உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜனவரி 21, 2010

திட்டக்குடி மார்க்கெட் கமிட்டிக்கு மக்காச்சோளம் வரத்து அதிகரிப்பு

திட்டக்குடி:

                      கடலூர் மாவட்டம் திட்டக்குடி மார்க்கெட் கமிட்டியை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். காலம் தவறிய மழை, பருவ நிலை மாற்றங்களால் இப்பகுதி விவசாயிகள் பணப்பயிரான வேர்கடலை, எள், மல்லி போன்றவற்றை பயிரிடுவதை தவிர்த்தனர்.  மாறாக மானாவாரி பயிர்களான மக்காச் சோளம், சூரியகாந்தி பயிரிடுவதில் ஆர்வம் கட்ட துவங்கியுள்ளனர்.  இதற்கு காரணம் பணப்பயிர்கள் 120 நாட்கள் வளரக்கூடியவை. ஆனால் மக்காசோளம் 100 நாளில் அறுவடை செய்ய முடிகிறது.  ஏக்கருக்கு 30 மூட்டை வரை மகசூல் கிடைப்பதால், விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவதை விரும்புகின்றனர். இதன் காரணமாக எப்போதும் வேர்கடலை, எள் மற்றும் மல்லி வரத்தே அதிகமாக இருக்கும் திட்டக் குடி மார்க்கெட் கமிட்டிக்கு இந்தாண்டு வழக்கத் திற்கு மாறாக மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை மக்காச்சோளம் 60 மூட்டைகளும், வேர்கடலை 11 மூட்டைகளும், எள் ஒரு மூட் டையும் விற்பனைக்கு வந்தன. இதில் 80 கிலோ மூட்டை வேர்கடலை 3, 234 ரூபாய்க்கும், 80 கிலோ  எள் 2,429க்கும், 40 கிலோ மூட்டை மல்லி 1,589க்கு விலை போனது. 100 கிலோ கொண்ட மக்காச்சோளம் 854 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஒரு ஆண்டாகவே திட்டக்குடி மார்க்கெட் கமிட்டி இலக்கை அடைய  மக்காச்சோளம் பயிரே உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more »

மகளிர் குழுவினர் அறிவித்த உண்ணாவிரதம் : அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் வாபஸ்

திட்டக்குடி:

                       அடிப்படை வசதிகள் கோரி மகளிர் சுய உதவிக்குழுவினர் அறிவித்த உண் ணாவிரத போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த் தையால் வாபஸ் பெறப் பட்டது. திட்டக்குடி பேரூராட்சி 3 மற்றும் 4வது வார்டுகளில் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இலவச காஸ் அடுப்பு வழங்க பணம் வசூலித்த கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மகளிர்சுய உதவிக்குழுவினர் நேற்று திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவிக்கப்பட்டது.

                               அதனையடுத்து நேற்று முன்தினம் மாலை தாசில் தார் கண்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்தில் துணை தாசில்தார்கள் பாலு, மகாராணி, வட்ட வழங்கல் அலுவலர் செழியன், பேரூராட்சி அலுவலர்கள் ஜெயராஜ், புஷ்பநாதன், கவுன்சிலர் செந்தில் மற்றும் சுய உதவிக்குழு பெண்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் நிதியாண்டில் 3 மற்றும் 4வது வார்டுகளுக்கு வளர்ச்சி பணிகளில் முன்னுரிமை அளிக்க பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலருக்கு பரிந்துரை செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று போராட்டக் குழுவினர் உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றனர்.

Read more »

ஊரக சுய உதவிக் குழுக்களுக்கு 26ம் தேதி அடையாள அட்டை

கடலூர்:

                       ஊரக சுய உதவிக்குழுக்களுக்கு வரும் 26ம் தேதி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவிக்  குழுக்களுக்கான அடையாள அட்டை 8837 குழுக்களுக்கு வழங்குவது குறித்து முன்னோடி கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நடந்தது. கலெக்டர் (பொறுப்பு) தலைமை தாங்கினார். இதில் ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தொண்டு நிறுவன செயலர்கள் பங்கேற்றனர்.

                          கூட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கான அடையாள அட்டைகள் ஊரகப்பகுதியில் 26ம் தேதி கிராம சபா கூட்டத்தில் வழங்குவதெனவும். அடையாள அட்டைகள் பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வரும் 30ம் தேதி வழங்க முடிவு செய்யப்பட்டது. ஊரகப் பகுதியில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கிட இளநிலை உதவியாளர் நிலைக்கு குறையான நிலையில் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியினை மேற்பார்வையிட வட்டார அளவில் பகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

Read more »

பள்ளி மாணவிகளுக்கு இலவச அகராதி வழங்கல்

கடலூர்:

                       சென்னை சுவாமி விவேகானந்தா சமூக சேவை மையம் பதஞ்சலி யோகா கல்வி அறக்கட்டளை சார்பில் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் அகராதி வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கவுன்சிலர் சாய்துன்னிசா சலீம் தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியர் சுப்ரமணியம் வரவேற்றார். விவேகானந்தா தொழில் நுட்ப மருத்துவ கல்லூரி செயலாளர் லஷ்மிநரசிம்மன் மாணவிகளுக்கு அகராதிகளை வழங்கினர். சுவாமி விவேகானந்தா  சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் சிறப்புரையாற்றினார். விவேகானந்தா தொழில் நுட்ப மருத்துவ கல்லூரி இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

Read more »

தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு தே.மு.தி.க., நிவாரணம்



விருத்தாசலம்:

             கீரமங்கலம் கிராமத்தில் தீ விபத்தில் பாதித்த குடும்பங்களுக்கு தே.மு. தி.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. விருத்தாசலத்தை அடுத்த கீரமங்கலம் கிராமத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட அரிகிருஷ்ணன், கொளஞ்சிநாதன், சுரேஷ், பாலகிருஷ்ணன், கொளஞ்சி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தே.மு. தி.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மாவட்ட துணை செயலாளர் தென்னவன் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜவன்னியன், ஒன்றிய கவுன்சிலர் ராஜ், விவசாய அணி செயலாளர் ராஜாங்கம், நகர தலைவர் ராஜ்குமார், கிளை செயலாளர் முத்துசாமி உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

Read more »

என்.எஸ்.எஸ்., முகாம் துவக்கம்

குறிஞ்சிப்பாடி:

                     குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர்  கல்லூரி என். எஸ்.எஸ்., சிறப்பு முகாம் குருவப்பன்பேட்டையில் நடந்தது. கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சிவபாலன் வரவேற்றார். கல்லூரி முதல் வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். கல்லூரி, கம்ப்யூட்டர் துறை விரிவுரையாளர்  பிரேமி, மணிவண்ணன் திட்ட விளக்கம் அளித்தனர். தாசில்தார் பெரியநாயகம் முகாமை துவக்கி வைத்தார்.  விழாவில் குருவப்பன் பேட்டை கவுன்சிலர் சுப்ரமணியன், ஊராட்சி தலைவர் சிவராமசேது, வரதராஜன்பேட்டை ஊராட்சி தலைவர் ஜெயந்தி, சுந்தரமூர்த்தி, மோகன், சட்டநாதன் பங்கேற்றனர்.

Read more »

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

சேத்தியாத்தோப்பு:

                                 சேத்தியாத்தோப்பை அடுத்த மஞ்சக்கொல்லையில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.  கிளை செயலாளர் எத்திராசு தலைமை தாங்கினார். கிருஷ்ணசாமி, பஞ்சநாதன், வேல்முருகன் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் கலியபெருமாள் வரவேற்றார். தலைமை நிலைய  பேச்சாளர் காஞ்சிராமு, எம்.எல்.ஏ.,க்கள் அருண் மொழித்தேவன், செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ., அருள், புவனகிரி ஒன்றிய முன்னாள் சேர்மன் லட்சுமி நாராயணன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட மாணவரணி செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றிய தலைவர் வீராசாமி உள்ளிட்டோர் பேசினர். யப்பாடி கிளை செயலாளர் குமார் நன்றி கூறினார்.

Read more »

ஊனமுற்றோருக்கு இலவச சைக்கிள்

ராமநத்தம்:

                   ராமநத்தம் அடுத்த ம.புடையூர் தென் கோட்டை கிளை தே.மு.தி.க., சார்பில் ஊனமுற்றோருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பொருளாளர் செல்வகுமார், ஒன்றிய தொண்டரணி செயலாளர் கலைவாணன், துணை செயலாளர் முரளி முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் இளமாறன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கி ஊனமுற்ற சைக்கிளும், இலவச வேட்டி, சேலையும் வழங்கினார். இதில் கிளை பொருளாளர் ராஜா, நிர்வாகிகள் சுந்தர்ராஜன், கண்ணன், அறிவொளி, ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

கல்வியியல் கல்லூரியில் கல்விச் சமூகப்பணி முகாம்

கடலூர்:

             புதுச்சேரி அடுத்த கன்னியக்கோவில் கலைக்கண்ணன் மகளிர் கல்வியியல் கல்லூரியில் கல்விச் சமூகப்பணி முகாம் நடந்தது. கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் அறங்காவலர் குழுவின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். பவானி ஜெயராம் கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளை தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்று கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் வளா கத்தை சுத்தம் செய்தனர்.

Read more »

பெண் மானபங்கம் : பலே ஆசாமி கைது

கடலூர்:

                  ஓட்டலில் புகுந்து பெண்ணை மானபங்கப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

                 நெய்வேலி அடுத்த என்.ஜே.வி., நகரைச் சேர்ந்தவர் சாதிக் பாட் ஷா. இவரது மனைவி பவுஷ்ராபேகம்(35). இவர்கள் நெய்வேலி இந்திரா நகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். கடந்த 16ம் தேதி பவுஷ்ராபேகம் ஓட் டலில் இருந்தார். அப் போது அங்கு வந்த கீழ்வடகுத்தைச் சேர்ந்த வேலு என் கிற வடிவேல்(40), தனியாக இருநர்த பவுஷ் ராபேகத்தின் சோலையை பிடித்து இழுத்தார். . பவுஷ்ராபேகம் கூச்சலிடவே வடிவேல் தப்பியோடிவிட்டார். இது குறித்து  நெய் வேலி டவுன் போலீசார் பெண் கொடுமை தடுப்புச் சட்டத் தின் கீழ் வழக்குப் பதிந்து வடிவேலை கைது செய்தனர்.

Read more »

கார் மோதி காயமடைந்த முதியவர் யார்?

சிதம்பரம்:

               சிதம்பரம் அருகே சுமோ கார் மோதி காயமடைந்த முதியவர் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். சிதம்பரம்-சீர்காழி மெயின்ரோட்டில் சிதம்பரம் நோக்கி 58வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.  கூத்தங்கோவில் அருகே வரும்போது பின்னால் வந்த சுமோ கார் அவர் மீது மோதியது. விபத்தில் காயமடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த இரண்டு நாட்களாக சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.  இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி: 

              போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் புதன்கிழமை பண்ருட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.26.12.2009 அன்று நள்ளிரவில் கடை இடிப்பு - பொருட்கள் சூறை, லிங்க் ரோட்டில் 100 ஆண்டுகளாக குடியிருந்த குறவர்களின் வீடுகள் இடிப்பு மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு செய்த குற்றவாளிகள்-சமூக விரோதிகள் மீது சட்டப்படியான பொருத்தமான வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும், பஸ் நிலையத்தில் வியாபாரிகள் மீது தாக்குதல், மாமூல் வசூல் உள்ளிட்ட போலீஸôரின் நடவடிக்கைகள் கண்டிக்கப்பட்டன.
 
                           இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலர் பி.துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலர் எம்.சேகர் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயக்குமார், மதிமுக நகரச் செயலர் கோ.காமராஜ், பாமக மாவட்ட அமைப்புச் செயலர் கோதண்டபாணி, தேமுதிக மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், புரட்சி பாரதம் மாவட்டச் செயலர் தெய்வீகதாஸ், பாஜக மாவட்ட துணை தலைவர் செல்வகுமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

குடியரசு தின விளையாட்டுப் போட்டி நெய்வேலி பள்ளி மாணவிக்கு தங்கம்

நெய்வேலி: 

                      ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான 52-வது குடியரசு தின தடகளப் போட்டியில் நெய்வேலி செயின்ட் ஜோசப் ஆப் குளூனி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பள்ளிகளுக்கு இடையே இம்மாதம் 10 முதல் 12-ம் தேதி வரை ஈரோடு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டுத் திடலில் நடைபெற்ற இப்போட்டியில் மாநிலம் முழுவதிலிமிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் பங்கேற்றனர். இதில் நெய்வேலி செயின்ட் ஜோசப் ஆப் குளூனி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி  சௌமியா 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் தங்கமும் உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளியும், 200 மீ ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார். மாநில அளவிலான போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவியையும், பயிற்றுநர் ஆர்.சங்கரனையும் பள்ளி முதல்வர் மாசிலாமேரி பாராட்டினார்.

Read more »

மானிய விலையில் நெல் அறுவடை இயந்திரம்

கடலூர்: 

                   மாநிலத்தில் முதல் முறையாக மானிய விலையில் நெல் அறுவடை இயந்திரம் கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை வழங்கப்பட்டது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானிய  விலையில் வேளாண் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் வழங்கினார்.

                            கடலூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறை மூலம் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்கள் 6 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.  இதற்காக அரசு வழங்கும் மொத்தம் மானியம் ரூ. 5.58 லட்சம்.÷நெல் அறுவடை இயந்திரம் ஒன்று, களை எடுக்கும் இயந்திரம் ஒன்று, நடவு இயந்திரம் ஒன்று, சுழல் கலப்பை இயந்திரம் 3 வழங்கப்பட்டன. அறுவடை இயந்திரம் நடப்பு ஆண்டில் மாநிலத்தில் முதல் முறையாக கடலூரில் அரசு மானியத்தில் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

                     ரூ. 13.77 லட்சம் மதிப்புள்ள அறுவடை இயந்திரம் ரூ. 4 லட்சம் மானியத்தில் டி.குமராபுரம் செந்திலுக்கு வழங்கப்பட்டது. ஏனைய வேளாண் இயந்திரங்கள் புதுக்குப்பம் சதாசிவம், தாணூர் ஆதிகேசவலு, சேடப்பாளையம் சண்முகம், கிளிஞ்சிக்குப்பம் பத்மநாபன், தூக்கணாம்பாக்கம் சேகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வேளாண் இயந்திரங்களை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மணி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அரியபூபதி, உதவி செயற்பொறியாளர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read more »

கெமிக்கல் கம்பெனி மேலாளருக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

கடலூர்:

                   தனியார் கம்பெனி உதவி மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் உள்ள கெம்பிளாஸ்டி கெமிக்கல் கம்பெனியில் உதவி மேலாளராக பணி புரிபவர் ஜோசப் லியாண்டர். இவர் கம்பெனியில் கேண்டீன் நடத்துவதற் காக டெண்டர் விட நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் செம் மங்குப்பம் தங்கவேல் மகன் காத்தவராயன்(25), கேண்டீனை எனக்குத் தான் தர வேண்டும். இல்லை என்றால் கொலை செய்துவிடுவதாக, மொபைல் போன் மூலமும், கடந்த 16ம் தேதி டெண்டர் விடுவதற் கான பணியை மேற்கொண்டிருந்த உதவி மேலாளர் ஜோசப் லியாண்டரை மிரட்டினார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, காத்தவராயனை கைது செய்தனர்.

Read more »

மீனவர் பலி

கடலூர்:

                    கட்டுமரத்தில் மீன் பிடிக்கச் சென்ற  மீனவர் தவறி விழுந்து இறந்தார். கடலூர் அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்தவர்கள் கந்தவேல்(48), சிவானந்தம்(45). இருவரும் நேற்று முன்தினம் கட்டுமரத்தில் உப்பனாறு முகத்துவாரப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.  அப்போது கட்டுமரம் கவிழ்ந்ததில் இருவரும் தவறி கடலில் விழுந்தனர். அதில் சிவானந்தம் நீந்தி கரையேறினார். இந்நிலையில் அன்று மாலை கந்தவேலின் உடல் தாழங்குடா கடற்கரையில் ஒதுங்கியது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Read more »

ஊரக அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதம்



கடலூர்:

                      ஆறாவது ஊதிய குழுவில் உள்ள பாதக அம்சங் கரை நீக்கக் கோரி கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். ஆறாவது ஊதிய குழுவில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு எதிராக உள்ளவற்றை நீக்க வேண் டும். ஊழியர்களுக்கு இலாக்கா அந்தஸ்து தரவேண்டும். ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும்.  வயது மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு, இலாகாவுக்கு இணையான போனஸ் வழங்க வேண் டும். முழு தொழிற் சங்க உரிமை மற்றும் சலுகை வழங்க வேண்டும். விடுப்பு கால சலுகைகள் சி.எல்., இ.எல்., எம்.எல்., வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத் திந்திய ஊரக அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கடலூர் கோட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் காந்தி வாழ்த்துரை வழங்கினர். ராஜேந்திரன், கோட்ட உதவி தலைவர் ரட்சகர் கோரிக்கைகளை விளக்க பேசினர். ஜேம்ஸ் நன்றி கூறினார். 

Read more »

கொடுத்த கடனை திருப்பி கேட்ட தகராறு : அண்ணன், தம்பியை தாக்கிய இருவர் கைது

சிதம்பரம்:

                   கொடுத்த கடனை திருப்பி கேட்ட தகராறில் அண்ணன், தம்பியை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் கவரப்பட்டு மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் இளவழகன் (32). இவர் சிதம்பரநாதன்பேட்டை சேர்ந்த ஒருவருக்கு கடன் கொடுத் திருந்தார். கடனை திருப்பி கேட்டதால் விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அண்ணாமலைநகர் மருத்துவகல்லூரி அருகே வந்த இளவழகனை கடன் வாங்கியவரின் நண்பர்க ளான பன்னப்பட்டு கலியபெருமாள் மகன் பாண்டியன் (24), மாரியப்பா நகர் கிருபாகரன் (28) உள்ளிட்ட கும்பல் தாக்கியது. காயமடைந்த இளவழகன் அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்துவிட்டு அவரது அண்ணன் இளவரசனுடன் பஸ் ஏற சிதம்பரம் பஸ் நிலையம் வந்தார். அப்போது காந்தி சிலை அருகே மீண்டும் அதே கும்பல் இளவரசனையும் தாக்கியது. இதுகுறித்து இளவரசன் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். நகர சப் இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழக்கு பதிவு செய்து பாண்டியன், கிருபாகரன் ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடிவருகின்றனர்.

Read more »

கடலூரில் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகள் சிறைபிடித்து அபராதம் விதிப்பு

கடலூர்:

                  கடலூரில் போக்குவரத்திற்கு இடையூராக சாலைகளில் சுற்றித் திரிந்த 18 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் சிறை பிடித்தனர். மாட்டின் உரிமையாளர்களுக்கு தலா 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடலூர் நகரின் பிரதான சாலைகளான லாரன்ஸ் ரோடு, குத்தூசி குருசாமி சாலை, பாரதி சாலை, நேதாஜி சாலைகளிலும், பஸ் நிலையத்திலும் மாடுகள் சர்வ சாதாரணமாக சுற்று வந்துக் கொண்டிருந்தன. இதனால் போக்குவரத்து பாதிக் கப்பட்டதோடு, அடிக்கடி சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்ததை தொடர்ந்து, போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க சேர்மன் தங்கராச, கமிஷனர் குமார் உத்தரவிட்டனர். அதன்பேரில் நகராட்சி ஆய்வாளர்கள் சக்திவேல், பத்மநாபன், ரங்கராஜ் ஆகியோர் நேற்று அதிரடியாக கடலூர் பஸ் நிலையம் மற்றும் லாரன்ஸ் ரோட்டில் சுற்றித் திரிந்த 18 மாடுகளை பிடித்து, மஞ்சக்குப்பம் பாபு கலையரங்கில் கட்டி வைத்துள்ளனர்.  மாடுகளை தேடி வந்த அதன் உரிமையாளர்களிடம் அபராதத் தொகை 250 ரூபாய் செலுத்திவிட்டு மாடுகளை ஓட்டிச் செல்லுமாறும், இனி வரும் காலங்களில் மாடுகளை வீடுகளில் கட்டி வளர்க்க அறிவுறுத்தினர். இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும் என்பதே மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Read more »

டாஸ்மாக் ஊழியர் கொலை : மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

கடலூர்:

                   டாஸ்மாக் ஊழியர் கொலையை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை: 

                 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலை பள்ளி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளர் முனியப்பன் அந்த கடையிலேயே படுகொலை செய் யப்பட்டுள்ளார். இச்செயலை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டித்தரும் டாஸ்மாக் பணியாளர்களின் பரிதாப நிலையை பரிசீலித்து பணியாளரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். தினமும் லட்சக்கணக்கில் பணத்தை கையாண்டு வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் டாஸ்மாக் ஊழியரின் படுகொலையை கண்டித்து அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக் கப்பட்டுள்ள டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத் தப்படும்.

Read more »

சாப்பிடும் போது தகராறு : இரண்டு பேர் கைது

புவனகிரி:

               ஓட்டலில் சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். புவனகிரி அடுத்த ஆயிபுரத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கீரப்பாளையத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப் போது புருஷோத்தமனுக் கும், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த கீரப்பாளையம் ஆற்றங்கரை தெரு அம்மூர்த்தி (32) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அம்மூர்த்தி மற்றும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகனும் சேர்ந்து புருஷோத்தமனை இரும்பு பைப்பால் தாக்கினர். அதில் படுகாயமடைந்த புருஷோத்தமன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து அம்மூர்த்தி(32),வேல்முருகன் (26) ஆகியோரை கைது செய்தனர்.

Read more »

வழிப்பறியில் ஈடுபட முயன்ற ஆட்டோ டிரைவர் கைது

கடலூர்:

                     காதலிக்கு செலவு செய்ய பணம் இல்லாததால் வழிபறியில் ஈடுபட முயன்ற ஆட்டோ டிரைவர் வீச்சு அரிவாளுடன் கைது செய்யப் பட்டார். கடலூர் புதுநகர் இன்ஸ் பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செம் மண்டலம் குண்டுசாலை அய்யனார் கோவில் அருகே ஆட்டோவில் வீச்சு அரிவாளுடன் இருந்த டிரைவர் போலீசாரை கண்டதும் தப்பியோடினார். அவரை, போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளைத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் சிவா(26) என்பதும், இவர் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டாண் டாக காதலித்து வருவதும், அவருக்கு செலவு செய்ய பணம் தேவைப்பட்டதால் வழிப்பறி செய்வதற் காக வீச்சரிவாளுடன் காத்திருந்தது தெரிய வந்தது. கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து சிவாவை கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த ஆட்டோ மற்றும் வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior