உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 28, 2009

லாரி மீது வேன் மோதல்: 10 பேர் படுகாயம்

சிதம்பரம் :

                   சிதம்பரம் அருகே லாரி மீது வேன் மோதியதில் மேல்மருத்தூர் பக்தர்கள் 10 பேர் காயமடைந்தனர்.
             
                  நாகை மாவட்டம், பூம்புகாரில் இருந்து மேல்மருத்துவார் கோவிலுக்கு நேற்று 5க்கும் மேற்பட்ட வேன்களில் பக்தர்கள் சென்றனர். சிதம்பரம் அடுத்த மணலூர் அருகே வேன்கள் சென்றுக் கொண்டிருந்தன. அப்போது முன்னால் சென்ற லாரி திடீர் பிரேக் போட்டதால் பின்னால் சென்ற வேன் லாரியில் மோதியது. அடுத்தடுத்து சென்ற வேன்களும் லேசான மோதலுடன் நின்றன.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மேல்மருவத்தூர் பக்தர் களான பூம்புகாரை சேர்ந்த வினோதினி (18), அமுதா (50), பூங்கொடி (21), பிரேமா (27), முத்துலட்சுமி (35), சித்ராபவுன்(30) உட்பட 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

சாலை விரிவாக்க பணி மந்தம் மீதிக்குடிக்கு போக்குவரத்து தடை

கிள்ளை :

            சிதம்பரநாதன்பேட்டை -மீதிகுடி சாலை விரிவாக்க பணி கிடப்பில் போடப் பட்டதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பரங்கிப்பேட்டை ஒன்றியம் சிதம்பரநாதன்பேட்டை யை சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பாட்டிற்காக மினி பஸ் இயக்கப்பட்டது. சிதம்பரநாதன்பேட்டை-மீதிகுடி வளைவில்  உள்ள  பாலம் பழுதடைந்ததால் ஆறு மாதத்திற்கு முன்பு இந்த வழியாக இயக்கப்பட்ட மினி பஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. குண்டும் குழியுமான இந்த சாலையை அகலப்படுத்தி தார்சாலை அமைக்க 54 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கி டெண்டர் விடப்பட்டது. மூன்று மாதத்திற்கு முன் சாலை அகலப்படுத்தும் பணி துவங்கியது. சாலை ஓரங்களில் கிராவல் மற்றும் கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டது. கல்வெர்ட்டுகளை கட்ட தோண்டிய பள்ளத்தை உரிய காலத்தில் சரி செய்யாததால் அப்பகுதியில் சுமார் 60 ஏக்கருக்கும் மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியவில்லை. பஸ் போக்குவரத்தின்றி அப்பகுதி மக் கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமத் திற்கு உள்ளாகியுள்ளனர். சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

இரவில் மாட்டு தொழுவமாக மாறிவிடும் நஞ்சைமகத்து வாழ்க்கை நடுநிலைப்பள்ளி



கிள்ளை :

          நஞ்சைமகத்து வாழ்க்கை நடுநிலைப் பள்ளி இரவில் ஆடு, மாடுகளின் தொழுவமாக மாறிவிடுவாதல் ஆசிரியர்கள், மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

             சிதம்பரம் அடுத்த நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தில் ஆதிதிரவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி உள்ளது. சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த 286 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியில் குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளிக்கு மதிற்சுவர் இல்லாததால் இரவு நேரத்தில் ஆடு, மாடுகள் தங்கும் தொழுவமாக மாறிவிடுகிறது. மேலும் அப்பகுதியினர் பள்ளியை பாராக மாற்றி இரவு நேரங்களில் குடித்துவிட்டு பிளாஸ்டிக் கப், பாட்டில்கள்,சிகரெட் துண்டுகளை பள்ளி வளாகத்திலேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள், பள்ளி வளாகத்தில் கிடக்கும் சாணம் மற்றும் மதுபாட்டில்களை சுத்தம் செய்யும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியை நேரில் பார்வையிட்டு  தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மதிற்சுவர் அமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

முன்னாள் மாணவர்கள் சங்க துவக்க விழா

விருத்தாசலம் :

               விருத்தாசலம் திருமுதுகுன்றம் திருமண மண் டபத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி முன் னாள் மாணவர்கள் சங்க துவக்க விழா நடந்தது. கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சபாநாதன் வரவேற்றார். விழாவில் சிவக்குமார், நாத், ராஜசேகரன், சுரேஷ் சந்த், ஜெயசங்கர், அருணாசலம், சீனுவாசன் உட்பட பலர் சங்கம் செயல்படும் முறை குறித்து பேசினர். ராஜசேகரன் நன்றி கூறினார்.

Read more »

உழவர் சந்தையில் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்ய வேளாண் அதிகாரி அறிவுரை

பரங்கிப்பேட்டை :

                 பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள வேளாண் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் காய்கறிகளை உழவர் சந்தையில் நேரடியாக விற்பனை செய்ய வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார்.

              இதுகுறித்து பரங்கிப்பேட்டை ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜராஜசோழன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

                    சிதம்பரம் உழவர் சந்தை புதுப்பொலிவுடன் செயல்பட தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறி, பழங்கள் மற்றும் கீரை வகைகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்யலாம். இதனால் இருதரப்பிலும் முழுமையான பலன் கிடைக்கிறது. உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்த பொருளை விற்பனை செய்ய உழவர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விருப்பம் உள்ளவர்களுக்கு புதிய உழவர் அடையாள அட்டைகள் வழங்கப்படும். ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் 50 சதவிதம் மான்ய விலையில் உழவர் சந்தை பெருமக்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்கப்படும்.

Read more »

லட்சார்ச்சனை

நெல்லிக்குப்பம் :

               நெல்லிக்குப்பம் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் லட்சார்ச்சனை நடந்தது.
நெல்லிக்குப்பம் கிளை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ரத்தினம் தெரு விநாயகர் கோவிலில் லட்சார்ச் சனை நடந் தது. கணபதி ஹோமம், புனித நீர் நிரப்பப்பட்ட 108 சங்குகளை வைத்து யாகம் நடந்தது. விநாயகருக்கு பல்வேறு பொருட் களான அபிஷேகம் முடிந்து 108 சங்குகளில் இருந்த புனித நீரால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

                          கடலூர் மஞ்சக்குப்பம் சபரிகிரீசு சத் சங்கம் கணேசன் தலைமையில் ஐயப்பனுக்கு மலர்களால் லட் சார்ச்சனை செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கினர். செயலாளர் ராஜேந்திரன், தனசேகரன், ரவிக்குமார், வைத்தி, வெங்கடேசன், ராதா, சண் முகம், சிவகுருநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நினைவாற்றல் பேச்சு போட்டி

கடலூர் :

             கடலூர் குண்டு உப்பலவாடி ஊராட்சியில்  அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் பேச்சு போட்டி மற்றும் நினைவாற்றல் போட்டிகள் நடந்தது. ஊராட்சி தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெகநதான் முன்னிலை வகித்தார். ஒன்றிய மேற் பார்வையாளர் ஞானம் வரவேற்றார். பேச்சு போட்டி மற்றும் கவிதை போட்டி, நினைவாற்றல் போட்டியில்  பங்கேற்று  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்  வழங்கப்பட்டது. பயிற்சி ஆசிரியர் பாலாஜி, பாக்கியலட் சுமி, சத்தியபிரியா, அனிதா, நூலகர் ராஜராம் பங்கேற்றனர்.  கோதண்டபாணி நன்றி கூறினார்.

Read more »

ஜே.சி., நிர்வாகிகள் பதவியேற்பு விழா

சிதம்பரம் :

               சிதம்பரம் ஜூனியர் சேம்பர் கோல்டன் ரூப் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.

           சிதம்பரம் ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் புதிய தலைவர் திருமாவளவனுக்கு முன் னாள் தலைவர் அமிர்தநடராஜன் பதவி பிரமானம் செய்து வைத்தார். பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலசுப்ரமணியன், மத்திய அரசு வக்கீல் வேல்முருகன், முன்னாள் மண்டல தலைவர் கோவிந்தராஜன், முன்னாள் தேசிய இயக்குனர் ராமன் பேசினர். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் வெங் கடேஷ், செயலாளர் சரவணகுமார், முன் னாள் தலைவர்கள் சிவக்குமார், கல்யாணராமன், குமார், ஆறுமுகம்,  நீலகண்டன், தியாகராசன், சின்னையன், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

தியாகிகள் நினைவு தினம்

சிதம்பரம் :

               சிதம்பரத்தில் தமிழ் மாநில விவசாய சங்கம் சார்பில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுஷ்டிக்கப் பட்டது. சிதம்பரம் கஞ்சித் தொட்டி அருகில் நடந்த நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் சங்க வட் டத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஆதிமூலம், குமார் முன் னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், மாநில குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

பாம்புகளின் புகலிடமானது பொதுப்பணித்துறை கட்டடம்

கிள்ளை :

             பாம்புகளின் புகலிடமாகி வரும் இடிந்து விழுந்த பொதுப்பணித்துறை கட்டடத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.

                சிதம்பரம் அடுத்த மேலச்சாவடியில்  கான்சாகிப் வாய்க்காலில் உள்ள தண்ணீரை விவசாய பாசனத்திற்கு ஏற்ப திறந்து விடவும், மழைக் காலத் தில் தேங்கும் நீரை கடலில் திறந்து விட சிதம்பரம் கொடிப்பள்ளம் சாலையில் மேலச்சாவடியில் குடியிருப்பு பகுதியில் பொதுப் பணித்துறை சார்பில் லஸ் கர் அலுவலகம் கட்டப் பட்டது. இங்கு பணியாற்றிய லஸ்கர் ஓய்வு பெற்றதில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி  பூட்டிக் கிடந்த கட்டடம் இடிந்து விழுந்து புதர் மண் டியுள்ளது.  இந்த கட்டடத்தில் பாம்புகள் நடமாட் டம் அதிகமாக இருப்பதால் சுற்றுப்பகுதியில் குடியிருப்பவர்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். எனவே இடிந்து விழுந்துள்ள கட்டடத்தை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Read more »

இந்திய குழந்தைகள் நலச்சங்க கருத்தரங்கு

கடலூர் : 

           குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் கடலூரில் நடந்தது.

      இந்திய குழந்தைகள் நலச் சங்கம் மற்றும் சைல்டு லைன்1098-ன் சார் பில் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு குழந்தை பாதுகாப்பு மற் றும் உரிமைகள் பற்றிய ஒருநாள் கருத்தரங்கம் நேற்று கடலூர் காவலர் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட குற்றப் பதிவேடு துறை டி.எஸ்.பி., அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்திய குழந்தைகள் நலச்சங்க உறுப்பினர் பேராசிரியர் ஜெயந்தி ரவிச்சந்திரன் வரவேற்றார். சங்க செயலாளர் வக்கீல் அருளப்பன் கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசினார். சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.

Read more »

சாரதா தேவி பிறந்தநாள் விழா

விருத்தாசலம் :

           விருத்தாசலம் சாரதா வித்யாலயா மெட்ரிக் பள் ளியில் சாரதா தேவி பிறந்தநாள் விழா நடந்தது. பள்ளி தாளாளர் தாரா தலைமை தாங்கினார். முதல்வர் சுதா முன் னிலை வகித்தார். விழாவில் சாரதா தேவியின் பெருமைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரியர்கள் கெஜஸ்ரீ, ராஜேஷ் உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

தஞ்சையில் காலவரையற்ற உண்ணாவிரதம் : வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

திட்டக்குடி :

               பெண்ணாடத்தில் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

             மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங் கினார். மாவட்ட செயலாளர் ராயதுரை முன் னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வீராசாமி வரவேற்றார். இதில் பட்டதாரி ஆசிரியர்கள் பதிவு மூப்பு பட்டியலை உடனே வெளியிட வேண்டும். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பதிவை சரி பார்த்து பட்டியலை வெளியிட வேண்டும். தமிழாசிரியர்கள் 3 ஆயிரத்து 875 பட்டதாரி தமிழாசிரியர் பணியிடங்களை உடனே நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 28ம் தேதி தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தமிழ் பட்டதாரி சங்க நிர்வாகிகள் சபாநாயகம், கணேசன், சரவணன், கருப்புசாமி, ஷீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.  முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

Read more »

ள்ளை பகுதியில் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கல்

கிள்ளை :

             கிள்ளை பகுதியில் 916 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அடை யாள அட்டை வழங்கப் பட்டது.

           நிகழ்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன் வரவேற்றார். மீனவர் நல வாரிய உறுப் பினர் சத்தியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சாரங்கபாணி, செயல் அலுவலர் கலியபெருமாள் முன் னிலை வகித்தனர். கிள்ளை சேர்மன் ரவிச் சந்திரன் பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் பரமதயாளன், கவுன்சிலர்கள் சங்கர், கலா, கற்பனைசெல்வம், பரங்கிப் பேட்டை வட்டார காங்., தலைவர் மதியழகன், தி.மு.க., நிர்வாகிகள் நீதிமணி, மலையரசன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

தியாகிகள் நினைவு தினம்

காட்டுமன்னார்கோவில் :

          காட்டுமன்னார்கோவிலில் மா.கம்யூ., சார் பில் கீழ்வெண்மணி நினைவு தினம் அனுஷ் டிக்கப் பட்டது.

                மா.கம்யூ.,  நகர குழு உறுப்பினர் செல்வம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் இளங்கோவன், வட்டக் குழு உறுப்பினர் மகாலிங்கம், நகர் குழு உறுப்பினர்கள் நீலமேகன், தனபால், காளிதாஸ், விமல் கண்ணன், மணிகண்டன் உட்பட பங்கேற்றனர். காட்டுமன்னார்கோவிலில் 1983ம் ஆண்டு நிறுவப்பட்டு கடந்த 27 ஆண்டுகளாக பராமறிப்பு இல்லாமல் உடைந்துள்ள அம்பேத்கர் சிலையை சீரமைத்து, பாதுகாக்க வேண்டும் என தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.

Read more »

இருதய நோய் கண்டறியும் முகாம்

கடலூர் :

                 கடலூர் செல்லங்குப் பத்தில் இலவச இருதய நோய் கண்டறியும் முகாம் நடந்தது.

                கடலூர் பாடலி சிட்டி அரிமா சங்கம், டாக்டர் செரியன் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நடந்த முகாமிற்கு சங்க தலைவர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். இயக்குனர் கோதாவரி வரவேற்றார். மாவட்ட துணை ஆளுநர் கல் யாண்குமார், முன்னாள் மாவட்ட ஆளுனர் திலகர்  முன்னிலை வகித்தனர். இணை இயக்குநர் மீரா, பாடலி சங்கர், மண்டலத் தலைவர் சந்திரசேகர், வட் டார தலைவர் மோகன், கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பால்சேவியர், தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் செரியன் ஹார்ட் பவுன்டேஷனைச் சேர்ந்த டாக்டர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று, இ.சி.ஜி., ரத்த அழுத்தம், ரத்தப்பரிசோனை உள்ளிட்ட இருதய நோய் கண்டறியும் சிகிச்சைகளை மேற் கொண்டனர்.

Read more »

கரும்பில் நவீன இயந்திரங்களின் செயல்பாடு பரவளூரில் விவசாயிகளுக்கு விளக்க கூட்டம்

விருத்தாசலம் :

             பரவளூரில் கரும்பில் இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்க கூட்டம் நடந்தது.

                விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை சார்பில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி கரும்பு சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்க கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் குமுதா தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகிகள்  சுப்ரமணியன், ஆறுமுகம், முன்னிலை வகித்தனர். விவசாய சங்க நிர்வாகி வெங்கடேசன் வரவேற்றார்.
சர்க்கரை ஆலை உதவி பொது மேலாளர் பஞ்சாபகேசன், உதவி கரும்பு மேலாளர் வடிவேல் நவீன இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்தும், நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் பெறுவது குறித்தும் படக்காட்சிகளுடன் விளக்கினர். முன்னோடி விவசாயிகள் திருமூர்த்தி, தங்கவேல், ரவி, நாகராஜன் மற்றும் பரவளூர், ரெட்டிக் குப்பம், தொரவளூர், எறுக்கன்குப்பம் உள் ளிட்ட  கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Read more »

மாணவிக்கு பாராட்டு

விருத்தாசலம் :

தேசிய ஜூனியர் எறிபந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. விருத்தாசலம் சரஸ் வதி வித்யாலயா மெட் ரிக் மேல்நிலை பள்ளி மாணவி லட்சுமி. இவர் தென்மண்டல தேசிய ஜூனியர் எறிபந்து போட்டியில் வெற்றி பெற்றார். இவரை பள்ளி தலைமை ஆசிரியர் காமாட்சி, உடற்கல்வி ஆசிரியர் நிர்மல் பாராட்டினர்.

Read more »

வடலூர் பேரூராட்சியில் இலவச 'டிவி' வழங்கல்

குறிஞ்சிப்பாடி :

             வடலூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்டமாக 5,300 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங் கப்பட்டது.

                விழாவிற்கு கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வகித் தார். வடலூர் பேரூராட்சி தலைவர் அர்ச்சுனன் வரவேற்றார். விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் 5,300 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' களை வழங்கினார். விழாவில் வருவாய்த் துறை செயலர் தனவேல், ஒன்றிய கல்விக்குழு உறுப்பினர் சிவக்குமார், வள்ளலார் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடலூர் பேரூராட்சி செயல் அலுவலர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Read more »

தாமதமின்றி காஸ் சிலிண்டர் வழங்க ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை

விருத்தாசலம் :

       விருத்தாசலம் இண்டேன் காஸ் நிறுவனம் அரசு நிர்ணயித்துள்ள கால கெடுவுக்குள் தாமதமின்றி பதிவு செய்து பயனாளிகளுக்கு சிலிண்டர் வினியோகிக்க வேண்டும் என ஊழல் எதிர்ப்பு இயக் கம் கோரிக்கை விடுத் துள்ளது.

                 விருத்தாசலத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்க மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வள்ளுவன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விருத்தாசலம் நகரில் இயங்கி வரும் இண்டேன் காஸ் நிறுவனத்தில் பயனீட்டாளர்கள் தங்கள் தேவையை தொலைபேசி வாயிலாக பதிவு செய்ய இயலவில்லை. நிறுவனத்தின் தொலைபேசி தொடர்புகள் கிடைக்காததால் பயனீட்டாளர்கள் அதிருப்தி அடைவதுடன், காலதாமதமும் சேவை குறைபாடும் ஏற்படுகிறது.
பயனாளிகள் பதிவு செய்து 15 நாட்கள் கழித்துதான் காஸ் சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் தொலைபேசி மூலம் பதிவு செய்வதை முறைப் படுத்தி அரசு நிர்ணயித் துள்ள கால கெடுவுக்குள் தாமதமின்றி பதிவு செய்து வினியோகிக்க காஸ் நிறுவனத்தை கேட்டு கொள் வது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

சட்டசபை, லோக்சபாவில் இட ஒதுக்கீடு : மாற்றுத்திறனாளிகளின் நலச்சங்கம் வலியுறுத்தல்

திட்டக்குடி :

          திட்டக்குடியில் அரசுப்பணி மாற்று திறனாளிகள் நலச்சங்க மாவட்ட கருத்தரங்கில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து படி வழங்கிட பரிந்துரைக்கப்பட்டது.

               மத்திய, மாநில அரசுப்பணி மாற்று திறனாளிகளின் மாவட்ட கருத்தரங்கு திட்டக்குடியில் நடந் தது. மாநிலத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பொன்னுசாமி, மாநில செயலாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் அண்ணாத்துரை வரவேற்றார். கிராம உதவியாளர்  சங்க தலைவர் கந்தசாமி தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார். காலிப்பணியிடங்களில் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சதவீதம் கட்டாயம் வழங்க அரசாணை பிறப் பித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பதவி உயர்வில் 3 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும். ஊனமுற்றோர்களுக்குபோக்குவரத்து படி வழங்க வேண்டும்.  வீடு கட்டவும், வீடு வாங்கவும் கடனுதவி வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். சட்டசபை, லோக்சபாவில் ஊனமுற்றோருக்கு 3 சதவீதம் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் சித்த மருத்துவ அலுவலர் கோபால், பொறியாளர் வெங்கடேஷ், பெருமாள், விரிவுரையாளர் ராஜா, நில அளவைத்துறை கவிதா, மணிமேகலை உட்பட உடல் ஊனமுற்ற அரசுப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

விவசாயிகளுக்கு நிவாரணம் மாஜி எம்.பி., கோரிக்கை

சிறுபாக்கம் :

          மழையால் பாதித்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாஜி எம்.பி., கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வருவாய் துறை அமைச்சர்கள் பெரியசாமி, பன்னீர்செல் வம் ஆகியோரிடம் கொடுத்த மனு: மங்களூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் தங்களின் மானாவாரி நிலங்களில் மக்காசோளம், பருத்தி, மல்லி, மணிலா, தோட்டக்கலை பயிர் களான மஞ்சள், மரவள்ளி பயிரிட்டுள்ளனர். அறுவடை நேரத்தில் கனமழை பெய்ததால் பயிர் கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அடுத்த பயிரிட முடியாத நிலையில் உள்ளனர். எனவே, வருவாய் மற்றும் வேளாண் துறை அலுவலர்களை கொண்டு கணக் கெடுப்பு செய்து மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

Read more »

யோகா முகாம்

சிறுபாக்கம் :

               சிறுபாக்கம் அடுத்த ம.புடையூரில் மங்களூர் அன்னை தெரசா சமூக நலச்சங்கம் சார்பில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் தெய்வராணி தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ., பாண்டியன் முன்னிலை வகித்தார். தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் சுப்ரமணியன் வரவேற்றார். இதில் டாக்டர் வேல்முருகன்  யோகா மற்றும் உடற்பயிற்சி குறித்து பேசினார்

Read more »

நல்லூர் ஒன்றியத்தில் சமத்துவ பொங்கல் விழா

சிறுபாக்கம் :

                  நல்லூர் ஒன்றியத்தில் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு கலைத்திறன் விளையாட்டு போட்டி நல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. உதவி திட்ட அலுவலர் செல்வபெருமாள் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் சேகர் முன்னிலை வகித்தார். இதில் இருபது ஊராட்சிகளை சேர்ந்த மகளிர்சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டு கோலம், பேச்சு, நாடகம், குழுப்பாட்டு ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மகளிர்சுய உதவிக்குழுவினருக்கு உதவி திட்ட அலுவலர் செல்வபெருமாள் பரிசு வழங்கி பேசினார். விழாவில் துணை ஆணையர் சீத்தாலெட்சுமி, ஆசிரியர்கள் பெரியசாமி, தணசேகரன், ஊராட்சி தலைவர்கள் அருள்தாஸ், பெரியசாமி, பாலசுப்ரமணியன் பங்கேற்றனர்.

Read more »

ஜெயராம் கல்லூரியில் ரத்ததான முகாம்

கடலூர் :

                 கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது. செஞ்சுருள் சங்கம் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் நடந்த முகாமிற்கு செல்விபாரதி வரவேற்றார். கல் லூரி துணை முதல்வர் ராமலிங்கம், சிறப்பு அலுவலர் ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் ராஜா முன் னிலை வகித்தனர். முகாமை கல்லூரி தாளாளர் சேகர் துவக்கி வைத்து பேசினார். சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் சுகந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர், மாணவர்களை பரிசோதித்து ரத்த தானம் பெற்றனர். மோலாண்மை துறை தலைவர் நடனமூர்த்தி, பாலகிருஷ்ணன், செஞ்சுருள் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவிகள்  பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Read more »

விபத்தில் 11 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியைக்கு விருது வழங்க கோரிக்கை

புவனகிரி :

           பள்ளி வேன் குளத்தில் விழுந்த விபத் தில் 11 சிறுவர்களை காப்பாற்றி தன்னுயிரை இழந்த ஆசிரியை சுகந்திக்கு கல் பனா சால்வா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை தலைவர் ஜெயபால், சட்டஆலோசகர் குணசேகர் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: வீர, தீர செயல் புரிந்த பெண்மணிகளுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு கல்பனா சால்வா விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, கடந்த மாதம் வேதாரண்யத்தில் பள்ளி வேன் குளத்தில் மூழ்கியதில் 11 சிறுவர்களை காப்பாற்றி இறந்த ஆசிரியை சுகந்திக்கு தமிழக அரசு இந்தாண்டிற்கான கல்பனா சாவ்லா விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

ரிமா சங்க கூட்டம்

கடலூர் :

                   கடலூரில் அரிமா சங்க கூட்டம் நடந்தது. அரிமா சங்கங்களின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட் டம் கடலூரில் நடந்தது. சங்கத் தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் காந்திமதி முன்னிலை வகித்தார். மாவட்ட கவர்னர் ரத்தினசபாபதி, களமருதூர் வட் டாரத் தலைவர் ரங்கராமானுஜம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.  செயலாளர் செந்தாமரைக் கண்ணன் நன்றி கூறினார்.

Read more »

சிதம்பரம் வண்டிகேட்டில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை



கிள்ளை :

          சிதம்பரம் வண்டிக் கேட்டில் விபத்தை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொது நல அமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளது.
இது குறித்து பொதுநல அமைப்பின் பொறுப்பா ளர் முருகையன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர், சிதம்பரம் மற்றும் கிள்ளை சாலைகள் சந்திக்கும் வண்டிகேட் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இரண்டு மாதத்தில் 10க்கும் மேற்பட்ட விபத் துகள் நடந்துள்ளது. இப்பகுதியில் நடக்கும் விபத்துகளை தடுக்க அப்பகுதியில் உள்ள அண்ணாதுரை சிலையை சுற்றி ரவுண் டானா அமைக்க வேண் டும். மேலும், காலை மற்றும் மாலையில் போக் குவரத்து போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மருத்துவ முகாம்

பண்ருட்டி :

       அண்ணாகிராமத்தில் வருமுன் காப்போம் மருத் துவ முகாம் நடந்தது.
 ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் சக்கரத்தாழ்வார் தலைமை தாங்கினார்.  டாக்டர் அறிவொளி வரவேற்றார். எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் முகாமை துவக்கி வைத்து பேசினார். முகாமில் டாக்டர்கள் விஜயசந்திரன், பரிமேலழகன், சங்கரி உள்ளிட்ட குழுவினர் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். முகாமில் முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன், பி.டி.ஒ., தமிழரசி,  தலைமை ஆசிரியர் ஹரிமூர்த்தி, வி.ஏ.ஒ., பக் கிரி,மேல்குமாரமங்கலம் ஊராட்சி தலைவர் ராஜசேகர், கருணாமூர்த்தி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

நிரந்தர கடை கோரி நடைபாதை வியாபாரிகள் மனு

கடலூர் :

           கடலூர் பஸ் நிலையத்தில் நிரந்தர கடை கட்டித்தர கோரி நடைபாதை வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு மனு கொடுத்தனர்.

இது குறித்து மனுவில் கூறியிருப்பதாவது:

கடலூர் பஸ் நிலையத்தில் கடந்த 40 ஆண்டுகளாக நடை பாதை வியாபரிகள் பழம் மற்றும் பூ வியாபாரம் செய்து வருகின்றோம். பஸ் நிலையத்தில் எங்களுக்கு தனி இடம் ஒதுக்கித் தரக்கோரி கலெக்டர், கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள் ளோம். இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. போலீஸ் மற் றும் நகராட்சி துறையினரால்  தொடர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றோம். இதனை தடுக்க கோரி மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே நடைபாதை வியாபாரிகள் நலன் கருதி பஸ் நிலையத்தில் நிரந்தர கடை கட்டித் தரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

தச்சக்காடு கிராமத்தில் கால்நடை பாதுகாப்பு முகாம்

பரங்கிப்பேட்டை :

           பரங்கிப்பேட்டை அருகே கால்நடை பாதுகாப்பு முகாம் நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத் தில் கால்நடை பாதுகாப்பு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கோபு தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் மாடுகளுக்கு  தடுப்பு ஊசி, கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடல் புழு நீக்கம், சினை பரிசோதனை, மலட்டு நீக்குதல் உள்ளிட்ட நோய்களுக்கு டாக்டர் சுந்தரம் சிகிச்சை அளித்தார். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் அசோகன், கால்நடை ஆய்வாளர் கண்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் தீனதயாளன், ராஜேந்திரன் பங்கேற்றனர்.

Read more »

பயிற்சி முகாம்

கிள்ளை :

             சிதம்பரம் அருகே  நக் கரவந்தன்குடியில் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு நெல் விதை கிராமத் திட்டத் தின் மூலம் பயிற்சி அளிக்கப் பட்டது. சிதம்பரம் அருகே நக்கரவந்தன்குடியில் வேளாண்துறை சார்பில் நடந்த பயிற்சி முகாமில்  ஊராட்சித் தலைவர் குலசேகர் தலைமை தாங்கினார். உதவி வேளாண் அலுவலர் விஜயா வரவேற்றார். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜராஜசோழன் ஆலோசனைகள் வழங்கினார்.

Read more »

கண்டமத்தான் ஊராட்சியில் அறிவு திறன் வளர்ப்பு போட்டி

ராமநத்தம் :

               ராமநத்தம் அடுத்த கண் டமத்தான் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலக அறிவு திறன் வளர்ப்புக் கான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

                      ஊராட்சி தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பச்சையம்மாள், துணைத் தலைவர் சிவலிங்கம், தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் முன்னிலை வகித் தனர். உதவியாளர் முத்தழகன் வரவேற்றார். அறிவுத்திறன் போட் டியை ஒன்றிய பணிப் பார்வையாளர் நக்கீரன் துவக்கி வைத்தார். போட்டியில்  நினைவுத்திறன், வரைபடத்தில் இடம் சுட்டி காட்டுதல், கவிதைப் போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்டவைகளை ஆசிரியர்கள் விஜயபாஸ்கர், வீரமணி நடத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங் கப்பட்டது.  விழாவில் ஆசிரியர்கள் தனபால், நடராஜன், கோமதி, பிரியா, பிரபு, மங்களேஸ் வரன், நூலகர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

கீழ்செருவாயில் சொட்டுநீர் பாசனம் குறித்த செயல்விளக்கம்

திட்டக்குடி :

                  இடைச்செருவாய் கிராமத்தில் கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது, இயந்திரம் மூலம் அறுவடை செய்வது குறித்த செயல் விளக்க கூட்டம் நடந்தது. 
            
                     இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை சார்பில் நடந்த செயல் விளக்க முகாமில் கரும்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பது மற்றும் இயந்திரம் மூலம் அறுவடை செய்வது குறித்து படக்காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது. மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

                        முகாமை துவக்கி வைத்த ஆலையின் துணை பொது மேலாளர் (கரும்பு) செந்தில்குமார் பேசுகையில், இந்த ஆண்டு கரும்பு டன் ஒன்றுக்கு ஆயிரத்து 701 ரூபாய் வழங்கப்படுகிறது. அதிக மகசூல் பெற 6 அடி பார் அமைத்து நடவு செய்ய வேண்டும். கரும்பில் களை எடுக்க, மண் அணைக்க மினி டிராக் டர் மற்றும் கரும்பு தோகையை தூளாக்கி மண்ணில் மக்க செய்யும் இயந்திரமும் இந்த ஆண்டு முதல் ஆலை மூலம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.  சொட்டு நீர் பாசனம் மற்றும் இயந்திரம் மூலம் அறுவடை செய்வதன் மூலம் கரும்பில் அதிகம் லாபம் ஈட்டலாம் என்றார். கூட்டத்தில் துணை மேலாளர் கார்த்திக்ராஜா, உதவி மேலாளர் சிவனேசன் மற்றும் கரும்பு அலுவலர் கார்த்திகேயன், ரெங்கராஜன், சுந்தர் ராஜன், கிருஷ்ணசாமி, புகழேந்தி, நாராயணன்நேரு, செந்தில்குமார், கருப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர். கரும்பு ஆய்வாளர் வைத்தியநாதன் நன்றி கூறினார். இதேபோல ஆதமங்கலம், பெண் ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்திலும் செயல்விளக்கம் அளிக்கப் பட்டது.

Read more »

பிரளயகாலேஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க மனு

திட்டக்குடி :

                     பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க வேண்டுமென பா.ஜ., சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது.

                     பெண்ணாடத்தை சேர்ந்த பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராமகோடி தமிழக சட்டசபை மனுக்கள் குழு தலைவருக்கு அனுப்பியுள்ள மனு: பெண்ணாடம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரளயகாலேஸ்வரர் கோவில் குளத்தில் பல ஆண்டிற்கு முன் தெப் பத்திருவிழா நடந்துள்ளது. இங்கு பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் வருகின்ற கழிவுநீர் முழுவதும் இங்குதான் சேகரமாகிறது. தவிர திருக்குளத்தை சுற்றியுள்ள வீடுகளின் செப்டிங் டேங்க் குழாயை குளத்தில் விட்டுள்ளனர். இதனால் திருக்குளத்தின் புனிதத்தன்மை கெடுவதுடன் தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பேரூராட்சி சார்பில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கோவில் குளம் அருகில் கட்டப்பட் டுள்ளது.


              இது குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கலெக்டருக்கும், கடந்த ஜூன் மாதம் தமிழக பேரூராட்சிகள் இயக்குநருக்கும் மனு அனுப்பியுள்ளேன். எனவே நிலத்தடி நீரை பாதுகாக்கவும், கொசுவினால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தவும் கோவில் குளத்தை சீரமைத்து மீண்டும் தெப்பத்திருவிழா நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

த்தாழை, காவாளக்குடியில் நூலக அறிவுத்திறன் போட்டி

சேத்தியாத்தோப்பு :

                   சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழையில் நூலக அறிவுத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

               கத்தாழை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நூலக அறிவுத்திறன் மற்றும் உடற்திறன் போட்டிகள் நூலக வளாகத்தில் நடந்தது. புவனகிரி பி.டி.ஓ., ஜமுனா போட்டியை துவக்கி வைத்தார். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ஊராட்சித் தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். கூடுதல் பி.டி.ஓ., பூராசாமி, தலைமை ஆசிரியர்கள் சுந்தரமூர்த்தி, ஜாக்குலின் முன்னிலை வகித்தனர். ஊராட்சி எழுத்தர் சிற்றரசன் வரவேற்றார். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. ஊராட்சி துணைத் தலைவர் சித்ரா, உறுப்பினர்கள் விஜயவேல், நாகஜோதி, ஜெயராமன், லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலகர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
காவாளக்குடி: காவாளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு ஊராட்சித் தலைவர் தனலட்சுமி தலைமை தாங்கினார். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சங்கர், ஆசிரியர்கள் கோப்பெருந்தேவி, இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் கொளஞ்சி, செந்தாமரைச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Read more »

கலந்தாய்வு கூட்டம்

சிறுபாக்கம் :

                நல்லூர் ஒன்றியத் தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 26 ஊராட்சிகளில் கட்டப் பட்டுள்ள நூலகங்களின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆணையர் சேகர் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் செல்லப்பெருமாள் புதிய நூலகத்தின் செயல்பாடுகள், நூல்களின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மேலும், கிராமப்புற மாணவர்கள் நாளிதழ் கள், சிறந்த நூல்களை படிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு ஒப்புவித் தல், வரைபடங்களில் முக்கிய இடங்களை கண்டறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி பரிசு வழங்கிட அறிவுறுத்தினார். கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள், நூலகர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழா : நேற்று தெருவடைச்சான் உற்சவம்

சிதம்பரம் :

                    சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவின் ஐந்தாம் நாளான நேற்று தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 23ம்  தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா மற்றும் இரவு வெவ்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று தெருவடைச்சான் உற்சவம்  நடந் தது. அதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் நான்கு வீதிகள் வழியாக சாமி வீதியுலா நடந்தது.


                இன்று (28ம் தேதி) யானை வாகனத்திலும், நாளை தங்க கைலாச வாகனம், 8ம் நாள் தங்க ரதம், வெட்டுங்குதிரை உற்சவம் நடக்கிறது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா 31ம் தேதி 9ம் நாள் உற்சவமாக நடக்கிறது. 2010 ஜனவரி புத்தாண்டு அன்று அதிகாலை 4மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந் தருள செய்து மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சி, சிற்சபா ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலாவுடன் ஆருத்ரா தரிசனம், சிற்சபா பிரவேசம் நடக்கிறது.

Read more »

கோ-ஆப் டெக்ஸ் மண்டல அலுவலக கட்டடம் பராமரிப்பு இல்லாததால் இடிந்து விழும் அபாயம்

கடலூர் :

                        கடலூரில் கோ-ஆப் டெக்ஸ் மண்டல அலுவலகம் மற்றும் குடோன் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடலூர் முதுநகர் சாலையில் மோகினி பாலம் அருகே இரண்டு ஏக்கர் பரப்பளவில் கோ-ஆப் டெக்ஸ் மண்டல அலுவலக கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. இக்கட்டடத்தில் கீழ்தளத்தில் ஷோ ரூம், மற்றொரு பக்கத்தில் குடோனும், மேல்தளத் தில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.


                      இங்கிருந்து தான் கடலூர், விழுப் புரம் மாவட்டங்களில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு துணிகள் அனுப்பப் பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளும் இங்கிருந்துதான் அனுப்பப் பட்டு வருகின்றன. மெயின் ரோட்டில் இருந்து பார்ப்பதற்கு கட்டடம் அழகாக காட்சியளித்தாலும் கட்டடம் அருகில் வந்தால் நின்று பேசுவதற்கு அச்சப்படும் அளவிற்கு உள்ளது. இக்கட்டடத்தை அதிகாரிகள் சரியாக பராமரிக்காமல் போனதால் அடிப்படையாய் உள்ள பீம்கள் யாவும் செரித்துப்போய் ஆங்காங்கே சிமென்ட் காரை பெயர்ந்து விழுகிறது. மேல்தளத்திற்கு செல்லக்கூடிய மாடிப்படிகள் எப்போது விழுமோ என்கிற நிலையில் மழைநீர் ஒழுகி வெறும் கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளன. இரண்டு ஆண்டிற்கு முன்பு மழை நீர் ஒழுகியதால் இங்குள்ள குடோனில் இருந்த துணிகள் நனைந்து வெயிலில் உலர்த்தப்பட்டன. அப் படி இருந்தும் இதுவரை கட்டடம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  இக் கட்டடத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள  துணி வகைகள் வைக்கப் பட்டுள்ளன. அதனால் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பண்ருட்டியில் போக்குவரத்து காவல் நிலையம் : மக்களின் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறியது

பண்ருட்டி :

                         பண்ருட்டியில் புதிதாக துவங்கப்பட உள்ள போக் குவரத்து பிரிவு இன்ஸ் பெக்டராக தணிகாசலம் நேற்று பொறுப்பேற்றார். மாவட்டத்தின் வியாபார மையமான பண்ருட்டியில்  கடலூர்- சித்தூர் சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலை ஆகிய இணைந்த நான்குமுனை சந்திப்பு உள்ளது. நகரத்தை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்லாயிரக் கணக்கானோர் தினசரி பண்ருட்டிக்கு வந்து செல் வதால் போக்குவரத்து சீரமைக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.
இதனால் பண்ருட்டிக்கு தனியாக போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் துவங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டாக பல் வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் எம்.எல்.ஏ., வேல்முருகன் கோரிக்கையின்பேரில் கடந்த பட்ஜெட் கூட்டதொடரில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் பண்ருட்டியில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என அறிவித்தார்.


                                 அதன்படி பண்ருட்டி போக்குவரத்து பிரிவுக்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்,3 ஏட்டு மற்றும் 10 போலீசார் நியமிக்கப்பட்டனர். முதலில் ஏழு போலீசாரும்,  சப் இன்ஸ்பெக்டர் பச்சையப் பனும் பொறுப்பேற்றனர். இன்ஸ்பெக்டர் தணிகாசலம் நேற்று பொறுப் பேற்றார். போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அலுவலக மாடியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

Read more »

பிபிடி' ரக விதை நெல்லில் 'ஜேஜேஎல்' ரகம் கலப்படம்! : அறுவடைக்கு முன் வைக்கோலாக மாறும் அபாயம்

கடலூர் :


                   மாவட்டத்தில் ஒரு லட் சம் ஏக்கரில் பயிரிடப் பட்டுள்ள "பிபிடி' எனப்படும் "பபட்லால்' நெல் பயிர் கலப்பட விதை நெல் கலந்ததாலும், பருவ நிலை மாற்றத்தாலும் இதுவரை 70 ஆயிரம் ஏக்கர் நெல் பாதிப்படைந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள் ளாவிட்டால் அனைத்தும் வைக்கோலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

                             கடந்த 2008-2009ம் ஆண் டில் ஆந்திராவிலிருந்து "பிபிடி' எனப்படும் "பபட் லால்' விதை நெல் ரகம் இறக்குமதி செய்யப் பட்டு கர்நாடகாவில் உள்ள "நேஷனல் சீட் கார்ப் பரேஷனிலிருந்து தமிழகத்திற்கு பெறப்பட்டது. இவ்வகை நெல் விதைகளை கடலூர் மாவட்ட விவசாயிகள் 40 ஆயிரம் ஏக்கர் வரை பயிரிட்டனர். நல்ல விளைச் சல் காரணமாக ஒரு குவிண்டால் 1,400 ரூபாய் வரை விலை போனது. லாபகரமாக இருந்ததால் இந்த ஆண்டு குமராட்சி, காட்டுமன்னார் கோவில், கடலூர், பரங் கிப் பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம் ஒன்றியங் களில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் "பிபிடி' ரக விதை நெல் பெற்று ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.

                       ஆனால், இந்த ஆண்டு பயிரிடப்பட்ட "பிபிடி' ரக நெல்லில் "ஜேஜேஎல்' என்ற ரகம் கலப்படம் ஆகியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக ஒரே வயலில் பயிரிடப்பட்டுள்ள நெல்லில் 135 நாட்களுக்கு பிறகு அறுவடை செய்யப்படும் "பிபிடி' ரக நெல்லில் கதிர் வராத நிலையில் 125 நாளில் அறுவடை செய் யப்படும் "ஜேஜேஎல்' முன் கூட்டியே  கதிர் வந்து கொண்டிருக்கிறது. ஒரே வயலில் இதுபோன்ற மாற்றத்தை கண்டு விவசாயிகள் என்ன செய்வது என தெரியாமல் குழம்பியுள்ள நிலையில், மேலும் ஒரு பேரிடியாக தற்போது பருவ நிலை மாறி பெய்த மழை காரணமாக பூச்சி தாக்குதல் கடுமையாக உள்ளது. சில தினங்களுக்கு முன் தொடர்ந்து பெய்த மழையில் தண்டுப்புழு தாக்குதல் ஏற்பட்டு அதனை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். தற்போது கதிர் வந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள பயிரில் புகையானும், கதிர் வராத பயிரில் இலை சுருட்டுப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. கதிர் வருவதில் வித்தியாசம், புழுக்கள் தாக்குதல் என அடுக்கடுக்கான பாதிப்புகளால் ஏக்கர் ஒன்றுக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செலவு செய்து பூச்சி மருந்து அடித் தும் நோய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. பயிரிட்ட ஒரு லட்சம் ஏக்கரில் 70 ஆயிரம் ஏக்கர் வரை பாழாகி வருகிறது.

                     மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாநில வேளாண் துறை செயலாளருடன் தொடர்பு கொண்டு விவசாயிகளுக்கு தேவையான மருந்தை மானிய  விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பூச்சிகளை கட்டுப்படுத்தவும், என்ன மருந்து தேவை என் பதை அறிய விஞ்ஞானிகளைக் கொண்டு முறையான ஆய்வு நடத்த வேண் டும். இல்லையேல் மாவட்டத்தில் பயிரிடப் பட்டுள்ள ஒரு லட்சம் ஏக் கர் நெல் பயிரும் வைக் கோலாக மாறும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் "ஆந்திரா பொன்னி எனப்படும் "பிபிடி' ரகம் கர்நாடகாவில் உள்ள நேஷனல் சீட் கார்ப் பரேஷனிலிருந்து 50 டன் விதை நெல் தருவிக்கப் பட்டது. இதில் 7 டன்னில் "ஜேஜேஎல்' ரகம் கலப்படம் ஆகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விதை நெல் வாங்கும் போது முளைப்புத் திறன் மற்றும் காலவிரயமானதா என்பதை மட்டும் பார்த்து வாங்குவது வழக்கம். முழுமையாக பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கப்பட்ட விதை நெல்லைத்தான் வாங்கி விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம்.


                               இதே நிலை திருவாரூர், நாகை மாவட் டங்களிலும் உள்ளது. கடந்த வாரம் கர்நாடகாவிலிருந்து விஞ் ஞானிகள் ஆய்வு செய்தனர். 10 நாள் வித்தியாசத்தில் வரும் கதிர்களால் பாதிப்பு ஏதும் வராது என தெரிவித்துள்ளனர். சோதனைக்கு மாதிரி எடுத்துச் சென்றுள் ளனர். பூச்சி பாதிப்பு குறித்து விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுத்து வருவதாக" கூறுகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior