உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 11, 2011

மின்வெட்டு காரணமாக: தவிக்கும் கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை தொழிற்சாலைகள்


கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை.
கடலூர்:

            மின்வெட்டு காரணமாக, தனியார் நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து, மின்சாரம் வாங்க வேண்டிய பரிதாப நிலைக்கு, கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் தள்ளப்பட்டு உள்ளன. இதனால் உலகச் சந்தையில் போட்டிகளைச் சமாளிக்க முடியாத நிலை இத்தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டு உள்ளது.  

                கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அனல் மின் நிலையமான என்.எல்.சி. நிறுவனம் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நெய்வேலியில் தனியார் அனல் மின் நிலையம் ஒன்று 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் பலவும் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன.  கடலூர் மாவட்டத்தில் 85 ஆயிரம் ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ளன. நிலத்தடி நீர் போதுமான அளவுக்கு கிடைப்பதால், கொளுத்தும் வெயில் நிறைந்த கோடைக்காலத்திலும் 1.10 லட்சம் ஏக்கரில் கரும்பு, 13 ஆயிரம் ஏக்கரில் சவுக்கு, 10 ஆயிரம் ஏக்கரில் வாழை, சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் சொர்ணவாரி நெல்பயிர் உள்ளது. 

              என்.எல்.சி. சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்று கொண்டு இருக்கும் நிலையில், பாதிப்பை ஈடுகட்டும் வகையில், போதுமான மின்சாரத்தையாவது இம்மாவட்ட விவசாயிகளுக்கு மின் வாரியம் வழங்கலாம். ஆனால் அதுதான் இல்லை.  விவசாயத்துக்கு நாளொன்றுக்கு 14 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அரசாணை இருந்தும், 5 மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது என்கிறார், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் வெங்கடபதி. இதனால் கரும்பு, நெல் பயிரிடும் பரப்பளவும், உற்பத்தியும் வெகுவாகக் குறைகிறது என்றார்.  

                வேளாண்மை நிலை இப்படி இருக்க, தொழில்துறையின் நிலை மேலும் பரிதாபமாக உள்ளது. கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 26 மிகப் பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உயிர்காக்கும் மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என பெரும்பாலும் ஏற்றுமதிக்கான பொருள்களாகவும், ஒரு நிமிடமும் உற்பத்தியை நிறுத்த முடியாத, தொடர்ந்து இயங்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் இவைகள் உள்ளன.  ÷ஆனால் இந்த ஆலைகளுக்கு மின் வெட்டு, நாளுக்கு நாள் இறுகிக் கொண்டு இருப்பதாக, ஆலை நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். 

இதுகுறித்து சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்தர் குமார் கூறியது: 

                கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, தினமும் 3 மணி நேரம் நிரந்தர மின் வெட்டு ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கிறது. மேலும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி நேரம், விளக்கு வெளிச்சத்துக்காக மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது. இதை யாரேனும் மீறினால் அபராதரம் விதிக்கப்படுகிறது. ÷மற்ற நேரங்களிலும் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளை இயக்குவதே பெரும்பாடாக உள்ளது. 

                     மின்வெட்டைச் சமாளிக்க டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. மின்வாரியம் வழங்கும் மின்சாரத்துக்கு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5. ஆனால் ஜெனரேட்டர் மின்சாரத்துக்குக்கு ஆகும் செலவு யூனிட்டுக்கு ரூ. 7.50 வரை. ஜெனரேட்டர்களின் தேய்மானச் செலவும் ஏற்படுகிறது.  

               இப்போது ஜெனரேட்டர்களாலும் சமாளிக்க முடியவில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வெளி மாநிலங்களில், தனியார் மின் நிலையங்களில் ஒப்பந்தம் போட்டு மின்சாரம் பெறுகிறோம். தனியாரிடம் பெறப்படும் மின்சாரத்துக்குக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 9 வரை ஆகிறது.  இத்தகைய சூழ்நிலைக் காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்திச் செலவு அதிகரித்து விட்டது. இதனால் சர்வதேச சந்தையில் நமது தொழிற்சாலைகளின் தயாரிப்புகளை விற்பனை செய்ய முடியவில்லை. குறிப்பாக சீனாவின் உற்பத்திப் பொருள்களுடன் நாம் போட்டிபோட முடியவில்லை.  

                  இந்த நிலையில் தமிழக மின் வாரியம், பராமரிப்புப் பணிகளைக்கூட முறையாகச் செய்வதில்லை. பராமரிப்புக்காக மின்சாரம் நிறுத்தும் போதெல்லாம், அவர்களின் மின்னூட்டிகளை மட்டுமே பார்க்கிறார்கள். எங்காவது கம்பங்கள் பழுதுபட்டு இருந்தாலோ, மின் கம்பிகள் சேதம் அடைந்தாலோ அவற்றைப் பழுதுபார்ப்பது இல்லை. இதனால் கிடைக்கும் மின்சாரமும் முழுமையாக வந்து சேர்வதில்லை என்றார் இந்தர் குமார்.

Read more »

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 24வது இடத்திற்கு முன்னேற்றம்

              கல்வியில் பின்தங்கியிருந்த கடலூர் மாவட்டம், பிளஸ் 2 தேர்வில், இந்த ஆண்டு, 24வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

               தமிழகத்தில், மிகவும் பின்தங்கிய கடலூர் மாவட்டம், கல்வியிலும் பின்தங்கியிருந்தது. அரசு பொதுத் தேர்வில் மாநிலத்தில் கடைசி இடத்தில் இருந்தது. 2008-09ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில், 74.66 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில், 30வது இடத்தை பிடித்திருந்தது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகளின் முயற்சியால், மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினர். இதன் காரணமாக, 2009-10ம் ஆண்டு, தேர்ச்சி, 78 சதவீதமாக உயர்ந்து, மாநில அளவில், 26வது இடத்திற்கு முன்னேறியது. தொடர்ந்து அதிகாரிகளின் முயற்சி, தனியார் பள்ளிகளுக்கு இடையே ஏற்பட்ட ஆரோக்கியமான போட்டியால், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம், 81.64 சதவீதமாக உயர்ந்துள்ளதோடு, மாநில அளவில், 24வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Read more »

Cuddalore fares better than last year in the Plus-Two Public Examinations


In appreciation:Cuddalore Chief Education Officer C. Amudhavalli honouring the district first rank holder M. Nandini in Cuddalore on Monday.


CUDDALORE:

            Cuddalore district has improved upon its performance in the Plus-Two public examinations by 4 per cent over that of the previous academic year.

           Last year it achieved a pass percentage of 78 per cent and this year it went up to 82 per cent, according to C. Amudhavalli, Chief Educational Officer. The CEO told The Hindu that of the total number of 26,204 candidates who appeared for the examinations 21,394 passed out. The girls outnumbered (13,875 girls and 12,329 boys) and also outperformed the boys as was evidenced from the pass percentage of 83.7 and 79.32 respectively.

             The rise in pass percentage can be attributed to the conduct of performance analysis on the quarterly basis, instead of the usual half-yearly basis. It helped in identifying the problem areas that contributed to low performance and to take timely corrective measures. Moreover, “minimum materials” prepared by the teachers were distributed to the students who lag behind in their studies. This kind of approach equipped many students who were otherwise on the brink of failure to emerge successful. The schools with results ranging from 99 per cent to 99.5 per cent were asked to launch a special drive to achieve cent per cent results. Ms. Amudhavalli further said that these measures had, of course, paid dividends and hence, the number of schools that attained 100 per cent results this year doubled to 24 from the last year's 12.

             However, the CEO said two schools namely Pachaiyappa Higher Secondary School at Chidambaram and the Model Matriculation Higher Secondary School in Cuddalore achieved less than 35 per cent results.

The toppers

Ms. Amudhavalli said that those who had obtained the first three ranks in the district (with Sanskrit as language subject) are as follows:

First rank is shared by G.S. Revanth of Jawahar Matriculation Higher Secondary School, Neyveli – 1,182 out of 1,200 and 
M. Ganga of St. Joseph's Cluny Mat.HSS, Neyveli – 1,182; I
I rank – R. Swathi – 1,181 and 
III rank – G. Krithika —1,180 of St. Joseph's Cluny Mat.HSS, Neyveli.

The top scorers with Tamil as language subject are: 

I rank M. Nandini of St. Joseph's Cluny Mat.HSS, Neyveli – 1,180, 
II rank R. Muneeswararn of Venus Mat.HSS, Chidambaram – 1,177, and 
III rank shared by M. Shereen Salma of St. Joseph's Cluny Mat.HSS, Neyveli – 1,174 and P. Parthiban of Kamaraj Mat.HSS, Chidambaram – 1,174.

Read more »

தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் பாட வாரியாக காலியாக உள்ள இடங்கள்

           தமிழகம் முழுவதும் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் குரூப் வாரியாக உள்ள எத்தனை இடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர்ஜவகர் கூறியது:


            தமிழ்நாட்டில் 486 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2 லட்சம் இடங்கள் இருக்கின்றன. இதில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம் யூனிகேஷன் என்ஜினீயரிங் பிரிவில் 39 ஆயிரம் சீட்டுகள் உள்ளன.

கணினி  அறிவியல்   பிரிவில் 36 ஆயிரம் இடங்களும்,
மெக்கானிக்கல் பிரிவில் 25 ஆயிரம் இடங்களும்,
எலெக்ட்ரிக்கல்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பிரிவில் 25 ஆயிரம் இடங்களும்,
இன்பர்மேஷன் டெக்னாலஜி பாடப்பிரிவில் 22,500 சீட்டுகளும்,
சிவில் பிரிவில் 15 ஆயிரம் இடங்களும் இருக்கின்றன.



            அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 16 ந் தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. மருத்துவ கவுன்சிலிங் தொடங்கியவுடன் என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஆரம்பிக்கும். இதில் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங், உடல் ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் முடிவடைந்த பிறகு தொழிற்கல்வி பிரிவினருக்கான கவுன்சிலிங்கும் அதைத்தொடர்ந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்கும் பொது கவுன்சிலிங்கும் நடைபெறும். இவ்வாறு துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior