உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

Silver Beach Losing Its Sheen

 

Unseemly sight:Garbage lying uncleared at Silver Beach in Cuddalore.


CUDDALORE: 

              Silver Beach, a major tourist attraction and recreation centre in Cuddalore town, has virtually run into weeds. It presents an unseemly sight because the entire stretch of the beach is covered with uncleared garbage and the resultant stench.

         Discarded multi-hued plastic covers are blown all over, spoiling the landscape. A part of the cement pathway leading to the beach front is damaged, obstructing free movement.
A few garbage bins put up along the pathway are overflowing and often found tilted, spilling the contents. The people who throng in the thousands during weekends are cringing from squatting on the sands because of the revolting environs. Children attempting to build sand structures are a rare occurrence on the beach because they are averse to work on the dirty sand. People from far-off places are hesitant to spread out bedsheets or towels to enjoy snacks because to their consternation they cannot find any clean stretch. Abdul Nazer and his family, who had come from Panruti, said that immediately after the 2004 tsunami they visited the ravaged beach. It evoked a sense of awe over the cataclysmic effects of the natural disaster.

           But the present appearance of the beach made them feel sad because the cleaning up of the sands seemed to be nobody's business. They found rags and pieces of torn papers buried in the sands, which created resentment among the visitors. K. Meera from Vriddhachalam, who was with her four-year-old daughter on a swing at the children's park near the beach, said that the upkeep of the beach left much to be desired.The play things were in various stages of damage and could harm children. It was the common view of the beach-goers that Silver Beach, once the pride of Cuddalore, had now become an eye sore.
A row of cement benches and medium-mast lamps installed on the beach post-tsunami disappeared discreetly. The boat house, constructed and re-constructed (post-tsunami) at huge costs, is now in a shambles, thereby robbing the tourists of the delight of a joy boat ride. Cuddalore Municipal Commissioner T. Kumar said that as the visitors' turnout had increased manifold during vacation he had proposed to deploy more conservancy staff to clean up the beach. It was proposed to refurbish the children's park there at a cost of Rs.30 lakh, for which the tender was already floated. The joy boat ride had to be stopped because the ‘uppanar' had dried up and would require the expertise of the Port Trust to revive it.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பி.இ - பி.டெக்., விண்ணப்ப விற்பனை துவக்கம்


General India news in detail

                   பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது. அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் இந்த ஆண்டு, சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்படுவதன் மூலம் 1,800 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

                  தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 80 சதவீத இடங்கள், சிறுபான்மை தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள், சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. இதற்கான கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கவுள்ளது. தமிழகத்தில் தற்போது 454 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 250 இடங்கள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக் கழகங்களில் 5,920 இடங்கள், அரசு கல்லூரிகளில் 2,825 இடங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,544 இடங்கள், சிறுபான்மை அல்லாத தனியார் கல்லூரிகளில் 75 ஆயிரத்து 608 இடங்கள், சிறுபான்மை தனியார் கல்லூரிகளில் 22 ஆயிரத்து 128 இடங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 8,025 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது.

விண்ணப்பங்கள் விற்பனையை துவக்கி வைத்த சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: 

                        பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் 58 மையங்களில் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற நேற்று காலை 4 மணிக்கே சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மாணவர்கள் வரத் துவங்கி விட்டனர். இம்மாணவர்களுக்கு, நேற்று காலை 6 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில், மெக்கானிக்கல் மற்றும் சிவில் பிரிவுகளில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்படுகின்றன. மெக்கானிக்கல் பிரிவில் 900 இடங்கள், சிவில் பிரிவில் 900 இடங்கள் என மொத்தம் 1,800 இடங்கள் இதன்மூலம் கூடுதலாக கிடைக்கும். தமிழில் பாடப்புத்தகங்கள் இம்மாத இறுதியில் தயாராகிவிடும். ஆசிரியர்களும், மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சில வார்த்தைகள் ஆங்கிலத்திலும் இடம்பெறும். இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க, 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன்மூலம் 12 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்கலாம். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

                      பொறியியல் படிப்பில் சேர, பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் சராசரியாக குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் பிளஸ் 2வில் 55 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் 50 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.சி., அருந்ததியினர் மற்றும் எஸ்.டி., பிரிவினர் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 26.50 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.50 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம், எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதம், எஸ்.சி., அருந்ததியினருக்கு 3 சதவீதம், எஸ்.டி., பிரிவினருக்கு 1 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 150 இடங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 10 இடங்கள், விளையாட்டு வீரர்களுக்கு 100 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. உடல் ஊனமுற்றோருக்கு மொத்த இடங்களில் 3 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

                       பிளஸ் 2வில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 100 இடங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 4 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இம்மாதம் 29ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 15ம் தேதி, 'ரேண்டம்' எண் வழங்கப்பட்டு, ஜூன் 18ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும்.

57 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை

                  பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கிய முதல் நாளில், 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்றனர். பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்றே மாணவர்கள் ஆர்வமுடன் வந்து விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். பிளஸ் 2 முடிவு இன்னும் வெளியிடப்படாத நிலையிலேயே விண்ணப்பங்களை பெற மாணவர்கள் ஆர்வம் காட்டினர். தமிழகம் முழுவதும் 58 மையங்களில் பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, மொத்தம் 57 ஆயிரத்து 549 விண்ணப்பங்கள் விற்பனையாயின.

மூன்று கல்லூரிகள் 'பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படவில்லை

                  கடந்த ஆண்டுகளில் பொறியியல் கவுன்சிலிங்கில் இடம்பெற்றிருந்த கல்லூரிகளில், ஜே.ஏ., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, பி.எம்.ஆர்., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜி.ஜி.ஆர்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய மூன்று தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படவில்லை. 

இதுகுறித்து துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது
 
                 'குறிப்பிட்ட மூன்று கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படவில்லை. இக்கல்லூரிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் மறு ஆய்வு நடத்தப்படவுள்ளது. அந்த ஆய்வில் கல்லூரிகள் தகுதி பெற்றால், அக்கல்லூரிகள் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படலாம்,'' என்றார். இதேபோல, வி.கே.கே.விஜயன் பொறியியல் கல்லூரியிலும், இரண்டு பாடப்பிரிவுகள் மட்டுமே இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

12ல் பிளஸ் 2 தேர்வு முடிவு?

General India news in detail


             பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, வரும் 12ம் தேதி வெளியிட தேர்வுத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

            கடந்த ஏப்., 22ம் தேதியுடன், விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடிந்தது. முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளில், தேர்வுத்துறை தீவிரம் காட்டி வருகிறது. மாணவர்களின், 'டம்மி' நம்பர் பாடங்களுக்கான விடைத்தாள்களில், நம்பர் எழுதுவதில் எப்போதுமே சில குழப்பங்கள் ஏற்படுவது வழக்கம். இவ்வகையில் சில ஆயிரம் விடைத்தாள்களில் இந்த நிலை ஏற்படும். அவற்றை சரிசெய்யும் பணியில், தேர்வுத்துறை அதிகாரிகள் முழுநேரப் பணியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதை சரிசெய்ய, ஒரு வாரகாலமாவது ஆகும் என கருதப்படுகிறது. டேட்டா சென்டரில் தற்போது மதிப்பெண்களை ஒருங்கிணைத்து பதிவு செய்யும் பணி இரண்டு ஷிப்டுகளில் நடந்து வருகிறது. டம்மி நம்பர் குழப்பம் முடிவுக்கு வந்த பின், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, வரும் 12ம் தேதி முடிவை வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.

கூடுதல் மதிப்பெண்

                 பிளஸ் 2 கணித தேர்வில், வினாக்கள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கவலைப்பட்டனர். தலைமை ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், கணிதப் பாடத்திற்கு 19 மதிப்பெண்கள் வரை கூடுதலாக அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தேர்வுத் துறை உயரதிகாரிகளிடம் பேசியுள்ளனர். ஆனால் மதிப்பெண் அளிக்க வாய்ப்பில்லை என தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்து விட்டது. இந்நிலையில், அமைச்சரக அளவில் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

எம்.எல்.ஏ.,க்களுக்கு பிரத்தியேக இ-மெயில் முகவரி


        பொதுமக்கள், தங்கள் குறைகளை எம்.எல்.ஏ.,க்களிடம் இ-மெயில் மூலம் தெரிவிக்க வசதியாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,விற்கும் பிரத்தியேக இ-மெயில் முகவரி ஏற்படுத்தித் தரப்படும்' என, அமைச்சர் பூங்கோதை அறிவித்தார்.

சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கையின் போது, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளில் கோப்புகளை விரைவாக கையாளவும், நிர்வாகத்தை துரிதப்படுத்தவும் வசதியாக மின்னணு அலுவலக தொகுப்பு உருவாக்கப்படும். கலெக்டர் அலுவலகங்களில் கோப்புகளை திறம்பட கையாள இதேபோன்ற மின்னணு அலுவலக தொகுப்பு உருவாக்கப்படும்.

* மூன்று ஆண்டுகளுக்கான மின்ஆளுமை திட்டத்தை, தெளிவான வழிமுறைகளுடன் உருவாக்கும்படி, அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்படும்.

* தமிழ் மொழியின் வளர்ச்சி கருதியும், அதன் பயன்பாட்டை இணையதளத்தில் அதிகப்படுத்தவும் தமிழ் குறியீட்டின் தரமான ஒருங்குறி (யுனிகோட்) ஏற்படுத்தப்படும்.

* விழுப்புரத்தில் உள்ள சிப்காட் தொழில்பூங்காவில், தகவல் தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்கப்படும்.

* நீலகிரி மாவட்டத்தில் இணையதள வசதிகளை பெற கம்பியில்லா இணைப்பு, தேவையுள்ள இடங்களில் வழங்கப்படும்.

* தமிழ் இணைய மாநாட்டின் கீழ் தகவல் பக்கங்களை திரட்டும் விதமாக கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்களிடமிருந்து போட்டி தகவல் பக்கங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆன்-லைன் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.

* தமிழ்நாடு மின் ஆளுகை முகமை அவ்வப்போது, ஒரு மின் ஆளுகை செய்தி மடலை வெளியிட உள்ளது. இச்செய்தி மடலில் மின் ஆளுமை செயல்பாடுகளில் கடைபிடிக்கப்படும் சிறந்த வழிமுறைகள், தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் செயல்படுத்தப்பட்டுவரும் குடிமக்களை மையமாகக் கொண்டுள்ள சேவைகள் பற்றி செய்திகள் இடம்பெறும்.

* அகராதிகளை இணையதளத்தில் இலவசமாக உபயோகிக்கும் திட்டம் விக்ஷ்னரி எனப்படுகிறது. பன்னாட்டு தமிழ் பயிற்சி இணையத்தால் வெளியிடப்பட்ட கலைச்சொல் பேரகராதியை அனைவரும் பயன்படுத்தும் வகையில், விக்ஷ்னரியில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* மின்னணு வடிவில் உள்ள அனைத்து சேவைகளும் மக்கள் கணினி மையங்கள் மூலமாகவும் வழங்கப்படும்.

* பொதுமக்கள் தங்கள் குறைகளை எம்.எல்.ஏ.,க்களிடம் இ-மெயில் மூலம் தெரிவித்து, அவற்றை நிவர்த்தி செய்து கொள்ளவும், மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்யவும், ஒவ்வொரு எம்.எல்.ஏ.,விற்கும் பிரத்தியேக இ-மெயில் முகவரி ஏற்படுத்தித் தரப்படும்.

* இன்று தமிழகம் தான் மொபைல் போன் பயன்பாட்டில் முதலிடம் வகிக்கிறது. அரசு சார்ந்த தகவல்கள், திட்டங்கள் போன்றவற்றை மக்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியோ, பேசியோ தெரிந்து கொள்வதற்காக மொபைல் ஆளுமை திட்டத்தை 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வெகுவிரைவில் அறிமுகப்படுத்தவுள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்தப் போகும் நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.இவ்வாறு அமைச்சர் பூங்கோதை அறிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஊராட்சிகளுக்கு நிர்மல் கிராம் புரஷ்கார் விருது சம்பிரதாயமானது!: விதிமுறைகளை பின்பற்றாத அவலம் தொடர்கிறது


விருத்தாசலம்: 

                  நிர்மல் கிராம் புரஷ்கார் விருதுக்கு தேர்வு பெறற ஊராட்சிகள் விதிகளை முழுமையாக பின்பற்றவில்லை என்ற குற்றம் சாட்டு எழுந்துள்ளது.

                  கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஜனாதிபதியால நிர்மல் கிராம் புரஷ் கார் விருது வழங்கப்படுகிறது. இத்திட்டம் மத்திய அரசால் கடந்த 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டு 2005ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் ஊராட்சிக்கு மக்கள் தொகை அடிப்படையில் சுகாதாரம் தொடர்பான வளர்ச்சி பணிகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம். ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிவறைகள் கட்டி அதனை அனைத்து உறுப்பினர்களும் பயன்படுத்தி வரவேண்டும். வீடுகளில் தனி நபர் கழிவறையின்றி சமுதாய சுகாதார வளாகங்களை பயன்படுத்துவராயின் ஒவ்வொரு கழிவறைக்கும் மூன்று குடும்பங்களுக்கு ஒரு கழிவறை ஒதுக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

                    அதுபோல் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் தனியார் மற்றும் நிதியுதவி பெறாத பள்ளிகளிலும், குழந்தைகள் நல மையத்திலும் சுத்தமான கழிவறைகளுடன் சிறுநீர் கழிப்பிட வசதியும், மாணவ, மாணவிகளுக்கு தனி த்தனியே இருக்க வேண்டும். குறிப்பாக திறந்த வெளி கழிப் பிடம் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். இடம் விட்டு இடம் செல்பவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எவரும் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது. விருதுக்கு விண்ணப்பிக்கும் ஊராட்சிகள் திறந் தவெளி கழிப்பிடம் தடை செய்துள்ளதற்கு கிராம சபாவில் தீர்மானம் நிறைவேற்றி, அதை கண் காணிக்க அமைப்பும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதுபோல் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து எடுத்து அதனை முறையாக அகற்றக்கூடிய அமைப்பு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஊராட்சி எல்லைக்குள் பொது இடங்களில் குப் பைகள் கொட்டியிருக்கக் கூடாது. தண்ணீர் தேங்கியிருக்கக் கூடாது. சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் ஆகியவை இதற்கான தகுதிகள்.

                      மேற்கண்ட தகுதிகளுடன் விண்ணப்பிக்கும் ஊராட்சிகளை மாநில அரசு பரிசீலித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய் யும். பரிந்துரை செய்யப்படும் ஊராட்சிகளை மத்திய அரசு 30 சதவீதம் மறு ஆய்வு செய்து விருதுக்கு தேர்வு செய்கிறது. அவ் வாறு தேர்வு செய்யப்படும் ஊராட்சிகளுக்கு நிர்மல் கிராம் புரஷ்கார் விருது வழங்கப்படுகிறது. துவக்கத்தில் இந்த விருது டில்லியில் ஜனாதிபதியால் வழங்கப்பட்டது. தற்போது அந்தந்த மாவட்ட கலெக்டர்களே வழங்கி வருகின்றனர். இவ்வாறு விருதுகள் பெறும் ஊராட்சிகளில் விருதுக்கான தகுதிகள் 20 சதவிகிதம் கூட நடைமுறைப்படுத்தவில்லை என்ற குற்றம் சாட்டு எழுந் துள்ளது.

                  'கிராமங்களில் அனைத்து வீடுகளிலும் தனி நபர் கழிவறைகள் சாத்தியமில்லை என்றாலும், அவர்கள் ஊரில் உள்ள பொது சுகாதார மையத்தையாவது பயன்படுத்த வேண்டும். ஆனால் விருதுகள் பெற்ற பெரும்பாலான ஊராட்சிகளில் எப்போதும் போல் பொதுமக்கள் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் திறந்த வெளிகளையே கழிப் பிடமாக பயன்படுத்துகின்றனர். பொது சுகாதார மையங்கள் பெரும்பாலும் பூட்டியே கிடப்பதாலும், முழுமையான தண்ணீர் வசதி இல்லாததாலும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதுபோல் பொதுமக்கள் குப்பைகளை கொட்ட தொட்டிகளும் இல்லை, அவைகளை சேகரித்து முறையாக எந்த ஊராட்சியும் அகற்றுவதும் இல்லை. அதிகாரிகள், சட்டத்தை பின் பற்ற வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் சில ஊராட்சிகளை பெயரளவிற்கே தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரைக்கின்றனர். மத்திய குழுவினர் ஆய்வுக்கு வரும் போது பள்ளி போன்ற குறிப்பிட்ட இடங்களை மட்டுமே காட்டுகின்றனர். மத் திய குழுவினரும் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் அதிகாரிகளை நம்பி தேர்வு செய்கின்றனர். எனவே மத்திய அரசு வழங் கும் நிர்மல் கிராம் புரஷ்கார் விருது ஒரு சம்பிரதாய நடவடிக்கையாக மட்டுமே உள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கிள்ளையில் செயல்படாத அரசு இறால் பண்ணை


கிள்ளை:

                 கிள்ளையில் 25 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட அரசு இறால் பண்ணை பயன்படுத்தப்படாமல் சீரழிந்துள்ளது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட் டுள்ளது. சிதம்பரம் அடுத்த கிள்ளை முழுக்குத் துறை - பட்டறையடி சாலை, சிந்தாமணியம்மன் கோவில் அருகில் 12.5 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசு மீன் வளத்துறை சார்பில் இறால் பண்ணை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் துவக் கப்பட்டது. இந்த இறால் பண்ணை, கடல் மட்டத்தை கணக்கிட்டு, இன்ஜின் மற்றும் மின் செலவுகள் இல்லாமல், ஆற்று தண்ணீரை நிரப்பி இறால் வளர்க் கப்பட்டது. கடல் நீர் உள்வாங்கும் போது இறால் பண்ணையில் உள்ள இறால் குஞ்சுகள் வெளியில் செல்லாத வகையில் வலை கட்டி பாதுகாக் கப்பட்டது. இதனால் கடல் மற்றும் ஆறுகளில் இருந்து எளிதில் இறால் குஞ்சுகள் இறால் பண்ணைக்குள் செல் லும். ஆனால் வளர்க்கப்படும் இறால்கள் கடலுக்கு செல் லமுடியாது. இவ்வாறு இயற்கையோடு வளர்க்கப்படும் இறால்கள் மருத்துவ குணம் உடையதாகவும் இருந்தது.

                   இந்த பண்ணையில் இறால்களுடன், சில மீன்களும் பெருகியது. வெளி மாநில வியாபாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இறால்களை கூடுதல் விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். இதனால் பலருக்கு மறைமுக வேலையும், அரசு சார்பில் சிலருக்கு நேரடி வேலை வாய்ப்பும் கிடைத்தது. இறால் பண்ணை துவங்கிய காலத்தில் கடலில் கிடைக் கும் இறால்களை விட, மூலிகை காடுகள் சூழ்ந்த இறால் குட்டைகளில் வளர்க் கப்பட்ட இறால்கள் கிலோ ஒன்று 200 முதல் 300 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப் பட் டது. இதனால் மீன்வளத் துறை மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது. தனி நபர்களை இறால் வளர்ப்பு தொழிலில் ஈடுபடும் வகையில் கவனத்தை ஈர்த்த இந்த அரசு இறால் பண்ணை தற்போது முற்றிலும் சேதமடைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

                 அலுவலக கட்டடம் இடிந்து விழுந்து, அலுவலகத்தின் உள்ளே உள்ள பொருட்கள் சேதமடைந்தும், மின்சாரம் துண்டிக்கப்பட்டும் தற்போது அந்த அலுவலகத் தில் விஷ ஜந்துகள் நடமாட் டம் அதிகரித்துள்ளது. இதனால் மீன் ஆய்வாளர், காவலாளி உள்ளிட்ட பணியில் இருந்த மூவர் தற்போது அப்பகுதிக்கு செல்லாமல், சிதம்பரம் அலுவலகத்தில் உள்ளனர். பணியாளர்களுக்கு அரசு வழங்கும் சம்பளத்திற்கு கூட இந்த இறால் பண்ணையால் எவ்வித வருவாயும் இல்லை. கடலூர் மாவட்ட அளவில் முதன்முதலில் துவங்கப்பட்ட இறால் பண்ணையை மீண்டும் புதுப்பித்து பராமரித்தால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஏக்தா நம்பிக்கை மையத்தில் 4 நாள் இலவச பயிற்சி முகாம்

 கிள்ளை: 

                 ஏக்தா நம்பிக்கை மையத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு குறித்த 4 நாள் இலவச சிறப்பு பயிற்சி முகாம் துவங்கியது. சிதம்பரம் அடுத்த கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் கோடைகாலத்தையொட்டி குழந்தைகள், பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நேற்று 4ம் தேதி துவங்கியது. இம்மாதம் 7ம் தேதி வரை பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. துவக்க விழாவில் மைய ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி வரவேற்றார். புதுச்சேரி ஆரோவில் சக்தி இல்லம் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு தையல் மற்றும் ஓவியப் பயிற்சியும், குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டுகளை குணவதி, பபிதா உள்ளிட்ட விழா குழுவினர்கள் செய்திருந்தனர். நவாப்பேட்டை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முகாமில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தேர்ச்சி பெற வேண்டுதல்: கோவில் சுவரில் தேர்வு எண்

 நடுவீரப்பட்டு: 

               நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் சுவரில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற வேண்டும் என வேண்டுதலுடன் போட்டி போட்டு தங்களின் தேர்வு எண்ணை எழுதி வைத்துள்ளனர். ஒவ்வொரு தேர்வு வரும் போதும் மாணவ, மாணவிகள் தங்களது இஷ்ட தெய்வங்களின் கோவிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு தேர்வு எழுத செல்வது வழக்கம். தேர்வு எழுதிய பின் அக் கோவில் சுவரில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தங்களது தேர்வு எண்ணை எழுதி வைப்பது வாடிக்கையாகி விட்டது. நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் சுவரில் இடமே இல்லாத அளவில் போட்டி போட்டுக் கொண்டு தேர்வு எண்ணை எழுதி வைத்துள்ளனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை மகா அபிஷேகம்


சிதம்பரம்: 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு நாளை (5ம் தேதி) மகா அபிஷேகம் நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவி லில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. ஆண்டுக்கு இருமுறை ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனத்தின் போது ஆயிரங்கால் மண்டப முகப்பிலும், நான்கு முறை நடராஜர் வீற்றிருக்கும் சித்சபையின் எதிரில் உள்ள கனகசபையிலும் நடக்கிறது. சித்திரை மாதத்தில் நடக்கும் மகா அபிஷேகம் நாளை (5ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி அன்று அதிகாலை முதல் நடராஜர் கோவிலில் மகா ருத்ரயாகம், 126 பேர் ருத்ரபாரா யணம், 13 பேர் ஹோமம் செய்கின்றனர். காலை 8 மணிக்கு சித்சபையில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கனகசபையில் சிறப்பு பூஜைகளும், அதனை தொடர்ந்து மாலை 6 மணியிலிருந்து குடம், குடமாக பால், நெய், தேன், சந்தனம், இளநீர் மற்றும் விபூதி ஆகியவற்றால் இரவு 10 மணி வரை அபிஷேகம் நடக்கிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நரிக்குறவர்களின் குழந்தைகளுக்கு கலெக்டர் கல்வி உதவித்தொகை


கடலூர்: 

                 நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள நரிக்குறவர்களின் குழந்தைகள் 54 பேருக்கு கல்வி உதவித் தொகையை கலெக்டர் வழங்கினார். நரிக்குறவர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள குடும்பத்திற்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. தற்போது நரிக்குறவர்களின் குழந்தைகள் படிப்பதற்காக கல்வி உதவித் தொகையாக 1 முதல் 6ம் வகுப்பு வரை 500 ரூபாயும், 6ம் வகுப்பு முதல் 1,000 ரூபாயும் வழங்க உத்தவிட்டுள்ளது. அதில் கடலூர் மாவட்டத்தில் 54 நரிக்குறவர் குடும்பங்கள் உதவித்தொகை பெற தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் குழந்தைகளுக்கு நேற்று கலெக்டர் சீத்தாராமன் உதவித்தொகை வழங்கினார். பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அலுவலர் கணபதி, பி.ஆர்.ஓ., முத்தையா உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ராஜிவ்காந்தி நினைவு கிரிக்கெட் போட்டி 8ம் தேதி துவக்கம்


கடலூர்: 

                  ராஜிவ்காந்தி நினைவு கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 8ம் தேதி துவங்குகிறது. கடலூர் ஆனைக்குப்பம் கிரிக்கெட் கிளப் சார்பில் ராஜிவ்காந்தி நினைவு கிரிக்கெட் போட்டி (டென்னிஸ் பால்) மாவட்ட அளவில் வரும் 8ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு 4,001 ரூபாய், இரண்டாம் பரிசு 3,001, மூன்றாம் பரிசு 2,001 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 9345991201, 9042371335 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் நாளை திறப்பு விழா: 2 அமைச்சர்கள் பங்கேற்பு

 பரங்கிப்பேட்டை: 

             பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள 168 வீடுகளை நாளை 5ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைக்கிறார். பரங்கிப்பேட்டை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ராஜிவ்காந்தி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கொடிமரத்தெரு, ஆற் றங்கரை தெரு, மானம் பாடி உள்ளிட்ட பகுதிகளில் 6 கோடியே 20 லட் சத்து 56 ஆயிரம் மதிப் பில் 168 புதிய வீடுகள் கட்டப் பட்டது. இந்த புதிய வீடுகள் திறப்பு விழா நாளை 5ம் தேதி மாலை நடக்கிறது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்குகிறார். சேர்மன் முத்து பெருமாள் முன்னிலை வகிக்கிறார். பேரூராட்சி சேர்மன் முகமது யூனுஸ் வரவேற்கிறார். புதிய வீடுகளை குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதி கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் தங்கவேலன் திறந்து வைக்கிறார். அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் வழங்குகிறார்.  விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், திட்ட இயக்குநர் ராஜஸ்ரீ, கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சடையப்பன், துணை சேர்மன் செழியன், செயல் அலுவலர் ஜீஜாபாய் பங்கேற்கின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற 16 பேர் தேர்வு

பரங்கிப்பேட்டை: 

                  மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 16 பயனாளிகள் சென்னையில் சிகிச்சை பெற அரசு சிறப்பு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தைச் சுற்றியுள்ள பு.முட்லூர், புதுச்சத்திரம், கவரப்பட்டு, ஆயிபுரம், கிள்ளை உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 பயனா ளிகள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற புதுச்சத்திரத்தில் இருந்து சென்னை செட்டிநாடு மருத்துவமனைக்கு அரசு சிறப்பு பஸ்சில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்பு பஸ்சை சேர் மன் முத்துபெருமாள் கொடியசைத்து அனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை இயக்குநர் மீரா, கவுன்சிலர் ராஜாராமன், வட்டார மருத்துவ அலுவலர் மேகலா, சுகாதார மேற் பார்வையாளர் ராமதாஸ், கோவிந்தராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

இலவச மனைப்பட்டா வேண்டும்: இசை கலைஞர்கள் வேண்டுகோள்

 கடலூர்: 

                இசை கலைஞர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என மேடை மெல்லிசை கலைஞர்கள் நல சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. கடலூர் மாவட்ட மேடை மெல்லிசை கலைஞர்கள் நல சங்க பொதுக் குழு கூட்டம் கடலூரில் நடந்தது. தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சண்முகம் வரவேற்றார். கண்ணன், செயலாளர் சிவக்குமார் முன் னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., பன்னீர்செல்வம், மோசஸ், தயாநிதி, மாசிலாமணி, சிங்காரம், சார்லஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கூட்டத்தில் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண் டும். அமைப்பு சாரா வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரையும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். சங்கம் சார்பில் 6 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும். வீடு இல்லாத உறுப்பினர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பிச்சாவரத்தில் ரூ.15 லட்சம் செலவில் புதிய படகுகள்


கிள்ளை: 

                சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய மோட்டார் மற்றும் துடுப்பு படகுகள் வாங்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உள்ள சுற்றுலா மையத்தில் 3 மோட்டார் படகு, 29 துடுப்பு படகுகள் இருந்தது. இதனால் கோடைகாலம் துவங்கிய நிலையில் பிச்சாவரத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் படகு கிடைக்காமல் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து சுற்றுலா வளர்ச்சித்துறை மூலம் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் தலா 3 மோட்டார் படகுகள், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 6 துடுப்பு படகுகள் கூடுதலாக வாங்கப்பட் டுள்ளது. தற்போது வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர துவங்கியுள்ளனர். வெளி மாநில சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் கூடுதல் தங்கும் விடுதி அமைக்க சுற்றுலாத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வேப்பூர் கூட்ரோட்டில் பஸ் நிறுத்தம்: பயணிகள் எதிர்பார்ப்பு


சிறுபாக்கம்: 

                      விருத்தாசலத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பஸ்கள் வேப்பூர் கூட்ரோட்டில் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருத்தாசலத்திலிருந்து வேப்பூர் வழியாக கள்ளக்குறிச்சி வரை அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வியாபாரம், மருத்துவ சிகிச்சைக்காக சென்று பயனடைகின்றனர். இந்த பஸ்கள் வேப்பூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி, பின்னர் கூட்டுரோடு வழியாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில் செல்கிறது. சர்வீஸ் ரோடு வழியாக வந்து, கூட்ரோட்டில் நிற்கும் பயணிகளை ஏற் றாமல் நேரடியாக மேம் பாலத்தில் ஏறி செல்கிறது. இதனால் பெரியநெசலூர், சிறுநெசலூர், அரியநாச்சி, என்.நாரையூர் உள்ளிட்ட குக்கிராம மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே விருத்தாசலத்திலிருந்து வேப்பூர் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களை வேப்பூர் கூட்ரோட்டில் சர்வீஸ் ரோடு வழியாக நிறுத்திச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தமிழக இளைஞர்கள் மாவோயிஸ்டுகளாக மாற வாய்ப்பு: எம்.பி., பாலகங்கா பகீர்


திட்டக்குடி: 

                விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை காரணமாக தமிழக இளைஞர்கள் மாவோயிஸ்டுகளாக மாற வாய்ப்புள்ளது என எம்.பி., பாலகங்கா பேசினார். பெண்ணாடத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் மே தின பொதுக் கூட்டம் நடந்தது. அம்பிகா சர்க்கரை ஆலை அண்ணா தொழிற் சங்க செயலாளர் வாசு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தொழிற் சங்க தலைவர் ராஜகோபால், என்.எல்.சி., தலைவர் அபு, போக்குவரத்துக்கழக தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட கட்டடப்பிரிவு செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மதியழகன், நல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் அருண் மொழித்தேவன், செல்வி ராமஜெயம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க., தேர்தல் பிரிவு இணை செயலாளர் எம்.பி., பாலகங்கா பேசியதாவது: 

                 தொழிற் சங்க பிரிவை உருவாக்கி சின்னமும், கொடியும் வழங்கியவர் எம்.ஜி. ஆர்., தான். இதனால் மே தினத்தை கொண்டாட தகுதியான கட்சி அ.தி.மு.க., மட்டுமே.  ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ள விலைவாசி உயர்வு குறித்து கேட்டால், வாங்கும் சக்தி மக்களிடம் உயர்ந்துள்ளதாக கேலியாக அன்பழகன் பதில் சொல்கிறார். பெரு வணிகர்களுக்கு உடனடி மின்சாரம், விவசாயிகளுக்கோ தொடர் மின்வெட்டு. இதுதான் தி.மு.க., அரசின் இன்றைய நிலை. 2011ல் தி.மு.க., 30 இடங்களில் கூட ஜெயிக்க வாய்ப் பில்லை. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை காரணமாக தமிழக இளைஞர்கள் மாவோயிஸ்டுகளாக மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு எம்.பி., பாலகங்கா பேசினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூரில் தார்சாலை போட நிதி இல்லாமல் 5 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள புறவழிச்சாலை


கடலூர்: 

                கடலூர் ஜவான்ஸ் பவன் அருகே 5 கோடி ரூபாய் மதிப்பில் போடப் பட்ட புறவழிச்சாலை நிதி பற்றாக்குறையால் மக்களுக்கு பயன்படாமல் கிடப்பில் கிடக்கிறது. கடலூர் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு முன் கலெக்டராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஜவான்ஸ் பவன் கட்டடத்தில் இருந்து செம்மண்டலம் வரையிலான கெடிலம் ஆற்றங்கரையில் புறவழிச்சாலை அமைக்க முயற்சி மேற்கொண்டார். புறவழிச்சாலைக்கு மட்டுமல்லாமல் ஆண்டு தோறும் கெடிலம் நதிக்கரையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளப் பெருக்கினால் சுப்ராயலு நகர், நெடுஞ்சாலை நகர், குப்பன்குளம் ஆகிய நகர்கள் வெள்ள நீரில் மூழ்கி தத்தளிக்கும் நிலையை தவிர்ப்பதற்காகவும் சுனாமி நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

                   திருப்பாதிரிப்புலியூர் ஜவான்ஸ் பவன் அருகில் இருந்து செம்மண்டலம் வரையிலான 1.8 கி.மீ., தூரத்தை பொதுப்பணித்துறை 40 லட்ச ரூபாய் மதிப்பில் அகலமான சாலை அமைத்து நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைத்தது. வெள் ளத்தின் போது பழுதாகாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை மெட்டல் ரோடு போட்டது. நகராட்சி சார்பில் 'கான்கிரீட்' தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக இதுவரை ஐந்து கோடி ரூபாய் செலவிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக தார் சாலை பணிகள் நடைபெறாததால் மக்களுக்கு பயன்படாமல் கிடப்பில் உள்ளது. இப்பணிக்காக 90 லட்ச ரூபாய் கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட் டுள்ளதோடு நிற்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் புறவழிச்சாலை அமைத்து தார் சாலை போடாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கலெக்டர், மக்கள் பிரதிநிதிகள் நிதி ஒதுக்கீடு பெற்றுத்தர முன்வந்து கடலூர் மக்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பெண்ணாடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு


திட்டக்குடி: 

                  பெண்ணாடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

                   பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பொது சந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த கணபதி கடந்த சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்து பேரூராட்சி அனுமதி பெறாமல் கட்டடம் கட்டினார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுவற்றை டித்தனர். இது குறித்து கணபதி கொடுத்த புகாரின் பேரில் சேர்மன், கவுன்சிலர்கள் உள்ளிட்ட 19 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு போலீசார் வழக்குப் பதிந்தனர். சென்னை ஐகோர்ட்டில் அனைவரும் ஜாமீன் பெற்றனர். பொது சந்து பேரூராட்சிக்கு சொந்தமானது என்பதால் தாசில்தார் 145 உத்தரவு பிறப்பித்தார். அதையும் மீறி கட்டடம் கட்ட துவங்கியதால் பொதுமக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெற்றனர். இருப்பினும் பேரூராட்சி வடிகாலை இடித்து விட்டு கட்டடம் கட்டியதால் சாலை மறியல் அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று முன்தினம் திட்டக்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் அமைதிக்குழு கூட்டம் நடந்தது. உடன்பாடு ஏற்படாததால் அறிவித்தபடி மறியல் போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் அறிவித்தனர். இதøனையடுத்து டி.எஸ். பி.,க்கள் இளங்கோ, ராஜசேகரன் தலைமையில் போலீசார் குவிக்கப் பட்டனர்.

                         நேற்று காலை 10 மணிக்கு சேர்மன் அமுதலட்சுமி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க., - அ.தி. மு.க., - தே.மு.தி.க.,- பா.ஜ., - மா.கம்யூ., - இந்திய கம்யூ., - வி.சி.,யினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்களும் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. டி.எஸ்.பி.,க்கள் இளங்கோ, ராஜசேகரன், தாசில்தார் கண்ணன் கியோர் பேச்சுவார்த்தை நடத்தி சட்ட ரீதியாக ஆக்கிரமிப்பை அகற்ற உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி எஸ்.பி.,யிடம் மனு

 கடலூர்: 

               காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டி வருவதால் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். நெய்வேலி கங்கைகொண்டான் காலனியைச் சேர்ந்த என்.எல்.சி., கான்ட்ராக்டர் ஜெய்சங்கர். இவரது மகள் இந்துமதி (24). இவரது எதிர்வீட்டைச் சேர்ந்தவர் சுரேஷ் (27). இரண்டாவது சுரங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இந்துமதியின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க துவங்கியதால் அவர் தனது தந்தையிடம் சுரேஷை காதலிப்பதாக தெரிவித்ததால் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்துமதி, சுரேஷுடன் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் 30 ம் தேதி மங்களம்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அறிந்த இந்துமதியின் பெற்றோர் அவர்களது சொந்த பெண்ணாடம் போலீசில் புகார் செய்தனர். இந்திமதி மற்றும் சுரேஷ் நேற்று கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் 'எங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் செய்துள்ளனர். தங்களுக்குள்ள செல்வாக்கை பயன் படுத்தி எங்களை பிரித்து விடுவார்கள். மேலும் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறோம். எனவே, எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

100-க்கும் மேற்​பட்ட வெளி​மா​நில வாக​னங்​களுக்கு அபராதம்

 

கடலூர் மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்களை சோதனையிடும் கடலூர் புதுநகர் போலீசார்


சிதம்​ப​ரம்:

                 சிதம்​ப​ரம் பகு​தி​யில் வெளி​மா​நி​லங்​க​ளில் பதிவு செய்து தமி​ழ​கத்​தில் வரி கட்டாமல் இயக்​கப்​ப​டும் இரு​சக்​கர வாக​னங்​கள் போலீ​சாரால் திங்​கள்​கி​ழமை பிடிக்​கப்​பட்டு அப​ரா​தம் விதிக்​கப்​பட்​டன.​ க​ட​லூர் மாவட்​டத்​தில் இரு​சக்​கர வாக​னங்​கள் திருட்டை தடுக்​க​வும்,​​ வெளி மாநி​லங்​க​ளில் பதிவு செய்து தமிழ​கத்​தில் வரி கட்​டா​மல் இயக்​கப்​படும் வாக​னங்​களை பிடிக்​க​வும் கட​லூர் மாவட்ட போலீஸ் சூப்​ரண்​டன்ட் அஸ்​வின் கோட்னீஷ் உத்​த​ர​விட்​டார்.​ அ​தன் பேரில் சிதம்​ப​ரம்,​​ அண்​ணா​ம​லை​ந​கர்,​​ கிள்ளை உள்ளிட்ட பகு​தி​க​ளில் திங்​கள்​கி​ழமை இன்ஸ்​பெக்​டர்​கள் பி.சுப்​பி​ர​மண்​யன்,​​ எம்.கே.கண்​ண​பி​ரான்,​​ ஜி.சுப்​பி​ர​ம​ணி​யன் உள்​ளிட்ட போலீ​சார் வாகன தணிக்​கை​யில் ஈடு​பட்​ட​னர்.​ அப்​போது குஜ​ராஜ்,​​ புதுச்​சேரி,​​ ஆந்​திரா,​​ கேரளா உள்​ளிட்ட வெளி மாநி​லங்​க​ளைச் சேர்ந்த 100-க்கும் மேற்​பட்ட வாக​னங்​கள் பிடிக்​கப்​பட்டு அப​ரா​தம் விதிக்​கப்​பட்டன.

கடலூர் போலீசார் ஆய்வு​ 

கட​லூர்:

                  புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்த இரு சக்​கர வாக​னங்​களை கட​லூர் போலீ​ஸôர்,​​ ஞாயிறு,​​ திங்​கள் ஆகிய இரு​நாள்​கள் ஆய்வு செய்​த​னர்.​ க​ட​லூர் மாவட்​டத்​தில் இயக்​கப்​ப​டும் இரு சக்​கர வாக​னங்​க​ளில் 50 சத​வீ​தம் வாக​னங்​கள் புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்​யப்​பட்​டவை.​ வரி விதிப்​புக் கொள்​கை​யில் இரு மாநி​லங்​க​ளுக்கு இடையே உள்ள வித்​தி​யா​சமே இதற்​குக் கார​ணம்.​ பிற மாநி​லங்​க​ளைச் சேர்ந்த பலர் புது​வை​யில் போலி​யாக முக​வரி கொடுத்து வாகனங்​க​ளைப் பதிவு செய்​கி​றார்​கள்.​ இத​னால் தீவி​ர​வா​தி​கள் உள்​ளிட்ட பலருக்​கும் வாக​னங்​கள் கிடைப்​பது புது​வை​யில் எளி​தாக இருக்​கி​றது.​ எனவே புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்து,​​ கட​லூர் மாவட்​டத்​தில் இயக்​கப்​ப​டும் வாக​னங்​களை,​​ மாவட்ட போலீஸ் துணைக் கண்​கா​ணிப்​பா​ளர் அஸ்​வின் கோட்னீஸ் உத்​த​ர​வின்​பே​ரில்,​​ கட​லூர் மற்​றும் பண்​ருட்டி போலீஸ் உள்​கோட்டங்​க​ளில் போலீ​சார் சோத​னையிட்​ட​னர்.​ இந்த சோத​னை​யில் 50-க்கும் மேற்​பட்ட இரு சக்​கர வாக​னங்​கள் பிடி​பட்​டன.​ அந்த வாக​னங்​க​ளின் ஆவ​ணங்​கள் சரி​பார்க்​கப்​பட்​டன.​ அவற்​றில் போலி​யா​னவை எவை என்று போலீ​ஸôர் ஆய்வு மேற்​கொண்டு உள்​ள​னர்.​

Read more »

கடலூர் மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தை பஸ் நிலையம் அருகே மாற்ற கோரிக்கை


மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த மாற்றுத் திறனாளிகள்
கடலூர்:

                 கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை,​​ பஸ் நிலையத்துக்கு ​ அருகே மாற்ற வேண்டும் என்று,​​ கடலூர் மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்தது.

இச்சங்கத்தின் தலைவர் சி.கே.சந்தோஷ்,​​ செயலர் மனோகர்,​​ பொருளர் செந்தில்ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மாற்றுத் திறனாளிகள் சிலருடன் வந்து,​​ திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

                 வெளியூர்களில் இருந்து கடலூர் வரும் மாற்றுத் திறனாளிகள்,​​ மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு எளிதாகச் சென்று அலுவலர்களைச் சநதிக்க ஏதுவாக,​​ மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை பஸ் நிலையத்துக்கு அருகே மாற்ற வேண்டும்.​ மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் குடிக்கத் தண்ணீர் வைக்க வேண்டும்.மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிகளில் ஜாமீன் இன்றி கடன் வழங்க வேண்டும்.​ மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து,​​ சாதிவேறுபாடு பார்க்காமல்,​​ மாதம் ஒரு மாற்றுத் திறனாளிக்கு தொழில் தொடங்க நிதி உதவி செய்ய வேண்டும். திருமண உவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நிதி வழங்க வேண்டும்.​ ஊரக வேலை உறுதித் திட்டத்தில்,​​ கணக்கு எழுதும் பணி மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

காய்​கறி வியா​பா​ரி​கள் சாலை மறி​யல்காய்​கறி வியா​பா​ரி​கள் சாலை மறி​யல்

 பண்​ருட்டி:

                  பண்​ருட்டி காய்​கறி வியா​பா​ரி​கள் நான்கு முனை சந்​திப்​பில் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​தால் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​ பண்​ருட்டி நக​ரின் மையப் பகு​தி​யில் ரத்​தி​னம்​பிள்ளை மார்​கெட் இயங்கி வரு​கி​றது.​ பண்​ருட்டி சுற்று வட்​டப் பகு​தி​யில் பயி​ரி​டப்​ப​டும் காய்​க​றி​களை,​​ இங்​குள்ள வியா​பா​ரி​கள் கமி​ஷன் அடிப்​ப​டை​யில் மொத்​த​மாக வாங்கி பல ஊரில் உள்ள வியா​பா​ரி​க​ளுக்கு அனுப்பி விற்​பனை செய்து வரு​கின்​ற​னர்.​

                 மே​லும் தமி​ழ​கம் மற்​றும் வெளி மாநி​லத்​தில் இருந்து வரும் காய்​க​றி​களை வாங்கி நுகர்​வோர்​க​ளுக்கு விற்​பனை செய்து வரு​கின்​ற​னர்.​ நக​ரின் மையப்​ப​கு​தி​யில் மார்​கெட் அமைந்​துள்​ள​தால் அதிக அளவு மக்​கள் வந்து செல்​வர்.​÷இ​த​னால் சில காய்​கறி வியா​பா​ரி​கள் சென்னை சாலையை ஆக்​கி​ர​மித்து வியா​பா​ரம் செய்து வந்​த​னர்.​ இவர்​கள் சாலை​யி​லேயே வாக​னங்​களை நிறுத்தி காய்​க​றி​களை ஏற்றி இறக்கி வந்​த​தால் சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் அடிக்​கடி போக்​கு​வ​ரத்து தடைப்​பட்​டது.​

                 இந்​நி​லை​யில் பண்​ருட்டி தட்​டாஞ்​சா​வ​டி​யில் கட்​டப்​பட்டு செயல்​படாமல் உள்ள உழ​வர் சந்​தையை கடந்த மார்ச் மாதம் பார்​வை​யிட்ட மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்,​​ உழ​வர் சந்தை செயல்​பட தேவை​யான நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என கூறி​னார்.​ இ​தைத் தொடர்ந்து கடந்த சில நாள்​க​ளுக்கு முன்​னர் கோட்​டாட்​சி​யர் தலை​மை​யில் பண்​ருட்டி வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் ஆலோ​ச​னைக் கூட்​டம் நடை​பெற்​றது.​ 

                        இதில் உழ​வர்​கள் காய்​க​றி​களை உழ​வர் சந்​தைக்​கு​தான் கொண்டு செல்ல வேண்​டும்,​​ சென்னை சாலை ஓரத்​தில் வியா​பா​ரி​கள் காய்​க​றி​களை வாங்​கவோ,​​ ஏற்றி இறக்​கவோ கூடாது என தீர்​மா​னித்து மே 1-ம் தேதி முதல் உழ​வர் சந்தை செயல்​ப​டும் என முடி​வெ​டுக்​கப்​பட்​டது.​ இந்​நி​லை யில் திங்​கள்​கி​ழமை காலை போக்​கு​வ​ரத்​திற்கு இடை​யூ​ராக சென்னை சாலை​யில் வாக​னங்​களை நிறுத்தி காய்​கறி ஏற்​றிய வாக​னங்​களை பண்​ருட்டி போலீ​ஸôர் பறி​மு​தல் செய்​த​னர்.​ இ​த​னால் பாதிக்​கப்​பட்ட காய்​கறி வியா​பா​ரி​கள் திடீர் என நான்கு முனை சந்​திப்​பில் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​ சுமார் 5 நிமி​டம் நடந்த மறி​ய​லால் சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் போக்​கு​வ​ரத்து தடை ஏற்​பட்​டது.​÷த ​க​வல் அறிந்து சம்​பவ இடத்​திற்கு வந்த டிஎஸ்பி.,​​ பிர​சன்​ன​கு​மார்,​​ இன்ஸ்​பெக்​டர் செல்​வம் ஆகி​யோர் மறிய​லில் ஈடு​பட்​ட​வர்​களை காவல் நிலை​யத்​துக்கு அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்​தி​னர்.​ இ​தில் காலை 5 மணி முதல் 8 மணி​வ​ரை​யில் போக்​கு​வ​ரத்​திற்கு பாதிப்பு இல்​லாத வகை​யில் ஒவ்வொரு வாக​ன​மாக நிறுத்தி காய்​க​றி​களை ஏற்றி இறக்க வேண்​டும்.​ மாலை 2 மணி முதல் 4 மணி வரை​யில் உழ​வர் சந்​தை​யில் கொள்​மு​தல் செய்த காய்​க​றி​களை சிறிய வாக​னத்​தில் கொண்டு வந்து இறக்​கிக் கொள்ள வேண்டும்.​ எக்​கா​ர​ணம் கொண்​டும் சாலை​யில் காய்​கறி வாங்கி வியா​பா​ரம் செய்​யக் கூடாது.​ மீறி​னால் உரிய நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என முடி​வெ​டுக்​கப்​பட்​டது.​

                      இக்​ கூட்​டத்​தில் வேளாண்மை வணிக துறை துணை வேளாண்மை இயக்​கு​நர் என்.தன​வேல்,​​ வேளாண்மை அலு​வ​லர் என்.சுரேஷ்,​​ மாவட்ட தொழில் வர்த்​தக சங்​கத் தலை​வர் டி.சண்​மு​கம்,​​ செய​லர் வி.வீரப்​பன்,​​ காய்​கறி வியா​பா​ரி​கள் சங்​கத் தலை​வர் பி.ராஜா உத​ய​கு​மார்,​​ பொரு​ளர் பி.எஸ்.பி.லூர்​து​சாமி,​​ துணைத் தலை​வர் டி.மணி உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.​பண்​ருட்டி.மே 3: பண்​ருட்டி காய்​கறி வியா​பா​ரி​கள் நான்கு முனை சந்​திப்​பில் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​தால் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​ பண்​ருட்டி நக​ரின் மையப் பகு​தி​யில் ரத்​தி​னம்​பிள்ளை மார்​கெட் இயங்கி வரு​கி​றது.​ பண்​ருட்டி சுற்று வட்​டப் பகு​தி​யில் பயி​ரி​டப்​ப​டும் காய்​க​றி​களை,​​ இங்​குள்ள வியா​பா​ரி​கள் கமி​ஷன் அடிப்​ப​டை​யில் மொத்​த​மாக வாங்கி பல ஊரில் உள்ள வியா​பா​ரி​க​ளுக்கு அனுப்பி விற்​பனை செய்து வரு​கின்​ற​னர்.​ மே​லும் தமி​ழ​கம் மற்​றும் வெளி மாநி​லத்​தில் இருந்து வரும் காய்​க​றி​களை வாங்கி நுகர்​வோர்​க​ளுக்கு விற்​பனை செய்து வரு​கின்​ற​னர்.​ நக​ரின் மையப்​ப​கு​தி​யில் மார்​கெட் அமைந்​துள்​ள​தால் அதிக அளவு மக்​கள் வந்து செல்​வர்.​ இ​த​னால் சில காய்​கறி வியா​பா​ரி​கள் சென்னை சாலையை ஆக்​கி​ர​மித்து வியா​பா​ரம் செய்து வந்​த​னர்.​ இவர்​கள் சாலை​யி​லேயே வாக​னங்​களை நிறுத்தி காய்​க​றி​களை ஏற்றி இறக்கி வந்​த​தால் சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் அடிக்​கடி போக்​கு​வ​ரத்து தடைப்​பட்டது.​ இந்​நி​லை​யில் பண்​ருட்டி தட்​டாஞ்​சா​வ​டி​யில் கட்​டப்​பட்டு செயல்​ப​டா​மல் உள்ள உழ​வர் சந்​தையை கடந்த மார்ச் மாதம் பார்​வை​யிட்ட மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன்,​​ உழ​வர் சந்தை செயல்​பட தேவை​யான நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என கூறி​னார்.​ இ​தைத் தொடர்ந்து கடந்த சில நாள்​க​ளுக்கு முன்​னர் கோட்​டாட்​சி​யர் தலை​மை​யில் பண்​ருட்டி வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் ஆலோ​ச​னைக் கூட்​டம் நடை​பெற்​றது.​÷இ​தில் உழ​வர்​கள் காய்​க​றி​களை உழ​வர் சந்​தைக்​கு​தான் கொண்டு செல்ல வேண்​டும்,​​ சென்னை சாலை ஓரத்​தில் வியா​பா​ரி​கள் காய்​க​றி​களை வாங்​கவோ,​​ ஏற்றி இறக்​கவோ கூடாது என தீர்​மா​னித்து மே 1-ம் தேதி முதல் உழ​வர் சந்தை செயல்​ப​டும் என முடி​வெ​டுக்​கப்​பட்​டது.​

                  இந்​நி​லை​யில் திங்​கள்​கி​ழமை காலை போக்​கு​வ​ரத்​திற்கு இடை​யூ​ராக சென்னை சாலை​யில் வாக​னங்​களை நிறுத்தி காய்​கறி ஏற்​றிய வாக​னங்​களை பண்​ருட்டி போலீ​ஸôர் பறி​மு​தல் செய்​த​னர்.​ இ​த​னால் பாதிக்​கப்​பட்ட காய்​கறி வியா​பா​ரி​கள் திடீர் என நான்கு முனை சந்​திப்​பில் சாலை மறிய​லில் ஈடு​பட்​ட​னர்.​ சுமார் 5 நிமி​டம் நடந்த மறி​ய​லால் சென்னை-​கும்​ப​கோ​ணம் சாலை​யில் போக்​கு​வ​ரத்து தடை ஏற்​பட்​டது.​ த​க​வல் அறிந்து சம்​பவ இடத்​திற்கு வந்த டிஎஸ்பி.,​​ பிர​சன்​ன​கு​மார்,​​ இன்ஸ்​பெக்​டர் செல்​வம் ஆகி​யோர் மறிய​லில் ஈடு​பட்​ட​வர்​களை காவல் நிலை​யத்​துக்கு அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்​தி​னர்.​÷இ​தில் காலை 5 மணி முதல் 8 மணி​வ​ரை​யில் போக்​கு​வ​ரத்​திற்கு பாதிப்பு இல்​லாத வகை​யில் ஒவ்​வொரு வாக​ன​மாக நிறுத்தி காய்​க​றி​களை ஏற்றி இறக்க வேண்​டும்.​ மாலை 2 மணி முதல் 4 மணி வரை​யில் உழ​வர் சந்​தை​யில் கொள்​மு​தல் செய்த காய்​க​றி​களை சிறிய வாக​னத்​தில் கொண்டு வந்து இறக்​கிக் கொள்ள வேண்​டும்.​ எக்​கா​ர​ணம் கொண்​டும் சாலை​யில் காய்​கறி வாங்கி வியா​பா​ரம் செய்​யக் கூடாது.​ மீறி​னால் உரிய நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என முடி​வெ​டுக்​கப்​பட்​டது.​ இக்​கூட்​டத்​தில் வேளாண்மை வணிக துறை துணை வேளாண்மை இயக்​கு​நர் என்.தன​வேல்,​​ வேளாண்மை அலு​வ​லர் என்.சுரேஷ்,​​ மாவட்ட தொழில் வர்த்​தக சங்​கத் தலை​வர் டி.சண்​மு​கம்,​​ செய​லர் வி.வீரப்​பன்,​​ காய்​கறி வியா​பா​ரி​கள் சங்​கத் தலை​வர் பி.ராஜா உத​ய​கு​மார்,​​ பொரு​ளர் பி.எஸ்.பி.லூர்​து​சாமி,​​ துணைத் தலை​வர் டி.மணி உள்​ளிட்ட பலர் கலந்து கொண்​ட​னர்.​

Read more »

அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக வளா​கத்​தில்கேட்​பா​ரற்று கிடந்த மர்ம சூட்​கேஸ் ஏற்​ப​டுத்​திய பர​ப​ரப்பு

சிதம்​ப​ரம்:
              சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக வளா​கத்​தில் திங்​கள்​கி​ழமை கேட்​பாரற்று கிடந்த சூட்​கே​ஸி​னால் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​ அண்ணா​ம​லைப் பல்க​லைக்​க​ழக தேர்​வுத்​துறை கட்​ட​டம் முன்பு சூட்​கேஸ் ஒன்று கேட்​பா​ரற்று தனியாக கிடந்​தது.​ அண்ணா​மலை நகர் போலீ​ஸôர் சூட்​கேஸ் கைப்​பற்றி அண்​ணா​மலை நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்​த​னர்.​ இந்​நி​லை​யில் விரு​து​ந​கர் மாவட்​டம் சாத்​தூ​ரைச் சேர்ந்த டாக்டர் தாமோ​த​ரன்,​​ தனது மகளை மருத்​துவ மேல்​ப​டிப்​பில் சேர்க்க வந்த போது சூட்​கேஸ் தவ​ற​விட்​ட​தாக காவல் நிலை​யத்​தில் வந்து தெரி​வித்​தார்.​ போலீ​ஸôர் அவரை எச்சரித்து சூட்​கேஸ் அவ​ரி​டம் ஒப்​ப​டைத்து அனுப்பி வைத்​த​னர்.​


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ரேஷன் கார்​டில் புகைப்​ப​டத்தை மாற்றி விவ​சா​யி​யி​டம் நிலம் மோசடி

 கட​லூர்:

               அட​மா​னம் செய்து கொடுத்த நிலத்தை,​​ ரேஷன் கார்டில் புகைப்​ப​டத்தை மாற்றி,​​ பத்​திர மோசடி செய்து விற்​பனை செய்​த​தாக இரு​வ​ரைப் போலீ​சார் தேடி​வ​ரு​கி​றார்​கள்.​ க​ட​லூர் அருகே சோனஞ்​சா​வ​டி​யைச் சேர்ந்த விவ​சாயி கிருஷ்​ண​மூர்த்​தி​யின் மகன் அசோக்​கு​மார் ​(47).​ வைரங்​குப்​பத்​தைச் சேர்ந்த விஜ​ய​ரங்​க​னின் மகன் சதீஷ்​கு​மார் ​(26),​ பழ​நி​வே​லின் மகன் அசோக்​கு​மார் ​(49) ஆகி​யோர் தங்​க​ளது 2.4 ஏக்​கர் நிலத்தை சோனஞ்​சா​வடி அசோக்​கு​மா​ரி​டம் ரூ.​ 40 ஆயி​ரத்​துக்கு 1992-ல் அட​மா​னம் வைத்​த​ன​ராம்.​ 

                    அந்த நிலத்தை திருப்​பித் தரு​மாறு கே.அசோக்​கு​மா​ரி​டம் சதீஷ்​கு​மார்,​​ பி.அசோக்​கு​மார் ஆகி​யோர் அண்​மை​யில் கேட்​ட​ன​ராம்.​ அட​மா​னத் தொகை ரூ.​ 40 ஆயிரம் கொடுத்​தால்,​​ நிலத்​தைத் தந்து விடு​வ​தா​கக் கூறி​னார் சோனஞ்சா​வடி அசோக்​கு​மார்.​ ஆனால் அவர்​கள் பணத்​தைக் கொடுக்​கா​மல் சென்​று​விட்​ட​ன​ராம்.​ இந்​நி​லை​யில் சோனஞ்​சா​வடி அசோக்​கு​மா​ரின் ரேஷன் கார்டை பிரதி எடுத்து வந்து,​​ அதில் பண்ருட்டியை அடுத்த வடக்கு அப்​பி​யம்​பேட்டையைச் சேர்ந்த உக்​கி​ர​வேல் ​(52) என்​ப​வ​ரது புகைப்​ப​டத்தை இணைத்​த​ன​ராம்.​ அந்த ரேஷன் கார்டை பயன்​ப​டுத்தி,​​ அவர்​தான் சோனஞ்​சா​வடி அசோக்​கு​மார் என்று கூறி,​​ பிரச்​னைக்கு உரிய நிலத்தை தொழிற்​சாலை உரி​மை​யா​ளர் ஒரு​வ​ருக்கு விற்று விட்​ட​ன​ராம்.​ இந்த விவ​ரம் அண்​மை​யில்​தான் சோனஞ்​சா​வடி அசோக்​கு​மா​ருக்​குத் தெரி​ய​வந்​தது.​ இது குறித்து மாவட்​டக் காவல் கண்​கா​ணிப்​பா​ள​ரி​டம் புகார் செய்​தார்.​ எஸ்.பி.யின் உத்​த​ர​வின் பேரில்,​​ மாவட்ட குற்றப்​பி​ரிவு போலீஸ் உதவி ஆய்​வா​ளர்​கள் குண​சே​க​ரன்,​​ மகேஸ்​வரி ஆகி​யோர் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி​னர்.​ இது தொடர்​பாக வைரங்​குப்​பம் அசோக்​கு​மார்,​​ சதீஷ்குமார் ஆகி​யோ​ரைப் போலீ​ஸôர் தேடி வரு​கி​றார்​கள்.​

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior