உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 15, 2011

சிதம்பரம் அருகே பெண் கற்பழித்து புதைப்பு: 2 பேர் கைது, 3 பேரை பிடிக்க தனிப்படை



சிதம்பரம் அருகே கற்பழித்து கொன்று புதைக்கப்பட்ட  பெண் பிணம் தோண்டி எடுப்பு: தலைமறைவான 3 பேரை பிடிக்க போலீசார் தீவிரம்

நெய்வேலி:
            நெய்வேலியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் இவரது மகள் கவிதா (வயது 22) இவர் நெய்வேலி மெயின் பஜாரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார்.
 
            கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்து சேரவில்லை.  இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கவிதாவின் செல்போன் கடலூர் மாவட்டம் நரியங்குப்பத்தை சேர்ந்த கிருஷ்ணராஜியிடம் (22) இருப்பது தெரியவந்தது.
 
                  செல்போனில் அவர் வேறு ஒரு சிம்கார்ட்டை போட்டு பயன்படுத்தி வந்தார். ஆனால் செல்போன் குறியீட்டு எண்ணை (ஐ.எம்.இ.ஐ.) வைத்து அவரிடம் கவிதாவின் செல்போன் இருப்பதை கண்டுபிடித்தனர். நெய்வேலி மத்திய பஸ்நிலையம் அருகே நின்ற கிருஷ்ணராஜை நேற்று போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.  அப்போது கவிதாவை நண்பர்கள் 4 பேருடன் காரில் கடத்தி சென்று நெய்வேலி அருகே உள்ள சிலம்பிநாதன் பேட்டை முந்திரி தோப்பில் கற்பழித்து கொன்று விட்டு நகை, செல்போன் ஆகியவைகளை பறித்துக்கொண்டு புதுசத்திரம் அருகே கடலூர்-சிதம்பரம் சாலையில் மேட்டுப்பாளையம்- தீர்த்தனகிரி செல்லும் வழியில் சாலையோரம் பிணத்தை புதைத்து விட்டதாக கூறினார்.
 
            அவர் கொடுத்த தகவலின் பேரில் நரியங்குப்பத்தை சேர்ந்த பிரகாஷ் (22) என்பவனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் பத்திரக்கோட்டையை சேர்ந்த வேன் டிரைவர் தவமணி, கிருஷ்ணமூர்த்தி, சுதந்திரராஜன் ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கிருஷ்ணராஜியும், பிரகாசும் கவிதா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தை நேற்று அடையாளம் காட்டினார்கள். அந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
 
               கவிதாவின் பிணம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது. தாசில்தார் அசோக்ராஜ் முன்னிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பராசக்தி தலைமையில் பிணம் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள தவமணி, சுதந்திர ராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 3 பேரும் நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருக்கிறார்களா என்று போலீசார் தேடி வருகின்றனர். 


Read more »

கடலூர் மாவட்டத்தில் நீதிபதி ரவிராஜ பாண்டியன் பரிந்துரைப்படி புதிய கல்வி கட்டணப் பட்டியல் விநியோகம்

கடலூர்:

             கடலூர் மாவட்ட மெட்ரிக் மற்றும் நர்சரிப் பள்ளிகளுக்கான புதிய கல்விக் கட்டணப் பட்டியல், செவ்வாய்க்கிழமை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப் பட்டது. 

              மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மற்றும் நர்சரிப் பள்ளிகள் அதிகப்படியான கல்விக் கட்டணம் வசூலிப்பதாகப் பெற்றோர் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். எனவே மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற  நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டது.  

             மெட்ரிக் பள்ளிகள், மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணங்களை, கடந்த ஆண்டு மே 7-ம் தேதி, நீதிபதி கோவிந்தராஜன் அறிவித்தார். பின்னர் நீதிபதி கோவிந்தராஜன் ராஜிநாமா செய்தார். அவரது அறிவிப்பை எதிர்த்து 6,400 மெட்ரிக் பள்ளிகள் மேல்முறையீடு செய்தன. மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு விசாரித்து, புதிய கல்விக் கட்டண விவரங்களை திங்கள்கிழமை வெளியிட்டது.  புதிய கல்விக் கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியல்களை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார். 

               தனித்தனி கவர்களில் இருந்த கட்டணப் பட்டியல்கள் உரிய பள்ளிகளிடம் ஒப்படைக்கப் பட்டன.  கடலூர் மாவட்டத்தில் 217 மெட்ரிக், நர்சரிப் பள்ளிகள், நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிவித்த கட்டணங்களை எதிர்த்து, மேல்முறையீடு செய்திருந்தன. இவற்றில் 210 பள்ளிகளுக்கு கட்டணப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு விட்டன. 7 பள்ளிகளுக்கான மேல்முறையீடு பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.  செவ்வாய்க்கிழமை 70 பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வந்து, கட்டணப் பட்டியலைப் பெற்றுச் சென்றனர். 

                 மற்றவர்கள் புதன்கிழமை வந்து பெற்றுச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  புதிய கல்விக் கட்டணம் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளுக்குப் பெரிதும் மகிழ்ச்சி அளிப்பதாக மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்தனர்.




Read more »

கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை கோரி குவியும் விண்ணப்பங்கள்

கடலூர்:
 
             கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தி கூட்டங்களில், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு முதியோர் உதவித் தொகை கோரி விண்ணப்பங்கள் குவியத் தொடங்கி உள்ளன.  
 
          கடலூர் கோட்டாட்சியரிடம் மட்டும் கடந்த 7 நாள்களில் முதியோர் உதவித் தொகைக்காக சுமார் 800 மனுக்கள் பெறப்பட்டு இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  செவ்வாய்க்கிழமை முதியோர் உதவித் தொகை கோரி, கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதே நிலைதான் மற்ற வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏற்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.  
 
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 
 
           முதியோர் ஓய்வூதியத் தொகையை, முதல்வர் ஜெயலலிதா ரூ.500-ல் இருந்து ரூ. 1,000 ஆக உயர்த்தி இருக்கிறார். இதனால் ஏராளமானோர் முதியோர் உதவித் தொகை கோரி மனு அளிக்கிறார்கள். முதியோர் உதவித் தொகை வழங்க விதிமுறைகள் உள்ளன.  விதிமுறைகள் பொருந்தாத, வசதிபடைத்த பலரும் விண்ணப்பிக்கிறார்கள். வசதிபடைத்த பலருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டும் வருகிறது. 
 
               ஆனால் தகுதி உள்ள ஏழை எளிய மக்கள் பலருக்கு, முதியோர் உதவித் தொகை கிடைப்பது இன்னும் குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது என்றார்.  கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஜமாபந்தியில், ஆதரவற்ற விதவைகள் மூவருக்கும், 3 விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை, கோட்டாட்சியர் முருகேசன் வழங்கினார்.
 
 
 

Read more »

பிளஸ்-1, பிளஸ்-2 பாடப் புத்தகங்களின் அட்டைப் படம் ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பு

கடலூர்:

                தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கும் இலவச பாடப் புத்தகங்களில், பின்பக்க அட்டைப் படம், தமிழக அரசு உத்தரவின்பேரில் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டு வருகிறது. 

                சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், பிளஸ்-1 பிளஸ்-2 வகுப்புகளுக்கு, தமிழகக் கல்வித் துறையால் வழங்கப்பட்டு உள்ள பாடப் புத்தகங்களிலும், மாற்றம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.  பிளஸ்-1, பிளஸ்-2 பாடப் புத்தகங்களில் பின்பக்க அட்டையில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வாசகம் அடங்கிய கோவைத் தமிழ் செம்மொழி மாநாட்டு சின்னம் மற்றும் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பன உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய வாசகங்கள் இடம்பெற்று உள்ளன. 

              இப்பாடப் புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்குப் போய்ச்சேர்ந்து விட்டன.  இந்நிலையில் பின்பக்க அட்டை முழுவதையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பச்சை நிறத்திலான ஸ்டிக்கரும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்டிக்கர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது.  பள்ளி ஆசிரியர்கள் அமர்ந்து ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாடப் புத்தகங்கள், பள்ளிகள் திறக்கப்படும் புதன்கிழமை மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.




Read more »

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் வாடகை வாகனம் பயன்படுத்துவதால் அரசு பணம் விரயம்


கடலூர்: 

             கடலூர் கலெக்டர் அலுவலக வி.ஐ.பி., கார் தயார் நிலையில் இருக்கையில், ஒரு சில அதிகாரிகள், வாடகைக் கார்களைப் பயன்படுத்துவதால், அரசு பணம் விரயமாகிறது.

             கடலூர் மாவட்டத்திற்கு வரும் வி.ஐ.பி., க்களை வரவேற்பதற்காக, குளிர் சாதன வசதியுடன் கூடிய, இரண்டு ஸ்கார்பியோ கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டி.என்.01. ஏஜி.4444 என்ற ஸ்கார்பியோ கார், புதிதாக வழங்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில், விபத்திற்குள்ளானது. இதுவரை 36 ஆயிரம் கி.மீ., மட்டுமே ஓடியுள்ளது. விபத்து நடந்து, 2 ஆண்டுகள் கடந்தும், 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் இதுவரை சரிசெய்ய எவ்வித முயற்சியும் எடுக்காமல், தனியார் ஒர்க் ஷாப்பில் மக்கிக் கிடக்கிறது. மற்றொரு வி.ஐ.பி., கார் (டி.என்.31.ஜி.6666) நல்ல நிலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

             குளிர் சாதன வசதியுடன் உள்ள இந்த கார், தயார் நிலையில், வெறுமனே நிறுத்தப்பட்டு கிடக்கிறது. இந்த காரை, வி.ஐ.பி., க்கள் வருகைக்காக பயன்படுத்தாமல், வாடகை அதிகமுள்ள இனோவா காரை, அதிகாரிகள் பயன்படுத்துகின்றனர். நேற்று சென்னையில் இருந்து வந்த தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்குக் கூட, வி.ஐ.பி., காரை பயன்படுத்தாமல், வாடகைக்கு இனோவா எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து வரும் இந்த ஆட்சியில் அரசு, பணத்தை விரயம் செய்து வருபவர்கள் மீது, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




Read more »

2 held for gangrape , murder of woman near Neyveli

CUDDALORE: 

         A 22-year-old woman was kidnapped, raped and murdered by a five-member gang near Neyveli town. Police arrested nabbed two persons, allegedly involved in the crime, and launched a hunt for three others.

             Superintendent of police P Pakalavan said R Kavitha, daughter of a contract worker in NLC, worked in a bakery in Neyveli. She was returning home in her bicycle around 9 pm on April 26 when a five-member gang, who got off from a Maruti Omni, accosted her and bundled her into the car, he police. The men took her to a secluded spot in Nariyankuppam village near Panruti and raped her in a cashewnut grove. They later strangled her to death and buried the body along the roadside near Mettupalayam in Cuddalore district.

             When the woman did not return home, her brother lodged a complaint with the Neyveli Thermal police station. Police have formed a special team to trace the woman. There was no major breakthrough in the case until the team detained two youths from Panruti following a tip off on Monday.




Read more »

Orders on fee structure handed over to schools concerned in Cuddalore District

CUDDALORE: T

          he orders pertaining to the re-determination of the school fee structure, recommended by Justice K.Raviraja Pandian Committee, were handed over personally by the Chief Educational Officers to the schools concerned in Cuddalore and Villupuram districts on Tuesday.

The revised fee structure for a year is as follows: 

           Lower Kindergarten and Upper Kindergarten – Rs.4,700; 
           Standards I to V – Rs.4,900; 
          Standards VI to VIII – Rs.5,450; 
          Standards IX to X – Rs.5,800;
           and Standards XI to XII – Rs.7,300.

           The fee structure is inclusive of annual fees of various kinds such as admission fee, library fee, maintenance and amenities fee and other recurring expenditure and development charges, excluding the fees for imparting education through technology like “smart classes,” for books, notebooks, uniforms and transportation facilities, if any.

            The committee has instructed that the schools should not collect any other amount by way of fee. Any violation in this regard would be dealt with in accordance with law by the appropriate authority. The new fee structure will remain in force for the academic years from 2010-2011 to 2012-2013 or until further orders of the committee.

            Meanwhile, the Consumer Federation-Tamilnadu has appealed to the State government to reject the Raviraja Pandian Committee recommendations because these were wide off the mark of the stated objectives. Moreover, the fee structures were fixed on the basis of infrastructure available in individual schools and the orders were delivered in sealed covers, thereby throwing to wind the need for transparency. The federation called for bringing into force the recommendations of Justice Govindarajan Committee.

            In identical representations addressed to Chief Minister Jayalalithaa and School Education Minister C.Ve.Shanmugam, executive secretary of the federation M.Nizamudeen stated that the latest recommendations would give a free hand to the schools to collect additional fees.




Read more »

Sri Lankan Tamil refugees' attempt to escape to Australia foiled from Vriddhachalam camp

CUDDALORE:

          An attempt by a group of 24 Sri Lankan Tamil refugees to escape to Australia clandestinely from here by a ferry has been foiled by the “Q Branch” police.

         The police have secured Nagalingam, Krishnaraj and Robin, the inmates of the Vriddhachalam camp, and booked them under Section 420 (cheating) of the Indian Penal Code. Nithy of Tiruchi, who masterminded the move, is absconding. Police sources told TheHindu that the refugees, including six women, nine children drawn from various parts of the State such as Gummidipoondi, Tirupur, Paramakkudi and Tiruchi, were promised of safe passage to Australia.

          Each of them was charged fees ranging from Rs. 5,000 to Rs 25,000. While Nithy was making arrangements for their travel, the three inmates of the Vriddhachalam camp were colluding with him in the covert operation. The refugees were brought to Konankuppam at Mangalampettai post on the Vriddhachalam–Udumalpet road two days ago and accommodated in the cottages of a church. However, when they extended their stay for two more days, caretakers of the church grew suspicious and alerted the “Q Branch.” The 24 refugees were sent back to their respective camps.



Read more »

Cuddalore Sri Padaleeswarar Temple car procession held

CUDDALORE: 

         A large number of people from various parts of Cuddalore district congregated at Sri Padaleeswarar Temple at Thirupadiripuliyur here to witness the car procession taken out as part of the Vaikasi Visakam festivities on Tuesday. Collector V.Amuthavalli inaugurated the procession by drawing the rope of the car. Elaborate security arrangements were made in and around the temple. Fire and Rescue Services personnel were also deployed.




Read more »

Passport Sevak Kendra buildings nearing completion

         Construction of buildings for Passport Sevak Kendra (PSK) offices are nearing completion, said C. Senthil Pandian, Regional Passport Officer, Chennai, here on Tuesday.

          Under the Passport Sevak Kendra, the Ministry of External Affairs had outsourced the collection and initial scanning work to the Tata Consultancy Services. The work of verification and granting passport would remain with the Ministry. In Chennai, three PSK offices will be set up in Tambaram, Vadapalani and Nelson Manickam Road. The office at Vadapalani is nearing completion and it will be ready in another 10 days. The Tambaram and the Nelson Manickam Road buildings will be ready in about 25 days.

          The office in Shastri Bhavan will be shifted to Rayala Towers on Anna Salai. The shifting of the passport office to the new premises would coincide with the commissioning of three PSKs in the city. The system at the old office would continue till pending applications were cleared. Unlike the existing system where soon after submitting the applications, the applicants could leave the passport office, in the new system the applicants had to wait till their certificates were verified, he added.




Read more »

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் 1 லட்சம் பணி வாய்ப்புகள் வழங்க இலக்கு: என்.கே.ரகுபதி



                  நடப்பு நிதியாண்டில் (2011-2012) ஒரு லட்சம் பணியிடங்களை நிரப்புவதை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் என்.கே.ரகுபதி கூறினார். 

 இது குறித்து என்.கே.ரகுபதி சென்னையில் திங்கள்கிழமை கூறியது: 

         மத்திய பணியாளர் தேர்வாணையமானது வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டு தோறும் அதிக எண்ணிக்கையில் பணியிடங்களை நிரப்பி வருகிறது.  கடந்த ஆண்டு நாடு முழுவதும் 68 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 23 ஆயிரத்து 178 பேருக்கு பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டன. தென் மண்டலத்தில் அதாவது தமிழகம், ஆந்திர மாநிலத்தைப் பொருத்தவரை கடந்த ஆண்டு 3.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 1,191 பேருக்கு பணி வாய்ப்புகள் கிடைத்துள்ளன.  இந்த ஆண்டு பணியிடங்களின் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளன. 

                எனவே இந்த ஆண்டு சுமார் 80 லட்சம் பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற வாய்ப்புள்ளது. அகில இந்திய அளவில் சுமார் 15 லட்சம் பணியிடங்கள் உள்ளன. எனவே அடுத்த நிதியாண்டில் அதிகப்படியான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 

 10 ஆயிரம்...

                இந்த ஆண்டு தென்மண்டலத்தில் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில் 8,500 காவலர் பணியிடங்கள், மீதம் 1,500 பணியிடங்களில் கீழ்நிலை எழுத்தாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், சுங்க ஆய்வாளர்கள் உள்ளிட்டப் பணிகள் அடங்கும். 

 குறைவான விண்ணப்பங்கள்: 

               மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பணிகளுக்கு உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட  மாநிலங்களில் இருந்துதான் அதிக இளைஞர்கள் விண்ணப்பிக்கின்றனர். சுமார் 70 சதவீதம் விண்ணப்பங்கள் வட மாநில இளைஞர்களிடம் இருந்துதான் பெறப்படுகின்றன. தென் மண்டலத்திலிருந்து குறைவான விண்ணப்பங்களே பெறப்படுகின்றன. எனவே அதிகமான அளவில் இளைஞர்கள் விண்ணப்பிக்க முன் வர வேண்டும். அதிகமானோர் விண்ணப்பித்தால்தான் அதிக பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  

தமிழில் விளம்பரம்... 

                  தென் மண்டலத்திலிருந்து அதிக அளவில் விண்ணப்பங்களைப் பெற தமிழ் மற்றும் ஆந்திர நாளிதழ்களில் அந்தந்த மொழிகளில் விளம்பரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  

இணையதளம் மூலம்... 

             இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை 2010 ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறையில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 20 லட்சம் பேர் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். தென் மண்டலத்தைப் பொருத்தவரை, 1.22 லட்சம் பேர் இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளனர். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கு இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.  மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் தேர்வுகள், முடிவுகள் உள்ளிட்ட விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள், தனி நபர் பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட முழுத் தகவல்களும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார் அவர்.  


Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior