கடலூர்:
கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன. இதையொட்டி அவைகளை அகற்றும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஷ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து கடலூர் புதுநகர், முதுநகர், திருப்பாபுலியூர், ரெட்டிச்சாவடி ஆகிய பகுதிகளில் ரோட்டின் ஓரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வைத்திருந்த பேனர்களை போலீசார் அகற்றினார்கள். 100-க்கும் மேற்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் பேனர்கள் அகற்றப்படுகின்றன.