உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 03, 2011

கடலூர் மாவட்டம் முழுவதும் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது

கடலூர் : 

            கடலூர் மாவட்டம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வரும் 9ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடக்கிறது. 

             4,161 கள பணியாளர்கள், 681 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் ஒழுங்குமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 1871ம் ஆண்டு முதல் துவங்கி, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்டத்தில் 11 லட்சத்து 50 ஆயிரத்து 908 ஆண்களும், 11 லட்சத்து 34 ஆயிரத்து 487 பெண்களுமாக மொத்தம் 22 லட்சத்து 85 ஆயிரத்து 395 பேர் உள்ளனர். 

             தற்போது 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நாடு முழுவதும் வரும் 9ம் தேதி முதல் துவங்கி, 28ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் இப்பணிக்கு 4,161 களப்பணியாளர்களும், 681 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வீடுகள் கணக்கெடுக்கும் பணி முடிந்து, மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 48 ஆயிரத்து 5 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக வரும் 6, 7, 8ம் தேதிகளில் கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட களப்பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் அவரவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு மக்கள் தொகையை கணக்கெடுப்பதற்கு ஏதுவான வரைபடம் தயார் செய்ய உள்ளனர். 

              பின்னர் 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுவர். அதில் படிவத்தில் உள்ள 29 கேள்விகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவர். அப்போது ஏற்கனவே விடுபட்ட வீடுகளின் விவரங்களையும் சேர்த்து செக்ஷன் 3 படிவத்தில் பூர்த்தி செய்வர். 28ம் தேதி இரவு பஸ் நிலையம், கோவில்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளவர்களின் விவரம் குறித்து கணக்கெடுக்கப்படும். இதன் பிறகு மார்ச் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மறு ஆய்வு செய்யப்பட்டு, முடிவுகள் மார்ச் 6ம் தேதி அனுப்பப்படும். அதன் பின்னர் மார்ச் 21ம் தேதி மக்கள் தொகை குறித்த முழு விவரம் நாடு முழுவதும் வெளியிடப்படும்.

சேகரிக்கும் விவரங்கள்... : 

1.பெயர், 
2.குடும்பத் தலைவருக்கு உறவுமுறை, 
3.இனம், 
4.பிறந்த தேதி, 
5. திருமண நிலை, 
6. திருமணத்தின் போது வயது, 
7. மதம்,
8. எஸ்.சி., எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவரா, 
9. மாற்றுத் திறனாளியா, 
10. தாய்மொழி, 
11. அறிந்த பிறமொழிகள், 
12. எழுத்தறிவு நிலை, 
13. கல்வி நிலையம் செல்பவரா, 
14. அதிகபட்ச கல்வி, 
15. கடந்தாண்டு வேலை செய்தவரா, 
16. பொருளாதார நடவடிக்கை வகை, 
17. தொழில்,
18. தொழில் (அ) வியாபார நிலை, 
19. வேலை செய்பவரின் வகை, 
20. பொருளீட்டா நடவடிக்கை, 
21. வேலை தேடுகிறவரா (அ) வேலை செய்பவரா,
22. பணிக்கு பயணம் செய்யும் முறை, 
23. பிறந்த இடம், 
24. கடைசியாக வசித்த இடம், 
25. இடப் பெயர்ச்சிக்கு காரணம், 
26. இடப் பெயர்ச்சிக்கு பின் வசிக்கும் காலம், 
27. உயிருடன் வாழும் குழந்தைகள், 
28. உயிருடன் பிறந்த குழந்தைகள், 
29. கடந்த ஆண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 

                   உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

Read more »

உழவர்களுக்கு ஊக்கம் தரும் உளுந்து சாகுபடி


கடலூர்: 

              குறைந்த காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் விவசாயமாக உளுந்து சாகுபடி உள்ளது.  நிறைந்த ஊட்டச்சத்தும் சிறந்த மருத்துவக் குணங்களும் கொண்டது உளுந்து. எனவேதான் உளுந்தின் தேவை, தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதுக்கும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.  

              இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் உளுந்து பயிரிடப்படுகிறது. எனினும் தேவையில் 85 சதவீதத்தை பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் 1990-91ல் 3.36 லட்சம் ஏக்கரில் 1.35 லட்சம் டன் உளுந்து உற்பத்தி செய்யப்பட்டது. 2000-2001ல் 2.75 லட்சம் ஏக்கரில் 1.32 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.  
 
                தமிழகத்தில் உளுந்து உற்பத்தி பெரும்பாலும் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளையே நம்பி இருக்கிறது. காவிரி பாசனப் பகுதிகளான சுமார் 16 லட்சம் ஏக்கரில் உளுந்து சாகுபடிக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 46 ஆயிரம் ஹெக்டேரில் உளுந்து பயிரிடப்பட்டது.  சம்பா நெல் அறுவடைக்கு 10 தினங்களுக்கு முன் வயல்களில் உளுந்து விதைகளை விதைத்து விடுவார்கள். வயல்களில் உள்ள ஈரப்பதம் மற்றும் பனியால் உளுந்துப்பயிர் வளர்ந்து 60 நாள்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். இதற்குச் செலவு இல்லை. ஏக்கருக்கு குறைந்தபட்சம் 150 கிலோ வரை உளுந்து கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

            இந்த ஆண்டு உரிய காலத்தில் காவிரி நீர் கிடைத்து இருப்பதால் உளுந்து சாகுபடிக்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாக, வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.  தமிழகத்தில் தற்போது ஏடிடி 3, டி 9, டி.ஓ.யூ.1 வண்பன் ஆகிய உளுந்து ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஏடிடி 3 டெல்டா பகுதிகளுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தேவையைக் கருத்தில் கொண்டு, உளுந்தை தனிப்பயிராக சாகுபடி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  

இதுகுறித்து கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,

              "காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு உளுந்து சாகுபடிக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. நஞ்சை தரிசில் உளுந்து சாகுபடி மூலம் செலவு இல்லாமலேயே ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட முடியும்.  உளுந்தை தனிப்பயிராக இறவை பாசனத்தில் சாகுபடி செய்தால் 60 நாள்களில் ரூ. 30 ஆயிரத்துக்கு மேல் வருவாய் கிடைக்கும். எனவே உளுந்தை தனிப்பயிராக சாகுபடி செய்யவும், நேரடிகொள்முதல் செய்யவும் தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.  

இதுகுறித்து வேளாண்துறை அளிக்கும் தகவல்கள்: 

                 தேசிய உணவு பாதுகாப்பு மிஷன் மற்றும் விரைவுபடுத்தப்பட்ட பயறு வகைகள் சாகுபடித் திட்டம் தமிழகத்தில் 2 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.  இத்திட்டங்களில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில் வட்டாரங்களில் தலா 1,000 ஹெக்டேரில் உளுந்து பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.  மேற்கண்ட திட்டங்களில் உளுந்து விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்கள், இடுபொருள்கள், பூச்சி மருந்து தெளிக்கும் கருவிகள், சொட்டு நீர் பாசனக் கருவிகள் வழங்கப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.     

Read more »

சோற்று கற்றாழை; வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு


              மூலிகை பயிரான சோற்றுக்கற்றாழையை இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. எனவே சோற்றுக்கற்றாழை பயிரிட்டு அதிக லாபம் ஈட்டலாம்.  சோற்றுகற்றாழை வறட்சியான பகுதிகளுக்கு ஏற்ற பயிராகும். 
 
             பல்வேறு அழகுசாதனங்கள், மருந்து பொருள்கள் தயாரிப்பதற்கு இது பெரிதும் பயன்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரம், குஜராத், தமிழ்நாட்டில் சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இது பெருமளவில் பயிரிடப்படுகிறது.  3 வகை கற்றாழை: குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை என கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. 
 
             இந்தியாவில் பயிரிடப்பட்டு வருவது குர்குவா கற்றாழை.  வறட்சிப் பிரதேசங்கள் மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயர மலைபிரதேசங்களிலும் இது பயிரிடப்படுகிறது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்தில், 30 முதல் 60 செ.மீ. நீளமாக சிறிய முட்களுடன் இருக்கும்.  தரிசுமண், மணற்பாங்கான நிலம், பொறைமண் போன்றவை இதற்கு ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
 
  நடவு: 
 
              தாய்ச்செடியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வயதுடைய பக்கக்கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே அளவுள்ள கன்றுகளை தேர்ந்தெடுத்தல் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும்.  கற்றாழையை தனிப்பயிராக பயிரிடும்போது ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கன்றுகள் தேவைப்படும். இப்பயிரை வருடத்துக்கு இரண்டு பருவங்களில் பயிரிடலாம். ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். இலைகள் முற்றும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். 
 
              இதனால் இலையில் தரமான கூழ் கிடைக்கும்.  நிலத்தை இரணடு முறை உழுது, ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்கு செடிகளுக்கிடையே 3 அடி இடைவெளி விட்டு நடவேண்டும்.  இப்பயிருக்கு ரசாயன உரங்கள் தேவைக்கேற்ப இட வேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு உரம் இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணுக்கு செடிகளை நட்ட 20-வது நாளில் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து இடுவது அவசியம். ஹெக்டேருக்கு 120 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இடுவது அவசியம். 
 
              இதனால் கூழ் அதிக அளவில் கிடைக்கும்.  கற்றாழையில் அதிக பூச்சித் தாக்குதல், நோய்கள் தோன்றுவதில்லை.  நீர்த் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும். இதற்கு நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.  அறுவடை: நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து, இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவபடுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.  
 
              ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை கிடைக்கும். இலைகளில் 80 முதல் 90 சதவீதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து கூழை பிரித்தெடுக்க வேண்டும்.  அரக்கோணம் வட்டம், தண்டலம் ஊராட்சி கேசவபுரத்தை சேர்ந்த சுரேந்தர்பாபு முதன் முதலாக 4 ஏக்கர் நிலத்தில் சோற்றுகற்றாழையை பயிரிட்டுள்ளார். கற்றாழை பயிரிட விரும்புவோர் அவரிடம் ஆலோசனை பெறலாம்.  கேசவபுரம் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள சோற்றுக்கற்றாழை.

Read more »

கரும்பு தோகையை உரமாக்குவது எப்படி?


 
                 கரும்பு தோகையை எரிக்காமல் அதை உரமாக்கி பயன்படுத்தும் முறை குறித்து வேளாண் துறையினர் யோசனை கூறியுள்ளனர்.  கரும்பு அறுவடைக்குப் பிறகு பெரும்பாலான விவசாயிகள் கரும்பு தோகையை வயலிலேயே எரித்து விடுகின்றனர். 
 
             இதனால் ஒரு ஹெக்டேருக்கு 25 டன் இயற்கை எரு வீணாகிறது.  எருவின் மூலம் கிடைக்கக் கூடிய 100 கிலோ தழைச்சத்து (220 கிலோ யூரியாவுக்கு சமம்) 50 கிலோ மணிச்சத்து (315 கிலோ சூப்பர் பாஸ்பேட்டுக்கு சமம்), கந்தகச் சத்துகள் கிடைப்பதில்லை. மேலும் மறுதாம்பு கரும்பின் முளைப்புத்திறன் 30 சதவீதம் குறைகிறது. வளர்ச்சியும் தடைபடுகிறது.  மண்ணில் வாழும் நுண்ணுயிரிகள், மண்புழுக்கள் அழிக்கப்படுகின்றன. எரிப்பதால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. எனவே கரும்புத் தோகையை எரிக்காமல் உரமாக்கி நிலத்தை வளப்படுத்தலாம். 
 
 உரமாக்கும் முறை:  
 
                கரும்பு வயலின் ஒரு மூலையில் 1 மீட்டர் அளவில் குழி எடுக்க வேண்டும். அக்குழியில் 500 கிலோ கரும்பு தோகையினை போட வேண்டும். அதன் மேல் வயல் மண் (அ) கரும்பு ஆலைக்கழிவு (பிரஸ்மட்) 500 கிலோவை இட்டு, அதன் மேல் 10 கிலோ பாறை பாஸ்பேட், 10 கிலோ ஜிப்சம் மற்றும் 5 கிலோ யூரியா கலவையை தூவ வேண்டும். மேற்கூறிய அனைத்தும் நன்கு நனையும்படி நீர்த் தெளிக்க வேண்டும். 
 
                இவ்வாறு உருவாக்கிய அடுக்கின் மேல் மாட்டுச்சாணம், மக்கிய எரு மற்றும் வயல் மண் கலந்த கரைசலை 500 லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். இவ்வாறாக குழி நிரம்பும் வண்ணம் 10 முதல் 15 அடுக்குகள் இடுவதன் மூலம் 5 டன் கரும்பு தோகையை உரமாக்கலாம்.  இறுதியாக உரக்குழியை நில மட்டத்துக்கு மேல் அரை அடி உயரம் மேடாகும் வண்ணம் மண் கொண்டு மெழுகி மூடிவிட வேண்டும்.  மூன்று மாதங்கள் கழித்து குழி முழுவதையும் நன்கு மக்குமாறு கலக்கிவிடவேண்டும். 
 
                      மக்கும் எரு நன்கு நனையுமாறு வாரம் ஒருமுறை நீர்த் தெளித்து பராமரித்தால் ஆறு மாதத்துக்குள் மக்கிய கரும்பு தோகை உரம் தயாராகிவிடும். இதை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தி நல்ல பயன் பெறலாம் என செய்யாறு வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவுத்துள்ளார்.

Read more »

காய்கறிகள் சாகுபடியில் வேரைப் பாதுகாத்தால் விளைச்சல் அதிகரிக்கும்


தேங்காய் நாரில் இருந்து தயாரிக்கப்படும் உரம்.
                  
              விவசாயம் செய்கிறோம். ஆனால் லாபம் கிடைக்கவில்லை. விவசாயிகள் இப்படிதான் பேசிக் கொள்கிறார்கள். ஒரு சில தொழில்நுட்பங்களைப் பின்பற்றினால் விளைச்சல் அதிகரித்து லாபம் ஈட்ட முடியும்.  மனிதனுக்கு இதயம், நுரையீரல் எப்படி முக்கியமோ பயிருக்கு அந்த அளவு வேர் முக்கியம். வேர் திடமாக இருந்தால்தான் பயிர் செழித்து வளரும்.  மனிதன் ஆக்ஸிஜனை சுவாசித்து கார்ப்பன்- டை-ஆஆக்சைடை வெளியிடுகிறான். பயிர்களின் வேர் கார்ப்பன்-டை- ஆக்சைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. வேர் வலிமையாக இருந்தால்தான் சுவாசிக்கும் திறன் நன்றாக இருக்கும்.  
 
வேரைப் பாதுகாத்து விளைச்சலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை புதுச்சேரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் நிபுணர் என். விஜயகுமார் கூறியது:  
 
               வேர் வலிமையாக இருக்க அங்ககப் பொருள்களை அதிகமாகப் பயிர்களில் பயன்படுத்த வேண்டும். வேர் சுவாசம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக வேர் கிளைக்கும். அதிகமான கிளைப்பு காரணமாக மகசூல் அதிகரிக்கும்.  ஆடி, தை ஆகிய 2 பட்டங்களில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறிகளுக்குத் தொழு உரத்துக்குப் பதிலாக தேங்காய்நார் கழிவு உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அங்ககக் கரிமசத்து இதில் அதிகமாக இருக்கிறது. இந்த உரத்தைப் பயன்படுத்தினால் வேர் திடமாக இருக்கும்.  
 
                     கிளைப்பு நிறைய வரும். சுவாசம் நன்றாக இருக்கும். ஈரம் காக்கும் தன்மையும் கூடவே கைக்கூடும். மேலும் நன்மை தரும் நுண்கிருமிகள் வேர்ப்பகுதியில் எண்ணிக்கையில் அதிகமாகப் பெருகும். கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, கீரைவகைகள் மற்றும் தோட்டப் பயிர்களான தென்னை, வாழை, மா, பலா, கொய்யா, சப்போட்டா, நெல்லி ஆகிய பயிர்களுக்கு தேங்காய் நார் உரத்தைப் பயன்படுத்தலாம்.  
 
                    எந்தப் பயிராக இருந்தாலும் வேர்ப் பகுதியில் ஓர் ஏக்கருக்கு 80 முதல் 100 கிலோ வரை வேப்பம்புண்ணாக்கு இடவேண்டும். வேப்பம்புண்ணாக்கில் அசாடி ரக்டின் என்ற வேதிப்பொருள் இருப்பதால் கசப்புத்தன்மை இருக்கிறது.  இத்தன்மை காரணமாக வேரில் அழுகல் நோய், வேர் வாடல் நோய், வேரைத் தாக்கும் நூல் புழு வராமல் தடுக்க முடியும். இந்தப் புண்ணாக்கு நோயை உருவாக்கும் கிருமிகளை விரட்டி வேரைச் சுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.

Read more »

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தர்ப்பூசணி

தோட்டக்கலைத் துறையின் ஆலோசனை பேரில் கும்மிடிப்பூண்டியை அடுத்த அமரம்பேடு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தர்ப்பூசணி.
        குறைவான செலவில் அதிகமான லாபத்தை சம்பாதிக்க தர்ப்பூசணி பயிரிட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.  
 
             திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மாதர்பாக்கம், போந்தவாக்கம், அமரம்பேடு, செதில்பாக்கம், மாநெல்லூர், நேமள்ளூர், பாதிரிவேடு, தேர்வாய் உள்ளிட்ட பல பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிட விவசாயிகள் ஆர்வத்தோடு உள்ளனர்.  

         அப்படி தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் விதைகளை மானிய முறையில் தந்து தோட்டக்கலைத் துறையின் ஆலோசனைப்படி குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதிக்க வழிகளை தெரிவிக்கின்றனர்.   ஒரு ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி பயிரிட ஆகும் முதலீடு ரூ. 12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் மட்டுமே. நிலத்தை உழுது பண்படுத்திய பின்பு 6-8 அடி அகல இடைவெளியில் கால்வாய் வெட்டிய பின் 3 அடி இடைவெளி விட்டு குழிகள் தோண்ட வேண்டும்.

            இந்த குழியில் மக்கிய தொழு உரம், ரசாயன உரங்களை இட்டு நன்கு கலக்கிய பின்பு ஒரு குழிக்கு 3-4 விதைகளை இட்டு குழிகளை மூடி விட வேண்டும்.  விதை தூவிய 5-வது நாள் விதை முளைத்தல் நிகழும். இதைத் தொடர்ந்து வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. 15-ம் நாளுக்கு பிறகு நிலத்தில் முளைத்துள்ள களைகளை அகற்ற வேண்டும். இந்நிலையில் பூச்சிமருந்து தெளித்து பயிர்களை காக்க வேண்டியது அவசியமாகும்.  

              30-35-ம் நாளில் செடியில் பூப்பூக்க தொடங்கி அதை தொடர்ந்து காய் காய்த்து பெரிதாக தொடங்கும். பயிரிடப்பட்ட 65-75 நாள்களில் தர்ப்பூசணி நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராக இருக்கும்.  இப்படி இரண்டு மாத கால பராமரிப்பில் தர்ப்பூசணி சாகுபடி செய்யும் போது அதிகபட்ச லாபத்தை விவசாயிகள் அடைந்து பயனடையலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.  

             ஒரு ஏக்கர் நிலத்தில் நல்ல பராமரிப்புக்கு தக்கவாறு 10 டன் தர்ப்பூசணி வரை விளைச்சலாக வாய்ப்புண்டு. தற்சமயம் ஒரு டன் தர்ப்பூசணி ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விலை போகிற நிலையில் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தில் விளையும் 10 டன் தர்ப்பூசணியை விற்பதன் மூலம் ரூ.70 ஆயிரம் வரை விற்கலாம்.   செலவுகள் போக குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் லாபத்தை 2 மாதங்களில் விவசாயிகள் பெற்று லாபம் பெற வாய்ப்பு உள்ளதால் தர்ப்பூசணி ஒரு லாபகரமான விவசாயப் பயிர் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

              மேலும் தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை 50 சதவீதம் மானியத்துடன் தோட்டக்கலைத் துறை தருகிறது.  அதே போல தோட்டக்கலைத் துறையோடு சேர்ந்து தேசிய வேளாண் நிறுவனமும் தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு கருவிகள், பாஸ்வோபாக்டீரியா, சூடாமோனாஸ் போன்ற உயிரி உரங்களை பெற்று தருகின்றனர்.  கூலியாள்கள் கிடைக்க சிரமமாய் இருக்கும் இது போன்ற நாள்களில் குறைந்த ஆட்களைக் கொண்டு தோட்டப் பயிரான தர்ப்பூசணி பயிரிடுவது எளிதாக உள்ளதாலும் அதில் நிறைய லாபம் கிடைப்பதாலும் விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

Read more »

ஸ்பெக்ட்ரம்: முக்கிய நிகழ்வுகள்

மே-16, 2007: தயாநிதி மாறன் ராஜிநாமாவைத் தொடர்ந்து ஆ. ராசா தொலைத் தொடர்பு அமைச்சரானார்.
 
 அக்டோபர் - 25, 2007: ஏலம் மூலம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவிப்பு.  

செப்டம்பர், அக்டோபர் - 2008: முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு.  

நவம்பர் - 15, 2008: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதால் தொலைத் தொடர்பு அமைச்சக அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.  

அக்டோபர் - 21, 2009: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.).  

அக்டோபர் - 22, 2009: மத்திய தொலைத் தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை. 

 அக்டோபர் - 17, 2010: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாகவும் இதனால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கைத் துறை தகவல். 

 நவம்பர் 2010: ஆ. ராசா ராஜிநாமா செய்யக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கம்.  நவம்பர் - 14, 2010: ஆ. ராசா ராஜிநாமா.  

நவம்பர் - 15, 2010: மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக தகவல் தொடர்புத் துறை ஒப்படைப்பு.  

நவம்பர் 2010: ஆ. ராசாவின் ராஜிநாமா மட்டும் போதாது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கேரிக்கையால் முழுவதுமாக முடங்கியது நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர்.  

டிசம்பர் - 13, 2010: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2001-ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து ஆராய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைப்பு. 

 டிசம்பர் - 24 & 25, 2010: ஆ. ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை.  

ஜனவரி - 31, 2011: ஆ. ராசாவிடம் மீண்டும் சி.பி.ஐ. விசாரணை; நீதிபதி சிவராஜ் பாட்டீல் தனது 150 பக்க அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் சமர்ப்பித்தார். 

 பிப்ரவரி - 2, 2011: முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, முன்னாள் தொலைத் தொடர்பு செயலர் சித்தார்த்த பெஹுரா, ஆ. ராசாவின் முன்னாள் தனி செயலர் ஆர்.கே. சண்டோலியா  ஆகியோர் கைது.

Read more »

ஏப்ரல் இறுதியில் ஸ்லெட் தேர்வு

       ஸ்லெட் தேர்வு நடத்துவது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) இம்மாத இறுதியில் பாரதியார் பல்கலைக்கழகம் வரவுள்ளது. 

              பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளுக்குப் பிறகு, ஏப்ரல் மாத இறுதியில் ஸ்லெட் தேர்வை நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர் பணிபுரிய ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களை மட்டும் நியமிக்க யு.ஜி.சி. விதிமுறை வகுத்துள்ளது. தேசிய அளவில் உள்ள கல்லூரிகளில் பணிபுரிய நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இதில் நெட் தேர்வை, யு.ஜி.சி. நடத்துகிறது. ஸ்லெட் தேர்வை அந்தந்த மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. 

               தமிழகத்தில் ஸ்லெட் தேர்வை கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.  2008-க்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக ஸ்லெட் தேர்வு, தமிழகத்தில் நடத்தப்படவில்லை. இதனால், இத்தேர்வை எழுத முதுநிலை மற்றும் எம்.பில். படித்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கின்றனர்.  இந்த நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வை நடத்தலாம் என்று தமிழக அரசு கடந்த 2010 ஜூலையில் அரசாணை வெளியிட்டது. அரசின் அறிவிப்பு வெளியாகி கிட்டதட்ட 7 மாதங்களாகியும் ஸ்லெட் தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகாதது மாணவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

 இது குறித்து, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன்  கூறியது: 

              வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, செமஸ்டர் தேர்வுகளை விரைவில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். செமஸ்டர் தேர்வுக்குப் பிறகு, ஸ்லெட் தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.  ஸ்லெட் தேர்வு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள யு.ஜி.சி. குழுவினர் பிப்ரவரி 20-ம் தேதிக்குப் பிறகு பல்கலைக்கழகம் வரவுள்ளனர். அதைத்தொடர்ந்து, யு.ஜி.சி.யிடம் இருந்து முறையான உத்தரவு கிடைத்தவுடன் ஏப்ரல் இறுதியில் ஸ்லெட் தேர்வை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.  

              அடுத்த மூன்று ஆண்டுகள் ஸ்லெட் தேர்வு நடத்த அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்படும்.  கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஸ்லெட் தேர்வை 20,972 பேர் எழுதினர். இதில் வெறும் 465 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 2.21 சதவீதம் தான். தேசிய  அளவில் நடக்கும் நெட் தேர்வில் தேர்ச்சி விகிதம் .1 தான். இந்த முறை தேர்வு எழுத அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் சுவாமிநாதன். 

 கல்வித் தகுதி என்ன?   

            ஸ்லெட் தேர்வை எழுத முதுநிலை படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். 

Read more »

சிதம்பரம் தெற்குசன்னதி தொலைபேசி நிலைய வளாகத்தில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் திறப்பு

சிதம்பரம்:

             சிதம்பரம் தெற்குசன்னதி தொலைபேசி நிலைய வளாகத்தில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது

             .திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் (விஜிலென்ஸ்) பி.மகேஷ் திறந்து வைத்தார். சிதம்பரம் கோட்டப் பொறியாளர் கே.இளங்கோவன் சேவை மையத்தை பற்றி விளக்கமளித்தார்.  கோட்ட பொறியாளர் ஏ.ஜெயக்குமார் தலைமை வகித்தார். இச்சேவை மையத்தில் கோவில் தொலைபேசி நிலையம், அண்ணாமலைநகர், சக்திநகர், வல்லம்படுகை ஆகிய தொலைபேசி நிலையங்களின் வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகள் குறித்த சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம். 

                புதிய தரைவழி இணைப்புகள், செல்போன் சேவை இணைப்புகள், எண்ணை மாற்றாமல் சேவை வழங்கும் ஆபரேட்டர் மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்வது, மொபைல் ரீசார்ஜ், ஈ சார்ஜ் கார்டுகளும், ஐடிசி கார்டுகளும் இச்சேவை மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். மேலும் சேவை மையத்தில் தரைவழி தொலைபேசி, வில் தொலைபேசி. செல்போன் கட்டணங்களும் செலுத்தலாம் என கோட்டப் பொறியாளர் கே.இளங்கோவன் தெரிவித்தார்.

Read more »

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு செயல்முறை விளக்கம்

கடலூர்:

            இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு இருக்க வேண்டிய விழிப்புணர்வு மற்றும் தயார்நிலை திட்டங்கள் குறித்த செயல்முறை விளக்கம், மாணவர்களுக்கு அண்மையில் அளிக்கப்பட்டது.

           மத்திய அரசின் இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த செயல்முறை விளக்கத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், மழை வெள்ளக் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,  மீட்புக் கருவிகளை சேகரித்தல், பயன்படுத்துதல், பாதிப்புக்கு உள்ளானவர்களைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகள குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Read more »

பிச்சாவரம் சுற்றுலாப் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

சிதம்பரம்:

           சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரம் சுற்றுலாப் பகுதியில் இளைஞர் செஞ்சிலுவை அமைப்பு மாணவர்களால் சுரபுண்ணை காடுகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தை திங்கள்கிழமை மேற்கொண்டனர்.

             கிள்ளை பேரூராட்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை அமைப்பு ஆகியன இணைந்து இந்த பிரசாரத்தை மேற்கொண்டது.தமிழகத்தில் உள்ள 7 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த இளைஞர் செஞ்சிலுவை அமைப்பு மாணவ, மாணவியர்கள் 7-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று பிச்சாவரம் வனப்பகுதியில் உள்ள சின்னவாய்க்கால் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள சுரபுண்ணை காடுகளில் மக்களால் போடப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

             பின்னர் அங்கு வந்து சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் பொருள்களை நீரில் வீசக் கூடாது என பிரசாரம் செய்தனர். கோட்டாட்சியர் எம்.இந்துமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செஞ்சிலுவை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கே.வி.பாலமுருகன் வரவேற்றார்.லயன் கே.சேதுமாதவன், அரிமா சங்க பொருளர் டி.கே.விஜய்காந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திட்ட அலுவலர் ஆர்.பாலமுருகன் நன்றி கூறினார்.

Read more »

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 செய்முறை தேர்வு துவக்கம்


              பிளஸ் 2 செய்முறை தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று துவங்குகிறது. பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கு முன் நடக்கும், செய்முறை தேர்வு மாநிலம் முழுவதும், இன்று முதல் வரும் 22ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் எத்தனை கட்டங்களாக செய்முறை தேர்வை நடத்தலாம் என்பதை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வர். பிளஸ் 2 செய்முறை தேர்வில், நான்கரை லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

Read more »

காட்டுமன்னார்கோவில் பகுதியில் ரூ.84 லட்சம் செலவில் சாலை பணிகள்

காட்டுமன்னார்கோவில் : 

            காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதியில் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் 84 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் போடும் பணி நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை போட 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. 

                அதனைத் தொடர்ந்து பணிகள் துவங்கி நடந்து வருகிறது. டி.கே.பி. நகர், ஜெயராம் நகர், காளியம்மன்கோவில் தெரு, பெரியார் நகர், அண்ணா நகர், ஆர்.சி. தெரு உள்ளிட்ட 13 தெருக்களில் சிமென்ட் சாலை போடும் பணி படிப்படியாக துவங்கப்பட உள்ளது. மேலும் பேரிடர் தடுப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் சிறப்பு சாலை போட 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் சில நாட்களில் விடப்படும் என்பதால் அதில் உப்புக்கார தெரு, காந்தியார் தெரு, பெரியார் நகர் தெரு, அண்ணா நகரில் கருணாநிதி தெரு உள்ளிட்ட 7 சாலைகள் அந்த நிதியில் போடப்பட உள்ளதாக பேராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தலின் கோட்பாடுகள் நிகழ்ச்சி

சிதம்பரம் : 

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் "கற்பித்தலின் புதிய கோட்பாடுகள்' தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி மேலாண்மை தொடர்பான இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். தொலைதூரக் கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ் முன்னிலை வகித்தார். தொலைதூரக் கல்வி இயக்க மேலாண்மை துறை தலைவர் சையத் ஜாபர் வரவேற்றார். பாரதியார் பல்கலைக்கழக புல முதல்வர் வேங்கடபதி மேலாண்மை கல்வியின் புதிய பரிமாணங்கள் குறித்து பேசினார். கலைசார் புல முதல்வர் செல்வராஜூ, ஒருங்கிணைப்பாளர் அருள்குமார், ஆனந்த நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

Construction workers given headgear, nose protectors



Ensuring safety: Health Minister M.R.K. Panneerselvam with construction workers in Cuddalore on Wednesday.


CUDDALORE: 

           Health Minister M.R.K. Panneerselvam gave away 1,750 headgear and 1,500 nose covers or protectors to construction workers at an official function held here on Wednesday.

           He said that these aids would ensure safety of the workers at construction sites. The nose protectors would guard them against dust while demolishing a structure or mixing construction materials. In the last four years of its existence, the Tamil Nadu Construction Workers' Welfare Board had extended a assistance of about Rs. 1,000 crore to the workers and their families. It included solatium of Rs. 1 lakh for the death of a labourer, educational assistance at the rate of Rs. 46,000 to their wards for the maximum of two wards (Rs 92,000), old age pension, etc.

Read more »

SBI ATM opened at Anugraha Satellite Townshi

CUDDALORE: 

       State Bank of India's 104th ATM at Anugraha Satellite Township on East Coast Road near here was inaugurated on Wednesday by Maniratnam, Chairman of Navasakthi Townships Developers Pvt. Ltd.

         S. Jeyram Moorthy, Regional Manager, SBI, Puducherry, and branch managers Chelladurai, Venugopal and Govindarajan, were present. Mr. Moorthy said that the ATM would be of immense help not only to residents of the statellite township but also those on transit.

Read more »

NLC union protests revised office timings

CUDDALORE: 

           The office-bearers and members of the Labour Progressive Front (LPF), affiliated to the ruling Dravida Munnetra Kazhagam, observed a day-long hunger strike at Neyveli on Wednesday to voice their protest against the new office timings fixed by the management of the Neyveli Lignite Corporation for the administrative staff. R.Gopalan, general secretary of the LPF, told The Hindu that effective from February 1, the NLC management had advanced the office working hours from 9 a.m. to 5.30 p.m., with half-an-hour lunch break. The LPF had taken the stand that the revised timings had greatly inconvenienced the office staff because they were accustomed to the regular timings of 10 a.m. to 5 p.m. that had been in force for the past 46 years.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior