உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 12, 2010

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்

            ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

            டிசம்பரில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம் எனவும் அமைச்சரவைக்கு அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

              இது தொடர்பாக முடிவெடுக்க பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை கூடியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என இந்தக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான இறுதி முடிவை அமைச்சரவை விரைவில் அறிவிக்கும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சர்கள் குழுவில் பிரணாப் முகர்ஜி தவிர, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் பரூக் அப்துல்லா, வேளாண் அமைச்சர் சரத் பவார், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

               ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடந்த நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் கடும் அமளியில் ஈடுபட்டன. அதன் பின்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அமைச்சர்கள் குழு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது.  ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இப் பிரச்னை தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் சம்மதம் தெரிவித்தன. பெரும்பாலான கட்சிகள் சம்மதம் தெரிவித்த நிலையில், புதன்கிழமை கூடிய அமைச்சர்கள் குழு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது.

Read more »

வாழைப் பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பம்



கிழக்கு ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசேகரனின் தோட்டத்தில் நைலான் கயிறுகளால் கட்டப்பட்ட வாழைமரங்கள்.
கடலூர்:
 
             வாழைப் பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
 
              தமிழ்நாட்டில் 83 ஆயிரம் ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் முட்லூர், வல்லம்படுகை, கடலூரை அடுத்த கேப்பர் மலை கிராமங்களில் 4 ஆயிரம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.
 
             வாழை சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு | 50 ஆயிரத்துக்கு மேல் லாபம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. வாழைப் பயிரில் நோய்த் தாக்குதல் பெருமளவுக்கு ஏற்படுவதில்லை. எனினும், சூறாவளிக் காற்று பல நேரங்களில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது.  சவுக்கு, யூகலிப்டஸ் உள்ளிட்ட மரக்கழிகளை வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுத்து, காற்றில் விழுந்து விடாதவாறு பாதுகாக்கும் முறை, காலம் காலமாக விவசாயிகளால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கழிகள் வாங்க ஏக்கருக்கு | 20 ஆயிரம் செலவாகிறது. 
 
              கயிறு உள்ளிட்ட பொருள்கள் மற்றும் கட்டுக்கூலி ஆகியவற்றுடன் சேர்த்துப் பார்க்கும்போது, ஏக்கருக்கு | 25 ஆயிரம் செலவாகிறது. இதற்காக வங்கிகள் ஏக்கருக்கு | 25 ஆயிரம் வரை கடன் வழங்குகின்றன. வாழை மரங்களை நைலான் கயிறுகளால் இணைத்துக் கட்டிவிடும் புதிய தொழில்நுட்பம், நல்ல பலனைத் தருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு வாழை மரத்தைச் சுற்றியும், ஒரு நைலான் கயிற்றை தொய்வாகக் கட்டிவிட்டு, அதில் இருந்து 4 புறமும் வாழைகளை நீண்ட நைலான் கயிறுகளால் இணைத்து, இறுதியாக மின்கம்பங்களுக்கு ஸ்டேவயர் கட்டுவதுபோல் நிலத்தில் இழுத்துக் கட்டிவிடும் புதிய முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
 
              கழிகளை முட்டுக் கொடுக்கும் பாதுகாப்பு முறையைவிட, இவ்வாறு நைலான் கயிறுகளால் வாழைகளை பிணைத்துக் கட்டுவதால், சூறாவளிக் காற்றில் இருந்து 100 சதவீதம் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். கழிகளுக்கு ஆகும் செலவைவிட நைலான் கயிறுகளுக்கு செலவு குறைவாகவும், ஒருமுறை பயன்படுத்திய நைலான் கயிறுகளை,  8 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஏக்கருக்கு | 13 ஆயிரம்தான் செல்வாகிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
 
டலூர் அருகே கிழக்கு ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரும் முன்னோடி விவசாயியுமான ஞானசேகரன் கூறியது,
 
               தனது வாழைத் தோட்டங்களில் 3 ஏக்கரில் மட்டும் நைலான் கயிறுகளால் பிணைத்துக் கட்டும் புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றி இருக்கிறார்.÷இதனால் இரு தினங்களுக்கு முன் இப்பகுதியில் அடித்த சூறைக்காற்றில், 250 ஏக்கரில் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்த போதிலும், தனது வாழை மரங்கள் முழுமையாகத் தப்பியதாக ஞானசேகரன் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் முதல்முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை 3 ஏக்கரில் மட்டும் பயன்படுத்தியவர் ஞானசேகரன். 
 
                    பிற மாவட்டங்களில் தலா 30 அல்லது 40 ஏக்கரில் மட்டும் பிரபலமாகி இருக்கும் இந்த புதிய பாதுகாப்பு முறையை, மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.மேலும் வாழைமரங்களின் பழங்கள், நார் ஆகியவற்றைக் கொண்டு, புதிய பொருள்களை உருவாக்கி விவசாயிகள் தங்கள் வருவாயை உயர்த்த முடியும் என்றும் அவர் கூறினார்.

Read more »

நெய்வேலிவாசிகளுக்கு மறுக்கப்படும் அரசின் கலர் டி.வி



நெய்வேலி:
 
             நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஊழியர்களுக்கும் அவர்களைச் சார்ந்து வாழ்பவர்களுக்கும் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச கலர் டி.வி. உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் மறுக்கப்படுவதால் அவர்கள் விரக்தியில் உள்ளனர்.
 
           கடலூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் சுமார் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நெய்வேலியில் 20 ஆயிரம் என்எல்சி ஊழியர்களின் குடும்பத்தினரும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினரும், அவர்களைச் சார்ந்து வாழும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் உள்ளனர். நெய்வேலி நகரத்தின் மின்சாரம், குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் என்எல்சி நிர்வாகமே செய்து வருகிறது.
 
            இந்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை குறிஞ்சிப்பாடி தொகுதியில் அங்கம் வகித்த நெய்வேலி நகரம், தற்போது தொகுதி மறு சீரமைப்பு காரணமாக புதிய நெய்வேலி தொகுதியாக உருவெடுத்துள்ளது. என்எல்சியின் சுற்றுப்புற மேம்பாட்டு நிதி மூலமாக அருகில் 10 கி.மீ. தொலைவுக்குள் உள்ள கிராமங்களின் சாலை வசதி, பள்ளிக் கட்டடம், நூலகம், பாலம், ஆழ்துளைக் கிணறு அமைப்பது, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி போன்ற பணிகளை செய்து கொடுக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகத்தின் பணியையும் என்எல்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் என்எல்சியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் (2,490 மெகாவாட்) சரி பாதி தமிழகத்துக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் நெய்வேலியில் உள்ள 3 காவல் நிலையங்களுக்கும் வாகன வசதி, இலவச மின்சாரம், |40 லட்சம் செலவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் என பல சலுகைகளையும் என்எல்சி செய்து கொடுத்துள்ளது.
 
             ந்நிலையில் பல கோணங்களிலும் தமிழக அரசுக்கு துணையாக விளங்கும் என்எல்சி நிறுவனத்தின் ஊழியர்கள் அரசின் நலத்திட்ட உதவிகோரி மாவட்ட நிர்வாகத்தை அணுகினால், "நலத்திட்ட உதவிகள் நெய்வேலிக்கு இல்லை' என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். வாக்களிக்கும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட நிர்வாகம் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர் என்எல்சி ஊழியர்கள்.
 
ஆட்சியர் விளக்கம்: 
 
              தற்போது கிராம பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கலர் டி.வி. வழங்கியிருக்கிறோம். அடுத்து நகராட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் போது நெய்வேலி டவுன்ஷிப் பகுதிக்கும் வழங்கப்படும் என ஆட்சியர் சீதாராமன் தெரிவித்தார். ஆனால், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் நகராட்சிப் பகுதிகளில் இலவச கேஸ் அடுப்பு மற்றும் இலவச கலர் டி.வி. ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வரும் நிலையில் சிதம்பரம் காவல் கோட்டம்



சிதம்பரம்:
 
           சிதம்பரம் காவல் கோட்டத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகளால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.
 
             சிதம்பரம் காவல் கோட்டத்தில் சிதம்பரம் நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், கிள்ளை, புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், மருதூர் என 7 காவல் நிலையங்கள் உள்ளன. வாகன திருட்டு, வீடு புகுந்து திருட்டு, லாட்டரி சீட்டு விற்பனை, வழிப்பறி, குடிகாரர்களின் அட்டகாசம், கட்டை பஞ்சாயத்து உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் நடராஜர் கோயிலில் பெண்களிடம் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. புவனகிரி, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, பி.முட்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரே நாளில் பல கடைகளை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்றனர். 
 
              சமீபத்தில் லாரி டிரைவர் விஜயன் ரவுடிகள் கும்பலால் சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் கொலை செய்யப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்டார். போக்குவரத்து காவலர்கள் போதிய அளவில் இல்லாததால் போக்குவரத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. கீழரத வீதியில் இருபுறமும் நிறுத்தப்படும் சுற்றுலாப் பயணிகளின் பஸ்கள், வேன்கள் ஆகியவற்றால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலரத வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, எஸ்.பி.கோயில் தெரு, வேணுகோபால்பிள்ளை தெரு, போல்நாராயணன் தெரு, பஸ் நிலையம், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு தினந்தோறும் விபத்து நடைபெற்று வருகிறது.
 
            5 ஆண்டுகளுக்கு முன்பு குற்றங்கள் அதிகமாக  நடைபெறும் நகரமாக இருந்ததால் சிதம்பரம் கோட்ட காவல்துறைக்கு ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டு வந்தார்கள். தற்போது மீண்டும் குற்றங்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. எனவே சிதம்பரம் கோட்டத்துக்கு ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களை மீண்டும் ஏஎஸ்பியாக நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.
 
இதுகுறித்து கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஷ் தெரிவித்தது: 
 
                 குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸ் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரவுடிகளின் பட்டியல்கள் எடுக்கப்பட்டு அவர்கள் உளவுத்துறை போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தாலும் அவர்கள் போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீஸôர் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read more »

முந்திரியிலிருந்து மதிப்பு கூட்டிய பொருள்கள் தயாரிப்பு



சிதம்பரம்:
 
            நமது நாட்டில் முந்திரி அதிகளவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது முந்திரியிலிருந்து பல புதிய மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் முந்திரி பயிரிடும் வியாபாரிகளுக்கு கூடுதல் லாபத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
 
            கேரள மாநில முந்திரி வளர்ச்சி நிறுவனம், பல புதுமையான முந்திரி மதிப்பு கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு அதிகளவு வணிகம், கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் லாபத்தை ஈட்டி வருகிறது. |20 (20 கிராம்) முதல் |600 (1 கிலோ) வரையிலான மதிப்பு கூட்டப்பட்ட முந்திரிப் பொருள்கள் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய பங்களிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. 
 
 முந்திரி சூப் கலவை: 
 
                 முந்திரி தூள், காய வைக்கப்பட்ட காய்கறிகள், மிளகு, உப்பு, சர்க்கரை கொண்ட முந்திரி சூப் கலவை நுகர்வோரின் தேவைக்கேற்ப உடன்டியாக தயார் செய்து பயன்படுத்தலாம். சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள முந்திரி சூப் கலவை கேரள நுகர்வோர் சந்தையில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
 
முந்திரி விட்டா: 
 
             முந்திரி விட்டா சிறிய குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு சத்துள்ள பானமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பால், சர்க்கரை, தானிய மாவுடன் கலந்த கலவையுடன் முந்திரியும் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பாக்கெட்களில் விற்பனை செய்யப்படும் முந்திரி விட்டா, குளிர் பானங்களை போல் பருகும் வகையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
 
முந்திரி பவுடர்: 
 
            முந்திரியை நன்றாக உலர்த்தி அரைத்து பவுடராக்கி, மக்காச் சோள மாவுடன் கலந்து முந்திரி பவுடர் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. நல்ல சுவையாக உள்ள முந்திரி பவுடர் பாயசம், முந்திரி தேவைப்படும் சைவ மற்றும் அசைவ தயாரிப்புகள், ஐஸ்கிரீம் தயாரிப்புகளில் அதிகளவில் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. முந்திரி பவுடர் பயன்படுத்துவதால் சமையலில் முந்திரி அரைத்து பயன்படுத்தும் தேவை இல்லாமலும், குறைந்த நேரத்தில் சமையல் பணிகளை வீடுகளிலும், பெரிய விருந்துகளிலும் செய்யவும் முடிகிறது.
 
வாசனை முந்திரி துகள்கள்: 
 
            நன்றாக காய வைக்கப்பட்ட முந்திரி, உப்பு மற்றும் மிளகு கலந்து நேரடியாக உண்ணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணெய் பயன்படுத்தி தயாரிக்கப்படாத சுவையான பொழுது போக்கு உணவாக பயன்படுத்தப்படுகிறது.
 
இது குறித்து அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: 
 
               முந்திரியில் புதிய, மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு அதிக லாபம் ஈட்டப்படுகிறது. தொழில் முனைவோர் புதிய தொழில்நுட்பங்களைப் பெற்று பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக வங்கிகளுடன் இணைந்து முந்திரியில் புதிய மதிப்பு கூட்டிய பொருள்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம் என்றார்.

Read more »

நடராஜர் கோயிலில் ஆலய நுழைவுப் போராட்டம்: 2 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 1144 பேர் கைது

சிதம்பரம்:

                சிதம்பரம் நடராஜர் கோயிலில் நந்தன் நுழைந்த தெற்குவாயிலை திறக்கக் கோரி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டத்துக்கு தடையை மீறி பேரணியாக சென்ற 2 எம்எல்ஏக்கள், 135 பெண்கள் உள்ளிட்ட 1144 பேரை போலீஸôர் கைது செய்தனர்.

 முன்னதாக வடக்குமெயின்ரோட்டில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்து அவர் பேசியது: 

                நந்தன் சென்ற வழியில் செல்ல நூறு மடங்கு ஆசையுடன் வந்துள்ளோம். ஆனால் 5 ஆண்டுகளாக ஆளுகிறவர்கள் இதை தடுக்கலாமா? கோயிலில் கொள்ளையடிக்க சென்றால் சட்டவிரோதமாகும். கோயிலை பார்க்க, தரிசனம் செய்ய 2010-ம் ஆண்டில் செல்வதை உச்ச நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி தடுப்பது சரியல்ல. துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் நீதிமன்ற வழக்கு குறித்து ஆர்ப்பாட்டம் செய்தார். 

            அதற்கு அனுமதி உண்டு, கடனில் வாழும் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் செய்தால் ஏன் தடுக்கப்படுகிறது? நடராஜர் கோயிலில் தடை செய்யப்பட்ட சுவரை அரசு நீக்க வேண்டும். இது 4 ஆயிரம் ஆண்டு அவமான சின்னம், நந்தன் நுழைந்த தெற்குவாயிலை திறக்கும் வரை அடுக்கடுக்காக போராட்டங்களை நடத்துவோம். அதுபோன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் அரசு சார்பில் ஆகமவிதிப்படி பயிற்சி முடித்த அர்ச்சகர்களை இடஒதுக்கீடு அடிப்படையில் கோயில்களில் பூசாரிகளாக நியமிக்க வேண்டும் என தா.பாண்டியன் தெரிவித்தார்.

Read more »

டீக்கடைகளில் பயன்படுத்திய சமையல் எரிவாயு பறிமுதல்: ஒருவர் கைது

கடலூர்:

              கடலூரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட, வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டர்களை கைப்பற்றினர்.

              கடலூரில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ் சிலிண்டர்கள் முறைகேடாக டீக்கடைகள், ஹோட்டல்கள், தொழிலகங்கள் மற்றும் ஆட்டோக்கள், கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கூடுதல் பணம் கிடைப்பதால், கேஸ் விநியோகஸ்தர்கள் வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர்களை டீக்கடைகள் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்கு அளித்து விடுகிறார்கள். இதனால் வீட்டு உபயோகத்துக்கு சமையல் கேஸ் கிடைப்பதில் காலதாமதமும், தட்டுப்பாடும் ஏற்படுகிறது. கடலூர் புதுநகர் போலீசார் மஞ்சக்குப்பம் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். டீக்கடைகளில் பயன்படுத்தப்பட்ட 5 வீட்டு உபயோக சிலிண்டர்களைப் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக டீக்கடை உரிமையாளர் சஞ்சீவிநாதன் (60) கைது செய்யப்பட்டார்.

Read more »

பிரேமானந்தாவுக்கு சிகிச்சை: பரோல் ஒரு மாதம் நீடிப்பு

கடலூர்:
  
           மருத்துவச் சிகிச்சைக்காக பிரேமானந்தாவின் பரோல் மேலும் ஒருமாதம் நீடிக்கப்பட்டு உள்ளது.

          திருச்சி விராலிமலையில் ஆசிரமம் நடத்தியபோது கொலை, கற்பழிப்பு வழக்குகளில் சிக்கிய, பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  அவர் கடந்த 16 ஆண்டுகளாக கடலூர் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். சிறைத்தண்டனை காலத்திலும் பிரேமானந்தா அடிக்கடி பரோலில் ஆசிரமத்துக்குச் சென்று வருகிறார். அவரது சீடர்கள் பலரும் சிறைச்சாலைக்கு வந்து அவரை வணங்கிச் செல்கிறார்கள்.

           இந்த நிலையில் பிரேமானந்தாவுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கண்பார்வைக் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற விரும்பியதால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி பரோலில் செல்ல அனுமதி கோரினார். அவருக்கு ஒருமாதம் பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனவே கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செவ்வாய்க்கிழமை ஒருமாத பரோல் காலம் முடிவடைந்தது. அவருக்கு மேலும் மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதால், பரோலை மேலும் ஒரு மாதம்  நீடிக்க, சிறைத்துறை மூலமாக தமிழக அரசிடம் பிரேமானந்தா மனு அளித்து இருந்தார்.  தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை பெறும் வகையில் அவருக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீடிக்கப்பட்டு உள்ளது.

Read more »

சமூக தணிக்கை குழுக்களுக்கு ஆவணங்கள் வழங்காததால் 15ல் கிராம சபா கூட்டங்கள் நடப்பதில் சிக்கல்

கடலூர்: 

           தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட சமூக தணிக்கை குழுவிற்கு, திட்டங்கள் குறித்த ஆவணங்கள் வழங்கப்படாததால், வரும் 15ம் தேதி நடக்கும் கிராம சபா கூட்டம், பெயரளவிலேயே நடக்கும் நிலை உள்ளது. 

            கிராம மக்களுக்கு வேலை அளிக்கும் பொருட்டு மத்திய அரசு செயல்படுத்தும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் முறைகேடுகளை தவிர்க்க, மத்திய அரசு, 2008, டிசம்பர் 31ம் தேதி சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அதில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களை மக்களுக்கு தெரிவிக்கவும், செயல்படுத்தப்படும் திட்டங்களை சமூக தணிக்கை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த, 2009ம் ஆண்டு ஜூனில், தமிழக ஊரக வளர்ச்சித் துறை அறிவிப்பை வெளியிட்டது. அதன் அடிப்படையில் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து சமூக தணிக்கை செய்வதற்காக ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஒன்பது பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. 

              இக்குழுவினர் தொழிலாளர் பதிவுப் பட்டியல், வருகைப் பதிவேடு, ஊராட்சி மன்ற தீர்மானம், ஊராட்சியால் தேர்வு செய்த வேலைகளின் தொகுப்பு, பணி மேற்கொள்வதற்கான நிர்வாகம் மற்றும் தொழில் நுட்ப அனுமதி, ஊதியம் விடுவிப்பு ஆணை, இத்திட்டத்திற்கான வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் பணி முடிப்பு சான்றுகளை ஆய்வு செய்து கிராம சபா கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்து, அதன் மீது விவாதித்து நடைமுறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இதற்கான ஆவணங்களை கிராம சபா கூட்டம் நடப்பதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்னதாக சமூக தணிக்கைக் குழுவிற்கு வழங்க ஊரக வளர்ச்சித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி வரும் 15ம் தேதி தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டங்கள் நடக்க உள்ளன. 

                இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள், ஊராட்சிகளில் மேற்கொண்ட பணிகள், வேலை செய்த தொழிலாளர்களின் விவரம், அவர்களின் வருகைப் பதிவேடு, சம்பளம் வழங்கிய விவரம், பணியின் நிலை குறித்த விவரங்கள் சமூக தணிக்கை குழுவிற்கு இதுவரை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக வரும் 15ம் தேதி கிராம சபா கூட்டம் பெயரளவிலேயே நடக்கும் நிலை உள்ளது.

Read more »

ரூ. கடலூர் மாவட்டத்தில் 100.48 கோடி மதிப்பீட்டில் 3,818 சுனாமி வீடுகள் :அமைச்சர் தகவல்

கடலூர்,:

           மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் வழங்குவதில் தமிழகத்திலேயே கடலூர் மாவட்டம் முதலிடத்தில் திகழ்கிறது என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். 

                 கடலூர் அடுத்த குடிகாடு ஊராட்சி ராசாப்பேட்டை மீனவ கிராமத்தில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு 3.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 131 வீடுகள் திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். சுனாமி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜஸ்ரீ வரவேற்றார். கடலூர் சேர்மன் தங்கராசு முன்னிலை வகித்தார். துணை கலெக்டர் ராமசாமி (சுனாமி), மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன், ஊராட்சி தலைவர் ஆனந்தன், கல் விக்குழு உறுப்பினர் ஜெயபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் குடியிருப்புகளைத் திறந்து பயனாளிகளுக்கு சாவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: 

             இந்த கிராமத்தில் தடைபட் டுள்ள அனைத்து பணிகளையும் செய்து முடிக்க நடவடிக்கை எடுக் கப்படும். இந்த விழாவில் மட்டுமின்றி தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக உதவிகள் வழங்கி முதல் இடத்தை பெற் றுள்ளது. 2009-10ம் ஆண்டில் மாற் றுத்திறனாளிகள் 29 ஆயிரத்து 347 பேருக்கு தேசிய அடையாள அட் டையும், 10 ஆயிரத்து 502 பேருக்கு நல வாரிய அட்டை வழங்கப்பட் டுள்ளது.ராஜிவ் காந்தி புனரமைப்புத் திட்டத்தின் கீழ் 3,267 வீடுகளில்  கிராமப்புறத்தில் 1,589, நகர் புறத்தில் 1,678 வீடுகளும் கட்டப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 100.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,818 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார்.

                விழாவில் 103 பேருக்கு பட்டா, 36 மாற்றுத்திறனாளிகளுக்கு திருப் பூர் தனியார் கம்பெனியில் வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணை மற்றும் மூன்று சக்கர எலக்ட்ரிக்கல் மோட்டார் வாகனம் மற்றும் உபகரணங்கள், கர்ப் பிணி பெண்களுக்கு பேறு காலம்,  திருமணம், முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

Read more »

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பு

கடலூர்: 

            அரசின் கடும் எச்சரிக்கையையும் மீறி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் திறந்து, போராட்டத்தை முறியடித்தனர்.

            டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தது. அரசின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, 11ம் தேதி (நேற்று) ஒரு நாள் மட்டும் கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையும் முறியடிக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகத்தினர், "போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்' என ஊழியர்களிடம் கடந்த 9ம் தேதி எழுதி வாங்கியதோடு, கடைகளின் ஒரு சாவியை வாங்கிக் கொண்டனர். 

                   மேலும் 10 மற் றும் 11ம் தேதிகளில் "ஷிப்ட்' முறை கிடையாது. கடைகளுக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும். இரண்டு நாட்களிலும் வசூல் பணத்தை வங்கியில் செலுத்தக் கூடாது. கடைக்கு நேரடியாக வரும் மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

              போராட்டத்தன்று அனைத்து கடைகளையும் திறக்க வசதியாக 15 முதல் 20 கடைகளை கண்காணித்திட வருவாய்த் துறை, டாஸ்மாக் அலுவலக ஊழியர் மற்றும் ஒரு போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட் டது. இக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று அன் றைய வசூல் பணத்தை பெற் றுக் கொண்டு, சரக்கு இருப்பு விவரங்களை கணக்கெடுத்துக் கொண்டு கடைகளைப் பூட்டி சீல் வைத்தனர்.

                    இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய  தடை விதித்து ஐகோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டதால், டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் பாலானோர் நேற்று காலை பணிக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 231, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 284 டாஸ்மாக் கடைகளில் நேற்று காலை 10.30 மணிக்கு ஓரிரு கடைகள் மட்டுமே திறந்திருந்தன.ஆளும் கட்சியின் ஆதரவு சங்கமான தொ.மு.ச., உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சேர்ந்த விற்பனையாளர்களைக் கொண்டு கடைகளைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

               இதனால் பகல் ஒரு மணி அளவில் 70 சதவீத கடைகள்  திறந்திருந்தன. இந்தக் கடைகளில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிரச்னை செய்யாமல் இருக்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரப் பகுதிகளில் உள்ள கடைகள் பெரும்பாலும் திறந் திருந்த போதிலும், கிராமப் பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்ததால் குடிப்பிரியர்கள் பெருத்த ஏமாற்றத் திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து மாவட்ட மேலாளர்கள் கடலூர் தேவராஜூ, விழுப்புரம் சுந்தரேசன் கூறுகையில், 

              "மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பகல் ஒரு மணி அளவில் அனைத்து கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளது. விற்பனையில் பாதிப்பில்லை' என்றனர். 

உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு: 

                அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், பிற சங்கங்கள் நேற்று அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்திருந்ததோடு, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். அதனால் பணியாளர் சங்கத்தினர் கடையடைப் புப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

குடி பிரியர்கள் "உஷார்'"

                கடலூர் மாவட்டத்தில் உள்ள 231 டாஸ்மாக் கடைகளில் தினசரி சராசரியாக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  284 கடைகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகும். டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்ததால், உஷாரான குடி பிரியர்கள் முதல் நாளே தங்களுக்குத் தேவையான சரக்குகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட 10 லட்சம் ரூபாயும், விழுப்புரம் மாவட்டத்தில் 8 லட்சம் ரூபாயக்கும் கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

புதுச்சேரியில் விற்பனை படுஜோர் 

               தமிழகத்தில்"டாஸ்மாக்' ஊழியர்கள் நேற்று கடைகளை அடைத்து "ஸ்டிரைக்' நடத்தியதால் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த குடிப் பிரியர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்தனர். புதுச்சேரியில் உள்ள மதுக் கடைகளில் நேற்று வியாபாரம் களை கட்டியது. குறிப்பாக புதுச்சேரி- தமிழக எல்லையோரம் உள்ள மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுபானக் கடைகளில் மட்டுமல்லாமல், புதுச்சேரியின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள கள்ளு, சாராயக் கடைகளிலும் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சவுக்கு மரம் கொள்முதல் விலை சரிவு: உற்பத்தி பாதிக்கும் அபாயம்

கடலூர்: 

           கடலோர மாவட்டங்களில் பயிர் செய்யப்படும் சவுக்கு மரம் விலை சரிவால் உற்பத்தி பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

             தமிழகத்தில் மொத்தம் 45 ஆயிரத்து 699 எக்டேர் பரப்பில் சவுக்கு பயிர் செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் கடலோர பகுதிகளில் 10 ஆயிரத்து 820 எக்டேர் பரப்பில் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. மிக நீண்ட கடற்பரப்பு உள்ளதால் மற்ற மாவட்டங்களை விட இங்கு அதிகளவில் சவுக்கு பயிர் செய்யப்படுகிறது.  புஞ்சை நிலப் பகுதிகளில் கூலி ஆட்கள் கிடைக்காததால் ஏராளமான விவசாயிகள் சவுக்கு பயிர் செய்து லாபம் ஈட்டி வந்தனர்.நான்கு ஆண்டுகள் வளர்ந்த சவுக்கு மரங்கள் ஒரு டன் 1,800 ரூபாய் விலையும், கம்பம் டன் ஒன்று 2,800 ரூபாய், உருட்டுக் கட்டை 2,500 ரூபாயும் விலை போகிறது. 

               அதேபோல் ஜெயங் கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பல பகுதிகளில் தைல மரங்கள் பயிர் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக வறட்சியான நிலங்களில் தைல மரங்கள் பெருமளவு பயிர் செய்யப்படுகின்றன. இவ்விரு மரங்களும் கர்நாடகாவில் உள்ள அரியாறு, ஆந்திராவில் உள்ள "ஏபிஆர்' ஆகிய காகித ஆலைக்கு அனுப் பப்பட்டு வந்தன.மொத்தத்தில் நாளொன்றுக்கு 5,000 டன் மரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

                 இதனால் வெளி மாநில காகித ஆலை பிரதிநிதிகள் நல்ல விலை கொடுத்து மரங்களை கொள்முதல் செய்தனர். இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2008ம் ஆண்டு வெளி மாநிலத்திற்கு சவுக்கு மற்றும் தைல மரங்கள் அனுப்புவதற்கு தடை போட்டது.இதனால் மாநிலத்திற்குள் உள்ள டி.என்.பி.எல்., சேஷசாயி காகித ஆலைகள், விறகு,  தனியார் தொழிற் கூடங்கள் என மொத்தத்தில் 3,000 டன் மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது. இதன் விளைவாக நாளொன்றுக்கு 2,000 டன் தேக்கம் ஏற்பட்டது. 

                இதனால் சவுக்கு, தைல மரங்கள் விலை ஒரு டன்னுக்கு 100 ரூபாய் முதல் 200 வரை குறைந்தது.   இதனால் சவுக்கு பயிர் செய்த விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். சவுக்கு மரங்கள் பயிர் செய்வதற்கும் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் குறைந்தது. கடந்த 2007ம் ஆண்டு 10 லட்சம் டன் சவுக்கு கன்றுகள் விற்பனை செய்யப்பட்டது. 2008ல் 6 லட்சம் டன்னாக குறைந்தது. தற்போது நடவு சீசன் துவங்கி உள்ளது. பல லட்சம் சவுக்கு கன்றுகள் நர்சரியில் தயாராக இருந்தும், விவசாயிகளிடையே ஆர்வம் குறைவால் நாற்று வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் சவுக்கு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்படும்.

Read more »

கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி

சிதம்பரம்: 

             கொள்ளிடம் ஆற்றுப் பாலம் பராமரிப்பையொட்டி வெள்ளை அடிக்கும் பணி நடந்தது.

                     சிதம்பரம் - சீர்காழி சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 650 மீ., நீள பாலம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இப்பாலம் கடலூர் மாவட்டத்தையும் நாகை மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாகவும் உள்ளது. பாலம் கட்டி பல ஆண்டுகள் கடந்து விட்டால் பல இடங்களில் தடுப்பு கட்டைகள் பெயர்ந்தும், சாலை பகுதி பெயர்ந்தும் காணப்பட்டது. அதையொட்டி கடந்த ஒரு சில ஆண்டுகளாக பாலத்தில் அடிக்கடி பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது வெள்ளை அடிக்கும் பணி நடந்து வருகிறது. பாலத்திற்கு வெள்ளை அடித்துவிட்டால் மட்டும் போதாது, உறுதி தன்மையையும் சோதித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

Read more »

பொட்டவெளி ரேஷன் கடையில் ஒரு நாள் மட்டும் மண்ணெண்ணெய்

கடலூர்: 

        குள்ளஞ்சாவடி அடுத்த பொட்டவெளி ரேஷன் கடையில் ஒரு நாள் மட் டும் மண்ணெண்ணெய் வழங்குவதால் காலை 6 மணி முதல் பொது மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கும் அவலம் உள்ளது.

              குள்ளஞ்சாவடி அடுத்த சுப்ரமணியபுரம் கிளை பொட்டவெளி ரேஷன் கடைக்குட்பட்ட பகுதியில் நாகம்மாள்பேட்டை, எஸ்.என்.நகர், சுப்ரமணியபுரம், தொண்டமாநத்தம், அக்ராவரம், பள்ளித் தெரு, எஸ்.புதுர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,050 ரேஷன் கார்டுகள் உள்ளது. ரேஷன் கடையில் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே மண்ணெண் ணெய் போடப்படுகிறது. இதனால் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு காலை 6 மணி முதல் பொது மக்கள் ரேஷன் கடையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், 

            "பொட்டவெளி ரேஷன் கடையில் ஒரு நாள் மட்டுமே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. எந்த நாள் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது என பொது மக்களுக்கு யாரும் தகவல் தெரிவிப்பதில்லை. ரேஷன் கடைவழியாக வருவோரிடம்  கேட்டறிந்து மண்ணெண்ணெய் வாங்க வரவேண்டியுள்ளது. மேலும் அரிசியும் மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களில் வந்து வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டிற்கு அந்த மாதம் மண்ணணெண்ணெய், அரிசி வழங்கமாட்டார்கள்.  இதனாலேயே மண்ணெண்ணெய் வாங்குவதற்கு  பொது மக்கள் அதிகாலை 6 மணி முதலே வந்து வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து மண்ணெண்ணெய் வாங்க வேண்டியுள்ளது' என்றனர்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க கூடுதல் இடம்

விருத்தாசலம்: 

           விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு ஆணை பிறப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. 

இதுகுறித்து விருத்தாசலம் நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்க செயலாளர் பாபு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

            விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் உயர் கல்வி படிக்க கொளஞ்சியப்பர் அரசுக் கல்லூரியை நாடும் நிலை உள்ளது. அவ்வாறு மாணவர்கள் வரும்போது கல்லூரியில் போதுமான இடங்கள் பூர்த்தியாகி விட்டதாகவும், சேர்க்கை முடிந்து விட்டதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கிறது. வறுமையில் உள்ள ஏழை மாணவர்கள் இந்த அரசுக் கல்லூரியைத் தவிர வேறு எந்த தனியார் கல்லூரியிலும் பணம் கட்டி சேர முடியாத நிலையில் உள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் கூடுதலாக 10 சதவீதம் இடம் ஒதுக்கி மாணவர்களை சேர்க்கும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக் கழகப் பதிவாளருக்கும், கல்லூரி முதல்வருக்கும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பெரியகங்கணாங்குப்பம் - சுப உப்பலவாடி சாலையை சீரமைக்க கோரிக்கை

கடலூர்: 

          பெரிய கங்கணாங்குப்பம் -சுப உப்பலவாடி தார் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது.

        கடலூர் - புதுச்சேரி மெயின் ரோடில்  கங்கணாங்குப்பத்தில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது சுப உப்பலவாடி கிராமம். கடலோர பகுதியான இக் கிராமத்தில் உள்ள மீனவர்கள் தாம் பிடிக்கும் மீன்களை எளிதாக மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதற்காக வசதியாக கடந்த 1997ம் ஆண்டு நபார்டு திட்டத்தில் 44 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை போடப்பட்டது. இந்த சாலைப் பணி நடக்கும்போதே சிறப்பு ஆலோசனை அதிகாரியாக பதவி வகித்து வந்த அஷாக் வரதன் ஷெட்டி திடீரென ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து குறைகள் களையப்பட்டு தரமான சாலை போடப்பட்டது. 

                    இந்த சாலை வழியாக ஒரே ஒரு தடம் எண் 21 அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. எவ்வித சேதாரமுமின்றி 9 ஆண்டு காலமாக சிறந்த நிலையிலேயே இருந்தது. இருப்பினும் அந்த சாலையை  புதுப்பிக்க கிராம சாலைகள் திட்டத்தில் 27 லட்ச ரூபாய் மதிப்பில் சாலை போட முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலைபோடும் பணி நடந்தது.

             நல்ல நிலையில் உள்ள சாலையின் மீதே புதிய தார் சாலை போடுவதால்  மேலும் தரமாக இருக்கும் என கிராம மக்கள் கருதினர். ஆனால் நடந்தது வேறு. ஏற்கனவே தரமாக இருந்த சாலையை ஜேசிபி இயந்திரத்தின் உதவியால் 2 கி.மீ., தூரத்தை அடியோடு பெயர்த்து எடுத்தனர். இதற்கு கிராம மக்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முன்பு இருந்த சாலையை விட தரமான சாலையை போட்டுத் தருவதாக  ஒப்பந்ததாரர், அதிகாரிகள்  உறுதி கூறியதைத் தொடர்ந்து  கிராம மக்கள் சமாதானம் அடைந்தனர்.கிராம மக்கள் எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் மெல்லிய கணத் தில் தரமற்ற சாலை போடப் பட்டது.  

                கனரக வாகனங்களைவிட இலகு ரக வாகனங்கள்  அதிகம் செல்லும் இச்சாலை மிக குறுகிய காலத்திலேயே குண்டும் குழியுமானது. அதிக வளைவுகள் உள்ள சாலையாக இருப்பதால் ஆங்காங்கே ஜல்லி பெயர்ந்து கிராவல் தெரிய ஆரம்பித்தது. இரண்டு கி.மீ., தொலைவிற்கிடையே  உச்சிமேடு, சரஸ்வதி நகர் உள்ளிட்ட பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகியுள்ளன. இதனால் அதிகமாக டூ வீலர்கள், சைக்கிள்கள்  பயன்படுத்தும் கிராம மக்கள், மாணவ மாணவியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எதிர்வரும் மழைக் காலத்தில் மேலும் பல இடங்களில் பள்ளங்கள் உண்டாவது தவிர்க்க முடியாது. எனவே குண்டும் குழியுமான இச்சாலையை சீரமைக்க   அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பண்ருட்டி - கடலூர் சாலையில் வளைந்த மரம் வாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி: 

           பண்ருட்டி - கடலூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மரம் வளைவாக  உள்ளதால் வாகன ஒட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். 

             பண்ருட்டி -  கடலூர் சாலை திருவதிகை மெயின்ரோட்டில்  வாலாஜா வாய்க்கால் பாலத் திற்கு அருகில் ரோட்டின் குறுக்கே வளைவாக உள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில்  எதிரெதிர் வாகனங்கள் ரோட்டின் குறுக்கே வளர்ந் துள்ள மரத்தால் விபத்து ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.  அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால்  நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற வருவாய்துறைக்கு அனுமதி கோரினர். 

                      ஆனால் ஆர்.டி.ஓ., அனுமதி கிடைக்காமல் அப்படியே கிடப்பில் உள்ளது.வாகன ஒட்டிகளுக்கு இடையூறாக உள்ள மரத்தினை அகற்ற அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read more »

திருவதிகை அணைக்கட்டில் மணல் மேடுகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

பண்ருட்டி: 

             பண்ருட்டி திருவதிகை அணைக்கட்டில் மணல் மேடுகளை மழைகாலம் துவங்கும் முன் அகற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

              பண்ருட்டி திருவதிகையில் கெடிலம் நதிக்கரையின் அணைக்கட்டு கடந்த 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தின் போது கட்டப்பட்டது. அணைக்கு தென் பெண்ணையாற்றில் இருந்து பிரிந்து வரும் மலட்டாறு கட்டமுத்துப்பாளையம், ராசாப்பாளையம் வழியாக திருவதிகை அணைக்கட்டில் சேரும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. இந்த அணைக்கட்டு மூலம் வானமாதேவி உள்ளிட்ட 30 கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு முறை வைத்து பாசனம் விடும் வகையில் அணை கட்டப் பட்டது. அணையின் மொத்தம் அளவு ஆற்றின் தரைத் தளத்தில் இருந்து ஆறு அடி அளவில் மட்டுமே இருந்தாலும் மழைக் காலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் 4 மாதம் அளவில் இருந்ததால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருந்து வந்தது. மேலும் அணைக்கட்டு மூலம் பாசனம் பெறும் விவசாயிகளும் பெரிதும் பயன்பெற்று வந்தனர்.

                  கடந்த 20 ஆண்டுகளாக அணைக்கட்டை பொதுப் பணித் துறை பாசனப் பிரிவு அதிகாரிகள் முற்றிலும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் அணைக் கட்டின் மொத்த உயரம் 6 அடியும் மணல் மேடுகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் ஒவ்வொரு ஆண்டு மழையின் போதும் நீர் தேங்கி நிற்காலம் ஒருவாரத்திற்குள் முற்றிலும் வடிந்து வீணாகக் கடலில் சேர்ந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழைகாலம் துவங்கும் முன் அணைக் கட்டில் நீரை தேக்கி வைக்கும் அளவிற்கு மணல் மேடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பண்ருட்டி தாலுகாவில் பட்டா, உதவித் தொகை வழங்காத தாசில்தாருக்கு "செமடோஸ்'

பண்ருட்டி: 

           பண்ருட்டி தாலுகாவில் முன்னுரிமைப்படி பட்டா, உதவித் தொகை வழங்காத தாசில்தார், நில அளவை அலுவலர்களை வருவாய்த் துறை செயலாளர் தனவேல் கடுமையாக சாடினார்.தமிழக வருவாய்த் துறை செயலாளர் தனவேல் நேற்று பண்ருட்டி தாலுகா அலுவலக துயர் துடைப்பு பிரிவில் பதிவேடுகளை ஆய்வு செய்தார். 

            அதில்  முன்னுரிமைப்படி விண்ணப்பித் தவர்களுக்கு உதவித் தொகை வழங்காதது குறித்து  தாசில்தார் மங்களத்திடம் கேள்வி எழுப்பினார். இதற்கு சரியான பதிலளிக்காததால் எரிச்சலடைந்த  தனவேல்,  மங்களம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அதேப்போல் பட்டா மாறுதல், பட்டா கோருதல் விண்ணப்பப் பதிவேடுகளில் கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கடந்த மாதம் கொடுத்த மனுக்கள் மீது மட்டும் பட்டா வழங்கியது எப்படி என  தலைமை நில அளவை அலுவலர் பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்டார். அதற்கு அவர் பதில் கூறாமல் பதிவேடுகளை காண்பிப்பதில் காலதாமதம் செய்தார்.இதனால் கடுப்பான தனவேல் "உங்களைப் பார்த்து பட்டா கேட்பவர்களுக்கு மட்டும் பட்டா வழங்குவீர்கள். மற்ற மனுக்கள் நிலுவையில் உள்ளதா? விசாரணையில் உள்ளதா? சான்று குறை உள்ளதா என பதிய மாட்டீர்கள். சம்பளம் வாங்குகிறீர்கள் அல்லவா? என சரமாரியாக "டோஸ்' விட்டார்.  

                   "வரும் செப் டம்பர் 15ம் தேதிக்குள்  ஆர்.டி.ஓ., நில அளவை உதவி இயக்குனர்  முழு அளவில் ஆய்வு செய்து 17ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.

Read more »

விருத்தாசலத்தில் "பைக்கா" விளையாட்டு போட்டி துவக்க விழா

விருத்தாசலம்: 

               விருத்தாசலம் அரசு ஆண்கள் பள்ளியில் ஒன் றிய அளவிலான "பைக்கா' விளையாட்டுப் போட்டி துவக்க விழா நடந்தது.

               விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒன்றிய அளவிலான "பைக்கா' விளையாட்டுப் போட்டி துவக்க விழா நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., கலியபெருமாள், உதவி தலைமை ஆசிரியர் வீரராகவன், குமுதம் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜசோழன் வரவேற்றார்.கல்விக்குழு உறுப்பினர் ராமு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். 927 மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். நேற்று கபடி, வாலிபால், கால் பந்து, கோகோ ஆகிய விளையாட்டுகள் நடந்தது. இன்று 12ம் தேதி தடகள விளையாட்டுப் போட்டிகளும் பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.

Read more »

Water released from Keelanai to irrigate tail-end Delta areas


Health Minister M.R.K. Panneerselvam releasing water from the Keelanai on Wednesday. 
 
CUDDALORE: 

         Water was released from the Keelanai on Wednesday for irrigating tail-end areas of the Delta region.

           Health Minister M.R.K. Panneerselvam, who opened the dam shutters, said the water release would benefit over 1.25 lakh acres in Cuddalore and Nagapattinam districts. Depending upon the requirements of farmers, the quantum of release would be suitably adjusted in course of time. He called upon farmers to judiciously use the water.

            Mr. Panneerselvam said that the government had sanctioned Rs.108 crore for strengthening the left bank of the Coleroon. The government was always taking pro-active measures to fulfil the requirements of people. District Collector P. Seetharaman, D. Ravikumar, MLA, and officials accompanied the Minister. Vice-president of the Cauvery Delta Farmers' Welfare Association K.V. Kannan has stated that the discharge of 4,000 cusecs from the Mettur dam was inadequate even to raise paddy seedlings. He urged the Chief Minister to step up the quantum of release from the Stanley reservoir to 10,000 cusecs.

Read more »

Pandian flags off ‘temple entry' rally

CUDDALORE: 

          State secretary of the Communist Party of India D. Pandian on Wednesday flagged off a ‘temple entry' rally, organised under the aegis of the Tamil Nadu Vivasayigal Sangam, at Chidambaram.

          Mr. Pandian said that the south entrance of the Nataraja temple, through which Nandanar gained entry, remained closed for several years. The State government had not taken any measure to rectify this even after taking over the temple. Mr. Pandian pointed out that the government's announcement that caste would not be a bar in becoming archakas remained on paper. He called upon the government to make it a reality.

             After he left, CPI activists, including Reddiyarpalayam constituency (Puducherry) MLA Viswanathan and Thiruthuraipoondi MLA Ulaganathan, took out a procession through the West Street and South Street. The police blocked their way at the bus stop on the South Street and took 1,144 activists, including 135 women, into custody. There was heavy police presence at all the entry points to the temple. Superintendent of Police Ashwin Kotnis was camping in the temple town. In the evening all those arrested were released.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior