உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 13, 2010


Read more »


                                                                     மஜாகார்த்தி 

Read more »


Read more »

Special homams from today


CUDDALORE: 


     Special ‘homams’ will be performed for four days from Thursday in Sri Ragavendra Swamigal Brindavanam at Koothapakkam, according to K.S. Gurumurthi, president of the sangham. In a statement here, he said Vedic scholars from places such as Dharapuram, Vellore and Srirangam would conduct the homams, which are being conducted for the prosperity of the nation.

Read more »

Fishermen briefed about coastal security measures


CUDDALORE: 


              A-member team from the Navy, led by Lieutenant Colonel Kiranjoi, conducted “coastal security awareness camps” at the villages of Nallavadu and Thazhanguda on Tuesday.


               According to T.Vasanthan, Inspector, Tamil Nadu Coastal Security Group, Cuddalore unit, the Navy personnel demonstrated through a slideshow how terrorists carried out the Mumbai attack by choosing the sea route and how coastal areas could be protected.


             They also distributed pamphlets containing details of precautionary measures to be taken in case of exigency and contact numbers of Navy officers.Whenever fishermen sensed trouble, they should stay together and get in touch with authorities over the toll-free number 1093.The personnel also impressed upon the fishermen the need to carry identity proof with photographs and registration certificates of fishing vessels. These were necessary to isolate any strangers or outside elements.The long coastline of the country could be well protected with the cooperation of fishermen because they had a vast area to operate upon and, moreover, they had wide contacts with their counterparts elsewhere.Mr. Vasanthan said that fishermen should compulsorily carry photo identity cards, just as they carried diesel, water and food in their boats.It was sufficient if they carried photocopies of documents. The copies could be laminated to protect them from getting wet.The fishermen should also carry life jackets to ensure personal safety and make it a point not to cross the International Maritime Boundary Line. They were also asked not to go anywhere near important and sensitive installations, just as in Kalpakkam and where offshore oil rigs had been put up.

Read more »

முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா

சிதம்பரம்:

                  சிதம்பரம் மின் நகரில் உள்ள அன்பகம் முதியோர் இல்லத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் ஏ.எல்.பி.லட்சுமணன் தலைமை வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் டி.எஸ்.எஸ்.ஞானக்குமார் இனிப்பு, காரம் மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினார். புலவர் ஏ.அருள்பிரகாசம் மனிதநேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார். விழாவில் நிர்வாகிகள் சி.அஞ்சம்மாள், டி,ஜெயந்தி, ஆர்.ஈஸ்வரிராஜன், முதியோர் இல்ல காப்பாளர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

பொங்கல்: 4 நாள்கள் மதுக்கடைகளை மூடவேண்டும்

கடலூர்: 

                     பொங்கல் பண்டிகையை அமைதியாகக் கொண்டாட, கடலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளை 4 நாள்கள் மூடிவிட வேண்டும், குறிப்பிட்ட சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அக்கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு), மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:  

                  கடலூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில், தொடர்ந்து பல ஆண்டுகளாக, பண்டிகைக் காலங்களில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாகக் கலவரங்கள், சாதிய மோதல்கள் ஏற்படுகின்றன. ÷பண்டிகைக் காலங்களில் இளைஞர்கள் மது அருந்திய நிலையில் உணர்ச்சி வயப்பட்டு செயல்படுவதும், இந்த வாய்ப்பை சமூக விரோத, சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சக்திகள் பயன்படுத்திக் கொண்டு சாதிய மோதல்களைத் தூண்டுவதுமே, இதற்கு அடிப்படைக் காரணம். இத்தகைய நிகழ்வுகள் ஏற்படா வண்ணம் பண்டிகை, திருவிழாக்கள் அமைதியான முறையில் அமைந்திட வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எதிர்பார்ப்பு. எனவே கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13,14,15,16 ஆகிய 4 நாள்களும் மதுபானக் கடைகளை மூடிவிட உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். 

                     மேலும் பிரச்னை ஏற்படக் கூடிய இடங்களில் சாதிய மோதல்கள் ஏற்படா வண்ணமும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தவும் கேட்டுக் கொள்கிறோம்.

                       கீழ்காணும் பகுதிகளை பதற்றமானவைகளாகக் கருதி, பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும்: விருத்தாசலம் ஒன்றியம் விளாங்காட்டூர், படுகளா நத்தம், தொரவளூர், பரவளூர், கோ.மங்கலம், ராஜேந்திரப்பட்டினம். கம்மாபுரம் ஒன்றியம் பலக்கொல்லை, இருளக்குறிச்சி, பழையபட்டினம், கார்மாங்குடி, தர்மநல்லூர், கார்குடல், கோ.ஆதனூர். திட்டக்குடி, பெண்ணாடம் பேரூராட்சிகள்.  நல்லூர் ஒன்றியம் நல்லூர். ÷மங்களூர் ஒன்றியம் கல்லூர், புவனகிரி ஒன்றியம் வத்தராயன் தெத்து, முகந்தெரியான் குப்பம், வடக்குத் திட்டை, சி.முட்லூர், மேலமூங்கிலடி, மஞ்சக்கொல்லை. பரங்கிப்பேட்டை ஒன்றியம் வேளங்கிப்பட்டு, வில்லியநல்லூர், பிச்சாவரம், சின்னக் காரைக்காடு, கீழமணக்குடி. கீரப்பாளையம் ஒன்றியம் அள்ளூர், வாழக்கொல்லை, பூலாப்பாடி, கந்தகுமாரன், கலியமலை, ஆயிப்பேட்டை, சாத்தங்குடி, வட்டத்தூர், நந்தீஸ்வரமங்கலம்.÷கடலூர் ஒன்றியம் கடலூர் முதுநகர், சோனங்குப்பம், எஸ்.புதூர். குறிஞ்சிப்பாடி ஒன்றியம் பெரியகண்ணாடி, ஆயிக்குப்பம், கொத்தவாச்சேரி. பண்ருட்டி ஒன்றியம் முத்தாண்டிக்குப்பம், காடாம்புலியூர், மருங்கூர், பேர்பெரியாங்குப்பம், வீரசிங்கன் குப்பம், வல்லம், காங்கிருப்பு, கீழ்குப்பம், மாளிகம்பட்டு, கீழிருப்பு, மேலிருப்பு, தாழம்பட்டு, கருக்கை, விசூர், வேகாக்கொல்லை, சாத்தமாம்பட்டு, நத்தம். அண்ணா கிராமம் ஒன்றியம் எனாதிமங்கலம், கரும்பூர், திருத்துறையூர், பலாப்பட்டு. ÷மேற்கண்ட பகுதிகளில் தகுந்த நடவடிக்கை எடுத்தும் போலீஸ் கண்காணிப்பை அதிகரித்தும், பொங்கல் மற்றும் அதைஒட்டிய விழாக்களை அமைதியாகவும் சமூக நல்லிணக்கத்துடனும் கொண்டாடுவதை உறுதிப்படுத்த வேண்டுகிறேன் என்றும் மனுவில் கூறப்பட்டு உள்ளது.

                          கட்சி நிர்வாகிகள் பேரறிவாளன், அசுரன், மகளிர் குழு கிறிஸ்டோபர் ராணி, தமிழ்செல்வி, தமிழ் தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலாளர் திருமார்பன் உடன் சென்று இருந்தனர். 

                   என்.எல்.சி. அருகே மின்சார  வசதி இல்லாத 300 குடும்பங்கள்  தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்து வழங்கும் என்.எல்.சி. நிறுவனம் அருகே கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் நகரில் மின்சார வசதி இல்லை. இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலரிடம் (ஆட்சியர் பொறுப்பு) புகார் மனு அளித்தனர்.÷விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பது: விருத்தாசலம் வட்டம் நெய்வேலி-2, மந்தாரகுப்பம் கென்னடி நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கின்றன. இங்கு மின்சார வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.  இவர்கள் அனைவரும் என்.எல்.சி. நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், தினக்கூலித் தொழிலாளர்களாகவும், சிறு வியாபாரிகளாகவும் உள்ளனர். தமிழக அரசால் வழங்கப்படும் இலவச தொலைக்காட்சி பெட்டிகள், இலவச எரிவாயு இணைப்பு, பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை இவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே  கென்னடி நகருக்கு மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று மனுவில் கோரி உள்ளனர்.

Read more »

கட்டாய மருத்துவப் பரிசோதனை

கடலூர்:  

                கடலூர் மாவட்டப் போலீஸôர் கட்டாயம் மருத்துவப் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மாசானமுத்து உத்தரவிட்டு இருக்கிறார்.

                   எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸôரும் கடந்த இரு நாள்களாக, மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறார்கள்.÷பணியில் இருக்கும் போலீஸôர் நோய்வாய்ப்பட்டு இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடலூர் மாட்டத்தில் கடந்த ஆண்டு, பணியில் இருந்த 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு காவலர் இதய நோயால் இறந்துள்ளனர். 

                        மேலும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் ஆய்வாளர் ஒருவர் கடலூர் சிறையில் இருந்த கைதி ஒருவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்து இருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டால் வியாதியை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் வரும் 15-ம் தேதிக்குள்  மருத்துவப் பரிசோதனை செய்து, மாவட்டக் காவல்துறை அலுவலகத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று டி.ஐ.ஜி. மாசானமுத்து உத்தரவிட்டு உள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டப் போலீஸôர் அனைவரும் கடந்த இருநாள்களாக மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறார்கள். 

               பெரும்பாலானோர் கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்கிறார்கள். மாவட்டக் காவல்துறை தலைமை அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அலுவல் தொடர்பான பதிவேடுகள் மற்றும் ரகசியக் குறிப்பேடுகளுடன், மருத்துவப் பதிவேடுகளும் பராமரிப்பட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பரிசோதனையில் நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டால், போலீஸôர், உரிய மருத்துவத் திட்டங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read more »

கடலூரில் 26ம் தேதி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

கடலூர் :

                 கடலூரில் பாதாள சாக் கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண் டும். ரயில்வே சுரங்கப் பாதை பணியை துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்கள்,பொது நல அமைப்புகள் சார்பில் வரும் 26ம் தேதி கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணியால் குண்டும் குழியுமாக மாறியுள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண் டும். ரயில்வே சுரங்கப் பாதை பணியை உடன் துவங்க வேண்டும் என் பதை வலியுறுத்தி கடலூர் மாவட்ட தனியார் பஸ் தொழிலாளர்கள் சங்கத் தின் சார்பில் கடலூர் டவுன் ஹாலில் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுநல சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

                     கூட்டத்திற்கு சங்க தலைவர் குருராமலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் பண்டரிநாதன், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வெண்புறா குமார் வரவேற்றார். பால்கி, ஜெயராமன், ரமேஷ், செல்வம், ரவி, மணிவண்ணன், ராமலிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கடலூரில் பாதாள சாக்கடை திட் டத்தை விரைவில் முடிக்க வலியுறுத்தியும், லாரன்ஸ் ரோட்டில் ரயில்வே சுரங் கப் பாதை பணியை விரைவில் துவங்கவும், சாலைகளை உடன் சீரமைக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்காததால் வரும் 26ம் தேதி அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் கறுப்பு கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. அப்போது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவிப்பது. வரும் 20ம் தேதி 24ம் தேதிவரை கறுப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை விளக்கி தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது. ரயில்வே சுரங்கப்பாதை பணியை துவங்கிட திருச்சி ரயில்வே கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தவும், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை என்றால் பொதுமக்கள் ஆதரவுடன் கடலூரில் பந்த் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. தொழிச்சங்க செயலாளர் சிவராமன் நன்றி கூறினார்.

Read more »

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி கூட்டம் காங்., கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ஸ்ரீமுஷ்ணம் :

                     ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றக் கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் துவங்காததால் காங்., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மன்றக் கூட்டம் காலை 11 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சேர்மன் மற்றும் ஐந்து கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர். மற்ற கவுன்சிலர்கள் 11.30 மணியாகியும் வராததால் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் துவங்காததைக் கண் டித்து காங்., கவுன்சிலர்கள் மனோரஞ்சிதம், வேலாயுதம், துர்காதேவி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளியேறினர். அதன்பிறகு தி.மு.க., உள்ளிட்டமற்ற கவுன்சிலர்கள் வந்தனர். அப்போது காங்., கவுன்சிலர் வேலாயுதம், கூட்டத்தை வேறு நாளுக்கு ஒத்திவைக்க கோரினார். கூட்டம் நடத்த போதிய கவுன்சிலர்கள் இருப்பதால் ஒத்தி வைக்கமுடியாது என சேர்மன் செல்வி கூறியதை தொடர்ந்து கூட்டம் துவங்கியது.

             செயல் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேரூராட்சி வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விவாதத்தில் காங்., கவுன்சிலர் வேலாயுதம் பேரூராட்சியில் 10 ஆண்டாக பணிபுரியும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரும் தீர்மானம் குறித்தும், கீழ ரத வீதியில் பேரூராட்சி இடத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூங்கிலை வெட்டியதை ஏன் தடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். இதற்கு சேர்மன் பதில் அளிக்கையில், இடமாற்றம் செய்வதில் துப்புரவு பணியாளர்களுக்கு விலக்கு அளித்திருப்பதாகவும், மூங்கில் வெட்டிய இடத்தில் பேரூராட்சி சார்பில் விரைவில் தேக்க மரக்கன்று நட இருப்பதாக சேர்மன் கூறினார்.

Read more »

காட்டுமன்னார்கோவில் மருத்துவமனையில் விஷக்கடிக்கு மருந்து இல்லாமல் மக்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் :

                   காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் விஷக்கடிக்கு மருந்து இல்லாமல் மக்கள் பாதிப் படைந்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் பெரும் பாலும் விவசாய கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உடல் நிலை சரியில்லை என்றால் சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.

                    இந்த மருத்துவமனை கடந்த ஆண்டுதான் 65 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு பல சிறப்பம் சங்களை பெற்றது. மாவட்டத்தில் முதன்மை மருத்துவமனையாகவும் பெயர் எடுத்தது. தற்போது இங்கு விஷக்கடிக்கு மருந்து இல்லை, பெரும்பாலான நேரங்களில் டாக்டர்கள் இல்லை என்ற பிரச்னை தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது. சுற்றுவட்டார கிராமங் களில் இருந்து விஷக் கடிக்கு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மருந்து இல்லாமல் மேல் சிகிச்சைக்காக சிதம்ரபம் அனுப்பப்படுகின்றனர். எனவே காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர் கள் நியமிப்பதுடன், விஷக்கடிக்கு மருந்து இருப்பு வைக்கவும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

இலவச வேட்டி, சேலை: சிதம்பரம் மக்கள் ஏமாற்றம்

சிதம்பரம் :

               சிதம்பரம் நகராட்சி பகுதியில் ஏழைகளுக்கு பொங்கலுக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலை நேற்று வரை கிடைக்காததால் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

                 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய மக்களும் புத்தாடை உடுத்தி மகிகழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் இலவசமாக வேட்டி, சேலை வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே வேட்டி, சேலை வழங்க வேண்டும் என்பதால் கடந்த ஒன்றாம் தேதி முதல் அனைத்து பகுதியிலும் வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் விதிவிலக்காக சிதம்பரம் நகர பகுதியில் நேற்று வரை வேட்டி, சேலை வழங்கவில்லை.சிதம்பரம் நகர பகுதிக்கு மிக குறைந்த அளவே வேட்டி, சேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்டி, சேலையை வழங்கினால் பலருக்கு கிடைக்கவில்லை என பிரச்னை ஏற்படும் என ரேஷன்கடை ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.

                இதுவரை வேட்டி, சேலை கிடைக்காததால் பொதுமக்கள் அந்தந்த பகுதி ரேஷன் கடைகளுக்கு ரேஷன் கார்டுடன் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். ரேஷன் கடைகளும் நாளை முதல் விடுமுறை விடப்படும் என்பதால் இந்த ஆண்டு பொங்கலுக்கு வேட்டி, சேலை கிடைக்குமா... கிடைக்காதா.. என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Read more »

சமத்துவப் பொங்கல் கபடி போட்டி பரிசளிப்பு

கடலூர் :

                  கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சமத்துவப் பொங்கல் கபடி போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் 18 மற்றும் 19 தேதிகளில் மாநில அளவிலான கபடிப்போட்டி மதுரையில் நடக்கிறது. இதில் பங்கேற்க கடலூர் மாவட்ட அணிக் கான தேர்வு போட்டி நேற்று கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. ஏற்கனவே ஒன்றிய அளவில் போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் பங்கேற்றன. இதில் பெண்கள் பிரிவில் புவனகிரி, கடலூர் ஒன் றிய அணிகள் மோதின.  இதில் புவனகிரி அணி வெற்றி பெற்றது. ஆண் கள் பிரிவில் குறிஞ்சிப் பாடி, கம்மாபுரம், கடலூர் ஒன்றிய அணிகள் மோதின. அதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு கபடி கழக துணைத் தலைவர் வேலவன் பரிசு வழங்கினார். விழாவில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் விழா

விருத்தாசலம் :

           விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரியில் தமிழக அரசின் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமமூர்த்தி பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். வி.ஏ.ஓ., குருநாதன், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனம் நடுவீரப்பட்டில் கரும்பு கொள்முதல்

நடுவீரப்பட்டு :

                 நடுவீரப்பட்டு சுற்று பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் கரும்புகளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குஜராத் மற்றும் புதுச்சேரி மாநிலத்தவர்கள் அதிகளவில் கொள்முதல் செய்துள்ளனர்.பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு சுற்றியுள்ள பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன் பேட்டை, சத்திரம், மதனகோபாலபுரம், வெங்கடாம் பேட்டை பகுதிகளில் 250 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும் புகள் பயிரிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக கரும்புகள் வெட்டப் பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையும் கரும்புகள் திடமாகவும், ருசியாக இருப்பதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் குஜராத் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நடுவீரப்பட்டு பகுதியில் கரும்பு கொள்முதல் செய்ய குவிந்துள்ளனர். இவர்களோடு புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனம் பொங்கல் பஜாருக்காக கரும்புகளை மொத்தமாக கொள்முதல் செய்து வருகிறது.இருபது கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 150 முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. புதுச் சேரி மற்றும் குஜராத் மாநில வியாபாரிகளின் வருகையில் கரும்புகளின் விலை சற்று உயர்ந்துள்ளதால் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

Read more »

மீன்குஞ்சு வளர்ப்பு மையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் :

                 மீன் குஞ்சு வளர்ப்பு மையங் கள் அமைக்க விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மீன்துறை உதவி இயக்குனர் விடுத் துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

                      தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் மீன்குஞ்சு வளர்ப்பு மையங்கள் புதியதாக அமைத்து 1.50 லட்ச ரூபாய் மானிய உதவி பெற தகுதிகள் உள்ள இரு பயனாளிகள் மீன் வளர்ப் போர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                      ஒரு எக்டர் சொந்த நிலத்தில், புதிதாக தரமான நீர் கிடைக்கக்கூடிய வெள்ள பாதிப்பு இல் லாத, சாலை மற்றும் மின் இணைப்பு வசதிகள் உள் ளதாகவும், ஆண்டிற்கு 5 லட்சம் தேர்ந்த விரலிகள் உற்பத்தி செய்யக்கூடிய திறனில் அமைக்க வேண் டும். கடலூர் மாவட்ட மீன்வளர்ப்போர் வளர்ச்சி முகமையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இரு விண்ணப்பங்களுக்கு மேல் பெறப்பட் டால் விண்ணப்பங்களின் தகுதிக்கேற்ப மீன்துறை ஆணையர் சென்னை அல்லது அவரால் நியமிக்கப்படும் அலுவலரால் இறுதியாக இருவர் தேர்வு செய்யப்படுவர் விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களுக்கு மீன்துறை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

Read more »

.திருமானிக்குழிகோவிலில் கற்பூர யாகம்

நெல்லிக்குப்பம் :

                   திருமானிக்குழி ஜோதீஸ்வரர் கோவிலில் கற்பூர யாகம் நடந்தது. நெல்லிக்குப்பம் அடுத்த திருமானிக்குழியில் ஆதி ஜோதீஸ்வரி உடனுறை ஆதி ஜோதீஸ்வரன் சித்தர்பீடம் கோவில் உள்ளது. இக்கோவிலில் சோமவார சிறப்பு பூஜை நடந்தது. நூற்றியெட்டு மூலிகை அபிஷேகமும், ஆயிரத்தெட்டு பூங்கற்பூரம் யாகம் மற்றும் ஆயிரத்தெட்டு தீப வழிபாடு நடந்தது. இன்று கற்பூரயாகமும் கூட்டு பிரார்த்தனையும், நாளை 14ம் தேதி பொங்கல் மற்றும் தை அமாவாசையை முன் னிட்டு சிறப்பு அபிஷேகமும், 15ம் தேதி கலச அபிஷேகமும் நடக்கிறது. ஐந்து நாட்களும் மூலிகைகள் கலந்த அன்னதானம் பக்தர்களுக்கு வழங் கப்படுகிறது. பூஜைகளை ரமேஷ்பாபு சுவாமிகள் செய்து வருகிறார்.

Read more »

அரசு கல்லூரியில் சமத்துவ பொங்கல்

கடலூர் :

                   கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரியில் நேற்று நடந்த சமத்துவப்பொங்கல் விழாவில் பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரியில நேற்று சமத்துவப் பொங் கல் கொண்டாடப்பட்டது. மாணவிகள் இரண்டு அடுப்புகளை மூட்டி பொங்கல் வைத்தனர். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரங்கநாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மனோகர், காந்திமதி, பன்னீர்செல்வம், சர்மிளா உட்பட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பின் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் கரும்புகள் வைத்து பூஜை செய்து சமத்துவ பொங்கலை மாணவ, மாணவிகள் கொண்டாடினர்.

Read more »

ர்வதேச வேதியியல் போட்டியில் வீனஸ் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

சிதம்பரம் :

           சர்வதேச வேதியியல் போட்டியில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

            மாணவர்களிடையே வேதியியல் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் ராயல் ஆஸ்திரேலியன் கெமிக்கல் இன்ஸ்டியூட் சார்பில் இந்தியா உட்பட 15 நாடுகளில் வினாடி வினா எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்திய அளவில் பங்கேற்ற 205 பள்ளிகளில் சிதம்பரம் வீனஸ் பள்ளி சார்பில் பங்கேற்ற மாணவர்களில் 43 பேர் சிறப்பிடம் பெற்றனர். மாணவன் தேவசுந்தரம், மாணவி சுவாதி மாநில அளவில் 10 சதவீத உயர் இடங்களில் தேர்ச்சி பெற்றனர். மேலும் 12 மாணவர்கள் சிறப்பு நிலையிலும், 29 மாணவர்கள் உயர் நிலையிலும் தேர்ச்சி பெற்றனர்.மாணவர்களை போட் டிக்கு ஆயத்தப்படுத்திய ஆசிரியர்கள் கலைவாணி, வனிதா, வளர்மதி, புஷ்பலதா மற்றும் மாணவர்களை அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் சுவாமிநாதன், பள்ளி நிர்வாகி குமார், ரூபியாள் ராணி, தலைமை ஆசிரியர் மகேஷ்சுந்தர் பாராட் டினர்.

Read more »

ரெட்கிராஸ், பார்வையிழப்பு தடுப்பு சங்கம் பள்ளி வாகன டிரைவர்களுக்கு கண் சிகிச்சை

கடலூர் :

                  கடலூரில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ரெட்கிராஸ் கவுரவ செயலாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். முகாமில் அரசு பொதுமருத்துவமனை இணை இயக்குநர் டாக்டர் ஜெயவீரக்குமார், பிரையோன், சுந்தரம், மகாவீர்மல் சோரடியா, மகாவீர்மல் மேத்தா, மகேஷ், அசோக், சென்சாய் கிருஷ்ணன், பாபு ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் 124 பள்ளிகளைச் சேர்ந்த டிரைவர்கள் கண் பரிசோதனை செய்துகொண்டனர். கடலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மனோகர், கேசவன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை ரெட்கிராஸ் சொசைட்டியின் கிளை அலுவலர்கள் ஏஞ்சல் கேத் திரின், கற்பகம், கீதா, மலர் விழி, லட்சுமி, பார்த்தசாரதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க ஒருங் கிணைப்பாளர் ஞானஸ் கந்தன் நன்றி கூறினார்.

Read more »

சி.கே., பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கடலூர் :

                    கடலூர் சி.கே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் துவக்கி வைத்தார். கடலூர் சி.கே., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் செய் துள்ள இயற்கை நிகழ்வுகள், அதன் பாதிப்பு, அதை தடுப்பதற்கான வழிமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள், மின் சிக்கனம் உள்ளிட்டவை குறித்து அறிவியல் கண் காட்சி நடந்தது. விழாவிற்கு பள்ளியின் இயக்குநர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். முதல்வர் தார்சியஸ் வரவேற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். பள்ளி ஆலோசகர் கல்யாணிபிரகாஷ் பங்கேற்றார்.

Read more »

வெளிநாட்டு வேலைக்கான பதிவு செய்யும் முகாம் : 23ம் தேதி துவக்கம்

கடலூர் :

                  வெளிநாட்டு வேலைக் கான பதிவு செய்யும் சிறப்பு முகாம் வரும் 23ம் தேதி திருச்சியில் நடக்கிறது.

                 தமிழக அரசு நிறுவனமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளாக பல்வேறு வெளிநாட்டு வேலையளிப்போரிடமிருந்து பெறப்படும் வேலைவாய்ப்புகளுக்கு தகுந்த ஊதியத்துடன் பெருமளவில் பணியமர்த்தி வருகிறது. இந்நிறுவனம் தொடங்கிய நாள் முதல், பல்வேறு வேலைப் பிரிவுகளில் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரையிலான அனுபவம் பெற்ற ஆயிரக்கணக்கான மனுதாரர்களை இந்நிறுவனம் பணியமர்த்தி வருகிறது. வெளிநாட்டு வேலையளிப்போரிடமிருந்து பணியாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், சென்னையிலுள்ள அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்வதற்கான பயனாளிகளின் நேரம், பயணம் மற்றும் செலவினை தவிர்த்து சிரமத்தை போக்கும் பொருட்டு அவர்கள் பகுதிக்கே வந்து நேரடியாக பதிவு செய்து கொள்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு நிறுவனம் இந்த சிறப்பு முகாமினை நடத்துகிறது. வரும் 23, 24ம் தேதிகளில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மன்னார்புரம், திருச்சி.20, மற்றும், 30, 31 தேதிகளில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான சிறப்பு பதிவு முகமில் தங்களின் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள், 4 புகைப்படத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவு கட்டணமாக லேபர், கொத்தனார், கார்பெண்டர், பட்டப்படிப்பு படித்தவர்கள் 442 ரூபாயும், இன்ஜினியரிங் பட்டப்படிப்பு, கணக் காளர், முதுநிலைப் பட்டதாரிகள், எம்.பி.ஏ., கணினி பட்ட படிப்புவரை 772 ரூபாயும் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.

Read more »

முதலை கடித்து இறந்த பெண் குடும்பத்திற்கு இழப்பீடு

சிதம்பரம் :

                முதலை கடித்து இறந்த பெண் குடும்பத்திற்கு "கேர்' விபத்து குறுங் காப் பீட்டு திட்டம் மூலம் 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. கிரீடு தொண்டு நிறுவனம் நடத்தும் "கேர்' குறுங்காப்பீட்டு திட்டம் சுய உதவிக்குழு உறுப்பினர் சிதம்பரம் அருகே வேளக்குடி சாவித்திரி கடந்த நவம்பர் 19ம் தேதி முதலை கடித்து இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் கலையரசன், கிரீடு செயலாளர் நடனசபாபதி, திட்ட மேலாளர் பாலசுப்ரமணியன் பங்கேற்றனர்.

Read more »

சிதம்பரம் அருகே கோவில் கலசம் திருட்டு

சிதம்பரம் :

               சிதம்பரம் அருகே கோவில் செப்பு கலசங்கள் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.சிதம்பரம் அடுத்த மதுராந்தகநல்லூர் கிராமத்தில் பெரியாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் கோபுரத்தில் இருந்த ஐந்து செப்பு கலசங்கள் திருடு போனது. இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

ஒன்றியக்குழு கூட்டத்தில் முதல்வருக்கு பாராட்டு

புவனகிரி :

                  குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டி தரப்படும் என அறிவித்த முதல்வருக்கு மேல்புவனகிரி ஒன்றியக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது. மேல்புவனகிரி ஒன்றியக்குழு கூட்டம் சேர்மன் தனலட்சுமி தலைமையில் நடந் தது. துணைத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் கள் வாசுகி, ஜமுனா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தமிழகத்தில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டி தரப்படும், பட்டதாரிகள் இல்லாத குடும்பத் தில் தொழில் நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வித்தொகை முழுவதையும் வழங்கி அரசே வழங்கும் என அறிவித்த தமிழக முதல்வர் மற்றும் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்களுக்கு தினசரி கூலியை 100 ரூபாயாக உயர்த்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read more »

சக்தி பள்ளியில் பொங்கல் திருவிழா

விருத்தாசலம் :

            விருத்தாசலம் பெரியார் நகர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள வினாயகர் கோவில் முன்பு மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் வேட்டி, சேலை உள்ளிட்ட புத்தாடைகள் அணிந்து பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர். தாளாளர் சந்தானம், முதல்வர் பெர்னத்மேரி, ஆசிரியர்கள் ரமேஷ், செந்தில்குமார், சுகுமார், பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

நகராட்சி பள்ளி மாணவர்கள் போகி விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர் :

                   கடலூர் நகராட்சி மேல் நிலைப்பள்ளி என்.எஸ். எஸ்., ஜே.ஆர்.சி., பசுமைப்படை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பழனி துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் மோகன்குமார், என்.எஸ்.எஸ்., அலுவலர் ரவி, ஜே.ஆர்.சி., ஆலோசகர் பாலு, பசுமைப்படை பொறுப்பாளர் புகழேந்தி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தில் புகையில்லாமல் போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை மாணவர்கள் கையில் ஏந்திச் சென்றனர்.

Read more »

மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை

கடலூர் :

                பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு கடலூர் வெண்புறா பொது நல பேரவை சார்பில் பொங்கல் பண்டிகைக்காக புத்தாடை வழங்கப்பட்டது. பேரவை மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் நடராஜன்,செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். பார்வையற்ற மாணவர்களுக்கு புத்தாடைகளை ரமேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் மகாவீர்மல் மேத்தா, ரெட்கிராஸ் பாலசுப்ரமணியன், நுகர்வோர் பயிற்றுனர் தாஸ், ரவி, திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் தங்கசுதர்சனம், கருணாகரன், முருகன், ராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிவா நன்றி கூறினார்.

Read more »

பள்ளியில் முப்பெரும் விழா

கடலூர் :

                  கடலூர் மாவட்ட என். எஸ்.எஸ்., பிரிவு-2 சார்பில் நல்லாசிரியர்கள் விருது பெற்ற என்.எஸ்.எஸ்., பிரிவு ஆசிரியர்களுக்கு பாராட்டு, அம்பேத்கர் விருது மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு என முப்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி முதல்வர் ஆக்னல் தலைமை தாங்கி நினைவுப் பரிசு வழங்கினார். என்.எஸ்.எஸ்., மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் வரவேற்றார். சிறப்பு விருத்தினர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் கேடயம் வழங்கி பேசினார்.விழாவில் என்.எஸ். எஸ்., அலுவலராக பணி ஓய்வு பெற்ற புனித அன் னாள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை புஷ்பமேரி, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நாராயணன், காட்டுமன்னார்கோவில் பி.ஆர். ஜி., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பாலசுந்தரம் மற்றும் அம்பேத் கர் விருது பெற்ற என். எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சசிகலா தேவி, ஆசிரியர் ரவி, உதயகுமார், பாலமுருகன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.கிருஷ்ணசாமி பள்ளி திட்ட அலுவலர் பரந்தாமன் நன்றி கூறினார்.

Read more »

கோணான்குப்பம் ஆலய ஆண்டு விழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்

விருத்தாசலம் :

                  கோணான்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ளது கோணான்குப்பம் கிராமம். இக்கிராமத்தில் இத்தாலி நாட்டை சேர்ந்த வீரமாமுனிவர் மேற்பார்வையில் 1720ம் ஆண்டு புனித பெரியநாயகி அன்னை ஆலயம் கட்டப்பட்டது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஜனவரி 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஜனவரி 23 ம் தேதி வரை ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.

                    இந்தாண்டிற்கான திருவிழா நாளை (14 ம் தேதி) மாலை 5 மணியளவில் புதுச்சேரி- கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மை குரு அந் தோணிசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து 22ம் தேதி வரை திருப்பலி, நற்கருணை ஆராதனைகள், தேர் பவனி நடக்கிறது.

                  ஆடம்பர தேர்பவனி, கூட்டுதிருப்பலி 23ம் தேதி இரவு 9 மணிக்கு பேராயர் டாக்டர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் நடக்கிறது.சென்னை, வேளாங்கண்ணி, நாகர்கோவில் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அனைத்து மதத்தினரும் இத்திருவிழாவில் பங்கேற்பது சிறப்பம்சமாகும். 24ம் தேதி காலை கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Read more »

உளுந்து விதைக்க முடியாமல் விவசாயிகள் வேதனை : பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் :

                         காலம் தவறிய மழையால் சம்பா சாகுபடியை தொடர்ந்து உளுந்து பயிர் விதைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

                  காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன் னார்கோவில் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவம் தவறிய மழையாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். ஒவ் வொறு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூரில் தண் ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டு களாக போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் மேட்டூர் அணை திறப்பு தள்ளி போய் வருகிறது. இந்த ஆண்டும் காலதாமதமாகியதால் ஜூலை மாதம் துவங்க வேண்டிய சம்பா சாகுபடி அக் டோபர் மாதம் துவங்கியது. அந்த சமயத்திலும் கடைமடை பகுதி வரை தண் ணீர் சென்று சேராததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே இந்த சாகுபடியை தேற்றி வந்தனர்.

                        ஆனால் யாரும் எதிர்பாரத வகையில் ஏற்பட்ட புயல் சின்னத்தால் டிசம் பர் மாதம் தொடர் மழை பெய்தது. இதனால் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் பூ விட்ட நிலையில் பாதிக் கப்பட்டன. தண்ணீர் வடிந்த நிலையில் புகையான் தாக்குதல், இளைசுருட்டு புழு தாக்குதல் என எஞ்சிய பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்து அடித்து பயிரை ஓரளவு காப் பாற்றினர்.

                      விவசாயிகள் போராடி காப்பாற்றிய நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. இப்பிரச்னை ஒருபுறம் இருக்க, உளுந்து பயிர் விதைப்பை துவக்கி இருக்க வேண்டிய நிலையில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் இதுவரை உளுந்து விதைப்பு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எதிர்பாராமல் கடந்த வாரம் 3 நாள் பெய்த மழையால் உளுந்து விதைப்புக்கு ஏற்றார்போல் இருந்த நிலங்களில் தண்ணீர் தேங் கியது. தண்ணீர் தேங்கிய வயல்களில் இந்தியரத்தின் உதவியோடு அறுவடை செய்யும்போது நிலத்தில் இயந்திரம் புதைந்து உளுந்து பயிர் பாதிக்கப்படும். தண்ணீர் தேங்கிய வயல்களில் உளுந்து விதைக்க முடியாது. பொங்கல் பண்டிகை முன்பாக போகியின் போதே உளுந்து விதைப்பு நடக்கும். ஆனால் வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உளுந்து விதைப்பு துவங்க காலதாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காலம் தாழ்த்தி உளுந்து விதைப்பதால் விளைச்சல் பாதிக் கும் நிலை உள்ளது. பெரும் சிரமத்திற்கிடையே சம்பா பயிரைக் காப்பாற்றி அறுவடைக்கு கொண்டு வந்த நிலையில் தற்போது மழை பெய்துள் ளதால் அறுவடையும் பாதிக்கப்படுவதுடன் அடுத்து உளுந்து பயிரும் விதைக்க முடியாத நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

விதை உளுந்து கையிருப்பு இல்லை:

                  கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உளுந்து விதைத்து அறுவடையின் போது தொடர்ந்து மழை பெய்தது. இதனால் உளுந்து பயிர் பாதிப்பு ஏற்பட்டதுடன், விவசாயிகளிடம் விதை உளுந்து கையிருப்பு இல்லாமல் தீர்ந்தது. இந்த முறை விதை உளுந்து எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை என்ற நிலையில் தனியாரிடம் வாங்கி வைத்திருந்த நிலையில் விதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Read more »

எடைப்பணி தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படுமா?

கடலூர் :

                    காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென ஒழுங்குமுறை விற்பனைக்கூட எடைப்பணி தொழிலா ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                  தமிழகத்தில் 224 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. இவற்றில் விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை எடைபோடுதல், சாக்கு மாற்றுதல், விற்பனையான பொருட்களை வியாபாரிகளுக்கு லாரியில் ஏற்றி அனுப்புதல் போன்ற பணிகளை எடைப்பணி தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஒழுங்குமுறை விற் பனை கூடத்திலும் 10 முதல் 20 தொழிலாளர்கள் வரை பணியாற்றி வருகின்றனர்.

               இவர்களுக்கு விற்பனைக்கூடம் சார்பில் ஒரு மூட்டைஒன்றுக்கு 3 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் விற்பனை பொருட்களுக்கு சீட்டு போட 31 பைசாவும், மூட்டையில் இருந்து சிதறும் தானியங்களை சுத்தம் செய்யும் சித்துக்கு 10 பைசாவும் போக மீதியுள்ள தொகையை எடை தொழிலாளர்கள் பகிர்ந்து எடுத்துக் கொள்ள வேண் டும். அதேப்போல விற்பனையான மூட்டைகளை வியாபாரிகளுக்கு அனுப்புவதற்காக மூட்டை ஒன் றுக்கு 3.50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

                   நாளொன்றுக்கு 200 மூட்டை விற்பனைக்காக வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஓரளவு தொழிலாளர்களுக்கு கூலி கிடைக் கும். வரத்து குறைவாக இருந்தாலும், விடுமுறை, சீசன் இல்லாத காலங்களில் அவ்வளவு விளைபொருட்கள் விற்பனைக்கு வராது. எனவே தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நிரந்தர வருமானம் கிடைப்பதில்லை. இந்த தொழிலையே நம்பியுள்ள எடைத்தொழிலாளர்கள் வறுமையில் வாடும் நிலை உள்ளது. எனவே பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், வாரிசுக்கு பணி, விபத்து காப்பீடு, வருங் கால வைப்பு நிதி, வேளாண்துறை காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும் என எடைப்பணி தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. அனைத்து துறை ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் முதல்வர் எங்கள் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என் கின்றனர் ஒழுங்குமுறை விற்பனை கூட எடைத்தொழிலாளர்கள்.

Read more »

ஆற்றுத் திருவிழாவிற்காக பெண்ணையாறு சீரமைப்பு

கடலூர் :

                  கடலூரில் வரும் 18ம் தேதி நடக்கவுள்ள ஆற்று திருவிழாவையொட்டி பெண்ணையாற்றை நகராட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 18ம் தேதி ஆற்றுத் திருவிழா நடக்கிறது. கடலூர் பெண்ணையாற்றில் நடக்கும் ஆற்றுத் திருவிழாவிற்கு கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு வரும். மேலும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆற்றுத் திருவிழாவிற்கு வருவார்கள்.

                       அதனையொட்டி பெண்ணையாற்றை சுத்தம் செய்யும் பணி கடலூர் நகராட்சி சார்பில் துவங்கியது. பாலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள குப்பை மேடுகளையும், முட்புதர்களையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றினர்.வேப்பூர் சாலையில் ரயில்வே மேம்பால பணி துவக்கம் போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் சிரமம்விருத்தாசலம் : விருத்தாசலம் - வேப்பூர் சாலையில் 14 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பால கட்டுமான பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த பணிக் காக போக்குவரத்து மாற்றம் செய் யப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

                       விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் மணலூர் அருகே ரயில்வே பாதை உள்ளது. இந்த வழியே தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால் ரயில்வே கேட் போடும் போது வாகனங்கள் அப்பகுதியில் ஸ்தம் பித்து போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு காலதாமதத்தால் பயணிகள் எரிச்சலடைந்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்குபின் கடந்த வாரத்தில் ரூபாய் 14 கோடி செலவில் ரயில்வே மேம்பால கட்டுமான பணி தொடங் கப்பட்டுள்ளது.

                  மேம்பால கட்டுமான பணியால் அப்பகுதியில் போக்குவரத்து மாற் றம் செய்யப்பட்டது. அதன்படி வேப்பூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வரும் வாகனங்கள் எறுமனூர் பாலத்தின் வழியாக உள்ளே வந்து ரயில்வே ஜங்ஷன் வழியாக பஸ் நிலையத்தை அடையும். அதுபோல் விருத்தாசலத்தில் இருந்து செல்லும் வாகனங்களும் ரயில்வே ஜங்ஷன்- எறுமனூர் பாலம் வழியாக செல்லும்படி மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

                      விருத்தாசலத்தின் முக்கிய கடைகள் நிறைந்த வியாபார பகுதியாக கடைவீதி இருந்து வருகிறது. ரயில்வே மேம்பால கட்டுமான பணிக்கு முன் வேப்பூரில் இருந்து வரும் பஸ்கள் கடைவீதி வழியாக பஸ் நிலையத்தை அடைந்ததால் வேப்பூர் பகுதியில் இருந்து வருபவர்கள் கடைவீதியிலேயே இறங்கி பொருட்களை வாங்கிகொண்டு கடைவீதியிலேயே பஸ் ஏறி தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.தற்போது வாகனங்கள் சுற்றி வருவதால் பஸ் நிலையத்தில் இறங்கி மாற்று பஸ் பிடித்து கடைவீதிக்கு வரும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் கூடுதல் சிரமம் அடைந்து வருகின்றனர்.

Read more »

ஆந்திராவில் இருந்து துப்பாக்கி 'சப்ளை' போலீஸ் விசாரணையில் 'திடுக்'

சிதம்பரம் :

             ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ள துப்பாக்கிகள் கடலூர் மாவட்டத் திற்கு சப்ளை ஆகிறது என் பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கியுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன் சிதம்பரத்தில், ஆப்பிரிக்க நாட்டு பெண்ணிடம் தகராறு செய்த வல்லம்படுகை சிசுபாலன் என்ற வாலிபரிடம் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

                  அதனை தொடர்ந்து விருத்தாசலத்தில் கடந்த நவ. 19ம் தேதி கொள்ளையடிக்க திட்டமிட்டுக் கொண்டிருந்த ஸ்ரீமுஷ் ணம் தியாகராஜனிடம் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. கடலூரில் கடந்த மாதம் 8ம் தேதி பொற்கொல்லர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி கொள்ளை அடிக்க முயன் றனர். அதே மாதம் 19ம் தேதி வடலூர் நகைக் கடை அதிபர் சிங்காரத்தை துப்பாக்கியால் சுட்டு மோட்டார் சைக்கிள் கொள்ளை அடிக்கப்பட்டது.

               கடந்த 5ம் தேதி கடலூர் முதுநகரில் மாடுகள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டன. கடந்த 7ம் தேதி சேத்தியாத்தோப்பு அள்ளூரில் குடும்ப தகராறில் சித்தப் பாவை துப்பாக்கி காட்டி கொலை செய்வதாக மிரட்டிய செந்தில்குமார் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நேற்று முன்தினம் பரங்கிப் பேட்டையை சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற வாலிபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் துப்பாக்கி கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துப்பாக்கிகள் எங்கிருந்து கிடைக்கிறது. அதன் நெட் ஒர்க் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

                  ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளத்துப்பாகிகள் வாங்கி வரப்படுவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க டி.ஐ.ஜி., மாசானமுத்து உத்தரவுபடி கடலூர் மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதற்காக சப் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தனிப் படை போலீசார், மாவட் டத்தில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருப்பவர்களின் விபரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏர் துப்பாக்கிகள்: கட்டுப்பாடு வருமா? :

                            ஏர் துப்பாக்கிகள் உண்மையான துப்பாக்கிகள் போன்றே உள்ளன. கடலூர் மாவட்டத்தில் ஏர் துப்பாக்கிகள் அதிகமாக உள்ளது. பால்ரஸ் மூலம் சுடும் இந்த துப்பாக்கிகள் பறவைகளை சுடுவதற்கு பயன்படுத்துகின்றனர். குற்றவாளிகள் இந்த துப்பாக்கி மூலமும் மிரட்டுகின்றனர். மனிதர்களை சுட்டாலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த துப்பாக்கி வைத்திருப்பதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இல்லையேல், போலீஸ் அனுமதியுடன் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்த சட்டதிட்டங்களை வகுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior