உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 07, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு: செலவு 305 கோடி; மீதம் 10 கோடி

                உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக 305கோடி செலவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும்  10 கோடி அளவுக்கு மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான செலவுக் கணக்கு விவரங்களை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. 

அதன் விவரம்:

                  மாநாட்டுச் செலவுகளுக்காக  73 கோடி அனுமதிக்கப்பட்டது. இந்தத் தொகையில் அரங்குகள் அமைப்பதற்கான செலவுகளுக்காக 13.4 கோடியும், பொது அரங்குகள், பந்தல் அமைத்தல், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான செலவு  13.93 கோடியாகும். கண்காட்சி அரங்குகள் மற்றும் அவை தொடர்பாக 6.31 கோடியும், மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட இனியவை நாற்பது பேரணிக்கு 6.30 கோடியும், உணவுக்கான செலவாக 5.7 கோடியும் செலவிடப்பட்டன.

             போக்குவரத்துச் செலவாக 7 கோடியும், சிறப்பு மலர் தயாரிப்புப் பணிகளுக்காக 88 லட்சமும், இணையதள மாநாடு மற்றும் இணையதளக் கண்காட்சி தொடர்பான பணிகளுக்காக 2.3 கோடியும் செலவிடப்பட்டன. முக்கிய பிரமுகர்களை வரவேற்றல் மற்றும் மக்கள் தொடர்பு விளம்பரப் பணிகளுக்காக 11 கோடியும் செலவிடப்பட்டது.ஆக மொத்தம் அனுமதிக்கப்பட்ட 73 கோடியில் ரூ. 69 கோடி செலவிடப்பட்டது. ரூ.4 கோடி மீதப்பட்டுள்ளது. இதேபோன்று, கோவை மாநகரப் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புப் பணிகளுக்காக 239 கோடியே 26 லட்சம் அனுமதிக்கப்பட்டது. அதில், 232 கோடியே 76 லட்சம் செலவிடப்பட்டு,  6 கோடி மீதப்பட்டுள்ளது.

Read more »

"ஆட்டம் காணும்" டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்


 
கடலூர் :
 
            சாதாரண மக்கள் பயணிக்கும் டவுன் பஸ்கள், ஆட்டோக்கள் பெருக்கத்தின் காரணமாக வருவாய் இழந்து தத்தளித்து வருகின்றன. 
 
                எதிர்காலத்தில் டவுன் பஸ்களே காணாது போகும் நிலைக்கு கடலூர் நகரம் தள்ளப்பட்டு வருகிறது.சுமார் 250 கி.மீ. நீளச் சாலைகளைக் கொண்ட கடலூரில், தேசிய நெடுஞ்சாலை தவிர ஏனைய சாலைகள் பலவும், மிகவும் குறுகலானவை. வரைமுறையற்ற ஆக்கிரமிப்புகள், அங்கீகாரம் இல்லா மனைப் பிரிவுகளால் சாலைகளின் அகலம் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் கடலூருக்கு மாவட்டத் தலைநகர் என்ற அந்தஸ்து குறைந்து வருகிறது. கடலூர் நகராட்சி எல்லைக்குள் 25 தனியார் நகரப் பேருந்துகள், 20 மினி பஸ்கள், இயக்கப்படுகின்றன.
 
                கடலூரில் இருந்து 51 அரசு நகரப் பஸ்கள் இயக்கப்படுகின்றன.  36 ஷேர் ஆட்டோக்கள், 1500 டீசல் ஆட்டோக்கள், 2 ஆயிரம் பெட்ரோல் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.  நகரப் பஸ்கள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வழித்தடங்களில், தேசிய நெடுஞ்சாலையிலும் முக்கிய மாநில நெடுஞ்சாலைகளிலும் மட்டும் இயக்கப்படுகின்றன.கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து வசதிகளின் தேவையை அதிகரித்து இருக்கிறது. 
 
                 புதிய நகர்களின் வருகைக்கு ஏற்ப கடலூரில் பஸ்கள் மற்றும் சிற்றுந்துகளின் சேவை அதிகரிக்கவில்லை. நகரப் பஸ்களுக்கு புதிய வழித் தடங்களையோ, மக்களின் தேவைக்கு ஏற்ப, வழித்தடத்தில் மாற்றங்களையோ அரசு செய்துகொடுக்கவில்லை.இதனால் பஸ் வசதி இல்லாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ஆட்டோக்களையும், டீசல் ஆட்டோக்களையும், ஷேர் ஆட்டோக்களையும் நம்ப வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். ஷேர் ஆட்டோக்களில் 15 பேரும், டீசல் ஆட்டோக்களில் 10 பேரும், பெட்ரோல் ஆட்டோக்களில் 5 பேரும் பயணிப்பது கடலூரில் மிகச் சாதாரணம். இதனால் விபத்துக்கள் பெருகிவிட்டன. 
 
               போக்குவரத்துப் போலீஸôர் இதைக் கண்டுகொள்வதே இல்லை எனப் பொதுமக்கள் அங்கலாய்க்கிறார்கள். சில சாலைகளை ஒருவழிப்பாதை என அறிவித்து, கடைக்காரர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். மக்கள் வாகனங்களை நிறுத்த வசதி இல்லை.சிறிய நகரமான கடலூரில் அனைத்து வகை ஆட்டோக்களின் பெருக்கம், நகர மக்களைப் பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 1000 புதிய டீசல் ஆட்டோக்களுக்கு கடலூர் வங்கிகள் கடன் வழங்கி இருப்பதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
               ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டும் அவைகள் இயங்குவதில்லை. கட்டண நிர்ணயமும் இல்லை. இதனால் கடலூரில் ஒரு கி.மீ. தூரத்துக்கு ஆட்டோ கட்டணம் ரூ.30.டீசல், பெட்ரோல் விலை உயர்வாலும், ஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்கள் பெருக்கத்தாலும், கடலூரில் 25 தனியார் நகரப் பஸ்களும் வருவாய் குறைந்து, விரைவில் நிரந்தரமாக நிறுத்திவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாக பஸ் அதிபர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அரசு நகர பஸ்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாகவும், மாணவர்களின் இலவச பஸ் பாஸ்களுக்காக இயக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கடலூர் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
                  கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1500 டீசல் ஆட்டோக்கள் கடலூரில் வந்துள்ளன.  டீசல் ஆட்டோக்களை கட்டுப்படுத்த 30-9-2007ல் போக்குவரத்துத் துறை ஆணை பிறப்பித்துள்ள போதிலும், அவை விபத்துக்களுக்குக் காரணமாக இருக்கும் நிலையிலும்,  மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கண்டுகொள்ளவில்லை என்றும் ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் சேகர் குற்றம்சாட்டுகிறார்.
 
எங்கு காணினும்...
 
                  கடலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இருப்பதால், அவற்றில் பயணம் செய்வோருக்கும், சாலைகளில் செல்வோருக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகிவிட்டது. எங்கும் நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறார்கள். காணும் இடமெல்லாம் ஆட்டோ ஸ்டாண்டாக உள்ளது. அவற்றுக்கு நிறுத்தும் இடங்களை நிர்ணயிக்க வேண்டும்.  அரிசிபெரியாங்குப்பம் - கடலூர், செம்மண்டலம்- திருவந்திபுரம், வண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் மினி பஸ்கள் அல்லது, டவுன் பஸ்களை இயக்க வாய்ப்புகள் இருந்தும் இயக்காதது, ஆட்டோக்களின் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திவிட்டது.  நகரப் போக்குவரத்து பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நீண்ட காலத்துக்குப் பிறகு, கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்துள்ளார். அதிலாவது நல்ல தீர்வு கிடைக்குமா என்று வினவுகிறார் கடலூர் நகரக் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு

கடலூர்:
 
          கடலூர் மாவட்டத்தில் முத்திரைத் தாள்களுக்கு (பத்திரங்கள்) தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
 
           கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர்களுக்கு முத்திரைத் தாள்கள், மாவட்டக் கரூவூலத்தில் இருந்து விநியோகம் செய்யப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக முத்திரைத் தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு நீடித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக ரூ.1000, ரூ.500, ரூ.100 ரூ.50 மதிப்பிலான முத்திரைத் தாள்கள் கிடைப்பது இல்லை என்றும், ரூ.10 மதிப்பிலான பத்திரங்கள் தாராளமாகக் கிடைப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
 
            இதனால் பத்திரப் பதிவு அலுவலகங்களில் பத்திரப் பதிவு பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரூ.10 மதிப்புள்ள பத்திரத்தில் சொத்து பரிவர்த்தனைகளை எழுதி, மீதித் தொகைக்கு வங்கி வரைவோலை வாங்கியாக வேண்டிய நிலை இருப்பதாகவும் இதனால் பத்திரங்கள் பதிவு செய்ய, பொதுமக்கள் தயக்கம் காட்டுவதாகவும் பத்திர எழுத்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
 
இதுகுறித்து மாவட்டக் கருவூல அலுவலர் எம்பெருமாள்  கூறியது
 
                     கடலூர் மாவட்டக் கருவூலத்துக்கு முத்திரைத் தாள்கள் நாசிக்கில் இருந்து வருகின்றன. நாசிக்கில் அச்சிட்டு முத்திரைத் தாள்கள் வருவதில் காலதாமதம் இருந்து வந்தது. தற்போது முத்திரைத் தாள்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. இன்னும் ஒரு வாரத்தில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Read more »

நெய்வேலியில் காங்கிரஸ் பெயர்ப் பலகை சேதம்: மாவட்டத் தலைவர் கண்டனம்

நெய்வேலி:

            நெய்வேலியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பம் மற்றும் பெயர்ப் பலகையை மர்ம நபர்கள் புதன்கிழமை சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.வனிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

            நெய்வேலியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட அப்பகுதி காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரியை அழைத்து அப்பகுதியில் காங்கிரஸ் கொடியேற்றம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் புதன்கிழமை இரவு காங்கிரஸ் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி, அங்கிருந்த பெயர்ப் பலகையை உடைத்து அருகிலுள்ள ஏரியில் தூக்கி வீசி எறிந்துள்ளனர்.

                இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.வனிதா, பண்ருட்டி வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் டி.வனிதா புகார் செய்து, சேதப்படுத்திய  மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். காவல்துறை பாரபட்சமாக நடந்துகொண்டால் நெய்வேலி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.

Read more »

Fire service personnel get new equipment At Cuddalore

— Photo:C Venkatachalapathy

Fire station in Cudalore has been provided with new gadgets. 
 
CUDDALORE: 

        As part of the modernisation programme, the Fire Service and Rescue Department here has been provided with at least half a dozen new equipment to improve the efficiency-level of the personnel and to handle the victims in a much safer manner, according to Station Officer S.Kumar.

          Mr. Kumar told The Hindu that earlier for want of right kind to tools the personnel faced difficulties in the rescue operations. Therefore, to remove the shortcomings, Director of Fire and Rescue Service R. Nataraj had started providing the Fire Stations in the districts with modern equipment. Notable among the new acquisitions was the “Inflatable tower” which could be blown up with the help of an air compressor to a height of 15 ft. At the top of it would be perched a 500-volts halogen lamp powered either by petrol or diesel which would light up an area of 30-ft diameter.

                 This would be extremely useful to the personnel when the electricity connection was snapped either by cyclone or other disasters.Electric shock-proof shoes were another new acquisition which would protect the personnel even if they step on live wire, of both low tension and high tension types, with an energy output of up to 10,000 volts. Another important gadget was the “collapsible stretcher” that would facilitate careful handling of the victims who suffered fractures in the spinal cord or the neck. Since the regular stretcher was of rigid type the patients would be tossed about while the personnel were evacuating them swiftly. Whereas, the new stretcher would hold the victims in a firm position without allowing even the slightest movement, thereby improving the comfort level of the victims and without aggravating the physical problem. Mr. Kumar further said that in a fire accident the common problem faced was fumes and the resultant suffocation.

             Therefore, to help those who were caught in a building on fire the department had now acquired the “personal oxygen system” that contained three small cylinders, each filled with 70 litres of compressed oxygen. The system would enable victims to breathe easy and to increase the survival rate. Mr Kumar noted that since the personnel wearing regular khaki suit could not be easily located in a place engulfed with smoke, now, a new suit with reflector was being provided. Another simple mechanism was the “rescue pulley machine” that could segregate the badly damaged vehicles without much effort. All these would be fitted in an “emergency rescue tender,” a new vehicle that would soon reach Cuddalore.

                    Mr. Kumar also stated that to cope with the stressful situation yoga was also being taught to the personnel. All the 246 personnel posted at various fire stations in the district were being trained in handling the new apparatus, he added.

Read more »

Chidambaram town set for facelift


beautification plans: Collector P. Seetharaman inspecting the main thoroughfares at Chidambaram.

CUDDALORE: 

         Pavement shops on all four streets surrounding the Natarajar temple at Chidambaram will be cleared. The environment around the temple will be kept spick and span by clearing garbage at regular intervals, according to Collector P. Seetharaman.

              After inspecting the Chidambaram town along with officials on Thursday, he told reporters that the town would be free of stray cattle and sheep. If such animals are found wandering, owners would be fined at the rate of Rs. 100 per animal a day. Traders' association had extended support for removing the pavement shops around the temple and the officials had been asked to complete the task before Sunday, he said. For keeping the entire town clean, dustbins costing Rs. 2.3 lakh would be provided in every ward under the ‘Namakku Naame Thittam.'

           Besides these, 13 dumper bins - large size dustbins - would also be procured at a cost of Rs. 50,000 each. Parking lots had been clearly demarcated for tourist vehicles on East Street, West Street and North Street, Mr. Seetharaman said. The municipality would levy fine on vehicles parked in ‘no-parking' zone as follows: Rs. 20 for two-wheeler; Rs. 40 for car; Rs. 50 for van; and Rs. 100 for bus. Mr. Seetharaman said that total fund allocation of Rs. 3.15 crore had been made for the construction of roads.

            These included West Street (Rs. 65 lakh), Venugopal Road (Rs. 60 lakh), Chidambaram-Sivapuri- Kavarapattu road (Rs. 55 lakh), and, Chidambaram-Thandavarayanpettai road (Rs. 1.35 crore). Road-laying works would begin in September, he said. The municipality would put up 33 streetlights at a total cost of Rs. 27.65 lakh as follows: on the Chidambaram flyover (14), Kothangudi (7) and Annamalai Nagar (22). The autorickshaw stand on the left side of the flyover would be moved further down.

Traffic intersection

            A traffic intersection would be built at the flyover-bus stand junction at a cost of Rs. 75 lakh. These measures had been contemplated to ease traffic congestion and give a facelift to the renowned temple town, Mr. Seetharaman said. District Revenue Officer S. Natarajan, Deputy Superintendent of Police Moovendan, Project Officer (DRDA) Rajashri, municipal chairman Fouzia Begum, and Public Relations Officer S.Muthiah were present.

Read more »

Paediatricians' forum takes campaign to schools, SHGs


SPREADING AWARENESS:Girl students going through pamphlets on breast-feeding, ORS and anaemic conditions —. 
 
CUDDALORE: 

          The Cuddalore district branch of the Indian Academy of Paediatrics (IAP) has embarked upon a campaign to disseminate information on the positive aspects of breast-feeding, administration of oral re-hydration salt (ORS), and overcoming anaemic condition among adolescents.

           In this endeavour, the IAP has roped in service organizations, self-help groups, para-medical staff and educational institutions, according to V. Namachivayam, leading paediatrician and coordinator of the Cuddalore IAP.

Educating students

            Dr. Namachivayam told The Hindu that the IAP had chosen to educate the girl students in the Plus-One and Plus-Two levels on the joy of motherhood and the advantages of breast-feeding. The girls were quite receptive and moreover they invariably carried the message to their families, thereby facilitating a wider reach of the programme. When the doctors were explaining the salient aspects of breast-feeding, curious members of the SHGs raised many pertinent questions. The SHG members were initially reluctant to discuss the subject but having learnt about its importance, they were keen on learning more about it.

                The IAP also told them that besides strengthening immunity to diseases, breast-feeding also contributed to the growth of intellect and protected children from infectious diseases. Dr. Namachivayam stressed that each child should be breastfed for six months and afterwards, they could be put on supplementary diets but never on tinned food available in the market.

Supplementary food

             Porridge prepared from rice and maize, smashed banana, potato, beetroot and carrot and rice mixed with pulses ground to a pulp were the healthy supplementary food that could be given to the infants from the sixth month. When they attained 12 months, regular food could be given in conformity with their appetite. Dr Namachivayam said that the ORS solution was a life saver when the children develop diarrhoea. The IAP also spelt out the kinds of food to be consumed by the anaemic people to stay healthy.

             The IAP had been organizing the “triple celebrations” across the district to reach the target groups. Moreover, it was also distributing handouts on all the three aspects for ready reference. The campaign in this regard had won the Cuddalore chapter of the IAP many a laurel, Dr. Namachivayam added.

Read more »

கடலூரில் சமச்சீர் பாடப்புத்தகம் கிடைக்காமல் ஜெராக்ஸ் எடுத்து படிக்கும் அவலம்

கடலூர்: 

            தமிழக அரசின் தெளிவான அறிவிப்பு இல்லாத காரணத்தினால், பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களாகியும் தனியார் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

              கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பொருட்டு சமச்சீர் கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது.  முதல் கட்டமாக ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தப் புத்தகங்களை தமிழக பாடநூல் கழகமே அச்சிட்டு வழங்கும் என கூறப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் அச்சடிக்க வேண்டியிருந்தால், சமச்சீர் பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியது. அரசு அச்சிட்ட புத்தகங்களை பாடநூல் கழகம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தக திட்டத்திற்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்களை தமிழக பாடநூல் கழகத்திடமோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 

             தனியார் நிறுவனங்கள், தனியார் பள்ளிகளை நேரடியாக தொடர்பு கொண்டு "ஆர்டர்கள்' பெற்றன. பின், சமச்சீர் பாட புத்தகங்களை அச்சடிக்க முன்வந்த தனியார் நிறுவனங்கள் சில, விலை கட்டுபடியாகவில்லை என்பதால் அச்சடிப்பதை நிறுத்திக் கொண்டன. இதை அறியாத தனியார் பள்ளி நிறுவனங்கள், தனியார் நிறுவனத்தில் சமச்சீர் பாடப் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என இருந்தன. பள்ளி திறந்து ஒரு மாதமாகியும் அந்நிறுவனங்களில் இருந்து புத்தகம் வராததைத் தொடர்ந்து தனியார் பள்ளி நிறுவனங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தை அணுகிய பிறகே விவரம் தெரிந்தது. 

             அதன் பிறகே தனியார் பள்ளிகளுக்குத் தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்களை தமிழக பாட நூல் கழகமே அச்சிட்டு வழங்க முன்வந்துள்ளது. இதன் காரணமாக, பள்ளி துவங்கி இரண்டு மாதமாகியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல தனியார் பள்ளிகளில் இன்னமும் சமச்சீர் பாடப் புத்தகம் இல்லாமல் புத்தகத்தை, "ஜெராக்ஸ்' எடுத்து பாடம் நடத்தி வருகின்றனர். சில தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களையே பாடப் புத்தகங்களை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன. 

                   கடந்த காலங்களில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை அரசே இலவசமாக வழங்கி விடுவதாலும், தனியார் பள்ளி நிறுவனங்கள் மொத்தமாக புத்தகங்களை கொள்முதல் செய்து அவர்களே மாணவர்களுக்கு வழங்கி விடுவதாலும் தனியார் புத்தகக் கடைகளில் பாடப்புத்தகங்கள் விற்கப்படுவதில்லை. இதனால் தனியார் பள்ளி மாணவர்கள், சமச்சீர் பாடப் புத்தகங்கள் கிடைக்காமல் "ஜெராக்ஸ்' எடுத்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Read more »

அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு

கடலூர்: 

          மகன் சாவிற்கு போலீஸ் அதிகாரி  காரணம் என, தந்தை கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் மீது ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

             கடலூர் அடுத்த கீழ்குமாரமங்கலம் காளிக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் கார்த்திகேயன். இவருக்கும் புதுச்சேரி அடுத்த முருகம்பாக்கம் ராஜலட்சுமி என்பவருக்கும் 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் ராஜலட்சுமிக்கு அவரது அக்கா கணவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மதி என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது.  இது கார்த்திகேயனுக்கு தெரிய வந்ததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், ராஜலட்சுமி, தனது கணவர் கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கார்த்திகேயன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மீது கடலூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

             இன்ஸ்பெக்டராக இருந்த மதி தனது செல்வாக்கை பயன்படுத்தி அடிக்கடி கார்த்திகேயனையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டினார். தொடர் மிரட்டலாலும், வழக்கில் தனக்கு எதிரான தீர்ப்பு வந்து விடுமோ என்ற அச்சத்தினாலும்  மனமுடைந்த கார்த்திகேயன் நேற்று இரவு அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கார்த்திகேயனின் தந்தை நடேசன் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி போலீசில் கொடுத்துள்ள புகாரில், 

             "தற்போது சென்னை அண்ணாநகரில் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி வரும் ஏ.வி.மதி தனது மகனை தொடர்ந்து மிரட்டி வந்ததால் தற்கொலை செய்து கொண்டார். எனவே சென்னை அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் மதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் மதி மீது 306 பிரிவின் கீழ் (தற்கொலைக்கு தூண்டியதாக) வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Read more »

பண்ருட்டியில் உழவர் சந்தை செயல்பாடு: கலந்தாய்வு கூட்டம்

பண்ருட்டி,: 

            பண்ருட்டியில் உழவர் சந்தை செயல்படுத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

             பண்ருட்டி உழவர் சந்தை மார்க்கெட்டிற்கும், பஸ் நிலையத்திற்கும் வெகு தொலைவாக உள்ளதால் பொதுமக்கள், உழவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கலெக்டர் உத்தரவின் பேரில் உழவர் சந்தையை மீண்டும் திறந்து செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள், விவசாயிகள், வியாபாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கினார். சேர்மன் பச்சையப்பன், துணை சேர்மன் கோதண்டபாணி, தாசில்தார் பன்னீர்செல்வம், பொறியா ளர் சுமதி செல்வி முன்னிலை வகித்தனர்.

             கூட்டத்தில் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் தனவேல், வேளாண்மை உதவி இயக்குனர் ஹரிதாஸ், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள் ராமலிங்கம், பிரேமா, வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜேந்திரன், காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜா, கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோர் பங்கேற்றனர். முன்னதாக உழவர் சந்தை, மார்க்கெட் கமிட்டி ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

பின்னர் ஆர்.டி.ஓ., முருகேசன் கூறுகையில், 

                 "தற்போது உழவர் சந்தை இடம் நகரத்தை விட்டு தூரமாக உள்ளது. உடனடியாக செயல்படுத்த வேண்டுமானால் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் செயல்படுத்தினால் வசதியாக இருக்கும் என ஆலோசனை தெரிவித் துள்ளனர். போக்குவரத்து சீரமைப்பது, வாகனங்கள் எண்ணிக்கை குறித்து போக்குவரத்து போலீசாரிடம் தகவல் தரும்படி கோரப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

Read more »

போலீஸ் பணிக்கு எழுத்துத் தேர்வு கடலூரில் நாளை நடக்கிறது

கடலூர்: 

        போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைக் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடலூரில் நாளை நடக்கிறது.

இதுகுறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

             தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் போலீஸ் இரண் டாம் நிலை (ஆண், பெண்), சிறைக் காவலர் (ஆண், பெண்), தீயணைப்பு படை வீரர் பணிக்கு எழுத்துத் தேர்வு நாளை (8ம் தேதி) நடக்கிறது. விண்ணப்பித்துள்ள 7,097 பேருக்கு கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வு நடக்கிறது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் தக்க சான்றுகளுடன் கடலூர் எஸ்.பி., அலுவலகத்தில் தொடர்பு கொண்டு அழைப்புக் கடிதம் பெற்றுக் கொள் ளலாம்.தேர்வு எழுத வருபவர்கள் 8ம் தேதி காலை 9 மணிக்குள் தங்களுக்குரிய தேர்வு மையத்திற்கு வர வேண்டும். மொபைல் போன், கால்குலேட்டர் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

கடலூரில் திருமண நேர்காணல்

கடலூர்: 

               கடலூரில் துளுவவேளாளர் சங்கம் சார்பில் நாளை திருமண நேர்காணல் நிகழ்ச்சி நடக்கிறது.

               துளுவவேளாளர் சங்கத்தின் சார்பில் 24ம் ஆண்டு விழா, கல்வி பரிசளிப்பு விழா, திருமண நேர்காணல் மற்றும் பொதுக்குழு உள்ளிட்ட ஐம்பெரும் விழா கடலூர் டவுன் ஹாலில் நாளை (8ம் தேதி) தலைவர் தியாகராஜன் தலைமையில் நடக்கிறது. திருமண அமைப் பாளர் முத்துக்குமரசாமி முன்னிலை வகிக்கிறார். சட்ட ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் வீரமணி, செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

Read more »

குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை : சிதம்பரம் நகரமன்ற கூட்டத்தில் பரபரப்பு

சிதம்பரம்: 

              சிதம்பரம் நகர மன்ற கூட்டத்தில் தி.மு.க., கூட் டணிக் கட்சியினர் சேர் மனை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. 

               சிதம்பரம் நகர மன்ற கூட்டம் சேர்மன் பவுஜியா பேகம் தலைமையில் நடந்தது. ஆணையர் (பொறுப்பு) மாரியப்பன் முன் னிலை வகித்தார். அதிகாரிகள் கவுன்சிலர்கள் பங் கேற்றனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

சேர்மன்: 

               சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் பற் றாக்குறையைப் போக்க 718. 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு நிதியாக 615.60 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தேவைப்படும் 102.62 லட்சம் ரூபாயில், 50 லட் சம் ரூபாய் நகராட்சி நிதியிலும், மீதித் தொகையை வீட்டு உபயோக குடிநீர் இணைப்பில் டெபாசிட் தொகையை உயர்த்த உறுப் பினர்கள் அனுமதிக்க வேண்டும்.

ஜேம்ஸ் விஜயராகவன் (தி.மு.க): 

             குடிநீர் பிரச்னை தொடர்பாக அரசாணை வெளியிட்டு 10 மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக் கையும் மேற்கொள்ளாத நிலையில் இத்திட்டம் நிறைவேற்ற நகராட்சி பங்களிப்பு தொகை 164.18 லட்சம் ரூபாயினை மக்கள் மீது திணிக்க வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த 4 ஆண்டில் தொலை நோக்கு சிந்தனையோடு செயல்பட்டிருந் தால் நகராட்சி நிதியில் இருந்து செலுத்தியிருக்கலாம். சேர்மன் செயலை கண்டித்தும், நகராட்சி திட்ட தீர்மானங்களை நகராட்சி மண்டல இயக்குனர் தலைமையில் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறி தி.மு.க., கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர். 

            10 நிமிடத்திற்கு பின் மீண்டும் உள்ளே வந்து இனி வரும் கூட்டங்களை நகராட்சியின் மண்டல இயக்குனர் தலைமையில் நடத்த மினிட் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றனர் .உடன் சேர்மன், கோரம் இல்லாததால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துச் சென்றார். ஆனால் கவுன்சிலர்கள் சேர்மன் அறைக்குச் சென்று தரையில் அமர்ந்து ஒரு மணி நேரம் முற்றுகையிட்டு பின்னர் கலைந்து சென்றனர். இதனால் நகரமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Read more »

விருத்தாசலத்தில் ராஜா வேடத்தில் விஜயகாந்த் மாற்று கட்சியினர் பரபரப்பு

விருத்தாசலம்: 

               விஜயகாந்த் எம்.எல்.ஏ., நடிக்கும் விருத்தகிரி படத்தின் ஒரு காட்சிக்கான படப்பிடிப்பு, விருத்தாசலத்தில் நேற்று நடந்தது. 

              அதில், ராஜா வேடத்தில் விஜயகாந்த் நடித்தார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், தே.மு. தி.க., தலைவருமான விஜயகாந்த், விருத்தகிரி என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். வெளிநாடு மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஒரு காட்சியாவது விருத்தாசலத்தில் படமாக்க வேண்டும் என தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் கோரிக்கை விடுத்தனர். 

                  இந்நிலையில், நேற்று காலை விருத்தாசலம் வந்த விஜயகாந்த், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிய பின், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த படப்பிடிப்பில் நடித்தார். ராஜா வேடம் போட்டு நடித்த காட்சியை படப்பிடிப்பு குழுவினர் படமாக்கினர். எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து எப்போதாவது ஒரு முறை தொகுதிக்கு வரும் விஜயகாந்த், தற்போது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தொகுதியில் சினிமா படம் எடுப்பது தே.மு.தி.க., வினர் மட்டுமின்றி மாற்றுக் கட்சியினரையும் பரபரப்பாக பேச வைத்துள்ளது.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

விருத்தாசலம்: 

               கல்லூரிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கக் கோரி விருத்தாசலத்தில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் ஜங்ஷன் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று ஆர்.டி.ஓ., முருகேசனிடம் மனு கொடுத்தனர்.மனுவில் கல்லூரிக்குச் சொந்தமாக 45 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் நாச்சியார் பேட்டை அருகில் சுமார் 35 பேர் கல்லூரி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கல்லூரி இடத்தை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். மாணவர்களிடம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., உறுதியளித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior