கடலூர்:
கடலூர் மாவட்ட அரசு நூலகங்களின் வாசகர்கள் எண்ணிக்கையை, 30 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வேண்டுகோள் விடுத்தார். 44-வது தேசிய நூலக வாரவிழா, கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் நூல்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்து ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது:
...