உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

கார்டோசாட் 2பி செயற்கைக்கோள் மே 9-ல் விண்ணில் ஏவப்படுகிறது


                அடிப்படை கட்டமைப்பு, நகரத் திட்டப் பணிகளுக்கு உதவும் கார்டோசாட் 2பி செயற்கைக்கோளை மே 9-ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்ணில் ஏவுகிறது. 
 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய செய்தித் தொடர்பாளர் எஸ். சதீஷ் கூறியது: 
 
                      700 கிலோ எடை கொண்ட கார்டோசாட் 2பி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி-சி15 ராக்கெட் மூலம் மே 9-ம் தேதி காலை 9.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோளின் ஆயுள் 5 ஆண்டுகள் ஆகும்.கார்டோசாட் 2பி செயற்கைக்கோளுடன் 117 கிலோ எடைகொண்ட மேலும் 4 சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் ஒன்று பெங்களூர்-ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மிகச் சிறியசெயற்கைக்கோளாகும். மற்ற 3 செயற்கைக்கோள்கள் கனடா, ஸ்விட்சர்லாந்து நாடுகளை சேர்ந்தவையாகும் என்றார் அவர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நாகூர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிராக்கி : ஒரே நாளில் 16 நாள் டிக்கெட்டுகள் முன்பதிவு

               கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு, 16 நாட்களுக்கான இரண்டாம் வகுப்பு மற்றும் 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகளிடம் உள்ள அமோக வரவேற்பால், மேலும் இரண்டு பெட்டிகள் இணைத்து இயக்கப்பட ரயில்வே அதிகாரிகள் ஆலோசித்துள்ளனர்.
 
                   சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சை வழியாக நாகூருக்கு, கடந்த 23ம் தேதியிலிருந்து கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு நாளுக்கு நாள் மக்கள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த ரயில், சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி)'ஏசி' மூன்றாம் வகுப்பு மற்றும் 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் இரவு நிலவரப்படி, மே 8ம் தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ரயிலில் சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு பயணம் செய்ய இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) மற்றும் 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் வரும் 24ம் தேதி வரை (16 நாட்களுக்கு) நேற்று ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் மே 17ம் தேதி வரை 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
                  இந்த ரயிலில் நாகூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு வரும் மே 12 மற்றும் 13ம் தேதிகளைத் தவிர வரும் மே 27ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) டிக்கெட்டுகளும், வரும் மே 12, 13 மற்றும் 14ம் தேதிகளைத் தவிர வரும் மே 17ம் தேதி வரை 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் வரும் மே 6ம் தேதியைத் தவிர வரும் மே 10ம் தேதி வரை அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த ரயிலில் சென்னை எழும்பூரிலிருந்து தஞ்சைக்கு வரும் மே 24ம் தேதி வரை இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) டிக்கெட்டுகளும், மே 18ம் தேதி வரை 'ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்டுகளும், வரும் மே 17ம் தேதி வரை 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு மக்களிடம் கிடைத்துள்ள அமோக வரவேற்பையொட்டி கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைத்து இயக்கவும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

'ஆன்-லைனில்' சமூக நலத்துறை திட்டங்கள் துவக்கிவைப்பு


                  சமூக நலத்துறையின் ஆறு திட்டங்களுக்கு, 'ஆன்-லைனில்' விண்ணப்பிக்கும் முறையை, அமைச்சர் கீதாஜீவன் நேற்று துவக்கி வைத்தார். அரசின் பல்வேறு துறைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை, 'ஆன்-லைன்' மூலம் வழங்கும் திட்டத்தை, தகவல் தொழில்நுட்பத்துறை உருவாக்கி வருகிறது. சமூக நலத் துறை வழங்கும் ஆறு திட்டங்களுக்கு, 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை நேற்று  துவக்கப்பட்டது. சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
 

 தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கூறியதாவது: 

               மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமண நிதி உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், தமிழ்நாடு அரசு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் ஆகிய ஆறு சேவைகள் 'ஆன்-லைன்' மூலம் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நான்கு மாவட்டங்களில், 1,045 மக்கள் கணினி மையங்கள் உள்ளன.  பொதுமக்கள் இந்த மக்கள் கணினி மையங்களுக்குச் சென்று, 'ஆன்-லைன்' மூலம் சமூக நலத்துறை  திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
                 விண்ணப்பிக்கும்போது, முதலில் விண்ணப்பதாரரின் தகவல் கேட்கப்படும். அவருக்கு ஒரு 'கேன்'( சிட்டிசன் அக்சஸ் நம்பர்) எண் வழங்கப்படும். அதன்பின், அரசு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பத்துடன் ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ், திருமண பத்திரிகை உட்பட தேவையான ஆவணங்களையும் இணைத்து அனுப்ப முடியும். இந்த விண்ணப்பங்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுப்பப்படும். பின், கள ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பிறகு விண்ணப்பம் கிராம வளர்ச்சி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரிடம் அனுப்பப்பட்டு விண்ணப் பம் ஏற்கப்பட்டு, அத்தகவல் விண்ணப்பதாரருக்கு தெரிவிக் கப்படும். விண்ணப்பதாரர் எங் கும் அலைய வேண்டியதில்லை.
 
                விண்ணப்பதாரர் ஒவ்வொரு கட்டத்திலும், விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்ற விவரத்தை மக்கள் கணினி மையத்தில், 'கேன்' எண்ணை பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடியும். இரண்டு வாரங்களில் சிட்டா, பட்டா, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை சேவைகள், 'ஆன்-லைனில்' வழங்கப்படும். அரசின் அனைத்து சேவைகளையும் மூன்று, நான்கு மாதங்களில் ஆன்-லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பூங்கோதை கூறினார். 'மத்திய அரசு, அனைத்து குடிமகன்களுக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது வழங்கப்பட்டவுடன், தமிழக அரசின் சேவைகளைப் பெற 'கேன்' எண்ணிற்கு பதிலாக, பிரத்யேக அடையாள எண் பயன்படுத்தப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம்:

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2010-11ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.இ., பி.எஸ்சி. நர்சிங், பி.எஸ்சி. விவசாயம், பி.எஸ்சி. தோட்டக்கலை, பி.பார்ம்., பி.பார்ம். லேட்டரல் என்டரி, டி.பார்ம். ஆகிய படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

                  துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முதல் விண்ணப்பத்தை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். விண்ணப்பங்கள் 30.06.2010 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.06.2010 அன்று மாலைக்குள் பல்கலைக்கழகத்துக்கு  வந்துசேர வேண்டும் என துணைவேந்தர் தெரிவித்தார். விண்ணப்ப விற்பனை தொடக்க விழாவில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புலமுதல்வர்கள், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

General Strike At Cuddalore The Called for by the Opposition parties

 

General strike evinced partial response in Cuddalore on Tuesday.

CUDDALORE:

              The Called for by the Opposition parties against the inflationary trend evoked mixed response in Cuddalore and Villupuram districts on Tuesday.

           Over 600 cadre belonging to the All India Anna Dravida Munnetra Kazhagam, the Communist Party of India, the Communist Party of India (Marxist) and the Marumalarchi Dravida Munnetra Kazhagam were arrested when they tried to disturb public utilities. Though the day generally passed off peacefully, showcases of three textile showrooms in Vriddhachalam were damaged by certain miscreants in the morning. Cadre of the Communist Party of India, led by M. Sekar, obstructed the movement of buses at Panruti.

            Commercial hubs such as Lawrence Road in Cuddalore looked deserted as only a handful of shops remained open. While the transport corporation operated the regular fleet of services, private bus operators owing allegiance to the Opposition parties withdrew their services.In certain areas, mini-buses and autorickshaws were off the road. Essential services went on without any interruption. Heavy security was maintained at bus stands, railway stations, commercial complexes, places of worship and vegetable markets. Mobile parties were deployed to monitor the situation.

Read more »

Plea to open southern entrance to Natarajar Temple


CUDDALORE: 

           The State government should throw open the southern entrance to the Nataraja Temple at Chidambaram that remains closed for centuries.

             A demand in this regard was made by the Tamil Maanila Vivasaya Thozhilalargal Sangam (State wing of the Bharatiya Kheth Mazdoor Union owing allegiance to the Communist Party of India) at the State-level conference on untouchability organised at the temple town recently.The resolution was passed in the presence of the CPI leaders R. Nallakannu, T. Pandian, D. Raja, MP, T. Manivasagam and M. Sekar.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

Compensation Disbursed

 CUDDALORE: 

                The Neyveli Lignite Corporation has paid a compensation of Rs. 11.5 crore in the past two days to 486 persons who have given their land to the company.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பொருள்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்தாகாது

 கடலூர்:
 
              பல மாதங்கள் பொருள்கள் வாங்காமல் இருந்தாலும் ரேஷன் கார்டு ரத்து ஆகாது என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். 

மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                  ரேஷன் பொருள்கள் தொடர்ந்து 3 மாதங்கள் வாங்காமல் இருந்தால், ரேஷன் கார்டு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. ஏற்கெனவே இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. ரேஷன் அட்டையை பயன்படுத்தி பொருள்கள் வாங்குவதோ வாங்காமல் இருப்பதோ ரேஷன் அட்டைதாரரின் முழுஉரிமை. எனவே பொருள்கள் வாங்காமல் இருக்கும் ரேஷன் அட்டைகளை நிறுத்தி வைக்கக் கூடாது என்று மீண்டும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பல மாதங்கள் பொருள்கள் வாங்காமல் இருந்து, தேவைப்படும்போது மீóண்டும் ரேஷன் கார்டு மூலம் பொருள்கள் வாங்கச் சென்றால், அவர்களுக்கு வழங்க மறுக்கக் கூடாது. தொடர்ந்து பொருள்கள் வழங்கப்பட வேண்டும் என்று ரேஷன்கடை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. எல்லா மாதங்களிலும் ரேஷன் கடையில் பொருள்கள் வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் கிடையாது. தேவையான நேரங்களில் தேவையான அத்தியாவசிய, சிறப்புப் பொருள்களை ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இதுதொடர்பாக குறைகள் இருப்பின் ரேஷன் அட்டைதாரர்கள் 04142- 230223 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9445000209 என்ற கைபேசி எண்ணிலோ மாவட்ட வங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கணிசப்பாக்கம் கிராமத்தில் இமாசலப் பிரதேச குழுவினர்

 பண்ருட்டி:

                 தமிழக கிராமங்களின் முழு சுகாதாரம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் திட்டப்பணி நிறைவேற்றத்தை தெரிந்து கொள்வதற்காக இமாசலப் பிரதேசம் சிர்மார் மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவினர் அண்ணா கிராமம் ஒன்றியம் கணிசப்பாக்கம் கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தனர். தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பொருளியல் ஆய்வாளர் பி.எஸ்.செüஹான் தலைமையில் வந்த இக்குழுவினரை கணிசப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதா சாமுவேலும், மகளிர் கூட்டமைப்பு தலைவி சரசு மற்றும் கிராம மக்களும் வரவேற்று சிறப்பித்தனர். தொடர்ந்து இக்குழுவினர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முலம் நடைபெறும் சோப்பு, சலவை பவுடர், பாத்திரம் கழுவும் பவுடர், ஊது வத்தி, பிளாஸ்டிக் மறு சுழற்சி, மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்டவைகளை நேரில் பார்த்து விசாரித்து தெரிந்துகொண்ட அவர்கள், கிராம மக்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

Read more »

மிக விரைவில் மின் தேவை பூர்த்தி

நெய்வேலி : 

                     'தமிழகத்தின் மின் தேவை, மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும்' என, என்.எல்.சி., சேர்மன் அன்சாரி தெரிவித்தார். என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கியவர்களுக்கு, கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. முதன்மை விருந்தினர் என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை வழங்கி பேசியதாவது: இந்தியாவின் எந்த சுரங்க நிறுவனமும் வழங்குவதை விட, என்.எல்.சி., மட்டுமே அதிக இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறது. வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கும் வகையில், இதுவரை மூன்று சென்ட் என்ற அளவில் இருந்த மனைப் பிரிவு, இனி ஐந்து சென்ட் பரப்பளவாக உயர்த்தப்படும். தமிழகத்தின் மின் தேவை மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அன்சாரி பேசினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மரணம் உண்டு...! மயானம் இல்லை...! விளை நிலங்களில் பிணம் புதைக்கும் அவலம்

விருத்தாசலம்:
 
                   கானாதுகண்டான் கிராமத்திற்கு பொது மயானம் இல்லாததால் அக்கிராமத்தில் இறப்பவர்களை அவரவர் விளை நிலங்களிலே புதைத்து வருகின்றனர். நிலம் இல்லாதவர்கள் புறம்போக்கு இடங்களில் புதைக்கின்றனர்.

                    விருத்தாசலத்தில் இருந்து காட்டுக்கூடலூர் செல்லும் சாலையில் ஐந்து கி.மீ., தொலைவில் உள்ளது கானாதுகண்டான் கிராமம்.  கச்சிராயநத்தம் ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 100 குடும்பங்களுக்கும் மேல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமத் திற்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்தும் இறந்தவர்களை புதைப்பதற்கான பொது மயானம் இல்லை. இதனால் இக்கிராமத் தைச் சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களிலே புதைத்தும், எரித்தும் வருகின்றனர். நிலம் இல்லாதவர்கள் ஓடை மற்றும் புறம்போக்கு இடங்களில் புதைக்கின்றனர்.

                    சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஊரின் கிழக்கு பகுதியில் அரை கி.மீ., தொலைவில்  காட்டுப்பகுதியில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த பொது மயானத்தில் பிணங்களை புதைத்தும், எரித்தும் வந்தனர். அவ்வாறு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது மயானம் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பட்டா பெற்று தற் போது விளை நிலமாக உள்ளது. பொது மயானம் இல்லாதது குறித்து கிராம பொதுமக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

இதுகுறித்து கானாதுகண்டான் கிராமத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ராஜபார்வதி கூறுகையில்

                     '40 வருடங்களுக்கு முன் கானாதுகண்டான் கிராமத் தின் கிழக்கு பகுதியில் பொதுமயானம் இருந்தது. தற்போது நிலமாக மாறிவிட்டது. எங்கள் ஊரில் உள்ள அனைவரது நிலத்திலும் இறந்தவர்களை புதைப் பதற்கு என குறிப்பிட்ட பகுதியை ஒதுக்கி வைத்து விடுவோம். அங்கு எந்த பயிர்களையும் பயிரிடமாட்டோம்' என தெரிவித்தார்.

Read more »

20 ஆண்டுகளாக தூர்வாராத பாசன வாய்க்கால்: உவர்ப்பாக மாறும் நீர் கருகும் நெற்பயிர்கள்


சிதம்பரம்:

                         சிதம்பரம் அருகே 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களுக்கு வடிகாலாகவும், 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களுக்கு பாசன வாய்க்காலாகவும் உள்ள பெரிய வாய்க் கால் 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் தூர்ந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி விளை நிலங்கள் உவர்ப்பாக மாறி நெற்பயிர்கள் கருகி வருகிறது.

                     சிதம்பரம் அருகே கிள்ளை, தைக்கால், சிங்காரக்குப்பம், சி.மானம்பாடி, பகுதியில்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கான்சாகிப் வாய்க் கால் மூலம் வரும் காவிரி தண்ணீரைக் கொண்டு அப்பகுதியினர் விவசாயம் செய்து வந்தனர். விவசாயத் திற்கு தண்ணீர் தட் டுப்பாடு ஏற்பட்டதில் இருந்து மூன்று போக விவசாயம் தற்போது இரண்டு போகமாக குறைந்துள்ளது. அத்துடன், வாய்க்கால்கள் தூர் வாராமல் கிடப்பில் போட்டதாலும், மழை காலங் களில் தேங்கிய தண்ணீர் வடியாததாலும் நடவு பயிர்கள் அழுகியது. கடல் நீர், பாசன வாய்க்காலில் கலந்ததால் விவசாய நிலம் உவர்ப்பு தன்மையாக மாறியது. ஆழமாக இருந்த வாய்க்கால்கள் தூர்ந்ததால் விவசாயத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் ஒரே போகமாக சித்திரைப் பட்டத்தை (நவரை சாகுபடியை) நம்பி உள்ளனர்.

                    நஞ்சைமகத்துவாழ்க்கை பகுதியில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வடிகாலாகவும், சி.மானம்பாடி உள் ளிட்ட 2  ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பாசன வாய்க்காலாகவும் உள்ள பெரிய வாய்க் கால் 20 ஆண்டுகளுக்கு மேல் தூர்வாரப்படாமல் தூர்ந்து புதர்மண்டி பாசனத்துக்கு தகுதியற்று, வாய்க்காலும், வரப் பும் சம தளமாக காட்சியளிக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடிய வாய்க்காலில் தைக்காலில் இருந்து மானம் பாடி வரை  கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாராததால் முழுக் குத் துறை தீர்த்தவாரி ஆற்றில் தண்ணீர் ஓதம் ஏற்பட்டு  கட்டக்குச்சி ஆற் றின் வழியாக விவசாய நிலங்களில் உப்புத் தண்ணீர் பாய்ந்து நெற்பயிர்கள் கருகி வருகிறது.

                     பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிள்ளை தைக்காலில் இருந்து சிங்காரக்குப்பம், சி.மானம்பாடி வழியாக பொன்னந் திட்டு வடிகால் வரை உள்ள பெரியவடிகால் வாய்க்காலை தூர்வாரி, ஆழப்படுத்துவதுடன், கிளை வாய்க் கால்களான பனங்காட்டு, பக்கிரி, ராமு, முருகன் கோயில், நெடுஞ்சி, தொட்டி மதகு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களையும் ஆழப்படுத்த வேண்டும். இல்லையெனில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். பக்கிங்காம் கால்வாய் மாஸ்டர் பிளானில் இருப்பதாக காரணம் காட்டி புறக்கணிக்காமல் இப்பகுதியில் தூர்ந்துள்ள வாய்க்கால்களை பார்வையிட தனிக்குழு அமைத்து ஆய்வு செய்து, வாய்க்கால்களை தூர் வாரி, ஆழப்படுத்த வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு: பஸ்கள் ஓடியது


கடலூர்: 

                  விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்கட்சிகள் அறிவித்த 'பந்த்'தையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. அரசு பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

                    தமிழகத்தில் விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூ., கட்சிகள் 'பந்த்' அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நேற்று கடலூர் மாவட்டத்தில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பழக்கடைகள், பஸ்நிலைய கடைகள் திறந்திருந்தன. அரசு அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள்  செயல்பட்டன. அரசு பஸ்கள், ரயில்கள் ஓடின. ஒரு சில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. தொலைதூர பஸ்கள் நீண்ட இடை வெளிக் குப்பிறகு இயக்கப்பட்டன.  எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மறியல்: 

                          கடலூர் மாவட்டத்தில் 12 இடங்களில் மறியலில் ஈடுபட்ட கம்யூ., கட்சியை சேர்ந்த 39 பெண்கள் உட்பட 393 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம்: 

                     திறந்திருந்த கடைகளை அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூ., கட்சியினர் ஊர்வலமாக சென்று மூடும்படி கூறினர். பின்னர் தி.மு.க., வினர் கூட்டமாக சென்று மூடிய கடைகளை திறக்கும்படி கூறினர். இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது. மா.கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர் மூசா தலைமையில் நகர செயலாளர் நடராஜன், மாவட்டக்குழு ராமச்சந்திரன், ம.தி.மு.க., நகர செயலாளர் சீனிவாசன், தமிழ் தேசிய காங், லோகநாதன், லோக்ஜன சக்தி பன்னீர் உள்ளிட்டவர்கள் மேல வீதி கஞ்சித்தொட்டி அருகே மறியலில் ஈடுபட் டனர்.

விருத்தாசலம்: 

                           ஜங்ஷன் ரோடு, கடைவீதி, பாலக் கரை உள்ளிட்ட இடங்கள் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. மதியம் 2 மணிக்கு கம்யூ., கட்சியின் வட்ட செயலாளர்கள் கந்தசாமி, கலியபெருமாள் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

சேத்தியாத்தோப்பு: 

                        பூ கடைகள், சில பழக் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்கள் பயணிகள் கூட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது.

நெல்லிக்குப்பம்:  

                        அ.தி.மு.க., நகர செயலா ளர் சவுந்தர், சேகர், கவுன்சிலர் தனசேகரன், ம.தி. மு.க., நகர செயலாளர் ராமலிங்கம், கஜேந்திரன், மா.கம்யூ., நகர செயலாளர் சுப்ரமணியன், உதயகுமார் தலைமையில் மறியல் செய்தனர். இதனால் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

பண்ருட்டி:  

                        பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. புதுப்பேட் டையில் தனியார் பஸ்சை அ.தி.மு.க., வினர் வழிமறித்ததால்  பரபரப்பு ஏற் பட்டது. இந்திய கம்யூ., மாவட்ட துணை செயலாளர் சேகர், மா.கம்யூ., பேரூர் கழக செயலாளர் ரங்கநாதன், விவசாய சங்க தலைவர் தமிழரசன்  தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி: 

                        பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. மறியலில் ஈடுபட முயன்ற இந்திய கம்யூ., வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

பரங்கிப்பேட்டை: 

                  மருந்துக்கடை, பால் கடை மற்றும் 'டாஸ்மாக்' உள்ளிட்ட கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடியிருந்தன.

ஸ்ரீமுஷ்ணம்: 

               பூவராகசுவாமி கோவில் திருவிழா நடப்பதால் கடைகளை மூடச்சொல்லி யாரும் வற் புறுத்தவில்லை. இதனால் ஸ்ரீமுஷ்ணத்தில் அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன.

Read more »

துணை மின்நிலையம் அமைப்பதில் சிக்கல்: 30 கிராம மக்களின் கனவு நிறைவேறுமா?


பண்ருட்டி: 

                   பண்ருட்டி அடுத்த செம்மேடு ஊராட்சியில்  இடம்  கிடைக்காததால்  துணை மின்நிலையம் அமைக்காமல் கடந்த 4 ஆண்டுகளாக இழுபறி நிலை நீடிக்கிறது.

                  பண்ருட்டி அடுத்த செம்மேடு, தாழம்பட்டு, அங்குசெட்டிப்பாளையம், சிறுவத்தூர், திருவாமூர், குடியிருப்பு, ஆத்திரிக்குப் பம், கருக்கை, ஏரிப்பாளையம், சேமக்கோட்டை, கொளப்பாக்கம், எலந்தம் பட்டு, சிறுவத்தூர், மணப் பாக்கம்   உள்ளிட்ட 30 கிராமங்களுக்கு  பூங்குணம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. பூங்குணம் துணை மின்நிலையத்தில் இருந்து திருவாமூர், காமாட்சிபேட்டை, மேலிருப்பு, விசூர் போன்ற கிராமங்கள் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மின் பாதையில் உள்ள 30 கிராமங்களில் பல பகுதியில் முந்திரி, சவுக்கை உள் ளிட்ட பயிர்கள் தான் பயிரிடப்படுகின்றன. காற்றின் போது சவுக்கை மரங்கள் மின் கம்பிகளில் விழுவதால் 30 கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மரங்களால் ஏற்படும் மின்தடையே சீர் செய்த பிறகே இந்த 30 கிராமங்களில் மின்சாரம் வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக் காமல் அல்லாடும் நிலை ஏற்படுகிறது. மேலும் முந்திரி தொழிற் சாலை உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் சீரான நிலையில்  மின்சாரம் வழங்க முடியாத நிலை உள்ளது.

                        இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் செம்மேடு, கீழக்குப்பம் ஊராட்சியில்  துணை மின்நிலையம் அமைக்க மின்வாரியம் முடிவு செய்தது.  அதன்படி  கீழக்குப்பம் கிராமத்தில் துணை மின்நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.  ஆனால் செம்மேடு ஊராட்சியில் மட்டும் துணை மின்நிலையம்  அமைக்க 2 ஏக்கர் நிலம் கிடைக்காமல் பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. செம்மேடு ஊராட்சியில் கல்லாந்தோப்பு என்கிற பகுதியில் 5 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அந்த இடம் சரியில்லையெனில்  அருகில் உள்ள  மேலிருப்பு, சேமக்கோட்டை, திருவாமூர், சிறுவத்தூர் உள்ளிட்ட கிராமத்தில் உள்ள  இடத்தையாவது  தேர்வு செய்ய வேண்டும். இதற்கு  வருவாய்த் துறை, மின்வாரியம், அப்பகுதி ஊராட்சி தலைவர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

எலக்ட்ரானிக் கருவி மூலம் மின் கட்டணம் கணக்கீடு


பரங்கிப்பேட்டை: 

                     பரங்கிப்பேட்டையில் மின்சார கட்டணங்கள் எலக்ட்ரானிக் கருவி (ஹேண்ட் செட்) மூலம் கணக்கீடு செய்யப்படுகிறது.

                    மின்சாரத் துறை அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டதால் மின்நுகர்வோர்களுக்கு மின் கட்டணங்கள் கம்ப்யூட்டர் பில் மூலம் வழங்கப்படுகிறது. மேலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் எந்த பகுதியில் வேண்டுமானாலும்  மின்கட்டணம் செலுத்தும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்நுகர்வோர் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் மின் நுகர்வோர்களின் மின்சார கட்டணம் குறித்து தனித் தனி  அட்டைகளில் எழுதப்பட்டு வந்த மின் கட்டண விவரங்கள் எலக்ட்ரானிக் கருவியில் (ஹேண்ட் செட்) பதிவு செய்யப்பட்டு ரீடிங் எடுக்கப்படுகிறது. இதனால் ஊழியர்களின் வேலை பளு குறைவதுடன் எளிதில் 'ரீடிங்' எடுக்கப்பட்டுகிறது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

திறக்கப்படாத திருவந்திபுரம் நூலகம்


கடலூர்: 

                   திருவந்திபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. கடலூர் அடுத்த திருவந்திபுரம் ஊராட்சியில் கே.என்.பேட்டை, டி.புதூர், ஓட்டேரி, திருவந்திபுரம் ஆகிய ஊர்களில் 5,000க் கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் 2007-08ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மாவட்ட கலெக்டர் விருப்ப நிதி மூலம் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கிராம நூலக கட்டடம் கட்டப்பட்டது.

                   கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்பாடமால் பூட்டியே கிடக்கிறது. கிராமபுறங்களில் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்காகவும், பொது மக்கள் வசதிக்காகவும் இது போன்ற நூலகங்கள் அரசு நிதி மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. ஆனால் திருவந்திபுரம் நூலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது புரியாத புதிராக உள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

உயிரிகள் காரணிகள் தயாரிப்பு மையம்: வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

 நெல்லிக்குப்பம்: 

                     உயிரிகள் காரணிகள் தயாரிப்பு மையத்தை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அண்ணாகிராமம் வட்டாரம் கீழ் அருங்குணத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உயிரியல் காரணிகள் தயாரிப்பு மையம் செயல்படுகிறது. விவசாய பயிர்களை தாக்கும் பூச்சிகளை இயற்கை பூச்சிகளை கொண்டு விரட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கபடாது. இம் மையத்தை வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் ஆய்வு செய்தார். மையத்துக்கு அரசு மானியமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனையடுத்து சர்க்கரை ஆலை கழிவில் இருந்து உரம் தயாரிப்பதையும் பார்வையிட்டார். உடன் துணை இயக்குனர் பாபு, உதவி இயக்குனர் சம்பத்குமார், அலுவலர் சந்திரராசு ராமதாஸ், தலைவி ஜெயா, பொரு ளாளர் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கலைக்கழக போட்டி: மாணவி முதலிடம்

 சிதம்பரம்: 

                     பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற அண்ணாமலை பல்கலைக் கழக மாணவி தீபாவிற்கு பதிவாளர் ரத்தினசபாபதி பரிசு வழங்கினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த சிறப்பு கலைக் கழக போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர். பிசியோதெரபி மாணவி தீபா கவிதை மற்றும் பேச்சுப் போட்டியில் முதல் இடம் பிடித் தார். மாணவி தீபாவை பாராட்டி பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி பரிசு மற்றும் பாராட்டு சான்று வழங்கினார்.  நிகழ்ச்சியில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் ஜெயராஜ், உடற்கல்வித்துறை புலமுதல்வர் மங்கையற்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

தீவிரவாதிகள் ஒடுக்கப்பட வேண்டும் : எம்.பி., விஸ்வநாதன் பேச்சு


நெல்லிக்குப்பம்: 

                     தீவிரவாதிகளை ஒடுக்க கட்சி பாகுபாயின்றி ஒற் றுமையாக இருக்க வேண்டுமென எம்.பி., விஸ்வநாதன் கூறினார். நெல்லிக்குப்பத்தில் நடந்த மவுரியா இல்ல காதணி விழாவிற்கு வருகை தந்த காஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதனுக்கு, கீழ்பட்டாம்பாக்கத்தில் ம.தி.மு.க., மாவட்ட பொருளாளர் வேலு தலைமையில் பூரணகும்பம் மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

                     விழாவில் ஜோதிராஜ், வீரசேகர், வேலு, ராஜன், சுந்தரமூர்த்தி, காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், சேர்மன் கெய்க் வாட்பாபு, கடலூர் நகரமன்ற துணைத் தலைவர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

விழாவில் எம்.பி., விஸ் வநாதன் பேசுகையில் '

                    இந்தியாவில் தாழ்த்தப் பட்ட மக்கள் தொடர்ந்து போராட்டத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள். குடிசைகள் மட்டுமே அவர்களுக்கு சொந்தமாக உள்ளது. வருங்காலம் இளைஞர்களிடம் உள்ளது. மாவோயிஸ்டுகள் உட்பட பல தீவிரவாத அமைப்புகளால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கட்சி  பாகுபாயின்றி ஒற்றுமையாக நாட்டை காப்பாற்ற பாடுபட வேண்டும்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

 பண்ருட்டி: 

                     பண்ருட்டி சார்பு நீதிமன்ற வக்கீல்கள் சங்க கூட்டம் நடந்தது. மூத்த வக்கீல் சேதுராமன் தலைமை தாங் கினார்.  சங்கத் தலைவர் அசோகன், செயலாளர் காஜா நஜிமுதீன், மூத்த வக்கீல்கள் குணாளன், சீனு ஜெயராமன், புஷ்பலிங்கம் பங்கேற்றனர். கூட்டத்தில்  விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் விரைவு ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி வணிக நகரமாக உள்ள நிலையில் பண்ருட்டியில் அனைத்து ரயில்களும் நிற்க வேண்டும். பொதுமக்களுக்கு எதிரான ரயில்வே நிர்வாகம் கால அட்டவணை தயாரித்ததை கண்டித்து சப் கோர்ட், முன்சீப் கோர்ட் புறக்கணிப்பது என வக்கீல்கள் முடிவு செய்தனர். இதனால் கோர்ட் பணிகள் பாதித்தது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

ஆதிகிராநவ ஸ்ரீசக்கரத்திற்கு மத்திய அரசின் காப்புரிமை

 சிதம்பரம்: 

                     சந்துரு சுவாமிகள் உருவாக்கிய  ஆதிகிராநவ ஸ்ரீசக்கரத்திற்கு மத்திய அரசின் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. ஓம் சுபாஷினி ஆன்மீக அன்னதான அறக்கட்டளை நிறுவனர் சந்துரு சுவாமிகள் நடராஜர் கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு முதல் மக்களிடையே மனித நேயம், மக்கள் நலன் வேண்டி உள், வெளி பிரகாரத்திலும், பவுர்ணமி தோறும் நகரின் நான்கு வீதிகளிலும் அங்க பிரதட்சணம் செய்து வருகிறார். அவரால் அஷ்டலட்சுமி மகாயந்திரம் உருவாக்கப்பட்டு 1,008 குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆதிகிராநவ ஸ்ரீசக்கரத்தை அவர் உருவாக்கியுள்ளார். இந்த சக்கரத்திற்கு மத்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூர் மாவட்டத்தில் 'பந்த்' முழு வெற்றி; வணிகர்களுக்கு நன்றி: எம்.சி.சம்பத்


கடலூர்: 

                    கடலூர் மாவட்டத்தில் 'பந்த்' முழு வெற்றியடைந்துள்ளது. வணிகர்கள் தங்கள் உணர்வுகளை பிரதிபலித்துள்ளனர் என எம்.சி.சம்பத் கூறினார்.

இது குறித்து அ.தி. மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத் நேற்று  கூறியதாவது: 

                        அத்தியாவசிய பொருட் களின் விலை உயர்ந்து விட்டன. நடுத்தர, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. 6.5 கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் 4 கோடி மக்கள் குடும்பம் நடத்த அவதிப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல் மின் தடையால் ஏராளமான தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டு வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும் அரசு தொலைநோக்குப் பார்வையோடு ஆட்சி நடத்தவில்லை. விலைவாசி உயர்வு, மின்தடை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க.,  மற்றும் தோழமை கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. கடலூரில் கடைகள் முழு அளவில் அடைக்கப்பட்டிருந்தன. வெள்ளையன் அறிக்கை விட்டிருந்த போதிலும், வர்த்தக சங்கம் முழுமையாக கட்டுப்பட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். வியாபாரிகள் மனதில் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக கடைகளை அடைத்து ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.  அவர்களுக்கு எனது நன்றி. இது அ.தி.மு.க., வுக்கு கிடைத்த வெற்றியாகும்.

                     அமைச்சர் பொன்முடி  கல்லூரியில் வேலை பார்க்கும் போது 450 ரூபாய் சம்பளம் பெற்றதாகவும், ஆனால் தற்போது உதவி பேராசிரியர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது என்றால் அதற்கேற்ற விலைவாசி உயர்வு இருக்குமல்லவா என நியாயப்படுத்தி பேசியுள்ளார். அரசு துறைகளில் அதிகபட்சமாக 20 லட்சம் பேர் பணியாற்றலாம். அவர்களுக்கு மட்டுமா இந்த விலைவாசி உயர்வு. பாதிக்கப்படுவது நடுத்தர, ஏழை வர்க்கத்தைச் சேர்ந்த 4 கோடி மக்கள் அல்லவா? மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எம்.சி. சம்பத் கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கூட்டுக் குடிநீர் வழங்க வேண்டும்: ஊராட்சி கூட்டமைப்பு தீர்மானம்


சிறுபாக்கம்: 

                  மங்களூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் கூட்டு குடிநீரை தினசரி வழங்க தீர்மானிக்கப்பட்டது. மங்களூர் ஒன்றிய ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் ஒன்றிய வளாகத்தில் நடந்தது. தலைவர் திரிசங்கு தலைமை தாங்கினார். செயலாளர் வரதராஜன், ஆதிதிராவிட நல கூட்டமைப்பு தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் கோபால் வரவேற்றார். கூட்டத்தில் மங்களூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு தொழுதூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

                   தற்போது கோடை காலம் நிலவுவதால் ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தினசரி கூட்டுக் குடிநீர் வழங்க வேண்டும். ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து கூடுதல் கைப்பம்புகள் அமைக்க வேண்டும். கிராமப்புறங்களில் பஸ் வசதி இல்லாத பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் வளர்மதி, கண்ணகி, மாரியம்மாள், மாரிமுத்து, செந்தாமரைகண்ணன், கந்தசாமி, முத் துசாமி, கொளஞ்சி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more »

தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு அ.தி.மு.க., நிவாரணம்


திட்டக்குடி: 

                    திட்டக்குடி அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் நிவாரணம் வழங்கினார். திட்டக்குடி அடுத்த சாத்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார், நீலாவதி, வேலு உட்பட ஐந்து பேரின் கூரை வீடுகள் கடந்த 10ம் தேதி மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. இதில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கும் நல் லூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

                   இதில் அரிசி, சமையல் பாத்திரங்கள், காய்கறிகள், துணிகள், தலா 500 பணம் ஆகியன வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் மதியழகன், முருகேசன், நல்லூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் சரவணன், திட்டக்குடி முருகன், ஊராட்சி தலைவர் குணசேகரன், பாசறை செயலாளர் இளையராஜா, பாஸ்கர், வரதன் உட்பட பலர் உடனிருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டியில் புத்தக கண்காட்சி

 பண்ருட்டி: 

                  பண்ருட்டியில் புத்தக கண்காட்சி தேவநாதன் தெருவில் உள்ள நூலகத்தில்  நடந்தது. நகராட்சி சேர்மன் பச்சையப்பன் துவக்கி வைத் தார்.  கமிஷனர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். தினம் ஒரு திருக்குறள் பலகையை பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் திறந்து வைத்தார். வாசகர் வட்டத் தலைவர் எழுமலை வரவேற்றார்.  நூலகர் செல்வராஜ், வாசகர் வட்ட உறுப்பினர்கள் சுப்ரமணியன், மோகன்குமார், சுகுமார், ஆறுமுகம், கருணாகரன், சவுந்தர், பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூலகர் செல்வம் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய குற்றங்கள் குறைந்துள்ளன: கலெக்டர்


கடலூர்: 

                            கடலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவினரால் கடந்த ஒரு ஆண்டில் 2,656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவது போதுமானதாக இல்லை. இவர்களை வெளியில் உலவ அனுமதிப்பது சமூகத்திற்கு தீங்கு என்பதால் இம்மாதிரியானவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடந்த ஆண்டில் மட்டும் 20 பேரை குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழும், 27 பேர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

                    இம்மாதிரி தண்டனை வழங்குவது மட்டும் அரசின் நோக்கமல்ல. இவர்களில் மனம் திருந்தியோர் வாழ உடனடியாக அவர்களுக்காக நிதி ஆதாரம் தேடுவது கடினம். அதற் காக மனம் திருந்திய 55 குற்றவாளிகளுக்கு கறவைமாடு, மளிகைக் கடை, வண்டிமாடு, பெட் டிக்கடை உள்ளிட்ட சிறு வணிகங்களுக்காக 8.24 லட்சம் ரூபாய் அரசு கடன் வழங்கியுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய குற்றங்கள் குறைந்துள்ளன என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நிர்மல் புரஷ்கர் விருது பெற்ற ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டு


சிறுபாக்கம்: 

                      மங்களூர் ஒன்றியத்தில் நிர்மல் புரஷ்கர் விருது பெற்ற ஆறு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பாராட்டு விழா, ஒன்றிய வளாகத்தில் நடந்தது. துணை சேர்மன் சின்னசாமி, ஆணையர்கள் ஜெகநாதன், ராஜாராம் முன்னிலை வகித்தனர். ஒன் றிய சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் வரவேற்றார். சேர்மன் ரவிச்சந்திரன், விருது பெற்ற ஊராட்சி தலைவர்களை கவுரவித்தார்.

                     இதில் ஆவட்டி ஊராட்சி தலைவர் மாரிமுத்து, பாசார் வரதராஜன், கழுதூர் மாரியம்மாள், விநாயகநந்தல் கண்ணகி, மேலகல்பூண்டி பாவாடை, வையங்குடி அருள்மணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். முழு ஊரக சுகாதாரத்திற்கு தேர்வு செய்யப்பட் டுள்ள ஆறு ஊராட்சிகளுக்கும் குடிநீர் தட்டுப் பாட்டை போக்க  தலா ஒரு லட்சம் ரூபாய் சிறப்பு நிதி ஒதுக் கப்படும் என சேர்மன் தெரிவித்தார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வு


சிறுபாக்கம்: 

                   மங்களூர் ஒன்றிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள், ஊராட்சி எழுத்தர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஆணையர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். திட்ட ஆணையர் ராஜாராம் முன்னிலை வகித்தார். மேலாளர் கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நடைபெறும் புதிய குளம் வெட்டுதல், சாலை அமைத்தல், நீர்வரத்து வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைந்து முடிக்கவும்.

                           பணிகள் நடைபெறாத ஊராட்சிகளில் பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கவும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் பணிகளை தேர்வு செய்வது உள்ளிட்டவைகள் குறித்து கலந் தாய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் பொறியாளர் மணிவேல், துணை ஆணையர்கள் சுந்தரம், காமராஜ், கிருஷ்ணமூர்த்தி உட்பட ஊராட்சி உதவியாளர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

 பண்ருட்டி: 

                      பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கை குறித்த  விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் ஆர்.சி. நடுநிலைப் பள்ளி சார்பில் 2010-11ம் ஆண்டு புதிய மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்  நடந்தது. ஊர்வலத்தை பனிக்கன்குப்பம் கிறிஸ்தவ ஆலய பங்கு தந்தை அகஸ்டின் துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் ஆரோக்கியதாஸ் முன் னிலை வகித்தார். மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் பள்ளியில் இருந்து துவங்கி மாளிகம்பட்டு, பிள்ளையார்குப்பம் வரை சென்றது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் அருள் நாதன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நல்லூர் ஒன்றியத்தில் விவசாயிகள் சுற்றுலா


சிறுபாக்கம்: 

                     நல்லூர் ஒன்றிய தோட்டக்கலை மற் றும் வேளாண்மை வளர்ச்சித்துறை சார் பில் விவசாயிகள் சுற்றுலா சென்றனர்.

                   இதில் தோட்டக்கலை சார்பில் மரவள்ளி சாகுபடி செய்யும் 40 விவசாயிகள் தொழில் நுட்ப பயிற்சி பெற நாமக்கல், கோயம்புத்தூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும், மற்றொரு குழு வேளாண்மை வளர்ச்சி குறித்து தொழில் நுட்ப பயிற்சி பெற நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இரு வாகனங்களில் சென்றனர். இவர்களை வேளாண்மைக்குழு தலைவர் பாவாடைகோவிந்தசாமி வழியனுப்பி வைத்தார். உடன் சேர்மன் ஜெயசித்ரா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ரமணன், உதவி வேளாண் அலுவலர்கள் கங்கைமணி, முத்துராமன், பெரியசாமி, கவுன்சிலர்கள் சக்தி விநாயகம், வெங்கடாசலம், மோகன் ராஜ் உட்பட பலர் இருந்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

கள்ளநோட்டு கண்டுபிடிப்பு விழிப்புணர்வு


சிதம்பரம்: 

                   சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் கள்ள நோட்டுகளை கண்டு பிடிக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப் பட்டது. சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், செந்தில் ஞானவேல் சிட் பண்ட்ஸ் இணைந்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட கள்ள நோட்டுகளை கண்டு பிடிக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் கோவிந் தராஜன், சிட்பண்ட்ஸ் நிர்வாகி சீனிவாசன், சங்க செயலாளர் மாதவன் பங்கேற்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

எல்.ஐ.சி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 கடலூர்: 

                        எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அத்தியாவசிய பொருட் கள் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு,  பொது வினியோகத் திட்டத்தை பலப்படுத்த கோரியும் எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய 'பந்த்' நடந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து வேலூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் நேற்று கடலூர் எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர் சுகுமாறன் தலைமை தாங்கினார். செயலாளர் சுகுமாறன் கோரிக்கை களை விளக்கி பேசினார். வேலூர் கோட்ட இணைச் செயலாளர் மணவாளன் மத்திய அரசின் தவறான கொள்கைகளை கண்டித்து பேசினார். மனோகரன் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பாலம் கட்ட தோண்டப்பட்ட மண்ணை மழைநீர் ஓடையில் கொட்டிய அவலம்


நடுவீரப்பட்டு: 

                  நடுவீரப்பட்டு - சி.என்.,பாளையம் இடையே பாலம் கட்ட தோண்டப்பட்ட  மண்ணை ஓடையின் நடுவே கொட்டியதால் தண்ணீர் ஓட வழியின்றி உள்ளது.

                    பண்ருட்டி அடுத்த  நடுவீரப்பட்டு - சி.என்.,பாளையம் இடையே நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக தோண்டப்பட்ட மண் முழுவதையும் பணியின் போது ஓடையில் மழை நீர் வந்து வேலை செய்ய இடையூறு ஏற்படுத்தாதவாறு அப்பகுதியில் உள்ள தெற்கு தெருவிற்கு செல் லும் வழியில் உள்ள சிறிய உயர் மட்ட பாலத்தின் அருகில் கொட்டினர். தற்போது பணி முடிவடைந்து பாலம் திறப்பு விழா நடத்துவதற்கு தயாராக உள்ளது. ஆனால் ஓடையில் கொட்டப்பட்ட மண் முழுவதும் அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர்.

                    இதனால் மழைக் காலங்களில் ஓடையில் ஓடும் தண்ணீர் வழியின்றி தேங்கும் நிலையும், தண்ணீர் அதிகரிக்கும் நிலையில் கரையையொட்டியுள்ள பகுதிகளிலும் தண்ணீர் உட்புகும். அதுமட்டுமின்றி புதிய உயர்மட்ட பாலத்தின் ஏழு கால்வாய்களில் ஐந்து கால்வாய்கள் மூடியுள்ளதால் இரண்டு கால்வாய் வழியாகத்தான் நீர் ஓடக் கூடிய நிலை உள்ளது. இதனால் பாலம் குறுகிய  காலத்தில் பாழடையும் நிலை உள்ளது. சி.என்.பாளையம் தெற்கு பகுதியில் தடுப்பு சுவர் கட்டாமல் அப்படியே விட்டு விட்டனர். நடுவீரப்பட்டு பகுதியில் தடுப்பு சுவர் சிறிய அளவிற்கு மட்டுமே கட்டியுள்ளனர். இதனால் மழை காலத்தில் மண் அரிப்பு ஏற்படும். எனவே, கிராம சாலைகள் மற்றும் நபார்டு அதிகாரிகள் பாலத்தை பார்வையிட்டு ஓடையில் உள்ள மண் முழுவதையும் அகற்றவும், தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

பண்ருட்டி அருகே 68 சவரன் நகை திருட்டு: ஆசாமிகளுக்கு வலை


பண்ருட்டி: 

                         பண்ருட்டி அருகே 68 சவரன் தங்க நகை திருடு போனது குறித்து எஸ்.பி. அஸ்வின்கோட்னீஸ் விசாரணை நடத்தினார். பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் கணபதி (49). கடந்த 25ம் தேதி இவரது  வீட்டில் பீரோவில் இருந்த 68 சவரன் தங்க நகை , ஒன் னரை லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது. இதுகுறித்து கணபதி கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், டி.எஸ்.பி., பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் மணவாளன், சப் இன்ஸ் பெக்டர் சுப்பையா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

சேத்தியாத்தோப்பில் தீ விபத்து: ரூ.2 லட்சம் சேதம்


சேத்தியாத்தோப்பு: 

                   சேத்தியாத்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது. சேத்தியாத்தோப்பு மேட்டுத் தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சக்தி செங்குட்டுவன். இவருக்கு சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோட்டில் சொந்தமான வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு சொந்த வேலை காரணமாக செங்குட்டுவன் சிதம்பரத்திற்கும் இவரது மனைவியும் வடலூர் சென்றிருந்தனர். செங்குட்டுவன் தாய் மட்டும் வீட்டில் இருந்தார்.

                     இரவு 8 மணிக்கு திடீரென வீடு தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக  வீசியதால் அருகில் இருந்த வேப்பமரம், தென்னை மரத்திலும் தீ பிடித்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 பீரோக்கள், கட்டில், மெத்தை, தானியங்கள், 'டிவி' உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய்  மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior