உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 27 லட்சம் பேர் மனு: நரேஷ் குப்தா


   
            தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க 27.3 லட்சம் பேர் மனு செய்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.  
 
இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:  
 
           நிகழாண்டில் ஜனவரி 1-ம் தேதியுடன் 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதில் திருத்தங்களை மேற்கொள்ளவோ அல்லது பெயர்களைச் சேர்க்கவோ ஜூலை 16-ம் தேதி இறுதி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 
 
            இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று காலக்கெடு ஜூலை 26 என நிர்ணயிக்கப்பட்டது. ஜூலை 16-ம் தேதி வரையில், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க தமிழகம் முழுவதும் இருந்து 27 லட்சத்து 30 ஆயிரத்து 192 பேர் மனு செய்துள்ளனர்.  மதுரையில் அதிகம்: மாவட்ட வாரியாக பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கல் பணிகள் நடைபெறுகின்றன. மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 2.22 லட்சம் பேர் தங்களது பெயர்களைச் சேர்க்க மனு செய்துள்ளனர்.
 
                 இந்த மாவட்டத்தைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் 2.1 லட்சம் பேரும், சென்னையில் 1.75 லட்சம் பேரும், திருவள்ளூரில் 1.5 லட்சம் பேரும் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைச் சேர்க்க மனு செய்திருக்கின்றனர். பெயர்களைச் சேர்க்க விண்ணப்பித்த அனைத்து மனுக்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இதன்பின்பு, களஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. நீக்கப்பட்ட மனுக்கள் குறித்த விவரங்கள் தனியாக தொகுக்கப்படும்.
 
 சட்ட மேலவை தொகுதிகள்: 
 
               சட்ட மேலவைக்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும். பட்டதாரிகளின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன.  
 
                அதன்படி, தோராயமாக ஆசிரியர்கள் 3.6 லட்சம் பேரும், பட்டதாரிகளாக 13 லட்சத்துக்கும் மேலாக இருப்பார்கள். தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஓரிரு நாளில் இதுகுறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார் நரேஷ் குப்தா.

Read more »

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்: ஓராண்டில் ஒன்றரை லட்சம் பேருக்கு சிகிச்சை: தமிழக அரசு தகவல்


கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்கள் 
 
               கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் 1.53 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
            இதற்காக, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.415.13 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி தொடங்கப்பட்டது. கடந்த ஓராண்டுகளாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வாயிலாக சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.  கடந்த ஓராண்டில் இதுவரை ரூ.1.44 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். காப்பீட்டுத் திட்டத்துக்குள் 656 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 
 
            இந்த மருத்துவமனைகளில் 1.53 லட்சம் நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு முழுமையான நலம் பெற்றுள்ளனர். சிகிச்சை செய்த மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.415.43 கோடி வழங்கப்பட்டுள்ளது.
 
பாராட்டு-பரிசு: 
 
           இந்தத் திட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டி, அறுவைச் சிகிச்சைகள் செய்து கொண்டு நோய் குணம் அடைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் பரிசுகளை வெள்ளிக்கிழமை வழங்கினார் முதல்வர் கருணாநிதி.  இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.  
 
                   சென்னை அரசு பொது மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, சென்னை பில்ராத் மருத்துவமனை, பெங்களூர் நாராயண இருதாலயா, கோவை கங்கா மருத்துவ மையம், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
 
                  இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறைச் செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Read more »

"இயற்கை அழிவுக்கு மனிதனின் சுயநலமே காரணம்": ராமதாஸ்


பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாளைய சென்னை - ஆபத்துகளும், தீர்வுகளும் என்ற கண்காட்சியை தொடங்கி வைத்தார் 
 
           இயற்கை அழிக்கப்படுவதற்கு மனிதனின் சுயநலமே காரணம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "நாளைய சென்னை - ஆபத்துகளும், தீர்வுகளும்' என்ற கண்காட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
 
            இன்றைய சென்னை மாநகரம் எப்படி உள்ளது நாளைய சென்னை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இயற்கை நமக்கு அளித்த கொடைகளான நிலம், நீர், காற்று ஆகியவற்றை மனிதர்கள் அழித்து வருகிறார்கள். சென்னை மாநகரம் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாறிவிட்டது. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர்.இன்று மனிதன் இயற்கைக்கு மாறான வாழ்க்கை வாழ தொடங்கியுள்ளான். 
 
             உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட எல்லாமே மாறிவிட்டன. பாரம்பரியமான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை போன்ற உணவு வகைகளை யாரும் உண்பதில்லை. பொறித்த, வறுத்த, பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகளையே அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதன்மூலம் மனிதன் தனது வாழ்நாளைச் சுருக்கிக் கொண்டுவிட்டான்.உடல் பருமன் இன்று மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. போக்குவரத்து நெரிசல், மக்காத பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் இந்தக் கண்காட்சியில் விளக்கப்பட்டுள்ளன.
 
             சென்னை மாநகரில் இருந்த ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் காணாமல் போய்விட்டன. அதனால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதற்கான தீர்வுகளும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ். பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌம்யா அன்புமணி, பொதுச்செயலாளர் அருள், காங்கிரஸ் எம்.பி. கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.சென்னை அசோக் பில்லர் அருகில் உள்ள அறிஞர் அண்ணா சமூகக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 25) வரை மூன்று நாள்களுக்கு காலை 10 முதல் இரவு 8 மணி வரை அக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

Read more »

கடலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகள்


விநாயகர் சதுர்த்திக்காக கடலூரில் தயாராகும் சிலைகள்.
 
கடலூர்:
 
           விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 13-ம் தேதி வர இருக்கிறது. விநாயகர் சதுர்த்திக்குத் தேவையான விநாயகர் சிலைகளை, கடலூரில் இப்போதே தயாரிக்கத் தொடங்கி விட்டனர்.
 
            கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் பொம்மை தயாரிக்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு உள்ளனர். காகிதக்கூழ், பிளாஸ்டர் ஆப்பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு மூலப் பொருள்களைக் கொண்டு அவர்கள் பொம்மை தயாரித்து வருகிறார்கள். கடலூரில் தயாராகும் பொம்மைகள் தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் சிறுசிறு குழுக்களாக அவர்கள் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். 
 
             ஆனால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய குழுக்களாகச் சேர்ந்து, கடந்த வாரம் முதல் விநாயகர் சிலைகளைத் தயாரிக்கத் தொடங்கி விட்டனர். கடலூரில் 3 குழுக்கள் தற்போது விநாயகர் சிலைகளைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளன.இவர்கள் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை  தயாரிக்கிறார்கள். 
 
கடலூர் செல்லங்குப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம், விநாயகர் சிலைகளை தயாரித்து வரும் கலியமூர்த்தி கூறியது:
 
               நாங்கள் வண்டிப்பாளையத்தில் பொம்மை தயாரிக்கும் தொழில் செய்பவர்கள். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தனிக் குழுக்களாகப் பிரிந்து வந்து கடலூரில் 3 இடங்களில் விநாயகர் சிலைகளைச் செய்துவருகிறோம். எங்களது குழுவினர் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை தயாரிக்கிறோம். அதன் விலை ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,500 வரை இருக்கும். எங்கள் குழுவினர் மட்டும் விநாயகர் சதுர்த்திக்கு முன், 300 சிலைகளை உருவாக்கி விடுவோம். 
 
               கடலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்து பலர் வாங்கிச் செல்வார்கள்.கடலூர் அருகே மணவெளியைச் சேர்ந்த நாங்கள், கடந்த 8 ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Read more »

மேட்டூர் அணை 28-ல் திறப்பு

              மேட்டூர் அணை ஜூலை 28-ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

           தமிழகத்தில் ஆடிப் பெருக்கு விழா ஆகஸ்ட் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒட்டி, மேட்டூரில் இருந்து காவிரியில் ஜூலை 28-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். அதனைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கு சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்காக தண்ணீர் விடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். 

நீர்மட்டம்: 

                மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.02 அடியாக உள்ளது. 43.99 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீரவரத்து வினாடிக்கு 1,003 கன அடியாக உள்ளது. அதேசமயம் 1,004 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Read more »

நெல்லிக்குப்பம் அருகே அரசு பஸ் படி உடைந்ததால் பயணிகள் அலறல்



நெல்லிக்குப்பம் : 

          அரசு போக்குவரத்துக் கழக பஸ்சின் படிக்கட்டு உடைந்து சாலையில் தேய்த்துக் கொண்டு வந்ததால் பயணிகள் பீதியடைந்தனர். 

            கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி நேற்று முன்தினம் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. காராமணிக்குப்பம் அருகே சென்ற போது பஸ்சின் பின்பக்க கீழ் படிக்கட்டு உடைந்து சாலையில் தேய்த்துக் கொண்டு சென்றது. இதனால் தீப்பொறி ஏற்பட்டதால் சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். 

              டிரைவர் கண்டு கொள்ளாமல் 2 கி.மீ., தூரம் ஓட்டிச் சென்று நெல்லிக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் நிறுத்தத்தில் நிறுத்தினார். தொங்கி கொண்டிருந்த படிக்கட்டை பயணிகள் உடைத்து எடுத்தனர். கீழ்படி இல்லாத நிலையில் மீண்டும் பஸ் பண்ருட்டி நோக்கிச் சென்றது. இதனால் பயணிகள் பஸ்சில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் சிரமப்பட்டனர். கூட்டம் அதிகமாக இருந்து படிக்கட்டில் நின்று பயணம்செய்திருந்தால் அவர்களின்  கதி என்ன ஆகியிருக்கும். தீப்பொறி டீசல் டேங்கில் பட்டிருந்தால் பெரியளவில் அசம்பாவிதம் நடந்திருக்கும்.

Read more »

சிதம்பரம் அருகே கணவரை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் ஸ்டேஷன் முன் பெண் தர்ணா


சிதம்பரம் : 

                கணவரை கண்டு பிடித்துத் தரக்கோரி கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்ததால், போலீஸ் ஸ்டேஷன் முன், பெண் தர்ணாவில் ஈடுபட்டார். 

          சிதம்பரம் கொள்ளுமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் முகமது அன்சாரி. இவரது மனைவி பாப்பாத்தி என்கிற பாத்திமா (24). இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் முத்துமாணிக்கம் தெருவில் வசித்து வந்தனர். 

             இந்நிலையில், சீர்காழியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் முகமது அன்சாரிக்கு பழக்கம் ஏற்பட்டு, அந்த பெண்ணுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டிற்கு வராததால் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் தவித்த பாத்திமா, தனது கணவரை கண்டுபிடித்துத் தரக்கோரி, நேற்று சிதம்பரம் மகளிர் போலீசில் புகார் கொடுக்கச் சென்றார். போலீசார் புகாரை வாங்க மறுத்ததால் போலீஸ் ஸ்டேஷன் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடன் போலீசார், பாத்திமாவை சமரசம் செய்து மனுவை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். பெண், திடீர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read more »

என்.எல்.சி., சேர்மனுக்கு துணை முதல்வர் விருது


நெய்வேலி : 

               என்.எல்.சி., நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வை பாராட்டி, துணை முதல்வர் ஸ்டாலின், சேர்மன் அன்சாரிக்கு விருது வழங்கி கவுரவித்தார். என்.எல்.சி., நெய்வேலி நகரை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, கடலூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழ்கிறது. இதன் சமூக பொறுப்புணர்வையும், பொருளாதார மேம்பாட்டுப் பணிகளையும் பாராட்டி அரசு கவுரவித்துள்ளது. அதன் அடிப்படையில் துணை முதல்வர் ஸ்டாலின், என்.எல்.சி., நிறுவன சேர்மன் அன்சாரிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் விருது வழங்கி கவுரவித்தார்.

Read more »

மாநில தடகள போட்டியில் நெய்வேலி பள்ளி மாணவி சாதனை

நெய்வேலி:

              நாகர்கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் நெய்வேலி குளூனி பள்ளியைச் சேர்ந்த மாணவி சி.டீனா ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

               தமிழகப் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான தடகளப் போட்டி இம்மாதம் 16 முதல் 18-ம் தேதிவரை நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் 3 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 14-வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் நெய்வேலி செயின்ட் ஜோசப் ஆப் குளூனி பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி சி.டீனா குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றார். இதில் 100 மீ ஓட்டப் போட்டியில் பங்கேற்ற டீனா 12.8 வினாடிகளில் தூரத்தைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

            இதேபிரிவில் நெய்வேலி ஜவகர் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஜி.பிரியங்கா 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் நெய்வேலி ஜவகர் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி எம்.கீதா வெண்கலப் பதக்கம் வென்றார். 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனைப் படைத்த மாணவி சி.டீனா அடுத்த மாதம் கர்நாடக மாநில சித்ரதுர்காவில் நடைபெறவுள்ள தென்மண்டல

              ஜூனியர் தடகளப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று சாதனைப் படைத்த வீராங்கனைகளையும், பயிற்சியாளர்கள் அந்தோணி மற்றும் வீரபத்ரன் ஆகியோரை என்எல்சி விளையாட்டுத் துறை மேலாளர் நாராயணன் பாராட்டியுள்ளார்.

Read more »

லைலா புயலால் கிடைத்த மழை நீர் கொள்ளிடத்தில் சேமிக்கப்பட்டது: பொதுப்பணித் துறை பொறியாளர் தகவல்

கடலூர்:

           லைலா புயல் காரணமாக கிடைத்த மழைநீர் கொள்ளிடத்தில் தேக்கி வைத்து விவசாயத்துக்கு வழங்கப்பட்டது என்று பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கொள்ளிடம் வடிநிலக் கோட்டம்) செல்வராஜ் தெரிவித்தார்.

பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கொள்ளிடம் வடிநிலக் கோட்டம்) செல்வராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

            ஜனவரி 28ல் மேட்டூர் அணை மூடப்பட்ட பிறகு 2 மாதங்கள் வந்த கசிவுநீரை சேமித்து மார்ச் மாதம் வரை விவசாயத்துக்கு வழங்கினோம். லைலா புயல் காரணமாக கிடைத்த மழைநீரை கொள்ளிடத்தில் தேக்கி வைத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்கு அளிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு வீராணம் ஏரி மழைநீரால் 42 அடியில் இருந்து 20-5-2010 அன்று 46.6 அடியாக உயர்த்தப்பட்டது.  தலைமைப் பொறியாளரின் அறிவுரைப்படி மழைநீர் வீணாகாமல் இந்த ஆண்டு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

               தொன்று தொட்டு பராமரிப்புக் காலம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை என்று இருந்தது, மழைநீர் சேமிக்கப்பட்டதன் காரணமாக ஜூலை முதல் ஆகஸ்ட் வரை என்று இந்த ஆண்டு மாற்றப்பட்டது. கொள்ளிடத்தில் மழைநீர் 22-ம் தேதி ஒருநாள் மட்டும் 10 மணி நேரம், வினாடிக்கு  600 கன அடி வீதம் ஆற்றில் சென்றது. நீர்வள ஆதாரத்துறை மிக விரைவில் பராமரிப்புப் பணிகளை முடித்து மழைநீர் சேமிக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

என்எல்சி பங்குகள் விற்பனையை கைவிடவேண்டும் - எச்எம்எஸ்

நெய்வேலி:
 
            என்எல்சி நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை எடுத்துள்ள நடவடிக்கையை கைவிட வேண்டும் என நெய்வேலி எச்எம்எஸ் தொழிற்சங்கத் தலைவர் சி.சுகுமார் வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொடர்பாக சி.சுகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: 
 
            தமிழகத்தில் இருக்கின்ற மிகப்பெரிய மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் தமிழகத்தின் மின் தேவை மற்றும் தென் மாநிலங்களின் மின் தேவையிலும் பெரும் பங்கு வகிக்கிறது. தொழிலாளர்களின் ஈடு இணையற்ற ஒற்றுமை, முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் தற்போது நிறுவனம் அதிக லாபம் ஈட்டி மத்திய அரசுக்கு பங்கு ஈவுத்தொகையையும் அளித்து வருகிறது.
 
           அதோடு மட்டுமல்லாமல் தற்போது நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் பல்வேறு இடங்களில் மின் நிலையங்களையும், சுரங்கங்களையும் அமைத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு என்எல்சி உள்ளிட்ட 10 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு எந்த நோக்கத்திற்காக பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினாரோ அந்த நோக்கங்களை குழிதோண்டி புதைக்கின்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு.
 
          ஏற்கெனவே மத்தியில் இருந்த பாஜக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டபோது தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பினால் அதை கைவிட்டது. அதையடுத்து வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் முந்தைய அரசு செய்த அதே தவறை மீண்டும் செய்தது. இதையடுத்து தொழிலாளர்களின் உணர்ச்சிபூர்வமான எதிர்ப்பைக் கண்ட தமிழக முதல்வர் மு.கருணாநிதி அப்போது மத்திய அரசுக்கு விடுத்த மிரட்டலை அடுத்து அப்போதைக்கு என்எல்சி பங்கு விற்பனையை ஒத்திவைப்பதாகக் கூறியது மத்திய அரசு.
 
                 இப்போது மீண்டும் அத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நடவடிக்கையை ஒட்டு மொத்தமாக கைவிட வேண்டும்.இல்லையேல் கடந்த காலங்களில் ஏற்பட்டது போன்ற மிகப் பெரிய போராட்ட நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் இறங்க நேரிடும் என சுகுமார் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read more »

என்எல்சியில் புதிய மின்துறை இயக்குநர்

நெய்வேலி:
 
         என்எல்சியின் புதிய மின்துறை இயக்குநராக ஜே.மகிழ்செல்வன்  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
         என்எல்சி நிறுவனத்தின் மின்துறை இயக்குநராக பணியாற்றிய வி.சேதுராமன் கடந்த மே மாதம் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய மின்துறை இயக்குநராக ஜே.மகிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவை மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. மகிழ்செல்வன் என்எல்சி நிறுவனத்தில் கடந்த 1975-ம் ஆண்டு இளநிலை பொறியாளராக பணியில் சேர்ந்து பின்னர் படிப்படியாக உயர்வுபெற்று, என்எல்சி அனல்மின் நிலையங்களில் தலைமைப் பொதுமேலாளராக பணியாற்றி வந்தார். தற்போது மின்துறை இயக்குநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read more »

பண்ருட்டியில் அதிகாரிகள் "ஆப்சென்ட்' சம்பிரதாயத்திற்காக ஆக்கிரமிப்பு அகற்றம்

பண்ருட்டி :

          பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் அறிவிப்பு செய்துவிட்டு பொறுப்பு அதிகாரிகள் திடீரென "ஆப்சென்ட்'  ஆனதால் சம்பிரதாயத்திற்காக ஆக் கிரமிப்பை அகற்றினர்.

              பண்ருட்டி நகராட்சி பகுதியில் பஸ்நிலையம், ராஜாஜி சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலை, காந்திரோடு, கடலூர் சாலை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பெரிதாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால்  மாதந்தோறும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட  கலெக்டர் சீத்தாராமன் நகராட்சி கமிஷனருக்கு உத்திரவிட்டார்.அதன்பேரில் நகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் உமா மகேஸ்வரி  உத்திரவிட்டார்.

               இந்நிலையில் கடந்த 20ம் தேதி முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சார்பில் "டாம் டாம்' அறிவிப்பு செய்தனர். உத்தரவு போட்ட கமிஷனர் விடுப்பிலும், பொறுப்பு வகித்த கமிஷனர் பயிற்சிக்காக சென்னைக்கும் சென்று விட்டதால்  ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கடிதம் கூட நகராட்சி சார்பில் வழங்கப்படவில்லை.

                இதனால் நேற்று காலை 10 மணிக்கு கூட  ஆக்கிரமிப்புகள் அகற்றுவதா ? வேண்டாமா ? என்கிற குழப்பத்தில் நகராட்சி ஊழியர்கள் இருந்தனர்.  நீண்ட குழப்பத்திற்கு பின் 11 மணிக்கு நகரமைப்பு ஆய்வர் சாம்பசிவம்,  வருவாய் ஆய்வாளர் தனகோடி,  சர்வேயர் அழகேசன், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சுதாகரன் உள்ளிட்ட ஊழியர்கள் காந்திரோட்டில் மட்டும்  ஆக்கிரமிப்பை அகற்றினர். முறைப்படி அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாததால் பொது மக்கள் கவலையடைந் தனர்.

Read more »

குடிநீர் கட்டண உயர்வுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு : கடலூர் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு

கடலூர் : 

            கடலூர் நகர மன்ற கூட்டத்தில் ஒட்டுமொத்த கவுன்சிலர்களின் எதிர்ப்பால் குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.

           கடலூர் நகர மன்ற கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் தங்கராசு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தாமரைச்செல்வன், கமிஷனர் குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

குமார் (அ.தி.மு.க.,): 

           குடிநீர் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தி மன்ற அனுமதிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதனை ஒத்தி வைக்க வேண்டும். பெரும் பாலான பகுதிகளில் குடிநீர் சரியாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சாக்கடை நீர் கலந்து சுகாதாரமற்ற முறையில் வருகிறது. அதனை நிவர்த்தி செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்த பின் கட்டணத்தை உயர்த்தலாம். அதுவரை இந்த தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும். இதே கருத்தை அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தியதால், குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்தி வைப்பதாக சேர்மன் அறிவித்தார்.

கந்தன் (அ.தி.மு.க.,): 

        குடியிருப்பு பகுதிகளில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தது போல் அதே வேகத்தில் ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் செய்ய வேண்டும்.

குமார் (அ.தி.மு.க.,): 

          முதுநகர் மாலுமியார்பேட்டையில் உள்ள சத்துணவு கூடம் இடிந்து விழுந்து வருகிறது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

ராஜா (தி.மு.க.,): 

         திருப்பாதிரிப்புலியூர் எரிவாயு தகன மேடையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

ராதகிருஷ்ணன் (பா.ம.க.,): 

        கொசுத் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாய் துன்னிசா (தி.மு.க.,): 

           கால்வாய் பணியை செய்யும் கான்ட்ராக்டர்களை வீட்டு குடிநீர் இணைப்புகள் உடைந்து விட்டால் அதனை சரி செய்ய வீட்டு உரிமையாளர்களிடம் பணம் வசூலிக்கின்றனர். அதனை கான்ட் ராக்டர்களே சரி செய்து கொடுக்க வேண்டும்

துணைத் தலைவர் தாமரைச்செல்வன்: 

            பாதாள சாக்கடை பணியைத் தொடர்ந்து நெல்லிக் குப்பம் சாலை போடப்பட்டது போல் பிற பகுதிகளிலும் சாலை போட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் பணிகள் விரைந்து முடியும். குடிசைப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்ட பணிகள் செய்பவர்கள் வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பதில்லை.

               இறுதியாக மன்ற விவாதத் திற்கு கொண்டு வந்த 29 தீர்மானங்களில் குடிநீர் வரி உயர்வைத் தவிர்த்து பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஆடிவெள்ளி கோவில்களில் சிறப்பு பூஜை

கடலூர் : 

          ஆடிவெள்ளியையொட்டி கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல், செடல், பால்குட ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

            கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள லோகாம் பாள் அம்மன் கோவிலில் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்க்கப்பட்டு மகா தீபாராதனையும், இரவு 7 மணிக்கு வீரனுக்கு கும்பம் கொட்டும் உற்சவம் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

குண்டு உப்பலவாடி: 

             நாகாத்தம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு பெண் ணையாற்றிலிருந்து கரகம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பகல் 1 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4 மணிக்கு சந்தனக் காப்பு, செடல் உற்சவம், தீபாராதனை நடந்தது. ஏராளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

சிதம்பரம்: 

              வெள்ளந் தாங்கி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 16ம்தேதி துவங்கியது. நிறைவு நாள் விழா 26ம்தேதி நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு விசேஷ அபிஷேக ஆராதனையும் மதியம் ஒருமணிக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம் நடக்கிறது. மாலை 6மணிக்கு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது.

விருத்தாசலம்: 

               எம்.ஆர்.கே., நகரில் உள்ள ஓம் சக்தி கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் மணிமுக்தா ஆற்றில் இருந்து பால்குடங்களுடன் ஜங்ஷன் ரோடு வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

Read more »

கடலூர் கலெக்டர் அலுவலகம் சாலையில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையம் திறப்பு

கடலூர் : 

           கடலூர் கலெக்டர் அலுவலகம் சாலையில் செஷ ன்ஸ் கோர்ட் வளாகத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா நடந்தது.

            கடலூர் மாவட்டத்தில் ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., 31 மையங்கள் உள்ளன. கடலூர் நகரில் 6வது மையமாக செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில் திறக் கப்பட்டது. திருச்சி மண் டல உதவி பொது மேலா ளர் பாண்டியராஜ் தலைமை தாங்கினார். கடலூர் கிளை முதன்மை பொது மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்ட முதன்மை நீதிபதி ராமபத்ரன் ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்து பேசினார். புதுச்சேரி மண்டல உதவி பொது மேலாளர் ஜெயராம்மூர்த்தி, கடலூர் மகளிர் கோர்ட் நீதிபதி அசோகன், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகநாதன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மனோகர், வக்கீல் சங்கத் தலைவர் வேதநாயகம், அரிமா மாவட்ட தலைவர் திருமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

Silted sea mouth at Cuddalore Port puts fishermen in straits

— Photo: C. Venkatachalapathy

Badly Hit: A trawler at Akkaraigori in Cuddalore was damaged when it hit a groyne on Friday.

CUDDALORE: 

            The heavily silted sea mouth at the Cuddalore Port has become a death trap for fishermen, because many crafts are continually taking a pounding while entering and exiting at this point, inflicting huge losses.

              On Friday morning, a trawler on its return from a fishing expedition, ran aground at Akkaraigori, not far away from the port. The bottom of the trawler and fishing net were badly damaged. Fish catch worth Rs.10,000 fell into the sea because of the tossing of the trawler in the process. Local fishermen said that of late, such incidents had become quite common because of heavy silt deposit at the sea mouth.

             M. Subramani, a local leader of fishermen, told The Hindu that in the last five years, not less than 10 boats, including motorised boats, trawlers and fibre boats were damaged. Last year, when a fibre-boat capsized, a 55-year-old fisherman, Kandiappan, drowned in the sea. The tragedy occurred quite close to the shore. In fact, coastal residents had staged a road roko to draw the attention of the authorities. Mr. Subramani said fishermen had submitted several representations to Fisheries Minister K.P.P. Sami, the port authorities, the Fisheries Department and the Collector to deepen the sea mouth, but to no avail.

Groynes inadequate

            He pointed out that groynes erected on either side of the sea mouth after the 2004 tsunami remained far short of providing safe passage to boats. On an average, boat owners are spending Rs. 1 lakh to Rs. 2 lakh annually for repairing the boats that are damaged either by hitting the boulders in the groynes or running aground. If the seaway is deep enough, the vessels would firmly stay on course and only when the siltation is building up would the vessels stagger because the propeller blades would take the beating.

            The fishermen said that if the siltation were to be arrested, the groynes should be extended to another 150 to 200 metres into the sea. Mr. Subramani also said that at the same time, dredging should be taken up. Assistant Director of Fisheries Department R. Ilamparithi said that whenever such problems occurred, the fishermen used to bring it to his notice and he, in turn, would communicate it to the Commissioner of Fisheries Department. The official would take it up with the Maritime Board, the executing authority.

Read more »

Works worth over Rs. 174 crore taken up at Cuddalore District

CUDDALORE: 

         Works to the tune of Rs 174.78 crore have been taken up in 681 panchayats in Cuddalore district during 2010-2011 under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme various, according to Collector P. Seetharaman. Irrigation canals at Vellapakkam, Kodangi, Ezhumedu, Semakottai, Manapakkam, Kalgunam, Aadur, Virupatchi, Anukkampattu, Poovanikuppam, Agaram, Nalanputhur, Thethampattu, Veerananthapuram, Veyyalur, M.Parur, Palakollai and Vadamaduram are among several water sources being desilted, he said.

Read more »

Renewal of Employment registration at Cuddalore District

CUDDALORE: 

            The State government has given an opportunity to candidates who have failed to renew their registration with the Employment Offices from 2006 to remain in the live registers. Candidates can report to the respective job offices in Cuddalore Villupuram districts till 5.45 p.m. on October 4, along with their registration cards and copies of academic certificates to renew their registration, according to statements released from the Collectors of the districts. They could do so either in person or through posts.

Read more »

கடலூரில் கடல் சீற்றம்: விசைப்படகு கவிழ்ந்தது

கடலூர் : 

             கடலூரில் இரண்டாம் நாளாக நேற்றும் கடல் அலை சீற்றமாக காணப்பட்டது.

             கடலூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங் களில் குளிர்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் கடலூரில் தேவனாம்பட்டினம், தாழங் குடா, சிங்காரத் தோப்பு, சொத்திக்குப்பம், ராசாப் பேட்டை, அக்கரைக் கோரி உட்பட பல பகுதிகளில்  இரண்டு நாட்களாக வழக்கத்திற்கும் மாறாக கடல் அலை இரண்டு மீட்டர் உயரத்திற்கு எழும்பி அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. அக்கரைக்கோரியைச் சேர்ந்த தி.மு.க., கவுன்சிலர் சம்பத் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் பெரியக்குப்பம் மீனவர்கள் அரசப்பன் (48), ஆறுமுகம் (54), மற்றொரு ஆறுமுகம் (55), அக்கரைகோரி சேகர் (37), நஞ்சலிங்கம்பேட்டை சண்முகம் ஆகியோர் 21ம் தேதி மீன்பிடிக்கச் சென்று நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கரை திரும்பினர்.

                  முதுநகர் துறைமுகம் அருகே வந்தபோது அலையின் சீற்றத்தில் சிக்கி முகத்துவாரத்தில்  கொட்டப்பட் டுள்ள கருங்கற்களில் மோதி விசைப்படகு கவிழ்ந்தது. அதிலிருந்த மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். காயமடைந்த ஆறுமுகம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் கவிழ்ந்த படகை மீனவர்கள் உதவியுடன் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.இதனால் அச்சமடைந்த கடலூர் பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் அனைத்து படகுகள் துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.  மேலும் அதிகாலையிலேயே மீன் பிடிக்கச் சென்ற சிலரும் கரை திரும்பினர். எப்போதும் பரபரப்புடன் காணப் படும் கடலூர் மீன்பிடி துறைமுகம் நேற்று வெறிச் சோடி காணப்பட்டது. கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிலும் பொது மக்கள் வருகை குறைந்திருந்தது.

Read more »

கடலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு இருவர் சாவு

கிள்ளை : 

             ரயிலில் அடிப்பட்டு இருவர் இறந்தனர். சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப்பேட்டைக்கு இடையே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு  இறந்தார். அவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

மூதாட்டி பலி: 

            கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் லட்சுமி (60). இவர் நேற்று இரவு  ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் மோதியதில் லட்சுமி இறந்தார்.இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். 

Read more »

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை

சிதம்பரம் :

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் தூக்கு போட்டு இறந்தார். 

              ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆசிஷ்குமார் தாகூர் மகன் நிகேஷ்குமார்தாகூர் (19). இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினிரிங் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந் தார். இவர் சிதம்பரம் முத்தையா நகர் பகுதியில் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்தார். இது குறித்து தகவலறிந்த சிதம்பரம் நகர டி.எஸ்.பி., மூவேந்தன், சப் இன்ஸ்பெக்டர் மணவள்ளி உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் உடலைக் கைப்பற்றி  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior