உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

கடலூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 வினாத்தாள் வெளியானது: ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கடலூர்:

  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 எழுத்துத் தேர்வு வினாத்தாள் கடலூரில் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 எழுத்து தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தமிழகத்தில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.

          ஈரோடு, தருமபுரி ஆகிய பகுதிகளில் கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடலூரிலும் கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி ஆகிய பகுதியில் 49 தேர்வு மையங்களில் 29 ஆயிரத்து 52 பேர் தேர்வு எழுதினர்.


       கடலூர் புனித வளனார் கல்லூரி தேர்வு மையத்தில், நெல்லிக்குப்பம் வாழப்பட்டு கம்பன் நகரைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் தேர்வு எழுதினார்.
 தேர்வு எழுதி முடிந்ததும் வெளியே வந்த அவர் ஆட்சியர் அலுவலகம் எதிரே மஞ்சக்குப்பம் மைதானத்தின் வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள் போன்று கையால் எழுதப்பட்ட 15 பக்கங்கள் கொண்ட ஜெராக்ஸ் நகல் கிடந்ததை பார்த்து எடுத்தார். அதில் அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில்கள் சரியாக குறிப்பிட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.


இதுகுறித்து ராஜாகண்ணு கூறியது:


       எம்.காம். பட்டதாரியான நான் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 2-வது முறையாக எழுதுகிறேன். மஞ்சக்குப்பம் மைதானத்தில் விடைகள் அடங்கிய வினாத்தாளை கண்டெடுத்தேன். இதை வைத்து தேர்வு எழுதியவர்கள் எளிதில் தேர்ச்சிப் பெற்று வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் என்னைபோன்று கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதியவர்களுக்கு அரசு வேலை கிடைக்காமல் போய்விடும். முறைகேடு நடந்துள்ள இந்த தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.


         கடலூரில் கேள்வித்தாள் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, விசாரணை முடிந்தால்தான் உண்மை நிலை தெரியும் என்றார் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ.








Read more »

சிறுபாக்கம் ஆண்டவர் கோவிலில் அழிந்துவரும் கோவில் சுடுமண் சிற்பங்கள்

சிறுபாக்கம்:


     பழமை வாய்ந்த கோவில்களில் சுடுமண் சிற்பங்கள் பராமரிப்பின்றி அழிந்துவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தின் பிரதான கோவில்களில் பண்டை காலத்தில் கிராமத்தினையொட்டி ஆண்டவர், ஐயனார், எல்லையம்மன், கருப்பையா, மதுரைவீரன் உள்ளிட்ட பழமை வாய்ந்த கோவில்கள் இயற்கை சூழலுடன் திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

           இங்கு கிராம மக்கள் தை முதல் சித்திரை மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஊரணி பொங்கலிட்டு திருத்தேர்விழா நடத்துவார்கள். முக்கிய விழாக்கள் நடைபெற்றால்தான் கிராமப்புறங்களில் போதிய மழை பெய்து வேளாண்மையில் அதிக மகசூலை பெறவும், கிராமம் அமைதியாக இருக்கவும் முடியும் என்ற நம்பிக்கை உண்டு. கிராமப்புற திறந்த வெளி கோவில்களில் குலதெய்வமாகவும் மக்கள் வழிபட்டு வருகின்றனர். குடும்பத்தில் அமைதி நிலவிடவும், பிள்ளை பேறு அடையவும் வேண்டுதல் வைத்து அவை நிறைவேறியவுடன் சுடுமண்ணால் அமைக்கப்பட்ட குதிரைகள், யானைகள் அமைத்து கிடா பூஜையுடன் நேர்த்திக் கடன் செய்து வருகின்றனர். இதுபோன்ற கோவில்களில் கம்பீரமாக அலங்கரித்த சுடுமண் சிற்பங்கள் அண்மைக் காலமாக சிதைந்தும், உடைந்தும் காணப்படுகின்றன. மே லும் சுடுமண் சிற்பங்கள் வைத்து வழிபடுவதும் குறைந்து வருகிறது.


     சிறுபாக்கம் ஆண்டவர் கோவிலில் ஏராளமான சுடுமண் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இக்கோவிலில் சேலம், ஈரோடு, ராசிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.  ஆனால் ஆரம்ப காலங்களில் இருந்தது போன்று பெரிய மற்றும் சிறிய அளவிலான சுடுமண் சிற்பங்கள் வைத்து வழிபடுவது குறைந்து விட்டது. பழமை வாய்ந்த சுடுமண் சிற்பங்கள் முற்றிலும் அழிந்து விடாமல்தொல்லியல்துறை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.

Read more »

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலி

நெல்லிக்குப்பம்:


நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிட்டர் பணியிடம் காலியாக உள்ளதால் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க ஆள் இல்லாமல் நோய் பரவும் அபாயம் உள்ளது.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணியாற்றிய பிட்டர் இளங்கோ இரண்டு மாதத்துக்கு முன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக வேறு யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.நகரம் முழுவதும் உள்ள குடிநீர் பகிர்மான குழாய்களை பராமரிக்க தனியாருக்கு டெண்டர் விட்டனர். நடப்பு ஆண்டு அந்த டெண்டரும் விட வில்லை. கடந்த ஒரு வாரமாக 10வது வார்டு கந்தசாமி தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி குளம்போல தேங்கி நிற்கிறது.கழிவுநீர் குடிநீருடன் கலக்கும் அபாயம் உள்ளதால் நோய் பரவும் சூழல் உள்ளது. நோய்  பரவும் முன் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சியில் குடிநீர் குழாய்கள் உடைந்தால்  ஆட்கள் இல்லாத நிலை உள்ளது. மக்களின் அடிப்படை தே வையான குடிநீர்   குழாய்களை பராமரிக்க ஆட்கள் நியமிப்பதில் கவனம் செலுத்த வே ண்டும்.



.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior