உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 01, 2010

குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, நகராட்சி கடலூர் நகர மக்களை சிரமப்படுத்துவதில் போட்டா போட்டி!

கடலூர் :  

                   கடலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணி முடிவடையாமல் ஜவ்வாக இழுத்துச் செல்லும் நிலையில் பணி முடிந்த சாலைகளை கூட சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
 
                கடலூர் நகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 33 வார்டுகளில் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி 40 கோடியே 40 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் துவங்கப் பட்டது. இதில் 148.7 கி.மீட்டர் தூரத்தில் 5,412 "மேன்ஹோல்', 15 ஆயிரத்து 50 வீட்டு இணைப்புகள், கம்மியம் பேட்டை, வரதராஜன் நகர், சீனுவாசன் நகர், ராஜாம்பாள் நகர், மணவெளி, மோகினி பாலம் ஆகிய இடங்களில் துணை சுத்திகரிப்பு நிலையங்களும், தேவனாம்பட்டினத்தில் பிரதான சுத்திகரிப்பு  நிலையங்கள் அமைக்க திட்டமிடப் பட் டது. 20 எம்.எம்., பைப்புகள் முதல் 700 எம்.எம்., பைப்புகள் வரை பயன்படுத்தப்படும் இத்திட்டத் தில் 3 அடி முதல் 18 முதல் 20 அடி ஆழம் வரை நகரின் பல்வேறு சாலைகளை தோண்டி பைப்புகள் புதைக்கப் பட்டு வருகிறது.
மூன்றாண்டு முழுமையாக முடிந்த நிலையில் இதுவரை 5,111 மேன் ஹோல்கள், 13 ஆயிரத்து 324  வீட்டு இணைப்புகளுடன் 126.78 கி.மீட்டர் தூரம் பைப்புகள் புதைத் துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவிக்கிறது.  இதில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான 12.07 கி.மீட்டர் தூரத்தில் 8.6 கி.மீட்டர் முடித்து விட்டதாகவும், அதில் 6.23 கி.மீட்டர் தூரத்தை முழுவதும் முடித்து நெடுஞ்சாலைத் துறை வசமும், 110 கி.மீட்டர் தூர நகராட்சி சாலையை முழுமையாக ஒப்படைத்து விட்டதாகவும் கூறுகிறது. ஆனால் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால் இதுவரை 70 கி.மீட்டர் தூர சாலையைத்தான் ஒப்படைத்துள்ளனர்.  நாங்கள் 40 கி.மீட்டர் தூர சாலைகளை போட்டு விட்டோம் என்கின்றனர்.  இதில் யார் சொல் வது உண்மை? யார் பொய் சொல் கின்றனர் என தெரியவில்லை. இதற்கிடையே பொது நல இயக்கங்கள் கருப்புக் கொடி போராட்டம் அறிவித்ததையடுத்து 24ம் தேதி ஆர்.டி.ஓ., முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் நெடுஞ்சாலைத் துறையினர் அரசு மருத்துவமனை தேவி கருமாரியம்மன் கோவிலிலிருந்து செம்மண்டலம் வரையிலான  சாலையை சீரமைக்கும் பணி 25ம் தேதி துவக்குவது எனவும், கலெக்டர் அலுவலக சாலை, சப் ஜெயில் ரோடு மற்றும் பஸ் நிலைய இணைப்பு சாலைகளில் "பேட்ச் ஒர்க்கை' குடிநீர் வடிகால் வாரியம் செய்வதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், மறுநாள் ஒப்புக்காக குடிநீர் வடிகால் வாரியம், கலெக்டர் அலுவலக சாலை மற்றும் பஸ் நிலைய இணைப்பு சாலையில் "பேட்ச் ஒர்க்' பணிகள் துவங்கியது.  ஆனால் மறுநாள் முதல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள் ளது. அதேப்போன்று நெல் லிக்குப்பம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை பணியை துவங்கவே இல்லை.  எது எப்படியிருந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட் டம் என கிளம்பும் பொது நல அமைப்புகளுக்கு நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் "பெப்பே' காட்டுவதையே வாடிக்கையாக கொண் டுள்ளனர்.

Read more »

தொடரும் மோட்டார் ஒயர் திருட்டு : தண்ணீரின்றி விவசாயிகள் கடும் அவதி

திட்டக்குடி : 

             திட்டக்குடி வெலிங் டன் நீர்த்தேக்கத்தில் தண் ணீரில்லாத நிலையில் மின்மோட்டார் காப்பர் ஒயர்களும் திருடப்படுவதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
 
             திட்டக்குடி வெலிங் டன் நீர்த்தேக்கம் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த 24 ஆயிரத்து 59 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வெலிங் டன் நீர்த் தேக்கத்தில் நீர்ப்பிடிப்பு நிறுத்தப் பட்டு, கரை சீரமைப்பு பணிகள் நடந்து வருகின் றன. எனவே விவசாய பணிகளுக்காக உடனே மின்இணைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெண்ணாடம் பகுதியிலுள்ள வயல்வெளிகளில் பாசனத்திற்காக பயன்பட்டு வரும் மின்மோட்டார் மற்றும் நீர்மூழ்கி மோட் டார்களில் மின்ஒயர்கள், காப்பர் ஒயர்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. இதனால் ஒயர் மாற்ற முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பர் ஒயர் திருடும் ஆசாமிகளின் கைவரிசை மின்வாரியத் திடமும் தொடர்ந்தது. டிரான்ஸ்பார்மரை கொளுத்தி காப்பர் ஒயரினை திருட முயற்சித்த சம்பவம் நடந்தது. தொடர் திருட்டு சம்பவங்களால் மின்மோட் டார் ஒயர் திருட்டினை தவிர்க்க விவசாயிகள் இரவு நேரங்களில் வயல் களில் உறங்கும் சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். தொடர்ச்சியாக மின் மோட்டார் ஒயர் திருட் டில் ஈடுபட்டு வரும் மர்ம ஆசாமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு சிதம்பரத்தில் வரவேற்பு

சிதம்பரம் : 

             அ.தி.மு.க., கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட அருண்மொழித்தேவனுக்கு சிதம்பரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
            சிதம்பரம் எம்.எல்.ஏ வும், கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளருமான அருண் மொழித்தேவன், சிதம்பரம் நகர செயலாளர் சுந்தர் ஆகியோர் மீண்டும் அதே பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டனர். 

                        அவர்களுக்கு சிதம்பரம் வண்டிகேட்டில் வரவேற்பு அளிக்கப்பட் டது. அங்குள்ள எம்.ஜி. ஆர்., மற்றும் அண்ணாதுரை சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் மாலை அணிவித்தார். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வடக்கு மெயின் ரோடு, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக கட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஊர்வலம் சென்று கட்சி அலுவலகத்தில் முடிந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், சிதம்பரம் சட்டசபை தொகுதி அமைப்பாளர் சுரேஷ்பாபு, செயலாளர் அருள், குமராட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன், ஊராட்சி தலைவர் கணேசன், நகர துணைச் செயலாளர் சண்முகம், நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி ராபர்ட், அவைத்தலைவர் ஏசுராஜ், இளைஞர் பாசறை நகர செயலாளர் பிரகாஷ், ஜெயவேல், சிவராம தீட்சிதர், சுப்ரமணியன், மருதவாணன் பங்கேற்றனர்.

Read more »

சைக்கிள், பைக் மீது பஸ் மோதல் இருவர் பலி; வாலிபர் படுகாயம்

கடலூர் : 

             கடலூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பஸ் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் இறந்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
                கடலூர் மஞ்சக் குப்பம் சுதர்சனம் தெருவைச் சேர்ந் தவர் மதிவாணன் (45). அ.தி.மு.க., வார்டு உறுப் பினர். இவரது தம்பி பாலு (35) கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் இரவு காவலர். வில்வநகர் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன் (65). கடலூர் அரசு மருத்துவமனை கம்பவுண்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். முதியவர் சீனுவாசன் நேற்று காலை 11.30 மணிக்கு புதுச் சேரி நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கங்கணாங்குப்பம் புதிய பாலம் அருகே சென்றபோது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி அதிவேகமாக சென்ற தனியார் பஸ் சீனுவாசன் மீது மோதியது. அதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி எதிரில் மதிவாணன், பாலு ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. விபத்தில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆபத் தான நிலையில் இருந்த பாலு புதுச் சேரி பிம்ஸ் மருத்துவமனையிலும், முதியவர் சீனுவாசன் கடலூர் அரசு மருத் துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். சீனுவாசன் மேல் சிகிச் சைக்காக புதுச் சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

சென்னைக்கு குடிநீர் அனுப்ப வீராணம் ஏரியில் தண்ணீர் தேக்கம்

காட்டுமன்னார்கோவில் : 

             சென்னைக்கு தொடர்ந்து குடிநீர் அனுப்புவதற்காக, வீராணம் ஏரியில் முழு  அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.
 
            கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி மூலம் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. ஏரியின் மொத்த உயரம் 47.5 அடி. கடந்த ஒரு வாரமாக, வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக 2,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வீராணம் ஏரியின் பாசன மதகுகள் அனைத்தையும் அடைத்து, படிப்படியாக தண்ணீர் அளவை அதிகாரிகள் அதிகப்படுத்தி வருகின்றனர்.  நேற்று மாலை நிலவரப்படி வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான  1,465 மில்லியன் க. அடி (47.5 அடியை) எட்டியுள்ளதால், தற்போது வீராணம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதனால், இந்த கோடையை சமாளிக்க முடியும் என பொதுப்பணி துறை அதிகாரிகள் கருதுகின்றனர். தற்போது சென்னை நகரின் குடிநீருக்காக நாளொன்றுக்கு 76 கன அடியும், வி.என்.எஸ். மதகு வழியாக பாசனத்திற்காக 200 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Read more »

வேப்பூர் அருகே மாயமான 5 மாணவ, மாணவிகள் மீட்பு

சிறுபாக்கம் : 

            வேப்பூர் அருகே மாயமான மாணவ, மாணவிகளை போலீசார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
 
            கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கவேல் மகன் சதீஷ் (15), கொண் டையன் மகள் தேவி (14), அய்யப்பன் மகள் ரம்யா (14), பழனி மகன் பிரபாகரன் (13), செல்வராஜ் மகள் மகேஸ்வரி (14). இவர்கள் கடந்த 28ம் தேதி பள்ளிக்கு சென்று, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், வேப்பூர் போலீசில் புகார் அளித்தனர். திட்டக்குடி டி.எஸ்.பி., இளங்கோ, இன்ஸ்பெக் டர் (பொறுப்பு) தமிழ்மாறன் தலைமையில்  தனிப் படை அமைத்து மாயமான மாணவ, மாணவிகளை தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான மூன்று மாணவிகள் மட்டும் அய்யனார்பாளையம் மஞ்சமாதா கோவில் அருகே இருப்பதாக நேற்று காலை 8 மணிக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று மாணவிகள் தேவி, ரம்யா, மகேஸ் வரி ஆகியோரை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், சக மாணவர்கள் சதீஷ், பிரபாகரன் ஆகியோருடன் மாணவிகள் மூவரும் திருப்பதி சென்றுள்ளனர். அங்கு பிரபாகரன் மொட்டை போட்டுக் கொண்டார். வேலூர் வழியாக திருவண்ணாமலை வந்ததும் பணம் தீர்ந்தது. அதனால் மகேஸ்வரி அணிந்திருந்த அரை சவரன் தோடை அடகு வைத்து, 2,000 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு இரவு கள்ளக்குறிச்சிக்கு வந்தனர். அங்கு மாணவர்கள் இருவரும் தாங்கள் பெங்களூரில் ஏற்கனவே வேலை செய்த கடைக்கு செல்வதாக கூறி, மாணவிகள் மூவரிடமும் 30 ரூபாய் பணத்தை கொடுத்து வேப்பூருக்கு பஸ் ஏற்றி விட்டனர். நள்ளிரவு 12 மணிக்கு வேப்பூர் வந்த மாணவிகள் மூவரும் அய் யனார்பாளையம் மஞ்சமாதா கோவிலில் தங்கியது தெரியவந்தது. மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி, பெற் றோரிடம் ஒப்படைத்தனர். இந் நிலையில் கள்ளக்குறிச்சி பகுதிகளில் தேடிக் கொண்டிருந்த சப்- இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர், நேற்று மதியம் 1.30 மணியளவில் சதீஷ், பிரபாகரன் ஆகிய இருவரையும் பிடித்து வேப்பூர் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

ஊராட்சி தலைவர்களுக்கு முன்னோடி உணர்வூட்டும் பயிற்சி

விருத்தாசலம் : 

          விருத்தாசலத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் நடைபெற உள்ள ஊராட்சி தலைவர்களுக்கு முன்னோடி உணர்வூட்டும் பயிற்சி நடந்தது. விருத்தாசலம் பாலாஜி மண்டபத்தில் 2010- 11 ம் ஆண்டு அண்ணா மறுமலர்சி திட்டம் நடைபெற உள்ள விருத்தாசலம் கோட்டத்தை சேர்ந்த ஊராட்சிகளின் தலைவர் கள், துணை தலைவர்கள், உதவியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னோடி உணர்வூட் டும் பயிற்சி நடந்தது. உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார். பி.டி.ஓ., க்கள் கலியபெருமாள், மனோகரன், தமிழரசி, புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திட்ட செயலாக்கம், பணிகளை தேர்வு செய்ய குழு அமைத்தல், மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கப் பட்டது. விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழக அரசின் அடையாள அட்டை

காட்டுமன்னார்கோவில் : 

            லால்பேட்டை பேரூராட்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழக அரசின் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. லால்பேட்டை பேரூராட்சியில் நடந்த அடை யாள அட்டை வழங்கும் விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கஸ்நபர் அலிகான் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர் சற்குணபாண்டியன் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை துவக்கி வைத் தார். பேரூராட்சி துணைத் தலைவர் ஹாஜா முகைதீன், ஒருங்கிணைப்பாளர் அஞ்சாயா மற்றும் பேரூ ராட்சி ஊழியர்கள் பங் கேற்றனர். 22 குழுக்களுக்கு அடையாள அட்டை வழங் கப்பட்டது.

Read more »

பெண்ணாடம் பஸ் நிலையத்தில் சுகாதார வளாகம் திறப்பு

திட்டக்குடி : 

                பெண்ணாடம் பஸ் நிலையத்தில் நவீன சுகாதார வளாக திறப்பு விழா நடந்தது. பெண்ணாடம் பேரூராட்சி கேளிக்கை வரி மானியத் திட்டம் 2008- 09ன் கீழ் பத்து லட்சமும், கலெக்டர் வளர்ச்சி நிதி ஒரு லட்சமும் சேர்த்து பஸ் நிலைய வளாகத் தில் நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு பேரூராட்சி துணைத் தலைவர் காதர், தி.மு.க., நகர செயலாளர் குமரவேல் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் முத்துவேல் வரவேற்றார். கவுன்சிலர்கள் அருள், விஜயகுமார், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க., நிர்வாகிகள் சுகுணா, சீனிவாசன் வாழ்த்தி பேசினர். பேரூராட்சி சேர்மன் அமுதலட்சுமி நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். விழாவில் கவுன்சிலர்கள் மாரிமுத்து, எழிலரசி, ஞானபிரகாசம், செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். கவுன்சிலர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Read more »

ஆங்கில ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஆய்வக பயிற்சி

திட்டக்குடி : 

                  விருத்தாசலம் கல்வி மாவட்ட அளவிலான ஆங்கிலம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஆங்கில மொழி ஆய்வக பயிற்சி இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதன் துவக்க விழாவிற்கு விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் மயில்வாகனன் வரவேற் றார். பள்ளி செயலாளர் சிவராமசேது பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி பார்வையிட்டு, ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும் 9, 10 வகுப்புகளுக்கு ஒவ்வொரு பள்ளிக் கும் ஆங்கில மொழி ஆய்வக பயன்பாட்டிற்காக குறுந்தகடு வழங்கப்பட்டது. இரு பிரிவுகளாக நடந்த இரண்டு நாள் பயிற்சியில் 80 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Read more »

பி.எஸ்.என்.எல்., நெட் பி.சி., புதிய திட்டம் துவக்கி வைப்பு

கடலூர் : 

            மின் வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் பி.எஸ். என்.எல்., நெட் பி.சி.,புதிய திட்டத் தினை  கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
 
                     கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ராஜேந்திரன் கடலூர் மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களின் செயல் பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது மின் வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் பி.எஸ்.என்.எல்., நெட் பி.சி., என்ற புதிய திட்டத்தினை துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாடு அலுவலர்களின் அலுவலகங்களோடு கணினி மூலமாக இணைக்கப்படுவதுடன், சங்க உறுப்பினர்களின் கடன் பிடித்த விபரங்கள் உறுப்பினர்களின் மொபைல் போன்களுக்கும் அனுப்பப்படுகின்றன.  இத்திட்டம் அனைத்து சங்கங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது என மண்டல இணைப்பதிவாளர் வெங்கடேசன் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மிருணாளினி, துணைப் பதிவாளர்கள் சுப்ரமணியம், மகபூப் ஷெரீப், சூர்யபிரகாஷ், இளஞ்செல்வி உடனிருந்தனர்.

Read more »

விளையாட்டு போட்டிகளில் வெற்றி : பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு

நெய்வேலி : 

               தேசிய மற்றும் மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நெய்வேலி பள்ளி மாணவர்களை கலெக்டர் பாராட்டினார்.
 
                நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களான அகில், சந்தீப் நீச்சல் போட்டியிலும்,  மாணவி ஸ்ரீஜா சேஷாத் திரி சதுரங்க போட்டியிலும் தேசிய அளவிலும், கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான மாரத்தான்  போட்டியில் மாணவி ஸ்ரீதேவி இரண்டாம் இடத்தில்  வெற்றி பெற்றனர். இவர்களை கடலூரில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் பாராட்டி  ரொக் கப்பரிசு வழங்கினார். இதே பள்ளி மாணவர்கள் சஜன் பிரகாஷ் நீச்சல் போட்டியிலும், ராஜகுரு மற்றும் எட்வின் கால்பந்து போட்டியிலும், அக்ஷை மற்றும் நிக்கி புனாட்சா டென்னிஸ் போட்டியிலும் வெற்றி பெற்றதற்காக நெய்வேலி பாரதி ஸ்டேடியத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி பரிசு வழங்கி பாராட்டினார். பரிசு பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் மற்றும் நிர்வாக குழுவினர் பாராட்டினர்.

Read more »

கிருஷ்ணசாமி பள்ளியில் பெற்றோர் தின விழா

கடலூர் : 

           கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் எல். கே.ஜி., யு.கே.ஜி., மாணவ, மாணவிகள் மற் றும் பெற்றோர் தின ஆண்டு விழா பள்ளி வளா கத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் நடராஜன் வரவேற்றர். துணை முதல்வர் லதா ஆண்டறிக்கை வாசித்தார். ஆண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அருள்மொழி தேவி பரிசு வழங்கி பேசினார். ஆலோசகர் சுந்தரம், செயலாளர் விஜயகுமார், கூடுதல் துணை முதல்வர் மனோன்மணி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான ஆடை அலங்கார போட்டிகள், கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Read more »

கூட்டுறவு வங்கியின் 37ம் ஆண்டு துவக்க விழா

கடலூர் : 

             மாவட்ட மத்திய கூட் டுறவு வங்கி குறிஞ்சிப் பாடி கிளையின்  37 ஆம் ஆண்டு துவக்க விழா நடந்தது. குறிஞ்சிப்பாடி சரக வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வங்கி மேலா ளர்  அன்பழகன் வரவேற் றார். விழாவில் தலைமை தாங்கிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மிருணாளினி சுயஉதவிக் குழுக்களுக்கு சேமிப்புடன் கூடிய கடன் மற்றும் சுழல் நிதிக்கடன் வழங்கி பேசினார். விழாவில் வாடிக்கையாளர்கள், வைப்புதாரர் கள், சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர்  பங் கேற்றனர். வங்கி  உதவியாளர் நாராயணன் நன்றி கூறினார்.

Read more »

பெற்றோர்களின் உழைப்பை உணர்ந்து படியுங்கள் : பேராசிரியர் கண்ணன் அறிவுரை

கிள்ளை : 

              பெற்றோர்களின் உழைப்பு உணர்ந்து படிக்க வேண்டும் என பேராசிரியர் கண்ணன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
 
           சிதம்பரம் அடுத்த கிள்ளையில் அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்காக  மதுரை ஏக்தா நம்பிக்கை மையம் சார்பில் நடந்த தன்னம் பிக்கை முகாமில் மதுரை சமூகவியல் கல்லூரி பேராசிரியர் கண்ணன் பேசியதாவது: போட்டித் தேர்வுக்கும், பொதுத் தேர்வுக்கும் வித்தியாசம் உணர்ந்து படிக்க வேண்டும். தற்போது நீங்கள் சந்திக்க இருப்பது பொதுத்தேர்வு. போட்டித் தேர்வில் குறிப்பிட்ட சிலர் தான் வெற்றி பெறுவார் கள். ஆனால் பொதுத் தேர் வில் பங்கேற்கும் அனைவரும் வெற்றி பெறலாம். உங்கள் எதிர்காலத்தை தீர் மானிப்பது எஸ்.எஸ். எல்.சி., மதிப்பெண் தான். அடுத்து நீங்கள் என்ன படிக்க திட்டமிட்டுள் ளீர்கள் என்பதை உணர்ந்து படிக்க வேண்டும். படித்த அனைவருக்கும் அரசுப் பணி கிடைப்பது கடினம். தற்போது தனியார் துறையில் வாய்ப்புத் தேடிச் செல்லும் நிலை உள்ளது. அதற்கு கூடுதல் மதிப் பெண் மட்டும்தான் வழிகாட்டும். நகரங்களில் படிக்கும் மாணவர்கள் மதிப்பெண் எடுப்பது சுலபமாக இருக்கும். ஆனால் கிராமத்தில் படிக்கும் நீங்கள் வாழ்க்கையை உணர வேண்டும், பெற்றோர்களின் உழைப்பை உணர்ந்து படிக்க வேண்டும். மனப்பாடம் செய்யாமல் பாடப் பொருளை உணர்ந்து படிக்க வேண்டும். தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். பன்நாட்டு நிறுவனங் கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது இத் திறன்களை எதிர்பார்க் கின்றனர். எண்ணங்கள் வளர்ந் தால் தான் நாடு வளரும் என்ற அப்துல் கலாமின்  சிந்தனையை மனதில் கொண்டு படித்தால் நம் நாட்டை வல்லரசாக்க முடியும். எதிர்காலத்தில் சமூகத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்யும் மனப் பான்மையை மனதில் நிலை நிறுத்திக் கொண்டு படிக்க வேண்டும். இவ்வாறு பேராசிரியர் கண்ணன் பேசினார்.

Read more »

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா

கடலூர் : 

              குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரி என்.எஸ். எஸ்., மாணவர் களின் சிறப்பு முகாம் நிறைவு விழா வரதராஜன் பேட்டை  பெருமாள் கோவிலில் நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். நிர்வாக குழுத் தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.  மேலாண்மை துறை  தலைவர் அறிவழகன் வரவேற்றார். முகாமில் பணியாற்றிய மாணவர்களுக்கு பி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் தமிழ்ச்செல்வம் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் எழிலன் நன்றி கூறினார்.

Read more »

அரிமா சங்கம் சார்பில் கண் சிகிச்சை முகாம்

விருத்தாசலம் :

                  விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
 
                 விருத்தாசலம் அரிமா சங்கம், ஜெயின் ஜூவல் லரி, சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய முகாமிற்கு அரிமா சங்க தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். பொன்னுராம் முன்னிலை வகி த்தார். தொழிலதிபர் சுவேதாகுமார் முகாமை துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., ராஜசேகரன் குத்துவிளக்கேற்றி வைத்தார். மாவட்ட பார்வை தடுப்பு மைய ஞானஸ் கந்தன், மண்டல தலைவர் ஜெய்சங்கர், வட்டார தலைவர் சுரேஷ்சந்த், பாலமுருகன், சரவணன், பாஸ்கரன், வெங்கடேசன், ராமமூர்த்தி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

திட்டக்குடியில் இலவச சித்த மருத்துவ முகாம்

திட்டக்குடி : 

           திட்டக்குடியில் நடந்த இலவச மகளிர் நலம் மற்றும் சித்த மருத்துவ முகாமில் ஆயிரத்து 500 பேர் சிகிச்சை பெற்றனர்.
 
                   திட்டக்குடி தொழிலதிபர் பால்ராஜ்- லலிதா ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடந்த  இலவச மகளிர் நலம் மற்றும் சித்த மருத்துவ முகாமிற்கு அரிமா மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். சிதம்பரம் சமுத்திரராஜன், காங்., மாவட்ட செயலாளர் பூமிநாதன், அரிமா தலைவர் சண்முகம், செயலாளர் சண்முகம், கோவில் நகர அரிமா மாவட்ட தலைவர் முத்தழகன், இளம் அரிமா தலைவர் பஷீத்நாராயணன் முன்னிலை வகித்தனர். ரவிச்சந்திரன் வரவேற்றார். முகாமை அருந்ததிசேகர் துவக்கி வைத்தார். டாக்டர் மகேஸ்வரி, டாக்டர் சிவக்குமார்  தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், திருவரசு, அரிமா வேணுகோபால், வெங்கடாசலபதி கலந்து கொண்டனர்.

Read more »

நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

ராமநத்தம் : 

                 தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான  தொழில் நுட்ப கருத்தரங்கம் நடந்தது.
 
                 கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். நிர்வாக இயக் குனர் ராஜபிரதாபன், கல் லூரி இயக்குனர் மேஜர் குஞ்சிதபாதம் முன்னிலை வகித்தனர். முதல்வர் பழனிசாமி வரவேற்றார். என்.எல்.சி., இயக்குனர்(பவர்) சேதுராமன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்தார். இதில் திருச்சி அங் காளம்மன், துறையூர் ஜெயராம், சென்னை வேல் டெக், கோவை பி.எஸ்.ஜீ., மன்னார்குடி ஏ.ஆர்.ஜே. பொறியியல் கல்லூரி உள்பட தமிழகத்தின் பல் வேறு பகுதிகளை சேர்ந்த  பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து விளக்கினர். இதில் திருச்சி அண்ணா பல்கலைக் கழக கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறை தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு கட்டுரை சமர்ப் பித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றுகளை வழங்கி கவுரவித்தார். கருத்தரங்கில் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி துறை தலைவர்கள் பாலாஜி, மணிகண்டன், சுரேஷ், தனமதி, கண்ணன் உள்பட பல் வேறு கல்லூரிகளை சேர்ந்த துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். செல் வராஜ் நன்றி கூறினார்.

Read more »

அரிமா சங்கம் சார்பில் இலவச பாட புத்தகம்

கடலூர் : 

             பள்ளிக்கு செல்லும் போது உப்பனாற்றில் படகு கவிழ்ந்ததில் பாதிக் கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம் வழங்கப்பட்டது.
 
            கடலூர் அடுத்த நொச் சிக்காடு மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் கடந்த 27ம் தேதி பூண்டியாங்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளிக்கு செல்ல சங்கொலிக்குப்பம் உப்பனாற்றில் படகில் சென்றனர். அப்போது படகு கவிழ்ந்தது. அதில் 19 மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். அவர் களது புத்தகங்கள், நோட் டுகள் சேதமடைந்தன. இந்த மாணவர்களுக்கு கடலூர் காஸ்மோபாலிடன் அரிமா சங்க  தலைவர்  நித்தியானந்தம் தலைமையில் இலவசமாக புத்தகம், நோட்டு, பேனா வழங்கப்பட்டது. நிகழ்ச் சிக்கு சங்க தலைவர் பாரஸ்மல் ஜெயின்,  துணைத் தலைவர் துளசிதாஸ் முன்னிலை  வகித்தனர். தலைமை ஆசிரியர்  ஸ்ரீதரன் வவேற்றார். அரிமா சங்கம் சார்பில் வழங்கப்பட்ட  இலவச பாட  புத்தகங்களை  முதன்மை கல்வி  அலுவலர் அமுதவள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  வழங்கினார். ஊராட்சி தலைவர்  ரவிசங்கர் நன்றி கூறினார்.

Read more »

கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையம் சார்பில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை முகாம்

கிள்ளை : 

               சிதம்பரம் அடுத்த கிள்ளையில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏக்தா நம்பிக்கை மையத்தின் சார்பில் தன்னம்பிக்கை முகாம் நடந்தது.
 
             சிதம்பரம் அருகே சுனாமியால் பாதித்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மதுரை ஏக்தா நம்பிக்கை மையம் பல்வேறு சேவைகள் செய்து வருகிறது. மேலும், வறுமை கோட் டிற் கும்  கீழுள்ள மாணவிகளுக்கு இலவச விடுதி, கம்ப்யூட்டர் பயிற்சி, மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பொதுத்தேர்வை எதிர் கொள்ளும் விதம் குறித்த தன்னம் பிக்கை முகாம் கிள்ளை அரசு மேல் நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.  பள்ளி தலைமை ஆசிரியர் கலைமணி வரவேற்றார். முகாம் நோக்கம் குறித்து பரங்கிப்பேட்டை ஒன்றிய கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்து சுகுமார் பேசினார். மாணவர்கள் தேர்வை எதிர்கொள் ளும் விதம் குறித்து மதுரை சமூகவியல் கல்லூரி பேராசிரியர் கண்ணன் ஆலோசனை வழங்கினார். கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கபிலர் தமிழ்ப்பாடம், புதுச்சேரி வீராம்பட் டினம் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தேவராஜ், வீரப்பன் முறையே  சமூக அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கிலப்பாடம், பண்டசோழ நல்லூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பசுபதிராஜன் அறிவியல் பாடம் குறித்து ஆலோசனை வழங்கினர். காலை 10 மணியிலிருந்து மாலை 5மணி வரை நடந்த நிகழ்ச்சியில் கிள்ளை, சி.முட்லூர் மற்றும் கொடிப்பள்ளம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

Read more »

துவக்க விழா

கடலூர் : 

       கடலூர் பெரியார் கல்லூரியில்  குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர்  ரங்கநாதன் தலைமை தாங்கினார். இரண்டாம் ஆண்டு மாணவர்  உதயேந்திரன் வரவேற்றார். கவிஞர் பால்கி, பயிற்சி இயக்குனர்  தாஸ் பேசி னர்.  பேராசிரியர்கள் கண்ணன், மனோகரன், அபிராமி, சுந்தரி, சத்தியபாமா, சாருபாலா, குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர்  திலக்குமார்   பங்கேற்றனர்.

Read more »

திட்டக்குடி சுகாசன பெருமாள் தேரில் வீதியுலா

திட்டக்குடி : 

               திட்டக்குடி சுகாசன பெருமாள் தைப்பூச பிரம் மோற்சவத்தை முன்னிட்டு தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 
                    திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில் தைப்பூச பிரம்மோற்சவ விழா 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு திருமஞ்சனம், யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. ஒன்பதாம் நாள் உற்சவமான திருத்தேர் விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. உற்சவர் பெருமாள், தாயார் சுவாமிகள் தேரடியில் அலங்கரித்த திருத்தேரில் அமர்த்தி கும் பகோணம் சக்கரவர்த்தி, திட்டக்குடி ஸ்ரீதர் பட்டாட் சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். காலை 10.30 மணிக்கு சமேத கோலத்தில் சுகாசன பெருமாள் வீற்றிருந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக இழுத்து வந்தனர். விழாவில் தொழிலதிபர்கள் ராஜன், வேணுகோபால், பன்னீர்செல்வம், பேரூராட்சி தலைவர் மன்னன்,  தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு, காங்., நகர தலைவர் கனகசபை, அரிமா சிவக்குமார், கிருஷ்ணன், தங்கராசு, மாரிமுத்து, ராஜகுரு உள் ளிட்ட ஏராளமான பக்தர் கள் பலர் கலந்து கொண்டனர். மாலை தீர்த்தவாரி உற்சவமும், சுகாசன பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து வேத விற்பன்னர்கள் கும்பகோணம் சக்கரவர்த்தி, ஸ்ரீதர் பட்டாட்சாரியார்கள் சுகாசன பெருமாளுக்கு புஷ் பாஞ்சலி செலுத்தி 12 வகையான பூஜைகள் செய் தனர். யாகசாலை பூஜைகளும் பத்து நாள் உற்சவத்தின் நிறைவாக மகா பூர்ணாஹதி, சப்தாவர்ணமும் பகல் 12.30 மணிக்கு கொடியிறக்கப்பட்டது. யாகசாலையில் பூஜைகள் செய்த 9 புனித நீரால் மூலவர் சுகாசன பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது.

Read more »

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கல்விக்குழுவிற்கு பாராட்டு விழா

பண்ருட்டி : 

           புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக் கப்பள்ளியில் கல்விக்குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
 
               பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகல்விக்குழு மாவட்ட அளவில் சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்டது. அதனையொட்டி குடியரசு தின விழாவில் சுழற் கேடயம் வழங்கப் பட்டது. அதனையொட்டி பள்ளியில் நடந்த பாராட்டு விழாவிற்கு சுகுமார் தலைமை தாங்கினார். ரங்கப்பன் முன் னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் லலிதா வரவேற்றார். தொரப்பாடி பேரூராட்சி சேர்மன் ஜெயலட்சுமி சிறப்புரையாற்றினார். கலெக்டர் வழங்கிய சுழற் கேடயத்தை கல்விக் குழு உறுப்பினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லலிதாவிடம் வழங்கினர்.

Read more »

சந்தனக்காப்பு அலங்காரம்

திட்டக்குடி : 

            திட்டக்குடி சுப்ரமணியர் சுவாமி தைப்பூசத்தை முன்னிட்டு சந்தனகாப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 
                  திட்டக்குடி சுப்ரமணியர் சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனை கோவில் அர்ச்சகர் தண்டபாணி குருக்கள் நடத்தி வைத்தார். தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுப்ரமணியர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

Read more »

ம.கொளக்குடியில் மருத்துவ முகாம்

காட்டுமன்னார்கோவில் : 

            காட்டுமன்னார்கோவில் அடுத்த ம.கொளக்குடியில் ஊரக நல்வாழ்வு மருத்துவ முகாம் நடந்தது.
 
               இளைபெருமாள் தையாமுத்தம்மாள் அறக்கட்டளை சார்பில் ம.கொளக்குடியில் மருத் துவ முகாம் நடத்தியது.  ஊராட்சி மன்ற தலைவர் பாபுராஜன் தலைமை தாங்கினார். இன்ஜினியர் மணிரத்தினம் துவக்கி வைத் ஒதார். டாக்டர்கள் வெற்றிவீரமணி, குணபாலன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். முத்துக்குமரன், கலியன், மகாராணி, ராஜமாணிக்கம், சுரேஷ் குமார், தங்கமணி முன்னிலை வகித்தனர். நாகராஜன், கிறிஸ்டோபர், கார்த்திக், கமலநாதன், நாகராஜன், நடராஜன் பங்கேற்றனர்.

Read more »

கூடைப்பந்து போட்டியில் ஜவகர் பள்ளி மாணவர்கள் வெற்றி

நெய்வேலி : 

              நெய்வேலியில் ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவர் பள்ளிகளுக்கிடையேயான கூடைபந்து போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
 
            விக்கிரவாண்டி  சூர்யா கல்வி அறக்கட் டளை சுழற்கோப்பை கூடைபந்து போட்டி நடந்தது. இதில் கடலூர், விழுப் புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 16 பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. அதில் ஆண்கள் பிரிவில் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தனர். இவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. என்.எல்.சி., பொது மேலாளர் லூதர்ஸ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்றார். கல்வி கழக செயலாளர் வேதகிரி, பள்ளி செயலாளர் சுரேஷ், உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

Read more »

சர்ச்சைக்குரிய இடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடை

தியாகதுருகம் : 

              தியாகதுருகம் அருகே சர்ச்சைக் குரிய இடத்திற்கு டாஸ்மாக் கடை இடமாற் றம் செய்யப்பட்டுள்ளது.
 
                தியாகதுருகம் அடுத்த கொட்டையூரில்  உள்ள டாஸ்மாக் கடை  கடந்த மாதம் திடீரென புதிய இடத்திற்கு மாற்றப்பட் டது. அக்கட்டடம், அரசு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட தொகுப்பு வீடு என்பதால், பொதுமக்கள்  எதிர்ப்பு தெரிவித்தனர். இதையறிந்த தியாகதுருகம் பி.டி.ஓ., அன்பழகன்,  கடையை அகற்றும்படி டாஸ்மாக் மண்டல மேலாளருக்கு கடிதம் அனுப்பினார். அதையடுத்து தொகுப்பு வீட்டையொட்டி முறைகேடாக புதிய கட்டடம் கட்டி, அனுமதியின்றி கடையை மாற்றி உள்ளனர். அரசு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கட்டடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருவது சர்ச் சையை கிளப்பி உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் பறிமுதல்

கடலூர் : 

               பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங் களை பறிமுதல் செய்ய கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
 
          பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குறித்து ஐகோர்ட் வழிகாட்டுதலை மாவட்டத்தில் பின் பற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் (பொறுப்பு) நடராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் போலீஸ், வருவாய், வட்டார போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட் டத்தில், ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி பள்ளி வாகனங்கள் பராமரிக்கப் படுகிறதா?  அனுமதிக்கப்பட்ட அளவு மாணவர்கள் ஏற்றி செல்கின்றனரா என்பதை ஆய்வு செய்யவும், பயணிகளை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங் களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

Read more »

ஓட்டலில் தீ விபத்து ரூ.50 ஆயிரம் சேதம்

சிறுபாக்கம் : 

                     ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
 
                        வேப்பூரை சேர்ந்தவர் கமல். இவர் விருத்தாசலம் சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டல் நேற்று முன்தினம் மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.  இதில் ஓட்டலில் இருந்த பாத்திரங்கள், மளிகை பொருட்கள் உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

ஆர்ப்பாட்டம்

கடலூர்:

             கடலூரில் நகராட் சிக்கு சொந்தமான இடத்தை மீட்க வலியுறுத்தி  மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
              கடலூர் 6வது வார் டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்தும், அந்த இடத்தை மீட்க வலியுறுத்தி மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் சதீஷ் குமார் தலைமை தாங்கினார். மாநிலக்குழு தனசேகரன் சிறப்புரையாற்றினார்.  ஒன்றிய செயலாளர் மாதவன், நகர செயலா ளர் சுப்புராயன், ராஜேஷ் கண்ணன் பங்கேற்றனர்.

Read more »

டாஸ்மாக் கடைக்கு பூட்டு : கடலூர் ஒன்றிய மா.கம்யூ., முடிவு

கடலூர் : 

          கடலூர் ஒன்றிய மா.கம்யூ., கூட்டம் ஒன் றிய செயலாளர் மாதவன்  தலைமையில் நடந்தது.
 
               கூட்டத்திற்கு மாவட்ட  குழு உறுப்பினர்  தட்சிணாமூர்த்தி முன்னிலை  வகித்தார்.  கூட்டத்தில்  கடலூர் ஒன்றியம் ஏ.வடுகபாளையத்தில்  உள்ள டாஸ்மார்க் கடையை வேறு இடத் திற்கு மாற்ற கோரி பல போராட்டங்கள்  செய்தும்  பலன் இல்லாததை  கண் டித்து பிப்ரவரி 10ம் தேதி டாஸ்மாக்  கடைக்கு பூட்டு  போடும் போராட்டம்  நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஒன்றியக் குழு  உறுப்பினர்கள் குமார், ஆறுமுகம், நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

கோழிப்பண்ணைக்கு தீவைப்பு

திருக்கோவிலூர் : 

              கோழிப்பண்ணைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 
              திருக்கோவிலூர் அடுத்த வி.புத்தூர் கிராமத் தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் நாராயணன் (29). கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர் திருமணத் திற்கு சென்றபோது இவருக்கும் மேலக் கொண்டூர் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் சிவக்குமாருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு நடந்த அன்று இரவு திடீரென நாராயணனின் கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்துபோனது. முன் விரோதத்தின் பேரில் தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளதாக நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

பைக் மோதி வாலிபர் பலி

சிதம்பரம் : 

                நடந்து சென்ற விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார்.
 
                    சிதம்பரம் அடுத்த தில்லைநாயகபுரத்தை சேர்ந் தவர் புருஷோத்தமன் (25). விடுதலை சிறுத்தை கட்சி புவனகிரி ஒன்றிய முற்போக்கு மாணவர் பேரவை செயலாளர். இவர் நேற்று முன்தினம்  இரவு சிதம்பரத்திலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். வண்டிகேட் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. அதில் படுகாயமடைந்த புருஷோத்தமன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பைக் ஓட்டிவந்த பள்ளிப்படையை சேர்ந்த பாலமுருகனை கைது செய்தனர்.

Read more »

ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலியால் சாவு

கடலூர் : 

               கடலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி நெஞ்சு வலியால் இறந்தார்.
 
               புதுச்சேரி தட்டாஞ்சாவடி ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் சுசில்குமார் (40). இவர் மனை வியை கொலை செய்த வழக்கில் ஆரோவில் போலீசாரால் வழக்குப் பதிந்து, திண்டிவனம் கோர்ட்டில் கடந்த ஜூலை 28ம் தேதி ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டு, கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். நேற்று அதிகாலை சுசில்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் சிறைத் துறை டாக்டர் பரிசோதித்து, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவமனைக்கு வரும் வழியில் சுசில்குமார் இறந்தார். ஏற்கனவே இவருக்கு 2 முறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக சிறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதுகுறித்து, கடலூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ் விசாரணை நடத்தினார். மேலும், கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior