உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 25, 2012

ஆலப்பாக்கம் அருகே எல்.கே.ஜி. மாணவி கார் மோதி உயிர் இழப்பு

கடலூர்:

       கடலூர்  மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே பள்ளிக்குச் செல்ல தயாராக நின்றுக்கொண்டிருந்த எல்.கே.ஜி. மாணவி கார் மோதி உயிரிழந்த சம்பவம், பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


       கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில் (விவசாயி). இவரது மகள் செவ்விழி (வயது 4). பரங்கிப்பேட்டை அருகே மடவாபள்ளத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். தினமும் வேனில் பள்ளிக்கு சென்று வந்தாள்.  24.08.2012 காலை 8 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக ஆலப்பாக்கத்தில் பள்ளி வேனுக்காக தனது தாயாருடன் காத்திருந்தாள். அப்போது அந்த வழியாக கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ஒரு கார் நிலை தடுமாறி தாறுமாறாக ரோட்டில் ஓடியது. அதைப்பார்த்து மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓடினார்கள். ஆனால் மாணவி செவ்விழி மீது அந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரின் டிரைவர் போலீசில் சரண் அடைந்துள்ளார். கடலூர் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

          செவ்விழி இறந்த தகவல் அறிந்து உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சமீப காலமாக பள்ளி குழந்தைகள் அடுத்தடுத்து விபத்தில் உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.






Read more »

கானூரில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா

சேத்தியாத்தோப்பு:


சேத்தியாத்தோப்பு அடுத்த கானூரில் மாணவர்களுக்கு இலவச  மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த  விழாவிற்கு விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர்சுப்ரமணியன் தலைமை  தாங்கினார். ஊராட்சி தலைவர் தில்லைராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலசுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கருப்பன், ஒன்றிய சேர்மன் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் குணசீலன் வரவேற்றார்.காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன், மாணவர்களுக்கு அரசின் இலவச  மடிக்கணினிகளை வழங்கிப் பேசினார். பேரூராட்சி சேர்மன் எம்.ஜி.ஆர். தாசன்,  ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior