உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 24, 2010

கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

உலக மக்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த கிருஸ்துமஸ் தின ( 25/12/2010 - சனிக்கிழமை ) நல்வாழ்த்துக்கள்

Read more »

பெண்ணையாற்று தடுப்பணைப் பகுதியில் நிலங்களை அரித்துச் சென்ற ஆற்று வெள்ளம்


கடலூரில் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், இரு கரைகளிலும் உள்ள நிலங்கள் அரித்துச் செல்லப்பட்டதால், ஆற்று நடுவே தீவுபோல் காட்சி அளிக்கும்  காட்சி 

கடலூர்:

             கடலூர் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டப்படும் பகுதியில், அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, விளைநிலங்களை அரித்துச் சென்றுவிட்டது.  கடலூர் வழியாக ஓடி பெண்ணயாறு வங்கக் கடலில் கலக்கிறது. 

            இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு இல்லாத காலங்களில், ஆற்றின் கழிமுகப் பகுதி வழியாக, கடல் நீர் சுமார் 15 கி.மீ. வரை புகுந்து விடுகிறது. இதன் காரணமாக கடலூர், புதுவை மாநில விளை நிலங்களில் நிலத்தடி நீர், உவர் நீராக மாறிவருகிறது. இதைத் தடுக்க பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டினால், கடல் நீர் உள்புகுவது தடுக்கப்படும் என்றும், தடுப்பணையில் தேங்கும் ஆற்று நீரால், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், உவர் தன்மையும் மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

            இது கடலூர் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை ஆகும்.  எனவே பெண்ணை ஆற்றில் கடலூர் குண்டுசாலைப் பகுதிக்கும், புதுவை மாநிலம் ஆராய்ச்சிக்குப்பம் பகுதிக்கும் இடையே, ரூ. 12 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இப்பணியை புதுவை மாநில பொதுப்பணித் துறை ஏற்று செயல் படுத்துகிறது. பெரும்பாலான வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. தடுப்பணைக்கு மேல், மக்கள் போக்குவரத்துக்கு வசதியாக இரு பகுதிகளையும் இணைக்கும் பாலமும் அமைக்கப்பட உள்ளது.  இந்த நிலையில் அண்மையில் பெய்த கனமழையால் பெண்ணை ஆற்றில் பெருமளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.  

            இதனால் தடுப்பணையின் இரு கரைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், புதுவை மாநிலப் பகுதியில் விளை நிலங்களையும், கடலூர் பகுதியில் சாலையோர நிலத்தையும் பெருமளவுக்கு அரித்துச் சென்றுவிட்டது. இதனால் தடுப்பணைக்கு மேல் உடனடியாக ஆள்கள் செல்லமுடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.  ஆற்றில் தற்போது உள்ள நீர் மட்டம் குறைந்தால்தான் தடுப்பணைக்குச் செல்ல முடியும். 

             தடுப்பணை கட்டப்பட்டு உள்ள பகுதியில், ஆற்று வெள்ளம் அதிவேகத்தில் செல்லும் நிலை உள்ளது.  எனவே தற்போதைய திட்டத்தில் தடுப்பணையைக் கட்டி முடித்தாலும், வெள்ள காலங்களில் தடுப்பணையின் இரு கோடியிலும் இருக்கும் நிலங்கள், அரித்துச் செல்லப்படாமல் பாதுகாப்புடன் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்து இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.    

Read more »

கடலூரில் கிராம மக்கள் திடீர் மறியல்; தனியார் கம்பெனி வேன் சிறை பிடிப்பு

4 மாணவிகள் பலி எதிரொலி:

 

 கிராம மக்கள் திடீர் மறியல்;

 

 வேன் சிறை பிடிப்பு

 

டலூர்:

         கடலூரை அடுத்துள்ள பெத்தாங்குப்பத்தில் தனியார் கம்பெனி வேனும், பள்ளி மாணவிகளை ஏற்றிவந்த வேனும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் திருச்சோ புரம், நந்தீஸ்வரன்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவிகள் அபிராமி, அகிலாண்டேஸ்வரி, பவித்ரா, திவ்யா ஆகியோர் பலியானார்கள்.

            விபத்துக்கு காரணமான தனியார் கம்பெனியின் வேன் நிர்வாகத்தினர் இதுவரை எவ்வித ஆறுதலும் கூறாததால் மாணவிகளை இழந்த கிராமத்தினர் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மாணவிகளின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.  மாண்டியாம்பள்ளம், தாழஞ்சாவடி ஆகிய பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திருச்சோபுரத்தில் உள்ள தனியார் கம்பெனி முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் கடலூர்- சிதம்பரம் ரோட்டில் மறியல் செய்தனர்.

             அப்போது அவ்வழியே வந்த தனியார் கம்பெனியின் வேனையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்தனர். சம்மந்தப்பட்ட கம்பெனி நிர்வாகத்துடன் பேசி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Read more »

சிதம்பரத்தில் காய்கறி விலை இருமடங்கு உயர்வு

சிதம்பரம்:

           சிதம்பரம் நகரில் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பூண்டு கிலோ ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 தற்போது காய்கறி விலை கிலோ ஒன்றுக்கு விவரம் வருமாறு (பழையவிலை அடைப்புக் குறியில்):  

பெல்லாரி வெங்காயம் ரூ.50 (ரூ.24), 
சின்ன வெங்காயம் ரூ.40 (ரூ.20), 
தக்காளி ரூ.30 (ரூ.18), 
கத்திரிக்காய் ரூ.40 (ரூ.16), 
வெண்டை ரூ.30 (ரூ.16), 
பீன்ஸ் ரூ.40 (ரூ.20), 
கேரட் ரூ.40 (ரூ.16), 
அவரை ரூ.60 (ரூ.24), 
பீட்ரூட் ரூ.30 (ரூ.16), 
முட்டைகோஸ் ரூ.24 (ரூ.12). 

ஹோட்டல்களில் விலை உயர்வு:  

              இதனால் நகரில் ஹோட்டல்களில் சாப்பாடு விலை உயர்ந்துள்ளது. ஒரு சாப்பாடு ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார்சல் சாப்பாடு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தோசை ரூ.18, ரோஸ்ட் ரூ.25, பூரிகிழங்கு ரூ.15, பூரி சாம்பார் ரூ.18, இட்லி 5 என விற்பனை செய்யப்படுகிறது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

         வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

                கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பள்ளியிறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

              மனுதாரர் முறையாகப் பள்ளியில் 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பின்னர் 10வது பள்ளியிறுதித் தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்தவர்களாக இருந்து, தமது கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல், உயிர்ப் பதிவேட்டில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் 45வயதிற்குள்ளும், இதரவகை பயனாளிகள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு நிறுவனங்களிலோ அல்லது எந்தவொரு தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருக்கக் கூடாது. சுய தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

                 பள்ளி அல்லது கல்லூரியில் பயிலும் முழுநேர மாணவர்களாக இருக்கக் கூடாது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்த விவரங்கள் அடிப்படையில் தகுதி உள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் தங்களின் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடை யாள அட்டை ஆகியவற்றுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் செய்த அனைவருக்கும் தகுதி அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை அரசால் வழங்கப்படும்.

Read more »

விருத்தாசலம் நகராட்சியில் வரி பாக்கி செலுத்தாவிடில் குடிநீர் சப்ளை துண்டிப்பு: ஆணையாளர் எச்சரிக்கை

ஸ்ரீமுஷ்ணம்:

         விருத்தாசலம் நகராட்சியில் வரிபாக்கி செலுத்தாதவர்கள் வீட்டு குடிநீர் சப்ளை துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் திருவண்ணாமலை கூறினார்.

இது குறித்து விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் திருவண்ணாமலை கூறியது:-

          விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் அரசு ஆணையின்படி 100 சதவீத வரிவசூல் செய்து முடிக்க வேண்டும். இதனால் வீட்டுவரி மற்றும் வருவாய் ஆய்வாளர், நகர அமைப்பு ஆய்வாளர்கள் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்கள் ஆகியோர் கொண்ட தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வசூல் செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் வரிபாக்கி குடிநீர் கட்டண பாக்கி உள்ளவர்கள் மீது ஜப்தி, குடிநீர் சப்ளை துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிது.

               எனவே இந்த மாத இறுதிக்குள் வரி பணம் கட்ட தவறுபவர்கள் மீது இதுபோல் அதிரடியாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்த தவறியவர்களின் பெயர்கள் மற்றும் வரித்தொகை பாக்கிகளை பட்டியல் போட்டு நாளிதழில் வெளியிடப்படும்.

              விருத்தாசலம் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும்போது இறப்பு போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நகர வியாபாரிகள், மருத்துவர்கள் நகர பொதுமக்கள் மற்றும் தன்னார்வு தொண்டு நிறு வனங்களை சேர்ந்தவர்களை முன்வைத்து சிறப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

CPI (M) calls for speedy disbursement of flood relief

CUDDALORE: 

        The district unit of the Communist Party of India (Marxist) has urged the authorities to ensure speedy disbursement of compensation to people in flood-affected areas of the district.

        In a statement, district secretary of the party T. Arumugham said that though the government had announced the quantum of relief, it was yet to reach the affected. The party also demanded compensation to the tune of Rs. 2,500 each to daily wage workers, handloom weavers, construction workers and fishermen who lost their livelihood during the rains.

          It suggested implementation of permanent flood control measures such as formation of two new drainage channels to carry excesses from the Velliangal Odai and the Ponneri to the Kollidam, execution of the Aruvamukku scheme at Thiruchopuram to drain water from the Paravanar, and, deepening of the Veeranam tank and the Wellington lake. The party also called upon the authorities to take up the construction of high-level bridges at Thirumanikuzhi and Murugankudi.

          Collector P. Seetharaman has said that of 18 persons who died in rain-related incidents, a compensation of Rs. 2 lakh each had been given so far to eight families. Breeders of 326 of the 335 cattle heads lost in the floods had been given a compensation of Rs. 12.20 lakh. A solatium of Rs. 2.86 crore at the rate of Rs. 5,000 each to 935 of the 1,162 fully damaged huts and Rs. 2,500 each to 11,952 of the 14,595 partly damaged houses had been given.

             The Collector said Village Administrative Officers and agricultural officers had been deployed for collecting details about crops that had suffered damage of 50 per cent and above.

Read more »

Drive intensified

CUDDALORE: 

        On the direction of Collector P. Seetharaman, Regional Transport Officer M. Jayasankaran has intensified the drive to check the vehicles owned by educational institutions and private vehicles on school/college duty.

         On Thursday, officials inspected 190 autorickshaws and 160 other vehicles, including cars and vans, carrying school students on Cuddalore-Chidambaram road in a single day. They booked 28 autorickshaws and 12 other vehicles for reasons such as carrying students in excess of the permitted level and operating the vehicles without insurance cover.

Read more »

The Cooperative Department here started selling Onion at Rs. 22 a kg

CUDDALORE: 

          The Cooperative Department here started selling onion (Bellary variety) at Rs. 22 a kg through its 10 outlets located across the Cuddalore district from Thursday.

          Joint Registrar of Cooperatives S.R. Venkatesan in a statement here said the soaring prices of onion in the open market had seriously affected the households. Hence, to enable them get onion at reasonable prices, the department had started the sale of onions through cooperative outlets from Thursday.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior