உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 03, 2010

நம் தயாரிப்பில் உருவான கிரையோஜெனிக் இன்ஜின் ரெடி

General India news in detail
 பெங்களூரு : 

             முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலம், ஜி.எஸ்.எல்.வி., டி-3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த, 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: 

                  ராக்கெட்டை செலுத்துவதற்கான இன்ஜின் தொழில்நுட்பம், இதுவரை வேறு சில நாடுகளிடம் இருந்து வாங்கி, பயன்படுத்தப்பட்டது. 1992ல் இந்த தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடம் இருந்து பெற திட்டமிட்டோம். ஆனால், அதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இதனால், இன்ஜின் தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே வடிவமைக்க முயற்சிகள் மேற்கொண்டோம். அந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. முற்றிலும், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலம், ஜி.எஸ்.எல்.வி., டி-3 ராக்கெட், விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.இதற்கான இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. வரும் 15ம் தேதியில் இருந்து, எந்த நேரத்திலும் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படலாம்.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.


downlaod this page as pdf

Read more »

Drug Racket Busted In Cuddalore

 
 
Ashwin Kotnis, Superintendent of Police, taking a look at the spurious bottles of cough syrup which were seized at Cuddalore on Friday.

CUDDALORE: 

              The Thirupadiripuliyur police here on Friday busted a drug racket in which the cough syrup of one company was being marketed under another leading brand by changing the label on the container.

              The police seized over 242 cartons containing 35,000 bottles of such spurious syrup and about 10,000 fake labels. About 10,000 bottles were in circulation and another 2,300 bottles were being couriered back by the retailers, said Ashwin Kotnis, Superintendent of Police. Addressing a press conference here, Mr Kotnis said that the modus operandi of the operators was to buy a low priced cough syrup, remove the labels and affix another brand name for getting a higher price in the market. However, they did not tamper with the sealed cap of the container nor did they add any additional components. The racket came to light when the Oviya Enterprises at Chennai on suspicion returned a syrup consignment to Cuddalore from where it originated. During inspection Drug Inspector S.Gurubharathi found 2,700 bottles of the syrup with fake labels stacked on the premises of the Selva Vinayagar Agencies situated on the Pidari Amman Temple Street, Thirupadiripuliyur, and seized them. Subsequently, N.Valliappan (26), a dealer of at least 80 medicinal products, surrendered before the Judicial Magistrate Court—III here on March 24, 2010. The police took him into custody for six days and during interrogation he confessed to selling the syrup under a different brand name. As part of his plan to market one lakh bottles of the syrup Valliappan initially got orders for 50,000 bottles. He was assisted by P.Anandan of Bank Street, Nettapakkam, Puducherry, and A.Murugesan of Pandian Nagar, Kazhani Vasan, Karaikudi.

downlaod this page as pdf

Read more »

தூர்ந்துபோன கழிவுநீர் கால்வாய் சுகாதாரமற்ற சூழலில் அரசு அலுவலகங்கள்

 பண்ருட்டி:

                    ரசு அலுவலகங்கள் நிறைந்துள்ள பகுதியில் செல்லும் பிரதான கால்வாய் தூர்ந்து போய் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளதால்,​​ அரசு அலுவலர்களும்,​​ பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பண்ருட்டி நகரின் மையப் பகுதியான நான்கு முனை சந்திப்பு அருகே பத்திரப்பதிவுத் துறை,​​ பொதுப்பணித் துறை,​​ காவல் நிலையம்,​​ கருவூலகம்,​​ கிளைச் ​ சிறை ​(ஃபார்ஸ்டர் பள்ளி)​ காந்தி பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன.​ மேற்கண்ட அரசு அலுவலகங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் செல்லும் கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்து போய் உள்ளது.​ மேலும் கருவூலகத்துக்கும்,​​ கிளைச் சிறைக்கும் இடைப்பட்ட பகுதியில் இயற்கை உபாதைகள் கழிக்கப்படுகின்றன.​ தேங்கி நிற்கும் கழிவுநீரில் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தியாகின்றன.​ இதனால் மேற்கண்ட அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும்,​​ அங்கு வரும் பொது மக்களும் பகல் நேரத்திலேயே கொசுக் கடிக்கு ஆளாகின்றனர். 

                         பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள இந்த கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என நகர நிர்வாகத்திடம் முறையிட்டும் பலனில்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறினர். இப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் கழிவுநீர் கால்வாயை காலமுறைப்படி சுத்தம் செய்து மருத்து தெளித்து சுகாதாரமான சூழ்நிலையை நகர நிர்வாகம் செய்து தரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


downlaod this page as pdf

Read more »

பெயரளவுக்கே இயங்கும் சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

 சிதம்பரம்:

                      ஆண்டுகளாக சிதம்பரத்தில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் உரிய வசதிகளின்றி பெயரளவிற்கே செயல்பட்டு வருகிறது.​ இதனால் விவசாயிகளும்,​​ வணிகர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சிதம்பரம் அண்ணா கலையரங்கம் வளாகத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சிறிய பகுதியில் பெயரளவுக்கு செயல்பட்டு வருகிறது.​ 7-2-1963-ல் சிதம்பரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் தொடங்கப்பட்டது. இதுவரை சொந்த இடம் வாங்கி விற்பனைக் கூடம் அமைக்கப்படவில்லை.​ நகராட்சிக்குச் சொந்தமான அண்ணா கலையரங்கம் பகுதியில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.இந்த விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைப் பொருள்களை விவசாயிகள் கூடத்துக்குள் கொண்டு வந்து விற்கவோ,​​ வணிகர்கள் வாங்கவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

                        இன்று வரை எந்த வணிகமும் சிதம்பரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்குள் நடைபெறவில்லை .9.8.2000-ல் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு ரூ.11 லட்சம் செலவில் பொருளீட்டுக் கடன் கிடங்கு மற்றும் ரூ.2.75 லட்சம் செலவில் உலர்களம் அமைக்க வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு இன்று வரை கிடங்கு மற்றும் உலர்களம் அமைக்கப்படவில்லை.""விற்பனைக் கூடத்துக்கு வெளியே நடந்த வணிகத்துக்கு மட்டும் வணிகர்களுக்கு எந்தவித சேவையும் செய்யாமல் விற்பனைக் கட்டணம் மட்டும் வசூல் செய்து விவசாயிகளுக்கும்,​​ வணிகர்களுக்கும் எந்தவித நிரந்திர தேவையான வசதிகளும் செய்யப்படவில்லை. வசூலித்த கட்டணத் தொகையை இயங்காத உழவர் சந்தை அமைக்கவும்,​​ அதன் நிர்வாக செலவுகளுக்கும் மற்றும் பிற விற்பனைக் கூடங்களின் வளர்ச்சிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது'' என சிதம்பரத்தைச் சேர்ந்த வணிகர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.""ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு குறைந்தது 5 ஏக்கர் இடத்தில் நிரந்தர விற்பனைக் கூடம் அமைக்கப் பெற்றால்தான் இந்த பகுதியில் விளையும் விளைப் பொருள்களை விற்பனைக் கூடத்துக்குள்ளே கொண்டு வந்து வணிகம் நடைபெற வழி பிறக்கும்.ஆனால் தற்போது விற்பனைக் கூடத்துக்கு ஒரு சிறிய இடத்தில் ஏதோ ஒரு ஏலக் கொட்டகை மட்டும் போட்டு விற்பனை நடத்துவது பெயரளவுக்கே செயல்படுவதே ஆகும். 

                    உரிய தேவையான வசதிகளின்றி சொந்த இடங்களில் பெயரளவுக்கு இயங்கும் தமிழகத்தில் உள்ள சுமார் 150 விற்பனைக் கூடங்களோடும் சிதம்பரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடமும் சேர்ந்து கொள்ளும் நிலை உள்ளது'' என உழவர் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.சிதம்பரம் நகரில் பொதுக் கூட்டங்கள்,​​ சர்க்கஸ் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இருந்த அண்ணா கலையரங்கம் என்ற ஒரு இடம் மட்டுமே உள்ளது.அந்த கலையரங்கத்தில் செயல்படாத ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்,​​ உழவர் சந்தை மூலம் அண்ணா பெயரில் இயங்கி வரும் கலையரங்கத்தை அண்ணா நூற்றாண்டில் நிரந்தரமாக மூடிய பெருமை வேளாண்துறையைதான் சாரும்.எனவே வேளாண் துறையினர் போதிய இடவசதியுடன் வேறு இடத்தில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அமைத்து உரிய நிரந்தர வசதிகளுடன் செயல்படவும்,​​ அறிஞர் அண்ணா கலையரங்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் தமிழக முதல்வர் மற்றும் வேளாண்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் இராம.ஆதிமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


downlaod this page as pdf

Read more »

எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற

 கடலூர்:

                  எள் சாகுபடியில் அதிக மகசூல் பெற புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும் என்று வேளாண் துறை அறிவித்து உள்ளது.

வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ ​

                        தமிழ்நாட்டில் 1.16 லட்சம் ஹெக்டேரிலும்,​​ கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஹெக்டேரிலும் எள் சாகுபடி செய்யப்படுகிறது.​ எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தொழில் நுட்பங்களைச் சரியாகக் கடைபிடிப்பது இல்லை.​ இதனால் சராசரி மகசூல் குறைகிறது.​ சரியான தொழில் நுட்பங்களை முறையாகக் கடைபிடித்தால்,​​ ஹெக்டேருக்கு சராசரி 2 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும்.​ ​பாசன வசதி உள்ள பகுதிகளில் சித்திரைப் பட்டத்தில் எள் சாகுபடி செய்யலாம்.​ சித்திரைப் பட்டத்துக்கு டிஎம்வி-3,4 கோ-1,​ விஆர்ஐ-1 மற்றும் எஸ்விபிஆர்-1 ஆகிய ரகங்கள் ஏற்றவை.​ அனைத்து ரகங்களும் ஒரு ஏக்கர் விதைப்புக்கு 2 கிலோ விதை போதும்.​ 2 கிலோ விதையுடன் 8 கிலோ மணல் கலந்து வயலில் சீராகத் தூவவேண்டும். விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நேர்த்தி அவசியம்.​ ஒரு கிலோ விதையுடன் டிரைகோடெர்மா விரிடி பூஞ்சாணத்தை 4 கிராம் கலந்து விதைக்க வேண்டும்.​ விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.​ இதை 30 நாள்கள் வரை வைத்திருந்து விதைக்கலாம்.​ ​

                         பயிர்களுக்கு இயற்கையாகவே தழைச்சத்து கிடைக்க நுண்ணுயிர் நேர்த்தி செய்யவேண்டும்.​ இதற்கு ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரிலம் ஒரு பாக்கெட் ​(200 கிராம்)​ பாஸ்போ பாக்டீரியா 200 கிராம் ஆகியவற்றை 500 மில்லி ஆடைநீக்கிய ஆறிய கஞ்சியுடன் கலந்து 2 கிலோ விதையுடன் சேர்த்து கலக்க வேண்டும்.​ இதை நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.​ இதை விதைப்பதற்கு 30 நிமிடம் முன் செய்ய ​ வேண்டும்.​ மேலும் 20 கிலோ தொழு உரத்துடன் ஏக்கருக்கு 4 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா மற்றும் 4 பாக்கெட் அúஸôஸ்பைரில்லம் கலந்து கடைசி உழவின்போது தூவ வேண்டும். இறவை எள் பயிருக்கு மண் பரிசோதனை சிபாரிசுப்படி உரமிட வேண்டும்.​ அல்லது துறை சிபாரிசுப்படி,​​ ஒரு ஏக்கருக்கு 14:9:9 கிலோ என்ற விகிதத்தில் தழை,​​ மணி,​​ சாம்பல் சத்துக்களை தரவல்ல யூரியா 30 கிலோ,​​ சூப்பர் பாஸ்பேட் 55 கிலோ,​​ பொட்டாஷ் 15 கிலோ அளவில் உரமிட வேண்டும்.​ அúஸôஸ்பைரிலம் 4 பாக்கெட் கலந்தால் யூரியா 27 கிலோ போதும்.​ மாங்கனீஸ் சல்பேட் நுண்ணூட்டச்சத்து 2 கிலோவை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தபின் வயலில் தூவவேண்டும்.​ ​எள் பயிரில் பயிர் கலைத்தல் செய்யாவிட்டால் மகசூல் பாதிக்கும்.​ பயிர் கலைப்பு செய்திட விதைத்த 15-வது நாளில் செடிக்குச் செடி 15 செ.மீ.​ இடைவெளி இருக்கும்படியும்,​​ 30-வது நாளில் செடிக்குச் செடி 30 செ.மீ.​ இடைவெளி உள்ளவாறும் வைத்து,​​ மற்ற செடிகளைப் பிடுங்கி விட வேண்டும்.​ செடிகளைக் கலைத்து விடும்போது வயலில் போதிய அளவு ஈரம் இருப்பது நல்லது.​ சித்திரைப் பட்டத்தில் மேற்படி சாகுபடி தொழில் நுட்பங்களைக் கடைபிடித்து கூடுதல் மகசூல் பெறலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

downlaod this page as pdf

Read more »

எம்.ஏ.​ ஈஸ்வரன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு ஈரோடு சுதந்திரப் போராட்ட தியாகி

 கடலூர்:

                     ஈரோட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஈரோட்டுப் பெரியார் எம்.ஏ.ஈஸ்வரன் வாழ்க்கை வரலாற்று நூலான அருட்செல்வர் ஆவது எப்படி என்ற நூல் வெளியீட்டு விழா,​​ கடலூரில் புதன்கிழமை நடந்தது.​ ​ 

இந்த நூலின் ஆசிரியர் செ.நல்லசாமி பேசுகையில்,​​ 

                    எம்.ஏ.ஈஸ்வரன்,​​ தந்தை பெரியாருடன் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார்.​ பெரியார் கைது செய்யப்பட்டு தமிழக எல்லையில் கொண்டு வந்து விடப்பட்டார். ஆனால் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு அங்குள்ள காட்டில் விடப்பட்டார்.​ மயங்கிக் கிடந்த அவரை ஒரு பெண் காப்பாற்றி,​​ அவரது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தார்.  மகாத்மா காந்தி மதுரை வந்தபோது,​​ சுதந்திரம் அடையும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்றும்,​​ காலில் செருப்பு அணிவதில்லை என்றும் சபதம் ஏற்றார் ஈஸ்வரன்.​ இறுதி வரை திருமணமே செய்துகொள்ளவில்லை என்றார் நல்லசாமி.​ ​  ஈஸ்வரனின் வாழ்க்கை வரலாற்று நூலை,​​ அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் பட்டாம்பாக்கம் வேங்கடபதி வெளியிட்டார்.​ முதல் பிரதியை கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


downlaod this page as pdf

Read more »

அண்ணாமலைப் பல்கலை பேராசிரியர் ஆஸ்திரேலியா பயணம்

 சிதம்பரம்:

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை பேராசிரியர் இரா.சிங்காரவேல் ஆராய்ச்சி மேற்கொள்ள 6 மாத பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளிக்கிழமை பயணம் சென்றார். பேராசிரியர் இரா.சிங்காரவேல் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் என்டோவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.​ மேலும் முதுநிலை முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள முர்டாக் பல்கலைக்கழகத்தில் கடலோர களர் உவர் நிலங்கள்,​​ இயற்கை உரங்களைக் கொண்டு ஒருங்கிணைந்த பயிர் மற்றும் உர நிர்வாகம் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்கிறார்.​ இவ்வாராய்ச்சியின் முடிவுகள் இந்திய மற்றும் தமிழக கடலோர களர் உவர் நிலங்களை மேம்படுத்தி பயிர் உற்பத்தியைப் பெருக்க பயனாக அமையும் என இரா.சிங்காரவேல் தெரிவித்துள்ளார்.


downlaod this page as pdf

Read more »

தொண்டு நிறுவனங்கள் செயல்பாடு புலனாய்வு போலீசார் ரகசிய விசாரணை


சிதம்பரம் : 

                     கடலூர் மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, புலனாய்வு போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். மக்களுக்கு தொண்டு செய்யும் நோக்கத்துடன், தமிழகத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து, தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்தது. அவைகளில் சில தொண்டு நிறுவனங்கள், சேவை என்ற பெயரில் வருமானம் ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தஞ்சாவூரில், மணிப்பூர் குழந்தைகள் 32 பேரை அனாதை என்ற பெயரில் அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

                    அதே போன்று சில மடங்களும் செயல்பட்டதும் சமீபத்தில் பிரச்னை எழுந்துள்ளதால், இதுபோன்ற மோசடி தொண்டு நிறுவனங்களை கண்டுபிடிக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள் முறைப்படி பதிவு செய்யப்பட்டவையா? நிதி ஆதாரங்கள் என்ன? எந்தெந்த வகையான சேவைப் பணியில் ஈடுபடுகின்றன? முறைப்படி அரசிடம் கணக்குகள் சமர்ப்பிக்கப்படுகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான விவரங்கள், புலனாய்வு போலீசார் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன.


downlaod this page as pdf

Read more »

போலி இருமல் மருந்து தயாரிப்பு: கடலூரில் மேலும் இருவர் கைது


கடலூர் : 

                   கடலூரில் போலி மருந்து விற்பனை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது

                   கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பிடாரியம்மன் கோவில் தெருவில் மருந்து மொத்த வியாபாரம் செய்து வரும் செல்வ விநாயகர் ஏஜன்சியை கடந்த 17ம் தேதி மருந்து கட்டுப் பாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

                  அதில், போலியாக தயார் செய்த, 'பெனட்ரில் சிரப்' (இரு மல் மருந்து) 2,700 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மருந்துகளை, தமிழகத் தின் பல்வேறு மருந்துக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பியிருப்பது தெரிந்தது.கடலூர் மருந்துகள் சோதனை ஆய்வாளர் குருபாரதி கொடுத்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்தனர். இதையறிந்த வள்ளியப்பன், கடந்த 24ம் தேதி கடலூர் கோர்ட்டில் சரணடைந்தார். கோர்ட் அனுமதி பெற்று, வள்ளியப்பனை கடந்த 30ம் தேதி முதல் காவலில் வைத்து விசாரித்தனர். கடலூர் தங்கராஜ் நகரில் தங்கி, மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கழனிவாசலைச் சேர்ந்த அழகர் மகன் முருகேசன்(31) என்பவர் தற்போது, 'பெனட்ரில்' இருமல் மருந்து மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகிறது. அதனால், 'பெனட் ரில்' போல் உள்ள விலை குறைந்த, 'அல்டெக்ஸ்' இருமல் மருந்தை வாங்கி அதன் லேபிளை கிழித்து விட்டு, 'பெனட்ரில்' லேபிளை ஒட்டி விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வள்ளியப்பனிடம் கூறியுள்ளார்.

                  அதன்படி வள்ளியப்பன், அவரது நண்பர் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் பழனிசாமி மகன் ஆனந்தன் (34) மற்றும் முருகேசனும் சேர்ந்து, 'பெனட்ரில்' மருந்தை போலியாக தயாரிக்க முடிவு செய்தனர். கடந்த ஜனவரியில், 16 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள, 'அல்டெக்ஸ்' மருந்து கம்பெனியிலிருந்து 50 ஆயிரம் பாட்டில்களை வாங்கி வந்து நெட்டப்பாக்கத்தில், 'அல்டெக்ஸ்' லேபிளை கிழித்து விட்டு, போலியாக அச்சடித்த, 'பெனட்ரில்' இருமல் மருந்து லேபிளை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடலூர் அடுத்த சின்னபிள்ளையார்மேடு கிராமத்தில் இருந்து 252 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 22 ஆயிரத்து 809 போலி மருந்து பாட்டில்களையும், புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கத்தில் செங்கதிர் என்பவர் வீட்டு தோட்டத்தில் வைத்திருந்த 93 பெட்டிகளில் இருந்த 9,300 பாட்டில்களையும் பறிமுதல் செய்தோம்.

                   மேலும், போலி மருந்து தயாரிக்க வள்ளியப்பனுக்கு உடந்தையாக இருந்த மருந்து விற்பனை பிரதிநிதி முருகேசன் (31) ஆனந்தன் (34) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்து 10 ஆயிரம் போலி லேபிள்களை பறிமுதல் செய்துள்ளோம்.இவ்வாறு அஷ்வின் கோட்னீஸ் கூறினார். பாட்டிலுக்கு 3 ரூபாய் லாபம்: 'அல்டெக்ஸ்' இருமல் மருந்து (150 எம்.எல்.,) விலை 32.50 ரூபாய். ஆனால் இதே கொள்ளளவு கொண்ட, 'பெனட்ரில்' மருந்தின் விலை 57.50 ரூபாய். வள்ளியப்பன் கோஷ் டியினர், 'அல்டெக்ஸ்' மருந்தை மொத்தமாக வாங்கி லேபிளை மாற்றி ஒட்டி ஏஜன்சிகளுக்கு 47.50 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, அதில் 25 சதவீதம் தள்ளுபடியும் கொடுத்து 35.50 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இதை மருந்து கடைக்காரர்கள் 57 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்துள்ளனர். வள்ளியப்பன் கோஷ்டியினருக்கு ஒரு பாட்டிலுக்கு மூன்று ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.வித்தியாசம் என்ன?: ஒரிஜினல், 'பெனட்ரில்' சிரப்பில் 5 சதவீதம், 'ஆல்கஹால்' இருக் கும். இந்த பாட்டில் மூடியின் பக்கவாட்டில் தயாரிப்பு தேதி மற்றும் 'பேட்ஜ்' எண் குறிக்கப் பட்டிருக்கும். மேலும் கரும் சிகப்பு நிறத்திலும், லேபிள் பளபளப்பாகவும் இருக்கும். ஆனால் போலி, 'பெனட்ரில்' மருந்து பாட்டில் மூடியில் பெயர் எதுவும் இருக்காது. லேபிள் சற்று மங்கலாகவும், பாட்டில் வெளிர் சிகப்பு நிறத்திலும் இருக்கும்.


downlaod this page as pdf

Read more »

முடிகண்டநல்லூரில் மனைப்பட்டா வழங்கும் விழா


ஸ்ரீமுஷ்ணம் : 

                    ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மனைப்பட்டா வழங்கும் விழா நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் குறுவட்டத்திற்கு உட்பட்ட முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த 30 பேருக்கு மனைப்பட்டா வழங்கும் பணி ஸ்ரீமுஷ்ணம் ஆர்.ஐ., அலுவலகத்தில் நடந்தது. காட்டுமன்னார் கோயில் தாசில்தார் வீரபாண்டியன் மனைப்பட்டா வழங்கும் பணியை துவக்கி வைத்தார். ஆர்.ஐ., சுந்தரம், வி.ஏ.ஓ.,க்கள் வேல்முருகன், மயில் வாகனன், சவுந்தரராஜன் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

இறகு பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா


சிதம்பரம் : 

                       சிதம்பரம் அண்ணாமலை நகரில் நடந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. போட்டியை பிரண்ட்ஸ் இன்டர் கிளப் சார்பில் அரவிந்தன் துவக்கி வைத்தார். இரட்டையர் பிரிவுகளில் 32 குழுக்கள் பங்கேற்று விளையாடின. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவில் கல்வியல் துறை முதல்வர் மங்கையர்கரசி தலைமை தாங்கினார். கிளப் தலைவர் ஆறுமுகம், செயலாளர் இளஞ்செழியன்,பொருளாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன


downlaod this page as pdf

Read more »

ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம்


சிதம்பரம் : 

                     தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது. மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் செல்வராஜ், மணி முன்னிலை வகித் தனர். மாவட்டத் தலைவர் சிற்றரசன் வரவேற்றார். மாநில செயலாளர் போத்திலிங்கம் வேலை அறிக்கை வாசித்தார். குமராட்சி ஒன்றித்தின் சார்பில் கட்டட நிதி வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ராபர்ட் ஜெயராஜ் பணி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி ஏப்ரல் 7, 8, 9 தேதி உண்ணாவிரதம், 10ம் தேதி கண்டன பேரணி நடத்துவது, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் இடை நிலை ஆசிரியர்களை மாற்று பணிக்காக நியமித்ததை ரத்து செய்தல் குறித்து பேசப்பட்டது. கலியமூர்த்தி, மனோகர், வெங்கடேசன், மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில துணைத் தலைவர் வெங்க டேசன் நன்றி கூறினார். ஏற்பாட்டினை மாவட்ட செயலாளர் ஜீவாநந்தம் மற்றும் வட்டார நிர்வாகிகள் செய்திருந்தனர்.


downlaod this page as pdf

Read more »

'களை' எடுக்கும் டிராக்டர்: விவசாயிகளுக்கு பயிற்சி


திட்டக்குடி : 

                 திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தில் கரும்பு விவசாயிகளுக்கு குழியுரம் இடுதல் மற்றும் குறுகிய டிராக்டர் மூலம் களை எடுத்தல் மூலம் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் அடங்கிய செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை துணை மேலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி, குழியுரம் மற்றும் குறுகிய டிராக்டரின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். சிவநேசன் முன்னிலை வகித்தார். கரும்பு ஆய்வாளர் பார்த்திபன் வரவேற்றார். இதில் குழியுரம் இடுவதன் மூலம் கரும்பு மகசூல் 10 டன் வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் உரம் விரயம் தவிர்ப்பு, பயிர் வீரியத்துடன் ஆண்டுதோறும் ஒரே சீரான வளர்ச்சி, மகாராஷ்டிரா மாநிலத்தில் சராசரியாக ஏக்கருக்கு 120 டன் என ஆயிரத்து 200 டன் வரை கரும்பு மகசூல் கிடைத் துள்ளதாகவும் பயிற்சியில் தெரிவிக்கப் பட்டது. பயிற்சியில் ஊராட்சி தலைவர் அமிர்தலிங்கம் கரும்பு ஆய்வாளர்கள் முருகேசன், பாரதிமோகன், வைத்தியநாதன், ரவிச்சந்திரன், தர்மதுரை உள்ளிட் டோர் பங்கேற்றனர்.


downlaod this page as pdf

Read more »

இலவச கலர் 'டிவி' உடைத்த சம்பவம் ஆர்.டி.ஓ., தலைமையில் சமாதானம்


பண்ருட்டி : 

                  பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு ஊராட்சியில் 'டிவி' ஒப்படைக்கும் போராட்டத்தை தொடர்ந்து சமாதான கூட்டம் நடந்தது. பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு ஊராட்சி பொதுமக்கள் கடந்த டிசம்பர் மாதம் இலவச 'டிவி' கேட்டு மறியல் செய்த 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து நேற்று முன்தினம் அண்ணாகிராம ஒன்றிய அலுவலகம் முன் இலவச கலர் 'டிவி'யை ஒப்படைக் கும் போராட்டம் நடந்தது. அப்போது இலவச 'டிவி' க்கள் உடைக் கப்பட்டதால் 45 பேர் கைது செய்து விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க நேற்று பண்ருட்டி தாலுக்கா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., செல்வராஜ் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் பாபு, டி.எஸ்.பி., பிரசன்னகுமார், கீழ்கவரப்பட்டு ம.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஜெய்சங்கர், இந்திய கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், ரவீந்திரன், ஆசை தாமஸ், சச்சிதானந்தம் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருவேங்கடம், செல்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறியல் வழக்கு வாபஸ் பெறுவது குறித்து டி.எஸ்.பி., பரிசீலனை செய்து முடிவு செய்வதெனவும், இனிமேல் பொதுமக்களுக்கு இடையூறாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஒத்துழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.


downlaod this page as pdf

Read more »

வெள்ளியங்கால் ஓடை மதகில் ரூ.25 லட்சம் செலவில் 'ஜீப் டிராக்'

 சிதம்பரம் : 

                  வீராணம் ஏரி வெள்ளியங்கால் ஓடை மதகில், 25 லட்சம் ரூபாய் செலவில் வாகனங்கள் செல்வதற்கு, 'ஜீப் டிராக்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியில் மழை, வெள்ளக் காலங்களில் வரும் உபரி நீர், ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படும். அதற் காக மூன்று மதகுகள் உள்ளன. முதல் மதகு 6 ஷட்டருடன் பெரிய அளவிலும், அடுத் தடுத்த மதகுகள் முறையே 4 ஷட்டர்கள் உள்ளன. மழை, வெள்ளக் காலங் களில் மதகை திறப்பதற் கும், ஏரியின் கரையை பார் வையிடவும், மதகின் மேற் பகுதியில் மரக்கட்டையால் அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே, அவசரத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்ததால், வாகனம் செல்லும் அள விற்கு, 'ஜீப் டிராக்' பாலம் அமைக்க பொதுப் பணித் துறை முடிவு செய்தது. புதிய வீராணம் திட்டத் தில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெள்ளியங்கால் ஓடை மூன்று மதகிலும் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி இன்ஜினியர்கள் கலியமூர்த்தி, சரவணன் ஆகியோர் பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

முட்டம் கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டும் பணி துவங்கியது


சிதம்பரம் : 

                      காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் - மணல்மேடு இடையே கொள்ளிடம் ஆற்றில் 48.88 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்ட பில்லர் அமைக்கும் பணி துவங்கியது. கடலூர் - நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கடலூர் மாவட்ட எல்லையான காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் - மணல்மேடு இடையே நபார்டு உதவியுடன் 48.85 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாலம் அமைய உள்ள ஆற்றின் இரு பகுதியிலும் இணைப்பு சாலைக்காக தனியாரிடமிருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. பாலம் கட்டும் இடத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு கடந்த பிப். 27ம் தேதி பூமி பூஜை மற்றும் தளவாட பொருட்கள் கொண்டு செல்ல தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டது.

                காட்டுமன்னார்கோவிலில் கடந்த மாதம் 6ம் தேதி நடந்த விழாவில் முட்டம் பாலத்திற்கு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பாலம் பணி 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டதையடுத்து தற்போது பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக ஆற்றின் கரை பகுதியில் பில்லர் அமைப்பதற்காக பைல் போடப்பட்டு வருகிறது.



downlaod this page as pdf

Read more »

சேத்தியாத்தோப்பில் அரிய வகை ஆந்தை


சேத்தியாத்தோப்பு : 

                  சேத்தியாத்தோப்பு அருகே பாழடைந்த கிணற்றில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய வகை ஆந்தைகள் பிடிபட்டது. முடிகண்டநல்லூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியன். இவரது வீட்டின் அருகே பாழடைந்த கிணறு உள்ளது. அந்த கிணற்றில் வெள்ளை கலரில் அரிய வகையான ஆந்தை இருப்பதை பார்த்த சுப்பிரமணியன் சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத் துறை அலுவலர் விஜயன் உத்தரவின்படி வனவர் சிதம்பரம் மற்றும் வனத்துறையினர் கிணற்றில் இருந்த ஆந்தையை வெளியே எடுத்தனர். மேலும் அந்த கிணற்றில் 4 ஆந்தை குஞ்சுகள் அங்கு இருந்தது தெரியவந்தது. அவற்றையும் பத்திரமாக மீட்டனர். பிடிபட்ட ஆந்தைகள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அரியவகை இனத்தைச் சேர்ந்ததாகும்.


downlaod this page as pdf

Read more »

பள்ளி மாணவியை கற்பழித்தவருக்கு வலை


சிதம்பரம் : 

                   திருமணம் செய்து கொள்வதாக கூறி பள்ளி மாணவியை கற்பழித்த வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். பரங்கிப்பேட்டை அடுத்த மடவாப்பள்ளத்தைச் சேர்ந்தவர் வசந்தி (16) (பெயர் மாற்றப்பட்டுள் ளது) பிளஸ் 1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வாழுமுனி மகன் ராமன் (28). வேன் டிரைவராக பணிபுரியும் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வசந்தியை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை கற்பழித்துள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து ராமனை தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

இரும்பு பைப், ஒயர் திருட்டு வியாபாரிகள் நால்வர் கைது

 பரங்கிப்பேட்டை : 

                 புதுச்சத்திரம் அருகே இரும்பு பைப், ஒயர் திருடிய பழைய இரும்பு வியாபாரிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் அடுத்த குமாரப்பேட்டையில் தனியார் இறால் மற்றும் மீன் குஞ்சு உற்பத்தி பண்ணை உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மோட்டார் இணைப்பு பைப், ஒயர் உள்ளிட்ட 1,500 ரூபாய் மதிப்பள்ள பொருட்கள் திருடு போயின. இதுகுறித்து பண்ணை ஊழியர் சொக்கலிங்கம் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து குள்ளஞ்சாவடியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரிகள் வெள்ளையன் (44), பாலசுப்ரமணியன் (31), சூசை (48), சேகர் (40) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

 
ownlaod this page as pdf

Read more »

ஊராட்சி துணைத் தலைவருக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது


சேத்தியாத்தோப்பு : 

                   வீட்டு வசதி திட்டத்தில் பெயரை சேர்க்க கோரி ஊராட்சி துணைத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். சேத்தியாத்தோப்பு அடுத்த துறிஞ்சிக்கொல்லையை சேர்ந்தவர் வடிவேல் (30). இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரர் பாமாவிடம் வீட்டுவசதி திட்டத்தில் தனது பெயரை ஏன் சேர்க்கவில்லை என கேட்டு ஆபாசமாக பேசி தகராறு செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதுபற்றி பாமாவின் கணவர் கனகரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து வடிவேலுவை கைது செய்தனர்.


downlaod this page as pdf

Read more »

'ஹவாலா' கும்பல் போலீஸ் விசாரணை


கடலூர் : 

                  கடலூர் வழியாக 'ஹவாலா' பணம் கடத்தியவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலூர் வழியாக 'ஹவாலா' பணம் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து கடலூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 12 லட்சம் ரூபாய் வைத்திருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். சென்னையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அந்த பணத்தை எடுத்து செல்வது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


downlaod this page as pdf

Read more »

காட்டுமன்னார்கோவில் அருகே தீ விபத்து: 9 கடைகள் எரிந்து சேதம்

 சிதம்பரம் : 

                   காட்டுமன்னார்கோவில் அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது கடைகள் எரிந்து சேதமடைந்தன. காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளுமேடு கடைத்தெருவில் உள்ள ஷபீக்கூர் ரகுமான் டீக் கடை நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து அருகில் இருந்த அப்துல்லா, ரகமதுல்லா, அன்வர்தீன், உபைது, பக்கீர் முகமது, முகமது யூனுஸ், அப்துல் கத்தார், ஜக்காரியா ஆகியோரது கடைகள் எரிந்தன. தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ் ணமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


downlaod this page as pdf

Read more »

என்.எல்.சி., அதிகாரி ஜீப் மோதி பைக்கில் சென்றவர் பலி: மூவர் காயம்


நெய்வேலி : 

                   நெய்வேலியில் என்.எல்.சி., அதிகாரி ஜீப் மோதியதில் பைக்கில் சென்றவர் இறந்தார்.

                      என்.எல்.சி. இரண்டாம் சுரங்கத்தில் முதன்மை மேலாளராக பணி செய்து வருபவர் சண்முகசுந்தரம் (56). இவர் நேற்று மதியம் இரண்டாம் சுரங்கத்திலிருந்து வீட்டிற்கு ஜீப்பில் வந்து கொண்டிருந்ததார். மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செந்தில்குமரன் (36) அவரது நண்பர் சந்திரசேகர் (42) இவர்கள் இருவரும் டவுன்ஷிப்பிலிருந்து மந்தாரக்குப்பம் நோக்கி மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். முதல் சுரங்கம் பி.பாயிண்ட் அருகே வந்த போது என்.எல்.சி., அதிகாரி சண்முக சுந்தரம் சென்ற ஜீப், எதிரே வந்த செந்தில்குமரன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. பைக் மீது மோதாமல் இருக்க ஜீப் டிரைவர் சந்திரசேகர் (46) சடன் பிரேக் போட்டபோது ஜீப்பில் இருந்த என்.எல்.சி., அதிகாரி சண்முக சுந்தரம் வெளியே தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் சந்திரசேகர் உள்ளிட்ட 4 பேரும் என். எல்.சி. பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த சந்திரசேகர் இறந்தார். படுகாயமடைந்த என்.எல்.சி. அதிகாரி சண்முகசுந்தரம் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். டிரைவர் சந்திரசேகர் மற்றும் செந்தில்குமரனுக்கும் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

downlaod this page as pdf

Read more »

ஜமுக்காள விரியன் பாம்புகள் பிடிபட்டன


கடலூர் : 

                  கடலூரில் இரண்டு ஜமுக்காள விரியன் பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர். கடலூர் எஸ்.பி., முகாம் அலுவலகம் பின் புறம் பாழடைந்த கட்டடத்தில் உள்ள தொட்டியில் இரண்டு பாம்புகள் இருந்தன. அதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனசரகர் பன்னீர்செல்வம் தலைமையில் வனவர் ராஜேந்திரன், கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர் பூனம்சந்த் வியாஸ் உள்ளிட்டோர் சென்று இரண்டு பாம்புகளையும் பிடித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில் 

                   'இரண்டு பாம்புகளும் ஜமுக்காள விரியன் எனப்படும் கட்டு விரியன் இனத்தைச் சேர்ந்தது. இரண்டு பாம்புகளையும் நாளை (இன்று) விருத்தாசலத்தில் உள்ள அரசு காட்டில் விடப்படும்' என்றனர்.


downlaod this page as pdf

Read more »

தொடர் திருட்டு: சிதம்பரம் நகர மக்கள் அச்சம்

சிதம்பரம் : 

               சிதம்பரம் பகுதியில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிதம்பரம் வேங்கான் தெருவில் வசித்து வருபவர் சங்கர். ஓமியோபதி டாக்டர். கடந்த 17ம் தேதி குடும் பத்துடன் சொந்த ஊரான ராஜபாளையம் சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்த போது வீட்டின் ஓடுகள் உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மேஜை டிராயரில் இருந்து 33 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது.இதே போன்று மரவாடி உரிமையாளரான சிதம்பரம் கனகசபை நகர் 8வது குறுக்குத் தெருவை சேர்ந்த செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக குடும்பத்துடன் ஹாலில் படுத்து தூங்கியுள்ளார். அதிகாலை எழுந்து பார்த்தபோது பீரோ உடைக்கப் பட்டு தாலிச் செயின், மோதிரம் உள்ளிட்ட ஆறு சவரன் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது.இதுகுறித்த புகார்களின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.அதே பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பேராசிரியர் இளங்கோவன் வீட்டில் 5 சவரன் திருடு போனது. ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து நடந்த தொடர் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.·

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior