உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

2013 ஜனவரி மாதத்திற்குள் கடலூர் மாவட்டத்தை பூஜ்யக் கழிவு மாவட்டமாக மாற்ற கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர், :


        பிளாஸ்டிக் கொடிகளுக்கு பதிலாக துணிக்கொடிகளை பயன் படுத்துமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் ஆட்சியர்ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்கி பேசுகையில்


         ‘சமுதாயத்திற்கு முன்னோடியாக இருக்கும் அரசியல் கட்சியினர் வரும் காலங்களில் கொடி தோரணங்கள் போன்றவற்றை துணிகளில் வடிவமைக்க வேண்டும். அதன் காரணமாக சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும். துணிக்கொடிகளை திரும்பவும் பயன்படுத்தலாம். அதை போல பிளக்ஸ் போர்டுகளையும் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே அமைக்க வேண்டும். 2013 ஜனவரி மாதத்திற்குள் கடலூர் மாவட்டத்தை பூஜ்யக் கழிவு மாவட்டமாக மாற்ற அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றார்.

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

சிதம்பரம் :


             அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. அண்ணாமலை பல்கலைக் கழக மின்னியல் துறையில் 2003-2007ம் ஆண்டு பயின்ற மாணவர்களின் சந்திப்பு கூட்டம்சிதம்பரத்தில் கடந்த 5ம் தேதிநடந்தது. இதில் வெளிமாநில மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கடவுள் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் மாணவர்கள் தங்கள் கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுடன் பயின்று இறந்த மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தினர். பல்கலைக் கழக மாணவர்களின் சாதனை பேட்டி, குறுஞ்சித்திரங்கள் ஒளிபரப்பப்பட்டன. ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.ஏற்பாடுகளை இன்ஜினியர் வில்வசபேசன், விஜயகாந்த், சபரி, செந்தில்ராஜா, முருகன், வினோத், முருகானந்தன், சரத்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior