உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 11, 2010

ஊட்டம் தரும் "உரம் டீ'


சிதம்பரம்:
 
           தமிழக விவசாயிகள் நடவு செய்யும் பயிரில், தோட்டங்களில் வாட்டம் காணப்பட்டால் தழைச்சத்து தரும் யூரியா உரங்களை அதிகளவு பயன்படுத்துவது நடைமுறையில் உள்ளது. இதனால், குறுகிய கால வளர்ச்சி பயிரில் காணப்பட்டாலும் பூச்சிகள் மற்றும் நோய்த் தாக்குதலால் விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி மற்றும் இழப்புகளை சந்திக்கின்றனர். இத்தகைய சூழலில் அதிக மகசூல் மற்றும் லாபம் தரும் இயற்கை உர டீ பற்றி தமிழக விவசாயிகள் தெரிந்துகொள்வது அவசியம். 
 
 தயாரிக்கும் முறை:  
 
               விவசாயிகள் தங்கள் தோட்டங்களில், வயல்களில் சுற்றி கிடைக்கும் 5 வித இலை, தழைகள்- 5 கிலோ, 5 கிலோ சாணம், அரை கிலோ நாட்டுச் சர்க்கரை இவை அனைத்தையும் ஒரு சணல் சாக்கில் மூட்டையாக கட்டிக் கொள்ளவும், இத்துடன் அரை கிலோ கல்லையும் சேர்த்து விடவும், பின்னர் இந்த மூட்டையை ஒரு பிளாஸ்டிக் கேனின் உள்ளே கவிழ்த்து வைக்கவும். மூட்டை மூழ்கியிருக்கும் வரை தண்ணீர் ஊற்றவும், இந்த மூட்டையை மேலும், கீழும் அசைப்பது போலாக கயிறு கட்டியிருக்க வேண்டும், தினமும் விவசாயிகள் அதை அசைத்தால் மூட்டைக்குள்ளிருக்கும் சாறு, கேன் தண்ணீரில் கலக்கும். அது அடுத்த இரண்டு வார காலத்தில் உரம் டீயாக தயாராகிவிடும். 10 லிட்டர் நீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து எல்லாவிதமான பயிர்களுக்கும், மரங்களுக்கும் இதை தெளிக்கலாம். 
 
பிற பயன்கள்: 
 
         உரம் டீ விவசாய பொருள்களைக் கொண்டே தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவது கிடையாது. விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல், லாபம் இயற்கையில் பெற முடியும். பயிர்களுக்கு உரம் டீ கொடுத்தால் பயிர்கள் வேகமாக வளர்வதாக பாரம்பரியமிக்க விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.எனவே, குறைந்த செலவில் அதிக லாபம் பெற இயற்கை உரம் டீயை தங்களது தோட்டத்திலேயே தயாரித்து வளம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி. ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு தெளிக்க தயாரிக்கப்பட்டுள்ள இயற்கை உரம் டீ.

Read more »

சிறுபான்மையினர் ஆணையம் இன்று கடலூர் வருகை

கடலூர்:

        மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் வியாழக்கிழமை ​(மார்ச் 11) கடலூர் வருகை தர இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.​ ​ 

இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ 

                அருள்திரு வின்சென்ட் சின்னதுரை தலைமையிலான மாநில சிறுபான்மையினர் ஆணையம்,​​ வியாழக்கிழமை கடலூர் வருகிறது.​ காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தலைவர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் ஆணையம் சந்திக்க உள்ளது.​ சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களையும் பார்வையிடவும் ​ அவர்களின் குறைகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டறியவும் உள்ளனர்.​ ​சிறுபான்மை சமூகத்தினர் தங்கள் குறைகளையும்,​​ ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

நெய்வேலி:
 
                   நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஸ்கியூபாலம் அருகே புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக மத்திய அமைச்சர் முன்னிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் புதுதில்லியில் நடந்த ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கச் செயலர் வெங்கடேசன் தலைமை வகித்தார். சங்கத்தின் இதர நிர்வாகிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினார்.​ ஏஐடியுசி மாவட்டச் செயலர் சேகர் கண்டன உரையாற்றி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.​ உண்ணாவிரதத்தில் 150 பேர் கலந்து கொண்டனர்.

Read more »

திரைப்பட இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்



கடலூர்:

               கடலூர் திரைப்பட இயக்கத்தினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம்  நடத்தினர். 

              தமிழகத்தில் அரசியல்வாதிகளின் அத்துமீறல்கள்,​​ இளம் தலைமுறையினரின் மனநிலையைப் பாதிக்கும் வகையில்,​​ ஊடகங்களின் பாலியல் செய்தி வன்முறை,​​ அரசியல் தலைவரின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய காட்சி ஊடகம் மீது தாக்குதல்,​​ பா.ம.க.​ நிறுவனர் ராமதாஸ் காரில் சோதனை,​​ முன்னாள் அமைச்சர் அன்புமணியின் காரை வழிமறித்துச் சோதனை,​​ பென்னாகரம் பா.ம.க.​ தேர்தல் பணிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

                கடலூர் பெரியார் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் திரைப்பட இயக்கத் தலைவர் சாமி கச்சிராயர் தலைமை வகித்தார்.​ செயற்குழு உறுப்பினர்கள் காத்தமுத்து,​​ தர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ திரைப்பட இயக்குநர்கள் தமிழாகரன்,​​ தங்க வெங்கடேசன்,​​ உதவி இயக்குநர் தட்சிணாமூர்த்தி மற்றும் திரைப்பட இயக்க நிர்வாகிகள் வேணுநாதன்,​​ பட்டுராஜா,​​ தனம் மணியரசு உள்ளிட்டோர் பேசினர்.

Read more »

பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களை தடை செய்ய வேண்டும் : படிப்பில் நாட்டம் குறைவதாக பெற்றோர்கள் கவலை

விருத்தாசலம் : 

                   பள்ளிகளில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைவதாக பெற்றோர்கள் கவலை அடைகின்றனர். இதனை தடுக்க பள்ளிகளுக்கு, கல்வி துறை உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
 
                தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆண்டு இறுதி தேர்வுகள் முடிந்து மே மாதம் கோடைவிடுமுறை விடப்பட உள்ளது. விடுமுறைக்கு முன் மாணவர்களை ஊக்குவித்திட சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு விழாக்கள் நடத்தப்படுகிறது. பள்ளி ஆண்டு விழாக்களில் முதலில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பள்ளியின் ஆண்டறிக்கை எனப்படும் செயல்திட்டங்கள் வாசிக்கப்படும். பின்னர் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கவிதை, கட்டுரை, விளையாட்டு மற்றும் தனி நடிப்பு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும். அதனையடுத்து மாணவ - மாணவிகள் பங்குபெறும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
 
               கடந்த காலங்களில் பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளில் நாட்டின் வரலாற்றை நினைவு கூறும் நாடகங்கள், மாணவர்களின் அறிவை, சிந்தனைகளை அதிகரிக்க செய்யும் நிகழ்ச்சிகள், நாட்டின் முக்கிய தலைவர்கள் போல் வேடமணிந்து அவர்களது கருத்துகளை சக மாணவர்களுக்கு கூறுவது போன்ற மாணவ சமுதாய வளர்ச்சிக்கு உகந்த நிகழ்ச்சிகளே நடந்து வந்தது. மேலும் மாணவர்களை மகிழ்விக்கும் விதத்திலும், கலாசாரத்தை நினைவு கூறும் வகையிலும், சமூக விழிப்புணர்வு ஊட்டும் வகையிலும் கிராமியபாடல்கள், வில்லுபாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதுபோன்ற திறன்களை வெளிப்படுத்த ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு பலவகைகளில் ஊக்குவித்து வந்தனர். காலப்போக்கில் பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா பாடல்கள் மெல்ல மெல்ல ஊடுருவ தொடங்கியது. தொடக்கத்தில் சினிமா பாடல்களை மைக்குகள் பிடித்து பாடி வந்த மாணவர்கள் பின்னர் பாடலுக்கு டான்ஸ் ஆடத் தொடங்கினர்.
 
                இதன் உச்சகட்டமாக தற்போது தெருக்களில் நடக்கும் ரெக்கார்டுடான்ஸ் நிகழ்ச்சி போல் டேப் ரெக்கார்டரில் பாடல் ஒளிக்க அதற்கு மாணவ- மாணவிகள் பள்ளி மேடையில் நடனமாடி வருகின்றனர். இதற்கு தேர்வு செய்யும் பெரும்பாலான பாடல்கள் ஆபாச பாடல்களாகவும், அருவருக்கதக்க அங்க அசைவுகளுடன் கூடிய நடனங்களாகவே உள்ளன. இதுபோன்று டான்ஸ் ஆடும் மாணவர்களுக்கு பள்ளியிலே வாரக் கணக்கில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில தனியார் பள்ளிகளில் சிறப்பு பயிற்சியாளர்களை அழைத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு சினிமா பாடலுக்கு ஆடும் மாணவர்களுக்கு பாடல் முடிந்ததும் சக மாணவர்கள், பெற்றோர் பாராட்டி கைதட்டும் போது சாதனையின் உச்சத்தை அடைவதாக கருதுகின்றனர். அதனால் அவர்கள் தொடர்ந்து சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலே தங்களது சிந்தனையை செலுத்துகின்றனர். இதனால் படிப்பதை விட்டு விட்டு "டிவி'யில் ஒளிபரப்பாகும் சினிமா நிகழ்ச்சிகளை பார்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.
 
                ஆண்டு விழாக்களில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் குறைந்து, சினிமா நிகழ்சிகளுக்கு பள்ளிகள் முக்கியத்துவம் கொடுப்பதால் மாணவர்களுக்கு சினிமா மோகம் அதிகரித்து படிப்பு பாதிப்பதாக பெற்றோர்கள் கவலையடைகின்றனர். பள்ளிகளில் சினிமா நிகழ்ச்சிகள் நடத்துவது "பிஞ்சு நெஞ்சில் நஞ்சை கலப்பது' போலகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மாணவர்களின் எதிர்காலம் கருதியும், பெற்றோர்களின் கருத்தை ஏற்கும் விதத்திலும் பள்ளி ஆண்டு விழாக்களில் சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்க்க பள்ளிகள் தாமாக முன் வர வேண்டும். அதற்கு கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

Read more »

பண்ருட்டி தொகுதி காங்., உட்கட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு : மேற்பார்வையாளர்களாக நடித்த 4 பேரிடம் விசாரணை

பண்ருட்டி :

               பண்ருட்டி இளைஞர் காங்கிரஸ் தேர்தலில், தேர்தல் மேற் பார்வையாளர் என கூறிய புதுச்சேரி ஆசாமிகள் நான்கு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

              கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள சக்கரபாணி திருமண மண்டபத்தில் கடந்த 6ம் தேதி முதல், சட்டசபை தொகுதி இளைஞர் காங்., தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, கட்சியின் லோக்சபா தேர்தல் அலுவலர் காசீம் அலையன் தலைமையில், தொகுதி தேர்தல் அலுவலர் ஜோஸ் மேற்பார்வையில் ஓட்டுப் பதிவு நடந்து வருகிறது. இவர்களுடன் தேர்தல் மேற் பார்வையாளர்கள் என கூறிக் கொண்டு நான்கு பேர் கடந்த இரண்டு நாளாக வலம் வந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தொகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் வெற்றிவேல், வீரா, மூர்த்தி உள்ளிட்டோர், நேற்று தேர்தல் அலுவலர்களிடம் உங்களுடன் இருக்கும் நான்கு பேர் யார்? தேர்தல் மேற்பார்வையாளர் என்றால் அடையாள அட் டையை காட்டுமாறு கூறினர். தேர்தல் அலுவலர்கள் இருவரும் மழுப்பலாக பதில் கூறினர். ஆவேசமடைந்த கட்சி நிர்வாகிகள், தேர்தல் அலுவலர்கள் மற்றும் அவர்களுடன் இருந்த 4 பேரையும் கைது செய்யக் கோரி, சிறை பிடித்ததால் பதட்டம் நிலவியது. தகவலறிந்த பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் அஸ்கர் அலி மற்றும் போலீசார் விரைந்து வந்து, தேர்தல் அலுவலர்களுடன் இருந்த நான்கு பேரையும் போலீஸ்  ஸ்டேஷனுக்கு அழைத் துச் சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் புதுச்சேரி மாநில வடக்கு மாவட்ட காங்., பொதுச் செயலாளர் வின்சென்ட் ராஜ், சுப்பையா நகர் சந்திரசேகர், நெல்லித்தோப்பு சேகர், டிரைவர் கார்த்திகேயன் எனத் தெரிய வந்தது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். உட்கட்சி தேர்தலில், கட்சி மேலிடம் அனுப்பிய தேர்தல் அலுவலருடன், போலியாக  மேற்பார்வையாளர் எனக் கூறிக்கொண்டு நான்கு பேர் தேர்தல் பணிகளை கண்காணித்து வந்த சம்பவம் கட்சியினரிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more »

மத்திய அமைச்சர் சரத்பவார் பதவி விலக வேண்டும் : எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை பேட்டி


திட்டக்குடி : 

                விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய உணவுத்துறை அமைச்சர் சரத்பவார் பதவி விலக வேண்டும் என எம்.எல். ஏ., செல்வப்பெருந்தகை கூறினார்.
 
              திட்டக்குடி தொகுதியில்  எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

பின்னர் எம்.எல்.ஏ., செல்வப் பெருந்தகை கூறியதாவது: 

               தொகுதியில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி - தொழுதூர் மாநில நெடுஞ் சாலையை அகலப்படுத்தி சீரமைக்க 19.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முருகன்குடி மேம்பால பணி 2011 மே மாதம் நிறைவு பெறுமென பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணி தாமதமாகி வருகிறது. இருப்பினும் மீண்டும் பிரச்னை ஏற்படாமல் கரைகளை வலுவாகவும், தரமாகவும் சீரமைத்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். இறையூர் ரயில்வே மேம்பால பணிக்காக குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை அகற்ற வேண்டியள்ளது. அப்பகுதி மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்த பின் வீடுகளை காலி செய்ய வேண்டும்.
 
                  தமிழகத்தில் அடிப் படை வசதிகளை நிறைவேற்ற அரசு ஆய்வு செய்ய வேண்டும்.  மின்தட்டுப் பாட்டை போக்கிட காற்றாலைகளுக்கு அனுமதி வழங்கி நிரந்தர தீர்வு காண வேண்டும். மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் மசோதா வரவேற்கத்தக்கது. அதில் உள் ஒதுக் கீடு வழங்க வேண்டும். இல்லையேல் குறிப்பிட்ட மகளிர் மட்டுமே பயனடைய முடியும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட மாநில அரசுகளே விலை நிர்ணயம் செய்யவும், தேவையான உணவு பொருட் களை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்க வேண்டும். விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த தவறிய மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவார் பதவி விலக வேண்டும். இவ்வாறு எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை கூறினார். பேட்டியின்போது பி.எஸ்.பி., மாவட்ட தலைவர் கருப்புசாமி, செயலாளர் காமராஜ் உடனிருந்தனர்.

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் சீத்தாராமன் திடீர் ஆய்வு


கடலூர் :

             கடலூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நடக்கும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் சீத்தாராமன் நேற்று ஆய்வு செய்தார்.

                 கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவுகள் புதுப்பிக்கப் பட்டு வருகிறது. இந்த பணியை கலெக்டர் சீத்தாராமன் நேற்று ஆய்வு செய் தார். பின்னர் இணை இயக் குனர் ஜெயவீரக்குமார், நிலை மருத்துவர் கோவிந் தராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பணிகள் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது:

                விபத்து மற்றும் அவசர சிகிச்சை பகுதி 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. நோயாளிகள் வசதிக்காக அவசர சிகிச்சை பகுதி மூன்று பிரிவுகளாக பிரித்து, கூடுதல்  படுக்கைகளுடன் கூடிய ஒரே அறையாக மாற்றி குளிர் சாதன வசதி செய்யப்படுகிறது. முன் பகுதியில் டாக்டர்கள் அறை இரண்டு படுக்கைகளுடன் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் அனைத்தும் 10 நாளில் முடிவடையும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். அப்போது டி.ஆர்.ஓ., நடராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Read more »

'பிட்'அடிக்கும் மாணவர்கள் சிக்கினால் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை

கடலூர் : 

               பறக்கும்படையினரிடம் "பிட்' அடிக்கும் மாணவர்கள் பிடிபட்டால் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி எச்சரித்துள்ளார்.
 
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

                தற்போது நடக்கும் பிளஸ் 2 பொது தேர்வில் அரசு அறிவித்தபடி தேர்வு மையத்தில் விடைகளை துண்டு சீட்டில் எழுதி வைத்திருத்தல், விடை தாள்களை மாற்றிக் கொள் வது, வினாத் தாள்களில் குறிப்பு எழுதுவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் மாணவர்கள் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படுவார்கள். மேலும் தேர்வு மையத்தில் ஆள்மாறாட்டம் செய் பவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். . தேர்வு மையத்திற்கு செல் லும் முன் மாணவர்களை தேர்வு மைய அறைக் கண்காணிப்பாளர் தீவிர சோதனை செய்து அனுப்ப வேண்டும். அதன்பின் துண்டு சீட்டு வைத்து எழுதியதாக பறக்கும் படையினரிடம் மாணவர்கள் பிடிபட்டால் தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை  மேற் கொள்ளப்படும். மாணவர்கள் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தேர்வு எழுத வேண்டும்.  இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

கடலூர் முத்தாலம்மன் கோவிலில் புதிய தேர் செய்யும் பணி தீவிரம்

கடலூர் : 

                கடலூர் திருப்பாதிரிபுலியூர் முத்தாலம்மன் கோவிலில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணி நடந்து வருகிறது.
 
                 கடலூர் திருப்பாதிரிபுலியூர் உள்ள முத்தாலம்மன் கோவில் தேர் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இத்தேர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து இயங்காமல் இருந்தது. இந்நிலையில் முத்தாலம்மன் தேர் திருப்பணி கமிட்டியினர் மற்றும் பொது மக்கள் இணைந்து 22 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவந்திபுரம் ஸ்தபதிகள் தலைமையில் கள்ளக்குறிச்சி, திருவதிகையைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் தேர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர் பீடம் இலுப்பை மரத்தாலும், சிலைகள் வேங்கை மரத் தாலும், சக்கரங்கள் இரும்பாலும் அமைக்கப்படுகிறது. தேரின் அடி பீடம் 10 அடி உயரம், மேல் பகுதி  21 அடி உயரம், 11 அடி அகலத்தில் மொத்தம் 31 அடி உயரத்தில் தேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி ஐந்து மாதங்களில் முடிவடையும் என தேர் திருப்பணி கமிட்டியினர் தெரிவித்தனர்.

Read more »

சீரழிகிறது கடலூர் நகராட்சி மைதானம்

கடலூர் : 

              கடலூர் நகர மக்களின் பொழுதுபோக்கு இடமாக உள்ள நகராட்சி மைதானம் மண் மற்றும் காரைகள் கொட்டி சீரழிக்கப் பட்டு வருகிறது.
 
                  கடலூர் நகர மக்களுக்கு பொழுது போக்கு இடமாக சில்வர் பீச் மற் றும் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள நகராட்சி மைதானம் விளங்கி வருகிறது. பீச்சிற்கு வெகு தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதால் வயதானவர்கள் தினசரி மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள நகராட்சி மைதானத்திற்கு வருகின்றனர். திறந்த வெளியாக உள்ள இந்த திடலில் முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மாலை நேரங்களில் கூடி பேசி மகிழ்ந்து வருகின்றனர். இதனால் மாலை நேரங்களில் நகராட்சி மைதானம் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். தற்போது கோடை காலம் துவங்கிவிட்டதால் கூட்டம் அதிகரிக்க துங்கியுள்ளது. மக்களின் பொழுது போக்கு இடமாக உள்ள இந்த மைதானத்தை சமீப காலமாக மண் மற்றும் சிமென்ட் காரைகளை கொட்டி பாழாக்கி வருகின்றனர். இவ்வழியே தினசரி நகராட்சி அதிகாரிகள் பலர் கடந்து சென்று வந்த போதிலும், இதனை கண்டுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக நேற்று மஞ்சக்குப்பத்தில் பாதாள சாக்கடைக்காக  தோண்டிய மண் மற்றும் கற்களை டிராக்டரில் ஏற்றி வந்து மைதானத்தில் கொட்டினர். இனியும் நகராட்சி நிர்வாகம் விழித்துக் கொள்ளவில்லை எனில் மிக விரைவில் இந்த மைதானம் குப்பை கொட் டும் திடலாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Read more »

கேபிள் 'டிவி' நலவாரியம் பதிவு செய்ய வேண்டுகோள்

கடலூர் : 

                  கேபிள் "டிவி' தொழிலாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் சீத்தாராமன்  கேட்டுக்கொண்டுள்ளார்.
               
                     கேபிள் "டிவி' தொழிலாளர்களை இனம் கண்டு அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்குவது போல், பல்வேறு உதவிகள் வழங்கப்பட வேண்டும். இதற்காக கேபிள் "டிவி' தொழிலாளர்கள் நலவாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய விண்ணப்பம் மற்றும் தகுதிகள் குறித்தான விபரங்களுக்கு கலெக்டர் அலுவலத்தில் செயல்பட்டு வரும் இலவச டிவி பிரிவில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பதிவு செய்திட கட்டணம் ஏதுமில்லை. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Read more »

பல்வேறு அமைப்புகள் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம்


கடலூர் :

             மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

சி.முட்லூர்: 

                 அரசு கல்லூரியில் நடந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பிரேமகுமாரி வரவேற்றார். பேராசிரியர்கள் சித்ரலேகா, பாலசுப்ரமணியன், சாந்தி முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரிமா சங்க மாவட்ட துணை ஆளுநர் சுவேதகுமார் பரிசு வழங்கினார்.

வேப்பூர்: 

                  அய்யனார் மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவிற்கு தாளாளர் மோகன் தலைமை தாங்கினார். முதல்வர் சோமசுந்தரம், துணை முதல்வர்கள் சாமிநாதன், கந்தசாமி முன்னிலை வகித்தனர். கல்வி ஆலோசகர் வசந்தமல்லிகா கவுரவிக்கப்பட்டார்.

கடலூர்: 

                  குமாரப்பேட்டையில் நடந்த விழாவிற்கு சிப்காட் ஜேஸிஸ் தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் ஹாஜாமொகிதீன் முன்னிலை வகித்தார். ஜூனியர் சேம்பர் தலைவி உஷாராணி, அனுசுயா சிறப்புரையாற்றினர். போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு மண்டல இயக்குநர் சத்தியா, நாகராஜன், ரகுமான்பேகம், சைபுதீன், கார்த்திகேயன் பரிசு வழங்கினர்.

                 கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவிற்கு கருணை கரங்கள் நிறுவன தலைவர் கண்ணன்  தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வள்ளி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். செயலாளர் கங்காதரன் வரவேற்றார். ஞானபாரதி, ஓவியர் ரமேஷ், வக்கீல்கள் தாஸ், சாமிக்கண்ணு, மாணவிகள் சரண்யா, ஜோதி பேசினர். பொருளாளர் மகேந்திரவர்மன் நன்றி கூறினார்.

 புவனகிரி: 

                  மங்களம் பெண் கள் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த விழாவிற்கு முதல்வர் மணவாளன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ராஜதுரை வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் "மந்திரமா தந்திரமா' எனும் நிகழ்ச்சி நடத்திக் காட்டினார். மாநில நிர்வாகிகள் கவிதா, நாராயணன் ஆகியோர் பெண்களின் சமத்துவம், பெண் சிசு கொலை தவிர்ப்பு, வரதட்சணை கொடுமை எனும் தலைப்பில் பேசினர். நிர்வாக இயக்குனர் கலைச்செல்வி, பேராசிரியர் விக்னேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்: 

                  கடலூர் எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சுகுமாறன் வரவேற்றார். பெண்களுக்கான சட்ட உதவிகள் குறித்து பி.எஸ்.என்.எல்., மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பை சேர்ந்த தாஸ் உரையாற்றினார். பெண்களுக்கு எதிராக தற்போது செயல்படும் சட்டங்களும், ஓட்டைகளும் குறித்து மருதவாணன் பேசினார். பி.எஸ். என்.எல்., மகளிர் துணைக்குழு சார்பில் விஜயலட்சுமி, வங்கி ஊழியர் மகளிர் துணைக்குழு மீரா, அறிவியல் இயக்கம் சார்பில் காத்ரீன், பால்கி பேசினர். காமாட்சி நன்றி கூறினார்.
  
நெல்லிக்குப்பம்: 

                வரக்கால்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஐக்கிய நாடுகள் தகவல் மையம், ராமச்சந்திரா மிஷன் இணைந்து நடத்திய கட்டுரை போட்டியில் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவிகள் கவுசல்யா, காயத்ரி ஆகியோருக்கு பரிசு அளித்தனர். பள்ளி மாணவி சசிகலாவின்  நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது.

மேல்பட்டாம்பாக்கம்: 

                 கிருஷா அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவிற்கு விமலா தலைமை தாங்கினார். ராஜலட்சுமி, அமுதா முன்னிலை வகித்தனர். அருள்மொழி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழரசி, அன்னை தெரசா சேவை மைய மாநில தலைவர் ரத்தினம், திரிசங்கு, கவிஞர் கோபி சிறப்புரை ஆற்றினர். சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Read more »

போதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கிள்ளை :

              போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விவசாய சங்கத் தலைவர் ரவீந்திரன் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:   

                       சிதம்பரத்தில் இருந்து சி.முட்லூர் வழியாக பி.முட்லூர் வரை  சாலை மேம்பாட்டுத்திட்டத்தில் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. குருமாந் திட்டில் இருந்து  சி.முட் லூர் அரசு கல்லூரி வரை  தார் சாலையாக அமைக்கப் பட்டுள்ளது. மற்றப்பகுதியில் சாலை அமைக்கும் பணி  நடந்து வரும் நிலையில் இருசக்கர வாகனங்கள், மினிலாரி உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்படுகிறது. நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வேகமாண வந்தவர், சாலையில் சைக்கிளில் சென்றவர் மீது மோதி பலத்த காயத்துடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இப்பகுதியில் தினசரி ஏற்படும் விபத்தை கட்டுப் படுத்தும் வகையில்  சாலையில் பேரிகார்டு அமைப்பதுடன், குடி போதையில் வாகனம் ஓட்டுவர்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

A science park waiting for formal inauguration


The District Science Park in Cuddalore serves just as a showcase. 

 
CUDDALORE: 

               Not many students and teachers know that there exists a science park on the campus of the office of the Chief Educational Officer in Cuddalore. Occupying a vast space the park consists of objects delineating various concepts in physics subject. It is intended to teach the functioning of various devices, using the play-by-learn method.

                    The impressive periodic table greets the visitors to the park. There are objects such as pin-hole camera, simple camera, musical pipe, 3-D pendulum, revolving periscope, gravity ball, pulleys and so on. The principles of lever operation, gravitational pull that propels the oscillation of pendulum, how mass and weight, and mass and inertia could be ascertained, and how the magnitude of a plate could be arrived at are well defined. There is, of course, the universally known Newton's third law of motion (Every action has equal and opposite reaction) that the visitors will not miss. What is significant about the science park is that each concept is well defined and a supporting object is put up for easy understanding.

                   It is believed that even a single visit to the park would make the students grasp the concepts easily and commit them to memory. But what is disconcerting is that all the concepts are related to physics subject and explained in English. It defeats reason why in an educationally backward district like Cuddalore such a park should be entirely devoted to physics and that too in English. Chief Educational Officer C.Amudhavalli told this correspondent that the park was set up during 2005-06 at an expenditure of Rs. 5 lakh sanctioned under the Rashtriya Sam Vikas Yojana programme.

             However, it was not formally inaugurated, and, having discerned its utilitarian value her predecessor (former CEO) R.Veerasamy kept it open for the school students. Ms. Amudhavalli further said that the park was now under the control of the Manjakuppam government higher secondary school. A part of the net-roofing put up in the park has come down and some of the objects need repair. A few curious students who enter the premises mistaking it for a regular park are baffled by the explanatory panels put up there. It is believed that the park can be of real value only when the students are taken there regularly and the explanatory notes are also put up in Tamil language.

Read more »

Natyanjali from March 13

CUDDALORE: 

         The annual Natyanjali festival will be held on the premises of the Sabanayagar temple (Natarajar temple), Chidambaram, from March 13 to 17.

           President of the Natyanjali Trust A.K.Natarajan told TheHindu that this would be the 29th edition of the dance festival. During the five-day event dancers from India and various other countries such as Australia, France, Sri Lanka and Singapore would perform classical dance forms like Bharatha Natyam, Kuchupudi, Mohini Attam, Kathak, Odissi, Sattriya, Manipuri and Chaau. In all, 450 applications were received by the trust and after scrutiny 55 performers and dance schools had been selected. On the inaugural day, the event would start with devotional music followed by the performance of the students of the Faculty of Fine Arts, Annamalai University. Padma Subramaniam and students of Nrithyodhaya, and Sandip Mallick were slated to perform Bharata Natyam on the first day. The group performers would far outnumber the individual performers.

               For instance, the students of the Natiya Kala Mandir -- Sri Lanka, Sri Nataraja Natyalaya--Chidambaram, Rama Nataka Niketan --Secundarabad, Bharatanjali Nrtyalaya--Mumbai, Nrityopasana--Neyveli, Padmam School--Bangalore, Parul Devi & troupe — Imphal, TriNetra Chhau Dance Centre — Jharkhand, Nathan School of Dance — Ahmedabad, Bharatha Kalalayam -- Chennai and so on would render their performance during the course of the fete. Mr. Natarajan said if it were a troupe a fair number of dancers would get the chance to perform. He further said that about a couple of years ago, the Poduhu Dikshithars imposed restrictions that the dance performance should not go beyond 10.30 p.m., because the temple rituals would get over by that time. However, courtesy demands that both should be informed about the programme. Following the tradition a Podhu Dikshithar would preside over every day's event. Mr Natarajan further said that it was proposed to celebrate the next year event--30th anniversary—in a grand manner and also to bring out a souvenir delineating all classical dance forms.

Read more »

IRB personnel undergo training


IRB personnel at a training session in Cuddalore. 
 
CUDDALORE: 

           Personnel of the Indian Reserve Battalion (IRB), recently deployed in the Union Territory of Puducherry, are undergoing training in swimming at the Anna Stadium here.

         They are imparted training by Inspector Panchakcharam, a Sub-Inspector and two head constables from the Commando Training School, Adayar, Chennai. Mr. Panchakcharam told The Hindu that 70 IRB personnel would also undergo 40 days of rigorous training in various skills. They had to acquire mastery over 35 subjects, including bomb detection and disposal, fire fighting, rifle shooting, martial arts, weapon handling, sniper training, mob operation, night vision map reading, field craft training and survival tactics in jungles.

Read more »

மாற்று இடம் கோரி தாசில்தாருக்கு மனு

திட்டக்குடி : 

              பெண்ணாடம் மேம்பாலம் பணியால் பாதிக்கும் நபர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கிட கோரி மனு அளிக்கப்பட்டது.
 
                விருத்தாசலம்- ராமநத் தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் டில் மேம்பாலம் அமைக் கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பெ.பொன் னேரி, இறையூர், அம் பேத்கர் பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் உள்ள சுமார் 50 வீடுகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத்துறை மற்றும் மேம்பால கட்டுமான நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து வீடுகளை அகற்றும் முன்பாக பட்டாவுடன் மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டுமென நெடுஞ்சாலையோர குடியிருப்பு வாசிகள், திட்டக்குடி தாசில்தாரிடம் மனு அளித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கண்ணன் உறுதிளித்தார்.

Read more »

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் உணவு இடைவேளை பிரசாரம்

திட்டக்குடி : 

           திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உணவு இடைவேளை பிரசாரம் மேற் கொண்டனர்.
 
            வருவாய்த்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், மேம்படுத்தப் பட்ட ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் 30 சதவீதம் வழங்குதல் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக் குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உணவு இடைவேளை பிரசார இயக்கம் நடந்தது. வட்டத்தலைவர் அண்ணாதுரை தலைமை தாங் கினார். மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இணை செயலாளர் கோடி வரவேற்றார். ரத்தினகுமார், சிவா வாழ்த்தி பேசினர். மாவட்ட தலைவர் எழிலன் தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார்.

Read more »

பலா விளைச்சல் அமோகம் பண்ருட்டி விவசாயிகள் மகிழ்ச்சி

பண்ருட்டி : 

               பண்ருட்டி பகுதியில்  பலா விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
                  பண்ருட்டி என்றாலோ அனைவருக்கும் நினைவுக்கு வருவது பலாப்பழம் தான். பண்ருட்டி பகுதியில் மானவாரி மற்றும் பாசனம் என மொத்தம் 2,500 ஏக்கர் பரப்பளவில் பலா மரம் பயிரிடப்பட் டுள்ளது. இதில் பாசனப்பகதி பலாப்பழத்தைவிட, மானவாரி நிலத்தில் விளையும் பலாப்பழம் கூடுதல் ருசியாக இருக்கும். தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பலா விளைச்சல் இருந்த போதிலும், பண்ருட்டி பகுதி பலாப்பழம் வெள் ளையாக இல்லாமல்  தங் கம் போல் கலர் வருவதோடு, ருசியாகவும் இருக் கும். இதன் காரணமாகவே சீசன் நேரத்தில் பண்ருட்டியில் இருந்து ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு பாலா பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை சீராக இருந்ததால், மானவாரி நிலங்களில் உள்ள பலாமரங்கள் செழித்து தற்போது பலாக் காய்கள் அதிகம் காய்த்துள்ளன. கூடுதல் விளைச்சலால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது விற்பனைக்கு வரும் பலாப்பழங்கள் கூடுதல் சுவையில்லாவிட் டாலும் கிலோ  20 ரூபாய் விலை போகிறது. ஏப்ரல் முதல் வரும் பலாப்பழம் கிலோ  10 ரூபாயாக குறைய வாய்ப்புள்ளது என  வியாபாரிகள் கூறுகின்றனர்.

Read more »

கிருஷ்ணங்குப்பம் கிராமத்தில் 24ம் தேதி மனுநீதி நாள் முகாம்

கடலூர் : 

              கிருஷ்ணங்குப்பத்தில் வரும் 24ம் தேதி மனு நீதி நாள் முகாம் நடக்கிறது.
 
                  குறிஞ்சிப்பாடி தாலுகா கிருஷ்ணங்குப்பத்தில் வரும் 24ம் தேதி டி.ஆர்.ஓ.,  நடராஜன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது. அதனையொட்டி பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவகத்தில் தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (11ம் தேதி) காலை 10 மணிக்கு வருவாய்த்துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் நேரில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற உள்ளார்கள். பெறப்படும் மனுக்கள் மீது எடுத்த நடவடிக்கை விபரத்தை மனுநீதி நாளன்று தெரிவிக்கப்படும். மேலும் மனுநீதி நாளன்று கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம், விவசாய திட்டங்களின் செயலாக்கம், ஊட்டச்சத்து மற்றும் சிறுசேமிப்பு ஆகிய துறைகளின் கண்காட்சி, செயல் விளக்கங்களை சம்மந்தப் பட்ட துறையினர் செய்து காண்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more »

தனியார் பஸ்களில் திடீர் கட்டண உயர்வு

நெல்லிக்குப்பம் :

                கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்களில் திடீரென  கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
 
               தமிழகத்தில் பஸ் கட்டணம் பல ஆண்டாக உயர்த்தவில்லை. ஆனால், டீசல் விலை பலமடங்கு உயர்ந்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டு வரவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் தாங்களாவே கட்டணத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர். வெள்ளைகேட்டில் இருந்து கடலூர் செல்ல 3 .50 ரூபாய் வசூல் செய்ததை 4 ரூபாயாகவும், வாழப்பட்டு, மேல்பட்டாம்பாக்கத்தில் இருந்து கடலூருக்கு 5.50 ரூபாயாக இருந்ததை 6 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தியுள்ள கட்டணத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

மளிகை வாங்கினால் சர்க்கரை : ரேஷன் கடைகளில் 'அடாவடி'

நெல்லிக்குப்பம் : 

                நெல்லிக்குப்பம் ரேஷன் கடையில் மளிகை பொருள் வாங்கினால் தான் சர்க்கரை வழங்கப்படுமென கூறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
                தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 பைசாவுக்கு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு ரேஷன் கார்டிற்கு இரண்டு கிலோ சர்க்கரை  வழங்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ சர்க்கரை 40 ரூபாய். இதனால் பொதுமக்கள் ரேஷன் கடையில் சர்க் கரை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு மிளகாய் தூள், மளிகை சாமான், கோதுமை மாவு இவற்றில் ஏதேனும் ஒன்றை 50 ரூபாயிற்கு வாங்கினால் மட்டுமே சர்க்கரை வழங்கப்படும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதனை பொதுமக்கள் சிலர் தட்டிக் கேட்டால், ஓடாத பொருட்களை கொடுத்து கட்டாயம் விற்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். பிறகு நாங்கள் என்ன செய்வது என விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். மக்களுக்கு தேவையான பொருட்களை வழங் கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நடுவீரப்பட்டு பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி

நடுவீரப்பட்டு : 

            நடுவீரப்பட்டு மெயின் ரோட்டில் உள்ள சின்டக் டேங்க் பழுதடைந்துள்ளததால் குடிநீர் வீணாகி வருகிறது.
 
                  நடுவீரப்பட்டு ஊராட் சியில் ஒன்றிய நிதியில் மெயின் ரோட்டில் இரண்டு சின்டக் டேங்க் வைத்து  மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி சப்ளை செய்யப்பட்டது.  இதில் ஒரு டேங்க் சில தினங்களாக பழுதடைந்து தண்ணீர் முழுவதும் வெளியேறி விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் முழுவதும் அப்பகுதியில் தேங்கி நிற்பதால் கொசு உற் பத்தி அதிகரித்து வருகிறது. இதனை அதிகாரிகள் கவனித்து, டேங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

ஆஸ்பெட்டாஸ் ஓடுகளால் குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு

நடுவீரப்பட்டு : 

               தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையத்தின் கட்டடங்கள் பெரும்பாலும் "ஆஸ்பெட்டாஸ்' எனப்படும் கல்நார் ஓடுகளால் உள்ளதால் குழந்தைகள் மிகவும் பாதிக் கப்பட்டு வருகின்றனர்.
 
               தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த பகுதியில் உள்ள குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு அதே பகுதிகளில் குழந்தைகள் மையங்கள் அமைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மையத்தில் ஒரு ஊழியர் மற்றும் ஒரு சமையல் உதவியாளர் உள்ளார்கள். அவர்கள் அப்பகுதியில் பள்ளி செல்ல வயது வராத பிள்ளைகளுக்கு மதிய உணவு மற்றும் கல்வி கற்று தருகின்றனர். அந்த குழந்தைகள் மைய கட்டடம் "ஆஸ்பட்டாஸ்' எனப் படும் கல்நார் ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பெட்டாஸ் ஓடுகள் சுற்று சூழலை மாசுபடுத்துவதோடு, குழந்தைகளின்  உடல் நலத்திற்கும் தீங்கு விளைவித்து வருகிறது. ஆஸ் பெட்டாஸ் ஓடுகளில் படும் சூரிய ஒளி அந்த கடும் வெயிலை சேகரித்து வைத்து நாள் முழுவதும் அந்த வெயிலின் தாக் கத்தை உள்ளே இறக்குகி வருகிறது. இதனால் குழந் தைகளுக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கிறது. மேலும், தோல் வியாதி வரக்கூடிய ஆபத்தும் உள்ளது. குழந்தைகள் மையத்தில் உள்ள கழிவறை மிகவும் குறைந்த உயரம் உள்ளதால் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் கழிவறை செல்ல மிகவும் அவதிப்பட்டுவருகின்றனர். கல்வித்துறையில்  அடுக்கடுக்காக பல மாற் றங்களை கொண்டு வரும்  தமிழக அரசு குழந்தைகைள் மற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆஸ்பெட்டாஸ் ஓடுகளை கலைந்து "கான்கிரீட்' கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

பல்கலை., மாணவர்கள் இறந்த சம்பவம் : வருவாய்த் துறையினரிடம் விசாரணை

சிதம்பரம் : 

                  சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மாணவர்கள் நான்கு பேர் இறந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த விசாரணை அதிகாரி நேற்று வருவாய்த்துறையினரிடம் விசாரணை நடத்தினார்.
 
               சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., இன்ஜினியரிங் படித்த ஜார்கண்ட் மாணவர் கவுதம்குமார் 28ம் தேதி விபத்தில் இறந்தார். இந்த சம்பவத் தால் ஏற்பட்ட ரகளையில் போலீசார் விரட்டி அடித்ததில் அருகே உள்ள பாலமான் வாய்க்காலில் குதித்து சுமித்குமார்,  முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன் குமார் ஆகிய மூன்று மாணவர்கள் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கடலூர் டி.ஆர்.ஒ., நடராஜனை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. அவர் கடந்த 5ம் தேதி சிதம்பரத்தில் சம் பவம் நடந்த இடங் களை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து நேற்று சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தனித்தனியாக விசாரித்தார்.தாசில்தார் காமராஜ் மற்றும் திருவேட்களம், சிதம்பரம் நகரம், கொத்தங்குடி பகுதி வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர் பாக பொதுமக்களிடம் வரும் 18ம் தேதி சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்  பொது விசாரணை நடக்கிறது.

Read more »

ஒரு லட்சம் நகை, பணம் திருட்டு : மர்ம ஆசாமிகளுக்கு வலை

பரங்கிப்பேட்டை : 

               வீடு புகுந்து ஒரு லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
 
                   கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த ஆணையாங்குப்பத்தை சேர்ந்தவர் சாந்தா (50). இவர் தனது மகள் புஷ்பவள்ளியை வீட்டில் விட்டுவிட்டு நெல் அறுவடைக்கு வயலுக்கு சென் றுள்ளார். வெளிநாட்டில் இருந்து போன் வந்ததால் புஷ்பவள்ளி வீட்டை பூட்டி வெளியில் இருந்த நாற்காலியில் சாவியை  வைத்துவிட்டு மொபைலை எடுத்துக்கொண்டு வயலுக்கு சென்றார். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ வைத்திருந்த 10 சவரன் நகை, ரொக்கம் 15 ஆயிரம், வெள்ளி கொளுசு  மற்றும் மொபைல் போன் திருடு போயிருந்தது. இதுகுறித்து சாந்தா கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

Read more »

வாலிபர் அடித்து கொலை சக தொழிலாளி கைது

குறிஞ்சிப்பாடி : 

               குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் காஸ் அடுப்பால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
 
                விருத்தாசலம் அடுத்த சாத்தப்பாடியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. போர்வெல் வேலை செய்து வருபவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(23), மாயி (எ) பாலமுருகன்(25) மற்றும் சிலர் வடலூர் நரிக்குறவர் காலனி அருகே தனியார் இடத்தில் தங்கி கடந்த 10 நாளாக போர்வெல் போடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 8ம் தேதி இரவு அனைவரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த மாயி சமையல் செய்வதற்காக வைத்திருந்த இரும்பு காஸ் அடுப்பை எடுத்து பாலமுருகன் தலையில் தாக்கினார். படுகாயமடைந்த அவர் நெய்வேலி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். உடன் பாலமுருகனின் உடல் சாத்தப்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள் நடந்த சம்பவம் குறித்து  கம்மாபுரம் போலீசில் புகார் செய்தனர். சம்பவம் நடந்தது  வடலூர் போலீஸ் சரகப் பகுதி என்பதால்  கம்மாபுரம் போலீசார், வடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நெய்வேலி இன்ஸ்பெக்டர் சேகர், வடலூர் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற் றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு சாத்தப்பாடிக்கு சென்று பாலமுருகனில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிந்து மாயியை கைது செய்தனர்.

Read more »

புவனகிரியில் மா.கம்யூ., உண்ணாவிரதம்


புவனகிரி : 

                 புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பு சுவர் அமைக்க கோரி மா.கம்யூ.,வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
 
              புவனகிரி வெள்ளாற் றில் தடுப்பு சுவர் அமைக்ககோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறையை கண்டித்து மா.கம்யூ., சார்பில் புவனகிரி பாலம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர் மணவாளன் தலைமை தாங்கினார். முரளி, மகேந்திரன், ராஜன், தட்சிணாமூர்த்தி, ராஜேஷ், சேஷாத்திரி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பேசினார். விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ராஜாராமன், கற்பனைசெல்வம், புவனகிரி நகர செயலாளர் ராமலிங்கம், சதானந்தம், வெற்றிவேல், கதிர்வேல், ஆனந்தி உள்ளிட்ட பலர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார்.

Read more »

அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி உண்ணாவிரதம்

விருத்தாசலம் : 

                    விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மூன்று மாதம் ஊதியம் வழங்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர்.
 
                     தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யகோரியும், மூன்று மாதமாக வழங்காமல் உள்ள ஊதியத்தை வழங்க கோரியும் வகுப்பு புறக்கணிப்பு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் 8, 9 ஆகிய தேதிகளில் வகுப்பு புறக்கணிப்பு உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று வகுப்புகளை புறக் கணித்து உண்ணாவிரதம் இருந்தனர். கிளை தலைவர் மன்னார்சாமி, செயலாளர் மருதமுத்து, பொரு ளாளர் சம்பத் உள்ளிட்ட 13 பேர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
 
கடலூர்: 

                 அரசு பெரியார் கல்லூரியில் சுய நிதி பாடப்பிரிவில் பணிபுரியும்  கவுரவ விரிவுரையாளர்கள் நடேசன் தலைமையில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவு மாணவ, மாணவிகள்  ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Read more »

அரசு பஸ் மோதி வாலிபர் பலி : டிரைவருக்கு 4 மாதம் சிறை

ராமநத்தம் : 

                பஸ் மோதி வாலிபர் இறந்த வழக்கில் டிரைவருக்கு 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
                         பெரம்பலூர் மாவட்டம் திருவாலந்துறையை சேர்ந்தவர் பழனிமுத்து மகன் கொளஞ்சி (24). இவர் கடந்த 2008 மார்ச் 21ம் தேதி திட்டக்குடி அடுத்த லட்சுமணபுரம் செல்வதற்காக ராமநத்தம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியே வந்த அரசு பஸ் மோதியது. அதில் கொளஞ்சி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார், அரசு பஸ் டிரைவரான கம்மாபுரத்தை சேர்ந்த செந்தில்குமாரை கைது செய்தனர். அவர் மீது திட்டக்குடி கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ்பாபு, விபத்து ஏற்படுத்திய டிரைவர் செந்தில்குமாருக்கு 4 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ரூபாய் அபராதம் விதித்தார்.

Read more »

மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                 தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

                       சங்க தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் புகழேந்தி வரவேற்றார். குமாரவேலு, ரஞ்சித்குமார், இந்துமதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், கடந்த அக்டோபர் 3ம் தேதி மின்வாரிய அமைச்சர் அறிவித்த உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் இடையேயான 2:3 விகிதாச்சாரத்தை வாரியம் முழுவதும் உடன் அமல் படுத்த வேண்டும். மின் வாரியத்தை நிர்வகித்திட மனித வள மேம்பாட்டில் பயிற்சி பெற்றவரையே நியமிக்க வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Read more »

மணல் கடத்தல்: 2 பேர் கைது

கடலூர் : 

                 மணல் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து இருவர் கைது செய்யப்பட்டனர். தூக்கணாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எடப்பள்ளம் கூட்டுரோடு அருகே வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி பெண்ணையாற்றிலிருந்து மணல் கடத்தி வருவது தெரியவந்தது. அதன் பேரில் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், டிரைவர் மணிபாலன் (21), கிளீனர் வினோத் (17) ஆகியோரை கைது செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior