உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

அ‌ந்தமா‌னி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்

                     அந்தமான் தீவில் நேற்றிரவு 10.30 மணிக்கு கடுமையான ‌நில நடு‌க்க‌ம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் சென்னையிலு‌ம் உணரப்பட்டது. அந்தமான், ஒரிசா போன்ற இடங்களில் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது பற்றி உடனடி தகவல் வரவில்லை. அந்தமான் மற்றும் அதனை சுற்றி உள்ள தீவுகளிலும் பூமி அதிர்ச்சி உணரப்பட்டது. மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். போர்ட் பிளேர் நகரில் இருந்து 240 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பூமி அதிர்வின் மையம் இருந்தது. இந்த பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. என்றாலும் 2 பேர் காயம் அடைந்ததாகவும், சில வீடுகளின் ஓடுகள் சரிந்து விழுந்ததாகவும், அந்தமான் தீவின் தலைமை செயலர் விவேக் ராய் செ‌ய்‌தியா‌ள‌ர்‌க‌ளிட‌மதெரிவித்தார்.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்டர்நெட்டில் இன்று வெளியீடு

சிதம்பரம்:

                      சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையத்தில் டிசம்பர்-2009 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இன்டர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச்31-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.  

                 தேர்வு முடிவுகளை http://annamalaiuniversity.ac.in/results/getdegree.php?sys=dde முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்: (சிதம்பரம் கோடு எண்: 04144) - 237356, 237357, 237357, 237358, 237359  மேலும் மொபைல் போனில் தஇண உய்ழ்.ய்ர் தஇண தங்ஞ்.ய்ர் என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.வெளியிடப்பட்ட முடிவுகள்: 

                      பி.ஏ.-வரலாறு, சோசியாலஜி, எக்னாமிக்ஸ், ஆங்கிலம், அரசியல் அறிவியல், பாப்புலேஷன் ஸ்டெடிஸ், தமிழ், பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன், வரலாறு மற்றும் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், ஆங்கிலம் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், பங்ஷனல் தமிழ், போலீஸ் அட்மினிஸ்டிரேஷன், சோசியல் மற்றும் சிவிக் ஸ்டெடிஸ், ஹியுமன் ரைட்ஸ், சோசியல் வெல்பேர் அட்மினிஸ்டிரேஷன், பிசினஸ் எக்னாமிக்ஸ், பி.ஏ. மற்றும் பி.எஸ்சி. சைக்காலஜி  பி.எஸ்சி.- கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (டபுள் டிகிரி), ஆப்ரேஷன் ரிசர்ச் (டபுள் டிகிரி), அப்ளைடு கெமிஸ்டரி, எலக்டிரானிக் சயன்ஸ்,  இயற்பியல், தாவரவியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இனபர்மேஷன் டெக்னாலஜி, விஷுவல் கம்யூனிக்கேஷன்ஸ், கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், இன்டீரியர் டிசைன், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் டூரிசம் மற்றும் பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எஸ்., பி.எம்.எம்., பி.மியுசிக்., பி.டான்ஸ்., பி.பி.எல்., பி.சி.ஏ., பி.டிட், பி.எட்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.ஃபில்- இயற்பியல், விலங்கியல், கடல்வாழ் உயிரியல் மற்றும் முதுகலை டிப்ளமா படிப்புகள், டிப்ளமா படிப்புகள். சான்றிதழ் படிப்புகள்.

Read more »

அண்ணாமலைப் பல்கலையில் கருத்தரங்கம்

சிதம்பரம்:

                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்கக பொருளாதாரப் பிரிவு சார்பில் "முதுமையில் ஏற்படும் பொருளாதார தாக்கம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் தலைமை வகித்தார். பொருளியல் பிரிவுத் தலைவர் டி.நமசிவாயம் வரவேற்றார். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் கருத்தரங்கை தொடங்கி வைத்து மலரை வெளியிட்டு பேசினார்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் வேளாண் சேவை மையங்கள்

கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் 5 வேளாண் சேவை மையங்களை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழகத்தில் 100 வேளாண் சேவை மையங்களை ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, ஆயிக்குப்பம், பி.முட்லூர், தொழுதூர், பெண்ணாடம் ஆகிய இடங்களில் வேளாண் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. குறிஞ்சிப்பாடி ஆயிக்குப்பத்தில் நடந்த விழாவில், வேளாண் சேவை மையங்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். ரூ.25 லட்சம் மதிப்பிலான வேளாண் உபகரணங்களை (5 மினி டிராக்டர், 5 பவர் டில்லர்கள், 2 நாற்று நடும் கருவிகள், 14 களை எடுக்கும் கருவிகள், 8 பவர் ஸ்பிரேயர்கள், 7 கைத் தெளிப்பான்கள், 11 தார்ப் பாய்கள்) அமைச்சர் வழங்கினார். 

நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது: 

                கடலூர் மாவட்டத்தில் 106 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன், பயிர் காப்பீடு உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு கடலூர் மாவட்ட விவசாயிகள் 1,00,908 பேருக்கு ரூ.246.11 கோடி வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2009-10-ம் ஆண்டுக்கு 87,889 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.160.1 கோடியும், விவசாயக் கூட்டுப் பொறுப்புக்குழு கடனாக 500 குழுக்களுக்கு ரூ.5.81 கோடியும் மத்திய காலக் கடனாக 764 பேருக்கு ரூ.3.16 கோடியும், மகளிர் சுயஉதவிக்குழு கடனாக 2,468 குழுக்களுக்கு ரூ.15.69 கோடியும் பிற்பட்டோருக்கான கடன் 352 பேருக்கு ரூ.40.91 லட்சமும், சிறுபான்மையினருக்கான கடன் 650 பேருக்கு ரூ.162.5 லட்சமும் மாற்றுத் திறனாளிகள் 311 பேருக்கு ரூ.54.91 லட்சமும் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது என்றார் அமைச்சர்.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட  வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், மத்தியக் கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் ந.மிருணாளினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

ஓய்வூதியர்கள் கவனத்துக்கு

கடலுர்:

                 ஓய்வூதியர்கள் அனைவரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல், அவரவர் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் நேர்காணல் (மஸ்டரிங்) பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

கடலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத் தலைவர் பா.வெங்கடேசன், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                   ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் 2010-11-ம் ஆண்டுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஓய்வூதியக் கொடு ஆணைப் புத்தகத்துடன், அவரவர் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்குச் சென்று, நேர்காணல் (மஸ்டரிங்) பதிவு செய்து கொள்ள வேண்டும். கருவூல அலுவலரின் நேர்காணல் கட்டாயம் ஆகும். அவ்வாறு மஸ்டரிங்  செய்யாதவர்களுக்கு ஓய்வூதியத்தை கருவூலம் நிறுத்தி வைக்க ஏதுவாகும். குடும்ப ஓய்வூதியர்கள் மருத்துவ உதவித் திட்டத்தில் சேர விருப்பம் தெரிவிக்கும் கால அவகாசம் 30-6-2010 வரை நீடிக்கப்பட்டு உள்ளது. இச்சலுகைத் திட்டத்தில் குடும்ப ஓய்வூதியர்கள் விரும்பினால் சேரலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

பண்ருட்டி பகுதியில் மத்திய அதிரடிப்படை ஆய்வு

பண்ருட்டி:

                 பண்ருட்டி காவல் சரகத்தில் பிரச்னை மற்றும் பதற்றத்துக்குரிய பகுதிகளை, கோவையைச் சேர்ந்த மத்திய அதிரடிப் படையினர் திங்கள்கிழமை பார்வையிட்டனர். கோவையைச் சேர்ந்த 105-வது பட்டாலியன் பி கம்பெனியைச் சேர்ந்த உதவி ஆணையர் என்.சுனில்குமார், இன்ஸ்பெக்டர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோருடன் அதிரடிப் படையினர் 60 பேர் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு கடந்த 25-ம் தேதி முதல் மாவட்டத்தின் பிரச்னை மற்றும் பதற்றத்துக்குரிய இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். திங்கள்கிழமை பண்ருட்டி, புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டிக்குப்பம் ஆகிய பகுதியில் பிரச்னை மற்றும் பதற்றமான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுக்கு உதவியாக பண்ருட்டி சரக காவல் நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.

Read more »

அனைத்து மருந்துக் கடைகளிலும் மருந்தாளுநர்கள் கட்டாயம் தேவை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

நெய்வேலி:

             மருந்து கடைகளில் பட்டப்படிப்பு முடித்த மருந்தாளுநர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

நெய்வேலி இந்திரா நகரில் திங்கள்கிழமை நடந்த அப்பல்லோ மருத்துவமனையின் தகவல் மையத் திறப்பு விழாவுக்கு வந்த அவர், அங்கு கூறியது: 

                    காலாவதியான மருந்து மற்றும் போலி மருந்து தொடர்பாக எனக்கு ஓரிரு மாதத்துக்கு  முன்பே தகவல் கிட்டியதும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது பலர் இதில் சிக்கியுள்ளனர். பல மருந்து விற்பனைக் கடைகளில் மருந்தாளுநர்களே இல்லாமல் மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எனவே மருந்து விற்பனைக் கடைகளிலும் சோதனை செய்து, பட்டப்படிப்பு முடித்த மருந்தாளுநர்கள் இல்லாத மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசு மருத்துவமனைகளில் முறையாக டெண்டர் கோரப்பட்டு தரமுள்ள மருந்துகளாக என்பதை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர்தான் மருந்துகள் வாங்கப்படுவதால் அரசு மருத்துவமனைகளில் காலாவதியான அல்லது போலி மருந்துகளோ இருக்க வாய்ப்பில்லை. நெய்வேலியில் என்எல்சி மருத்துவமனையில் விரைவில் சோதனை செய்யப்படும் என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

Read more »

பறிபோகும் அவலம்! சேவை இல்ல மாணவிகளின் சுதந்திரம்... சமூக நலத்துறை அலுவலகத்தால் சிக்கல்

கடலூர் : 

                     கடலூர் சேவை இல்லத்தில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை மாற்றியதால், அங்கு தங்கி படித்து வரும் 600க்கும் மேற் பட்ட ஆதரவற்ற மாணவிகளின் கல்வி பாதிப்பதோடு, அவர்களின் சுதந் திரம் பறிக்கப்பட்டு வருகிறது. கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் அரசு சேவை இல்லம் இயங்கி வருகிறது. கணவரால் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள், ஆதவற்ற பெண் கள், சமூக சூழலால் பாதித்த பெண் கள், பாலியல் கொடுமைக்களுக்கு உட்பட்ட பெண்கள் இந்த இல்லத்தில் தங்கி படித்து வருகின்றனர். மேலும் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் தாய், தந்தையரை இழந்த சிறுவர், சிறுமிகள் 40 பேரும், கடலூர் மஞ்சக்குப்பத்தில் இயங்கி வந்த அன்னை சத்யா ஆதரவற்றை மாணவிகளும் கடந்த நான்காண்டாக சேவை இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் தங்கி படித்து வருகின்றனர்.

                  மற்றோர் பகுதியில் உள்ள கட்டடத்தில் வளர் இளம் பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப் பட்டு வந்தது. சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ள இந்த சேவை இல்லத்தில் வெளியாட்கள் எவரும் செல்ல முடியாத அள விற்கு பாதுகாப்பு இருந்தது. இதனால் அங்குள்ள மாணவிகள் சுதந்திரமாக இருந்தனர். இந்நிலையில் சேவை இல்ல வளாகத்தில் இயங்கி வந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை காலி செய்துவிட்டு, அந்த இடத்தில் கடலூர் புதுப்பாளையத்தில் பல ஆண்டாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தை மாற்றியுள்ளனர். இத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பம் கொடுக்கவும், நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக தினசரி நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த அலுவலகத்தில் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான புகார் மீதான விசாரணைக்கு வரும் இரு தரப்பினரும் சேவை இல்ல வளாகத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபடுவதால், அங்கு படித்து வரும் மாணவிகளின் படிப்பு முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கும்பல், கும்பலாக வந்து செல்வதால் மாணவிகள் மட்டுமே தங்கியுள்ள சேவை இல்லத்தில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது.

                   மேலும், பள்ளி முடிந்து மாணவி கள் இல்ல வளாகத்தில் சுதந்திரமாக விளையாடுவது வழக்கம். ஆனால் தற்போது மாலை 6 மணிக்கு மேலும் சமூக நலத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் இருப்பதாலும், அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்து செல்வதாலும் மாணவிகள் விளையாடக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் துணி துவைப்பது உள்ளிட்ட அன்றாட பணிகளும் பாதிக்கிறது. சேவை இல்லத்தில் ஆதரவற்ற மாணவிகளின் கல்வியை மேம் படுத்தவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திடவும், மாணவி கள் சுதந்திரமாக செயல்பட இல்ல வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை உடனடியாக வேறு இடத் திற்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

போலி மருந்து வழக்கில் சரணடைந்தவரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி

கடலூர் : 

                        போலி இருமல் மருந்து விற்பனை செய்த வழக்கில் கோர்ட்டில் சரணடைந்தவரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வள்ளியப்பன். இவர் அதே பகுதியில் செல்வவிநாயகர் ஏஜென்சி என்ற பெயரில் மருந்து மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த ஏஜென்சியில் கடந்த 17ம் தேதி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

                    அதில், போலியாக தயார் செய்த 'பெனட்ரில் சிரப்' 2700 பாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.இது குறித்து கடலூர் மாத்திரை சோதனை ஆய்வாளர் குருபாரதி கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, ஏஜென்சியை நடத்தி வந்த வள்ளியப்பனை தேடி வந்தனர். அதனை அறிந்த வள்ளியப்பன் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் (3)ல் சரணடைந்தார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப் பட்டார். போலி மருந்து குறித்து வள்ளியப்பனிடம் விசாரணை செய்ய அனுமதி கோரி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ் திரேட் சுந்தரம், வள்ளியப்பனை வரும் 5ம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

Read more »

மாணவிகளுக்கு உடல்நலக் கல்வி குறித்த பயிற்சி


ராமநத்தம் : 

               ராமநத்தம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கண்டமத்தான், பட்டாக்குறிச்சி, புலிகரம்பலூர் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உடல்நலக் கல்வி குறித்த பயிற்சி துவக்க விழா நடந்தது. விழாவிற்கு புலிகரம்பலூர் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் செங்குட்டுவன், ஜெயந்தி, பாலாஜிராவ் முன்னிலை வகித்தனர்.

                ஆசிரியர் வீரமணி வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார் வையாளர் முருகேசன் உடல்நலக் கல்வி பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். ஆசிரியர் பயிற்றுனர் பன்னீர் செல்வம் மேற்பார்வையில் பட்டாக்குறிச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா, ஆசிரியர் ரம்யா ஆகியோர் மாணவிகளுக்கு தினசரி பயிற்சிகள், உணவு வகைகள், சரிவிகித உணவு, ஊட்டச்சத்துக்கள் உள்ளிட்டவைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினர். இதில் பட்டாக்குறிச்சி 18, கண்டமத்தான் 14, புலிகரம்பலூர் 18 மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் மார்க்கஸ், தமிழ்ச்செல்வி கலந்து கொண்டனர்.

Read more »

ஆத்மா திட்டத்தில் விவசாயிகள் தொழில் நுட்ப சுற்றுலா

குறிஞ்சிப்பாடி : 

          குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தில் 75 விவசாயிகள் தொழில் நுட்ப சுற்றுலா சென்றனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டம் (ஆத்மா) கீழ் விவசாயிகள் 75 பேர் வட்டார அமைப்பாளர் அசோகன் தலைமையில் சுற்றுலா சென்றனர். கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து தெரிந்து கொள்ள காட்டுப்பாக்கம் கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு சென்று ஆடு, மாடு, கோழி, காடை, வான் கோழி, ஈமு கோழி, நெருப்புக் கோழி, பன்றி வளர்ப்பு குறித்து தொழில் நுட்பங்களை அறிந்துக் கொண்டனர்.

Read more »

பென்னாகரத்தில் வெற்றி: தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

கடலூர்:

                    பென்னாகரம் இடைத்தேர்தல் வெற்றியை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.,வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் வெற்றி பெற்றார். இதனையடுத்து கடலூர் தி.மு.க., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் சேர்மன் தங்கராசு, நகர தலைவர் நாராயணன், கவுன்சிலர்கள் தமிழரசன், கணபதி, இளங்கோ, சம்பத், கோவிந்தசாமி, வனிதா, கோவலன், பூங்காவனம் மற்றும் தொண் டர்கள் பட்டாசு வெடித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நெல்லிக்குப்பம்: 

                  எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் நகர செயலாளர் பழனிவேல், அங்கமுத்து, பலராமன், கவுன்சிலர்கள் தமிழ் மாறன், விஜயகுமார், வார்டு செயலாளர் செந்தாமரைக்கண்ணன், மதியழகன், ரமேஷ், மனோகர் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.நெல்லிக்குப்பம் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் அவைத்தலைவர் முகமது அனீப், துணை செயலாளர் தனகோடி, நந்தகோபால், குணசேகரன் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கினர். திட்டக்குடி: நகர செயலாளர் பரமகுரு தலைமையில் நகர தலைவர் தங்கமணி, துணை செயலாளர் துரை, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், கவுன்சிலர் செந்தில், ராஜேந்திரன், ராசாத்தி உள்ளிட்டோர் பஸ் நிலையத்தில் இனிப்பு வழங்கினர்.

Read more »

கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்திற்கு பயனாளிகள் கணக்கெடுக்கும் பணி

பரங்கிப்பேட்டை : 

                    பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் 28 ஊராட்சிகளில் கான்கிரீட் வீட்டுவசதி திட்டத்திற்கு கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரியகோஷ்டி, ஆதிவராகநல் லூர், அருண்மொழித்தேவன், தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை உட்பட 28 ஊராட்சிகளில் கான்கிரீட் வீட்டுவசதி திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்ய கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. சின்னகுமட்டி ஊராட்சியில் ஒன்றிய ஆணையர் சுப்ரமணியன் கணக்கெடுக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேலாளர் ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர் நாகப் பன், கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நெல்லிக்குப்பம்: 

                   எய்தனூரில் நடந்த குடிசை வீடுகள் கணக்கெடுப்பு பணியை டி.ஆர்.ஓ. நடராஜன் ஆய்வு செய்தார். துணை தாசில்தார் நாசிக் இக்பால், வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி, வருவாய் ஆய்வாளர் ரபீக்குதீன் உடனிருந்தனர். நடுவீரப்பட்டு: நைனாப்பேட்டை பகுதியில் நடுவீரப்பட்டு வி.ஏ.ஓ., குப்புசாமி, ஊராட்சி உதவியாளர் ராஜேந்திரன்,மக்கள் நலப் பணியாளர் அஞ்சாபுலி ஆகியோரும், சி.என்.பாளையத்தில் வி.ஏ.ஓ., ஜோதிமணி, மக்கள் நலப் பணியாளர் வேல்முருகன், ஊராட்சி உதவியாளர் ரவி ஆகியோர் கணக்கெடுப்பு பணியினை செய்து வருகின்றனர்.

Read more »

ஆதிதிராவிட கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி துவக்கம்

சிதம்பரம் : 

             கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட நலவிடுதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி சிதம்பரத்தில் துவங்கியது .தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிட நல விடுதியில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சி.முட் லூர் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 100 பேர் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
 
                     இதன் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. சிதம்பரம் ஆக்ஸ்போர்டு இன்ஸ்டியூட் நிறுவனர் ஆறுமுகம் வரவேற்றார். தாட்கோ மாவட்ட மேலாளர் துளசிராமன் பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயக்குமார், கல்லூரி முதல்வர் ராமசாமி, ஆங்கிலத்துறை பேராசிரியர் சேரமான் பேசினர். இன்ஸ்டியூட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Read more »

மேலாண்மை தேர்வில் முதலிடம் மாணவருக்கு பாராட்டு விழா

ஸ்ரீமுஷ்ணம் : 

             மேலாண்மை தேர்வில் தங்கப் பதக்கம் வென்ற மாணவருக்கு மின்வாரிய ஊழியர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மதன்குமார். இவரது மகன் சதன்பாபு கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள ஐ.ஐ.எம்., நிறுவனத்தில் அகில இந்திய அளவில் நடந்த மேலாண்மை தேர்வில் முதலிடம் பெற்று தங் கப்பதக்கம் பெற்றார்.

                  இதனை பாராட்டி மின்வாரிய ஊழியர்கள் சார்பில் நடந்த பாராட்டு விழாவிற்கு உதவி மின் பொறியாளர் சடகோபன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியா ளர் கண்ணகி முன் னிலை வகித்தார். கிராமப்புற உதவி மின்பொறியாளர் ரமணன் வரவேற்றார். சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் செல்வசேகர் பாராட்டி பேசினார். விழாவில் சதன்பாபு பெற்றோர்கள் கவுரவிக் கப்பட்டனர். முடிவில் பாளையங்கோட்டை துணை மின்நிலைய உதவி மின்பொறியாளர் ரவி நன்றி கூறினார்.

Read more »

பணி நிரந்தரம் செய்யுமாறு பிரிவு எழுத்தர்கள் வலியுறுத்தல்

கடலூர் : 

               அரசுத்தேர்வுகள் துறையில் 14 ஆண்டாக பணியாற்றி வரும் பிரிவு எழுத்தர்கள் பணி நிரந்தரம் செய்ய துணை முதல்வருக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறையில் தற்காலிக பிரிவு எழுத்தர்களாக கடலூர் மண்டலத்தில் 9 பேரும், வேலூர் மண்டலத்தில் 8 பேரும், தினக் கூலி பணியாளர்கள் 6 பேரும், சென்னை தலைமையகத்தில் 6 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

                      இவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பதிவு மூப்பு அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். தற் போது நாளொன்றுக்கு 150 வழங்கி வருகிறது. இதே துறையில் தொடர்ந்து 14 ஆண்டு களாக பணியாற்றி வருவதால் வயது வரம்பை கடந்து வேறு அரசு பணிக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். பணி நிரந்தரம் கோரி கடந்த 10 ஆண்டாக தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். பணி நிரந்தரம் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை அன்று சட்டசபை வளாகத்தில் குடும்பத்துடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

Read more »

இலங்கை அகதிகள் முகாமில் மறுவாழ்வு துறை அதிகாரி ஆய்வு

சின்னசேலம் : 

               சின்னசேலம் இலங்கை அகதிகள் முகாமில் நடந்து வரும் பணிகளை சென்னை மறுவாழ்வு துறை அதிகாரி ஆய்வு செய்தார்.சின்னசேலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை சென்னை மறுவாழ்வு துறை ஆணையர் அலுவலக தனித் துணை ஆட்சியர் ரகுபதி நேற்று ஆய்வு செய்தார். முகாம் தலைவர் மோகன் வரவேற்றார். முகாமில் நடந்து வரும் பக்க கழிவு கால்வாய், குடிநீர், சாலை பணிகளை தனித் துணை ஆட்சியர் ரகுபதி பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஆர்.டி.ஓ., வனிதா, தாசில்தார் மணி, பேரூராட்சி செயல் அலுவலர் கபினி, ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் சித்ரா, வருவாய் ஆய்வாளர் செல்வராணி, வி.ஏ.ஓ., ராஜவேலு உட்பட பலர் உடனிருந்தனர்.

Read more »

உர மானிய கொள்கை மாற்றத்தால் போலி உரங்கள் நடமாட்டம் அதிகரிக்கும்: விவசாயிகள் கவலை

கடலூர் : 

                   கடந்த 10 ஆண்டுகளாக இருந்த உர மானிய கொள்கை நாளை 1ம் தேதி முதல் புதிய உர மானிய கொள்கையாக மாற்றம் அடைவதால் ஏற்படும் விலையேற்றம் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உர மானிய கொள்கை நாளை 1ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக உரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட மானியம் இனி தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணூட்ட சத்து என உரங்களில் உள்ள சத்துக்களின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. யூரியா உரத்தை மட்டும் நாளை முதல் அதிகபட்ச சில்லறை அரசு விலை நிர்ணயம் செய்து 10 சதவீதம் உயர்த்துகிறது. அதன்படி இதுவரை 4,830 ரூபாயாக இருந்த ஒரு மெட்ரிக் டன் யூரியா நாளை 1ம் தேதி முதல் 5,310 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. யூரியாவை மட்டும் அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு பிற உரங்களுக்கு அந்தந்த கம்பெனிகளே விலை நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு வழி வகுத்துள்ளதும் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் கூறுகையில் '

                  விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான உர கொள்கை முடிவு. அனைத்து உரங்களையும் அந்தந்த வகையான ரசாயன கலப்பினங்களுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படும் உரங்கள் அரசு கட்டுப் பாட்டில் இருக்கும்போதே தவறுகள் நடந்துள்ளது. உரங்கள் அனைத்தும் என்.பி.கே., எனப்படும் கலைவை சதவீதத்திற்கு மேல் குறைகள் இருந்தது.தற்போது யூரியாவை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மற்ற உரங்களின் விலையை கம்பெனியே நிர்ணயம் செய்து கொள்வது என்பது தவறான கொள்கை முடிவு. இதனால் சந்தையில் போலியாக தயாரிக்கப்பட்ட உரங்கள் நடமாட்டம் அதிகரிக்கும். தரமான ஒரிஜினல் உரங்கள் கிடைக்குமா என சந்தேகம் எழுந் துள்ளது.

Read more »

மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் பயனின்றி பாழாகி வருகிறது

நெல்லிக்குப்பம் : 

              கீழ்அருங்குணம் மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் பயன்படுத்தாமல் பாழாகி வருகிறது.
 

                      தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. சுய உதவிக்குழு பெண்கள் சந்தித்து பேச இடவசதியில்லாமல் சிரமப்பட்டனர். உள்ளாட்சிகள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தனியாக கட்டடம் கட்டித் தரப்பட்டது. அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்அருங்குணம் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு தனியாக கட்டடம் கட்டித் தரப்பட்டது. ஒரு சில மாதங்கள் மட்டுமே இக்கட்டடத்தை பயன்படுத்தினர். அதன்பிறகு பயன்படுத்தாததால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. சுய உதவிக்குழு தலைவி வீட்டிலேயே கூட்டத்தை நடத்துகின்றனர். இதனால் கட்டடம் பாழாகிறது. மகளிர் சுய உதவிக்குழுவினர் அவர்களுக்காக கட்டப்பட்ட கட்டடத்தை பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பண்ருட்டி பகுதியில் மின் வெட்டு அறிவிப்பு

பண்ருட்டி : 

             பண்ருட்டி நகரம், கிராமப்புற பகுதியில் மின்நிறுத்தம் செய்யும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
 
                        பண்ருட்டி கிராமப்புற மின்பாதையில் மும்முனை மின்சாரம் முதல் பிரிவிற்கு காலை 6 மணி முதல் 12 மணிவரையிலும் இரவில் 3 மணி முதல் 6 மணிவரை வழங்கப்படும். 2ம் பிரிவிற்கு பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரையிலும், இரவில் 12 மணி முதல் 3 மணிவரை வழங்கப்படும். மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் லிங்க்ரோடு, விழமங்கலம், தட்டாஞ்சாவடி பீடரில் உள்ள பண்ருட்டி நகர் பகுதிகளில் மாலை 3 மணி முதல் 6 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

                திருவதிகை பீடரில் உள்ள திருவதிகை, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, சீரங்குப்பம்,தி. ராசாப்பாளையம் மற்றும் பூங்குணம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஆர்.எஸ்.மணி நகர், வ.உ.சி. நகர், எல்.என்.புரம், திருவள்ளுவர் நகர், கந்தன்பாளையம், முத்தையா நகர், பூங்குணம் மற்றும் சிவராமன் நகர் பகுதிகளில் காலை 6மணி முதல் 9 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Read more »

சொத்து வரி பெயர் மாற்றியதில் குளறுபடி நகராட்சி வருவாய் ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'

கடலூர் : 

                     கடலூரில், சொத்து மற்றும் குடிநீர் வரி விதிப்பு பெயர் மாற்றம் செய்ய, நீண்ட நாள் அலைகழிப்பிற்கு பிறகு வேறு முகவரிக்கு மாற்றி குளறுபடி செய்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(45). இவர், தெற்கு கவரத்தெருவில் அருள்ஜோதி என்பவரது வீட்டை விலைக்கு வாங்கி, சொத்துவரி மற்றும் குடிநீர் வரிக்கு பெயர் மாற்றம் செய்து தரக்கோரி, கடலூர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.நீண்ட நாள் அலைகழிப்பிற்கு பிறகு, ஏற்கனவே அவரது பெயரில் உள்ள வேறு வீட்டிற்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரிக்கு பெயர் மாற் றம் செய்து கொடுத்தனர். தான் விண்ணப்பித்த வீட்டிற்கு பெயர் மாற்றி தராமல், ஏற்கனவே தனது பெயரில் உள்ள வீட்டிற்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த நகராட்சி கமிஷனர், நகராட்சிகளின் இயக்குனர், கலெக்டர் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணைய செயலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முத்துகிருஷ்ணன், கடலூர் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
               இந்த மனு மீதான விசாரணைக்கு, வரும் 7ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு நகராட்சி கமிஷனர், நகராட்சிகளின் இயக்குனர், கலெக்டர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணைய செயலர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நகராட்சி கமிஷனர் குமார் கூறியதாவது:
 

                       வரிவிதிப்பு பெயரை முகவரி மாற் றம் செய்து கொடுத்தது மிகப்பெரிய தவறு. தற்போது, சம்பந்தப்பட்டவருக்கு சரியான முகவரிக்கு பெயர் மாற்றம் செய்து தயார் நிலையில் உள்ளது. அவர் கோர்ட் மூலமாக வாங்குகிறாரா அல்லது அவரே வாங்கிக் கொள்கிறாரா என தெரியவில்லை. தவறு ஏற்பட்டதற்காக சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், துறை ரதியான நடவடிக்கை எடுத்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வருவாய் அலுவலர் ஜெயராஜிடம் விளக்கம் கேட்கப்படும். இனி வரும் காலங்களில் சொத்து மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம் குறித்து அனைத்தும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் போல் கம்ப்யூட்டர் பிரிண்டில் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Read more »

சத்துணவு ஊழியர்கள் குமராட்சியில் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : 

                 குமராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்து ஊழியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும். அரசு ஊழியருக்கு வழங்குவது போல் முறையான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். சம்பத், நலங்கிள்ளி, குமாரராஜா, ரகுமான், தூய மணி முன் னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் மச்சேந்திரன், அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் பன்னீர்செல்வம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விஜயலட்சுமி, வெற்றிமணி, சுமதி, நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Read more »

நான்கு பேருக்கு கத்தி வெட்டு 10 பேருக்கு போலீஸ் வலை


நெல்லிக்குப்பம்:

             நெகாப்பீடு திட்ட கணக் கெடுப்பதில் பெயர் விடுபட்ட தகராறில் 4 பேர் காயமடைந்தனர்.
 
                 நெல்லிக்குப்பம் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடி ஊராட்சியில் காப்பீடு திட்ட கணக்கெடுக்கும் பணியை ஊராட்சி தலைவரின் ஆதரவாளரான சேட்டு செய்தார். அதில் பனங்காட்டு காலனியை சேர்ந்த அஞ்சாபுலி பெயர் விடுபட்டது. ஆத்திரமடைந்த அஞ்சாபுலி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேட்டுவை கத்தியால் வெட்டினர். தடுக்க வந்த மணிகண்டன், துளசிதாஸ், ஏழுமலையையும் கத்தியால் வெட்டினர். படுகாயமடைந்த நான்கு பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து அஞ்சாபுலி, மதியழகன் உட்பட 10 பேரை தேடிவருகின்றனர்.

Read more »

கல்விக்கடன் வழங்கக் கோரி மா.கம்யூ., உண்ணாவிரதம்


திட்டக்குடி : 

               கல்விக்கடன் வழங்க கோரி மா.கம்யூ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
 
                     பெண்ணாடம் அடுத்த இறையூர் கிளை பஞ்சாப் நேஷனல் வங்கி எதிரில் கல்விக்கடன் வழங்க கோரி மா.கம்யூ., சார்பில் பயனாளிகள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கிளை செயலாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராஜேந்திரன், வட்டக்குழு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு நாராயணன், மாவட்டக்குழு காமராஜ் பேசினர்.இதில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கல்விக் கடன் வழங்கிட வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம், வங்கி மேலாளர் உறுதியளித்ததன் பேரில் கைவிடப்பட்டது. ஆனால் மூன்று மாதமாகியும் இதுவரை எவருக்கும் கல்விக் கடன் வழங்காததை கண்டித்து பேசப்பட்டது.

Read more »

நான்கு நாட்களாக மின் தடை: பொதுமக்கள் சாலை மறியல்

கடலூர் : 

                      கடலூர் அம்பேத்கர் நகரில் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கடலூர் நகாரட்சி 31வது வார்டு அம்பேத்கர் நகரில் 200க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளது. கடந்த 26ம் தேதி அம்பேத் கர் நகரில் இருந்த டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இது குறித்து மின்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

                        இதனால் நான்கு நாட்களாக இப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் குடிநீருக்கு அவதியடைந்தனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளும் படிக்க முடியாமல் அவதியடைந் தனர். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8.30 மணிக்கு வண்டிப்பாளையம்-கேப்பர்மலை ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த திருப்பாதிரிபுலியூர் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு, சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தபாபு, குணசேகர் ற்றும் போலீசார் அங்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் டங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கவும், டிரான்ஸ்பார்மரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க போலீசார் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Read more »

பூட்டிய இரண்டு வீடுகளை உடைத்து ரூ.ஒரு லட்சம் நகைகள் திருட்டு

பண்ருட்டி : 

                      பண்ருட்டியில் பூட்டிய இரண்டு வீடுகளின் கதவை உடைத்து ஒரு லட்சம் மதிப்பு தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் தமிழரசி(50). சத்துணவு அமைப்பாளரான இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மகள் அகிலா வீட்டிற்கு சென்றார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது முன் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த மூன்று சவரன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய் ஆகும்.
 
மற்றொரு சம்பவம்: 

                       பண்ருட்டி எல்.என்.புரம் கணபதி நகரை சேர்ந்தவர் தேன்மொழி. அதேபகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியரான இவர், கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை சென்றார். நேற்று மதியம் வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கேட் திறந்து கிடந்தது. கதவு கடப்பாறையால் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் பீரோ திறந்து பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதில் வைத்திருந்த நான்கு சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 15 ஆயிரம் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய்.
 
                         இதுகுறித்து தமிழரசி மற்றும் தேன் மொழி கொடுத்த புகார்களின் பேரில் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து பூட்டை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். பண்ருட்டில் கடந்த 19ம் தேதி இரு வீடுகளில் தம்பதியினரை தாக்கி 11 சவரன் நகைகள் கொள்ளை அடித்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பூட்டிய இரண்டு வீடுகளில் திருடு போயிருப்பது அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.

Read more »

மண்ணெண்ணெய் வழங்காததால் கடலூரில் ரேஷன் கடை முற்றுகை

கடலூர் : 

                      மாலை வரை காத்திருந்தும் மண்ணெண்ணெய் வழங்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். கடலூர் பீச் ரோட்டில் சரவணபவா கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தின் மண்ணெண்ணெய் பங்க் உள்ளது. இதன் மூலம் மஞ்சக்குப்பம், புதுப்பாளையம், புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 15 ரேஷன் கடைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.வார நாட்களில் கடை வாரியாக சுழற்சி முறையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

                             உரிய நேரத்தில் மண்ணெண்ணெய் வாங்காதவர்களுக்கு அந்த மாதத்தின் இறுதி நாளுக்கு முதல் நாள் வழங்கப்படுகிறது. அதன்படி மார்ச் மாதத்தில் மண்ணெண்ணெய் வாங்காத 300க்கும் மேற்பட்டோர் நேற்று காலை முதல் பில் போடுவதற்காக ரேஷன் கார்டை கொடுத்துவிட்டு காத்திருந்தனர். மாலை 6 மணியாகியும் பில் போட்டு தராததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், ரேஷன் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடன் அங்கிருந்த ஊழியர்கள் தற்போது மண்ணெண்ணெய் இருப்பு இல்லை. இன்று வாங்காதவர்கள் வரும் 5ம் தேதி வாங்கிக் கொள்ளுமாறு டோக்கன் கொடுத்தனர். அதனையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Read more »

குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் கல்லூரியில் விளையாட்டு விழா

கடலூர் : 

                    குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தாளாளர் ராஜகோபல் முன்னிலை வகித்தார். பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வணங்காமுடி வாழ்த்துரை வழங்கினார். உடற் கல்வி இயக்குனர் பத்மநாபன் ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நெய்வேலி டி.எஸ்.பி., மணி பரிசு வழங்கினார். தமிழ் துறை தலைவர் சிவபாலன் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior