உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 24, 2011

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் குடும்ப சொத்து மதிப்பு ரூ.7.22 கோடி

கடலூர் : 

             குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் குடும்பத்திற்கு, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. 

              மனு தாக்கலின் போது, பன்னீர்செல்வம் இந்த விவரத்தை கொடுத்துள்ளார். இவர் 2006ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டபோது சமர்ப்பித்த சொத்து பட்டியலில், ரொக்கம், 6 லட்ச ரூபாயும், டாடா சுமோ, இரண்டு டிராக்டர், மூன்று டிரெய்லர், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க நகை, 77 லட்ச ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளான நிலம், வீடு, வணிக வளாகம் இருப்பதாகவும், 34 லட்ச ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

              அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகியோர், வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த, 2004ம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத் துறையினரால் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு கடலூர் மற்றும் சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு, தற்போது சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மேல் முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் உள் ளது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு : 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

கடலூர் : 

              வரும் 28ம் தேதி துவங்கும் எஸ்.எஸ். எல்.சி., பொதுத்தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு வரும் 28ம் தேதி முதல் துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடக்கிறது. 

                  கடலூர் கல்வி மாவட்டத்தில் 63 மையங்களில் 9,829 மாணவர்களும், 10 ஆயிரத்து 838 மாணவிகளும் மொத்தம் 20 ஆயிரத்து 667 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதில் 1,009 மாணவிகள் மாணவர்களைவிட கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். அதேப்போன்று விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 34 மையங்களில் 5,654 மாணவர்களும், 5,058 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 669 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 2,290 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவு கணக்கு குறித்து புகார் தெரிவிக்கலாம்

சிதம்பரம் : 

              தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் செலவு தொடர்பான புகார், குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என காமே தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய ஐந்து தொகுதி தேர்தல் செலவுகளை கண்காணிக்க பார்வையாளராக காமே நியமிக்கப்பட்டுள்ளார். 

                வேட்பாளர் மற்றும் கட்சியினர் செலவு தொடர்பாக பொதுமக்கள் தன்னை 75987 00266 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். திங்கள், புதன் ஆகிய இரண்டு நாட்கள் மாலை 4 மணி முதல் 5 வரை கடலூர் ஆர்.டி.ஒ., அலுவலகத்திலும், மற்ற நாட்களில் சிதம்பரம் பொதுப்பணித் துறை சுற்றுலா மாளிகையில் அவரது அலுவலகத்தில் மாலை 4 மணி முதல் 5 வரை பொதுமக்கள் நேரிடையாக சந்தித்து குறைகள் மற்றும் ஆலோசனைகள் தெரிவிக்கலாம் என காமே தெரிவித்துள்ளார்.

Read more »

வேட்பாளரின் செலவு விவரத்தை பணம் கட்டி பெறலாம்

நெய்வேலி : 

           ""வேட்பாளரின் தேர்தல் செலவு குறித்து யார் வேண்டுமானாலும் ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்து தகவல் கேட்டால் அவர்களுக்கு அந்த தகவல் வழங்கப்படும்'' என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
               நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி உள்ளிட்ட நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் செலவு மற்றும் அரசியல்வாதிகள் நடவடிக்கை குறித்து கண்காணிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், தேர்தல் செலவு கண்காணிப்பாளர் தினேஷ்சிங் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் சீத்தாராமன் பேசியது:

            தேர்தல் செலவின் கண்காணிப்புக் குழுவினர் மூலம் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு நிழல் கண்காணிப்பு பதிவேட்டில் செலவினம் பதிவுகள் செய்யப்படும். கோயில், சர்ச், மசூதி போன்ற பகுதிகளின் அருகில் மத உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் பிரசாரம் செய்யக்கூடாது. பள்ளிக்கூடங்கள், தேர்வு மையங்கள் அருகே மேடை அமைத்தலோ, பிரசாரமோ செய்யக்கூடாது. வழி நெடுகிலும் பெரிய ஆர்ச்சுகள், பாதை நெடுக கட் அவுட்கள், கொடிகள், லைட் கம்பங்கள் நடக்கூடாது. போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடாது. 

                ஒரே இடத்தில் இரு கட்சிகளை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும் போது காவல்துறையினர் முன்னுரிமையின் அடிப்படையில் நேரத்தை ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்க வேண்டும். தேர்தல் செலவுக்கான பண பரிமாற்றங்கள் முழுவதும் காசோலைகளாகத்தான் இருக்க வேண்டும். வேட்பாளரின் தேர்தல் செலவு குறித்து யார் வேண்டுமானாலும் ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்து தகவல் கேட்டால் அவர்களுக்கு அந்த தகவல் வழங்கப்படும். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் பேசினார்.

Read more »

சிதம்பரத்தில் மாதம் முழுவதும் மின் கட்டணம் செலுத்த ஏப்ரல் மாதம் முதல் புதிய திட்டம் அமல்

சிதம்பரம் : 

            சிதம்பரத்தில் மாதம் முழுவதும் மின் கட்டணம் செலுத்தும் புதிய திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

இதுகுறித்து சிதம்பரம் மின்துறை செயற்பொறியாளர் செல்வசேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

              குறைந்த மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு மின் கட்டண கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போதுள்ள நடைமுறை மாற்றப்படுகிறது. மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் வகையில் கடலூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டத்தை அமல்படுத்திட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உத்தேசித்துள்ளது. 

              நடைமுறையில் உள்ள 16ம் தேதி முதல் கணக்கீடு செய்தல், 1ம் தேதி முதல் வசூல் செய்யும் முறை மாற்றப்பட்டு 1ம் தேதி முதல் மாதம் கடைசி வரை கணக்கீடு, கணக்கீடு முடிந்து இரண்டாம் நாளில் இருந்து மாதம் முழுவதும் வேலை நாட்களில் பணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படுகிறது.ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. புதிய முறையின் மூலம் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு எளிதில் மின் கட்டணம் செலுத்த வசதியாக இருக்கும். இந்த புதிய திட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கணக்கடு செய்த நாளில் இருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். 

                தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அபராத தொகை வசூலிக்கப்படும். நடைமுறையில் உள்ளபடி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்யும் முறைதான் புதிய முறையிலும் பின்பற்றப்படும். ஆனால் கணக்கெடுப்பு 16ம் தேதிக்கு பதில் 1ம் தேதி தொடங்கும். மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டண அட்டையை மீட்டருக்கு அருகில் வைக்குமாறும் பணம் செலுத்த வரும்போதும் வெள்ளை அட்டையை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே மாதம் முழுவதும்வேலை நாட்களில் பணம் செலுத்தும் வசதியினை பயன்படுத்தி, புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எதிராக காயத்திரி தேவி போட்டி

           எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு பாமகவில் இணைந்தார். பாமக சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

         பின்னர் பாமக தலைமைக்கும், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அக்கட்சியில் இருந்து விலகியதுடன், அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார். அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிக ஆரம்பிக்கப்பட்டபோது, அக்கட்சியின் அவை தலைவரானார். 2006 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட அவர், பாமக வேட்பாளர் வேல்முருகனிடம் தோல்வி அடைந்தார்.
  
             இந்நிலையில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் காயத்திரி தேவி போட்டியிடுகிறார். காயத்திரி தேவி மதுராந்தகம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

PMK, AIADMK to slug it out in Neyveli constituency



Campaign:T.Velmurugan, PMK MLA, addressing his party workers on Wednesday.


NEYVELI: 

            The battle for the newly created Neyveli Assembly constituency, encompassing the entire Neyveli Township of the NLC and parts of Kurinjipadi and Panruti constituencies, is hotting up with the Pattali Makkal Katchi and the All India Anna Dravida Munnetra Kazhagam candidates gearing for a direct contest.

         Sitting Panruti MLA T. Velmurugan filed his nomination for the Neyveli constituency on PMK ticket on Wednesday. He sought to erase the impression that he is an outsider or from another constituency by stating that “it should not be misconstrued that he has shifted from Panruti to Neyveli. Since his birthplace is Puliyurkattusagai that forms part of Neyveli he is very much a son of the soil.”

          He told The Hindu that he was not a stranger to Neyveli because he had taken up the cause of 14,000 permanent employees and 13,000 contract workmen of the Neyveli Lignite Corporation at various forums and succeeded in getting their demands fulfilled to a fair extent.

Regularisation

              It would be his endeavour to get regularisation for contract workmen in a phased manner. He would hold talks with the NLC management to waive the charges for providing electricity to over 1,000 households with 10,000 population, all daily-wage workers and small-time vendors, living in Blocks 21 and 30 of the Neyveli Township. He said that the NLC management should enhance the annual allocation for peripheral development from Rs. 2 crore to Rs. 5 crore a year.

            He noted that former Union Health Minister Anbumani Ramadoss mooted the idea of converting the NLC general hospital into a medical college and that he would strive to achieve the goal. He would seek suitable compensation and alternative sites for the residents of Thenkuthu and Vanathirayapuram whose houses had developed cracks and cattle heads were scared away by constant (controlled) explosions triggered in the NLC mines.

                Appreciating the contributions made by the officials for improving the NLC performance, he said he would work in close coordination with them to improve the lot of the employees that in turn would lead to increased production and productivity. He would pursue the idea of setting up units for producing feni (a beverage extracted from cashew nuts), and jackfruit pulp and jam. He would impress upon the government and the NLC management to protect and streamline the water sources and take permanent flood control measures.

Candidates

The other candidates who filed nominations in Neyveli are: 

V.Gayathri (DMK dummy candidate) and 
P.Chandra (Independent);

Read more »

Expenditure observer to interact with people

CUDDALORE: 

        Expenditure observer G.M. Kamei will regularly interact with the public to register their complaints regarding violation of the model code of conduct.

          The Election Commission has designated Mr. Kamei as expenditure observer for the constituencies of Cuddalore, Kurinjipadi, Bhuvanagiri, Chidambaram and Kattumannarkoil. In a statement here, he said that he would meet people at the Facilitation Centre, office of the Revenue Divisional Officer, Cuddalore, from 4 p.m. to 5 p.m. on Mondays and Wednesdays.

       On other days, he would meet people at the office of the expenditure observer, PWD (Buildings and Maintenance), Guest House, Chidambaram, from 4 p.m. to 5 p.m.

Mr. Kamei said that people in the respective constituencies could also contact assistant expenditure observers concerned: 

Cuddalore – D. Michael Mani – 9486516796
Kurinjipadi – T.Kannan – 9442278987
Bhuvanagiri – G.Muthukrishnan – 9488013471
Chidambaram – K.Parathasarathi – 9487433219
Kattumannarkoil-- A.Mohamed Salim – 9597227560

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior