உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள்

1. Annamalai University
 
Address
 
 Annamalai Nagar
Chidambaram - 608 002
Phone - 04144 - 238 248, 238 263, 238 796
Fax - 04144 - 238 080
Email info@annamalaiuniversity.ac.in

 Course offered
  • B.E. Civil Engineering
  • B.E. Computer Science and Engineering
  • B.E. Electrical and Electronics Engineering
  • B.E. Electronics and Communication Engineering
  • B.E. Electronics And Instrumentation Engineering
  • B.E. Manufacturing Engineering
  • B.E. Mechanical Engineering
  • B.Tech. Chemical Engineering
  • B.Tech. Information Technology
2. Dr. Navalar Nedunchezhiyan College of Engineering
   
Address

Raja Nagar,
Vithiyanathapuram,
Tholudur,
Cuddalore - 606 303

Course offered

  • B.E. Computer Science and Engineering

  • B.E. Electrical and Electronics Engineering

  • B.E. Electronics and Communication Engineering

  • B.E. Mechanical Engineering

  • B.Tech. Chemical Engineering

  • B.Tech. Information Technology

3. Krishnasamy College of Engineering and Technology

Address

Nellikuppam High Road,
S.Kumarapuram Village,
Marudhadu Post,
Cuddalore - 607109
Course offered

  • B.E. Computer Science and Engineering

  • B.E. Electrical and Electronics Engineering

  • B.E. Electronics and Communication Engineering

  • B.E. Mechanical Engineering

  • B.Tech. Information Technology

4. Sri Jayaram Engineering College
   
Address
   
Jayaram Nagar,
Chellangkuppam,
Cuddalore - 607003.

 Course offered

  • B.E. Computer Science and Engineering

  • B.E. Electrical and Electronics Engineering
  • B.E. Electronics and Communication Engineering

5. St. Anne's College of Engineering and Technology 

Address
  
Anguchettypalayam,
Siruvathur Post,
Panruti - 607110.
 Course offered

  • B.E. Computer Science and Engineering

  • B.E. Electrical and Electronics Engineering

  • B.E. Electronics and Communication Engineering
  • B.E. Mechanical Engineering 

     
6. Anna University Tiruchirappali, Panruti Campus 

Address
 
Thillai Nagar, Vadakuthu Village,
Panruti - Vadalur Road,
Panruti - 607308.
Email: autpc@tau.edu.in
  
Course offered
  • B.E. Civil Engineering
  • B.E. Computer Science and Engineering
  • B.E. Electronics and Communication Engineering
  • B.E. Mechanical Engineering
 
7. M.R.K. Institute of Technology 
  
Address

Nattarmangalam Post,
Kattumannarkoil Taluk,
Cuddalore - 608301.
 Course offered

  • B.E. Civil Engineering

  • B.E. Computer Science and Engineering

  • B.E. Electronics and Communication Engineering

  • B.E. Mechanical Engineering 







Read more »

ரூ.20 கோடி உளுந்து சாகுபடிக்கு தண்ணீர் தேவை


நீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரி.
 
கடலூர்:
 
                 கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து 2 அடி தண்ணீர் திறந்துவிட்டால் ரூ.20 கோடி உளுந்து உற்பத்தி கிடைக்கும்.கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள், காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் ஆகும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை குறுவை நெல் சாகுபடியும், அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை சம்பா நெல் சாகுபடியும் நடைபெற்று வந்தது. ஆழ்குழாய் கிணற்றுப்பாசனம் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காவிரி டெல்டா பகுதிகளில் நவரைப்பட்ட சாகுபடி நடக்கிறது. 2002-க்கு முன்பு வரை கோடைக் காலத்தில் வீராணம் ஏரி வறண்டு கிடப்பதுதான் வாடிக்கை. சென்னைக்குக் குடிநீர் கொண்டு போவதற்காக வீராணம் ஏரியின் கொள்ளளவு உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஒருமுறை நிரப்பினால் சென்னைக்கு ஒரு மாதம் தண்ணீர் அனுப்ப முடியும்.வீராணம் ஏரியின் நீர் மட்டம் வியாழக்கிழமை வரை 42 அடியாக இருந்தது (மொத்த உயரம் 47.5 அடி). மழை காரணமாக மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, சனிக்கிழமை ஏரியின் நீர்மட்டம் 42.8 அடியாக உயர்ந்து உள்ளது. ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.கோடைக் காலத்தில் வீராணம் ஏரியில் இருந்து 2 அடி நீர் மட்டும் (சுமார் 0.25 டி.எம்.சி.) கொடுத்தால் போதும், குறைந்தது 1 லட்சம் ஏக்கரில் நேரடி உளுந்து சாகுபடி செய்ய முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.குறுவை சாகுபடி இல்லை என்ற நிலை ஏற்பட்டபின், ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வருவாய் கிடைக்கும் நேரடி உளுந்து விதைப்பு விவசாயத்தை, வேளாண் துறை அறிமுகப்படுத்தி இருந்தால், வீராணத்தில் தண்ணீர் இருந்தும் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் இப்படி தரிசாகக் கிடக்கத் தேவையில்லை என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.இது குறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், கோடைக் காலத்தில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், மார்ச் முதல் மே மாதம் வரை நேரடி உளுந்து விதைப்பு செய்தால், மிகக் குறைந்த செலவில் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். 1  லட்சம் ஏக்கருக்குக் கணக்கிட்டால் ரூ.20 கோடி மதிப்பிலான உளுந்து கிடைக்கும். இதற்கு வீராணம் ஏரியில் இருந்து 2 அடி தண்ணீர் திறந்தால் போதும்.   மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 73.23 அடியாக உள்ளது. இதில் இருந்து 2 அடி தண்ணீர் ஆண்டுதோறும் திறந்துவிட்டால் போதும். டெல்டா பகுதிகளில் உளுந்து, பயறு வகைகள் உற்பத்தி மூலம் தமிழகத்தின் விவசாயத்தை தலைநிமிரச் செய்யமுடியும் என்றார் ரவீந்திரன்.

Read more »

பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

             பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் தினமணி இணையதளத்திலும் www.din​am​ani.com வெளியிடப்படும். தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை சுமார் 7.5 லட்சம் பேர் எழுதினர். அதைத்தொடர்ந்து 44 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. திருத்திய விடைத்தாள்களில் இருந்து பாட வாரியாக மதிப்பெண்கள் போடும் பணி முடிந்துவிட்டது. இப்போது சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன.பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடுவது குறித்து திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more »

Aquarium crying for attention

CUDDALORE: 

                The aquarium at the Subbarayalu Municipal Park here is in need of attention. A year ago, it was a full-fledged aquarium. However, it now has fewer fish species in insufficiently filled tanks.

            The aquarium was earlier maintained by the Cuddalore Municipality with guidance from the Centre for Advanced Study (CAS) in Marine Biology of Annamalai University. In fact, the CAS had deployed two of its faculty members for the upkeep of the fish species. Care was taken to feed the species and maintain the fish tanks in a hygienic condition. Initially, the civic body had not fixed entry fee to the aquarium . However, the gate collection was not up to the expectation. Fishes started to die for want of aeration. Collector P. Seetharaman visited the park recently and suggested measures to the municipality to revive the aquarium. He told The Hindu that a mobile unit pressed into service for creating awareness of zoological species among students would be asked to distribute handbills on the aquarium. Mr. Seetharaman also mooted the idea of setting up an ice-cream parlour in the park and utilising the profit thereof for maintaining the aquarium. The aquarium also could sell ornamental and “vaasthu” fishes, feed and apparatus required to generate more revenue.

            The Collector said that he had directed the civic body to prepare a sketch of a cross-section of the sea, depicting habitats of marine creatures at various depths. It would be recreated on the outer walls of the aquarium to give a preview of marine life to the visitors. K. Srinivasan, a resident of Koothapakkam, who visited the park, said that an entry fee of Rs. 2 was being collected at present. To sustain interest of people, new species should be brought in periodically, he said.

Read more »

வெறிச்சோடிய கடற்கரை

கடலூர்:

            கடலூரில் ஞாயிற்றுக்கிழமை சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதைத் தொடர்ந்து கடற்கரைப் பகுதிகள் வெறிச்சோடின. ஞாயிற்றுக்கிழமை காலை இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே பூமி அதிர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை மாலை சுனாமி பேரலைகள் தாக்கக் கூடும் என்று எச்சரித்தனர். கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள 57 கடலோரக் கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது. தாழ்வான பகுதிகளில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கப்பட்டனர். மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்று இருந்த மீனவர்களும் வேகமாகக் கரை திரும்பினர்.÷மாவட்டக் காவல் கணகாணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தலைமையில் போலீஸôர் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று எச்சரிக்கை விடுத்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். கடலூர் சில்வர் பீச்சுக்குச் செல்வோர் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப் பட்டனர். ஞாயிற்றுக்கிழமைகளில் கடலூர் சில்வர் பீச்சில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சுனாமி எச்சரிக்கை காரணமாக சில்வர் பீச் வெறிச் சோடிக் கிடந்தது. மீனவர் கிராமங்களில் மக்கள் மிகவும் சோகத்துடன் காணப்பட்டனர். எனினும் பிற்பகலில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Read more »

வெளிமாநில வாகனங்கள் மீது வழக்குப் பதிவு

சிதம்பரம்:

                              சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதியில் வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படும் வாகனங்களை போலீஸôர் பிடித்து வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் தமிழக சாலை வரியை செலுத்த நோட்டீஸ் அளித்தும் மற்றும் அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனால் அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் வெளிமாநில மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உத்திரபிரதேசம், ஜார்கண்ட், உத்திராஞ்சல், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது சொந்த ஊரிலிருந்து வாகனங்களை எடுத்து வந்து தங்கி பயின்று வருகின்றனர். இவர்களது வாகனங்களை போலீஸôர் பிடித்து வழக்கு பதிவு செய்வதால் அம்மாணவர்கள் மிகவும் அவதியுற்றுள்ளனர். எனவே அண்ணாமலைப் பல்கலையில் பயிலும் வெளி மாநில மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்டுக்கு பல்கலைக்கழக செனட் உறுப்பினரும், மனிதநேய தொண்டு இயக்கத் தலைவருமான தில்லை.சீனு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more »

சுனாமி எச்சரிக்கை பிச்சாவரத்தில் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

சிதம்பரம்:

                தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை மதியம் சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் கடலோரப் பகுதியான சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கிள்ளை பேரூராட்சித் தலைவர், போலீஸôர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர். பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியில் கடலோரப் பகுதியில் உள்ள உப்பனாற்றில் உள்ள சுரபுண்ணை காடுகளை தினந்தோறும் படகுகள் மூலம் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்த்து வருகின்றனர்.

                      இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தமிழக அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. கிள்ளை பகுதியில் உள்ள கடலோர 7 கிராமங்களில் சுனாமி எச்சரிக்கை அபாயசங்கு 2.43 மணி ஊதப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது. கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் சுற்றுலா அலுவலர் ஹரிஹரன் ஆகியோர் தனி மோட்டார் படகில் சென்று படகில் சுற்றிப் பார்க்க சென்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்களை உடனடியாக கரைக்கு அழைத்து வந்து அப்பகுதியிலிருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து அவசர, அவசரமாக பதற்றத்துடன் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மேலும் படகு சவாரி செய்ய முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு தொகை திருப்பி தரப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் தி.சுப்பிரமணியன் மற்றும் போலீஸôர் அப்பகுதிக்கு சென்று சிறப்பு பேரூந்துகளை வரவழைத்து சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் கிள்ளை, பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை பல்வேறு கடலோரப் பகுதிகளில் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பெரும் பரபரப்பாக இருந்தது. 

                     கரையோரம் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு அப்பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன. மேலும் கிள்ளை பகுதியிலிருந்து கடலுக்குள் 9 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் பத்திரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர் என பேரூராட்சி தலைவர் கிள்ளை எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Read more »

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

கடலூர்:

            மிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் கடலூரில் சனிக்கிழமை மாலை நடந்தது. தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழுவின் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும் என்று கோரியும், அரசியல் சட்டத்துக்கு முரணாக, ஜாதியை மதத்துடன் இணைத்து இருப்பதற்குக் கண்டனம் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பாப்புலியூர் உழவர் சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் கருப்பையன், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் வி.மேரி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் என்.எஸ்.அசோகன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Read more »

சுயநிதிப் பள்ளிகள் கட்டணம் வசூல் நீதிபதி அறிக்கை இன்று வழங்கப்படும்

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட சுயநிதிப் பள்ளிகள், மாணவர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று, நீதிபதி கோவிந்தராஜ் அரசுக்கு அளித்து இருக்கும் அறிக்கை நகல் இன்று (திங்கள்கிழமை) அந்தந்தக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். கட்டணத்தில் ஆட்சேபனைகள் இருந்தால், 15 தினங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.

Read more »

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரம்நடும் தொண்டு நிறுவனம்

கடலூர்:

             கடலூர் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆலமரம் என்ற தொண்டு நிறுவனம் உப்பனாற்றுப் பகுதியில், அவிசீனியா என்ற மாங்ரோவ் காட்டு மரங்களை நட்டு வருகிறது. கடலூர் உப்பனாற்றுக் கரையோரப் பகுதிகளில் பல ரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்து உள்ளன. இவற்றால் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. அவிசீனியா மரங்கள் இந்த நச்சுக் காற்றை உறிஞ்சி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தன்மை அதிகமாகக் கொண்டது. எனவே ஆலமரம் அமைப்பு உப்பனாற்றின் கரையோரப் பகுதிகளில் 10 கி.மீ. தூரத்துக்கு, அவிசீனியா மரக்கன்றுகளை நட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் சுரேந்திரன் தலைமையில் உறுப்பினர்கள் நொச்சிக்காடு பகுதியில் சனிக்கிழமை 1000-க்கும் மேற்பட்ட அவிசீனியா மரக்கன்றுகளை நட்டனர்.

Read more »

வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பருவமழைக்கு முன் முடிவடையும்


கடலூர்:
 
                   ரூ. 20 கோடியில் நடைபெற்று வரும் வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்புப் பணிகள் பருவமழைக்கு முன் முடிவடையும் என்று, பொதுப் பணித்துறை முதன்மைச் செயலர் ராமசுந்தரம் தெரிவித்தார். திட்டக்குடியை அடுத்துள்ள வெலிங்டன் ஏரி 1918-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் 64 கிராமங்களைச் சேர்ந்த 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
 
              ஏரிக்கரையில் போடப்பட்டு இருந்த மண்ணின் தரம் காரணமாக கரை தொடர்ந்து பூமிக்குள் புதைந்து வந்தது. இதனால் ஏரியின் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. 2007-ம் ஆண்டு ஏரிக்கரை பெருமளவுக்குச் சேதம் அடைந்தது. ஏரிக்கரை ரூ. 20 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
 
அங்கு நடைபெற்று வரும் பணிகளை பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் ராமசுந்தரம் சனிக்கிழமை பார்வையிட்டு அவர் கூறியது:
 
              வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பில் முதல்வர் நேரடியாகத் தலையிட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தொழில்நுட்ப நிபுணர் மோகன கிருஷ்ணன் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் தற்போது பணிகள் நடந்து வருகின்றன. கரையில் இருந்த மோசமான மண் 900 மீட்டர் நீளத்துக்கு முழுமையாக அகற்றப்பட்டு புதிய தரமான மண் போடப்பட்டு கரை சீரமைக்கப்பட்டு வருகிறது. கீழ் பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்து அதன்மேல் கரை அமைக்கப்பட்டு வருகிறது.÷80 சதவீதம் பணிகள் முடிவடைந்து விட்டன. பருவமழை தொடங்கும் முன் இந்தப் பணிகளை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தேவைப்படின் கூடுதல் நிதி ஒதுக்கி குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். வெலிங்டன் ஏரியைத் தூர்வாருவது குறித்து பரிசீலித்து வருகிறோம். வெலிங்டன் ஏரியின் துணை ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மராமத்து செய்யப்படும். வெள்ளாற்றில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு ரூ.164 கோடியும், கெடிலம் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்த ரூ. 68 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.÷வெலிங்டன் ஏரி உள்பட பல்வேறு ஏரிகளில் பொழுதுபோக்குக்காக பூங்காக்கள் அமைக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார் ராமசுந்தரம். பொதுப்பணித்துறை முதன்மைப் பொறியாளர் அன்பழகன் உடன் இருந்தார்.

Read more »

சிவில் சர்வீஸ் தேர்வில் பண்ருட்டி இளைஞர் வெற்றி

பண்ருட்டி : 

               பண்ருட்டியைச் சேர்ந்த இளைஞர், சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 130வது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். பண்ருட்டி அருள்ஜோதி நகரைச் சேர்ந்த சக்ரவர்த்தி மகன் ராம்குமார்(25). மகாராஷ்டிராவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து பின், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னையில் உதவி ஆணையராக (கமர்ஷியல்) கடந்த ஆறு மாதங்களாக பணிபுரிகிறார். கடந்த இரண்டு முறை இந்திய அளவிலான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, நேர்முகத் தேர்வில் தோல்வியடைந்தார். 2009ல் நடந்த பொது, மெயின் தேர்வில் தேர்ச்சியடைந்து கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றார். 875 பதவிகளுக்கு நடந்த ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வில் இந்திய அளவில் 130வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது தந்தை சக்ரவர்த்தி, கோலியனூரில் வி.ஏ.ஓ.,வாக பணிபுரிகிறார்.

வெற்றி பெற்ற ராம்குமார் கூறியதாவது: 

                 நான் கடந்த மூன்று ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, கடந்த ஏப்ரலில் நடந்த நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றேன். விருப்ப பாடமாக புவியியல், தமிழ் இலக்கியம் தேர்ந்தெடுத்தேன். சிவில் சர்வீஸ் பணிகளில் ஐ.எப்.எஸ்., பணியை முதல் விருப்பமாகக் கேட்டுள்ளதால் ஐ.எப்.எஸ்., பணி கிடைக்கும். தேர்வில் வெற்றி பெறுவதற்கு பெற்றோர் தான் காரணம். நாட்டு நடப்புகளை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். பொது அறிவு முக்கியம், பொது விஷயத்தை ஆராய்ந்து, விரிவாக படிக்க வேண்டும். வேறு சிந்தனைகளை கைவிட்டு படிப்பில் ஆர்வம் காட்டினால், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம். இவ்வாறு ராம்குமார் கூறினார்.

Read more »

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வன்னியர் சங்கம் வலியுறுத்தல்

சிதம்பரம்: 

               வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் மணிவண்ணன் முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு:

                  தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி 50 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 50 ஆயிரத்திற் கும் மேற்பட்ட இளைஞர் கள் பல்வேறு வழக்குகளில் சிக்கி தனது வாழ்க் கையை இழந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மறு வாழ்வளிக்கும் வகையில் 15 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்வதுடன், மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் மற்றும் அரசு பஸ்சில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.

Read more »

பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் இன்று அரசாணை வழங்கப்படுகிறது

கடலூர்: 

            தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரம் குறித்த ஆணை இன்று மதியம் வழங்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த கட்டண நிர்ணய ஆணையின் நகல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று மதியம் 2 மணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இந்த கட்டண விகிதத்தில் ஆட்சேபனை இருப்பின் 15 தினங்களுக்குள் மனு கொடுக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மரவள்ளி பயிரை தாக்கும் மஞ்சள்காரை நோய்: விவசாயிகள் கவலை

சிறுபாக்கம்: 

                  மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் சிறு, குறு விவசாயிகள் பயிர் செய்த மரவள்ளியில் மஞ்சள் காரை நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

                   மங்களூர், நல்லூர் ஒன்றியங்களைச் சேர்ந்த வேப்பூர், பெரியநெசலூர், சேப்பாக்கம், சிறுபாக்கம், கழுதூர், அரியநாச்சி, காட்டுமைலூர், அடரி, ஒரங்கூர், வள்ளிமதுரம், மங்களூர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள் விளை நிலத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை செய்து வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளாக கரும் புக்கு போதிய விலை கிடைக்கப்பெறாததாலும், வெட்டுக்கூலி உயர்வு மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான விவசாயிகள் தங்களின் விலை நிலங்களில் கரும்பு பயிரை தவிர்த்தனர்.இந்நிலையில் அதிக விலை கிடைக் கும் குங்குமரோஸ், பர்மா, ரோஸ் ரக மரவள்ளி பயிர்களை கடந்த ஜனவரி முதல் பயிர் செய்து களை எடுத்து நீர்பாய்ச்சி வருகின்றனர்.தற்போது மரவள்ளி பயிர்கள் வளர்ந்துள்ள நிலையில் திடீரென மஞ்சள் காரை நோய் தாக்கி வளர்ச்சி பெறாமல் கருகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டு களாக மரவள்ளிக்கு போதிய விலை கிடைத்த ஆர்வத்தில் தங்களது விளை நிலத்தில் மரவள்ளி பயிர்களை செய்த நிலையில் மஞ்சள் காரை நோய் தாக்கு தலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Read more »

வளரிளம் பெண்களுக்கான விழிப்புணர்வுதிறன் வளர்ப்பு பயிற்சி பரிசளிப்பு விழா

கிள்ளை: 

                  சிதம்பரம் அருகே கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் 5 நாட்கள் நடந்த விழிப்புணர்வு முகாமில் பரிசளிப்பு விழா நடந்தது. சிதம்பரம் அடுத்த கிள்ளை ஏக்தா நம்பிக்கை மையத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு விழிப்புணர்வு மற்றும் திறன் வளர்ப்பு குறித்த 5 நாட்கள் இலவச சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. நிறைவு நாளான நேற்று நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மைய ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.  களப்பணியாளர் கவிதா வரவேற்றார். புதுச்சேரி ஆரோவில் சக்தி இல்லம் ஒருங்கிணைப்பாளர் சரஸ் வதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சிவகுமாரவேல் ஆளுமை திறன் குறித்துப் பேசினார்.மதுரை ஏக்தா நிர்வாகி பிம்லா சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல் மூன்று இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற 74 குழந்தைகளுக்கு பங்கேற்றதற்கான பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஏக்தா செஸ்வி மைய பணியாளர்கள் பபிதா, கவுசல்யா, ஜெயக்குமாரி, ரேகா உள் ளிட்ட விழாக் குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் பங்கேற்றனர்.

Read more »

ஆங்கில இலக்கண பயிற்சி வகுப்பு

கிள்ளை: 

           பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு 'முதல் வகுப்பு கல்வி திட்டம்' மூலம் சிறப்பு ஆங்கில இலக்கண பயிற்சி வகுப்பு நடந்தது.
 
                 சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி நடுநிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பை பரங்கிப்பேட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்து சுகுமார் தலைமை தாங்கினார். கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆனந்த வேல் துவக்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியர் கண்ணன் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கண சிறப்பு வகுப்பை நடத்தினார். மாணவர்களுக்கு நோட்டு, பேனா இலவசமாக வழங்கப்பட்டது. வேதரத்தினம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதே போன்று முட்லூர் தொடக்கப் பள்ளியில் நடந்த வகுப்பில் ஆசிரியை காயத்ரி தேவி ஆங்கில இலக்கண வகுப்பை நடத்தினார். இரு மையங்களில் நடந்த சிறப்பு வகுப்பில் பள்ளிக்கு ஒரு மாணவர் வீதம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

Read more »

கம்ப்யூட்டர் மூலம் கரும்பு வெட்டு உத்தரவு

'சேத்தியாத்தோப்பு: 

               எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கம்ப்யூட்டர் மூலம் கரும்பு வெட்டு உத்தரவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆசியா மரியம் தெரிவித்தார். 

இது குறித்து சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் ஆட்சியர் ஆசியாமரியம் கூறுகையில் 

                       'எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அனைத்து கணக்குகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரும்பு பதிவு மற்றும் கரும்பு வெட்டு உத்தரவுகளையும் கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த காலங்களில் இருந்த குறைபாடுகள் களையப்பட்டுள்ளது. 2010-2011ம் ஆண்டு அரவை பருவத்திற்கான வெட்டு உத்தரவுகள் அந்தந்த கரும்பு கோட்ட அலுவலகங்களில் கம்ப்யூட்டர் மூலம் வழங்கப்படும்' என்றார்.

Read more »

குடிசை வீடு கணக்கெடுப்பு மேல் முறையீடு செய்யலாம்

பண்ருட்டி: 

                பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 19 ஆயிரம் வீடுகள் கணக்கெடுப்பு நடந்துள்ளது. விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்ய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் வி.ஏ.ஒ., ஊராட்சி உதவியாளர், மக்கள் நலப்பணியாளர் அடங்கிய குழுவால் கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 42 ஊராட்சிகளில் 19 ஆயிரம் கூரை வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேலாய்வு பணி துவங்கி 18 ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் முடித்துள்ளனர் .இதுகுறித்து பண்ருட்டி ஒன்றியத்தில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பின் போது விடுபட்டவர்கள் அனைவரும் தங்களது மேல்முறையீட்டை பண்ருட்டி பி.டி.ஒ., விற்கு தெரிவிக்கலாம்.

Read more »

மேல்நிலை தொட்டிசீரமைக்க கோரிக்கை

ராமநத்தம்: 

                  ஆலத்தூர் ஊராட்சியில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநத்தம் அடுத்த ஆலத்தூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய 30 ஆயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட மேல் நிலை நீர்த்தேக்கத் தொட் டியிலிருந்து 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

                 கடந்த சில ஆண்டுகளாக தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்தும், உள்புறம் பழுதடைந்தும் இருப்பதால் குடிநீர் கசிகிறது. மேலும், தொட்டியில் இருந்து வீணாகும் குடிநீர் அருகில் உள்ள அங்கன் வாடி, வி.ஏ.ஓ., மற்றும் ஊராட்சி அலுவலக பகுதிகளில் தேங்கி நிற்பதால் நோய் பரப்பும் காரணிகளான கொசு, பன்றிகளின் வசிப்பிடமாக உள் ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.குடிநீருக்காக பயன்படுத்தி வரும் பழுதடைந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

மாவட்டம் முழுவதும் 19ல் ஜமாபந்திடி.ஆர்.ஓ., நடராஜன் தகவல்


திட்டக்குடி:

             கடலூர் மாவட்டம் முழுவதும் வரும் 19ம் தேதி முதல் ஜமாபந்தி துவங்குவதாக டி.ஆர்.ஓ., நடராஜன் தெரிவித்தார். 

இது குறித்து திட்டக்குடியில் டி.ஆர்.ஓ., நடராஜன் கூறுகையில் 

              'தீ விபத்தில் பாதித்து வருவாய்த்துறை மூலம் 2,000 ரூபாய் நிதி பெற்ற கூரை வீடு நபர்களுக்கு ஓலை குடிசை மாற்று 'கான்கிரீட்' வீடு திட்டத்தில் சேர்க்கப்படும். தகுதியான ஏழை நபர்களுக்கும், நத்தம் மற்றும் நீர்நிலை புறம்போக்கில் இல்லாத நபர்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும். 80 சதவீத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலம் நிதியுதவி வழங்க வி.ஏ.ஓ.,க்களை முடுக்கி விட்டுள்ளோம். மாவட்டம் முழுவதும் மே 19ல் ஜமாபந்தி துவங்க உள்ளது. இதனையடுத்து பட்டா மாற்றம், சிட்டா மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட பணிகளை நிலுவையின்றி விரைவாக முடிக்க வருவாய்த்துறை அலுவலர்கள் துரிதமாக செயல்படுகின்றனர். போலி ரேஷன் கார்டுகள் எண்ணிக்கை குறைக்கப்பட் டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூன் 1 முதல் 15ம் தேதி வரை நடக்கிறது' என கூறினார்.

Read more »

வெங்கனூர் ஊராட்சியில்சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா

ராமநத்தம்: 

                ராமநத்தம் அடுத்த வெங்கனூர் ஊராட்சியில் லக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் மினி பல்பொருள் அங்காடி திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் முனியன் தலைமை தாங் கினார். துணைத் தலைவர் ரவிச்சந்திரன், தனி அலுவலர் பத்மநாபன், வங்கி ஆய்வாளர் வைத்யநாதன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மங்களூர் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வி.ஏ.ஓ., மணி, விற்பனையாளர்கள் பழனி, மணிகண்டன், சேகர், வசந்தா, ராணி உட்பட பலர் கலந்து கொண் டனர்.

Read more »

சுற்றுலா பயணிகளை கவரும் நுங்கு சர்பத்

கிள்ளை: 

                 கோடை வெயிலின் தாக்கத்தை தீர்க்கும் வகையில் கிள்ளைப் பகுதியில் வெள்ளரி பிஞ்சுடன் கூடிய நுங்கு சர்பத்திற்கு மவுசு கூடியுள்ளது. சிதம்பரம் அருகே கிள்ளைப் பகுதியில் கோடை வெயிலின் தாக் கத்தை குறைக்கும் வகையில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிள்ளை சுற்றுப் பகுதியில் அதிகளவில் பனை மரங்கள் இருப்பதால் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக வெள்ளரிப்பிஞ்சு, நுங்கில் தயாரிக்கப்பட்ட சர்பத் திற்கு மவுசு கூடியுள்ளது. தற்போது 100 மிலி அள வுள்ள நுங்கு சர்பத் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த சர்பத் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளது.

Read more »

கைவினைப் பொருள் கண்காட்சி

கடலூர்: 

              உத்தரபிரதேச மாநில கைவினைப் பொருள் கண்காட்சி கடலூர் டவுன்ஹாலில் நடக்கிறது. உத்தரபிரதேச மாநில கைவினை மற்றும் சிற்பக் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'கலாஞ்சலி கிராப்ட் பஜார்-2010' கடலூர் டவுன்ஹாலில் கடந்த 6ம் தேதி முதல் நடக்கிறது. கண்காட்சியை கடலூர் சேர்மன் தங்கராசு துவக்கி வைத்தார். கண்காட்சியில் மரம், பித்தளையால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள், கலை நய மிக்க சிற்பங்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறி சேலைகள், சுடிதார், படுக்கை விரிப்புகள், பீங்கான் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் 10 ரூபாய் முதல் 22 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீதமும், கைத்தறி துணிகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சி வரும் 25ம் தேதிவரை காலை 10 முதல் இரவு 9 மணிவரை நடக்கிறது.

Read more »

கடலூர் சில்வர் பீச்சில்மீட்பு பணிக்கு போலீசார் தயார்

கடலூர்: 

           சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து கடலூர் சில்வர் பீச்சில் மீட்பு பணிக்காக போலீசார் தயார் நிலையில் நிறுத்தப் பட்டனர். சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து தமிழகத்தில் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏற்கனவே சுனாமி தாக்கியதில் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கையால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தியது. சில்வர் பீச் சில் கூடியிருந்த மக்கள் அப்புறப்படுத்தப் பட்டனர். சுனாமி தாக்கினால் மீட்பு பணி மேற்கொள்வதற்காக டி.எஸ்.பி., மகேஷ் வரன் தலைமையில் படகு, லைஃப் ஜாக் கட், நீச்சல் தெரிந்த போலீசார் நிறுத் தப்பட்டனர்.

Read more »

கர்ப்பிணி பெண்களுக்கு திருமண உதவித் தொகை

சிறுபாக்கம்: 

                  நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 141 கர்ப்பிணி பெண்களுக்கு 2 கோடியே 82 லட் சம் ரூபாய்க்கான திருமண உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது.

              நல்லூர் ஒன்றியத்தில் மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதி உதவித் தொகை வழங்கும் விழா நடந்தது. ஒன்றிய வேளாண்மை குழு தலைவர் பாவாடை கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் ரவிசங்கர் நாத், சுலோச்சனா முன்னிலை வகித்தனர். சமூக நல அலுவலர் தவமணி வரவேற்றார். 

விழாவில் ஒன்றிய தலைவர் ஜெயசித்ரா 141 பயனாளிகளுக்கு 2 கோடியே 82 லட்சத்திற் கான காசோலையை வழங்கி பேசுகையில் 

               'மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டத்தின் மூலம் முதல்வர் கருணாநிதி உதவித் தொகை வழங்கி ஏழை பெண்களின் வாழ் வில் ஏற்றம் பெற செய்துள்ளார். தி.மு.க., ஆட்சியில் தான் கிராமங்கள் தன்னிறைவு பெற்றுள்ளது. பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் மக்களை தேடி வருகின்றனர்' என பேசினார். இதில் துணை ஆணை யர்கள் தண்டபாணி, வீரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் தங்கதுரை, ஒன் றிய கவுன்சிலர்கள் சக்தி விநாயகம், வெங்கடாசலம், பன்னீர்செல்வம், ஒன் றிய அலுவலர்கள் ரவிச் சந்திரன், சாமிநாதன், பெரியநாயகி, நூர்ஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

அம்மன் படத்திற்கு வர்ணம் தீட்டிவிருத்தாசலத்தில் உலக சாதனை முயற்சி

விருத்தாசலம்: 

                   விருத்தாசலத்தில் சாதனை முயற்சியாக வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் படத்திற்கு வர்ணம் தீட்டும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் திருமலை திருச்சானூர் திருமண மண்டபத்தில் ஆர்ய வைஸ்ய மகா சபா சார்பில் உலக சாதனை முயற்சியாக வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் படத்திற்கு வர்ணம் தீட்டும் நிகழ்ச்சி நடந்தது.

                    சேலஞ்ச்- 2010 என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச் சியில் 2,382 பேர் கலந்து கொண்டு வாட்டர் கலர், ஆயில், அக்ரலிக், மெட்டாலிக், பேப்ரிக் பெயிண்ட்களால் வர்ணம் தீட்டினர்.காலை 9.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரை மூன்று மணி நேரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். வயது வித்தியாசம் பாராமல் குறிப்பிட்ட ஒரு சமுதாய மக்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஒரே கடவுள் படத்திற்கு வண்ணம் தீட்டி உலக சாதனைக்கு முயற்சி செய்துள்ளனர். ஆர்ய வைஸ்ய மகா சபா நிர்வாகிகள் ஷேஷாத்ரி, ரங்கநாதன், சுதர்சனம், சுகந்தி, மோகன், ராமதாஸ், பிகாஷ், மணிகண்டன், பிரதீப்குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Read more »

துணைமின் நிலையம் அமைக்க நிலம்கலெக்டர் சீத்தாராமன் நேரில் ஆய்வு

திட்டக்குட: 

               திட்டக்குடி அருகே இரு இடங்களில் துணைமின் நிலையங்கள் அமைக்கும் நிலத்தை கலெக்டர் சீத்தாராமன் நேரில் ஆய்வு செய்தார். திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி, ஈ.கீரனூர் பகுதிகளில் துணைமின் நிலையம் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் காலை கலெக்டர் சீத்தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன் ஆகியோர் துணைமின் நிலையம் அமைக்கும் நிலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்படி ஆவினங்குடி துணைமின் நிலையத்திற்கு போத்திரமங்கலம் கிராமத்தில் அரசு நிலமும், ஈ.கீரனூரில் தனியார் நிலம் தேர்வு செய்யப்பட்டு விலைக்கு வாங்க தீர்மானிக்கப்பட்டது. கலெக்டர் ஆய்வின் போது ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் கண் ணன், துணை தாசில்தார்கள் மணி, திருநாவுக்கரசு, ராமமூர்த்தி, பாலு உட்பட கிராம மக்கள் பலர் உடனிருந்தனர்.

Read more »

பண்ருட்டி நகராட்சியில் திட்டங்கள் : அரசியல் குறுக்கீட்டால் மக்கள் அவதி

பண்ருட்டி: 

                 தமிழகத்தின் முன் னோடி, ஹைடெக் நகராட்சியாக செயல்பட்ட பண்ருட்டி நகராட்சி தற் போது நிர்வாக சீர்கேட்டால் ஆக்ஸிஜன் ஏற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பண்ருட்டி நகராட்சியில் 33 வார்டுகளில் 20 ஆயிரம் குடும்பங்களில் 55 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பண்ருட்டி நகராட்சி தமிழகத்தில் முன்னோடி நகராட்சியாக பல புதிய திட்டங்கள் செயல்பட்டது.

                     முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு தமிழில் சொத்துவரி, குடிநீர் பில்கள் வழங்கப்பட்டது. நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் கம்ப்யூட்டரில் கைரேகை வைத்து வருகை பதிவது, நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே சீருடை, எஸ்.எம்.எஸ். செய்தால் சொத்துவரி, தொழில்வரி, குடிநீர்பாக்கி குறித்து தகவல் தெரிவிக்கும் சேவையும் வழங்கப்பட்டது. திருவதிகை, நான்கு முனை சந்திப்பு, படைவீட்டம்மன் கோவில் பூங்கா உள்ளிட்ட இடங்களில் வரி மற்றும் பொதுமக்கள் சேவைக்கான கம்ப்யூட்டர் மையம், நகராட் சிக்கு என தனி வெப்சைட் உருவாக்கப்பட்டது. பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்று, சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி, புகார் மனு உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களே தெரிந்து கொள்ளும் வகையில் தொடுதிரை வசதி துவக்கப்பட்டது.தெருவிளக்கு பராமரிப்பு, சுகாதார பணிகளுக்காக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பெறப்பட்டது. இதற்காக வார்டுகள் தோறும் தொண்டு நிறுவனங்கள் மூலம் வீட்டுக்கு வீடு பிளாஸ்டிக் கூடை, சுற்றுச்சுழல் பாதுகாக்க நிழல் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

                    திருவதிகை, படைவீட்டம்மன் கோவில் ஆகிய பகுதியில் திரு வள்ளுவர் படிப்பகம் உருவாக்கப்பட்டு நூல் அறிவு பெற பத்திரிகைகள், வார இதழ்கள் வழங் கப்பட்டது.
வரிவசூல் செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் வார்டுகள் தோறும் அதிகாரிகள், நிர்வாகத்தினர் பங் கேற்ற முகாம்கள், நடமாடும் வாகனம் மூலம் கம்ப் யூட்டரில் வரி செலுத்தும் முறை ஆகியவை செயல்படுத்தப்பட்டது. நகராட்சி அலுவலகம் பின்புறம் மூலிகை தோட்டம் அமைத்து மூலிகை மரங்களின் பயன்பாடு குறித்தும், ராசி, நட்சத்திரங்களுக்குரிய மூலிகைத் தோட்டமும் துவக்கப்பட்டது.நகராட்சியின் பணிகளை மகாராஷ்டிரா மாநில முன்னாள் கவர்னர், தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர், மூத்த ஐ.ஏ. எஸ்.மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் நகராட்சி செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு பாராட்டினர். பண்ருட்டி நகராட்சியின் தமிழ் 'சாப்ட்வேர்' பயன்படுத்தி கொடைக்கானல் உள் ளிட்ட நகராட்சிகள் பின் பற்றியது.ஆனால் தற்போது எல் லாம் தலைகீழாக மாறிய நிலையில் காணப்படுகிறது. குப்பை வண்டிகள் அனைத்தும் வீணாகி, அலுவலர்கள் கம்ப்யூட்டர் வருகை பதிவேடு, பொதுமக்கள் கம்ப்யூட்டர் தொடு திரை அகற்றப்பட்டது. வரிவசூல் வாகனம் பழுதாகி கிடக்கிறது.தெருவிளக்குகளை தனியார் வசம் அளித்தும் முறையாக பராமரிப்பதில்லை. மக்கும் குப்பை, மக்காத குப்பை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மூலிகை தோட்டம் பாழானது. அப்போது குறைந்த எண்ணிக்கையில் பணியா ளர்கள் இருந்தும் சுகாதார பணிகள் சிறப்பாக இருந் தது. ஆனால் தற்போது ஒரு சுகாதார அலுவலர், மூன்று ஆய்வாளர்கள், 105 துப்புரவு பணியாளர்கள் இருக் கும் நிலையில் சுகாதார பணிகள் சுகவீனமானது.சுகாதார அலுவலர், ஆய்வாளர், மேற்பார்வையாளர்களை ஊழியர்களே தாக்குவதால் சுகாதார பணிகளை சுகாதார அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்வதில்லை.

                    நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வருவதில்லை. மேலும் அரசியல் குறுக்கீடு காரணமாகவும் அதிகாரிகளால் முழுமையாக செயல்பட முடியாமல் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதும் இந்த அவலத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.


Read more »

பண்ருட்டி நகராட்சி பகுதியில்பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

பண்ருட்டி: 

               பண்ருட்டி நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்க, பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கமிஷனர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
 
பண்ருட்டி நகராட்சி கமிஷனர் உமா மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

                பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்கள் டிசம்பர் மாத கூட்ட தீர்மானத்தின் படி மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகள், டம்ளர், மேஜை விரிப்பு, உணவு விடுதியில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கைபடி தற் போது உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்கவும், திருப்பி அளிக்கவும் காலஅவகாசம் கோரினர். அதன்படி வரும் ஜூன் 15ம் தேதிக்கு பிறகு 20 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்கவும், பயன்படுத்துவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காகிதம் உள்ளிட்ட மாற்று பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இல்லையெனில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more »

வாகீச நகர் திடலில் கழிவு நீர்தேங்குவதை சரி செய்ய வலியுறுத்தல்

சிதம்பரம்: 

                 சிதம்பரம் வாகீச நகர் விளையாட்டுத் திடலுக் கான இடத்தில் கழிவு நீர் தேங்கி இருப்பதை சரி செய்ய வேண்டும் என நலச்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள் ளனர். 

இது குறித்து வாகீச நகர் நலச் சங்கத்தினர் சிதம்பரம் நகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு:

               சிதம்பரம் வாகீச நகர் துவங்கி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் தற்போது 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப் பகுதி மக்களின் கோரிக் கையை ஏற்று விளையாட்டு திடலுக்கு ஒதுக்கப் பட்ட இடம் கடந்த 20 ஆண்டுகளாக சரி செய்யப் படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் மழை மற்றும் சாக்கடை தேங்கியதில் ஆகாயத் தாமரைகளுடன் முட்புதற்கள் மண்டியுள்ளதால் பன்றிகளின் கூடாரமாக மாறி விட்டது. இதனால் கொசு உற்பத்தியும், விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது குறித்து பல முறை மனு கொடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை. தற்போது கோடை காலம் துவங்கிய நிலையில் பன்றியின் தொல்லை அதிகரித்துள்ளதால் சுகாõதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலை நிலவுகிறது.எனவே அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பாடமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Read more »

நரியன் ஓடை படிக்கட்டுகள் உடைந்து பொதுமக்கள் அவதி

நடுவீரப்பட்டு: 

                 நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையின் படிக்கட்டுகள் மிகவும் மோசமாக உள்ளதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நடுவீரப்பட்டு மருத்துவமனை மற்றும் வெளியூர் செல்ல பஸ் நிறுத்தம் செல்லவும், பள்ளி மாணவ, மாணவிகள் கடலூர் பள்ளிகளுக்கு செல்லவும் கடைவீதி உயர்மட்ட பாலம் வழியாக சென்றால் அதிக தூரம் இருப்பதால் யாதவர் வீதி வழியாக நரியன் ஓடையில் இறங்கி செல்வது வழக்கம்.இந்த வழியில் ஓடைக்கு இறங்க கட்டப்பட்ட படிக்கட்டுகள் மழை நீரால் அரிக்கப்பட்டு, நடக்க முடியாத நிலையில் உள்ளது. மழை நீர் இந்த படிக்கட்டு வழியாக ஓடையில் இறங்காமல் இருக்க தடுப்பு கட்டைகள் கட்ட வேண்டும்.

Read more »

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

விருத்தாசலம்: 

               விருத்தாசலம் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என நுகர்வோர் பேரவை சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் செந்தமிழ்செல்வன் கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்:
 
                   விருத்தாசலம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொது மக்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையம் சுகாதார சீர்கேடு அடைந்து உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பஸ் நிலையத்தில் உள்ள கடைகாரர்கள் வரையறுக்கப்பட்ட இடத்தை விட கூடுதலாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். இதனால் மழை காலங்களில் பொதுமக்கள் நிற்க இடமின்றி மழையில் நனையும் நிலை உள்ளது.இலவச கழிவறை கட்டடம் பராமரிப்பின்றி கிடப்பதால் பொதுமக்கள் அதிக காசு கொடுத்து கட்டண கழிவறைக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே கலெக்டர் விருத்தாசலம் பஸ்நிலையத்தை நேரில் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

Read more »

கோவில் கலசம் திருட்டுநான்கு பேர் கைது

நெல்லிக்குப்பம்: 

                   நெல்லிக்குப்பம் அருகே கோவில் கலசத்தை திருடிய நால்வர் கைது செய்யப்பட்டனர். நெல்லிக்குப்பம் அடுத்த தோட்டப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 7ம் தேதி இரவு கலசத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

                       இந்நிலையில் நெல்லிக்குப்பம் குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், ஏட்டு சந்திரசேகர், சங்கர் ஆகியோர் உண்ணாமலை செட்டி சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சந்தேகப்படும்படியாக வந்த இருவரிடம் விசாரித்தனர். அதில் வன்னியர்பாளையம் சங்கர் (31), கொடுக்கன்பாளையம் பாலமுருகன் (32) எனவும் தோட்டப்பட்டு கோவில் கலசம் திருடியவர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தோட்டப்பட்டு ரமேஷ் (26), பெத்தாங்குப்பம் ஆறுமுகம் (31) ஆகியோரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய மோட்டர் பைக், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Read more »

ரயில் மோதி வாலிபர் பலி

பரங்கிப்பேட்டை:

              பரங்கிப்பேட்டை அருகே ரயில்வே பாதை ஓரம் நடந்து சென்ற வாலிபர் ரயில் மோதி இறந்தார். பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முருகன் (32). நேற்று இரவு பரங்கிப்பேட்டை ரயில்வே பாதையோரம் நடந்து சென்றார். எஸ்.பி.மண்டபம் அருகே செல்லும் போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் சென்ற பயணிகள் ரயில் முருகன் மீது மோதியது. படுகாயமடைந்த முருகன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

சாலை அகலப்படுத்தும்போதுடெலிபோன் கேபிள் துண்டிப்பு

சிதம்பரம்: 

                 சிதம்பரத்தில் சாலை அகலப்படுத்தும்போது தொலைபேசி கேபிள் துண்டிக்கப்பட்டு காணாமல் போனதால் இரு நாட்களாக பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
 
                 சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் சாலை அகலப்படுத்த பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டினர். அப்போது தொலைபேசி கேபிள் துண்டிக்கப் பட்டது. துண்டிக்கப்பட்ட சுமார் 10 அடி நீள கேபிளும் திருட்டு போனது.கேபிள் துண்டிப்பால் வடக்கு மெயின் ரோடு சுற்றுபுற பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நுகர்வோர் பாதிக்கப் பட்டனர். இது குறித்த பல்வேறு புகார்களின் பேரில் நேற்று தொலைபேசித்துறை ஊழியர்கள் வெயிலையும் பொருட்படுத்தாது தொலை பேசி இணைப்பை அதிரடியாக சரி செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior