உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 25, 2012

ன்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

நெய்வேலி:

      மும்பையில் நடந்த உலக மனிதவள மேம்பாட்டு அமைப்பின் மாநாட்டில் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அண்மையில் வழங்கப்பட்டது.

இது குறித்து என்.எல்.சி. செய்தித் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

        சர்வதேச அளவில் தலைசிறந்து விளங்கும் மனிதவளத்துறை நிபுணர்களை ஒருங்கிணைத்து பல்வேறு ஆக்கபூர்வ பணிகளை மேற்கொண்டு வரும் அமைப்புதான் உலக மனிதவள மேம்பாட்டு அமைப்பு. இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மனிதவள மேம்பாடு தொடர்பான மாநாட்டை நடத்தி, மனிதவளத்துறையில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்த நிபுணர்களுக்கும், புதிய உத்திகளை அறிமுகப்படுத்தி வெற்றிகண்ட உயர் அதிகாரிகளுக்கும் சிறப்பு விருது வழங்கி கெüரவித்து வருகிறது.

         அந்தவகையில் என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர். அன்சாரி, என்.எல்.சி. நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதுமுதல் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடுக்கிவிட்டு உற்பத்தியை அதிவிரைவாக மேம்படுத்தி, பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 2-வது உயர்ந்தபட்ச தகுதியான நவரத்னா என்ற சிறப்பு நிலையை என்.எல்.சி. நிறுவனம் குறுகிய காலத்தில் பெற காரணமாக இருந்தவர் அன்சாரி.நிறுவனத்தில் ஊழியர்களிடையே நல்ல தொழில் உறவைப் பராமரித்து, சுரங்கங்களில் பழுப்பு நிலக்கரி உற்பத்தியிலும், அனல்மின் நிலையங்களில் மின்சக்தி உற்பத்தியிலும் புதிய சாதனைகளை நிகழ்த்தினார். இதன்மூலம் நிறுவனம் நிகர லாபம் ஈட்டுவதிலும் சாதனைபடைத்தது.

         இந்த சாதனைகளுக்காக உலக மனிதவள மேம்பாட்டு அமைப்பு ஏ.ஆர். அன்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது.இதற்கான விழா பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. இதில் 2012-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை ஏ.ஆர். அன்சாரி பெற்றுக்கொண்டார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Read more »

சிதம்பரம் அரிமா சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி

சிதம்பரம்:

      சிதம்பரம் அரிமா சங்கம் சார்பில் 10 நாட்கள் புத்தக கண்காட்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துவக்கி வைத்தார்.

        இன்ஜினியரிங் கல்லூரி கலையரங்கில் நேற்று துவங்கிய கண்காட்சி மார்ச் 4ம் தேதி வரை நடக்கிறது. பல்கலைகழக துணைவேந்தர் ராமநாதன் திறந்து வைத்தார். அரிமா மாவட்ட துணை ஆளுனர் சுவேதகுமார், இன்ஜினியரிங் கல்லூரி புல முதல்வர் பழனியப்பன், பி.ஆர்.ஓ., செல்வம், அரிமா சங்கத் தலைவர் ரமேஷ் சந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

            கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்ற அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்மிகம், அறிவியல், கவிதை, நாவல்கள், குழந்தை நூல்கள், சுய முன்னேற்றம் மற்றும் கல்வி சம்பந்தப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. தினமும் மாலை 3.30 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறும். சனி, ஞாயிறு கிழமைகளில் காலை 11 மணிக்குத் துவங்கும். ஏற்பாடுகளை புத்தக கண்காட்சிக்குழுத் தலைவர் வெங்கடேசன், செயலர் சண்முகசுந்தரம், பொருளாளர் அமிர்தகடேசன் உள்ளிட்ட குழுவினர் செய்துள்ளனர்.















Read more »

தானே புயலின் அறுவடை குறும்படம் வெளியீடு

கடலூர்:

         இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கிய "தானே புயலின் அறுவடை' குறும்படம் கடலூரில் இன்று திரையிடப்படுகிறது.

          "தானே" புயல் பாதிப்புகளையும், அதன் துயரத்தையும் உலகில் உள்ள மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் "தானே புயலின் அறுவடை' என்ற குறும்படத்தை (ஆவணப்படம்) இயக்குனர் தங்கர் பச்சான் தயாரித்து இயக்கியுள்ளார். அதன் வெளியீட்டு விழா கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் இன்று 25ம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. 35 நிமிடம் ஓடும் இந்த குறும்படத்தை "தானே' புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெளியிடுகின்றனர். நிகழ்ச்சியில் இயக்குனர் தங்கர் பச்சான் பங்கேற்கின்றனர்.












Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior