கடலூர், டிச. 19:
குற்றங்களைத் தடுக்க கடலூரில் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொறுத்த திட்டமிட்டு இருப்பதாக கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.
குற் றங்களைத் தடுக்க எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கடலூர் நகர வணிகர்களுடன் காவல்துறை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடந்தது.÷கூட்டத்தில் துணைக் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூறியது:
தங்க நகைகளின் விலைகள் பெருமளவுக்கு உயர்ந்து விட்டன. எனவே நகைகளைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் தேவை. மார்கழி மாதம் தொடங்கிவிட்டால் அதிகாலையிலே எழுந்து பெண்கள் கோலம் போடுவது வழக்கம். எனவே அத்தகைய பெண்கள் தங்கள் அணிகலன்கள் குறித்து பாதுகாப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
2011-ம் ஆண்டு வரை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடக்கிறது. எனவே கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைப்பது குறித்து 2011 வரை முடிவு எடுக்க முடியாது. காவல்துறை மூலம் தொடர்ந்து வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களை நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்குக் கூடுதல் செலவு பிடிக்கும். எனவே பொதுமக்கள் பங்களிப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்ற ஆலோசனை நடத்தி வருகிறோம். குற்றங்களைத் தடுக்க பொதுமக்களும் வணிகர்களும் போலீஸôருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
வணிகர்கள் தரப்பில் பேசியவர்கள், "போலீஸôர் திறமையாகச் செயல்பட்டு வருகிறார்கள். குற்றங்கள் அதிகரித்து வருகிறது. காவல் நிலையங்களில் கூடுதலாகக் காவலர்களை நியமிக்க வேணும். கடலூர் கூத்தப்பாக்கத்தில் புதிதாகக் காவல் நிலையம் அமைக்க வேண்டும்' என்றும் கோரினர்.
கூட்டத்தில் வணிகர்கள் தரப்பில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஜனார்த்தனம், வெங்கடசுப்பு, நகைக்கடை உரிமையôளர்கள் பாலு, ராஜகோபால் உள்ளிட்டோர் பேசினர்.
Read more »