உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 04, 2010

நரியன் ஓடை மேம்பாலம் விரைவில் திறக்கப்படுமா?

நடுவீரப்பட்டு :

              நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தை பொங்கலுக்குள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                  நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையே நரியன் ஓடையில் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த பிப்ரவரி 23ம் தேதி துவங்கியது. 10 மாதங்களில் பாலம் கட்டி முடித்திருக்க வேண்டும். ஆனாலும், இன்னும் சிறு, சிறு பணிகள் முடிவடையாமல் உள்ளது. வரும் 16ம் தேதி சி.என்.பாளையத்தில் உள்ள புஷ்பகிரி மலையாண்டவர் கோவிலில் கரிநாள் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வருவார்கள். இவர்கள் நடுவீரப்பட்டிலிருந்து சி.என்.பாளையம் செல்ல சரியான வழியில்லாததால் சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. ஆகையால் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து பாலத்தை பொங்கலுக்குள் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் குறைந்தபட்சம்  பொதுமக்கள் பாலத்தில் நடந்து செல்லும் வகையிலாவது வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

Read more »

பனவாரி ஓடையில் மேம்பாலம் கட்ட கலெக்டருக்கு மனு

சிறுபாக்கம் :

                சிறுபாக்கம் அருகே மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

               இதுகுறித்து மங்களூர் ஒன்றியம் பாசார் ஊராட்சி தலைவர் வரதராஜன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

               பாசார் ஊராட்சியில் கிராமத்தை ஒட்டியே பனவாரி ஓடை செல்கின்றது. மங்களூர், விநாயகநந்தல், பொயனப் பாடி, சிறுபாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இவ்வழியாக பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஓடையை கடந்து செல்கின்றனர். மழை காலங்களில் பனவாரி ஓடையில் அதிகளவு செல்லும் தண்ணீரால் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை உள்ளது.  எனவே போர்க்கால அடிப்படையில் கிராம மக்களின் நலன் கருதி பனவாரி ஓடையினை நேரில் பார்வையிட்டு விரைவில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

திட்டக்குடி பஸ் நிலைய வளாகத்தில் தனியார் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு

திட்டக்குடி :

               திட்டக்குடி பஸ் நிலைய வளாகத்தில் பயணிகளை கவர்ந்திட நிறுத்தப்படும் தனியார் பஸ்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது.

                  விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையின் மையத்தில் உள்ள திட்டக் குடியில் ஏராளமான அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இவ்வழியாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ் உள்ளிட்ட வாகனங் கள் சென்று வருகின்றன. திட்டக்குடி பஸ் நிலையத்திலிருந்து தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், மங்களூர், சிறுபாக்கம், தொழுதூர், நாவலூர், பெண்ணாடம் வழித் தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இதனால் பஸ் நிலையம் எந்நேரமும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது.

          மேலும் கடலூர்-திருச்சி மார்க்கமாக குறிப் பிட்ட பஸ் நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்தி செல் லும் 310 தடம் எண்  அரசு பஸ்கள் மணிக்கு நான்கு முறை சென்று வருகின்றன. இவைகள் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லாமல், பஸ் நிலையம் முன்பாக நிறுத்தி பயணிகளை இறக்கி செல் கின்றன. இதைப்போல விருத்தாசலம்- தொழுதூர்  மார்க்கமாக செல்லும் தனியார் பஸ்களும் உட்புறம் வந்து செல்வதில்லை. இதனால் பஸ் நிலை யம் எதிரே தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டு வருகிறது. இதனை தடுத்திட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

விவசாயிகள் மறியல் போராட்டம் : பேச்சுவார்த்தையால் ஒத்திவைப்பு

சேத்தியாதோப்பு  :

                 சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகளை கண்டித்து விவசாய சங்கங்கள் சார்பில் இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்று ஒத்தி வைக்கப்பட்டது.

                  சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை எல்லைக்கு உட்பட்ட கரும்பு கோட்டங்களில் தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு வெட்டிச் செல்வதை தடுத்து நிறுத்தக்கோரியும், தனியார் சர்க்கரை ஆலைக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்து இன்று (4ம் தேதி) சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கரும்பு விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஆலை வளாகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. ஆலையின் தனி அலுவலர் (பொறுப்பு) கலைராஜன், சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமலிங்கம், தாசில்தார் காமராஜ், சேத்தியாதோப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிட்டிபாபு,தேவதாஸ், ஆதிமூலம், மகா ராஜன், வேல்முருகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் ஆலை அதிகாரிகள் தனியார் ஆலைக்கு ஆதரவாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

                  தனியார் ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்ப அனுமதி பெற்ற 18 விவசாயிகள் கோர்ட்டில் தடையாணை பெற்றிருப்பதால் இந்த பிரச்னையில் தலையிட முடியாது என தனி அலுவலர் கூறினார்.  இதனால் விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். மாலை 6.30 மணிக்கு ஆர்.டி.ஓ., ராமலிங்கம், டி.எஸ்.பி., ராமச்சந்திரன் ஆகியோர் அழைத்ததின் பேரில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில், ஒரு வாரத்தில் விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை கோர்ட் உத்தரவிற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனையேற்று விவசாய சங்க நிர்வாகிகள் தங்களது மறியல் போராட்டத்தை தற்காலிகமாக விளக்கி கொள்வதாக அறிவித்தனர்.

Read more »

சி.ஐ.டி.யூ., மாநில மாநாடு கடலூரில் இன்று துவங்குகிறது

கடலூர் :

                இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ.,) 11வது தமிழ்மாநில மாநாடு கடலூரில்  இன்று துவங்குகிறது.

                மா.கம்யூ., வின் தொழிற்சங்க பிரிவான சி.ஐ.டி.யூ.,வின் 11வது மாநில மாநாடு கடலூரில் இன்று துவங்கி மூன்று நாள் நடக்கிறது.  இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் மாநாட்டின் துவக்க விழாவிற்கு மாநில தலைவர் பத்மனாபன் தலைமை தாங்குகிறார். ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட மாநாட்டு கொடியை மாநில துணை தலைவர் வைத்தியநாதன் பெற்றுக் கொள்கிறார்.  ஹேமச்சந்திரன் நினைவு ஜோதியை மாநில துணைத் தலைவர் ராமதாஸ், கோவிந்தராஜன் நினைவு ஜோதியை மாநில செயலாளர் பெற்றுக் கொள்கின்றனர். மாநாட்டு கொடியை ஸ்தாபக பொதுச்செயலா ளர் உமாநாத் ஏற்றுகிறார். மாநில துணைத் தலைவர்  பஞ்சரத்னம் தியாகிகள் தீபம் ஏற்றுகிறார். வரவேற்புக்குழு தலைவர் மூசா வரவேற்கிறார். எம்.பி., தபன்சென் துவக்கவுரையாற்றுகிறார். ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் தியாகராஜன் வாழ்த்துரை வழங்குகிறார். பகல் 12 மணிக்கு பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. மாலை பிரதிநிதிகள் விவாதம் நடக்கிறது.

Read more »

அரசு கலை பண்பாட்டுத்துறையில் பணியாற்ற ஆசிரியர்கள் பரிந்துரை

கடலூர் :

              தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையினரால் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கப்பட்ட கீழ்க்காணும் பணியிடங்களுக்கு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த கீழ்காணும் தகுதியுடையவர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்ய உள்ளனர்.

           மிருதங்கம், வயலின், நாதசுரம், தேவார குரலிசை ஆசிரியர் பதவிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி, மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத் தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டயம், பட்டம். 1.7.09 அன்றைய தேதியில் 30வயது முடிவடையாமல் இருக்க வேண்டும். இத்துடன் உயர் கல்வித்தகுதிக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. நெசவுக்கலை, சிற்பக் கலை, காட்சிவழி தொடர்பு வடிவமைப்பு பயிற்றுனர், செராமிக் பயிற்றுனர்கள்  குறைந்த பட்ச பொதுக்கல்வி, மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டயம், வயது 40க்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் இவ்வலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்கள் தங்களது அசல் பதிவு அடையாள அட்டை மற்றும் அசல் கல்விச்சான்றுகளுடன் வரும் 6ம் தேதிக்குள் நேரில் வந்து சரி பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரன் தெரிவித்துள்ளார்.

Read more »

காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கும் விழா

பரங்கிப்பேட்டை : 

            பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு ஊராட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டது. அதனை ஊராட்சி தலைவர் கோபு வழங்கினார்.  நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பசுபதி, ஆசிரியர் அண்ணாதுரை, வி.ஏ.ஓ., அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

நவரை பருவத்திற்கு ஏற்ற நெல் விதை வேளாண் உதவி இயக்குனர் பரிந்துரை

பண்ருட்டி :

                  பண்ருட்டி பகுதியில் நவரை பருவத்திற்கு ஏற்ற நெல் விதைகள் ஆடுதுறை 37,45 பயிரிட அறிவுறுத்தப்பட் டுள்ளது.

                   இதுகுறித்து பண்ருட்டி உதவி வேளாண் இயக்குனர் ஹரிதாஸ் விடு த்துள்ள செய்திக்குறிப்பு:
                     
         நவரை பருவத்திற்கு ஏற்ற நெல் ரக விதைகள் ஆடுதுறை-37 மற்றும் ஆடுதுறை-45 பண்ருட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ரகங்கள் அதிக உற்பத்தி திறன் கொண்டவை. நவரையில் அதிக மகசூல் பெற்றிட மேலான நடவும், இளம் நாற்றுக்களை நடவு செய்வதும் மிக முக்கியம். மேலான நடவு செய்திட சேடை உழவினை ஏர் கலப்பை அல்லது பவர் டில்லர் கொண்டு செய்திட வேண்டும். நாற்று நட்ட 13 முதல் 18 நாட்களுக்குள் நாற்று பறித்து நடவு செய்திடல் வேண்டும். இந்த தொழில்நுட்பங்கள் செம்மை நெல் சாகுபடி முறையில் மிக முக்கியமான வயல் பணிகளாகும்.   நெல்விதைக்கு ஒருங்கிணைந்த தானிய அபிவிருத்தி திட்டத்தில் கிலோவிற்கு ஏழு ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு வேளாண் துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.

Read more »

.சாலை பாதுகாப்பு வார விழா முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர்

விருத்தாசலம் :

           சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு விருத்தாசலத்தில் ஊர்காவல் படை சார்பில் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

           விருத்தாசலம் பாலக்கரையில் நடந்த நிகழ்ச்சிக்கு படை தளபதி ரவீந்திரநாதன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., ராஜசேகரன் வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி துவக்கி வைத்தார். பஸ், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப் பட்டது. உதவி படை தளபதிகள் தண்டபாணி, ஸ்ரீதரன், குமரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

 சிதம்பரம்:

ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை டி.எஸ்.பி., மூவேந்தன் துவக்கி வைத்தார். சிதம்பரம் கீழ வீதி, பஸ் நிலையம், எஸ்.பி., கோவில் தெரு, மேல வீதி வழியாக  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முடிவடைந்தது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ரங்கநாதன்  ஊர்வலத்தை வழி நடத்தி சென்றனர்.

Read more »

ஜூனியர் சேம்பர் கூட்டம்

சேத்தியாத்தோப்பு :

                   சேத்தியாத்தோப்பு ஜூனியர் சேம்பர் கூட் டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் டாக்டர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மண்டல வளர்ச்சி அலுவலர் கணேசன், மணிமாறன் முன்னிலை வகித்தனர். செயலாளர் உத்திராபதி வரவேற்றார். முடியழகன், கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், செந்தில்குமார் உள்ளிட் டோர் பேசினர். கூட்டத்தில் ஜே.சி., சர்வதேச துணைத்தலைவராக சேத்தியாத்தோப்பு சாசன தலைவர் சிவக்குமாரை  தேர்வு செய்த அனைத்துலக ஜே.சி., ஆட்சி மன்ற குழுவிற்கு நன்றி தெரிவிப்பது, சிவக்குமாருக்கு பாராட்டு விழா நடத்துவது, மகளிர் குழுக்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

Read more »

ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மாலை

நெல்லிக்குப்பம் :

           மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மாலை அணிந்தனர்.

               மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து கோவிலுக்கு செல்வார்கள். நெல்லிக்குப்பம் கிளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மாலை அணியும் விழா நடந்தது. ஆயிரத்து 8 போற்றிகள் பாடி சிறப்பு பூஜை நடந்தது. தலைவர் ஸ்ரீராமுலு, மயிலம்மாள் ஆகியோர் ஐநூறுக்கும்  மேற் பட்டவர்களுக்கு மாலை அணிவித்தனர். அன்னதானம் வழங்கினர். இவர்கள் விரதமிருந்து இருபது பஸ்களில் இன்று (4ம் தேதி) இருமுடி கட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று வழிபட உள்ளனர்.

Read more »

உலக நன்மைக்காக வேள்வி

சிதம்பரம் :

            புவனகிரி ஆதிபராசக்தி மன்றத்தில் சிறப்பு வேள்வி நடந்தது.  புவனகிரி ஆதிபராசக்தி மன்றத்தில் புத் தாண்டை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும், இயற்கை சீற்றம் தணியவும், 12 கலசம்,12 விளக்குகள் கொண்ட வேள்வியை வட்டத்தலைவர் பார்த்தசாரதி தலைமையில் அன்பழகன் துவக்கி வைத்தார்.

                 1008 பேருக்கு சக்திமாலை அணிதல் நிகழ்ச்சியை ஒன்றிய தலைவர் ராஜகோபால் முன்னிலையில் வேள்வி குழு தலைவி மனோகரி துவக்கி வைத் தார். 108 ஏழைகளுக்கு ஆடைதானத்தை மன்ற தலைவர் சஞ்சிவிராயர், மன்ற காப்பாளர் சுப்ரமணியன் வழங்கினர். 1008 பேருக்கு அன்னதானத்தை சுந்தரேசன், கண் ணன் முன்னிலையில் அண்ணாமலை பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலகுமார் துவக்கி வைத்தார்.

Read more »

வருமுன் காப்போம் முகாம்

ஸ்ரீமுஷ்ணம் :

             ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கருணாகரநல்லூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

          முகாமிற்கு ஆயங்குடி வட்டார மருத்துவ அலுவலர் குலோத்துங்கசோழன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் ராமலிங்கம், ஊராட்சி உறுப்பினர்கள் திருஞானம், ரவிச்சந்திரன் முன் னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ஆனந்தி முகாமை துவக்கி வைத்தார். முகாமில் டாக்டர்கள் சக்திவேல், மணிமொழி, சிவானந்தம், மகரஜோதி, சந்திரசேகர், கோமதி மற் றும் டாக்டர் சதீஷ் தலைமையில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.  சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், குழந்தைவேலு, சுகாதார ஆய்வாளர் கொளஞ்சியப்பன், செவிலியர்கள் திலகவதி, மனோன்மணி, வேதாம் பாள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Read more »

இலவச வேட்டி, சேலை வழங்கும் விழா

 சேத்தியாத்தோப்பு :

           சேத்தியாத்தோப்பை அடுத்த வண்டுராயன் பட்டு கிராமத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை ஆர்.டி.ஓ. துவக்கி வைத்தார்.

            நிகழ்ச்சிக்கு புவனகிரி ஒன்றிய சேர்மன் தனலட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் காமராஜ், வருவாய் ஆய்வாளர் ஜெயராமன், ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ. பழனிசாமி வரவேற்றார். ஆர். டி.ஓ., ராமலிங்கள் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அமுதராணி, ஊராட்சி துணைத் தலைவர் சாரங்கபாணி, தலைமையாசிரியர் சுந்தரம் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

எறும்பூர்:

           ஒன்றிய கவுன்சிலர் ராஜி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் இளையபெருமாள் முன்னிலை வகித் தார். புவனகிரி ஒன்றிய சேர்மன் தனலட்சுமி கலைவாணன் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். ஊராட்சி துணைத்தலைவர் குமார் நன்றி கூறினார்.

நல்லூர்: 

           வேளாண்மைக்குழு தலைவர் பாவாடை கோவிந்தசாமி, நகர் ஊராட்சி தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன் சிலர் சக்திவிநாயகம் வரவேற்றார். நல்லூர் ஒன்றிய சேர்மன் ஜெயசித்ரா தலைமை தாங்கி, ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். நகர் ஊராட்சியில் நடந்த விழாவில் ஊராட்சி தலைவர் பெரியசாமி தலைமையில் மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினார். விழாவில் ஒன்றிய துணை செயலாளர் கருப்புசாமி, கிளை செயலாளர்கள் குணா, அன்பழகன், மணிகண்டன், அன்புக்குமரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

விருத்தாசலம்:

            ஆலடி ரோடு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன்,வாசு சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி பயனாளிகளுக்கு வேட்டி சேலைகளை வழங்கினார்.

Read more »

.மங்களூரில் விதைகிராம திட்டத்தில் தரமான விதை உற்பத்தி பயிற்சி

திட்டக்குடி :

                  மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு விதை கிராம திட்டத்தில் தரமான விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது.

                 மங்களூர் வட்டாரத்தில் விதை கிராம திட்டத்தின் கீழ் நெல், சிறுதானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் தரமான விதைகளை, விவசாயிகளே உற்பத்தி செய்திட பதினேழு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டது.

               ராமநத்தம் மற்றும் கல்லூர் கிராமங்களில் அதனை சுற்றியுள்ள தேர்வு செய்யப்பட்ட ஆர்வமுள்ள விவசாயிகள் 100 பேருக்கு ஒரு நாள் பயிற்சி, மங்களூர் வேளாண் அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் பன்னீர்செல்வம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முருகன் பயிற்சி அளித்தனர். துணை வேளாண் அலுவலர் டென்சிங் அஸோஸ்பைரில் லம், ரைஸோபியம் ஆகிய உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான கொல்லி மருந்துடன் விதை நேர்த்தி செய்வதன் அவசியத்தை விளக்கினார். பயிற்சி ஏற்பாட்டினை உதவி வேளாண் அலுவலர்கள் குணசேகரன், திருமுருகன், பிரகாஷ், ரமேஷ் மற்றும் சின்னதுரை செய்தனர். உதவி விதை அலுவலர் கோவிந்தசாமி நன்றி கூறினார்.

Read more »

அடையாள அட்டை வழங்கும் விழா

 பண்ருட்டி :

             பண்டரக்கோட்டை ஊராட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.

              பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை ஊராட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 970 பயனாளிகளுக்கு முதற் கட்டமாக 350 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு அடையாள அட் டைகளை வழங்கினார். துணை தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். இதில் வி.ஏ.ஓ.ராஜா, தொரப்பாடி பேரூராட்சி தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் ராகவன், வார்டு உறுப்பினர்கள் துரை, ஏழுமலை, சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

Read more »

ராகவேந்திரர் கோவிலில் 108 குட பாலாபிஷேகம்

புவனகிரி :

                  புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு மிருத்திகா பிருந்தாவனத்திற்கு 108 குடம் பாலாபிஷேகம் நடந்தது.

                 புவனகிரி ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு புத்தாண்டை முன்னிட்டு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கொளக்குடி நரசிம்ம ஆச் சார் தலைமையில் வேதபாராயணமும், ரகுநாத ஆச் சார் முன்னிலையில் ராகவேந்திரர் சாமிக்கு மாலைகள் அணிவித்து சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறக்கட் டளை நிர்வாகிகள் ராமநாதன், உதயசூரியன், கதிர்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

செம்பேரி கிராமத்தில் இலவச கலர் 'டிவி'

திட்டக்குடி :

         பெண்ணாடம் அடுத்த செம்பேரி ஊராட்சியில் 885 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப் பட்டது.

              விழாவிற்கு ஊராட்சி தலைவர் சின்னபொண்ணு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் செல்வி,  ஆடியபாதம், முன்னாள் ஊராட்சி தலைவர் கொளஞ்சிநாதன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன் முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., அண்ணாதுரை வரவேற் றார். முன் னாள் ஒன்றிய கவுன்சிலர் தனவேல், எழுத்தர் கருணாநிதி வாழ்த்தி பேசினர். பெண்ணாடம் ஆர்.ஐ., பாஸ்கரன் 885 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கினார். கிராம உதவியாளர்கள் கந்தசாமி, ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆறுமுகம் நன்றி கூறினார்.

Read more »

ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தக்கோரி மனு

சிறுபாக்கம் :

          சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த கோரி அமைச்சரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.

                மங்களூர் ஒன்றிய ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் டாக்டர் ராஜூ,  சுகாதாரத்துறை  அமைச்சர் பன்னீர் செல்வத்திடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

           திட்டக்குடி வட்டத்தில் சிறுபாக்கம் குறுவட்ட தலைமையிடமாக இயங்கி வருகிறது. இதனை சுற்றி எஸ்.மேட்டூர், எஸ்.புதூர், அரசங்குடி, வி.புதூர், சித்தேரி, நரையூர் உட்பட சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினசரி நூற் றுக் கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். ஆனால் சில மணி நேரம் மட்டுமே டாக்டர் கள் சிகிச்சையளித்து செல்வதால், அவசர காலங்களில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சிறுபாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, முழு நேர மருத்துவமனையாக தரம் உயர்த்தி டாக்டர், பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட் டுள்ளது.

Read more »

அன்னதானம்

சிதம்பரம் :

            சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை சங்கத் தலைவர் சேகர் துவக்கி வைத்தார். நகர செயலாளர் முத்துகுமார், பொரு ளாளர் ராஜ்குமார், ராமச்சந்திரன், ரமேஷ், சரவணன், பிரபாகரன், ரஜினி, பாஸ்கர், முருகன், வெங்கடேஸ்வரன்  பங்கேற்றனர்.

Read more »

ஊராட்சிகளில் நூலக அறிவுத்திறன் போட்டி

கடலூர் :

                 மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் நூலக அறிவுத் திறன் போட்டிகள் நடத்தப் பட்டன.

                    மாளிகைகோட்டத்தில் நடந்த விழாவிற்கு ஊராட்சி தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். நல்லூர் ஒன்றிய ஆணையர் சேகர், விரிவாக்க அலுவலர் பிரேமா, துணைத்தலைவர் வசந்தா முன்னிலை வகித்தனர். நூலகர் ராஜகோபால் வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற உதவி திட்ட அலுவலர் செல்வபெருமாள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். சுந்தரம் நன்றி கூறினார். நத்தப்பட்டு: ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர்கள் நடுவராக இருந்து போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றார். தச்சகாடு: ஊராட்சி தலைவர் கோபு தலைமை தாங்கினார். அறிவு திறன் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒன்றிய ஆணையர் சுலோச்சனா சான்றிதழ் வழங்கினார். விழாவில் இ.ஓ.பி., ராமதாஸ், கிராம நிர்வாக அலுவலர் அசோகன், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோ.ஆதனூர்:

                 ஊராட்சி தலைவர் ஜமுனாராணி தலைமை தாங்கினார். நூலகர் தேசிங்கு, உதவி மேற்பார்வையாளர் ஜெயராமன், தலைமை ஆசிரியர் பெரியசாமி முன் னிலை வகித்தனர். மாவட்ட உதவி திட்ட அலுவலர் உஷாராணி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பேசினார். ஆசிரியர் கவிதா, மலர் விழி, பிரேமகுமாரி, சுஜாதா, வார்டு உறுப்பினர்கள் தமிழ் செல்வன், கொளஞ்சிநாதன், அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 கடவாச்சேரி:

           வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். குமராட்சி ஒன்றிய சேர்மன் மாமல்லன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் சத்துணவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 மேலத்திருக்கழிப்பாலை:

                  ஊராட்சி தலைவர் பொன்னுசாமி  தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கீதாராணி வரவேற்றார். கவுன்சிலர் திருஞானசம்மந்தம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ், தலைமை ஆசிரியர் செல்வி முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கான தனித்திறன் போட் டிகளை  உதவி ஆசிரியை உஷா, வர்ணசுதன், திவ்யா உள்ளிட் டோர் நடத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  நூலகர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

 சு.கீணனூர்:

              ஊராட்சி தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மணி முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் உஷாராணி பரிசு வழங்கினார். கம்மாபுரம் பி.டி.ஓ., சிவன், ஜெயராமன், துணை தலைவர் இளவரசி, எழுத்தர் ரவிசந்திரன், நூலக அலுவலர் மாணிக்கம், சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 கொழை:

             ஊராட்சி தலைவர் ராமானுஜம் தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர்கள் கண்ணாயிரம், கண்ணன் முன்னிலை வகித்தனர். ஞானசேகரன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் அந்தோணிசாமி, பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியதாஸ், சகாயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

காட்டுகூடலூர் ஊராட்சியில் இலவச 'டிவி' வழங்கும் விழா

பண்ருட்டி :

          பண்ருட்டி அடுத்த காட்டுகூடலூர் ஊராட்சியில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா  நடந்தது.

                   ஊராட்சி  தலைவர் பாரிவள்ளல் தலைமை தாங்கினார். தாசில்தார் பாபு, பி.டி.ஓ., கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர். ஆயிரத்து 480 பயனாளிகளுக்கு எம்.எல்.ஏ.,வேல்முருகன் இலவச கலர் "டிவி'யை வழங்கினார். இதில் முன்னாள் மாவட்ட பா.ம.க., துணை செயலாளர் ரவிச்சந்திரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். சிலம்பிநாதன் பேட்டை: ஊராட்சி துணை தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். தாசில்தார் பாபு முன்னிலை வகித்தார். பயனாளிகள் 1380 பேருக்கு இலவச கலர் "டிவி'க்களை எம்.எல்.ஏ., வேல்முருகன் வழங்கினார்.

Read more »

ஒரே தவணையில் நிலுவை தொகை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

திட்டக்குடி :

           நிலவைத் தொகையை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

              திட்டக்குடி வட்ட ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். பொருளாளர் தங்கராசு முன்னிலை வகித்தார். செயலாளர் முருகன் வரவேற்றார். செயலாளர் பழனிச்சாமி, செயல் தலைவர் பழனியாண்டி, கிருஷ் ணமூர்த்தி, லட்சுமணன், கோவிந்தன் பேசினர்.

                 சங்கத்தில் காலியாக உள்ள துணைத்தலைவர், புரவலர், ஆலோசகர் மற்றும் செயல் தலைவர் பொறுப்புகளுக்கு  நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் 1.1.2006க்கு பின் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கிய ஓய்வூதிய பலன் விரைவில் வழங்க வேண்டும், நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இளங்கோவன் நன்றி கூறினார்.

Read more »

பொங்கல் பண்டிகைக்காக கிராமங்களில் மண் பானை தயாரிக்கும் பணி தீவிரம்

நடுவீரப்பட்டு :

              பொங்கல் பண்டிகைக் காக மண் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

         தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங் கலுக்கு இன்னும் 10 நாட் களே உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு புதுப்பானையில் பொங்கலிட்டு குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால்,  இன்றைய விஞ்ஞான உலகில் நகர பகுதிகளில் சம்பிரதாய பண்டிகையாக மாறியுள்ளது. காஸ் அடுப்பில் சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங்களில் பொங்கல் வைத்து வருகின்றனர். ஆனால் நாட்டின் முதுகெலும்பாக உள்ள கிராமங்களில் இன்றைக்கும் பாரம்பரியத்தையும், கலாசாரங்களை மறக்காமல் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கலை  வெகு சிறப் பாக கொண்டாடி வருகின் றனர்.

                   அதில் முதல் நாள் வீட்டு வாசல் அல்லது தோட்டங்களில் புதிய அடுப்பில் பெரிய மண் பானைகள் வைத்து குடும் பத்தினருடன் கூடி பொங் கல் வைத்து இயற்கையை வழிபடுகின்றனர். மண் பானை, சட்டி மற்றும் அடுப்பு தேவை அதிகம் உள்ளதால் கிராமங்களில் மண் பானை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பானைகளின் அளவிற்கு ஏற்ப 20 முதல் 80 ரூபாய் வரை விலை இருக்கும் என தொழிலாளர்கள் கூறுகின்றனர். நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில் பொங்கல் பண்டிகையினால் தற்போது சூடுபிடித்துள்ளது.

Read more »

சாலை பாதுகாப்பு வாரவிழா

பண்ருட்டி :

               பண்ருட்டியில் சாலைபாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு  போக்குவரத்து துறை சார்பில் வாகனங்களில் பிரதிபலிப்பான்கள் ஒட்டப்பட்டது.
 
                        பண்ருட்டி கும்பகோணம் சாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுதாகர், வேலுமணி, கோகுலகிருஷ்ணன் வாகன தணிக்கை மேற்கொண் டனர். அப்போது லாரிகளில் அதிக லோடு ஏற்றி செல்கிறதா, ஆட்கள் ஏற்றி செல்கின்றனரா என சோதனை செய்தனர். அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அகற்றி, டிரைவர்களை எச்சரித்தனர்.  பிரதிபலிப்பான்கள் இல்லாத வாகனங்களில் பிரதிபலிப்பான்கள் ஒட்டினர். வாகனத்தின் வேகம் மற்றும் அதிக புகைவெளியிடும் வாகனங்கள் குறித்து சோதனை செய்தனர். சாலை பாதுகாப்பு குறித்த  துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

Read more »

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி மந்தம்

பண்ருட்டி :

               பண்ருட்டி திருவதிகை வீரட் டானேஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் இரு ஆண்டுகளாக மந்தமாக நடந்து வருகிறது.

                 பண்ருட்டி திருவதிகையில் முதல்பாடல்பெற்ற  அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருப் பணிகள் துவங்கியது.  திருப்பணி மதிப்பீடு 35 லட்சத்தில் அரசு நிதி 8.50 லட்சமும், உபயதாரர்கள் செலவில்  26.50 லட்சம் மூலம் பணிகள் செய்ய வேண்டும். இதில் ராஜகோபுரம், 2ம் நிலை ராஜகோபுரம் ஆகிய பணிகள் முடிவடைந்தது. கருவறை விமானம், சுற்றுசுவர் மண்டபம்  சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அர்த்த மண்டபம், மகா மண்டபம், அலங்கார மண்டபம், அம் பாள் கோவில், விநாயகர் , வள்ளி தெய் வானை சுப்ரமணிய சுவாமி கோவில், பரிகார கோவில், நூறுகால் மண்டபம், வாயில் முன் மண்டபம், குளம், சுற்றுச்சுவர், கோவில் வாயில் முன் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்,தேர் பணி  ஆகிய பணிகள் துவங்க வேண்டியுள்ளது. பணிகள் குறித்து விழுப்புரம் இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் திருமகள் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீர் ஆய்வு செய்து மூன்று மாதத்தில் பணிகளை முடித்து தை மாதம் கும்பாபிஷேகம் செய்ய உத்திரவிட்டார்.

                    ஆனால் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக  திருப்பணிகள் முடிவடையாமல் கிடப்பில் உள்ளது.  கோவிலில் ஓதுவார், பரிச்சாரகர், சுயம்பாகர், விளக்கு போடுபவர், மேளக்காரர், பூதொடுப்பவர், எலக்ட்ரீஷியன், சலவை தொழிலாளி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் கூடுதல் பணிகளை செய்வதால் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.   கோவில் வருமானத்தை அதிகரிக்கவும், திருப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

காங்., உறுப்பினர் சேர்க்கை

சிறுபாக்கம் :

                  நல்லூர் ஒன்றியத் தில் காங்., உறுப்பினர் சேர்க்கை நடந்தது. நல்லூர் ஒன்றியத்தில் காங்., உறுப்பினர் சேர்க்கை வட்டார தலைவர் கொளஞ்சி, மாவட்ட பிரதிநிதி வேதமாணிக் கம் முன்னிலையில் நடந் தது. இதில் காட்டுமயிலூர், நல் லூர், நகர், சேப்பாக் கம், நிராமணி, வேப் பூர், கண்டப்பங்குறிச்சி, பூலாம்பாடி, சிறுநெசலூர் உட்பட 41 கிராமங்களில் காங்., உறுப் பினர்கள் சேர்க்கப் பட் டனர். மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி உறுப்பினர் சேர்க்கை படிவத்தினை வழங்கினார். ராயப் பிள்ளை, சின்னதுரை, பிரதிநிதி கமால்  கலந்து கொண்டனர்.

Read more »

விருத்தாசலம் பிராமணர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

விருத்தாசலம் :

              விருத்தாசலத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

                       விருத்தாசலம் வேதபாராயண மடத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்க புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். தேர்தல் அதிகாரி பாலமுருகன் தலைமையில் தேர்தல் நடந்தது. கிளை தலைவராக விருத்தகிரி, செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சாமிசேகர், துணை தலைவர்கள் ஸ்ரீதர், கலைமகள், கோபாலகிருஷ்ணன், அமைப்பு செயலாளர் ரங்கராஜன், இணை செயலாளர்கள் ரமேஷ்பாபு, ரமேஷ், பாலாஜி, மகளிரணி செயலாளர் ராஜலட்சுமி, இணை செயலாளர் விமலா, விருத்தகிரி, சூரியநாராயணன், பாலசுப்ரமணியன், சுந்தரேசன், முத்துகிருஷ்ணன், கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ரமேஷ்பாபு நன்றி கூறினார்.

Read more »

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் : ஐக்கிய ஜனதாதளம் வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு :

              தமிழ்நாடு ஐக்கிய ஜனதாதள மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சேத் தியாத்தோப்பில் நடந்தது.

                   மாநில தலைமை பொது செயலாளர் ராஜகோபால் தலைமை தாங் கினார். மாவட்டத் தலைவர் சங்கர், பொதுச் செயலாளர் திருவரசமூர்த்தி முன் னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். மாநில தொழிற்சங்க தலைவர் நடேசபழனி, மாநில இளைஞரணி தலைவர் செங்கை ஆனந்தன், மாநில பொதுச் செயலாளர் எழிலோவியன், மாநில செயலாளர் இப்ராம்பால், ஊனமுற்றோர் பிரிவு தலைவர் காமராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏழுமலை உள்ளிட்டோர் பேசினர்.

                      கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து நஷ்டஈடு வழங்க வேண்டும். சமச்சீர் கல்வித்திட்டத்தை அமுல்படுத்துவதற்குமுன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி கருத்தை கேட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறத் தக்க வகையில் அமல்படுத்த வேண்டும். மிஸ்ரா கமிட்டி அறிக் கையை ஏற்று தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க  மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதித்த சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

Read more »

கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில் 'மெகா' பள்ளங்களால் உயிரிழப்பு அபாயம்

பண்ருட்டி :

                    கண்டரக்கோட்டை பெண் ணையாற்றில் மணல் குவாரியால் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங் களால், உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்திட வேண்டும்.

                 பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை, புலவனூர் பெண் ணையாற்றில் மணல் குவாரி இயங்கியது. விதிமுறைகளை மீறி 20 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுக்கப்பட்டதால் ஆற்றில் பல இடங்களில் யானை பிடிக்கும் அளவிற்கு "மெகா' பள்ளங்கள் ஏற் பட்டது.  ஆற்றில் தண்ணீர் வந் தால் சிறுவர்கள் பள்ளங்களில் சிக்கி இறக்கும் அபாயம் நிலவி வருகிறது. இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியானதை தொடர்ந்து கடந்த 10ம் தேதி கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் குவாரியை பார் வையிட்டு மெகா பள்ளங்களை மூடி சமன் செய்திட குவாரி குத்தகைதாரர்களுக்கு உத்தரவிட்டனர்.

                    அதனைத் தொடர்ந்து பெயரளவிற்கு அதிகாரிகள் பார்வையிட்ட பகுதியில் இருந்த பள்ளங்களை பொக்லைன் கொண்டு சமன் செய் தனர். பிற பள்ளங்களை அப்படியே விட்டுவிட்டனர். இதனால் கடந்த மாதம் பெய்த தொடர் மழையில் ஆற்றில் சிறிய அளவில் தண்ணீர் செல்கிறது. பள்ளங்கள் உள்ள பகுதியில் அதிகளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் சுற்று வட்டாரத்தில் உள்ள சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். மேலும் பொங்கல் பண்டிகைக்கு வெளியூர்களில் இருந்து பலர்  ஆற்று திருவிழாவில் கலந்து கொள்வார்கள். ஆற்று நீரில்  விளையாடும் போது குவாரியில் மணல் எடுத்த பள்ளங்கள் தெரியாமல் பலர் விபத்துக்களில் சிக்கிட  வாய்ப்புள்ளது. அதனை தவிர்த்திட தற்போது ஆற்றில் தண்ணீர் தேங்கியுள்ள பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

கவர்னர் உரையில் அறிவிப்பு வெளியிட சத்துணவு பணியாளர் சங்கம் கோரிக்கை

விருத்தாசலம் :

             புத்தாண்டு சட்டமன்ற ஆளுநர் துவக்க உரையில் சத்துணவு- அங்கன்வாடி பணியாளரை முழு நேர பணி நிரந்தர அறிவிப்பு அறிவித்திடவேண்டும் என தமிழ் நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் விஜயபாண்டியன் விடுத்துள்ள அறிக்கை:

           பள்ளி சத்துணவு மைய காலிப்பணியிடங்களில் ஆண்களையும் பணி நியமனம் செய்வது, சமூக நலத்துறையில் மட்டும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிநிலை உயர்வு என்பதை விரிவுபடுத்தி அரசின் அனைத்து துறைகளிலும் கல்விதகுதி அடிப்படையில் பணிநிலை உயர்வு வழங்க வேண்டும்.  பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நிரந்தர பணியிடம் வழங்குவது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை முழுநேர நிரந்தரப்படுத்துவது, அரசின் அனைத்து துவக்கப்பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., எனப்படும் மழலையர் வகுப்புகளை துவக்குவது மற்றும் அரசு பணிவிதிகளை சத்துணவு பணியாளர்களுக்கும் ஏற்படுத்துவது உள் ளிட்ட அறிவிப்புகளை சட்டசபை கவர்னர் துவக்க உரையில் அறிவித்திட முதல்வர் ஆவன செய்திட வேண்டும்.

Read more »

கடலூர் நகருக்கு புறவழிச்சாலை அவசியம்! : குறுகிய தூரத்தை கடக்க 4 சிக்னல்கள்

கடலூர் :

             கடலூர் நகரில் போக் குவரத்து நெரிசலை குறைக்க தொலைநோக்கு பார்வையோடு புறவழிச் சாலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதாலும், ஒரே இடத்தில் பஸ் நிலையம் அமைந்துள்ளதால் மக்கள் கூட்டம் லாரன்ஸ் ரோடில் குவிகின்றன. பஸ் நிலையம் பின்பகுதியில் ரயில்வே மேம்பாலம் திறந்துவிடப்பட்டாலும் மக்கள் பயன்பாடு குறைவாகவே உள்ளது. தற் போது எதிர்வரும் பொங் கல் பண்டிகையின்போது ரயில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதோ அதோ என இழுத் துக் கொண்டு வரும் சுரங் கப்பாதைப் பணியும் துவங்குவதற்கான சாத்தியகூறுகள் குறைவாக உள் ளன. அவ்வாறு ரயில் போக்குவரத்து துவங்கப்படுமாயின் ரயில்வே கேட் மூடி திறக்கும்போது "டிராபிக் ஜாம்'  தவிர்க்க முடியாததாகிவிடும். 
                    
                         ஒரு சில வியாபாரிகள் சுய நல நோக்கத்திற் காக எல்லா திட்டத்திற்கும் முட்டுக்கட்டை போட்டு லாரன்ஸ் ரோடில் மக்கள் கூட்டத்தை தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். இதனால் பஸ் நிலையம் 2 ஆக பிரிக்கும் எண்ணம் கூட கைவிடப்பட்டது. ஏற்கனவே லாரன்ஸ் ரோடில் வாகனங்கள் நிறுத் தவும், பிளாட் பாரத்தில் நடந்து செல்லவும்  மக்கள் படாதபாடு படும் நிலையில் ரயில் வருகையால் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். புதுச் சேரி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனம் மஞ்சக் குப்பம் மணிக்கூண்டில் இருந்து 1.5 கி.மீ., தூரத்தை கடக்க பிள்ளையார்கோவில், போஸ்ட் ஆபீஸ், உட்லண்ட்ஸ், அண்ணாபாலம் ஆகிய சிக்னலை கடக்க வேண்டியுள்ளது. "பீக் அவரில்' வாகனங்கள் ஊர்ந்து செல்லும் அவல நிலை உள்ளது.

                          கடலூர் சிப்காட்டில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கெம்ப்ளாஸ்ட், துவங்கப்படவுள்ள நாகர் ஜூனா, பவர் பிளான்ட் போன்ற கம்பெனிகள் விரைவில் கால்பதிக்கப்படவுள்ளன.  ஐயாயிரம் தொழிலாளர்கள் பணியாற்றக்கூடிய இக் கம்பெனிகளில் உற்பத்தி செய்யும் பொருட்களை சாலை வழியாகத்தான் கனரக வாகனங்கள் மூலம் எடுத்து செல்ல வேண்டும். அதற்கு தக்க சாலை வசதிகள் இதுவரை ஏற்படுத்தப்படாமல் உள்ளது. சாதாரணமாக சிறிய நகரங்களில் கூட புறவழிச் சாலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இக்காலகட்டத் தில் கடலூர் நகருக்கு புறவழிச் சாலை இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. சிதம்பரம், சீர்காழி, உளுந்தூர்பேட்டை, விழுப் புரம் போன்ற நகரங்களில் புறவழிச்சாலைகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடலூர் நகருக்கு இதுவரை புறவழிச்சாலை திட்டத்தை துவங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

                           செம்மண்டலம் பகுதியில் பிரியும் சாலை கம்மியம்பேட்டை பாலம் கட்டப்பட்டும் சாலை பணிகள் நிறைவேற்றப்படாததால் மக்களுக்கு பயன்படாமல் உள்ளது. எனவே திருப்பாபுலியூர் ரயில்வே மேம்பாலம் எதிரெ உள்ள சாலையில் துவங்கி நத்தவெளி சாலை அருகே ஒரு புதிய புறவழிச்சாலை அமைக்க அப்போதைய கலெக்டர் ககன்தீப்சிங் பேடி முயற்சி மேற்கொண்டார். அந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் கடலூர் நகருக்குள் வராமலேயே வாகனங்கள் கடலூரை கடக்க முடியும். அண்மையில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நடத்திய பிரம் மாண்ட பேரணியில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதில் பல மணிநேரம் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.  எனவே கடலூர் நகருக்கு புறவழிச்சாலை திட்டப்பணியை விரைந்து நிறைவேற்றிட அதிகாரிகள் இப்போதே முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior