உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 16, 2010

சிதம்பரத்தில் தீவிர கொசு ஒழிப்பு விழிப்புணர்வு

சிதம்பரம் : 

        சிதம்பரத்தில் நகராட்சி சார்பில் தீவிர கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிதம்பரம் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வருவதையொட்டி கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற படுத்தும் பொருட்டு நகராட்சி சார்பில் தீவிர கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிதம்பரம் ஜவகர் தெருவில் விழிப்புணர்வு ஊர்வலத்தை சேர்மன் பவுஜியா பேகம் தலைமையில் துணைத் தலைவர் மங்கையர்கரசி துவக்கி வைத்தார். கமிஷனர் ஜான்சன், நகர் நல அலுவலர் கோவிந் தன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், மணிகண்டன் பங்கேற்றனர்.சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் வீடு,  வீடாக சென்று கொசு தங்கும் வகையில் கழிவுநீரை தேக்க வேண்டாம். தேங்காய் மட்டை உள் ளிட்ட பொருட்களை அப் புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டது.

Read more »

கராத்தே போட்டி மாணவர்கள் சாதனை

கடலூர் : 

              அரியலூர் மாவட்டத் தில் நடந்த கராத்தே போட்டியில் கடலூர் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.தென்னிந்திய ஓபன் கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடந்தது. 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் கட்டா பிரிவில் சிவரஞ்சித், சதீஷ்குமார், அருண்குமார், முரளிதரன், யாசர் அராபத், மணிகண்டன், அசோக்குமார் ஆகியோர் முதலிடம் பெற்றனர். ராகுல், விஜயவல்லபன், பாலச்சந்தர், அரவிந்த்குமார், கணேஷ்குமார் ஆகியோர் 2ம் இடத்தை வென்றனர்.மேலும் குமுத்தே பிரிவில் விஜய வல்லபன், சரவணகுமார், பிரவின்குமார், பாக்கியராஜ் முதலிடத்தையும், அடைக்கலராஜ், மணிகண்டன் 2ம் இடத்தையும் பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை லட்சமி சோரடியா பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, சுன்கான் இஷின்ரியு கராத்தே தலைவர் சென் சாய் கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் குடும்பத்தோடு பங்கேற்க முடிவு

சிதம்பரம் : 

                 உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் விஸ்வகர்ம சமுதாய மக்கள் குடும்பத் தோடு பங்கேற்பது என முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்க கூட்டம் சிதம்பரத்தில் மாநில தலைவர் சேகர் தலைமையில் நடந்தது. ஆலோசகர்கள்  கோவிந்தராஜ், ஏகாம்பரம், சின்னப்பா முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் விஸ்வகர்ம சமுதாய மக்கள் குடும்பத்தோடு பங்கேற்பது. தமிழுக்கும், தமிழ் இசைக்கும் பெருமை சேர்த்த தியாகராஜ பாகவதரை நினைவு கூறும் வகையில் செம்மொழி மாநாட்டு நுழைவு வாயில் ஒன்றுக்கு தியாகராஜ பாகவதர் பெயர் சூட்ட தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில இளைஞரணி செயலாளர் ரமேஷ், தொழிற்சங்க செயலாளர் ராமச் சந்திரன், ராஜரத்தனம், சுப்ரமணியன், மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நகர பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

Read more »

காட்டுதேனீக்கள் கூடு கட்டினால் தகவல் தெரிவியுங்கள் : தீயணைப்பு நிலைய அலுவலர் வேண்டுகோள்

சிறுபாக்கம் : 

                  வேப்பூர் பகுதிகளில் காட்டு தேனீக்கள் கூடு கட்டும்போதே தகவல் தெரிவிக்குமாறு தீயணைப்பு அலுவலர் வேண் டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:

              வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் அண்மை காலமாக காட்டுதேனீக் கள் மற்றும் விஷ வண்டுகள் தாக்கி ஆவட்டி, புல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டனர். காட்டு பகுதிகளில் உள்ள மரங்களில் சிறு கூடாக காட்டு தேனீக்கள் கூடு கட்டும்போதே, சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மூலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.காட்டு தேனீக்கள் கூடு கட்டியிருக்கும் இடத்தில் புகை மூட்டமோ அல்லது செடிகளை கொளுத்தும் போது, வெளியேறும் புகையால் ஆவேசமடையும் விஷ வண்டுகள் வழியல் செல்வோரை தாக்க வாய்ப்புள்ளது. மாலை 6 மணிக்கு பிறகே தீயணைப்பு நிலைய வீரர்கள் மருந்து, நீட்டிப்பு ஏணி மூலம் காட்டு தேனீக்களை அழிக்க முடியும். எனவே சிறு கூடாக உள்ளபோதே தகவல் தெரிவிக்க வேண்டும் என  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

அமெரிக்க குழு இசை நிகழ்ச்சி

கடலூர் :

                       கடலூர் ஆற்காடு லூத்திரன் ஆலயத்தில் அமெரிக்க குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.அமெரிக்க "லூத்ரன் யூத் என்கவுன்டர்' நிறுவனத் தின் ரெயின்போ ஆப் பிராமிஸ் என்ற திட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்டா, ஆலின் சன், எலிசபெத், பாப், ஜஸ்டின் குழுவினர் கடந்த ஜனவரி முதல் இந்தியாவின் பல்வேறு இடங்களை பார்வையிட்டு இசை நிகழ்ச்சிகள் மூலம் இறை செய்திகளை அறிவித்து வருகின்றனர். கடலூர் ஆற்காடு லூத்திரன் திருச்சபையில் அமெரிக்க குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை சபை போதகர் பாபு ஜெயக்குமார் துவக்கி வைத்தார். இளையோர் இறைபணி பொதுச் செயலாளர் விஜயரூபன் இறைச் செய்தியை தமிழில் மொழி பெயர்த்தார்.

Read more »

தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் நடுவீரப்பட்டு பகுதி மக்கள் எதிர்பார்ப்பு

நடுவீரப்பட்டு : 

                நடுவீரப்பட்டு பகுதியில் தீ அணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர் பார்க்கின்றனர்.

              பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டை சுற்றி சி.என். பாளையம், குமளங்குளம், சிலம்பிநாதன்பேட்டை, பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, கொடுக்கன்பாளையம், வெள்ளக்கரை ஊராட்சிகளை சேர்ந்த 30 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் குடிசை வீடுகள் அதிகளவு உள்ளதால் அடிக்கடி தீnவிபத்து ஏற்படுகிறது. அவ்வாறு  தீ விபத்து ஏற்பட்டால் 15 கி.மீ., தூரம் உள்ள நெல் லிக்குப்பம் தீ அணைப்பு நிலையத்திலிருந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர்.அவர்கள் அப்பகுதியில் ஏதாவது தீ விபத்து நடந்திருந்தால் அங்கு போய் அதை அணைத்துவிட்டு வந்த பிறகு தான் இங்கு வருகின்றனர்.இதனாலும் அவர்கள் அங்கிருந்து வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகி விடுகிறது. நாமும் வந்து தீயை அணைத்தோம் என அங் குள்ள சாம்பலில் தண்ணீர் அடிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களிடம் தகராறு செய்கின்றனர்.  சரியான நேரத் திற்கு வராததால் அதிகளவு பொருட் சேதம் ஏற்படுகிறது.இதனை தவிர்த்திட நடுவீரப்பட்டு பகுதியில் தீயணைப்பு நிலையம் துவக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Read more »

சுகாதார சீர்கெடு, ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதிகடலூர் பஸ் ஸ்டேண்டில் தொடரும் அவலநிலை

கடலூர் :

           கடலூர் பஸ் ஸ்டேண்டில் சுகாதார சீர்கெடு மற்றும் நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் தவித்து வருகின்றனர்.கடலூர் பஸ் நிலையம் சில ஆண்டுகளுக்கு முன் விரிவுப்படுத்தி அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.

               நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கினால் தற்போது பஸ் நிலையத்தின் பெரும் பகுதி அப்பகுதி வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக டவுன் பஸ்கள் நிற் கும் பகுதியில் உள்ள கடைக்காரர்கள் நடைபாதையை முற்றிலுமாக ஆக் கிரமித்துக் கொண்டுள்ளதால் பயணிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் பஸ் நிறுத்த கட்டைகளில் நிற்பதால் பஸ்கள் வந்து செல்வதில் இடையூறு ஏற்பட்டு வருகிறது.பஸ் நிலையத்தில் உள்ள கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் குப்பைகள் அடைத்துக் கொண்டுள்ளன.இதனால் அங்குள்ள ஓட்டல் மற்றும் டீ கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
                   பயணிகள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு 10க்கும் மேற்பட்ட மாடுகள் பஸ் நிலையத்தை சுற்றி வந்து பயணிகளை அச்சறுத்தி வருகிறது. பஸ் நிலையம் நுழைவு வாயில் அருகில் இலவச கழிவறை பராமரிப்பின்றி தூர்நாற்றம் வீசுவதால், அதனை பொதுமக்கள் பயன்படுத்த முடிவில்லை. இதனால் இந்த கழிவறை அமைந்துள்ள பகுதியே தற்போது திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளது.
மாவட்டத்தில் தலைநகரான கடலூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுகாதார சீர்கேடுகளை நீக்கிட நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

தீக்குளித்த பெண் பலி

பண்ருட்டி : 

                  வயிற்று வலி தாங்க முடியாமல் தீக்குளித்த பெண் இறந்தார். பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜா மனைவி செல்வி(25). திருமணமாகி 8 ஆண்டாகிறது. கடந்த 8ம் தேதி செல்விக்கு வயிற்று வலி ஏற்பட்டது. விரக்தியடைந்த செல்வி  தீக்குளித்தார். உடல் கருகிய செல்வியை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

தலித் இன துணைத் திட்டத்தை முறையாக நடைமுறை படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                     தலித் இன துணைத் திட்டத்தை முறையாக நடைமுறை படுத்தக்கோரி தமிழ்நாடு தலித் இன துணை திட்ட போராட்டகுழு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வரும் பட்ஜெட்டில் தலித் இனத்தவருக்கு துணைத் திட்ட நிதியாக 20 சதவீதம் தொகையை முழுமையாக ஒதுக்கி இதனை பொது திட்டத்திற்கு மாற் றாமல் தலித் மக்களின் மேம்பாட்டிற்காக மட் டுமே பயன்படுத்த வேண் டும். நிதியை ஆதிதிராவிடர் நலத்துறையிடம் ஒப்படைத்திட வேண்டும். தலித் இன துணைத் திட் டத்தை முறையாக நடைமுறை படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட தலித் இன துணைத் திட்ட போராட் டக்குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய குடியரசுக் கட்சி மாநிலத் தலைவர் ஜெயசீலன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் சாமித் துரை முன்னிலை வகித்தார். அம்பேத்கர் பேரவை மாவட்டத் தலைவர் கமராஜ் வரவேற்றார். தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு தலைவர் நிக்கோலஸ், பீம்சேனா, இந்திய குடியரசு கட்சி ஆனந்தவேல், செயலாளர் காமராஜ்,  ஜான்பிரிட்டோ, கணேசன்  பங்கேற்றனர்.

Read more »

இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் சாலை மறியல்

கடலூர் : 

                  கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களை பதிவு செய்ய அனுமதிக்காததால் மறியலில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் 2007-09ம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கான முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப் பட்டது. கடலூர் மாவட்டத்தில் ஒரு அரசு பயிற்சி மையம், 2 உதவி பெறும் மையம் மற்றும் 31 தனியார் மையங்களைச் சேர்ந்த 2,700 பேர் தேர்வு எழுதினர். இதில் 75 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மூன்று மாதங்களுக்கு பின் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. "சீனியாரிட்டியை' தக்க வைத்துக் கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு முதல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிந்தனர்.

               ஆயிரக்கணக்கானோர் கூடியதால் கடலூர்-நெல்லிக் குப்பம் சாலையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை முறைப்படுத்தினர்.  இரவு முதல் நின்றிருந்ததால் நேற்று காலை 11.30 மணி அளவில் இரு பெண்கள் மயங்கி விழுந் தனர்.  அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே பதிவு செய்யும் பணி மந்தமாக நடைபெறுவதாகவும், தங்களை உள்ளே அனுமதிக்க மறுப்பதாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து மறியல் கை விடப்பட்டது. கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior