உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி வகுப்பு புறக்கணிப்பு

சி.முட்லூர்  :

          சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கோரி நேற்று வகுப்பு புறக்கணிப்பு செய்தனர். சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரிக்கு போதிய ஆசிரியர்கள், குடிநீர், சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கல்லூரி மாணவர்கள் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கல்லூரி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று அடிப்படை வசதிகள் கோரி அனைத்து மாணவ, மாணவிகளும் வகுப்பிற்குச் செல்லாமல் புறக்கணிப்பு செய்து கல்லூரி முன்பு கோஷம் எழுப்பினர்.



Read more »

தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் தேர்வு

கடலூர் :


        ஒடிசாவில் நடைபெறவுள்ள தேசிய துப்பாக்கி சுடும் போட்டிக்கு கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசார் தேர்வு பெற்றுள்ளனர்.

        சென்னையில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. அதில் கடலூர் மாவட்ட ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார்கள் மணிகண்ட பிரபு, சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.அவர்களில் மணிகண்ட பிரபு 100 அடி பிரிவில் தங்கப்பதக்கமும், சுதாகர் 300 அடி பிரிவில் வெண்கலமும், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் 350 அடி பிரிவில் நான்காம் இடத்தையும் பிடித்தனர். இவர்கள் அடுத்த மாதம் ஒடிசா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற போலீஸ்காரர்கள் மணிகண்ட பிரபு, சுதாகர், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோரை எஸ்.பி., பகலவன் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.




Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் முனைவர் பட்டத்துக்குரிய நேர்முக பொது வாய்மொழித் தேர்வு

விருத்தாசலம் :

       விருத்தாசலம் அரசு கல்லூரியில் நேர்முக பொது வாய்மொழித் தேர்வு நடந்தது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முனைவர் பட்டத்துக்குரிய நேர்முக பொது வாய்மொழித் தேர்வு, தமிழ் முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை வளாகத்தில் நடந்தது. சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் செல்வகுமாரன் தேர்வாளராகவும், திருவெண்ணெய்நல்லூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தங்கதுரை நெறியாளராகவும் இருந்தனர். இதில், விழுப்புரம் மாவட்ட நரிக்குறவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் நடந்த நேர்முக பொது வாய்மொழித் தேர்வில் தமிழ்த்துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் பங்கேற்று, கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.







Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior