உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Read more »

Vehicle owners, drivers take out procession in Cuddalore

 

Taking to streets:Autorickshaw drivers taking out a rally in Cuddalore on Monday.

CUDDALORE: 

           The owners and drivers of autorickshaws, taxis and mini-vans took out a procession from the ‘uzhavar sandhai' to the Collectorate here on Monday in support of their demands.

           Staging a demonstration at the Collectorate under the banner of the Joint Action Council of All Motor Vehicle Owners' and Drivers' Associations, they urged the authorities to rescind the rule that provides for immediate cancellation of driving license under the assumption that the drivers are responsible for all road accidents.They called upon the Regional Transport Offices to issue all the forms in Tamil. Among other things they also sought halt to the practice of periodical upward revision of the prices of the petroleum products.

downlaod this page as pdf

Read more »

ce plants likely to be in deep water

 

In for trouble:Ice blocks are crushed to fill the fish boxes at the Cuddalore Port area.

 CUDDALORE: 

             Ice plants in Cuddalore are facing a tough time owing to sporadic power cuts and the impending fishing holiday for 45 days, to be imposed by the Fisheries Department from April 15.

            Of the 20 ice plants in Cuddalore, 50 per cent are being run by the fishing trade and the remaining are stand-alone units. It is the latter who are the hardest hit by the fishing holiday and frequent and unannounced power cuts, according to M.Sankaran, who runs a plant in the Old Town area for the past four years. Mr. Sankaran told The Hindu that on an average, each plant was producing 300 ice blocks of 50 kg each and 90 per cent of the production was meant for the fishing trade and only 10 per cent for the edible ice producers. It usually takes 36 hours for water to solidify into ice blocks in sub-zero temperature in the chambered freezer fixed underground. Any disruption in power supply would drastically affect the cooling temperature and after the supply resumed it might take double the time to attain the same temperature level (the pre-power cut position).

           It meant running the plant for longer hours leading to runaway power bills and delay in the production and delivery of ice blocks, resulting in heavy losses. At the fish landing yards the ice blocks were crushed into finer particles and strewn in the fish boxes before loaded onto to the trucks for transportation to markets such as Chennai, Kerala and Bangalore. Mr, Sankaran said that during the fishing holiday the ice units could not be totally shut down because of the practical difficulties faced in restoring them to full stream at a later stage. Hence, the units would be grossly under utilised for the period, thereby incurring huge losses. He noted that whether the plants were run or partially run or totally shut they would have to pay the full wages to retain the workforce.On an average each unit employs 20 persons and even though most of them would get their regular wages they would have to forego the allowance given at the rate of Re 1 per block as loading charges. Mr Sankaran said that the cooling coils in a freezer needed constant replacement because of their corrosive nature.

downlaod this page as pdf

Read more »

Arrangements inspected for Army recruitment rally


CUDDALORE: 

         District Collector P. Seetharaman and Colonel Tushar Bakay on Monday inspected the arrangements being made for the Army recruitment rally from April 13 to 19 at the Anna Stadium here.

           The Collector told presspersons that it was expected that about 2,000-2,500 candidates would turn up every day for the rally. The recruitment would be made for six categories of posts in the Army for which candidates from Chennai, Vellore, Villupuram, Cuddalore, Tiruvallur, Tiruvannamalai and Puducherry would appear on the specified days.

downlaod this page as pdf

Read more »

கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க கோரிக்கை

 சிதம்பரம்:

              மிகவும் பின் தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சமூகப் பாதுகாப்பு பேரவை முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அப்பேரவை நிறுவனத் தலைவர் ஜி.என்.திருநாவுக்கரசு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

            தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.​ அண்டை மாவட்டமான விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி முயற்சியால் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அது போல அனைத்து வகையிலும் பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் கடலூரிலோ,​​ வடலூரிலோ அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும்.​ கடலூர் மாவட்டத்தில் ஏழை-எளிய மக்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது.​ எனவே விரைவில் கடலூர் மாவடத்தில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஜி.என்.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

downlaod this page as pdf

Read more »

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கிட்டவில்லை

 கடலூர்:

                     பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்னமும் சமூகநீதி கிடைக்கவில்லை என்று,​​ பண்ருட்டி எம்.எல்.ஏ.​ தி.வேல்முருகன் தெரிவித்தார். அஞ்சல்துறை இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.​ 

பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச்சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.​ தி.வேல்முருகன் பேசியது:​ ​  

                 இந்தியாவில் 70 முதல் 80 சதம் வரை இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.​ ஆனால் இவர்களுக்கு அரசு உயர் அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் உரிய வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை.​ உயர் பதவிகளில் எல்லாம் உயர் சாதியினர்தான் உள்ளனர். மண்டல் கமிஷன் பரிந்துரை என்னவாயிற்று இதற்காகத்தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரி வருகிறோம். 

                   இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மருத்துவர் ராமதாஸ் ஈடுபட்டார்.​ ஆனால் முடியவில்லை.​ தேர்தல் வந்ததும் அனைவரும் சிதறி ஓடிவிடுகிறார்கள்.​ அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்.​ தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரச்னை என்றால் 125 எம்.பிக்கள் திரள்கிறார்கள்.​ ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் பேச நாதியில்லை என்றார் வேல்முருகன்.​ ​ கூட்டத்துக்கு அஞ்சல்துறை இதர பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் நலச் சங்க மாநில உதவித் தலைவர் உதசூரியக் கண்ணன் தலைமை தாங்கினார்.​ சங்கத்தின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்து பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி பேசினார். மாவட்டத் தலைவர் ஜோதிகுமரன் மற்றும் நிர்வாகிகள் ஆர்.முனுசாமி,​​ ஹேமந்த் குமார்,​​ புருசோத்தமன்,​​ வழக்கறிஞர் மன்றவாணன் உள்ளிட்ட பலர் பேசினர்.

downlaod this page as pdf

Read more »

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்

 கடலூர்:

                 ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் கடலூரில் இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ தொடங்குகிறது. கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆள்சேர்ப்பு முகாம் இன்று தொடங்கி 19-ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.​ கடலூர்,​​ விழுப்புரம்,​​ வேலூர்,​​ திருவண்ணாமலை,​​ காஞ்சிபுரம்,​​ திருவள்ளூர்,​​ சென்னை,​​ புதுவை மாவட்டங்களைச் தேர்ந்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

                   சிப்பாய் நர்ஸிங் உதவியாளர்,​​ சிப்பாய் டெக்னீஷியன்,​​ சிப்பாய் பொதுப்பணி,​​ சிப்பாய் கிளர்க்,​​ சிப்பாய் வர்த்தகப் பணி,​​ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல்,​​ உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.​ உதவி ரெக்ரூட்டிங் அலுவலர் கெüடாவூர் தலைமையில் ஆள்கள் தேர்வுப் பணி நடக்கிறது. ஆட்சியர் பார்வையிட்டார்: ராணுவத்துக்கு ஆள்கள் சேர்க்கும் முகாம் ஏற்பாடுகளை,​​ மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை மாலை பார்வையிட்டார்.​  அண்ணா விளையாட்டு அரங்கில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் முகாம் நடப்பதால்,​​ 19-ம் தேதி வரை ​ விளையாட்டு அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடப்பட்டு இருக்கும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இந்த முகாமுக்கு தேர்வுக்காக தினமும் 2,500 முதல் 3 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் முதல் கட்டமாக சான்றிதழ்கள் சரிபார்த்தல்,​​ அடுத்து உடல்திறன் தேர்வும்,​​ மருத்துவத் தகுதித் தேர்வும் நடைபெறும். இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு,​​ ஜூலை மாதத்தில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு,​​ தகுதி அடிப்படையில் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

downlaod this page as pdf

Read more »

ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டை ரூ.​ 3 லட்சமாக உயர்த்தக் கோரிக்கை

 கடலூர்:

                           ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.​ 1 லட்சத்தில் இருந்து,​​ ரூ.​ 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று,​​ தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. கடலூரில் திங்கள்கிழமை நடந்த இச் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.​ குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.​ 3500 வழங்க வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை ரூ.​ 100ல இருந்து ரூ.​ 500 ஆக உயர்த்த வேண்டும்.​ ஓய்வூதியர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.​ 1.5 லட்சம் வழங்க வேண்டும்.​  ஒருமாத ஊதியத்தை போனஸôக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, ​​ ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பா.புருசோத்தமன் தலைமை தாங்கினார்.​ மாநிலச் செயலர் என்.வேலு முன்னிலை வகித்தார்.​ மாவட்ட இணைச் செயலாளர் கந்தசாமி வரவேற்றார். மாவட்டச் செயலர் வையாபுரி அறிக்கை சமர்ப்பித்தார்.​ மாவட்டப் பொருளர் ரகுபதி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.

downlaod this page as pdf

Read more »

அரசு முத்திரைச் சின்னத்தை மாற்ற விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை

 கடலூர்:

               தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தை ​(கோபுரச் சின்னம்)​ மாற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.

அக் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் மற்றும் நிர்வாகிகள் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:​ 

                         தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தில் தற்போது திருவில்லிபுத்தூர் கோயில் கோபுர சின்னம் இடம்பெற்று உள்ளது.​ இந்திய அரசியல் அமைப்பின்படி இந்தியா மதச் சார்பற்ற நாடு. இந்நிலையில் தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அடையாளப்படுத்தும் வண்ணம் கோபுர சின்னம் இருந்து வருவது,​​ இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு முரணானது. எனவே தமிழக அரசு முத்திரைச் சின்னத்தில் கோபுர சின்னம் மாற்றப்பட்டு மதச்சார்பின்மையை உறுதிப்படுத்த வேண்டும்.​ அரசு முத்திரைச் சின்னத்தில் உலகப் பொதுமறையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட,​​ திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் உருவப்படத்தை பொறிக்கச் செய்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும். உலத் தமிழ் செம்மொழி மாநாடு முதல் அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள சூழ்நிலையில்,​​ தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தில் திருவள்ளுவர் உருவம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை,​​ தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டுகிறேன் என்றும் மனுவில் திருமாறன் கோரியுள்ளார்.

Read more »

தகுதி பெறாதவர்கள் சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை : பன்னீர்செல்வம்


கடலூர் : 

                     கிராமப் புறங்களில் மருத்துவ தகுதி பெறாதவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். குறிஞ்சிப்பாடி ஒன்றிய கிராமங்களுக்கு கடந்த 10ம் தேதி  அமைச்சர் பன்னீர்செல்வம் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார்.

அப்போது அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில்:

                'தமிழகத்தில் போலி மருந்துகள் தயாரித்தது தொடர்பாக 1991ம் ஆண்டு கண்டறியப்பட்டு வழக்குப் பதிந்து அப் போது இருந்த சட்டத்தின் படி குறைந்த தண்டனையும், அபராதமும் விதிக்கப் பட்டது. அதனால் இது தொடர்பாக எவ்வித கண்காணிப்பும் இல்லாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு போலி மருந்து தயாரிப்பவர்களை கண்டுபிடித்து போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களிடம் ஆய்வு நடத்தி சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் போலி மருந்துகள் குறித்து போலீஸ், மருந்து கட்டுப்பாட்டுத் துறையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதே போல் கிராமப்புறங்களில் மருத்துவ தகுதி பெறாதவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.

downlaod this page as pdf

Read more »

இந்தியாவிற்கே முன்னோடி கருணாநிதி : எம்.எல்.ஏ., அய்யப்பன் புகழாரம்


கடலூர் : 

               கடலூரை பொறுத்த வரை பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். தி.மு.க., சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். பேச்சாளர் ஏகாம்பரம் சிறப்புரையாற்றினார். சேர்மன் தங்கராசு, பொரு ளாளர் தட்சணாமூர்த்தி, இளைஞரணி துணை அமைப்பாளர் சசிக்குமார், கவுன்சிலர்கள் இளங்கோவன், நவநீதம் சாமுவேல், கிளை நிர்வாகிகள் ஆதிபெருமாள், ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் எம்.எல். ஏ., அய்யப்பன் பேசியதாவது: 

                   முதல்வர் கருணாநிதியின் சிறந்த ஆட்சியில் நிதியமைச்சர் அன்பழகன் வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற அண்ணா துரையின் தாரக மந்திரத்தை நிறைவேற்றும் விதமாக முதல் வர் கருணாநிதி ஆட்சி செய்து வருகிறார். அந்த விதத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே ன்னோடியாக இருக்கிறார். 
                    கடலூரை பொறுத்த வரை பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். 10 கோடியே 50 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், 6 கோடியே 50 லட்சம் செலவில் எஸ்.பி., அலுவலக வளாகம், 2 கோடியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், 2 கோடியில் தாசில்தார் அலுவலகம், திருப்பாதிரிப்புலியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடியிலும், வண்டிப்பாளையம் பள்ளிக்கு ரூ. 50 லட்சம் செலவிலும் கட்டடம் கட்டும் பணி என கடலூர் நகருக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

downlaod this page as pdf

Read more »

மக்கள் நலனில் அக்கறை காட்டுபவர் கருணாநிதி : அமைச்சர் பன்னீர்செல்வம் பேச்சு


சிறுபாக்கம் : 

                   தி.மு.க., எதிர் கட்சியாக இருந்த போதும் மக்களுக்காக போராடியவர் கருணாநிதி என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

                 மங்களூர் ஒன்றிய தி.மு. க., சார்பில் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம், அடரி அண்ணா திடலில் நடந்தது. மாவட்ட  துணை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். துணை சேர் மன் சின்னசாமி முன் னிலை வகித்தார். இளைஞரணி ஜெயராமன் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றிய தலைவர் அமிர்தலிங்கம், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, ஞானமுத்து, திட்டக்குடி பேரூராட்சி சேர்மன் மன் னன், நகர செயலாளர்கள் பரமகுரு, குமரவேல், ஒன் றிய துணை செயலாளர்கள் அண்ணா துரை, முத்துராமன், செல்வாம்பாள், செங்குட்டுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: 

                     அ.தி.மு.க., ஆட்சி யில் நிதிநிலை பொதுக்கூட் டத்தை அவர் கள் நடத்தியதில்லை. ஆனால் தி.மு.க., அரசு க்கள் நலத்திட்டங் களை செயல்படுத்தி வருவதால், துணிச்சலாக பட் ஜெட்டில் அறிவித்த சலுகைகளை கூட்டம் போட்டு பேசுகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி முதல் கான்கிரீட் வீட்டு திட்டம் வரை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். அண்மையில் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்கும் போது மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந் தது. தி.மு.க., எதிர் கட்சியாக இருந்த போதும் மக்கள் நலனில் கருணாநிதி அக்கறை காட்டினார். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

downlaod this page as pdf

Read more »

குறுகிய பாலங்களால் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதை! கண்டு கொள்வார்களா? நெடுஞ்சாலைத்துறையினர்


சிதம்பரம்  :  

                  சிதம்பரம் - சீர்காழி மெயின் ரோட்டில் பாலம் குறுகியதாகவும்,  உடைந்த ஆபத்தான நிலையில் இருப்பதாலும் விபத்துக்கள் நடப்பதும், போக்குவரத்து மணிக்கணக்கில் ஸ்தம்பிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

                     சிதம்பரம் - சீர்காழி சாலை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் மிக முக்கிய சாலையாக உள்ளது. ஆனால் இச்சாலை ஆங்காங்கே வளைவுகள், இடையிடையே குறுகலான பாலங்கள் என போக் குவரத்திற்கு இடையூறாக ள் ளது. அதிவிரைவு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டும் குறிப் பிட்ட வேகத்திற்கு மேல் செல்ல முடிவதில்லை. உதாரணமாக சிதம்பரம் மெயின் ரோட்டில் எம்.கே., தோட்டம் அருகே மழை நீர் வடிகால் பாலம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால் இப்பாலம் வழியாக ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். சில நேரங்களில் ஒரே நேரத்தில் போட்டி, போட்டுக் கொண்டு பாலத்தில் வானகங்கள் செல்வதால் பாலத்தின் நடுவே சிக்கிக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம் பித்து விடுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது பாலத்தில் விபத் துகளில் சிக்குகின்றனர். ஒவ் வொரு நாளும் அப்பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகளை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.        
                  இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பாலத்தில் மோதி பக்கவாட்டு தடுப்புக் கட்டைகளை உடைத்து விடுகின்றனர். அடிக்கடி பக்கவாட்டு சுவர் இடிந்து விடுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை ஏற்படுகிறது. பாலத்தை அகலப்படுத்தி கட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு பல் வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அடிக்கடி பக்கவாட்டு சுவரை மட்டும் கட்டி வருவதையே வேலையாக கொண்டுள்ளனர். மேலும், அதே சாலையில் அம் மாபேட்டை வளைவில் உள்ள பாசன வாய்க்கால் பாலம் உடைந்து எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படும் என்ற ஆபத் தான நிலை உள்ளது. ஆபத்தான வளைவில் அமைந்துள்ள இப்பாலத்தில் அடிக்கடி வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதும், இரவு நேரங்களில் பாலத்தை உடைத்துக்கொண்டு வாய்க்காலில் வாகனங்கள் கவிழ்ந்து விடுவதும் வாடிக்கையாகி விட்டது. 
                   கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சிலிண்டருடன் பாலத்தை உடைத்துக் கொண்டு தலைக் குப்புற கவிழ்ந்தது. இந்த பாலத் தில் விபத்து ஏற்பட்டால் சிதம்பரம்- சீர்காழி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும்  வாகனங்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலையும், அல்லது சேத்தியாத்தோப்பு வழியாக போக்குவரத்தை திருப்பி விடப்படும் நிலையும் ஏற்படுகிறது. இந்த இரு பாலங்களையும் இதுவரை சீர் செய்யவோ, மாற்று ஏற்பாடுகள் செய்யவோ நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. புறவழிச்சாலை பணியை காரணம் காட்டி வருகின்றனர். புறவழிச்சாலை வந்தாலும்கூட அப்பகுதி கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளுக்கு அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் இந்த இரு பாலங்களுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

downlaod this page as pdf

Read more »

நிலுவை தொகை பெற்றுத்தர வலியுறுத்தி பால் உற்பத்தியாளர் சங்கம் கலெக்டரிடம் மனு


சிறுபாக்கம் : 

              பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை 2 கோடியே 25 லட்சம் ரூபாயை பெற்றுத் தரக் கோரி கலெக் டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் நல சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் சீத்தாராமனை  சந்தித்து அளித்துள்ள மனு:

                   கடலூர் மாவட்டத்தில் 350 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டு, தற்போது 260 சங்கங் கள் மட்டுமே பெயரளவில் செயல் பட்டு வருகிறது. நல்லூர், மங்களூர் மற்றும் விருத்தாசலம் ஒன்றியங்களில்  80 சங்கங்கள் நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது. இச்சங்கங்களில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் பால் கடலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புறங்களில் 22 ஆயிரம் லிட்டர் விற்பனையாகிறது. மீதமுள்ள பால் மட்டுமே மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு செல்கிறது. இவ்வாறு வழங்கப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு விழுப்புரம் ஒன்றியத்திலிருந்து  50 நாட்களுக்கான தொகை 2 கோடியே 25 லட்சம் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.இதனால் சங்கங்கள் அனைத்தும் மூடப்படும் நிலையில் உள்ளது. விழுப்புரம் ஒன்றிய நிர்வாக இயக்குநரிடம் பலமுறை நேரில் எடுத்துரைத் தும், உண்ணாவிரதம் நடத்தியும் இதுவரை நிலுவை தொகை வழங்கவில்லை. விழுப்புரம் மாவட்ட கலெக் டரிடம் முறையிட்டும் அவருக்கு கீழ் பணிபுரியும் அலுவலர்கள் பணம் பட்டுவாடா செய் துள்ளதாக தவறான தகவல் அளித்து வருகின்றனர்.இதுபோன்ற நிலையில் 10 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதுடன், தனியார் பால் வியாபாரிகளை நோக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆவின் நிர்வாகம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பால் வளத்துறை கமிஷனர், கால்ந டை பராமரிப்பு செயலர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கடலூர் மாவட்டத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க பரிந் துரை செய்ய வேண்டும். மேலும், கடலூர் மாவட்டத்திற்கு தயாக ஒன்றியம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது.இதனைத் தொடர்ந்து  கலெக்டர் சீத்தாராமன், விழுப்புரம் கலெக்டர் மற்றும் பால்வள ஒன்றிய நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் மொபைல் போனில் பேசினார். பின்னர் உடனடியாக பால் பாக்கி தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களிடம் உறுதியளித்தார்.

downlaod this page as pdf

Read more »

பணம் குறைவாக இருந்தால் வெளியேற்றுவது தனியார் பள்ளி : மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம் பேச்சு


பண்ருட்டி : 

                இடைநிலை கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு தமிழகத் திற்கு 139 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் பேசினார். பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. சி.இ.ஓ., அமுதவல்லி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராமன் வரவேற்றார். டி.எஸ்.பி., பிரசன்ன குமார் விழாவை துவக்கி வைத்தார். டி.இ.ஓ., க்கள் கணேசமூர்த்தி, குருநாதன், மண்டல உடற்கல்வி ஆய்வாளர் சாமிதுரை, சிறுகிராமம் ராஜாராம், பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் ராதாகிருஷ் ணன், ஒன்றிய கவுன்சிலர் அஸ்வத்ராமன் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மதுரை போக்குவரத்து டி.ஐ.ஜி., ராஜேந்திரன்,  பெல் கம்பெனி மேலாளர் ரவிச்சந்திரன்,  பேராசிரியர் கண்ணதாசன், முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல் வம், நேஷனல் கல்வியியல் கல்லூரி தாளாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 50 ஆண்டு கால  முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் பள்ளி பருவத்தின் அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

விழாவில் மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம் பேசியதாவது: 

                                   அனைத்து இடைநிலை கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு தமிழகத்திற்கு 139 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் பாகுபாடு உள்ளது. அரசு பள்ளிகளில் சாதி, மத, பேதமின்றி சமத்துவம் காணப்படும். படிப்பு, பணம் குறைவாக உள்ளவர்களை வெளியேற்றுவது தான் தனியார் பள்ளிக் கொள்கை. ஆனால், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள்  ஐ.பி.எஸ்., மற்றும் பல் வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. தலைமையாசிரியர் கோரியபடி பொருளியல் பணியிட ஆசிரியர்  இந்த வாரத்தில் நியமிக்கப்படுவர். மேலும், கல்வித் துறை சார்பில் இப்பள்ளிக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். இவ்வாறு கார்மேகம் பேசினார்.

downlaod this page as pdf

Read more »

நகராட்சியில் கூடுதல் கட்டட பணி : நிதி ஒதுக்குவதில் சிக்கல்

 நெல்லிக்குப்பம் : 

                        நெல்லிக்குப்பத்தில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் கட்டட பணி முடிக்கப்படாததால் கூடுதல் நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தின் பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முதல் தளம் பணிகள் துவங்கி தரைத் தளம் ஜல்லி போடப்பட்டது. இரண்டாம் தளம் ஜல்லி போட ஒரு மாதத்துக்கு முன் 'சென்டரிங்' அடிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பணிகளை நகராட்சி மண்டல பொறியாளர் பார்வையிட்டு அனுமதி தர வேண்டும். 15 நாட்களுக்கு முன் மண்டல பொறியாளர் அன்பழகன் பார்வையிட்டு சென்டரிங் முட்டுகள் சரியில்லை. அதை சரி செய்த பிறகே ஜல்லி போட வேண்டுமென கூறினார். உடனே முட்டுகள் சரி செய்யப்பட்டது. மீண்டும் மண்டல பொறியாளர் பார்வையிட்டு அனுமதி கொடுத் தால் தான் ஜல்லி போட வேண்டுமென நகராட்சி பொறியாளர் கூறியதால் ஜல்லி போடும் பணி நடைபெறவில்லை. மண்டல பொறியாளருக்கு தகவல் கொடுத்தும் அவர் பார்வையிட வரவில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் பணியை முடிக்க முடியவில்லை. கட்டட பணி முழுமையாக முடியாத நிலையில் நகராட்சி வருவாய் நிதியிலிருந்து அழகுபடுத்துதல், குளிர்சாதன வசதி செய்வதற்கு என 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. அரசு மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் பணி முடியாததால் மேற் கொண்டு வேறு நிதியை ஒதுக்க முடியாது என உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதிகாரிகளின் 'ஈகோ' பிரச் னையால் கட்டட பணி முடியாததால் நகராட்சிக்கு அரசு புதிய நிதிகள் ஒதுக்கவில்லை. தேர்தல் நெருங் கும் நிலையில் கூடுதலாக நிதி கிடைக்க வாய்ப்புள்ளது. உடனடியாக கட்டட பணியை முடித்து அதிக நிதி பெற அதிகாரிகளும், மக் கள் பிரதிநிதிகளும் முயற்சிக்க வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

எம்.எட்., தேர்வில் முதலிடம் பண்ருட்டி மாணவி சாதனை


பண்ருட்டி : 

               எம்.எட்., தேர்வில் பண்ருட்டி கல்வியியல் கல்லூரி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பண்ருட்டி அடுத்த கீழக்கொல்லையில் உள்ள நேஷனல் கல்வியியல் கல்லூரியில் 2008-2009ம் ஆண்டில் எம்.எட்., இறுதியாண்டு தேர்வில் மாணவி தமிழ் செல்வி கடலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.   சென்னையில் நடந்த தமிழ்நாடு  கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாணவி தமிழ்செல்விக்கு பட்டம் மற்றும் பதக்கம் வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி தமிழ் செல்வியை நெய்வேலி கல்வி அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர், செயலாளர் நடராஜன், பொருளாளர் தங்கதுரை, இயக்குனர்கள் ஜெயவெங்கட்ராமன், சுதாராமராசு, கல்லூரி முதல்வர் அஷ்ரப்புல்லா  ஆகியோர் வாழ்த்தினர்.

downlaod this page as pdf

Read more »

மத்திய அமைச்சரிடம் பிற்பட்டோர் பேரவை கோரிக்கை மனு

 கடலூர் : 

                    என்.எல்.சி., விரிவாக்கத்திற்கு நிலம், வீடுகளை கொடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. 

நெய்வேலிக்கு வருகை தந்த மத்திய நிலக்கரி மற்றும் புள்ளியியல் துறை ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலிடம் பேரவை பொதுச் செயலாளர் வீர வன்னியராஜா கொடுத்துள்ள மனு:

                      டில்லியில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒப்பந்தபடி  கான்ட்ராக்ட் தொழிலாளர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும். பணியின் போது இறந்த என்.எல்.சி., தொழிலாளர்களின் வாரிசுகள் மற்றும் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கும், என்.எல்.சி., விரிவாக்கத்திற்காக நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். என்.எல்.சி., மருத்துவமனையை தரம் உயர்த்தி மருத்துவக் கல்லூரியாக கொண்டு வர வேண்டும். சுற்றியுள்ள  கிராமங் களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

கான்கிரீட் வீடுகள் கணக்கெடுப்பு 42 ஊராட்சிகளில் முடிந்தது : கலெக்டர்


கடலூர்  :  

                   கடலூர் மாவட்டத் தில் கடந்த 7ம் தேதி வரையில் 60,168 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளுக்காக கணக்கெடுக்கப் பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                   கடலூர் மாவட்டத்தில் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்திற்கு கடந்த 29ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், கிராம ஊராட்சி உதவியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணி வரும் மே 15ம் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடந்த 29ம் தேதி முதல் 7ம் தேதி வரை 410 ஊராட்சிகளில் 60,168 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 42 ஊராட்சிகளில் பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

Read more »

எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மாற்றுத் திறனாளி சைக்கிள் பயணம்


திட்டக்குடி : 

                    திண்டுக்கல் - சென்னை வரை 200 நாள் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்ட, மாற்றுத் திறனுடைய வாலிபர் திட்டக்குடியில் பிரசாரம் செய்தார். திருநெல்வேலி நாங்குநேரி இட்டாமொழி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ் மகன் நெல்சன் (27). மாற்றுத்திறனாளியான இவர் எய்ட்ஸ் நோயின் பாதிப் பினை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திண்டுக்கல்லில் இருந்து சென்னை வரை 200 நாட்கள் மூன்று சக்கர சைக்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர்  21ம் தேதி திண்டுக் கல்லில் பயணத்தை துவக்கினார்.  கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தொழுதூர் வழியாக 175ம் நாளான 11ம் தேதி மாலை திட்டக்குடிக்கு வந்தடைந்தார்.  திட்டக்குடி பஸ் நிலையத்தில் எய்ட்ஸ் நோயின் பாதிப்பு, அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கை மையம் இயக்கம் குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து விருத்தாசலம், விழுப்புரம் வழியாக சென்னை செல்கிறார்.

downlaod this page as pdf

Read more »

மக்கள் குறைகேட்பு தினக் கூட்டத்தில் 18 பேருக்கு ரூ 3.60 லட்சம் திருமண உதவி

 கடலூர் : 

                   கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு தினக் கூட்டத்தில் திருமண உதவித் திட்டத்தில் 18 பேருக்கு 3.60 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு தின கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில் குடிநீர் வசதி, பட்டா வழங்குதல், பட்டாமாற்றம் உட் பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 348 மனுக்களை கலெக்டர் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
 
          கடந்தவாரம் நடந்த  கூட்டத்தில் காட்டுமன்னார்கோவில் வட்டம், மேல்பாதியைச் சேர்ந்த நிக் கோலஸ் என்பவர் பட்டா மாறுதல் செய்து வழங்குமாறு கலெக்டரிடம் மனு கொடுத்தார். அம்மனுவின் மீது நடவடிக்கை எடுத்து அவருக்கு பட்டா மாறுதல் செய்து கலெக்டர் வழங்கினார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் கீழ் 18 பேர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 3.60 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், தாட்கோ திட்டத்தின் கீழ் கலெக்டரின் தன் விருப்ப திட்ட நிதியிலிருந்து மாற்றுத் திறனாளிகளான நெய்வாசல் இளையராஜா,  தாமோதரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் கடனுதவி வழங்கினார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் தேவராஜன் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

போட்டியில் பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு


கடலூர்  :  

             பெண் சிசு கொலை தொடர்பாக கல்லூரி மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் நேற்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
 
                      பெண் சிசு கொலை தொடர்பாக கல்லூரி மாணவிகளுக்கிடையே கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி, கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி, ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி மாணவிகள்  கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 2,000 ஆயிரம் ரூபாயும், 2வது பரிசு 1,000 ரூபாயும், மூன்றாவது பரிசு 500 ரூபாயும், சான்றிதழும் கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரக்குமார் உடனிருந்தனர்.

downlaod this page as pdf

Read more »

கடலூர் மண்டல பனைப்பொருள் பயிற்சி நிலையத்தில் மரம் ஏற ஆட்கள் இல்லை : பதநீர் உற்பத்தி பாதிப்பு

 கடலூர் : 

                கடலூர் மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பனை மரம் ஏறுவோர் பற்றாக்குறையால் பதநீர் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
 
                கடலூர் பீச் ரோட்டில் மண்டல பனைபொருள் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பனை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொண்டு பதநீர், பனை வெல்லம், கிழங்கு உள்ளிட்ட  உணவு பொருட்களும், பனை மட்டை நார்களிலிருந்து தயாரிக்கப்படும் சுத்தம் செய்வதற்கான பிரஷ்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது நிதி பற்றாக் குறை காரணமாக பயிற்சி மையம் செயல்படாமல் உள்ளது. இங்கு 200க்கும் மேற் பட்ட பனை மரங்கள் உள் ளதால் அதிலிருந்து வெயில் காலத்தில் பதநீர் இறக்கப்பட்டு, அவற்றை பதப்படுத்தி சுத்தமான கலப்படம் இல்லாத பதநீர் லிட்டர் ஒன்று 20 ரூபாய்க்கும், 200 மில்லி லிட்டர் பாக்கெட்  4  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விற்பனைக்கு போக மீதமுள்ள பதநீரை காய்ச்சி அதிலிருந்து பனை வெல்லம் தயாரித்து வருகின்றனர். பனைமரத்திலிருந்து பதநீர் இறக்க நெல்லை மாவட்ட பகுதியிலிருந்து ஆட்களை வரவழைத்து  லிட்டருக்கு 4 ரூபாய் வீதம் வேலைக்கு அமர்த்தி பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.  இந்நிலையில் தற்போது நெல்லை மாவட்ட பகுதியில் சீசன் என்பதால் இங்கு பணியில் இருந்த 3 பேரும் சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டனர். உடல் நிலை சரியில்லை என கூறி இருந்த முதியவர் ஒருவரும் சென்று விட்டார். இதனால் கடந்த 2 நாட்களாக பதநீர் இறக்க முடியாமல் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, 'எங்களிடம் வேலை செய்தவர்கள் ஏதும் கூறாமல் சென்று விட்டனர். இருந்தாலும் மாற்று ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.  இரண்டு நாட்களில் புதிய ஆட்களைக் கொண்டு பதநீர் இறக்கப்படும் என தெரிவித்தார்.

downlaod this page as pdf

Read more »

அரசு மற்றும் தனியார் பஸ் ஊழியர்கள் மோதல் : திட்டக்குடியில் பயணிகள் கடும் அவதி

 திட்டக்குடி : 

                 நெடுஞ்சாலையின் குறுக்கே பஸ்சை நிறுத்தி டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திட்டக்குடியில் அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்குள் பஸ் புறப்படும் நேரம் சம்பந்தமாக அடிக்கடி பிரச்னை ஏற்படும். விருத்தாசலம் வரை செல்லும் தனியார் பஸ்கள் முன் கூட்டியே பஸ் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்று முந்திச் சென்று, வழியில் உள்ள பயணிகளை ஏற்றி செல்வதால் அரசு டவுன் பஸ்களில் வருமான இழப்பு ஏற்படுவதாக அரசு பஸ் டிரைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
                   இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு திட்டக் குடி பஸ் நிலையம் அருகே டி.என்.32 என்.2495 எண் அரசு டவுன் பஸ்சை டிரைவர் நெடுஞ்சாலையின் குறுக்கே நிறுத்தி தொழுதூர் புறப்பட தயாராக இருந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தினார். இதனையடுத்து இரண்டு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொறுமையிழந்த பயணிகள் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களின் நேர பிரச்சனையால் திட்டக்குடி நெடுஞ்சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திட்டக்குடி பஸ் நிலையம் வெளியிலேயே பயணிகளை இறக்கிவிடுவதும், சாலையின் குறுக்கே நிறுத்துவதும் தொடர் கதையாக உள்ளது. அடிக்கடி ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

downlaod this page as pdf

Read more »

சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 விருத்தாசலம் : 

                  விருத்தாசலம் மற்றும் திட்டக்குடியில் சுமை தூக்கும் தொழிலாளர் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

                  விருத்தாசலம் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார் பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அழகிரி தலைமை தாங்கினார். பரமசிவம், சவுந்தர்ராஜன், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
திட்டக்குடி: 

                  திட்டக்குடியில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட செயற் குழு உறுப்பினர் கொளஞ்சி தலைமை தாங்கினார். பொருளாளர் சித்திரவேல், துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், வீராசாமி ஆகியோர் விளக்கிப் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். பணியில் இறக்கும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உட்பட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

downlaod this page as pdf

Read more »

போலீஸ் காவல் விசாரணை முடிந்து குற்றவாளி கோர்ட்டில் ஆஜர்


கடலூர் : 

                    தி.மு.க., பிரமுகர் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட் டவர் நேற்று கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டார். கடலூர் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அடுத்த  நல்லாத்தூரைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் சுப்புராம். கடந்த 13ம் தேதி  திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல்  இவரது வீட்டிற்குச் சென்று அங்கிருந்தவர் களை கத்தியை காட்டி மிரட்டி ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சென்னை திருவள்ளூர் போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் பேச்சியப்பன் (24) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் தூக்கணாம் பாக்கம் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து திருவள்ளூர் போலீசார் தூக்கணாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தூக்கணாம்பாக்கம் போலீசார்  பேச்சியப் பனை கடலூருக்கு அழைத்து வந்து மாஜிஸ் திரேட் கோர்ட் 1ல் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் காவல் முடிவடைவதால் நேற்று மாஜிஸ்திரேட் கோர்ட் எண்.1ல் மாஜிஸ் திரேட் சுதா முன் ஆஜர்படுத்தினர்.

downlaod this page as pdf

Read more »

'குடிகார குரங்கு: வனத்துறையினர் திணறல்


நெல்லிக்குப்பம் : 

                     நெல்லிக்குப்பத்தில் சுற்றித் திரியும் குரங்கை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

                      நெல்லிக்குப்பத்தில் கடந்த ஆறு மாதமாக சுற்றித் திரியும் குரங்கு நகர பகுதியில் உள்ள கடைகளில் நுழைந்து பொருட்களை எடுத்து செல்வதும்,  துரத்தினால் கடிக்க பாய்வதால் பயந்து ஓடும் நிலை உள்ளது. சில மாதங்களுக்கு முன் சமூக விரோதிகள் குரங்குக்கு மது குடிக்க  கற்றுக் கொடுத்தனர். அப்போது முதல் வெறி டித்த குரங்கு, தினமும் பலரை கடித்து வருகிறது. வனத்துறையினர் 10 நாட்களாக குரங்கை பிடிக்க கூண்டு வைத்தும் பிடிக்க முடியவில்லை. கால் நடை மருத்துவர் தமிழ்செல்வி, மயக்க ஊசி போட்டு குரங்கு இறந்து விடும் என்பதால் மயக்க மாத்திரையை பாலில் கலந்து வைக்க றினார். ஆனால், மாத்திரை கலந்த பாலை குடித்த குரங்குக்கு மயக்கம் வரவில்லை. இரண்டு மணிநேரம் னத்துறையினரை அலைக்கழித்த குரங்கு மீண்டும் மரத்தின் மீது ஏறி அமர்ந்தது. இன்று நரிக்குறவர்களைக் கொண்டு குரங்கை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

downlaod this page as pdf

Read more »

கோஷ்டி மோதல்: மூன்று பேர் கைது

 விருத்தாசலம்  : 

                   சாத்தியம் கிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து (40). இவரது உறவினர் மகன் பூவராகவனும், அதே ஊரைச் சேர்ந்த வேலுசாமி மகள் சுப்புலட்சுமியும் சென்னையில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக சுப்புலட்சுமி மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து இறந்தார். இதுகுறித்து சென்னை போலீசார் வழக்கு பதிந்து 8ம் தேதி பூவராகவனை கைது செய்தனர். சுப்புலட்சுமியின் உடலை அவரது தந்தை வேலுசாமி மற்றும் உறவினர்கள் சொந்த ஊரான சாத்தியத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.
 
            இந்நிலையில் பூவராகவனின் உறவினர்களான பச்சமுத்து, லட்சுமி, அன்னதானம், நாகம்மாள், மல்லிகா ஆகியோர் பச்சமுத்து வீட்டின் முன் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுப்புலட்சுமியின் தந்தை வேலுசாமி மற்றும் அவரது உறவினர்கள், பச்சமுத்துவையும் அவருடன் பேசிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கினர். இதுகுறித்து பச்சமுத்து கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து வேலுசாமி (45), வெங்கடேசன் (28), தங்கதுரை (36) ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும், முருகானந்தம், ரவி, ராதாகிருஷ்ணன், கண்ணதாசன், ராஜி, வீரதமிழன் உள்ளிட்ட ஆறு பேரை தேடி வருகின்றனர்.

downlaod this page as pdf

Read more »

இந்து மக்கள் கட்சியினர் கடலூரில் உண்ணாவிரதம்


கடலூர்:

                          கடலூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. பண்ருட்டி 'லிங்க்' ரோட்டில் பல ஆண்டுகளாக பட்டா இடத்தில் காட்டுநாயக்கன் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களை துன்புறுத்தி வரும் குமார் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த போராட்டத்திற்கு  மாவட்ட தலைவர் பழனி முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் துரைகண்ணு முன்னிலை வகித்தார். மாநில நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத் சிறப்புரையாற்றினார். மக்கள் ஜனநாயக இளைஞரணி கருணாநிதி, காட்டுநாயக்கன் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு செயலாளர் சுஜிசாமி, தேவா, கந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

மோட்டார் வாகன ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கடலூர் : 

                      சாலை விபத்து ஏற்பட்டால் ஓட்டுனர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி கடலூர் நகர அனைத்து மோட்டார் வாகன ஓட்டுனர்கள் உரிமையாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

                     சாலை விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்களின் உரிமம் விசாரணையின்றி ரத்து செய்யப்படும் என்ற கலெக்டர் அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். சுங்கவரி கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்து படிவங்களையும் தமிழில் வழங்க வேண்டும். இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையிலிருந்து ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 
                     ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் பாபு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையா சிறப்புரையாற்றினார். அரசு போக்குவரத்துக் கழக சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் பாஸ்கரன், வள்ளலார் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சண்முகம், நடராஜன், கடலூர் முதுநகர் வேன் ஓட்டுனர் சங்கம் சுரேஷ், தமிழ்வாணன், பாட்டாளி தொழிற்சங்கம் ராமமூர்த்தி, சுற்றுலா வேன் ஓட்டுனர் சங்கம் சேகர் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior