உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

எம்.பி.பி.எஸ். 18 ஆயிரம் மாணவர்களுக்கு நாளை ரேண்டம் எண்


               தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.​ படிப்பில் சேர ​விண்ணப்பித்துள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புதன்கிழமை ​(ஜூன் 9) முன்னுரிமை வாய்ப்பு எண் ​(ரேண்டம் எண்)​ வழங்கப்படுகிறது.​
 
               பிளஸ் 2 தேர்வில் உயிரியல்-வேதியியல்-இயற்பியல் ஆகிய பாடங்களில் மாணவ-மாணவியர் பெற்ற ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் ​(கட்-ஆஃப்)​ அடிப்படையில் ​எம்.பி.பி.எஸ்.​ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
 
இணையதளத்தில் வெளியீடு:​​ 
 
                   சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகம் தயாரித்து வரும் முன்னுரிமை வாய்ப்பு எண் ​(ரேண்டம் எண்)​ புதன்கிழமை ​(ஜூன் 9) காலை 11 மணிக்கு சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org  ​மூலம் வெளியிடப்படுகிறது.​ ஒரே ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணை எடுக்கும் மாணவர்களை வரிசைப்படுத்தி ரேங்க் பட்டியல் வெளியிட ஏதுவாக,​​ முன்னுரிமை வாய்ப்பு எண் ​(ரேண்டம் எண்)​ வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.​ இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-படிப்பில் சேர 18,230 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 11-ல் ரேங்க் பட்டியல்:​ சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை ​(ஜூன் 11) ரேங்க் பட்டியல் ​வெளியிடப்படுகிறது. ​ மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலக வளாகத்தில் அன்றைய தினம் ரேங்க் பட்டியல் ஒட்டப்படும்.​ முதல் கட்ட கவுன்சலிங் வரும் ஜூன் 21-ம் தேதி தொடங்குகிறது.

Read more »

போபால் விஷ வாயு வழக்கு: 8 பேருக்கு 2 ஆண்டு சிறை


போபால்:

                  மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள விஷவாயு வழக்கில் 8 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.​ இந்தச் சம்பவம் நடந்து 26 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.​ குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ.​ 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

                 உலகிலேயே மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.​ போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் மீதைல் ஐசோசயனைடு நச்சுவாயு கசிந்ததில் 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.​ 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.​ 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.இந்த வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸýப் மஹிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.​ 85 வயதான கேஸýப் மஹிந்திரா இந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத செயல் தலைவராக இருந்தார்.

                      திங்கள்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால்,​​ நீதிமன்றத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர்.​ இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.​ குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். குற்றப்பிரிவு 304-ஏ ​(மரணத்துக்கு காரணமாக இருத்தல்)​ 304-2 ​(பெரும்பாலான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருத்தல் மற்றும் விதி 336 மற்றும் 337 பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.​ ​இருப்பினும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரென் ஆண்டர்சன் ​(89) பற்றி நீதிபதி தனது தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை.​ தலைமறைவு குற்றவாளி என்று 23 ஆண்டுகளுக்கு முன்னரே வாரென் ஆண்டர்சன் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.இந்த வழக்கில் குற்றவாளிகளாக நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸýப் மஹிந்திரா,​​ நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் விஜய் கோகலே,​​ நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கிஷோர் காம்தார்,​​ செயல் மேலாளர் ஜே.என்.​ முகுந்த்,​​ உற்பத்தி மேலாளர் எஸ்.பி.​ செüத்ரி,​​ ஆலை கண்காணிப்பாளர் கே.வி.​ ஷெட்டி,​​ உற்பத்தி உதவியாளர் எஸ்.ஐ.​ குரேஷி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.​

                     இவர்களில் எஸ்.ஐ.​ குரேஷி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இந்த வழக்கில் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த துணை செயல் மேலாளர் ஆர்.பி.​ ராய்,​​ வழக்கு விசாரணையின்போதே உயிரிழந்துவிட்டார்.இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 178 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.​ இதில் சாட்சிகள் அளித்த 3008-பக்க ஆவணமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளரான வாரென் ஆண்டர்சன்,​​ இதுவரை விசாரணை எதிலும் பங்கேற்கவில்லை.​ 2,000 டாலர் ஜாமீன் தொகை செலுத்தி அமெரிக்கா சென்ற ஆண்டர்சன் அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வரவேயில்லை.​ ​மிக மோசமான இந்த விஷ வாயு வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை 1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பதிவு செய்யப்பட்டது.​ பின்னர் டிசம்பர் 6-ம் தேதி இந்த வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.​ 1987-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையை சிபிஐ தொடங்கியது.​ இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் சி.​ சஹாய் ஆஜராகி,​​ யூனியன் கார்பைடு ஆலையில் உள்ள உலை உரிய வகையில் பரமாரிக்கப்படதாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக வாதிட்டார்.​ 

                 இந்த விபத்து நடந்த உடனேயே 2,259 பேர் உடனடியாக உயிரிழந்தனர்.​ காற்றில் பரவிய மீதைல் ஐசோ சயனைடு நச்சால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார்.​ 1982-ம் ஆண்டே இந்த ஆலையை ஆய்வு செய்தபோது இதில் பராமரிப்பு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது.​ அமெரிக்காவிலிருந்து நிபுணர்கள் வந்து பராமரிப்பு குறையை சுட்டிக் காட்டியபோதிலும் அவை மேற்கொள்ளப்படவேயில்லை என்று சஹாய் கூறினார்.இந்த விபத்து நடந்த பிறகு மத்திய குழு இந்த ஆலையைச் சுற்றிப்பார்த்தபோது பாதுகாப்பு மற்றும் நிர்வாக குறைபாடுகள் இருந்தது தெரியவந்ததாக அவர் கூறினார். ஆனால் ஆலை உரிய வகையில் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்ததாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் டி.​ பிரசாத்,​​ அமித் தேசாய் ஆகியோர் ​ வாதாடினர்.​ 1982-ம் ஆண்டு இந்த ஆலையில் ஊழியர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனத்திலிருந்து நிபுணர்கள் வந்து ஆலையை சோதித்ததை வழக்கறிஞர்கள் மறுத்தனர் .பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் கார்பைடு ஆலை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது என்றும்,​​ ஆலை நிர்வாகம் மற்றும் பராமரிப்புக்கென்றே பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். 

அனைவருக்கும் ஜாமீன்:

                 குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.​ இதையடுத்து அனைவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.​ ​2002-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு கேஸýப் மஹிந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.​ இவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றதால் இந்த விருது அவருக்கு வழங்கப்படவில்லை. 

மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி : 

                 தாமதமாகக் கிடைக்கும் நீதி;​ நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம்.​ எனினும் இந்த வழக்கில் நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது.  

பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத்: 

                ஏற்கெனவே விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் வலியைத் தருவதாக இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்துள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் தேசியச் செயலர் டி.​ ராஜா: 

                    வழக்கை விசாரித்த சிபிஐ,​​ நீதியை நிலைநாட்டுவதில் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது.​ சிபிஐ-யின் தோல்விக்கு பிரதமர் மன்மோகன் சிங் தான் பொறுப்பேற்க வேண்டும்.

Read more »

சிதைந்து கிடக்கும் கடலூர் சிலவர் பீச் படகு குழாம்


2 ஆண்டுகளாகச் சிதைந்து கிடக்கும் கடலூர் சில்வர் பீச் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுத்துறை.
கடலூர்:
 
                கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பல லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட,​​ வளர்ச்சிப் பணிகளில் பெரும்பாலானவை பயனின்றி கிடக்கின்றன.
 
                           கடலூர் சில்வர் பீச்,​​ கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது.​ இதனால் பல ஆண்டுகளாக 40 லட்சத்துக்கு மேல் செலவிட்டு,​​ உப்பங்கழியில் படகுப் போக்குவரத்து உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவும் உருவாக்கப்பட்டு இருந்தது.​ ஆண்டுதோறும் சுற்றுலா கோடை விழாவும் நடத்தப்பட்டு வந்தது.ஆனால்,​​ சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும்,​​ தற்போது பயனின்றி கேட்பாரற்றுக் கிடக்கின்றன.​ ​
 
                        ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட,​​ உப்பங்கழியில் உல்லாசப் படகு சவாரிக்கான படகுத்துறை சிதைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.​ உல்லாசப் படகுகளும் உடைந்து ஓரங்கட்டப்பட்டுக் கிடக்கின்றன.​ ​ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குழந்தைகள் பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த சறுக்கு மரம்,​​ ஊஞ்சல் போன்றவையும் உடைந்து கிடக்கின்றன.​ ஊஞ்சல் பலகைகள்,​​ குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான இருக்கைகள் அனைத்தும் சமூக விரோத சக்திகளால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன.​ அங்கு அமைக்கப்பட்டு இருந்த நீரூற்றுகளும் ஈரப்பதம் காணாமல் மூடங்கிக் கிடக்கின்றன.​ ​சில்வர் பீச்சில் என்.எல்.சி.​ நிறுவனம் ரூ.5 லட்சத்தில் அமைத்துக் கொடுத்த எழில்மிகு பூங்கா,​​ எங்கிருக்கிறது என்றே தெரியா வண்ணம்,​​ சிதைந்து காணாமல் போய்விட்டது. இத்தகைய சிதைவுகள் காரணமாக,​​ கடலூர் மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமாகவும்,​​ சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் அமைந்து இருந்த சில்வர் பீச் இன்று,​​ பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றி,​​ மூளியாகக் காட்சி அளிக்கிறது.​ ​ஆண்டுதோறும் 5 நாள்கள் சில்வர் பீச்சில் நடத்தப்பட்டு வந்த சுற்றுலா கோடை விழாவும்,​​ இரு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.கடலூர் மக்களுக்கு கோடைக் காலத்தில் நல்லதொரு பொழுதுபோக்கு விழாவாக அமையும் இந்த விழா நடைபெறாதது,​​ கடலூர் மக்களை பெரிதும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.இதில் மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் கவனம் செலுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.​ ​
 
                        சில்வர் பீச்சில் எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத நிலையிலும்,​​ இங்கு வரும் வாகனங்களுக்குக் கட்டணம்,​​ கால நேரமின்றி எப்போதும் வசூலிப்பதுதான் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.​ ​கடல் அலைகளை ரசிக்க வருவோரிடம்,​​ கட்டணம் வசூலிக்கும் ஒரே கடற்கரை கடலூர் சில்வர் பீச்சாகத்தான் இருக்கும்.​ இங்கு வசூல் ஆகும் தொகை எவ்வளவு?​ இதற்கு நகராட்சி ஆண்டுதோறும் ஏலம் விடுகிறதா;​ நகராட்சிக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு யார்;​ ஏலம் எடுத்து இருக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

Read more »

மின் தடை: 50 கிராமங்களில் நீரின்றி காயும் குருவை



சிதம்பரம்:
 
                   சிதம்பரம்,​​ காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் மின்தடையால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குருவை சாகுபடி பயிர்கள் காய்கின்றன.
 
                         சிதம்பரம், ​​ காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் ஆண்டுதோறும் மின்மோட்டார்கள் உதவியுடன் முன்குருவை சாகுபடி செய்வது வழக்கம்.​ அதுபோல் இந்த ஆண்டு முன் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.​ ஆனால்,​​ அதிகரித்துள்ள மின்தடையால் மின்மோட்டார் இயக்க முடியாமல் நீரின்றி பயிர்கள் காய்கின்றன.

பயிர்கள் காய்கின்ற பகுதிகள்:​​ 
 
                   சிதம்பரம் வட்டம் - பூலாமேடு,​​ காட்டுக்கூடலூர்,​​ வையூர்,​​ கண்டியாமேடு,​​ நாஞ்சலூர்,​​ சிவபுரி,​​ வரகூர்பேட்டை,​​ பெராம்பட்டு,​​ ஜெயங்கொண்டப்பட்டினம்,​​ நடுத்திட்டு,​​ கவரப்பட்டு,​​ வல்லம்படுகை,​​ செட்டிக்குளம்,​​ கீரப்பாளையம்,​​ வடஹரிராஜபுரம்,​​ தாதம்பேட்டை,​​ சாக்காங்குடி,​​ குச்சிப்பாளையம்,​​ புளியங்குடி,​​ ஆயிப்பேட்டை,​​ ஒரத்தூர்,​​ பரதூர்,​​ அய்யனூர், அக்கிராமங்கலம்,​​ விளாகம்,​​ புதுவிளாகம்,​​ சேதியூர் ​ காட்டுமன்னார்கோவில் வட்டம்-​ அத்திப்பட்டு,​​ மாங்குடி,​​ கருப்பூர்,​​ முள்ளங்குடி,​​ நளன்புத்தூர்,​​ கீழப்பருத்திக்குடி,​​ குமராட்சி,​​ குணவாசல்,​​ ஆயங்குடி,​​ ரெட்டியூர் உள்ளிட்ட கிராமங்கள்.
 
                எனவே மேற்கண்ட கிராமங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் எனவும்,​​ அதற்கு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே கேட்டுப் பெற வேண்டும் என தமிழக உழவர் முன்னணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 
கூடுதல் வரி வசூல்:​​ 
 
                  சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் நிலவரியாக நஞ்சை நிலத்துக்கு ஏக்கருக்கு ரூ.5,​ புஞ்சை நிலத்துக்கு ஏக்கருக்கு ரூ.2 வசூலிக்கப்பட்டு வந்தது.​ ஆனால்,​​ தற்போது நூற்றுக்கணக்கில் வரி செலுத்தும்படி அலுவலர்களால் வலியுறுத்தப்படுகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு பழையபடியே வசூலிக்க ஆணையிட வேண்டும்.​ கவரப்பட்டு வாய்க்கால் ​(உளையார் வாய்க்கால்)​ வெட்டும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. இவ்வாய்க்கால் பூலாமேட்டிலிருந்து கவரப்பட்டு வரை வெட்டப்பட்டால் மட்டுமே பாசனத்துக்கும்,​​ வடிகாலுக்கும் முழுமையான பயன்தரும் எனவே இவ்வாய்க்கால் பணியை இடையில் நிறுத்தாமல் கவரப்பட்டு வரை முழுமையாக வெட்டி சீர்செய்ய வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read more »

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

விருத்தாசலம்:

                      ஊர்க்காவல் படை சார்பில், புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்று நடும் விழா விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பேரணியை ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி கேதார்நாதன் தொடங்கி வைத்தார். விருத்தாசலம் பாலக்கரையில் தொடங்கிய பேரணி திரு.வி.க நகரில் முடிவடைந்தது. பினனர் திரு.வி.க. நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலர் குருநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் துணை வட்டாரத் தளபதி ஜெயந்தி ரவிச்சந்திரன், கோட்ட தளபதி கோவிந்தராஜ், படை தளபதி ரவீந்திரநாதன், படை பிரிவு துணைத் தலைவர் தண்டபாணி, அணித் தலைவர் குமார், ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

கடலூர்:

                   கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2010-2011-ம் ஆண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                   தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் கடலூர் அரசு இசைப்பள்ளி 1998 முதல் செயல்பட்டு வருகிறது. அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் மற்றும் மிருதங்கம் ஆகியவற்றில் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். அரசு சான்றிதழ் வழங்கப்படும். குரலிசை, பரதநாட்டியம், மிருதங்கம் ஆகியவற்றுக்கான பாடப் பிரிவில் சேர்வதற்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாகசுரம்,  தவில் தேவாரம், ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்வதற்கு, தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும். வயது வரம்பு 12 முதல் 25 வரை.இசைப் பள்ளியில் சேரும் மாணவ மாணவியருக்கு அரசு விதிகளுக்கு உள்பட்டு, விடுதி வசதி, இலவச பேருந்து பயண அட்டை, ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதில் சேர விரும்பும் மாணவ மாணவியர் பள்ளி வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, கடலூர் புதுப்பாளையம் பிரதானச் சாலையில் அமைந்துள்ள அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

மாங்குரோவ் காடுகளை அழிக்கும் அனல்மின் நிலையங்கள் கூடாது

கடலூர்:

                 மாங்குரோவ் காடுகளை அழிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் அனல் மின் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்று, கடலூரில் சனிக்கிழமை நடந்த உலகச் சுற்றுச்சூழல் தின விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

                 தமிழ்நாடு நுகர்வோர்களின் கூட்டமைப்பு மற்றும் சிப்காட் பகுதி சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழு ஆகியவற்றின் சார்பில் உலக  சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. 

விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

                    இந்தியாவில் மாங்குரோவ் காடுகள் அதிகம் உள்ள கடலூர் பிச்சாவரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பால் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருகின்றன. பூமி வெப்பமடைவதால் துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இந்நிலையில் சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு எதிராக கடலூர் மாங்குரோவ் காடுகளுக்கு அருகே 10 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட அனல் மின் நிலையங்களுக்கு அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. மாங்குரோவ் காடுகளுக்கு அருகே அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி கூடாது. இந்தியாவில் வாழத் தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் கடலூர் 16-வது இடத்தில் இருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது. கடலூர், நாகை மாவட்டங்களில் 250 ச.கி.மீ. பரப்பளவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மேலும் ரசாயன ஆலைகளையும், அனல்மின் நிலையங்களையும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் நிறுவக் கூடாது. தற்போது உள்ள ஆலைகள் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

                    கூட்டமைப்பு சார்பில் பள்ளிகளில் அதிக அளவில் மரங்களை நடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் நிர்வாகச் செயலர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார். பயிற்சி இயக்குநர் சி.ஏ.தாஸ் சிறப்புரை நிகழ்த்தினார். சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வம் வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நிர்வாகிகள் நெய்வேலி தங்கம், பண்ருட்டி நடராஜன், மணிவண்ணன், சிப்காட் சுற்றுச்சூழல் கணகாணிப்புக் குழு உறுப்பினர்கள் புகழேந்தி, சிவசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவம் 10-ல் தொடக்கம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் ஜூன் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

உற்சவ விவரம்: 

                    11-ம் தேதி வெள்ளி சந்திரபிரபை வாகனம், 12-ம் தேதி தங்கசூரிய பிரபை வாகனம், 13-ம் தேதி வெள்ளி பூதவாகனம், 14-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனம் (தெருவடைச்சான்), 15-ம் தேதி வெள்ளி யானை வாகனம், 16-ம் தேதி தங்க கைலாச வாகனம், 17-ம் தேதி தங்கரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா, 18-ம் தேதி வெள்ளிக்கிழமை தேர் திருவிழா, இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை. 19-ம் தேதி அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்திற்கு முன் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம், பிற்பகல் திருவாபரண அலங்கார காட்சி. பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர் 12 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன மகா தரிசனம் நிகழ்ச்சியும், சித்சபா பிரவேச நிகழ்ச்சியும் நடைபெறும். 20-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.

Read more »

Aid distributed

CUDDALORE: 
 
                 Collector P. Seetharaman gave away aid worth Rs. 63,000 to differently abled persons at a grievance day session held here on Monday. The beneficiaries included two Sri Lankan Tamil refugees at Vriddhachalam and Kurinjipadi. In all, the Collector received 217 petitions seeking house site pattas, old age pension, etc.

Read more »

துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய காசோலை:மாற்ற முடியாமல் சுய உதவிக்குழுவினர் தவிப்பு

பண்ருட்டி:

                 துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய 22 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மூன்று மாதமாகியும் மாற்ற முடியாமல் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சுய உதவிக் குழுவினர் பரிதவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கம் ஊராட்சியில் 22 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இதில் 11 சுய உதவிக் குழுக்களுக்கு, தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் கடன் வழங்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

                இதற்கான காசோலையை, கடந்த மார்ச் 6ம் தேதி காட்டுமன்னார்கோவிலில் நடந்த அரசு விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சுய உதவிக்குழு தலைவர்களிடம் வழங்கினார். துணை முதல்வரின் கைகளால் காசோலையை பெற்ற சுய உதவிக்குழு பெண்கள், அதை பணமாக மாற்ற அருகில் உள்ள சித்திரைச்சாவடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பலமுறை நேரடியாக சென்று கேட்கும் போதெல்லாம், "பில்' தயாராகவில்லை எனக் கூறி அலைக்கழித்து வருகின்றனர். துணை முதல்வரால் வழங்கப்பட்ட காசோலை வாங்கி மூன்று மாதங்களாகியும் பணம் கைக்கு கிடைக்காமல் சுய உதவிக்குழு பெண்கள் பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சித்திரைச்சாவடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் தனசங்கர் கூறுகையில், 

                  "துணை முதல்வர் வருகைக்காக உயரதிகாரிகள் உத்தரவுபடி பட்டியல் தயார் செய்யும் முன் உடன் (செக்) பார்மெட் மட்டும் டிஜிட்டல் போர்டு செய்து வழங்கினோம். இதற்கான பணம் வழங்குவதற்கான கோப்புகளை கடலூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக்கு அனுப்பியுள்ளோம். ஓரிரு நாளில் ஒப்புதலாகிவிடும். விரைவில் பணம் வழங்கப்படும்' என்றார்.

Read more »

டாஸ்மாக் ஊழியரை மிரட்டி ரூ. 20 ஆயிரம் பறிப்பு: வார இதழ் நிருபர் கைது: மற்றொருவருக்கு வலை

கடலூர்:

                  டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி 20 ஆயிரம் ரூபாய்  பணத்தை பறித்துச் சென்ற வார பத்திரிகை நிருபரை போலீசார் கைது செதனர். மற்றொரு நிருபரை தேடிவருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சேப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்லதுரை. அஞ்சாநெஞ்சன் என்ற வார பத்திரிகை நிருபர். ராமநத்தத்தை அடுத்த வாகையூரை சேர்ந்தவர் மேனன் என்கிற கிருஷ்ணமேனன்(38). இவர், வேங்கை வெற்றி முரசு என்ற வார இதழின் நிருபர்.

                     இருவரும் கடந்த 3ம் தேதி ராமநத்தம் அடுத்த ஏ.பாளையம் டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கு பணியில் இருந்த மேற்பார்வையாளர் கண்ணனிடம், நீங்கள் பீரை கூடுதல் விலைக்கு விற்பதை போட்டோ எடுத்து வைத்திருக்கிறோம், அதை பத்திரிகையில் வெளியிட்டுவிடுவோம் என, மிரட்டி 20 ஆயிரம் ரூபாயை வாங்கிச் சென்றனர். இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து மேனன் என்கிற கிருஷ்ணமேனனை கைது செதனர், செல்லதுரையை தேடிவருகின்றனர்.

Read more »

கடலூர் அடுத்த களையூர் கிராமத்தில் நேற்று காலை கிராம மக்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு:50 பேர் பாதிப்பு

கடலூர்:

                     வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கடலூர் அடுத்த களையூர் கிராமத்தில் நேற்று காலை கிராம மக்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சவுமியா, முத்தரசி, அஞ்சாலட்சி, சுகுணா, ராஜேஸ்வரி, ஏழைவள்ளி, தீபிகா, அகஸ்தியா, ராணி, கவுரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றனர்.க ளையூர் கிராமத்தில் உள்ள 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைநீர் தேக்க தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதை நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் தண்ணீர் வினியோகம் செய்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Read more »

போலீஸ் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளது: எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் குற்றச்சாட்டு

கிள்ளை : 

                  போலீஸ் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ., அருண் மொழித்தேவன் பேசினார். 

                    விலைவாசி உயர்வை கண் டித்து சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரக்கூட்டம் நடந்தது. கிள்ளை நகர செயலாளர் விஜயன், நஞ்சைமகத்து வாழ்க்கையில் தொகுதி செயலாளர் தெய்வீகன், தில்லைவிடங்கனில் ஊராட்சி செயலாளர் நடேசன், பின்னத்தூரில் ஊராட்சி செயலாளர் இதயத்துல்லா தலைமை தாங்கினர். மாவட்ட மீனவரணி இணை செயலாளர் காத்தவராயசாமி, முன்னாள் கதர் வாரிய உறுப்பினர் ஜெயராமன், சிதம்பரம் நகர செயலாளர் தோப்பு சுந்தர், ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் தேன் மொழி முன்னிலை வகித் தனர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் பேசியதாவது:

                     கடந்த நான்கு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இந்த மாவட்ட அமைச்சர் கண் முன்னே சப் இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வேட்டியில் கறை படியும் என்பதால் உயிருக்கு போராடிய சப் இன்ஸ்பெக்டரை தனது காரில் ஏற்ற மறுத்தார். ஜெ., ஆட்சியில் சுனாமி பாதிப்பின் போது மூன்று அமைச்சர்கள் கிள்ளை பகுதியிலேயே தங்கி பணி செய்தனர். ஜெ., நிர்வாகத்திறன் மற்றும் நேர்மையான ஆட்சியால் தான் சங்கராச்சாரியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தி.மு.க., ஆட்சியில் தொண்டனை கூட கைது செய்ய முடியாமல் போலீசார் திணறுகின்றனர். அதற்கு காரணம் நேர்மையான போலீசாரின் கைகள் தி.மு.க., வினரால் கட்டப்பட் டுள்ளது. இவ்வாறு அருண்மொழித்தேவன் பேசினார். 

                  கூட்டத்தில் எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், தலைமை கழக பேச்சாளர்கள் தில்லை கோபி, சேகர், மணிமாறன், செல் வம், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய பொருளா ளர் அசோகன், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆறுமுகம், முருகுமணி, பொன்னுசாமி, அமிர்தலிங்கம், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

அலுவல் சாராதவர்களுக்கு முத்திரை செய்து கொடுத்தால் நடவடிக்கை: கலெக்டர்

கடலூர் : 

               அலுவல் சாரா தனி நபர்களுக்கு அலுவலக முத்திரை எக்காரணம் கொண்டும் செய்து தரக்கூடாது என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                  கடலூர் மாவட்டத்தில் அலுவல் சார்ந்த போலி முத்திரைகள் புழக்கத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இப்போலி முத்திரைகளால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு பலவிதமான இழப்புகளுக்கு ஆளாகிறார்கள். எனவே, அலுவல் முத்திரை தயார் செய்பவர்கள் சம்மந்தப் பட்ட அலுவலர்களின் அனுமதி ஆணை பெற்ற பிறகே முத்திரை தயாரித்து தர வேண்டும். அலுவல் சாரா தனிநபர்களுக்கு அலுவலக முத்திரை எக்காரணம் கொண்டும் செய்து தரக்கூடாது.

                      மீறினால் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும் பயனாளிகள் மற் றும் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் சமூக விரோதிகளை அணுகி போலி முத்திரையிட்ட சான்றுகளைப் பெற முயல வேண்டாம். ஊக்குவிக்க வேண்டாமெனவும் கேட்டுக் கொள் ளப்படுவதுடன் இவ்வகையில் குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருந்தால் அவர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

Read more »

பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேரவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது


கடலூர் : 

                 பிற்படுத்தப்பட்ட விடுதியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் வரும் ஜூலை 31ம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

                              மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கென பள்ளி மற்றும் கல் லூரி விடுதிகள் 61 இயங்கி வருகின்றன. பள்ளிகளில் நான்காம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயபடிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர் இவ் விடுதியில் தங்கி பயில தகுதியுடையவர்கள். அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் இலவச உணவு மற்றும் உறைவிடம் அளிக்கப்படும். 10ம் வகுப்பு வரை விடுதி மாணவ மாணவியர்களுக்கு 2 செட் பாலியஸ்டர் சீருடைகள் வழங்கப்படும்.

                                 இலவச வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும்.விடுதிகளில் சேர பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் அவர்களின் இல்லத்திலிருந்து பயிலுகின்ற பள்ளி, கல்லூரிக்கான இடைவெளி தூரம் 5 கி.மீ.,க்கு கூடுதலாக இருக்க வேண்டும். விடுதிகளில் சேர விரும்பும் பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்கள் காப்பாளர், பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று வரும் 31.7.2010க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பழைய மரத்தூண்கள் இன்று ஏலம்

கடலூர் : 

                 கடலூர் பி.டி.ஓ., அலுவலக கட்டடத்தில் பிரித்தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த மரத் தூண்கள் ஏலம் மீண்டும் இன்று நடக்கிறது. 

                      கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கனமழையின் போது இடிந்து விழுந்தது. அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த மரத்தூண்கள், இரும்பு கம்பிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி நேர்முக உதவியாளர் தர்மசிவம் தலைமையில் டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுப்பதற்காக ஒன்றிய சேர்மன் ஆதரவாளர்கள், தி.மு.க., சேர்ந் தவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக டெண்டர் விடுவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பழைய மரங்கள் ஏலம் இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more »

தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்ற சிதம்பரத்தில் உண்ணாவிரதம்

சிதம்பரம் : 

               தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்றக் கோரி சிதம்பரத்தில் அம்பேத்கர் பேரவை - தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. ஜமாபந்தியில் மாவட்டத்தில் எந்த தாலுகாவிலும் பஞ்சமி நில விவரம் ஒட்டப்படாததை கண்டித்தும், தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்றக் கோரியும், பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக் கோரியும் அம்பேத்கர் பேரவை - தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு சார்பில் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடந்தது.

                 அம்பேத்கர் பேரவை மாவட்ட அமைப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் அற்புதராஜ் வரவேற்றார். பொதுச்செயலாளர் அன்புதாசன் துவக்கி வைத்தார். மா.கம்யூ., செயற்குழு உறுப்பினர் மூசா, இந்திய கம்யூ., செயற் குழு நாகராஜன், தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., மணிவாசகம், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஆறுமுகம் விவசாய அணி கலியபெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் சேகர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு மகளிரணி சங்கீதா நன்றி கூறினார்.·

Read more »

கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை: நகரமன்றம் ஒப்புதல்

கடலூர் :

                   கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை, பான்பரி மார்க்கெட்டிற்கு சர்வீஸ் ரோடு அமைக்க நெடுஞ்சாலை துறை நில ஆர்ஜிதம் செய்ய நகர மன்றத் தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடலூர் நகர மன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். கமிஷனர் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

ராஜா (தி.மு.க.,): 

              சுரங்கப் பாதை அமைக்கும்போது பான்பரி மார்க்கெட்டிற்கு சர்வீஸ் சாலைக்கு மூன்று வழிகள் கூறப் பட்டுள்ளது. இதில் பாடலி தியேட்டர் வழியாக சாலை அமைப்பது தான் சிறந்து. தனியார் பள்ளிகளில் அரசு அறிவித்த தொகையை வசூலிக்க வேண்டும், பல பள்ளிகள் கடந்த ஆண்டை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

சர்தார் (காங்.,): 

                 கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப் பட்டு, பாதாள சாக்கடை திட்டத் திற்கு கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையை ஒரு மாதத்திற்குள் சரி செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், நெடுஞ்சாலைத்துறை காலம் கடத்தி வருகிறது. வார்டுகளில் குப்பை, கால் வாய்களில் அடைப்பு எடுப்பது உள்ளிட்ட எந்த பணியும் நடக்காமல் உள்ளது. எனவே மேற் பார்வையாளர்கள் அனைவரும் மாற்ற வேண்டும்.உடன் சேர்மன் அனைத்து பகுதிகளிலும் உள்ள மேற்பார்வையாளர்களை மாற்ற உத்தரவிட்டார்.

குமார் (அ.தி.மு.க.,): 

                 பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் சரியாக நடக்கவில்லை. அது போலத்தான் சுரங்கப்பாதை பணியும் நடக்கிறது. மழைக்காலம் வருவதற்குள் குண்டும் குழியுமாக உள்ள இடங்களை சீர் செய்யாவிட்டால் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நகராட்சிக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம்.

முத்து (சுயே.,): 

                கடலூர் மாவட்டத்திற்கு ஆளும் கட்சி அமைச்சர் உள்ளார். இந்த நிலையில் ஒரு மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்டசபையில் எம். எல்.ஏ., அய்யப்பன் கோரிக் கையை ஏற்று புறவழிச்சாலைக்கு ஓப்புதல் அளித்துள்ளனர். இந்த சாலை அமையும் போது கடலூருக்கு மேலும் ஒரு புதிய பஸ் நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கந்தன் (அ.தி.மு.க.,): 

                நகராட்சியில் இரண்டு டைப்பிஸ்ட் உள்பட 11 இடங்கள் காலியாக உள்ளதால் பணிகள் மந்தமாக உள்ளது. பின்னர் கடலூரில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான அனுமதி, 1.42 கோடி ரூபாயில் பல்வேறு இடங்களில் சாலை அமைப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Read more »

கடலூரில் நரம்பியல் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு

கடலூர் : 

                   இந்திய மருத்துவச் சங்கம், சென்னை மலர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் அறுவை சிகிச்சை குறித்த தற்போதைய நிலை மற்றும் இருதய அறுவை சிகிச்சையில் தோல்வி குறித்த கருத்தரங்கு கடலூரில் நடந்தது.கிருஷ்ணா மருத்துவ மனையில் நடந்த கருத்தரங்கிற்கு இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் சீனுவாசன் தலைமை தாங்கினார். கிருஷ்ணா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, கடலூர் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரக் குமார், நிலைய மருத்துவர் டாக்டர் கோவிந் தராஜ் முன்னிலை வகித்தனர். கடலூர் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பார்த்தசாரதி, நரம்பியல் நிபுணர் டாக்டர் ரேணுகாதேவி, டாக்டர் கண் ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் டாக்டர் ஸ்ரீதர் பேசுகையில் 

                   "10 ஆண்டுகளுக்கு முன் நரம்பியல் சிகிச்சையின் போது 10 சதவீதம் நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறக்க நேரிட்டது. ஆனால் தற்போது தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்துள்ளதால் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இறப்பு சதவீதம் பாதியாக குறைந்துள்ளது. நரம்பியல் நோய்களுக்கு 60க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை முறைகள் கையாளப்பட்டு வருகிறது' என பேசினார்.

Read more »

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் நெல்லிக்குப்பம் மகளிர் பள்ளி மாணவி முதலிடம்

நெல்லிக்குப்பம் : 

                 நெல்லிக்குப்பம் மகளிர் பள்ளி மாணவி சிலம்பம் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி முத்தமிழ்பிரியா திருவண்ணாமலையில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கலந்து கொண்டார். அதில் முதலிடம் பிடித்தார். தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவியை பயிற்சி ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, உடற் கல்வி ஆசிரியை ஜெசிந் தாராணி, தலைமையாசிரியர் சடமுத்து, ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலர் ஜோசப் ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் மாற்று சாகுபடியில் விவசாயிகள்

கடலூர் : 

                   கடலூர் பாரம்பரிய பயிர் செய்ய கூலி ஆள் கிடைக்காததால் விவசாயிகள் குறைந்த வருவாய் உள்ள பூ சாகுபடிக்கு மாறியுள்ளனர். கடலூர் பகுதியில் நாணமேடு, உச்சிமேடு, கண்டகாடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக கத்திரி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர். இது விவசாயிகளுக்கு வருவாயை ஏற்படுத்திக் கொடுத்தது.

                   கடந்த பல ஆண்டுகளாக பாரம்பரியமாக செய்து வந்த விவசாயம் தற்போது நலிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளது. இதற்கு காரணம் விவசாய நிலங்களில் கூலி வேலைக்குள் ஆள் கிடைப்பது அரிதாகி வருகிறது. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்ற நிலையிலும் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் வருவதில்லை.இதற்கு காரணம் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடந்து வரும் ஆண்டுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தால், விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் பாரம்பரிய விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் தற்போது பூக்கள் பயிர் செய்யத் துவங்கியுள்ளனர். நாணமேடு பகுதியில் தற்போது அதிகளவில் கோழிக் கொண்டை பூ சாகுபடி செய்யப்பட்டுகிறது. கிலோ 12 ரூபாய் என குறைந்த வருவாய்தான் என்றாலும் வேறு வழியின்றியும் நிலத்தை தரிசாக போட மனமில்லாததால் விவசாயிகள் இது போன்று மாற்று சாகுபடியில் இறங்கியுள்ளனர்.

Read more »

கடலூர் சாலையில் மீண்டும் பள்ளம்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

கடலூர் : 

                கடலூர் நகரில் மீண்டும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஆங்காங்கே தோண்டப்பட்டு வரும் பள்ளங்களால் விபத்து ஏற்படுகிறது.கடலூர் நகரின் முக்கிய சாலைகளில் பாதாளசாக்கடை பணிக்காக பைப் புதைக்க நெல்லிக்குப்பம் ரோடு, வண்டிப்பாளையம், என முக்கிய சாலைகளில் பள்ளம் தோண் டப்பட்டது. நீண்ட நாட்களாக பைப்புகள் புதைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது.

                     கடலூரில் உள்ள நகர் நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் போராட்டத்தில் இறங்கின. இதைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு ஒரு மாதத்தில் முக்கிய சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டு நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் பின் நெல்லிக்குப்பம் ரோட்டில் சாலை போடுவதற்கான பூர்வாங்க பணிகள் நடந்தது. ஆனால் இந்த பணியும் பாதாள சாக்கடை பணியை விட மிக மோசமான அளவில் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

                    தற்போது நெல்லிக்குப்பம் ரோட்டில் பாதாள சாக்கடைக்கு "மேன் ஹோலை' சுற்றி கான்கிரீட் அமைப் பதற்கு மீண்டும் "மேன் ஹோல்' பகுதியைச் சுற்றி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் உடன் முடிக்காததால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், சரி செய்யப்பட்ட இடங்களில் தார் சாலைகள் போட தாயார் நிலையில் இருந்த ரோடுகளில் தற்போது கேபிள் புதைப்பதற்காக அதன் அருகிலேயே மீண்டும் பள்ளம் தோண்டப்படுகிறது. கடலூர் நகரில் முக்கிய சாலையான நெல்லிக் குப்பம் சாலை தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாகவே உள்ளது.

Read more »

விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால்... டிராபிக் ஜாம்: லாரன்ஸ் ரோட்டில் தொடரும் அவலம்

கடலூர் : 

                ஒருவழிப் பாதையான லாரன்ஸ் ரோட்டில் விதிகளை மீறி வந்த அரசு பஸ் களால் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடலூர் நகரின் பிரதான பகுதியாக லாரன்ஸ் ரோடு உள்ளது. இங்கு பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர், வங்கிகள், வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்தது வந்தது. கடைவீதிக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை குறுகலான ரோட்டில் இருபுறமும் நிறுத்திக் கொள்வதால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 7 ஆண்டிற்கு முன் லாரன்ஸ் ரோடு ஒருவழிப் பாதையாக அறிவிக்கப் பட்டது.

                  மேலும் இருசக்கர வாகனங்களை ரோட் டில் ஒரு பகுதியில் மட்டும் நிறுத்த ஏற்பாடு செய்தனர். அதேப்போன்று திருவந்திபுரம் மார்க்கத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் வண்டிப்பாளையம் ரோடு, சூரப்ப நாயக்கன் சாவடி வழியாகவும், திருவந்திபுரம் மற்றும் வண் டிப்பாளையம் மார்க்கத்திலிருந்து வரும் கார், ஆட்டோ மற்றும் மோட் டார் சைக்கிள்கள் தேரடி தெரு, ஆர்.எம்.எஸ்., வழியாக லாரன்ஸ் ரோட்டிற்கு திருப்பி விட்டனர். பஸ் நிலையத்திலிருந்து திருவந்திபுரம் மார்க்கம் செல் லும் கனரக வாகனங்கள் லாரன்ஸ் ரோடு, தேரடி தெரு, போடி செட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு வழியாக திருப்பி விட்டனர்.இந்த விதிமுறைகளை வாகன ஓட்டிகள் மீறாமல் இருக்கும் பொருட்டு காலை 7 முதல் இரவு 9 மணி வரை லாரன்ஸ் ரோடு - வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பில் (பிள்ளையார் கோவில் அருகில்) போக்குவரத்து போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு போக் குவரத்தை ஒழுங்குபடுத்தி வந்ததால் லாரன்ஸ் ரோட் டில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்தது.

                    இந்நிலையில் போலீஸ் பற்றாக்குறை காரணமாக சில மாதங்களாக ஒருவழிப்பாதையான லாரன்ஸ் ரோட்டில் போலீசார் சரிவர பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் திருவந்திபுரம் மார்க்கத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசார் இல்லை என்றால் லாரன்ஸ் ரோடு வழியாக செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று காலை லாரன்ஸ் ரோடு ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லை. இதன் காரணமாக பகல் 12 மணிக்கு திருவந்திபுரம் மார்க்கத்திலிருந்து வந்த இரண்டு அரசு டவுன் பஸ் டிரைவர்கள் லாரன்ஸ் ரோடு வழியாக பஸ் நிலையம் செல்ல முயன்றனர். அதே நேரத்தில் பஸ் நிலையத்திலிருந்து நடுவீரப்பட்டு செல்லும் தனியார் பஸ் ஒன்று எதிரே வந்தால் மேற்கொண்டு அரசு டவுன் பஸ் செல்ல முடியவில்லை.

                      இதற்கிடையே அரசு பஸ்சை பின் தொடர்ந்து ஏராளமான ஆட்டோக்களும், மோட்டார் சைக்கிள்களும் ஒரு வழிப்பாதையில் வந்ததால் வண்டிப்பாளையம் ரோடு, தேரடி தெரு மற்றும் சுப்புராய செட்டித் தெருவிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விதியை மீறி ஒரு வழிப்பாதையில் வந்த அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்களை பின்னால் அனுப்பிய பிறகே பகல் ஒரு மணிக்கு போக்குவரத்து சீரானது. போலீஸ் இருந்தால் தான் போக்குவரத்து விதிகளை மதிப்பது என்ற மனநிலையில் வாகன ஓட்டிகள் செயல்பட்டு வருகின்றனர். இதனை முறைப்படுத்த போலீசார், லாரன்ஸ் ரோட்டில் அவ் வப்போது திடீர் சோதனை செய்து ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

பண்ருட்டி : 

                கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சப் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் திருட்டு மணல் ஏற்றி வந்த டி.என்.45 ஏ.1499 எண்ணுள்ள லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் திருட்டு மணல் கடத்தியது தெரியவந் தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து கண்டரக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் பாண்டியனை (20) புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக் குப் பதிந்து பாண்டியனை கைது செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior