கடலூர்:
உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள் நேற்று அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டன.கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள், 16 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகளுக்கு 17, 19 தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதில் நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர் என இரண்டு பதவிகள் மட்டுமே உள்ளதால் இந்த தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
ஆனால் ஒன்றியங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளதால், இப்பதவிகளுக்கான தேர்தலுக்கு ஓட்டுச் சீட்டு பயன்படுத்தப்படுகிறது. இதற்காக விருத்தாசலம் அரசு அச்சகத்தில் நான்கு வண்ணங்களில் 50 லட்சம் ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக வரும் 17ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் விருத்தாசலம் நகராட்சிகளுக்கும், மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி, கங்கைகொண்டான், மங்கலம்பேட்டை மற்றும் பெண்ணாடம் ஆகிய பேரூராட்சிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேப்போன்று வரும் 17ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ள அண்ணாகிராமம், பண்ருட்டி, கம்மாபுரம், விருத்தாசலம், நல்லூர் மற்றும் மங்களூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேவையான ஓட்டுச் சீட்டுகள் விருத்தாசலம் அரசு அச்சகத்தில் அச்சடித்து அங்குள்ள அரசு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று கிராம ஊராட்சி வார்டு, கிராம ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டு சீட்டுகள் ஒன்றியம் வாரியாக பிரித்து அந்தந்த ஒன்றியங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.