உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 13, 2010

பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய குடும்பம்

நெய்வேலி:

            நெய்வேலியை அடுத்த கொக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 9 சென்ட் நிலத்தை கொக்கன்குப்பத்தைச் சேர்ந்த காசிநாதன் மற்றும் முருகேசன் குடும்பத்தினர் தானமாக வியாழக்கிழமை வழங்கியுள்ளனர். அம்மேரி ஊராட்சிக்கு உள்பட்ட கொக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராம கல்விக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கோ.தங்கராசு தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் இருதயமேரி வரவேற்றார். அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மற்றும் முருகேசன்  குடும்பத்தினர் தங்கள் குடும்ப சொத்து 9 சென்ட் நிலத்தை வட்டார மேற்பார்வையாளர் ஜம்புலிங்கம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் நடராஜன் முன்னிலையில் பள்ளிக்குத் தானமாக வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கு.பாண்டியன், கல்வியாளர் சாமிக்கண்ணு, ஆசிரியர்கள் இம்மானுவேல்மேரி, கயல்விழி, பிருந்தா உள்ளிட்டோர் விழாவில்  கலந்துகொண்டனர். உதவி ஆசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.

Read more »

தனியார் அனல் மின் நிலையம்: மீனவர் பேரவை எதிர்ப்பு

கடலூர்:

           கடலூர் அருகே அமைய இருக்கும் தனியார் அனல் மின் நிலையத்துக்கு, தமிழ்நாடு மீனவர் பேரவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.  மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன், செயலாளர்  கே.முருகன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் அமைந்து இருக்கும் ரசாயனத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதால், மீனவர்களின் தொழில் ஏற்கெனவே பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதுக்குப்பம் அருகே தனியார் அனல் மின் நிலையம் அமைக்க  ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன் அருகே துறைமுகம் ஒன்றும் கட்டப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விரு நிறுவனங்களும் அங்கு அமைக்கப் பட்டால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே இந்த தனியார் அனல் மின் நிலையத்தை மீனவர் பேரவை கடுமையாக  எதிர்க்கிறது. தனியார் அனல் மின் நிலையம் அமைய இருப்பதைக் கண்டித்து, அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து, இம்மாதம் 25-ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

Read more »

வடலூரில் சிறப்பு மருத்துவ முகாம்

நெய்வேலி:

        உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வடலூர் வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. வடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற முகாமை வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளி தாளாளர் செல்வராஜ் தொடங்கிவைத்தார். முகாமின் போது இதய அறுவை சிகிச்சை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, காது மூக்கு  தொண்டை, சிறுநீரகம், கருப்பை நோய்களுக்கு புதுச்சேரி பிம்ஸ் மருத்துமனை மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கினர். இதில் 397 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு பிம்ஸ் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா மற்றும் வடலூர் வட்டார  மருத்துவ அலுவலர் லட்சுமி சீனுவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

Read more »

திருமணத்துக்கு வந்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை திருட்டு

கடலூர்:

             திட்டக்குடி அருகே திருமண விழாவுக்கு வந்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டன. திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே பொயனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதாவுக்கும், ராமநத்தம் வடிவேலுவுக்கும் வெள்ளிக்கிழமை ராமநத்தத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு ரஞ்சிதாவின் தோழி, அரியலூர் மாவட்டம் துங்கபுரத்தைச் சேர்ந்த ஆசிரியை கவிதா தனது தாயாருடன் வந்து இருந்தார். திருமணத்துக்கு வந்தபோது அணிந்து இருந்த தனது 8.5 பவுன் நகைகளை கவிதா ஒரு பையில் வைத்து, தாயார் தனலட்சுமியிடம் கொடுத்து இருந்தார். குழந்தையை கவனித்துக் கொண்டு இருந்த தனலட்சுமியிடம் இருந்த நகை, எப்படியோ திருடு போய்விட்டது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம். ராநமநத்தம் போலீஸôர் வழக் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Read more »

ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:
 
               மங்கலம்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
 
                 ஓய்வு பெற்ற அலுவலர்களை பணியில் அமர்த்துவதற்கான அரசாணையைக் கண்டித்து பிப்ரவரி 3-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாகை மற்றும் கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்தும் மங்கலம்பேட்டை கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் அசோகன், வழக்கறிஞர் சங்க மாநில க் குழு சந்திரசேகரன், விஜி, சிவஞானம், ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

திமுக அரசின் திட்டங்கள் தொடராது

சிதம்பரம்:

           திமுக ஆட்சியில் தற்போது வழங்கப்பட்டு வரும் கலர் டிவி, இலவச எரிவாயு, குடிசை வீடுகளுக்கு மாற்றாக கான்கீரிட் வீடுகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தொடராது என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரத்தை அடுத்த திருநாரையூர் கிராமத்தில் 854 குடும்பங்களுக்கு கலர் டிவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

விழாவில் அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று கலர் டிவிக்களை வழங்கிப் பேசியது: 

             தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். கலர்டிவி வழங்க முடியாது; 1 கிலோ அரிசி ரூ.1-க்கு கொடுக்க முடியாது; கருணாநிதி பொய் சொல்கிறார் என ஜெயலலிதா சொன்னார். ஆனால் அனைத்தையும் வழங்கி ஜெயலலிதா சொல்வதுதான் பொய் என முதல்வர் நிருபித்துவிட்டார். இனிமேல் ஜெயலலிதா சொல்வது எதுவும் உண்மையல்ல என்பதற்கு இதுவே உதாரணம்.÷ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்கள் தொடராது. எனவே பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் நன்றியாக இருக்க வேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு திமுக ஆட்சியில்தான் நேரடியாக திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இது திமுக அரசின் சாதனையாகும்.

                    தமிழகத்தில் 18 லட்சத்து 86 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.121 கோடியே 17 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 36,667 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. குடிசை வீடுகளை கான்கிரீட் விடுகளாக மாற்றும் திட்டத்தை வருகிற மார்ச் 3-ம் தேதி தஞ்சையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் 21 லட்சம் குடிசைகள் அகற்றப்பட்டு கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டப்படவுள்ளன. 6 ஆண்டுகளில் இத்திட்டம் முழுமைப்பெறும். தமிழகத்தில் அதிகளவில் குடிசை உள்ள மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது. கடலூர் மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக விளங்குகிறது. எனவே இந்த இரு மாவட்டங்களும்தான் அதிகம் பயன்பெறும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ம.சோழன் வரவேற்றார். குமராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் இரா.மாமல்லன் முன்னிலை வகித்துப் பேசினார். மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தலைமை வகித்துப் பேசினார். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் வி.ஆர்.ராஜேந்திரகுமார், ஒன்றியக் கவுன்சிலர் தனலட்சுமி பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

Read more »

நகராட்சியில் வரி நிலுவைத் தொகை வீடு, கடைகள் முன் 'தண்டோரா'

கடலூர் : 

             கடலூர் நகரில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள வரி நிலுவைத் தொகைக்காக அதிகாரிகள் முன்னிலையில் தண்டோரா போடப்பட்டது. கடலூர் நகராட்சியில் 10 கோடி ரூபாயிற்கு மேல் வரிபாக்கி நிலுவையில் உள்ளது. இதனை வசூலித்திட நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 2 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

            இந்நிலையில் வசூலை மேலும் தீவிரப்படுத்த கமிஷனர் குமார் மற்றும் வருவாய் அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் உத்தரவின் பேரில் நேற்று மஞ்சக்குப்பம் பகுதியில் வரி பாக்கி வைத்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன் தண்டோரா போடப்பட்டது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உடன் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், பில் கலெக்டர்கள் முத்துக்குமார் லட்சுமணன், சின்னப்பராஜ், மாகன் ஆகியோர் இருந்தனர். இதுகுறித்து வருவாய் அதிகாரிகள் தெரிவிக்கையில் "வரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு முன்னறிவிப்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தண்டோரா மூலமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காலதாமதம் ஆகும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என தெரிவித்தனர்.

Read more »

தி.மு.க., ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்: அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்

காட்டுமன்னார்கோவில் :

               தமிழக முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதுவரை 36,667பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். குமராட்சி அடுத்த திருநாரையூர் கிராமத்தில் அரசு இலவச "டிவி' வழங் கும் விழா நடந்தது. டி.ஆர்.ஒ., நடராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சோழன் வரவேற்றார். குமராட்சி சேர்மன் மாமல் லன், ஆர்.டி.ஓ., ரங்கராஜ் முன்னிலை வகித்தனர். விழாவில் 854 பயனாளிகளுக்கு இலவச "டிவி' வழங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:கடந்த ஐந்து ஆண்டுகளில் திருநாரையூர் ஊராட் சியில் 58 லட்சத்து 90 ஆயிரம் செலவில் சாலை உள் ளிட்ட பல்வேறு நலத் திட்ட பணிகள் நடந்துள் ளது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக மக்களுக்கு நேரிடையாக சென்று திட்டங்களை கொடுப்பது தி.மு.க., அரசு மட்டுமே.

             மாநிலம் முழுவதும் 18 லட்சத்து 86 ஆயிரம் கர்ப் பிணி பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளது. வெள்ளத்தால் குடிசை பகுதிகள் பாதிப்பதை தவிர்த்திட குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றும் திட்டத்தை திருச்சியில் மார்ச் 3ல் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 3.5 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட் டுள்ளது. குடிசைகள் அதிகம் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் இதனால் அதிகம் பயன் பெறும். கருணாநிதியின் இந்த மக்கள் திட் டங்கள் ஜெ., ஆட்சிக்கு வந்தால் இருக்காது. எனவே தி.மு.க., ஆட் சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதுவரை 121கோடியே 17 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 36,667 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என பேசினார்.விழாவில் தாசில்தார் வீரபாண்டியன், பி.டி.ஓ., க்கள் ஆண்டவர், பாலசுப்ரமணியன், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், தனலட்சுமி பங்கேற்றனர். ரகுராமன் நன்றி கூறினார்.

Read more »

பண்ருட்டி நகராட்சியை கண்டித்து போராட்டம்: வணிகர் பேரவை மாநில தலைவர் பேட்டி

பண்ருட்டி : 

            பண்ருட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கூறினார். பண்ருட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன் வாடகை பிரச்னையில் சூறையாடப்பட்ட கடை மற்றும் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகம் மேற் கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றலில் பாதித்த கடைகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள் ளையன் பார்வையிட்டார்.

பின்னர் அவர்  கூறியதாவது:

பூட்டிய கடையை நள் ளிரவில் சூறையாடிய சம் பவத்தில் ஈடுபட்டவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பஸ் நிலைய கடைகள் மூலம் நகராட்சிக்கு அதிகம் வருமானம் கிடைக்கிறது. கடை வாடகைதாரர்கள் நிழலுக்காக கடைமுன் பாக நான்கடி கொட்டகை போடுவது வழக்கம். அதனை நகராட்சி நிர்வாகம் அராஜகமாக அகற்றியது கண்டிக்கத்தக்கது. பஸ்நிலையத்தில் சுகாதார வசதிகள் முற்றிலும் சீர்கெட்டு தூர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் வசதி, இலவச கழிவறை வசதி இல்லை. இதனை நிறைவேற்றிட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றார். பேட்டியின் போது மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன் உடனிருந்தனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் உதயம்

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்க அறிமுக கூட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் மாநில தலைவர் அந்தோணி தலைமையில் இயங்கி வருகிறது. கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் சங்கம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலும் சங்கம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 14ம் தேதி கடலூர் டவுன்ஹாலில் ஓய்வு பெற்ற காவலர் அலுவலர்கள் நல சங்க அறிமுக கூட்டம் மாவட்டத் தலைவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் நடக்கிறது.

Read more »

உலகத் தமிழ் இணைய மாநாடு: கம்ப்யூட்டர் வரைகலை போட்டி

கடலூர் : 

                 பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலை போட்டி கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று நடந்தது. கோவை செம்மொழி மாநாட்டில் நடைபெறும்  உலகத் தமிழ் இணைய மாநாட்டில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் தமிழ் வரைகலைப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தேர்வுப் போட்டி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் நேற்று நடந்தது.  இப்போட்டியில் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக தமிழில் வெவ் வேறு தலைப்புகள் வழங்கப்பட்டது. கடலூர் ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த போட்டித் தேர்வுக்கு மாவட்டம் முழுவதுமிருந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 205 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

               நிகழ்ச்சியை சி.இ.ஓ., அமுதவள்ளி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி நிறுவனர் சேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., கதிர்வேல், டி. இ.ஓ., விஜயா, ராஜேந்திரன், எல்காட் நிறுவன மேலாளர் காமேஸ்வரன் கலந்து கொண்டனர்.

Read more »

வணிகர்கள் நன்கொடை தர மாட்டார்கள்: வெள்ளையன் பேட்டி

கடலூர் : 

                  வணிகர்களை மிரட்டி மாமூல் பறிக்கும் ரவுடிகள் கும்பல் அதிகரித்துள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறினார்.  தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் நேற்று கடலூர் வந்தார். சில மாதங்களுக்கு முன் மஞ்சக்குப்பம் மார்க்கெட்டில் தீப்பிடித்து எரிந்த கடைகளையும், பஸ் நிலையத்தில் ரவுடிகள் மாமூல் கேட்டு தாக்கிய கடையையும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடலூர் மாவட்டத்தில் வணிகர்களிடம் ரவுடிகள் "மாமூல்' கேட்டு மிரட்டி பணம் பறிப்பதை முழுமையாக ஒடுக்கப்பட வேண்டும்.

              தற்போது அனைத்து அரசியல் கட்சிகளிலும், அரசியல்வாதிகளிடமும் மிதமிஞ்சிய அளவில் பணம் உள்ளது. அவர்கள் பெயரைச் சொல்லி ரவுடிகள் வசூல் செய்கின்றனர். "ஆன்லைன்' வணிகத்தினால் தற்போது ஏகபோக தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் 10 வணிகர்கள் செய்யக்கூடிய வியாபாரத்தை ஒருவரே செய்வதால் பலருக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
                     இதுபோன்ற தவறான பொருளாதார கொள்கையால் இல்லாதவர்கள், வணிகர்களை மிரட்டி "மாமூல்' வசூலிப்பது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இனி வணிகர்கள் யாருக்கும் நன்கொடை கொடுக்க மாட்டார்கள். சென்னையில் உள்ளது போல் அனைத்து கடைகளிலும் "நன்கொடை இல்லை' என்ற அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் வணிகர் சங்க பேரவை மாநில இணை செயலர் கோபாலகிருஷ்ணன், நகர பேரவை துணை செயலர் மதிசேககர் மற்றும் நிர்வாகிகளுடன் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசை சந்தித்து பேசினார்.

Read more »

போலி பிராந்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு: புவனகிரி போலீசார் கூண்டோடு மாற்றம்

கடலூர் : 

                 போலி பிராந்தி தொழிற்சாலை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய புவனகிரி போலீசார் 12 பேரை நேற்று அதிரடியாக மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம், புவனகிரியில் போலி பிராந்தி பாட்டில் விற்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து எஸ்.பி., உத்தரவின் பேரில் சிதம்பரம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கடந்த 10ம் தேதி புவனகிரி ஏ.எஸ்.ஆர். நகரில் இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை சோதனையிட்டு அங்கிருந்த இயந்திரங்கள், போலி லேபிள்கள், ஆயத் தீர்வு ஸ்டிக்கர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய் தனர். மேலும், இதுதொடர்பாக புதுச்சேரி மாநிலம் அரங்கனூர் வெங்கடேசனை கைது செய்தனர்.

                 அவரிடம் விசாரணை செய்ததில் கடந்த ஒன்னரை ஆண்டாக இந்த போலி மதுபான தொழிற் சாலை இயங்கி வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, புவனகிரி இன்ஸ்பெக்டர் கண்ணனை கடலூர் முதுநகருக்கும், தனிப் பிரிவு ஏட்டு லட்சுமிராமனை கிள்ளை போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்து டி.ஐ.ஜி., மாசானமுத்து உத்தரவிட்டார்.
                  இதுகுறித்து எஸ்.பி., நேரடியாக விசாரணை மேற்கொண்டதில், போலீசாருக்கு தெரிந்தே போலி மதுபான தொழிற்சாலை இயங்கி வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை மாவட்ட குற்றப் பிரிவிற்கும், ஏட்டுகள் மற்றும் போலீசார் சுந்தரகுமார், முருகேசன், உதயகுமார், ஆறுமுகம், பாலசுந்தரம், ராமலிங்கம், உதயா செல்வம், கப்பதுரை, பாபு, முரளிராஜன், பார்த்தசாரதி ஆகிய 11 பேரை மாவட்டத்தின் பிற ஸ்டேஷன்களுக்கு மாற்றம் செய்தும், இவர்களுக்கு பதிலாக பிற போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்து 10 பேர் புவனகிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றம் செய்து நேற்று மாலை உத்தரவிட்டார்.

Read more »

பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் அதிக வழக்குகள் பதிவு: எஸ்.பி.,

பண்ருட்டி : 

                  பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தப்படும் என எஸ்.பி,. கூறினார். பண்ருட்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் எஸ்.பி.,அஷ்வின் கோட்னீஸ் நேற்று தீடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர் கூறியதாவது:

                    பண்ருட்டி நகரில் போக்குவரத்து சீரமைக்க ஆய்வு செய்வதற்காக ஆலோசனை நடத்தினேன். நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் அகற்ற கூறியுள்ளேன். தற்போது போலீசார் பற்றாக்குறை காரணமாக 16 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது. பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் போலீஸ் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பின் நான்குமுனை சந்திப்பு, பஸ் நிலையம் ஆகிய பகுதியில் பார்வையிட்டு மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior