கடலூர் சட்டசபை தொகுதி கிழக்கே வங்காள விரிகுடாவையும், மேற்கில் பண்ருட்டி, தெற்கில் குறிஞ்சிப்பாடி தொகுதிகளையும், வடக்கில் புதுச்சேரி மாநிலத்தை எல்லையாகக் கொண்டுள்ளது .
மாவட்டத்தின் தலைநகரம் என்ற பெருமையை கொண்ட இத்தொகுதியில் விவசாயம், நெசவு, கட்டுமான தொழில் மற்றும் மீனவர்கள் நிறைந்துள்ளனர். கடந்த 2006 தேர்தலில் கடலூர் நகராட்சி மற்றும் கடலூர் ஒன்றிய பகுதிகள் முழுமையாக இருந்தன. தொகுதியில் மொத்தம் 1,96,095 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். தேர்தலில் பதிவான 1,40,286 ஓட்டுகளில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அய்யப்பன் 67,003 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்ததாக அ.தி.மு.க., குமார் 60,737 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். வித்தியாசம் 6,266 ஆகும். தே.மு.தி.க., ஜெயக்குமார் 7,866 ஓட்டுகள் பெற்று மூன்றாமிடத்தை பிடித்தார்.
தொகுதி மறு சீரமைப்பில் நகராட்சி பகுதி முழுவதும், ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் 31 ஊராட்சிகள் மட்டுமே தற்போது இடம் பெற்றுள்ளன. எஞ்சிய 20 ஊராட்சிகள் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன. தற்போது தொகுதியில் 88,650 ஆண்கள், 88,716 பெண்கள் என மொத்தம் 1,77,360 வாக்காளர்கள் உள்ளனர். மறுசீரமைப்பில் கடந்த தேர்தலை விட 43 ஆயிரத்து 547 வாக்காளர்கள் குறைந்துள்ளனர்.
கடலூர் எம்.எல்.ஏ., அய்யப்பன் பேட்டி:
கடலூர் துறைமுகத்தை ஆழப்படுத்தியதன் மூலம் 13 ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கியுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகம், தூக்கணாம்பாக்கம், ரெட்டிச்சாவடி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு புதிய கட்டடம், போலீஸ் குடியிருப்பு, மகளிர் ஐ.டி.ஐ., கட்டடம், புதிய வகுப்பறைகள், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், பத்திரப் பதிவு அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. குண்டு உப்பலவாடி - தாழங்குடா உப்பனாற்றில் 5 கோடியிலும், நாணமேடு - சுபாஉப்பலவாடியில் 3 கோடி ரூபாய் செலவிலும், ராசாப்பாளையம் - நல்லாத்தூர் மலட்டாற்றில் ஒரு கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டியுள்ளேன்.
கடலூர் நகரில் பீச் ரோடு, ஜவான்ஸ் பவன் ரோடு, குண்டுசாலை ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் 17 கோடி ரூபாய் செலவில் வடிகால் வாய்க்கால்கள் வசதியுடன் சாலை அமைத்துள்ளேன். பல ஆண்டுகளாக ஒற்றையடிப் பாதையாக இருந்த பள்ளிநேலியனூர், சேலியமேடு - குமாரமங்களம், ரெட்டிச்சாவடி - குமாரமங்களம் கிராம சாலைகளை விரிவுப்படுத்தி தரமான சாலை அமைத்துக் கொடுத்துள்ளேன்.
கடற்கரையில் 3 கோடி செலவில் கருங்கல் கொட்டி கடலரிப்பை தடுத்துள்ளேன். கடலூர் நகர மக்களின் நீண்ட கால கோரிக்கையான பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி என கடந்த தேர்தல் நேரத்தில் மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன் இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் கூறினார்.
இவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த அ.தி.மு.க., குமார் கூறியது:
மாவட்ட தலைநகரமான கடலூர் சட்டசபை தொகுதி, இந்த ஆட்சியில் மிகவும் பின் தங்கிவிட்டது. தேர்தலில் வாக்குறுதிகளை வாரி இறைத்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,வான அய்யப்பன் சொன்னபடி எதையும் செய்யவில்லை. பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வந்து நான்கு ஆண்டாகியும் இதுவரை முடிந்தபாடில்லை. சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமானதோடு புழுதிப் புயலால் மக்கள் அவதிப்பட்டுவதுடன் மின் வெட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து ஆண்டில் கடலூர் தொகுதிக்கென சொல்லிக் கொள்ளும் அளவிற்கு திட்டத்தை கொண்டு வரவில்லை. ஆட்சி முடியும் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக மருத்துவக் கல்லூரி கட்டப்படும் என கவர்னர் உரையில் அறிவித்துள்ளனர். இதனை நம்பி மீண்டும் ஏமாற மக்கள் தயாரில்லை. இவ்வாறு குமார் கூறினார்.
மறுசீரமைப்பில் உருவான கடலூர் சட்டசபை தொகுதி
கடலூர் நகராட்சி - 45 வார்டுகள், கடலூர் ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சிகளில் 31 ஊராட்சிகள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
1. அழகிய நத்தம்
2. செல்லஞ்சேரி
3. நல்லாத்தூர்
4. கீழ்அழிஞ்சிப்பட்டு
5. மேல் அழிஞ்சிப்பட்டு
6. கிளிஞ்சிக்குப்பம்
7.கீழ் குமாரமங்கலம்
8. மதலப்பட்டு
9. எம்.பி., அகரம்
10. கரைமேடு
11. காரணப்பட்டு
12. பள்ளிப்பட்டு
13. புதுக்கடை
14. சிங்கிரிகுடி
15. தென்னம்பாக்கம்
16. தூக்கணாம்பாக்கம்
17. திருப்பணாம்பாக்கம்
18. உள்ளேரிப்பட்டு
19. பெரியகங்கணாங்குப்பம்
20. நாணமேடு
21. உச்சிமேடு
22. குண்டு உப்பலவாடி
23. கோண்டூர்
24. நத்தப்பட்டு
25. தோட்டப்பட்டு
26. மருதாடு
27. வரக்கால்பட்டு
28. வெள்ளப்பாக்கம்
29. காராமணிக்குப்பம்
30. பாதிரிக்குப்பம்
31. கடலூர் நான் முனிசிபல்
2. செல்லஞ்சேரி
3. நல்லாத்தூர்
4. கீழ்அழிஞ்சிப்பட்டு
5. மேல் அழிஞ்சிப்பட்டு
6. கிளிஞ்சிக்குப்பம்
7.கீழ் குமாரமங்கலம்
8. மதலப்பட்டு
9. எம்.பி., அகரம்
10. கரைமேடு
11. காரணப்பட்டு
12. பள்ளிப்பட்டு
13. புதுக்கடை
14. சிங்கிரிகுடி
15. தென்னம்பாக்கம்
16. தூக்கணாம்பாக்கம்
17. திருப்பணாம்பாக்கம்
18. உள்ளேரிப்பட்டு
19. பெரியகங்கணாங்குப்பம்
20. நாணமேடு
21. உச்சிமேடு
22. குண்டு உப்பலவாடி
23. கோண்டூர்
24. நத்தப்பட்டு
25. தோட்டப்பட்டு
26. மருதாடு
27. வரக்கால்பட்டு
28. வெள்ளப்பாக்கம்
29. காராமணிக்குப்பம்
30. பாதிரிக்குப்பம்
31. கடலூர் நான் முனிசிபல்