உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 16, 2009

என்​எல்சி ஒப்​பந்​தத் தொழி​லா​ளர்​கள் நிரந்தரம் மத்​திய அமைச்​ச​ரி​டம் எம்.பி. மனு

நெய்வேலி,​​ டிச.​ ​ 15:​

                     என்​எல்​சி​யில் 20 ஆண்​டுக்​கும் மேலாக பணி​பு​ரிந்​து​வ​ரும் ஒப்​பந்​தத் தொழி​லா​ளர்​களை பணி​நி​ரந்​த​ரம் செய்ய வலி​யு​றுத்தி கட​லூர் எம்.பி.​ கே.எஸ்.அழ​கிரி மத்​திய அமைச்​சர் ஜெயப்​பி​ர​காஷ் ஜெய்ஸ்​வாலை சந்​தித்து மனு அளித்​துள்​ளார்.​ க​ட​லூர் மாவட்ட ஐஎன்​டி​யுசி தலை​வர் ஆர்.நல்​லு​சாமி,​​ மாவட்ட காங்​கி​ரஸ் செய​லர் சுகு​மார்,​​ பொறி​யா​ளர் தெய்​வ​நீதி,​​ என்​எல்சி ஒபிசி சங்​கத் தலை​வர் வி.என்.புரு​ஷோத்​த​மன்,​​ என்​எல்சி ஒப்​பந்​தத் தொழி​லா​ளர் மற்​றும் இன்கோ-​சர்வ் சங்க தலை​வர் கே.பர​ம​சி​வம் உள்​ளிட்​டோர் கட​லூர் எம்பி கே.எஸ்.அழ​கிரி தலை​மை​யில் கடந்த 9-ம் தேதி மத்​திய நிலக்​க​ரித்​துறை அமைச்​சர் ஜெயப்​பி​ர​காஷ் ஜெய்ஸ்​வாலை சந்​தித்து மனு அளித்​த​னர்.​ மனு விவ​ரம்:​

                                என்​எல்சி நிறு​வ​னத்​தில் 20 ஆண்​டுக்கு மேலாக பணி​பு​ரிந்த சுமார் 200 பேரை பணி​நி​ரந்​த​ரம் செய்​ய​வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​த​ர​விட்​டுள்​ளது.​ இதை எதிர்த்து நிர்​வா​கம் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​மு​றை​யீடு செய்​துள்​ள​தால்,​​ அவர்​கள் பணி​நி​ரந்​த​ரம் செய்​யப்​ப​டா​மல் தொடர்ந்து ஒப்​பந்​தத் தொழி​லா​ளர்​க​ளா​கவே பணி​பு​ரிந்து வரு​கின்​ற​னர்.​ நிர்​வா​கம் தொடுத்​துள்ள மேல்​மு​றை​யீட்டு மனுவை சம​ரச முயற்சி மேற்​கொண்டு,​​ வாபஸ் பெறச்​செய்து அவர்​களை நிரந்​த​ரம் செய்ய வேண்​டும்.​ மே​லும் நிறு​வ​னத்​தின் சார்​பில் இயங்​கி​வந்த கரி​கட்டி மற்​றும் உர ஆலை​கள் மூடப்​பட்​ட​தைத் தொடர்ந்து அங்கு பணி​யாற்​றிய ஒப்​பந்​தத் தொழி​லா​ளர்​க​ளுக்கு,​​ நிறு​வ​னத்​தின் விரி​வாக்​கப் பணி​க​ளில் வேலை​வாய்ப்பு வழங்க வேண்​டும்.​ 16-06-08 அன்று மத்​திய அமைச்​சர் முன்​னி​லை​யில் ஏற்​ப​டுத்​தப்​பட்ட ஒப்​பந்​தத்​தின்​படி 5 ஆயி​ரம் ஒப்​பந்​தத் தொழி​லா​ளர்​களை சொசைட்​டி​யில் இணைக்க வேண்​டும்.​ நெய்வேலி ஜவ​கர் அறி​வி​யல் கல்​லூ​ரி​யில் பயி​லும் இதர பிற்​ப​டுத்​தப்​பட்ட வகுப்​பைச் சேர்ந்த மாண​வர்​க​ளுக்கு கட்​ட​ணச் சலுகை வழங்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கை​கள் அடங்​கிய மனுவை அளித்​த​னர்.​ இ​தைப் பரிசீ​லித்த அமைச்​சர் ஜெயப்பிரகாஷ் ஜெய்ஸ்​வால்,​​ இது​கு​றித்து நிறு​வ​னத் தலை​வ​ரி​டம் பேசு​வ​தா​க​வும்,​​ ஜன​வரி மாதம் நெய்வேலி வரும்​போது,​​ இப்​பி​ரச்​னைக்கு தீர்வு காணப்​ப​டும் என உறு​தி​ய​ளித்​தி​ருப்​ப​தாக மாவட்ட ஐஎன்​டி​யுசி தலை​வர் ஆர்.நல்​லு​சாமி தெரி​வித்​தார்.

Read more »

மழைக்கு ஒதுங்க முடியாத பஸ் நிலையம்

பண்ருட்டி,​ டிச. 15: ​

                    மழைக்​குக் கூட பய​ணி​கள் ஒதுங்கி நிற்க இட​மில்​லாத அவல நிலை​யில் பண்​ருட்டி பஸ் நிலை​யம் உள்​ளது.​ இதன் ஆக்​கி​ர​மிப்​பு​களை அகற்ற பல முறை வலி​யு​றுத்​தி​யும் நகர நிர்​வா​கம் செவி சாய்க்​க​வில்லை என பய​ணி​கள் வேத​னை​யு​டன் தெரி​வித்​த​னர்.​ க ​ட​லூர் மாவட்​டத்​தில் பண்​ருட்​டி​யில் முந்​திரி ஏற்​று​மதி நிறு​வ​னங்​கள்,​​ மளி​கைப் ​ பொருள்​கள் மொத்த வியா​பார கடை​கள் உள்​ளிட்ட முக்​கிய கடை​கள் இயங்கி வரு​கின்​றன.​÷இ​த​னால் நாள் ஒன்​றுக்கு சுமார் ஆயி​ரக்​க​ணக்​கான மக்​கள் வெளி ஊர்​க​ளில் இருந்து ​ வியா​பார விஷ​ய​மாக பண்​ருட்​டிக்கு வந்து செல்​கின்​ற​னர்.​

                       மே​லும் இதனை சுற்​றி​யுள்ள நூற்​றுக்​க​ணக்​கான கிரா​மத்​தைச் சேர்ந்த மக்​கள் தங்​கள் அடிப்​படை தேவை​களை பூர்த்தி செய்​துக் கொள்ள பண்​ருட்​டிக்​கு​தான் வர வேண்​டும்.​  மே​லும் சென்னை,​​ சிதம்​ப​ரம்,​​ கும்​ப​கோ​ணம்,​​ தஞ்​சா​வூர்,​​ பேரா​வூ​ரணி,​பட்​டுக்​கோட்டை,​​ கட​லூர்,​​ புதுச்​சே​ரி​யில் இருந்து திருப்​பதி,​​ வேலூர்,​​ பெங்​க​ளூர்,​​ எர்​ணாக்​கு​ளம்,​​ கண்​ண​னூர்,​​ மேட்​டூர்,​​ சேலம்,​​ கள்​ளக்​கு​றிச்சி உள்​ளிட்ட பகு​தி​க​ளுக்கு செல்​லும் பஸ்​கள் பண்​ருட்டி வழி​யா​கத்​தான் செல்ல வேண்​டும்.​÷இ​த​னால் பண்​ருட்டி பஸ் நிலை​யம் எப்​போது பர​ப​ரப்​பா​க​வும்,​​ பய​ணி​க​ளின் கூட்​டம் அதி​க​மா​க​வும் காணப்​ப​டும்.​÷இத் ​த​கைய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த பஸ் நிலை​யத்​தில் பய​ணி​கள் வச​திக்​காக அமைக்​கப்​பட்ட நிழற்​குடை இடத்தை தரைக் கடைக்​கா​ரர்​கள் ஆக்​கி​ர​மித்து பழக்​க​டை​கள் வைத்​துள்​ள​னர்.​

                  இ​த​னால் பய​ணி​கள் நிற்​கவோ,​​ அம​ரவோ இட​மின்றி கஷ்​டப்​பட்டு வரு​கின்​ற​னர்.​ மேலும் இக்​க​டை​க​ளால் வீசப்​ப​டும் பழக் கழி​வு​களை சாப்​பி​டு​வ​தற்​காக சுமார் 25-க்கும் ​ மேற்​பட்ட மாடு​கள் பஸ் நிலை​யத்தை சுற்றி திரிந்து வரு​கின்​றன.​
                   இ​த​னால் பஸ்​கள் குறிப்​பிட்ட இடத்​தில் நிறுத்த முடி​யாத சூழ​லும்,​​ பய​ணி​க​ளுக்கு பாது​காப்​பற்ற நிலை​யும் ஏற்​பட்​டுள்​ளது.​÷இது குறித்து பல முறை செய்​தி​கள் வெளி​யிட்​டும்,​​ நகர மன்​றக் கூட்​டத்​தில் கவுன்​சி​லர்​கள் கூறி​யும்,​​ காவல் நிலை​யத்​தில் நடை​பெற்ற போக்​கு​வ​ரத்து சீர​மைப்பு கூட்​டத்​தில் பேசி​யும் பலன் இல்லை.​

         மே​லும் நிழற்​கு​டை​யின் மத்​தி​யில் மழை நீர் செல்ல அமைக்​கப்​பட்ட தக​ரம் துருப்​பி​டித்து ஓட்​டை​கள் ஏற்​பட்​டுள்​ள​தால் மழை நீர் ஒழு​கு​கி​றது.​ இ​த​னால் மழைக் காலத்​தில் ஒழு​கும் நிழற்​கு​டை​யின் கீழ் உள்ள ஆக்​கி​ர​மிப்பு கடை​க​ளுக்​கும்,​​ சுற்​றித்​தி​ரி​யும் கால்​ந​டை​க​ளுக்கு மத்​தி​யில் ​ பய​ணி​கள் பாது​காப்​பின்றி நிற்​கும் சூழல் ஏற்​பட்​டுள்​ளது.​   எ​னவே பய​ணி​க​ளின் பாது​காப்​பான பய​ணத்​துக்கு நகர மற்​றும் மாவட்ட நிர்​வா​கம் உரிய நட​வ​டிக்கை எடுக்க முன்​வர வேண்​டும் என்​பதே பய​ணி​க​ளின் கோரிக்கை.

Read more »

21-ல் சட்​டப்​பே​ரவை மதிப்​பீட்​டுக் குழு கட​லூர் வருகை

கடலூர்,​​ ​ டிச.15: ​ ​

                  சட்​டப்​பே​ரவை மதிப்​பீட்​டுக் குழு இம்​மா​தம் 21-ம் தேதி கட​லூர் வரும் என்று மாவட்ட ஆட்​சி​யர் ப.சீதா​ரா​மன் செவ்​வாய்க்​கி​ழமை அறி​வித்​தார்.​

   இது குறித்து ஆட்​சி​யர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​

                       குத்​தா​லம் க.அன்​ப​ழ​கன் தலை​மை​யி​லான ​ தமிழ்​நாடு ​ சட்​டப்​பே​ரவை மதிப்​பீட்​டுக் குழு ​ 21-ம் தேதி கட​லூர் மாவட்​டத்​துக்கு வருகை தந்து,​​ ஆய்​வு​களை மேற்​கொள்ள இருக்​கி​றது.​ இதிóல் நிதி அமைச்​சர் க.அன்​ப​ழ​கன்,​​ பொதுக் கணக்​குக் குழுத் தலை​வர் க.சிவ​ராஜ்,​​ பொது நிறு​வ​னங்​கள் குழுத் தலை​வர் டி.யசோதா உள்​ளிட்​டோர் உறுப்​பி​னர்​க​ளக உள்​ள​னர்.​

                      இக்​குழு கட​லூர்,​​ பண்​ருட்டி,​​ நெல்​லிக்​குப்​பம் பகு​தி​க​ளில் உணவு மற்​றும் நுகர்​வோர் பாது​காப்பு,​​ ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள்,​​ ​ அரசு மருத்​து​வ​ம​னை​கள்,​​ ​ மருந்​த​கங்​கள்,​​ தொடக்​கப் பள்​ளி​கள்,​​ நடு​நி​லைப் பள்​ளி​கள்,​​ உயர்​நி​லைப் பள்​ளி​கள்,​​ மேல்​நி​லைப் பள்​ளி​கள்,​​ மாவட்ட நிர்​வா​கம்,​​ வரு​வாய்த்​துறை,​​ வளர்ச்​சிப் பணி​கள் ஆகிய பணி​கள் குறித்து ஆய்வு மேற்​கொள்​ளும்.​  அன்று மாலை கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் உள்ள கூட்ட அரங்​கில் மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் மாவட்ட அள​வி​லான அலு​வ​லர்​கள் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெ​றும்.

Read more »

இன்று அப​ரா​த​மின்றி மின் கட்​ட​ணம் செலுத்தலாம்

சிதம்ப​ரம்,​​ டிச.15: ​ ​

                   சிதம்​ப​ரம் மின்​கோட்​டத்​தைச் சார்ந்த மின்​நு​கர்​வோர்​கள் அக்​டோ​பர்,​​ நவம்​பர் 2009 மாத மின்​கட்​ட​ணத்தை அப​ரா​த​மின்றி புதன்​கி​ழமை ​(டிசம்​பர் 16) செலுத்​த​லாம்.​  ஆ​கவே மின் நுகர்​வோர்​கள் தங்​க​ளது மின்​கட்​ட​ணத்தை புதன்​கி​ழமை அப​ரா​த​மின்றி செலுத்தி பய​ன​டை​யு​மாறு சிதம்​ப​ரம் கிளை மின்​வா​ரிய செயற்​பொ​றி​யா​ளர் இரா.செல்​வ​சே​கர் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் பள்​ளி​க​ளுக்கு விடு​முறை

கடலூர்,​​ ​ டிச.15: ​

            கன மழை கார​ணாக ​ கட​லூர் மாவட்​டத்​தில் புதன்​கி​ழமை ​(டிசம்​பர் 16) அனைத்து பள்​ளி​க​ளுக்​கும் விடு​முறை அறி​விக்​கப்​பட்டு உள்​ளது.​  இ​தற்​கான அறி​விப்பை மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் செவ்​வாய்க்​கி​ழமை வெளி​யிட்​டார்.​       இன்று நடை​பெற வேண்​டிய அரை​யாண்​டுத் தேர்​வு​கள் தள்ளி வைக்​கப்​ப​டு​வ​தா​க​வும்,​​ தேர்​வு​கள் நடை​பெ​றும் தேதி பின்​னர் அறி​விக்​கப்​ப​டும் என்​றும் ஆட்​சி​யர் தெரி​வித்​தார்.

Read more »

மனித உரி​மை​கள் கழகக் கூட்டம்

சிதம்​ப​ரம்,​ டிச.15: ​

                   மனித உரி​மை​கள் கழ​கத்​தின் பரங்​கிப்​பேட்டை வட்​டக்​கிளை சார்​பில் மனித உரிமை விழிப்​பு​ணர்வு பேரணி மற்​றும் கூட்​டம் திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​ பெ​ரி​யப்​பட்டு-​சிலம்​பி​மங்​க​லம் வரை நடை​பெற்ற பேர​ணியை முன்​ன​தாக புதுச்​சத்​தி​ரம் காவல் நிலைய ஆய்​வா​ளர் ராமச்​சந்​தி​ரன் கொடி​ய​சைத்து தொடங்கி வைத்​தார்.​ மா​வட்ட புர​வ​லர் சச்​சி​தா​னந்​தம்,​​ பெரி​யப்​பட்டு கிரா​மத் தலை​வர் ஜெய​சங்​கர் ஆகி​யோர் முன்​னிலை வகித்​த​னர்.​   
                      
               கட​லூர் மாவட்ட அமைப்​பா​ளர் ராஜேந்​தி​ரன் விழிப்​பு​ணர்​வுப் பேர​ணியை வழி நடத்​தி​னார்.​ பி​ன​னர் புதுச்​சத்​தி​ரத்​தில் நடை​பெற்ற விழிப்​பு​ணர்வு கூட்​டத்​துக்கு,​​ எம்.ராஜேந்​தி​ரன் தலைமை வகித்​தார்.​ ஒருங்​கி​ணைப்​பா​ளர் க.வடி​வேல் வர​வேற்​றார்.​   மாநில ஒருங்​கி​ணைப்​பா​ளர் பவானி ஜெய​பா​லன்,​​ மூத்த அமைப்​பா​ளர் ஜெய​ரா​மன்,​​ எஸ்.எம்.கே.ரவி,​​ வழக்​க​றி​ஞர் சுதா​கர் உள்​ளிட்​டோர் பங்​கேற்று பேசி​னர்.

Read more »

விருத்​தா​ச​லத்​தில் சினிமா பட பூஜை

 விருத்தா​ச​லம்,​​ டிச.​ 15:​ ​

              விருத்​தா​ச​லம் கொளஞ்​சி​யப்​பர் கோயி​லில்,​​ "அவர்​க​ளும் இவர்​க​ளும்' படத்​துக்​கான தொடக்க விழா பூஜை திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​
           
                 லக்​சிகா பிலிம்ஸ் சார்​பில் "அவர்​க​ளும் இவர்​க​ளும்' திரைப்​ப​டத்​துக்​கான தொடக்க விழா பூஜை விருத்​தா​ச​லம் கொளஞ்​சி​யப்​பர் கோயி​லில் நடந்​தது.​

                   தொ​டக்க விழா​வில் தயா​ரிப்​பா​ளர் விருத்​தா​ச​லம் காம​ராஜ்,​​ இயக்​கு​நர் வீர​பாண்​டி​யன்,​​ ஒளி​ப​தி​வா​ளர் செங்​குட்​டு​வன்,​​ மூர்த்தி,​​ தயா​ரிப்பு நிர்​வாகி சிவ​கு​மார்,​​ கதா​நா​ய​கர்​கள் அழகி சதிஷ்,​​ விமல் நட்ராஜ்,​​ கதா​நா​ய​கி​கள் சுப்​பு​ராஜி,​​ ஐஸ்​வர்யா ஆகி​யோர் கலந்து கொண்​ட​னர்.​ வி​ருத்​தா​ச​லம்,​​ முதனை உட்​பட்ட பகு​தி​க​ளில் படப்​பி​டிப்பு நடந்து வரு​கி​றது.

Read more »

குருப் பெயர்ச்சி யாகம்

சிதம்ப​ரம்,​ டிச.15:​ 

                சிதம்​ப​ரம் தில்லை கோவிந்​த​ராஜா திரு​மண மண்​ட​பத்​தில் குரு​ப் பெ​யர்ச்​சியை முன்​னிட்டு உலக  நன்​மைக்காக  செவ்​வாய்க்​கி​ழமை சிறப்பு யாகம் தொடங்​கி​யது.​ பி​ர​பல ஜோதி​டர் எஸ்.மோக​னால் ஏற்​பாடு செய்​யப்​பட்ட இந்த யாக​பூஜை செவ்​வாய்க்​கி​ழமை காலை கண​பதி ஹோமத்​து​டன் தொடங்​கி​யது.​ பின் ​னர் யானையை வைத்து கஜ​பூஜை நடை​பெற்​றது.​ குருப் ​பெ​யர்ச்​சியை முன்​னிட்டு மாலை சிறப்பு யாகம் தொடங்கி நடை​பெற்​றது.​ ஹோமம் மற்​றும் யாக பூஜை​களை வெங்​க​டேச தீட்​சி​தர் தலை​மை​யில் நட​ரா​ஜர் ஆலய பொது​தீட்​சி​தர்​கள் செய்​தி​ருந்​த​னர்.

Read more »

விவ​சா​யத் தொழி​லா​ளர்​கள் ஆர்ப்​பாட்​டம்

கடலூர்,​​ ​ டிச.15: ​ 

                    அகில இந்​திய ​ விவ​சா​யத் தொழி​லா​ளர்​கள் சங்​கத்​தி​னர் கட​லூ​ரில் செவ்​வாய்க்​கி​ழமை ஆர்ப்​பாட்​டம் நடத்​தி​னர்.​ க​ட​லூர் மாவட்ட ஆதி​தி​ரா​வி​டர் மற்​றும் பழங்​கு​டி​யி​னர் நலத்​துறை சார்​பிóல் நிலம் கைய​கப்​ப​டுத்தி,​​ வீட்டு மனைப் பட்டா வழங்​கும் பணி 10 ஆண்​டு​க​ளாக வேக​மாக நடை​பெ​ற​வில்லை என்​றும்,​​ இத​னால் வீட்​டு​ம​னைப் பட்டா கோரி 25 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்​டோர் அளித்த மனுக்​கள் மீது எந்த நட​வ​டிக்​கை​யும் எடுக்​கப்​ப​ட​வில்லை என்று,​​ விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்​கம் குற்​றம் சாட்டி உள்​ளது.​  எ​னவே இத்​துறை வீட்​டு​ம​னைப் பட்டா வழங்​கும் பணியை விரைவு படுத்த வேண்​டும் என்று கோரி,​​ செவ்​வாய்க்​கி​ழமை முதல் கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் தொடர்ந்து காத்​துக் கிடக்​கும் போராட்​டம் அறி​விக்​கப்​பட்டு இருந்​தது.​ ​இந் நிலை​யில் திங்​கள்​கி​ழமை விவ​சா​யத் தொழி​லா​ளர்​கள் சங்க நிர்​வா​கி​களை மாவட்ட ஆதி​தி​ரா​வி​டர் மற்​றும் பழங்​கு​டி​யி​னர் நலத்​துறை அலு​வ​லர் மாவட்ட பிற்​ப​டுத்​தப் பட்​டோர் நலத்​துறை அலு​வ​லர் ஆகி​யோர் அழைத்​துப் பேசி​னர்.​ விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்க மாவட்​டத் தலை​வர் எஸ்.துரை​ராஜ்,​​ செய​லர் ரவீந்​தி​ரன்,​​ பொரு​ளா​ளர் சிவ​லிங்​கம் உள்​ளிட்​டோர் இதில் கலந்து கொண்​ட​னர்.​    

                            வி​வ​சா​யத் தொழி​லா​ளர் சங்​கம் சார்​பில் 10 ஆண்​டு​க​ளு​க​கும் மேலாக வலி​யு​றுத்​தப்​பட்டு வந்த குடி​ம​னைப் பட்டா கோரிக்​கை​கள் மீது குடி​யி​ருப்பு வாரி​யாக ஆய்வு செய்து,​​ ஒரு மாதத்​தில் தீர்வு காணப்​ப​டும் என்று கூட்​டத்​தில் உறுதி அளிக்​கப்​பட்​டது.​ எனவே செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற இருந்த காத்​துக் கிடக்​கும் போராட்​டம் ஒத்தி வைக்​கப்​பட்டு ஆர்ப்​பாட்​ட​மாக அறி​விக்​கப்​பட்​டது.​மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​ல​கம் முன் நடந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு,​​ விவ​சா​யத் தொழி​லா​ளர் சங்க மாவட்​டச் செய​லர் த.ரவீந்​தி​ரன் தலைமை வகித்​தார்.​    ஒன்​றி​யச் செய​லர்​கள் தண்​ட​பாணி,​​ சிவ​லிங்​கம்,​​ ஸ்ரீத​ரன்,​​ ஜெய​மணி உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர்.​ மாநி​லத் தலை​வர் முன்​னாள் எம்​எல்ஏ வீரை​யன்,​​ மாநி​லப் பொரு​ளா​ளர் சி.மணி,​​ மாவட்​டத் தலை​வர் துரை​ராஜ் உள்​ளிட்​டோர் பேசி​னர்.​

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior