாலையில் ராமநத்தத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் சமர்பித்தனர். கூட்டத்திற்கு அனைவருக்கும் கல்வி இயக்க சி.இ.ஓ., கதிர் வேல், கூடுதல் திட்ட அலுவலர் செல்வம், மாவட்ட அலுவலர் விஜயா முன்னிலை வகித்தனர். மங்களூர் வட்டார மேற்பார்வையாளர் முருகேசன் வரவேற்றார்.
         
கூட்டத்தில் தொடக்கக்கல்வி துறை இயக்குனர் தேவராஜன் பேசியதாவது: 

                மங்களூர் வட்டாரத்தில் மேற் கொண்ட ஆய்வில் 80 சதவீத பள்ளிகள் சுற்று சூழல், கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி பெற்றுள்ளது. அதேபோல் மாணவ, மாணவிகள் செயல் வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறையிலும் 75 சதவீதம் வாசிப்பு திறன் கொண்டுள்ளனர். தொடக்க கல்வி முடித்து உயர் நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி தமிழ், ஆங்கிலம் பாடங் களில் கூடுதலாக வகுப்புகள் நடத்திட வேண்டும். தற்போது பல மெட்ரிக்., பள்ளிகள் வந்து விட்டது. அவற்றிற்கு இணையாக அரசு பள்ளிகளிலும் தனிக்கவனம் செலுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதோடு, ஆசிரியர்களும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைத்திட வேண்டும்.
                        பள்ளிகளில் 70 மாணவர்கள் இருந்தால் 3 வது ஆசிரியரை நியமிக்க அரசு பரிசீலித்து வருகிறது.  தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் குடும்பமாக இருந்து மாணவர்களை கல்வியில் மேம்படுத் திட சுயநலவாதிகளாக செயல்பட வேண்டும்.  மத்திய அரசு அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு கடந்த ஆண்டு 850 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தற்போது பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுவதால் ஆயிரத்து 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  எனவே, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் வரும் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்திட வேண்டும். முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து நிதி பெற்று பள்ளிக்கு தேவையான கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம மக்களும் தங்களது கிராம பள்ளிகளை தங்களுக்குள் ஒன்றாக கருதி பராமரிப்பர் என பேசினார்.

Read more »

செம்மை நெல் சாகுபடி விவசாயிகளுக்கு மானியத்தில் கோனோவீடர் கருவி


பண்ருட்டி : 

                   விவசாயிகளுக்கு மானி யத்தில் ஜிப்சம், களையெடுக்கும் கருவிகள் விற் பனை செய்யப்பட்டு வருவதாக பண்ருட்டி வேளாண் உதவி இயக்குனர் ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் எக்டேருக்கு மூவாயிரம் ரூபாய் மானியத்தில் களையெடுக்கும் கோனோவீடர் கருவி ஒன்றும், வரிசை நடவிற்கு உதவிடும் மார்க்கர் கருவி ஒன்றும், உரம் மற்றும் உயிரியல் காரணிகளும் வழங்கப்படுகிறது.

                 நெல், சிறுதானியங்கள், உளுந்து, மணிலா, எள் பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில்  ஜிப்சம் மற்றும் ஜிங்சல்பேட் வழங்கப்படுகிறது. ஜிப்சம் மூட்டைக்கு 61 ரூபாய் மானியம் வழங் கப்படுகிறது. ஜிங்க் சல்பேட் எக்டேருக்கு 25 கிலோ வீதம், கிலோ 18 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பயிர் சாகுபடி செய்யும் நெல், கரும்பு, மணிலா பயிர் வகைகள், தென்னை, பருத்தி முதலான பயிர்களுக்கும் கந்தக சத்து தேவை அதிகம் உள் ளது. ஆனால் மண்ணில் தவையான கந்தகசத்து இல்லாததால் மகசூல் குறைகிறது.இதனை தவிர்த்திட  ஜிப்சம் எக்டேருக்கு பயிறுவகை பயிர்களுக்கு 110 கிலோவும், மணிலா மற்றும் நெல் பயிர்க்கு 400 கிலோவும் மானியத்தில் வழங்கப்படுகிறது.
                     ஜிப்சம் மற்றும் ஜிங்சல் பேட் பயிருக்கு அடியுரமாக இடுவதால் 20 சதவீத மகசூல் அதிகரிக்கும். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தெளிப்பு நீர் பாசனக்கருவிகள் அமைக்க எக்டேருக்கு 7,500 ரூபாய் மானியத்திலும், தார்பாய் மற்றும் விதை ஊன்றும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ஐசோபாம் திட்டத்தில் மணிலா டி.எம்.வி.2 ரகம் மற்றும் உளுந்து டி.9 ரகம் பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கிலோவிற்கு 20 ரூபாய் மானியத்தில் விவசாயிகள் வாங்கி பயன்பெற அருகில் உள்ள வேளாண் அலுவலர்களை அணுகி பயன் பெறலாம்.

Read more »

ஐ.ஐ.எம்., தேர்வில் மாணவர் சாதனை

கடலூர் : 

               ஐ.ஐ.எம்., நுழைவுத் தேர்வில் கடலூர் மாணவர் 99.7 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய மேலாண்மை கழகம் நடத்திய நுழைத் தேர்வு 2009 இன் முடிவுகள் வெளியாகியுள்ளது. 2.10 லட்சம் பேர் பங்கேற்ற இந்த தேர்வில் கடலூர் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் 99.7 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை இந்தியன் பாங்கிலும், தாய் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திலும் பணியாற்றுகின்றனர்.  ஏ.ஆர்.எல்.எம்., பள்ளியில் படித்த இந்த மாணவரை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நோயாளிகளுக்கு பிரட், பால்

பரங்கிப்பேட்டை : 

                 பரங்கிப்பேட்டை நகர தி.மு.க., சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட், பால் வழங்கப் பட்டது. நகர செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் செழியன், மாவட்ட பிரதிநிதி காண்டிபன் முன் னிலை வகித்தனர். நோயாளிகளுக்கு பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் பிரட், பால் வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் காஜா கமால், ஒன்றிய மகளிரணி பொற்செல்வி, அருள்வாசகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

பல்கலை., மாணவர்கள் இறந்த சம்பவம்: சிதம்பரத்தில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : 

                       அண்ணாமலைப் பல்கலை., மாணவர்கள் இறந்த சம்பவத்திற்கு நீதி விசாரணை கேட்டு சிதம்பரத்தில் மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.,யில் மாணவர்கள் இறந்த சம்பவத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும், மாணவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் கஞ்சித்தொட்டி அருகே மா.கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மூசா முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் நடராஜன், ரவீந்திரன், உதயகுமார், நகர செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், பிரசாத் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Read more »

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


கடலூர் : 
 
               காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடக்க கல்வித் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற அலுவலர்களை மீண்டும் பணியமர்த்தும் முடிவை திரும்ப பெற வேண்டும். நியமன நாள் முதல் மொத்த பணிக் காலம் கணக்கிட்டு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு அளித்திட திருத்தப்பட்ட அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிற்றரசன் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், பொருளாளர் அறிவழகன், ஆரோக்கியதாஸ், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

பறக்கும் படை அதிகாரியாக பள்ளிக்கு வந்த 'போலி' கைது


சேத்தியாதோப்பு : 

               கடலூர் மாவட்டம்  சேத்தியாதோப்பு பள்ளி  தேர்வு அறையில் பறக்கும் படை அதிகாரி எனக் கூறி சோதனையிட வந்த "டிப் டாப்' ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

                   கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு சந்திரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் டி.ஜி.எம்., மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 ஆங்கில முதல் தாள் தேர்வு நேற்று நடந்தது. அப்போது கல்வித் துறையால் அமைக்கப்பட்டுள்ள ஐந்து பேர் கொண்ட பறக்கும் படையினர்  டி.ஜி.எம்., பள்ளி யில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனிடையே 90 மீட்டர் தொலைவில் உள்ள சந்திரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் "டிப் டாப்' ஆசாமி ஒருவர், டி.ஜி.எம்., பள்ளியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நான் இங்கு சோதனையிட வந்துள்ளேன் எனக்கூறி, பள்ளியின் தேர்வு அறைகளை பார்வையிட்டு, தலைமை ஆசிரியரிடம், சோதனை செய்ததாக சான்று கடிதம் பெற்றுள்ளார்.
                    தொடர்ந்து அவர் டி.ஜி.எம்., பள்ளிக்கு வந்த போது  சந்தேகமடைந்த ஆசிரியர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் பறக்கும் படையில் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து, ஏற்கனவே சோதனையில் ஈடுபட்டிருந்த குழுவினர்  "டிப் டாப்'  ஆசாமியை பார்த்து, இவர் பறக்கும் படையைச் சேர்ந்தவர் இல்லை என தெளிவுபடுத்தினர். உடனே பள்ளித் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம்  "டிப் டாப்' ஆசாமியை ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அவர் பரதூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தபசு மகன் ராமன்(22) என தெரியவந்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம்  வழக்குப் பதிந்து  ராமனை கைது செய்து சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Read more »

காடாம்புலியூர், பெண்ணாடத்தில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூர் : 

              காடாம்புலியூர், பெண்ணாடத்தில் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  பண்ருட்டி அடுத்த தெற்கு மாம்பட்டைச் சேர்ந்தவர் அறுபடை(32). இவர் மீது காடாம்புலியூர் போலீசில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இவர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவற்றை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷ் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க பரிந்துரை செய்தார்.

                  கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின் பேரில் அறுபடை குண்டர் தடுப் புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.அதே போல் பெண்ணாடம் இறையூர் காலனியைச் சேர்ந்தவர் சசிக்குமார்(27). இவர் மீது பெண்ணாடம், வேப்பூர், திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் தொடர் திருட்டுக் களில் ஈடுபட்டு வந்ததால் சசிக்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Read more »

மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

பண்ருட்டி : 

                 பண்ருட்டி அருகே பள்ளிக்கு செல்ல கட்டாயப்படுத்தியதால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காந்திநகரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் வரதட்சணை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். இவரது மகன் அஜித்குமார்(14).  இவரது சித்தப்பா தனசேகர், தனவேல் மற்றும் பாட்டி  ஆகியோர் பராமரிப்பில்  அஜித்குமார் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒரு வாரமாக அஜித்குமார் பள்ளிக்கு செல்லவில்லை.

                 இதுகுறித்து பள்ளியின் சார்பில் அவரது பாதுகாவலருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனால்  கடந்த 3ம் தேதி அஜித்குமாரை அவரது சித்தப்பா தனவேல்  பள்ளிக்கு அழைத்து சென்று விட்டார்.  பின் மாலை வீடு திரும்பி அஜித் குமார்  இரவு 7 மணிக்கு  பிறகு  காணவில்லை.  இந்நிலையில் நேற்று முந்திரிதோப்பில் அஜித்குமார் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் சேதம்


சிறுபாக்கம் : 

                     வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமிக்கு, சொந்தமான சவுக்கு தோப்பில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.  இந்த திடீர் தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்பிலான சவுக்கு மரங்கள் எரிந்து சாம்பலானது.

Read more »

பள்ளி மாணவிகள் இருவர் கடத்தல்


பரங்கிப்பேட்டை : 

                 பரங்கிப்பேட்டையில் பள்ளி மாணவிகள் இருவரை ஆட்டோ டிரைவர்கள் கடத்தி சென்றுவிட்டதாக மாணவிகளின் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

               பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்த செல்வம் மகள் நிவேதா (13). பரங்கிப் பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகள் செவ்வந்தி (16). அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. இருவரையும் ஆட்டோ டிரைவர்களான பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த சரண்ராஜ், சின்னூரை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் காரில் கடத்தி சென்றுவிட்டதாக தெரிய வந்தது. இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

Read more »

கார் மோதி மூதாட்டி சாவு


புவனகிரி : 

              புவனகிரி அருகே  கார் மோதி மூதாட்டி இறந்தார்.புவனகிரி அருகே ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் இளையபெருமாள் மனைவி ராஜாமணி(60). கூலித்தொழிலாளி.  நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது சிதம்பரம் நோக்கி வந்த கார் மோதி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தார். இது குறித்து அவரது மகன் ஆறுமுகம் புகார் செய்ததையடுத்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


Read more »

சிறுமி பலாத்காரம்: முதியவருக்கு வலை


கடலூர் : 

               கடலூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் துறைமுகத்தை அடுத்த சிங்காரத்தோப்பைச் சேர்ந்தவர் லட்சுமணன்(50). அதே  பகுதியைச் சேர்ந்தவர் நல்லத் தம்பி இவரது மகள் காவேரி(9). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் துறைமுகத்தில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

            கடந்த 2ம் தேதி லட்சுமணன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த காவேரியை  மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த காவேரி  அழுதுகொண்டே வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட காவேரியை உறவினர் கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் சிங்காரத்தோப்பு பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவம் குறித்து மனித உரிமைகள் அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இது குறித்து புகாரின் பேரில்  துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து லட்சுமணனை தேடி வருகின்றனர். லட்சுமணன் மீது இதே போன்று வழக்கு ஒன்று கோர்ட் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more »

வாகனம் மோதி முதியவர் பலி

பரங்கிப்பேட்டை : 

                பரங்கிப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி  முதியவர் இறந்தார்.  பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து சின்னகுமட்டி கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Read more »

தீ விபத்தில் மூதாட்டி காயம்

கிள்ளை : 

                     சிதம்பரம் அருகே கிள்ளையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூதாட்டி காயம் அடைந்தார். சிதம்பரம் அருகே கிள்ளை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆராயி(78). இவர் நேற்று முன் தினம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது விளக்குப்பொறி பட்டு தீ பிடித்தது. இதனால் ஆராயிக்கு காலில் காயம் ஏற்பட்டது.  தீயை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அணைத்தனர். இதில் காயம் அடைந்த ஆராயி, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த திடீர் விபத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் காப்பியடித்த 9 பேர் வெளியேற்றம்

கடலூர் : 

                   கடலூர் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் காப்பியடித்த 3 மாணவிகள் உட்பட 9 பேர் தேர்வு மையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த முதல் தேதி துவங்கியது. முதல் தேதி மற்றும் 2ம் தேதி மொழித்தேர்வு நடந்தது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் 3 பேரும், தொழுதூரில்  3 மாணவிகள் ஒரு மாணவர் உள்பட 4 பேரும், சிறுபாக்கம் பள்ளி மாணவர்கள் 2 பேரும் காப்பி அடித்ததற்காக வெளியேற்றப்பட்டனர். மாவட்டத்தில் ஆங்கிலத் தேர்வில் மொத்தம் 9 பேர் தேர்வுதுறையின் விதிகளை மீறி காப்பியடித்த குற்றத்திற்காக மையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Read more »

உளுந்து பயிரை சேதப்படுத்திய 2 பேருக்கு வலை

சேத்தியாத்தோப்பு : 

            சேத்தியாத்தோப்பு அருகே உளுந்து பயிரை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சேத்தியாத்தோப்பை அடுத்த பெரியநற்குணத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது நிலத்தை அதே ஊரை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார். குத்தகை காலம் முடிந்த நிலையில் நிலத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ரமேஷ் கேட்டுள்ளார்.

                   நிலத்தில் தற்போது உளுந்து பயிரிட்டுள்ளதாகவும், அதை அறுவடை செய்த பின் தருவதாகவும் ராமலிங்கம் கூறினார். ஆத்திரமடைந்த ரமேஷ், அவரது சகோதரர் ராமசாமி இருவரும் சேர்ந்து உளுந்து பயிரிட்டிருந்த வயலில் ஏர் உழுது  சேதப்படுத்தியுள்ளனர். சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து ரமேஷ், ராமசாமியை தேடிவருகின்றனர்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior