கடலூர்:
கடலூர் முதுநகரில் ரெயில்வே நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் ஒருசில ரெயில்கள் மட்டுமே நின்று சென்றன. இங்கு பிற ரெயில்கள் நிற்காமல் சென்றதால் ரெயில் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
அதையடுத்து கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களையும் நிறுத்த கோரி இன்று (2-ந்தேதி) கடையடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ்நாடு மீனவர் பேரவை உள்பட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் இந்த போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. அதன்படி இன்று கடலூர் முதுநகரில் உள்ள நிறுவனங்கள், அனைத்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட்டுகளில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் கடலூர் முதுநகரில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லாததால் அனைத்து வீதிகளும் வெறிச்சோடின. கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரத போராட்டத்துக்கு கடலூர் துறைமுக ரெயில் பயணிகள் நலசங்க தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். பெட்காட் மாநில துணை ராசாமோகன், ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜயகுமார் வரவேற்றார். உண்ணாவிரதத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.